Thursday, August 23, 2007

கடலூர் முபாஹலாவில் சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

சமீபத்தில் கடலூருக்கு அருகில் நெல்லிக்குப்பத்தில் இரு குழுவினரிடையே முபாஹலா எனும், இறை சாபம் வேண்டும் ஒரு சம்பவம் நடை பெற்றது.

முபாஹலா எனும் இறைவனின் சாபத்தை வேண்டி பிரார்த்திக்கும் நிகழ்வு இதுவரை தமிழகத்தில் இருமுறை நடந்துள்ளது.

முதல் முறை காயல்பட்டிணத்தில் நடந்த முபாஹலாவின் போது இஸ்லாத்தின் அடிப்படையான தவ்ஹீதின் சார்பாக ஒருவரும், அதல்லாமல் தரீக்காக்களை நியாயப்படுத்தி ஒரவருமாக இரு மவ்லவிகள் முபாஹலா செய்து கொண்டார்கள்.

ஆனால், இப்பொழுது நடைபெற்ற முபாஹலாவோ, இரு குழுவினரின் செயல்பாடுகளைக் குறித்து ஒருவரை ஒருவர் விமர்சித்து முபாஹலா செய்து கொண்டனர். இதில் ஒரு பக்கம் ஒரு மவ்லவியும் அவரது குடும்பத்தாரும் மறுபக்கத்தில் சராசரி முஸ்லிம்களாக ஏழோ எட்டோ நபர்களும் அவர்களது குடும்பத்தாருமாக அமர்ந்திருந்தனர்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இவர்கள் அனைவருமே ஒரே அணியாக இருந்தவர்கள் தான். அப்படி ஒன்றாக இருந்தவர்கள் இன்று பிரிந்ததோடு மட்டுமல்லாமல் சாபமிட்டு கொள்ளும் படியான நிலைக்கு காரணம் என்ன?

இவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்த காலத்தில், அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தவரைப் பற்றி, தலைவர் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவி இறக்கம் செய்யப்பட்டார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ ஒருவருக்கும் தெரியாது. தலைவரால் குற்றம் சாட்டப்பட்ட அதே நபர் மீண்டும் அதே பொதுச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதற்கு காரணமான தலைவர் மவ்லவி ஒருபுறம்.

இந்த நியமனத்தை குறித்து கேள்வி கேட்ட காரணத்தால், கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்பட்ட ஏழோ எட்டோ நபர்கள் கொண்ட கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மறுபுறம்.

ஒரு நிர்வாகியை பதவி இறக்கம் செய்வதிலோ, மீண்டும் அவருக்கு அதே பதவியை வழங்குவதிலோ என்ன தவறு. அதையும் ஒரு தலைவர் செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது என சிலருக்கு வியப்பாக இருக்கலாம்.

பொதுச் செயலாளர் பற்றி தலைவர் அப்படி என்னதான் சொன்னார் என்பதை தெரிந்து கொண்டால் சற்று விளக்கம் கிடைக்கும்.

அதாவது அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாக்கர் என்பவர் ஒருமுறை ஒரு அன்னியப் பெண்ணோடு அடுத்தடுத்த இருக்கைகளில் பயணம் செய்தார் என்றும் அப்போது இருவரும் எப்படி சல்லாபித்தார்கள் என்றும் கிளுகிளுப்பாக பேசி தனது இணையத்தளத்தில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளடக்கிய ஒரு தனி அமர்வில் இணையத்தில் வெளியிட்ட ஆடியோவைக் காட்டிலும் அதிகமான சில தகவல்களை தந்திருக்கிறார்.

இதன் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவி இறக்கத்தை ஏற்றுக் கொண்ட கடலூர் மாவட்ட நிர்வாகிகளால், பின்னர் அதே தலைவரால், அதே நபருக்கு மீண்டும் அதே பதவியை தாரை வார்த்ததை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

எனவே எந்த அடிப்படையில் பாக்கருக்கு மீண்டும் பதவி அளிக்கப்பட்டது என்று தலைவரை கேள்வி கேட்ட காரணத்தால், அந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகளை நீக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மீது பொருளாதார மோசடி குற்றச்சாட்டும், அந்த நிர்வாகிகளின் வியாபாரம் (அ) தொழில் குறித்தும், அதை விட மோசமாக அவர்களின் உடற்குறைகளை குறித்தும் கேவலப்படுத்தும் விதமாக சுற்றறிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சவுதி போன்ற வெளிநாடுகளில் (உள்ளூர் விபரங்கள் தெரியாமல்) இருக்கக் கூடியவர்களுக்கும் அந்த தலைவர் அனுப்பி வைத்தார்.

எனவே தான், பாக்கர் பதவி இறக்கம் செய்யப்பட்ட போது, தங்களிடத்தில் தலைவர் பிஜே கூறியதை வார்த்தைக்கு வார்த்தை உறுதி அளித்து சாட்சியம் கூறி ஒருவேளை அது பொய்யாக இருக்குமானால் (அதாவது தலைவர் பிஜே அவ்வாறு சொல்லாமலிருந்து, தாங்கள் அனைவரும் கற்பனையாக கருதி இருந்தால்) அதற்காக தங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என இறை சாபம் வேண்டி கடலூர் மாவட்ட முன்னாள் ததஜ நிர்வாகிகள் அனைவரும் பிரார்த்தித்தனர்.

ஆனால், இதனை மறுக்க வேண்டிய அந்த தலைவரோ, சபை முன் வந்து நின்று பேசியதைக் கேட்ட அனைவருக்கும் அவர் ஏதோ தடுமாற்றத்தில் இருந்தார் என்பது தெளிவாக விளங்கியது. ஏனெனில் குற்றச்சாட்டை மறுக்க முன் வந்தவர், எளிமையாக 'இறiவா! இவர்கள் கூறியது போல் நான் ஒருபோதும் சொன்னதில்லை. ஒருவேளை அப்படி நான் சொல்லியிருந்தால் என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் சாபத்தை இறக்குவாயாக' என்று பிரார்த்தித்து சென்றிருக்கலாம்.

அதை விடுத்து, விபச்சார குற்றம் சுமத்துபவருக்கு இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை குறித்து விரிவான பயான் செய்து விட்டு, அதையெல்லாம் தெரிந்த நான் இப்படி இப்படி தகவல்கள் வருகின்றன என்று தான் சொன்னேனேயல்லாமல் நானே சென்று உறுதிப்படுத்திக் கொண்டதாகவோ நானே நேரில் கண்டதாகவோ கூறவில்லை என்பதை யா அல்லாஹ் நீ அறிவாய். அப்படி நான் கூறாததை, நான் சொன்னதாக சொல்லும் இவர்கள் தான் பொய்யர்கள். எனவே இவர்கள் மீது உனது சாபம் இறங்கட்டுமாக. அப்படி நான் உண்மையிலேயே சொல்லியிருந்தால் என்மீதும் என் குடும்பத்தினர் மீதும் சாபம் இறங்கட்டுமாக என பிரார்த்திக்கிறார்.

இந்த நிகழ்வில் இந்த சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டிய ஏராளமான படிப்பினைகள் உள்ளன.

முதலாவதாக, இவர் தன்னிடம் வரும் செய்தியை ஊர்ஜிதப்படுத்தாமல் அப்படியே பரப்புவார் என்பதனை தலைவர் பிஜேவே தனது வாயால் ஒப்புக் கொள்கிறார்.

'தனக்கு வரும் செய்திகளை ஆராயாமல் அப்படியே பரப்புபவன் பொய்யன்' எனும் நபி ஸல் அவர்களின் வாக்குப்படி இந்த பிஜே ஒரு பொய்யர் என்பதனை விளங்க வேண்டும்.

இரண்டாவதாக, பாலியல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தாமல் கூறியதற்காக இஸ்லாமிய நெறிகாட்டுதலின் படி இவர் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளியாகிறார்.

பொய்யராகவும், குற்றவாளியாகவும் தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்ட இவரிடமிருந்து சமுதாயத்தை அல்லாஹ் காப்பானாக.

இதற்கு பின்பும் இவரைத் தொடருபவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?

ராவுத்தர் 22.08.2007

0 Comments:

Post a Comment

<< Home