ஒற்றுமைக்கு எதிரி யார்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சமீபத்தில் இணைய குழுமத்தில் ஒரு சில கடித பரிமாற்றங்களை காணும் வாய்ப்பு கிட்டியது.
அந்த பரிமாற்றங்களின் கருப்பொருள்: சமுதாய ஒற்றுமை.
பலராலும், பல சந்தர்ப்பங்களிலும் பேசப்படக்கூடிய கருப்பொருள் தான் என்றாலும், இங்கு பிரதானமாக பேசப்பட்டுள்ள விஷயம் தமுமுக மற்றும் ததஜவின் ஒற்றுமையைப் பற்றித் தான்.
இத்தகைய ஒரு கருத்தை முன் வைத்து பலரின் சிந்தனையை கிளறி விட்ட சகோதரரும், ஆர்வமுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சகோதரர்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக.
பொதுவாக இறைவன் முயற்சி செய்பவர்களுக்கே வெற்றியளிப்பதாக தனது திருமறையில் கூறுகிறான். அந்த வகையில் முயற்சிக்க வேண்டியது நமது கடமைதான் என்றாலும், எந்த ஒரு முயற்சி செய்வதற்கு முன்பும் அதில் உள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்து சிந்திப்பது அவசியம்.
அந்த வகையில், இந்த முயற்சி சாத்தியமானது தானா?
இதில் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் யாதெனில், இவர்கள் யாரை பெருந்தலைவர் என்றும் சிந்தனை சிற்பி என்றும் புகழாரம் சூட்டுகின்றனரோ, அவருக்கு உண்மையில் தலைமைக்குரிய பண்புகள் ஏதேனும் உள்ளதா என ஆராய தவறிவிட்டனர் என்று தான் தோன்றுகிறது.
80 களிலும், 90 களிலும் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதமும், இஸ்லாமிய பிரச்சாரத்தில் அவர் காட்டிய தீவிரமும், சமுதாயப் பிரச்சனைகளில் அவரின் ஆவேசமும், அவரை ஒரு ஸ்டாராக உயர்த்தியதென்னவோ உண்மை.
ஆனால், இறைவனால் அருளப்பட்ட அந்த தகுதிக்கு பொருத்தமானவராக அவர் நடந்து கொண்டாரா எனில், இல்லை என்பதே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
இந்த நேரத்தில் 2004 க்குப் பின் உருவான ததஜவின் தற்போதய தலைவரின் சறுக்கல்களைப் பற்றி பட்டியலிடும் முன், ஒரு விஷயத்தை சமுதாய நலன் விரும்பிகளுக்கு, குறிப்பாக ததஜ தலைவரின் அபிமானிகளுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.
முதலாவதாக, ஹதீஸ் கலையில் சிலரது அறிவிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பதன் காரணம் அவர் தனது வாழ்வின் பிற்பகுதியில் நினைவாற்றல் மங்கியவராகவோ, அல்லது முன்னுக்குப் பின் முரணாகவோ பேசுவது தான். இந்த அடிப்படையில் அவருடைய முந்தய அறிவிப்புகளை ஏற்பதும், பிந்தய அறிவிப்புகளை நிராகரிப்பதும் ஹதீஸ் ஆய்வாளர்களின் முடிவு.
இரண்டாவதாக, இஸ்லாமிய மார்க்கத்தின் நான்கு பெரும் இமாம்களாக மதிக்கப்படுபவர்களுக்கு இணையாக நல்ல பல கருத்துக்களை சமுதாயத்தில் எடுத்துரைத்து, மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியவர் இமாம் கஸ்ஸாலி அவர்கள். ஆனாலும் தனது பிற்காலத்தில் நடந்து கொண்ட முறைகளினால், இஸ்லாமிய சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளானார் என்பது வரலாறு.
இந்த இரு விஷயங்களையும் நினைவுபடுத்திக் கொண்டு, இந்த விஷயத்திற்குள் நுழைவோம்.
2004 லிற்கு முன்பாக வெ வ்வேறு சமயங்களில், வெ வ்வேறு குழுவினருடன் இருந்து அவ்வப்போது வெளியேறி புதிய இயக்கம் கண்டு வந்தாலும், 2004ல் தமுமுகவிலிருந்து வெளியேறி பிறகு தான் இவரின் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழியத் தொடங்கியுள்ளது.
அதனை கண்டு கொள்ளாமல் அவரின் முந்தய கால நடவடிக்கைகளிலேயே மெய் மறந்து கிடக்கும் சிலருக்காக அவற்றை (நமக்குத் தெரிந்தவரை) தொகுத்துள்ளோம்.
இதனை படித்த பின் சமுதாய ஒற்றுமை குறித்து சிந்திக்கும் பெரியவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்வார்கள் என் எண்ணுகிறோம்.
முதலாவதாக,
2004 இல் தமுமுகவிலிருந்து வெளியேறிய பொழுது அவர் இலவசமாக வெளியிட்ட சிடி இல் பிரிந்து வந்ததற்கான காரணமாக அவர் கூறியதை நினைவு படுத்துகிறேன்.
'நாம ஒரு நோக்கத்தோட தமுமுகவ ஆரம்பிச்சோம். அது கிட்டத்தட்ட நிறைவேறிடுச்சு. இப்ப நாம தவ்ஹீத் பிரச்சாரத்துல கவனம் செலுத்த வேண்டிய கட்டத்துல இருக்கோம். அதுனால இனிமே நாம தவ்ஹீத் பிரச்சாரத்த மூல முடுக்குக்கெல்லாம் கொண்டு போகணும்'.
இப்படி சொல்லி விட்டு ஆறுமாத காலத்திற்குள் பொம்மை தலைவரை நீக்கி விட்டு அவரே தலைவராகிக் கொண்டார்.
தமுமுக செய்து வரும் அத்தனை நலப்பணிகளையும் தானும் செய்வதாக படம் காட்டினார்.
தமுமுகவிற்கு இருப்பது போல் தனக்கும் கொடி அவசியம் என மற்ற இயக்கத்தவரின் கொடியை அபகரித்து தனது கொடியாக சுவீகாரம் செய்தார்.
சுனாமி நிவாரணப் பணிகளில் தமுமுகவின் தன்னார்வ தொண்டர்களின் பணியை பிரதமரே வியந்து பாராட்டியதும், தானும் அப்பணிகளில் ஈடுபடுவதாக படம் காட்டினார்.
தமுமுக சுனாமி நிவாரண நிதி அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால், இவ்விஷயத்தில் தமுமுகவை குறை கூறிய இவரோ, தனது அடிவருடிகளை மட்டும் கூட்டி வைத்து கள்ள கணக்கு காட்டினார்.
அவர் காட்டிய கணக்குப்படியே கூட சுனாமி நிவாரண நிதி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவழித்ததற்கு இணையாக தனது சொந்த கட்சிக்கு செலவழித்தது வெட்ட வெளிச்சமாகியது.
சுனாமி நிதியிலிருந்து தனது அடிவருடிகளுக்கு சீருடை தைத்துக் கொடுத்தார். சுனாமி நிதியிலிருந்து சரிந்து விட்ட தனது பத்திரிக்கையின் நஷ்டத்தை சரிகட்ட ரூபாய் இரண்டு இலட்சத்தை தாரை வார்த்தார்.
சுனாமி நிதியிலிருந்து தனது வியாபார நிறுவனமான மூன் பப்ளிகேஷனுக்கும் சன் பிரிண்டர்ஸுக்கும் வருமானம் பார்த்துக் கொண்டார்.
சுனாமி நிதியில் சுரண்டியது இன்னும் பல வகைகளில் என்றாலும் முக்கியமான இவற்றையாவது சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இரண்டாவதாக,
மார்க்க விஷயங்களில் இவரது நிலைபாடு.
தான் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மொழியாக்கத்தை, ஏதோ இவர் எழுதிய பிற புத்தகங்களைப் போல திருக்குர்ஆன் - பி.ஜெயினுலாபிதீன் என தலைப்பிட்டு வெளியிட்டது.
அந்த மொழியாக்கத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய அம்சங்களாவன:
- ஸஹீஹான ஹதீஸ்களாக இருந்தாலும், அவை தனது புத்திக்கு பொருந்தவில்லை என்பதால் நிராகரிக்க வேண்டும் என்றார்.
- அப்படி எந்த எந்த ஹதீஸ்கள் உள்ளன என அறிஞர்கள் பலமுறை கேட்டும் அந்த பட்டியலை வெளியிட இயலாமல் திணறுபவர்.
- ஸுலைமான் நபி விஷயமாக விஷமத்தனமாக எழுதப்பட்டுள்ள கருத்துக்கள்.
இதே ரீதியில் இன்னும் பல விஷயங்களில் தனது கருத்துக்களைப் புகுத்தி இறைவசனங்களில் புகுந்து விளையாடியுள்ளார். விரிவஞ்சி இத்துடன் சுருக்கிக் கொள்கிறோம்.
இறுதியாக,
சமுதாய பிரச்சனைகளை அவர் கையாளும் விதம்.
கடையநல்லூரில், ஜம்யியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் மஸ்ஜிதை அபகரிக்க அன்றய ஆளும்கட்சியும் தனது கூட்டாளியுமான அதிமுகவின் அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டு ஆடிய அசிங்க நாடகத்தின் காட்சிகள்.
நிலைமை நீதிமன்றத்திற்கு சென்று பின் அங்கும் ஜாக்கிற்கு சாதகமான தீர்ப்பு வந்ததனால், வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்குப் பின் பள்ளியிளுள் நுழைந்து இரண்டாவதாக ஒரு ஜும்ஆ நடத்தி சமுதாயத்தை கூறு போட்டது.
இப்படியாக பல திறமைகளை 2004 க்குப் பின் வளர்த்துக் கொண்டு, சமுதாயத்தின் ஒரு பகுதியினரை சீரழிவின் பக்கம் இழுத்துச் செல்லும் இவரை ஒரு தலைவராக இன்னமும் எண்ணி ஏமாற சமுதாயத்தின் பலர் தயாராக இல்லை.
அதற்கு எடுத்துக் காட்டு தான் சமீபத்தில் கடலூரில் அவருக்கும் அவரது முன்னாள் நிர்வாகிகளுக்கும் இடையில் நடைபெற்ற முபாஹலா நிகழ்ச்சி.
பாலியல் குற்றச்சாட்டு கூறி பதவி இறக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு, அது குறித்த எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படாமல், ஒரே மாதத்தில் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்டதை எதிர்த்து கேள்விகளை தொடுத்த கடலூர் மாவட்ட சகோதரர்களுக்கு பதில் சொல்ல திராணியில்லாமல் திணறியதை கண்டு இந்த சமுதாயம் காறி துப்பியுள்ளது.
மேற்கூறியவற்றில் அவரது சொந்த தனிப்பட்ட செயல்கள் எதையும் நாம் விமர்சிக்கவில்லை. அவற்றை பட்டியலிட்டால் அதுவும் பல பக்கங்களை கடந்து செல்லும் என்றாலும் தனிநபர் விமர்சனம் நமது நோக்கமல்ல. அவரது சமுதாய அல்லது இயக்க செயல்பாடுகளில் அவருடைய இலட்சணத்தை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
இவை அனைத்துமே ஜஸ்ட் சாம்பிள்கள் தான். இதற்கு பின்னும், இவரை தலைவர் என எண்ணி ஏமாந்து செல்ல தயாராக இருப்பவர்களை இறைவன் மன்னிப்பானாக.
முழு சமுதாயத்திற்கும் இறைவன் நேர் வழிகாட்டுவானாக.
வஸ்ஸலாம்
இப்னு ஹஸன் 13.08.2007
3 Comments:
cq;fs; gilg;G kpfTk; mUik kf;fSf;Fcz;ikia jUtJ ekJ flik
அந்த ஆங்கில எழுத்துக்களின் தமிழ் எழுத்துருவை கீழே தந்துள்ளோம்.
உங்கள் படைப்பு மிகவும் அருமை மக்களுக்கு உண்மையை தருவது நமது கடமை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இப்னு ஹஸன் அவர்களுக்கு,
தாங்கள் http://muthupettai.blogspot.com/ என்ற இணையதளத்தில் 'ஒற்றுமைக்கு எதிரி யார்' என்ற பதிவில்
'இஸ்லாமிய மார்க்கத்தின் நான்கு பெரும் இமாம்களாக மதிக்கப்படுபவர்களுக்கு இணையாக நல்ல பல கருத்துக்களை சமுதாயத்தில் எடுத்துரைத்து, மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியவர் இமாம் கஸ்ஸாலி அவர்கள். ஆனாலும் தனது பிற்காலத்தில் நடந்துகொண்ட முறைகளினால், இஸ்லாமிய சமுகத்தின் புறக்கணிப்புக்கு ஆளானார் என்பது வரலாறு.'
என்று பதிவு செய்துள்ளீர்கள்.
மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மீது எப்போதும் இஸ்லாம் சமுதாயம் மிகப்பெரிய கண்ணியத்தை வைத்திருக்கிறது. தாங்கள் தங்களின் அறியாமையால் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மீது தப்பான அபிப்பிராயத்தை வைத்துள்ளீர்கள். இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பிற்காலத்தில் நடந்துகொண்ட முறைகளினால் இஸ்லாமிய சமுகத்தின் புறக்கணிப்புக்கு ஆளானார் என்று சொல்கிறீர்களே எந்த முறைகளினால் இஸ்லாமிய சமுகத்தின் புறக்கணிப்புக்கு ஆளானார் என்ற விவரம் இல்லையே. அந்த விவரங்களை (அந்த வரலாறை) தொகுத்து, அறிந்தவர்களிடம் கேட்டு அதையும் http://muthupettai.blogspot.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். உதாரணத்திற்கு சொல்வதாக இருந்தாலும் மொட்டையாக எதுவும் சொல்லக்கூடாது ஆதாரத்துடன்தான் சொல்லவேண்டும். அந்த பழக்கத்தை யாராக இருந்தாலும் ஏற்படுத்தி கொள்ளவேண்டும்.
சஹதுல்லாஹ்
துபை
13-08-2007
Post a Comment
<< Home