Thursday, July 05, 2007

ஆந்திர முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு - அரசு ஒப்புதல்

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு சட்டம் ஆந்திர மாநில அரசு ஒப்புதல்


முஸ்லிம்கள் இடஒதுக்கீடு சட்டம் ஆந்திர மாநில அரசு ஒப்புதல்

ஐதராபாத், ஜூலை5- ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தில், ஒரு சதவீதத்தை குறைக்கும் வகையிலான அவசரச் சட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு பணியிலும், கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்க 2004ம் ஆண்டு மே மாதம் ஆந்திர அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது.

அரசுத் துறைகளில் 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த ஐந்து சதவீத இடஒதுக்கீட்டை நான்கு சதவீதமாக குறைக்க முடிவு செய்தது.

இதற்கு முதல்வர் ராஜசேகர ரெட்டி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இது குறித்து தகவல் துறை அமைச்சர் ஏ.ராமநாராயண ரெட்டி கூறுகையில், 'சமூக அளவில் மற்றும் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள முஸ்லிம் பிரிவினருக்கு நான்கு சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையிலான அவசரச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே, இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீதமும், ஆதிதிராவிடர் பிரிவினர்களுக்கு 14 சதவீதமும், பழங்குடியினர் பிரிவினர்களுக்கு 7 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.

நன்றி : தினமலர்

0 Comments:

Post a Comment

<< Home