Saturday, June 09, 2007

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டு ஆயத்த வேலைகள் ஆரம்பம்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்வு குறித்து தமிழக முதல்வரின் டெல்லி பயணத்திற்கு பிறகு எதிர்வரும் வாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் இல்லத்தில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடையூறுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது நாம் அறிந்தே.


தற்போது தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதில் மிகவும் பிற்பட்ட சமூகத்தினருக்கு 30 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்களுக்கு மிகவும் பிற்பட்ட சமூகத்தினரின் (எம்.பி.சி) 30 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமும், கிறிஸ்துவ மற்றும் இதர சிறுபான்மையினருக்கு பிற்பட்ட (பிசி) வகுப்பினரின் 20 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமும் எடுத்து தனி இடஒதுக்கீடு வழங்க முடியுமா? என தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.


எனவே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சினை குறித்து விவாதிக்கலாமா? என்றும் அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒரு மித்த கருத்து ஏற்பட்டால் தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தனி இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றலாமா? என்றும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.


குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி புது டெல்லி செல்ல இருப்பதால் எதிர்வரும் வாரத்திற்குப் பிறகு முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

0 Comments:

Post a Comment

<< Home