Sunday, May 20, 2007

மீண்டும் ததஜவின் வசூல் வேட்டை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..



ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது தமிழ் முதுமொழி.
அதைப்போலத் தான், ஆன்மீகவாதியின் வசூலும்.

நவீன ஆன்மீகவாதியான மற்றவர்களை சுரண்டியே பிழைத்துவரும் பீஜே தனது வசூல் வேட்டையை மீண்டும் துவக்கி விட்டார்.

உள்ளூரில் கடலூர் சகோதரர்களைப் போல பலரும் விழிப்படைந்து விட்டதால், இன்னமும் விழி திறந்தும் மயக்கத்திலுள்ள, வளைகுடாவாசிகளை குறி வைத்து களம் இறங்கியுள்ளார். ஏகத்துவ பிரச்சாரம் என்பதே சுடர் விட்டு பிரகாசித்து தனது வீச்சை தமிழகம் முழுமையும் பரப்பியதில் பெரும் பங்கு வகித்த வளைகுடாவில் தவ்ஹீதின் பெயரால் தக்லீதை திணிக்க முயலும் சில தறுதலைகளைக் கொண்டு தனது இறுதிகட்ட ஏற்பாட்டில் பித்தலாட்ட பீஜே இறங்கி விட்டார்.

சமீப காலத்தில் தனது வலைத்தளத்திலே எல்லாவித யுக்திகளையும் உபயோகித்து ஒரு வேண்டுகோளை திரையிட்டுள்ளார்.

இதனை ஏன் இறுதிகட்ட ஏற்பாடு என்று சொல்ல வேண்டியுள்ளதென்றால், அவர் வைத்துள்ள கோரிக்கை நமக்கு 2002 இல் தமுமுக பெயரில் அவர் வெளியிட்ட வேண்டுகோளை நினைவுபடுத்துகிறது.

அன்றும் அப்படித்தான், தமுமுகவிற்கு நிரந்தர கட்டிடம் வேண்டுமென்று விண்ணப்பம் எழுதினார். சிரமப்பட்டு சகோதரர்கள் சேகரித்த பொருளாதாரத்தை சிந்தாமல் சுவைப்பதற்காக ட்ரஸ்ட் தலைமையேற்றார். 2004 இல் அத்தனையையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டிவிட்டார். மேலதிக விபரங்களுக்கு முன்னர் வலையில் கிடைத்த ஆதாரம் இதோ.

http://muthupettai.googlepages.com/dmm_1.jpg

http://muthupettai.googlepages.com/dmm_2.jpg

நன்றி: www.pjvstmmk.com

எனவே தான் எச்சரிக்கிறோம்.

விட்டில் பூச்சிகளாய் விழுந்து கிடக்கும், எஞ்சியிருக்கும் ததஜ சகோதரர்களே விழித்துக் கொள்ளுங்கள். அன்று தமுமுகவிலாவது பிஜேயை கேள்வி கேட்கும் திராணியும் தெம்பும் இருந்தது. எனவே தான் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடியவர் தான் என்பதனை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்.

உங்களின் உறுதுணையுடன் கிடைக்கும் பொருளாதாரத்தை தனதாக்கிக் கொள்ளும் தந்திரம் நடைபெற்று வருகிறது. கடலூரில் ஏற்பட்ட விழிப்புணர்வு எல்லா பக்கங்களிலும் பரவுவதற்கு முன்பாக கிடைத்ததை சுருட்ட திட்டமிட்டுள்ளார். பொருளாதாரம் சோந்த பின் பாக்கரின் பாலியல் அத்துமீறல்கள் போல வேறு எந்த விஷயத்திற்காக எவர் கேள்வி எழுப்பினாலும் கேட்பவர்களுக்கு எக்ஸிட் தான் பரிசு.

ஒருவேளை அனைத்து சகோதரர்களும் விழிப்புணர்வு பெற்று விட்டால் அதுவும் வசதிதான். அனைவரையும் வெளியாக்கி விட்டு கிடைத்ததோடு செட்டில் ஆகிக் கொள்ளலாம் அல்லவா. சமுதாயமே! ததஜ சகோதரர்களே விழித்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கிறோம்.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 21.05.2007

0 Comments:

Post a Comment

<< Home