உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 14
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. .. )
வ அலைக்கு முஸ்ஸலாம். என்ன ஒமர் பாய் திடீர் திடீர்ன்னு காணாம போயிடுறீங்க. அதுசரி என்ன ஒரே சந்தோசமா இருக்கிறா மாதிரி தெரியுது.
நான் சிரிச்சுக்கிட்டு இருக்குறதைப் பாத்து இப்புடி கேட்குறீங்களே. நம்மளப் பாத்து இன்னக்கி நாடே சிரிக்கிது போங்க.
எங்க போறது. மண்குதிரய நம்பி ஆத்துல எறங்குன கதயா, தவ்ஹீதுன்னு நம்பி இப்போ தக்லீது பண்ண ஆரம்புச்சு அதுவும் எல்ல மீறிப் போயிடுச்சே. இப்போ போங்கண்ணா எங்க போறது.
அட என்ன அஹமது இதுக்குப் போயி இப்புடி கோவப்படுறீங்க.
சரி சரி ஒமர் பாய், நீங்க எதுக்கு சிரிச்சீங்க. பாக்கர் விஷயத்த நெனச்சா.
பாக்கர்
நான் சிரிச்சதும் அது விஷயமாத்தான் ஆனா இது வெளிநாட்டு விஷயம்.
என்ன ஒமரு கொளப்புறீங்க. ஏன் பாக்கரு இப்ப துபாய் போன சமயத்துல அங்க என்னமும் நடந்துருச்சோ.
சேச்சே. அப்படியெல்லாம் பயப்படாதீங்க, அஹமது. தவிர இங்க உள்ளதவிட அவருக்கு அங்க அதிக வாய்ப்புகள் இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் அங்கெல்லாம் போனா நம்மாளு கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பாரு.
அதில்ல. நம்ம மவ்ளூது நடிகர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌஸி சவுதில இருக்கும் போது, புளு பிலிம் கேஸட் வாங்கும் போது நம்ம சகோதரர்கள் சிலர்ட்ட மாட்டிக்கிட்டாரு. அப்புடியாக்கும்னு செனச்சேன்.
அட நாஞ் சொல்ல வந்தத சொல்ல வுடுங்களேன். நம்ம பாக்கரு மறுபடியும் பொதுச்செயலாளரான விஷயத்த சவுதில உள்ள நம்ம நிர்வாகிகள் அறிவிச்சு இருக்காங்க. உடனே.. .. ..
அய்யய்யோ. என்ன ஆச்சு ஒமரு பாய். எல்லாரும் கொந்தளிச்சு எந்திருச்சுட்டாங்கலா, பொம்புள விஷயத்துல அப்புடி அப்புடி இருப்பாருன்னு அரசல் புரசலா கேள்விப்பட்டிருந்தாலும், நம்ம அண்ணனே விலாவாரியா பஸ்ல எப்புடி நடந்திருக்கும்னு, பஸ்ஸுலயே இப்புடின்னா மத்தபடி எப்புடியெல்லாம் இருந்திருப்பாங்க சொன்னதுனால, அவுங்களால இத ஏத்திருக்க முடியாது. அங்க கொஞ்சமாவது தவ்ஹீது சிந்தனயுள்ளவங்க இருந்திருப்பாங்க. நம்மள மாதிரி முழுக்க முழுக்க தக்லீதுவாதிகளா இருந்திக்க மாட்டாங்க. சரி சரி நானே பேசிக்கிட்டிருக்கேன். நீங்க சொல்லுங்க. அங்க என்ன நடந்துச்சுன்னு.
எங்க சொல்ல வுட்டீங்க. இப்புடியெல்லாம் நடந்திருந்தா நான் சிரிச்சுக்கிட்டா வந்திருப்பேன். அங்க இருக்கிறவனுங்க நம்மலயெல்லாம் தூக்கி சாப்புட்டானுங்க. பாக்கர் மறுபடியும் பொதுச்செயலாளரா ஆயிட்டார்னு அறிவிச்சதும், 'அல்லாஹு அக்பர்'னு கோஷம் போட்டாங்களாம்.
அடக்கொடுமையே. இன்னாலில்லாஹ் சொல்ல வேண்டிய நேரத்துல இப்புடியா சொன்னாங்க.
இதுவாவது பரவாயில்லை. ஆனா பாக்கருக்கு மறுபடியும் பதவி குடுத்ததுக்கு ஒரு காரணம் சொல்லியிருக்காங்க பாருங்க. அது அதவிட பெரிய கூத்து.
அப்புடி என்ன சொன்னாங்க ஒமர் பாய்.
அதாவது, பாக்கருக்கு தமுமுகவினர் அழைப்பு விட்டாங்களாம். அவரு அங்க சேர்ந்துடக்கூடாதுன்னுட்டு, திரும்ப கூப்ட்டு பதவி குடுத்துட்டாங்களாம். இதச் சொன்னவுடன் தான் அங்க இருந்த எல்லாரும் அல்லாஹு அக்பர்னு கோஷம் போட்டாங்களாம்.
சே. கேக்கவே வெக்கமா இருக்குங்க ஒமர். ஒரு நேரத்துல நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்னு கோஷம் போட்டவங்கள யெல்லாம் எவ்வளவு கிண்டலும் கேலியும் செஞ்சோம். இப்ப என்னடான்னா, செக்சு குத்தம் சொல்லி விளக்குனவர எந்த ஒரு வெளிப்படையான காரணமும் சொல்லாம இப்ப திரும்ப கூப்பிட்டுகிட்டதோட அதுக்கு அல்லாஹு அக்பர்னு கோஷம் வேற. சே.
என்ன அஹமது இப்புடி சலிச்சுக்கிறீங்க. ஆனா ஒண்ணு கவனிச்சீங்களா. தமுமுகவுக்கு போனா போகட்டுமே. நமக்கு வசதி தானே. இப்புடி செக்சு குத்தம் செய்தவங்களெல்லாம் அங்க தான் இருப்பாங்க. ஏன்னா அவுங்க அரசியல்வாதிங்க. ஆனா நாங்க கொள்கைவாதிங்கன்னு அண்ணன் அடிக்கடி சொல்வாரே, அதுனால போனா போகட்டும்னு ஒருத்தர் கூட பேசலியே. அதுதான் நம்மாளுங்க.
வெக்கக்கேடு இதுல என்ன பெருமை வேண்டிக் கெடக்கு. ஒருவேளை அவரு தமுமுகவுக்குப் போனா நம்ம அண்ணனோட ஊழலயெல்லாம் அம்பலப்படுத்திருவாரோன்னு பயந்திருக்கலாம். விடுங்க. நெனெச்சாலே நெஞ்சு கொதிக்குது. போயஸ் தோட்டத்து பணபட்டுவாடா வௌகாரம் தான் காரணம்னு பல பேச்சு உலாவுது. இத விட்டுட்டு வேற எதாவது இருந்தா சொல்லுங்க.
இத விட்டா அடுத்த ஹாட் டாபிக் வாரிய தலைவர் பதவி தான்.
ஆமா தமுமுக ஹைதருக்கு வக்ஃப் வாரியம் கெடச்சதுல நம்ம ஆளுங்க ரொம்பத்தான் வயிறெரிஞ்சு போயிட்டாங்க. அதுதான் ஏன்னு எனக்குப் புரியல.
ஏன்னு புரியலியா. வக்ஃப் வாரியம்ங்கிறது தமிழகத்துல உள்ள வக்ஃப் செய்யப்பட்ட எல்லா பள்ளிகளையும் நிர்வகிக்கக் கூடியது. இப்பவே தன்னோட சுயநலமில்லாத சேவை மூலமா எல்லா தரப்பு மக்களயும் தமுமுக ஈர்த்துருச்சு. இப்போ வக்ஃப் வாரியம் கெடச்சதுனால பெரும்பான்மையா இருக்குற பள்ளி நிர்வாகத்தை ஈஸியா நெருங்கிற முடியும். இப்பவே நம்மள யாரும் கண்டுக்குற மாட்டேங்குறாங்க. இந்த நெலமைல தமுமுக இப்புடி எல்லோரையும் வளச்சுக்கிடுச்சுன்னா நம்மோட கதி.. .. .. ..
அட ஆமா. ஆதோ கதிதான். நாங்கூட பள்ளிகள நிர்வகிக்கக் கூடிய வக்ஃப் வாரிய தலைவரப் பத்தி பள்ளிக்கே போயி தொழாத நம்ம அண்ணன் ஏன் கோவப்படுறாருன்னு தலய பிச்சுக்கிட்டிருந்தேன்.
நம்ம போன ஆட்சியில இருந்த மந்திரிங்க தொனையோட கடையநல்லூர் பள்ளிய கைப்பத்துனமே அதக்கூட வக்ஃப் வாரியம் தலயிட்டதுனால தான திருப்பிக் குடுக்க வேண்டியதாப் போச்சு. அதமாதிரி இப்போ மேலப்பாளையமும் ஆகிப்போச்சுன்னா என்ன செய்றதுங்குற கவல வேற. மத்த ஆளுங்களா இருந்தா போயஸ் தோட்டத்து காசுல அல்லது சுனாமி, ஜகாத் மாதிரி பொதுவான பேரச் சொல்லி வசூலிச்சு நம்ம கணக்குல வச்சுருக்குற பணத்த குடுத்து சரி கட்டலாம். தமுமுககாரன லஞ்சம் குடுத்து மடக்க முடியாதே அப்புடீங்குறதும் காரணம்.
அதாவது, நேர்மையான அதிகாரிகளப் பார்த்து லஞ்சம் குடுத்தே பளக்கப்பட்ட காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதியும் பயப்படுறா மாதிரி நம்மாளுங்க பயப்படுறாங்கன்னு சொல்லுங்க. என்னைக்கு போயஸ் தோட்டத்து பெட்டிய வாங்குனாரோ அன்னைல இருந்து நம்ம தலவரு அரசியல்வாதிகளையே மிஞ்சிட்டாரு போங்க.
சரி அஹமது கடைசியா ஒரு மேட்டரு, இப்ப காலங்கடந்து அப்ஸல் குருவப்பத்தி எளுதியிருக்குறத கவனிச்சீங்களா?
ஆமா ஒமர் பாய். நானும் பார்த்தேன். அப்ஸல் குரு விஷயத்துல தமுமுககாரங்க எந்த அளவுக்கு கருத்தரங்கம், பத்திரிக்கையாளர் சந்திப்புலாம் நடத்தி மக்களோட கவனத்த ஈர்த்தப்பல்லாம் நாம் ஒண்ணுமே சார்பா எளுதாம பேசாம இருந்துட்டு இப்ப மட்டும் ஏன் எளுதுறாங்கன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.
அப்ஸல் குரு விஷயம் பீக்ல இருந்தப்போ அம்மா ஜேஜே அப்ஸல உடனடியா தூக்குல போடனும்னு ஆர்.எஸ்.எஸ் கருத்த எதிரொலிச்சாங்க. அப்ப எப்படிங்க நாம அதுக்கு மாத்தமா எளுதவோ பேசவோ முடியும். அதுனால தான், சதாமுக்கு சாதகமா எளுதுனப்போ கூட அப்ஸல் விஷயம் அப்புடி இல்ல. நியாயமான விசாரணைக்குப் பின்னால தீர்ப்பு இதுங்குறதுனால நாம அதுக்காக ஆர்ப்பாட்டம்லாம் செய்ய முடியாதுன்னு நம்ம தலவரு பதில் எளுதுனாரு. ஆனா இப்போ ஈயூ (EU) தலையீட்டைப் பத்தி அம்மா அறிக்கை எதுவும் விடலங்குறதுனால அவசரமா எளுதிட்டாங்க. இப்பவாச்சும் புத்தி வந்துச்சேன்னு சமாதானம் அடைய வேண்டியது தான்.
என்னமோ போங்க ஒமர். இப்டி தான் நாம அவரு செய்யுற எல்லாத்துக்கும் ஆமா சாமி போட்டு கிட்டு காலத்த ஒப்பேத்த வேண்டியிருக்கு. எதுலயும் ஒரு நியாயமான நிலபாட்ட எடுக்க முடியாத அளவுக்கு தக்லீதுல ஊறிப்போயிட்டோம் போங்க.
சரி அஹமது. பெறகு சந்திப்போம். வஸ்ஸலாம்.
முல்லா
0 Comments:
Post a Comment
<< Home