பீஜேயின் வாயில் சீல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..
பாட்சா - மதானி
இந்திய ஜனநாயக நாட்டில் முஸ்லிம்கள் நீதித்துறையின் மீது என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டு கிடந்த முஸ்லிம்களுக்கு பார்ப்பணர்கள் பெரும்பான்மையாக உள்ள நீதித்துறையில் எங்கே நீதி கிடைக்கப் போகிறது என்ற அவநம்பிக்கை சமீபகாலமாக தோன்றியிருந்தது.
தீர்ப்பு எதுவாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குக்கின் தீர்ப்பு ஆக.1 அன்று வழங்கப்பட்டது. மௌலவி அப்துல் நாசர் மதானி குற்றமற்றவர் என்று தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறார். உடனடியாக விடுதலையும் அடைந்து விட்டார். மகிழ்ச்சிகரமான செய்தி.
அவரோடு சேர்ந்து 7 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு விட்டனர். இது அதைவிடவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
ஆக.6-ஆம் தேதியும் அதன் பிறகும் நடக்கவிருக்கும் நீதிமன்ற நிகழ்வுகளில் தண்டனைகள் அறிவிக்கப்படும் போது 90 சதவிகிதம் பேர் வெளிவர வாய்ப்புகள் இருக்கிறது இன்ஷாஅல்லாஹ்.. ..
9 வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்த இந்த வழக்கை துரிதப்படுத்தி ஒரு முடிவுக்கு கொண்டுவர தமுமுக உழைத்ததை தமிழக முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். முஸ்லிம் கைதிகள் விடுதலையாகட்டும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடாகட்டும் தமுமுகவைத் தவிர எந்த அமைப்பினாலும் துரும்பைக்கூட அசைக்க முடியாது.
ததஜவினர் போடுவதெல்லாம் வெற்றுக் கூச்சலாகும். இடஒதுக்கீடு கிடைக்கும் போது தங்களால் தான் அது கிடைத்தது என்று பினாத்திக் கொள்வதற்கு தான் அவர்களது சிறை நிரப்புப் போராட்டம் போன்ற நாடகங்கள் உதவும்.
தமுமுக இதற்காக பேராடாமல் இருந்திருக்குமேயானால் இன்னும் காலம் தாழ்த்தப்பட்டிருக்கும், அதிலும் ஜெயலலிதாவின் ஆட்சி என்றிருந்தால் அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கும். தமுமுக தூய எண்ணத்தோடு முஸ்லிம் சிறைவாசிகளுக்காக போராடி வெற்றி கண்டுள்ளது.
தமிழக முதல்வரை தமுமுக தலைவர்கள் சந்திக்கும் பொழுதெல்லாம் சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு ஆகிய இரண்டு விஷயத்தை பேசாமல் சந்திப்பு முடிவுக்கு வருவதில்லை.
தமிழக முஸ்லிம்கள் அனைவரும் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மகிழ்ச்சியை கொண்டாடும் இந்த தருணத்தில் பிஜேபி கட்சியினரும் ததஜவின் பிஜேயும் தான் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
பிஜேபி கட்சியினரும் பிஜேயும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதில் சமநிலையில் இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தி எழுதி வருகிறோம். அது மேலும் மேலும் உறுதியாகிக் கொண்டே வருகிறது.
கோவை குண்டுவெடிப்பு வழக்காகட்டும் இன்ன பிற வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக இருக்கும் முஸ்லிம்கள் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் மிகக் குறியாக இருப்பவர் தான் இந்த பீஜே. ஆனால் தனக்கு அதில் அக்கரை இருப்பதைப் போன்று இப்பொழுது வரை நாடகமாடி ததஜ எனும் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தில் இருக்கும் ஒன்றும் அறியா அப்பாவிகளை ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறார் இந்த பிஜே.
ஜெயலலிதாவை சந்திக்க சென்ற போது முஸ்லிம் கைதிகள் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிய மௌலவி சம்சுதீன் காஸிமி அவர்களின் கால்களை மிதித்து அதைப் பற்றி பேச விடாமல் தடுத்தவர் தான் இந்த பிஜே.
கோவை சிறைவாசிகள் விஷயத்தில் அவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவரும் சாத்சாத் பிஜே தான். அவரது சாட்சியங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டு எளிதில் கிடைத்தவுடன் - அதில் தான் கையொப்பம் இடவில்லை என்று முதலில் பொய் சொல்லி விட்டு, அவை அத்தனை பக்கங்களிலும் பிஜேயின் கையெழுத்து இடப்பட்டிருப்பதை தெரியப்படுத்தியவுடன் பேச்சு முச்சை காட்ட வில்லை.
போலீஸ் தான் இஷ்டத்திற்கு எழுதி வைத்துக் கொண்டு தன் பெயரை பயன்படுத்துவதாகவும் பிஜே பொய் கூறினார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கோவை சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதை பிஜே எதிர்த்தால் ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியது வரும்.
ஆதரித்தால் அரசாங்கம் இவருக்கு எதிராக வழக்கு தொடரும் நிலை ஏற்படும்.
அதனால் தான் ததஜவின் வெப்தளங்களில் பேச்சு மூச்சை காணோம்.
முஸ்லிம்களுக்கு நீதித்துறையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற பழிச்சொல்லை நிவர்த்தி செய்யும் விதத்தில் இருக்கக்கூடிய, அதே நேரத்தில் இதே ஜுடிசியல் மெகானிசத்தை அப்படியே வைத்துக் கொண்டு, முஸ்லிம்களின் வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நீதி கிடைப்பதற்கு கடுமையாக உழைத்தது தமுமுக மட்டுமே.
இதன் மூலம் 'முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது' என்ற நீதித்துறைக்கு ஏற்பட விருந்த களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. சப்பாஷ் தமுமுக.
இதைப் போன்றே மற்ற வழக்குகளில் சிறைச்சாலைகளில் அடைபட்டுக்கிடக்கும் முஸ்லிம்களின் வழக்குகள் விரைந்து முடிப்பதற்கு தமுமுக அரசாங்கத்தை துரிதப்படுத்த வேண்டும்.
இப்னு ஃபாத்திமா 05.08.2007
0 Comments:
Post a Comment
<< Home