Monday, July 09, 2007

உமா பாரதி மீது வழக்கு

தீவிரவாத செயல்களிலும், இந்திய நாட்டுக்கு மாபெரும் அச்சுறுத்தலாகவும் சங்பரிவார் அமைப்பினர் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றனர்.

பாபர் மசூதியை இடித்து சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய சங்பரிவார் அமைப்பினர் தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இராம கோபாலனின் விஷம பேச்சுக்களை பதிவு செய்து அவர் மீது வழக்கு போட போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால் அங்குள்ள போலீஸ் எப்ஐஆர் கூட பதிவு செய்ய மறுக்கும் நிலை தான் தமிழகத்தில் நீடிக்கிறது.

முதலில் கோர்ட்டுக்கு சென்று அனுமதி பெற்ற பின்பு எப்ஐ ஆர் பதிவு செய்ய வேண்டிய கொடுமை இந்திய திருநாட்டில் இருக்கிறது.

இருந்தாலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் விடாது முயன்று இராம கோபானின் 'முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள்' என்ற அடாவடித்தனமான பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

அந்த வரிசையில் உமா பாரதி கிளம்பியிருக்கிறார்.

திருச்சியில் அவர் பேசும் போது, 'ராமர் பாலத்தை பாதுகாக்க உயிரை கொடுக்கவும் தெரியும், உயிரை எடுக்கவும் தெரியும்' என்று உமா பாரதி கூறினார்.

திருச்சி கோட்டை எஸ்.ஐ மணிமாறன் அளித்த புகாரின் அடிப்படையில் உமா பாரதியின் மீது 153(ஏ) பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது, 506(2) கொலை மிரட்டல் விடுவது ஆகிய பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதே போன்று ராமேஸ்வரத்தில் பேசும் போது,

'ராமர் பாலம் இடிப்பதை பாரதிய ஜனசக்தி வன்மையாக கண்டிக்கிறது. ஏழு தினங்களுக்குள் ராமர் பாலத்தை இடிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ராமர் பாலத்தை உடைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், அதிகாரிகள், தனியார் கம்பெனிகள் பற்றி எங்கள் இயக்கம் மூலம் பட்டியல் தயார் செய்வோம். அவர்கள் உயிருக்கு உத்திரவாதம் சொல்ல முடியாது. இதனால் எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். பாலத்தை உடைக்காமல் இருக்க உயிரைக் கொடுக்கவும் உயிரை எடுக்கவும் தயாராக உள்ளோம்' என்று உமா பாரதி பேசினார்.

ராமேஸ்வரம் காவல் நிலையத்திலும் 153(ஏ), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் உமாபாரதியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராம கோபாலனின் மீது எப்ஐ ஆர் பதிவு செய்வதற்கு கூட மறுத்த தமிழக காவல் துறை, என்ன பேசினாலும் உமா பாரதியின் மீது எப்ஐ ஆர் கூட பதிய மாட்டார்கள் என்ற தினாவட்டில் தான் உமா பாரதி பேசியிருக்கிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்த தமிழக காவல் துறையினருக்கு ஒரு சப்ப்ப்பாஷ்.

இப்னு ஃபாத்திமா
9.7.2007

0 Comments:

Post a Comment

<< Home