இதுவரை 69 பேர் ஜாமீனில் விடுதலை
கோவை குண்டு வெடிப்பு வழக்கு: கிடைத்தது 12 பேருக்கு ஜாமீன்
கோவை, ஆக.14-தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு, நேற்று தனிக்கோர்ட் ஜாமீன் வழங்கியது, இது வரை 69 பேர் ஜாமீனில் சென்றனர்.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பில், 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் 89 பேர் ஜாமீன் கேட்டு, தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி உத்ராபதி முன்னிலையில் நடக்கிறது. கடந்த வாரம் 57 பேர் ஜாமீனில் விடப்பட்டனர். இவர்கள் சொந்த ஜாமீன் மற்றும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தனிக்கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் நேற்று துவங்கியது. 38 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடந்தது. இதில், அபுதாகிர்(28), அக்கீம்(27), அப்துல்லா(40), அப்பாஸ்(28), இஸ்மாயில்(29), சாதிக்பாட்சா(34), அன்சர்பாட்சா(29), அப்துல்சலாம்(36), அப்துல்சுக்கூர்(37), ஜமேஷா(39), அப்பாஸ்(33), ஹசைன்(39) ஆகிய 12 பேருக்கு நேற்று மாலை ஜாமீன் உத்தரவு வழங்கியது.
பர்கத், ஜாபர், அப்துல்சத்தார் உள்ளிட்ட 21 பேரின் மனுக்கள் இன்றும், ஆக.20ல் ஐவரின் மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.
நன்றி: தினமலர்
0 Comments:
Post a Comment
<< Home