இமாம் கஸ்ஸாலி பற்றிய விமர்சனம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்
சஹதுல்லாவுக்கு பதில்
அன்பு நண்பர் சஹாதுல்லாஹ் அவர்களுக்கு,
இமாம் கஸ்ஸாலி அவர்கள் குறித்து நான் எழுதியிருந்த சில வரிகள் பற்றி தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளீர்கள்.
தாங்கள் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள பலர் இமாம் கஸ்ஸாலியின் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளனர். என்றாலும் அவை அனைத்தும் செவி வழி செய்திகளின் அடிப்படையில் அமைந்தது தான்.
உண்மையில் இமாம் கஸ்ஸாலி அவர்கள் அவர்களின் இளமைக் காலத்தில் மாபெரும் இஸ்லாமிய பிரச்சாரகராக விளங்கினார் என்பதிலோ அவர் ஆற்றிய இஸ்லாமிய சேவைகளைக் குறித்தோ எவருக்கும் சந்தேகமில்லை. ஆனால் தனது இறுதிக் காலத்தில் இஸ்லாமிய தனித்துவத்தை தகர்க்கும் தஸவ்வுஃப் (துறவரம்) கொள்கையில் வீழ்ந்து தானும் வழி கெட்டு சமுதாயத்தையும் வழிகெடுக்கத் துவங்கினார். இது மாத்திரமல்லாமல் வஹ்தத்துல் உஜுஹ் எனப்படும் அத்வைத கொள்கையின் ஆதரவாளராகவும் ஆகிப்போனார்.
இவருடைய காலத்திற்கு முன்பே கூட சிலர் அத்வைத கொள்கை பிரச்சாரகர்களாக விளங்கிய போதிலும் இமாம் கஸ்ஸாலி அவர்களின் பிரச்சாரத்திற்கு பின்பே அத்வைதம் எனப்படும் காணும் பொருட்கள் யாவும் கடவுளே எனும் சித்தாந்தம் வலுப்பெற துவங்கியுள்ளது.
தனது அந்திம காலத்தில் இவற்றிலிருந்து இமாம் கஸ்ஸாலி விலகி விட்டதாக சொல்லப்பட்டாலும் அவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் இதனை ஏற்க முடியவில்லை.
ஒன்றை மட்டும் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டதாலோ அதனை எத்தி வைப்பதாலோ (பிரச்சாரம் செய்வதாலோ) அவர் அதிலேயே தான் வாழ்நாள் முழவதும் இருந்தார் (அ) இருப்பார் என்று ஒருவரும் உத்திரவாதம் அளிக்க முடியாது.
இதுபோன்ற சிக்கல் சிரமங்களிலிருந்து விடுபடத்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பிரார்த்தனையை கற்றுத் தந்துள்ளார்கள். 'யாமுகல்லிபல் குலூப் தப்பித் குலூபனா அலா தீனிக்'
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
அன்புடன்
இப்னு ஹசன்.
1 Comments:
pls give evidence about imam khazzali allegation
Post a Comment
<< Home