உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 18
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..
வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர் பாய். என்ன ஒரேயடியா காணாம போயிட்டீங்க. ஒங்கள எதிர்பார்த்துட்டே இருந்தேன். ஆமா எங்க தான் போனீங்க. மலேசியாவுக்கா.
அடப்போங்க அஹமது. மனுஷன் ஒரு மாசமாக முடியாம கெடந்து எந்திரிச்சு வந்திருக்கேன். ஒங்க பங்குக்கு ரவுசு பண்றீங்க.
சரி சரி கோவிச்சுக்காதீங்க. லேட்டஸ்ட் வெஷயம் ஏதும் இருக்கா.
என்ன இப்புடி கேட்டுட்டீங்க. இப்ப பரபரப்பான நியூஸே மலேசியா தானே.
அது எனக்கும் தெரியும் ஒமர் பாய். சும்மா கிண்டலுக்கு சொன்னதுக்கே கோவிச்சுக்கிட்டீங்கல்ல. அதான் அதப்பத்தி நீங்களே ஆரம்பிகட்டும்னு விட்டுட்டேன். சொல்லுங்க. மலேசியாவுல என்ன தான் நடந்துச்சு.
அதான் டிவிலயும் நெட்டுலயும் விரிவா வந்துருச்சே.
நெட்டு விஷயமுலாம் நமக்கு வசதியில்லாத சமாச்சாரம். நீங்கலா வந்து சொன்னாத்தான் தெரியுது. சரி டிவில எப்ப வந்துச்சு. நான் பாக்கலியே.
அஹமது டிவி, நெட்டுலாம் நமக்கு உள்ளது இல்லைங்க. அதெல்லாம் வெளிநாட்டு காரங்களுக்குத் தான். விண் டிவில வர்ற புரோகிராம நாம பாக்க முடியாது. கல்ஃப்காரங்களுக்காக போடுறாங்க.
அப்புடி என்னதான் காட்டுனாங்க சொல்லுங்களேன்.
அதாவது நம்ம தலவர மலேசியாவுல அரஸ்ட் பண்ணாங்கல்ல. அவர விடச் சொல்லி இங்க எம்பஸிய முற்றுகை போராட்டம் நடத்தப் போறதா சொன்னாங்கல்ல.
எம்பஸிய முற்றுகை போராட்டம்னா ஒருத்தரும் உள்ள போக முடியாது ஒருத்தரும் வெளிய வர முடியாதே. ரொம்ப சிக்கலா போயிடுமே.
ஹா.. ஹா.. ஹா.. என்ன அஹமது. நெசமாவே புரியாம பேசுறீங்களா. நம்ம அளுங்க எப்ப சொன்ன மாதிரி செஞ்சுருக்காங்க. அதுனால முற்றுகை போராட்டம்லாம் நடத்தல. சும்மா ஒரு கூட்டம் போட்டு படம் காட்டிட்டு அனுப்புச்சுட்டாங்க. அவுங்க நோக்கமே இந்த படத்த காட்டி வெளிநாட்ல வசூல் பண்றது தான. அதுனால தான் சுடச்சுட அந்த ஆர்ப்பாட்டத்தை பல்ஃப் டைம்ல ஒளிபரப்பு பண்ணுனாங்க.
ஓஹோ. அதுனால தான் ஏர்போட்டுல நம்ம நந்தினியக்கா புருஷன் பாக்கரு விண்டிவி தேவநாதனுக்கு நன்றி சொன்னாரோ.
அது மட்டுமில்ல அஹமது. நம்மாளுங்க அரசியல்ல நுழையுற அவசரத்துல அதிரடியா சில விஷயங்களை செஞ்சுட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க.
அது என்ன சங்கதி. கொஞ்சம் வெ வரமா சொல்லுங்களேன்.
அதாவது அஹமது, மலேசியாவுக்கு நம்ம தலவருங்க போக முன்னாடியே அங்க மீட்டிங் பேசுறதுக்கு அனுமதியில்லங்குற வெஷயம் தெரிஞ்சுபோச்சு. அப்டின்னாலும், இங்க செய்றாமாதிரி என்னவாவது திருகுதாளம் செஞ்சுறலாம்னு நெனச்சு போயிட்டாங்க.
ஆமா அதுக்காக ஏற்பாடு செஞ்சத கேன்ஸலா பண்ண முடியும். எப்புடியாவது மாற்று ஏற்பாடு செஞ்சு நடத்தி தான ஆகணும். அதுல என்ன கொறய கண்டு புடிச்சீங்க.
என்ன பேச்சு பேசுறீங்க அஹமது. அனுமதியில்லாம ஒரு கூட்டத்த நடத்த முடியுமா அதுவும் வெளிநாட்டுல போயி.
அப்ப என்ன! மீட்டிங் நடக்கலியா. மீட்டிங் நடக்கலன்னா ஏன் தலைவர அரெஸ்ட் பண்ணாங்க.
பொறுங்க அஹமது. விளம்பரப்படுத்துன எடத்த உட்டுட்டு வேற எடத்த கூடுதல் தொகைய குடுத்து புடிச்சு அங்க வச்சுத்தான் நடத்தி படம் எடுத்து போட்டாங்க.
பரவாயில்லை எப்புடியாவது நடத்திட்டாங்கல்ல.
சும்மா படம் புடிக்கிறதுக்காக ஒரு அரை மணி நேரம் ஷோ காட்டுறதுக்குள்ளயே போலீஸ் வந்துட்டாங்க. அப்புறம் கைய கால புடிச்சு, இவ்வளவு பேரு வந்துட்டாங்க சாப்டுட்டு போயிடுறோம்னு சொல்லி கெஞ்சி டயம் வாங்கி சாப்பாடு குடுத்துருக்காங்க. போலிஸுவெளிய போன உடனே மறுபடியும் கூட்டத்த ஆரம்பிச்சு இருக்காங்க. போலிசு திரும்ப வந்து மெரட்டவும் வந்திருந்தவங்க எல்லோரும் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடிட்டாங்கலாம்.
என்ன ஒமர் பாய். நீங்க சொல்றத பாத்தா நீங்களும் மலேசியா போயிட்டு வந்திருப்பீங்க போல தெரியுதே.
இல்ல அஹமது. அல்லாஹ் காப்பாத்துனான். தமிழ்நாட்டுல இருந்து போனவுங்கள புடிச்சுகிட்டுப் போன போலிசு ஏர்போர்ட் வரக்கும் கைல வெலங்கு மாட்டில கொண்டு வந்துச்சாம். இந்த நியூஸ்லாம் அங்க இருக்கிற எம்மருமகன் சொன்னது தான்.
அடப்பாவமே. ஆனா மலேசியா பத்திரிக்கைல லாம் நம்ம தலவரு நடத்துன ஷோவ பத்தி செய்தி வெளியிட்டதா நம்ம பசங்க பேசிக்கிட்டாங்களே.
அது ஒரு பெருங்கூத்து. நம்மாளுங்க நெட்டுல போட்டிருந்தாங்களே அது ஒரு செட்அப்பு.
என்ன சொல்றீங்க ஒமர் பாய். செட்அப்பா.
ஆமா அஹமது. போட்டாவோட ஒரு பத்திரிக்கைல செய்தி போட்டா எப்புடிபோடுவாங்க. எந்த ஊரு செய்தியோ அந்த ஊருப் பேரு, என்னக்கி உள்ள செய்தியோ அந்த தேதிய போட்டு அதுக்குப் பெறகு செய்திய எழுதுவாங்க. ஆனா இவுங்க போட்டிருந்ததப் பாருங்க.
இப்புடி செய்தியப் போட்டு கடசில பேரப்போட்டு வந்துச்சுன்னா அது வெளம்பரம்தான். சந்தேகமா இருந்தா ரின் சோப்பு வெளம்பரத்த பாத்துக்குங்க.
அப்ப காசு குடுத்து விளம்பரமா போட்டுட்டு அதயே பத்திரிக்கை செய்தி மாதிரி நெட்டுல போட்டுட்டாங்கன்னா சொல்றீங்க.
வேற என்ன.. .. .. இப்புடிலாம் படம் காட்டுனாத்தான அரசியல் பண்ண முடியும்.
ஆமாமா. அரசியல்ல இதுலாம் சகஜமப்பா.
தலைவர் பண்ணுனது இந்த மாதிரி கூத்துன்னா, நம்ம சின்ன அண்ணன் அலாவுதீன் அந்த ஆர்ப்பாட்டத்துல அடிச்ச கூத்து அதுக்கும் மேல.
அப்புடி என்ன செஞ்சாரு.
ஆர்ப்பாட்டம் நடந்தது சென்னைல 5 மணிக்கு, அப்போ மலேசியாவுல 7:30 மணி நம்ம ஆள வெலங்கு போட்டு ஏர்போர்ட்டுக்கு மலேசியா டைம் 6:00 மணிக்கே கொண்டு வந்துட்டாங்க. அவரு ஃப்ளைட்ல ஏறுனதுக்குப் பெறகு தான் இங்க ஆர்ப்பாட்டமே நடந்துச்சுன்னா பாத்துக்கங்க.
தலவர ஃப்ளைட்ல ஏறிட்டாருன்னா அவர விடுதல பண்ணனும்னு ஏன் இங்கே கூட்டம் போட்டாங்க. என்ன ஒமர் பாய் தல சுத்துதே.
நாந்தான் சொன்னேனெ அஹமது. அரசியல்ல இதுலாம் சகஜமப்பா. இந்த லட்சணத்துல நம்ம அலாவுதீன், அண்ணன் இப்போ ஃப்ளைட்ல ஏறிட்டாங்கன்னு சொல்லித்தான் பேச்ச ஆரம்புச்சாரு. ஆனா அடுத்த நிமிசத்துலயே, இந்த மலேசிய அரசு உடனடியாக அண்ணனை விடுவிக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்னு சொன்னாரு பாருங்க. அதுதான் பயங்கர தமாசு.
சரியாப்போச்சு போங்க. நம்மள எல்லாம் முட்டாள்னு நெனச்சுட்டாங்களா.
சேச்சே அப்படியெல்லாம் வருத்தப்படாதீங்க. ஒங்கள என்னயலாம் எப்போ அவுங்க அறிவுள்ளவனா நெனச்சுருக்காங்க. அவுங்க சொல்றதுக்குலாம் தல ஆட்டியே பழக்கப்பட்டதுனால நம்மள யெல்லாம் ஆடு மாடு மாதிரிதான நடத்துறாங்க.
சரி வயித்தெரிச்சல கௌப்பாம அலாவுதீன் அப்புறமா என்ன சொன்னாருன்னு சொல்லுங்க.
அப்புறமா அவரு பேசுனது அத விட தமாசு. மலேசிய அரசு இப்புடி கைது பண்ணி பெறகு விடுதல பண்ணி அனுப்புறதுனால நம்ம தலைவருக்கு, மலேசியா இனி ஸ்பெஷல் விஷா அனுப்பி அவுங்களே மீட்டிங் போட்டு அண்ணன் அதுல பேசனுமாம்.
நடக்குற கதயா இது.
ஒருக்காலும் நடக்காது. அவரோட பாஸ்போர்ட்லயே இனிமே இங்க வரக்கூடாதுன்னு முன்னால துபாய், கத்தார், சிலோன்ல அடிச்ச மாதிரி இப்போ மலேசியாவுலயும் அடிச்சு அனுப்புறாங்க. அதனால சொந்தமா டிக்கெட் எடுத்தே போக முடியாது. அப்புறம் எப்புடி அரசாங்க விருந்தாளியா போறது.
சே ரொம்ப கேவலமாப் போச்சே.
என்ன அஹமது இப்புடி சொல்லிட்டீங்க. அத எல்லாம் யாரு போயி மலேசியாவுலயும் துபாய்லயும் கேக்கப் போறாங்கங்குற தைரியத்துல தான இப்புடி அந்தந்த அரசாங்கத்துல மன்னிப்பு கேக்குறதும் பெறகு வெளியில வீராவேசமா பேட்டி குடுக்குறதுமா இருக்காரு.
அப்போ அண்ணன் தொழில் முறை அரசியல்வாதியா மாறிட்டாருன்னு சொல்லுங்க.
இப்புடி மன்னிப்பு கேக்குறதயும் பெறகு வீரமா பேசுறதயும் கேட்டுட்டு ஒருத்தரு எங்கிட்ட சொன்னது தான் ரொம்ப வருத்தமாயிடுச்சு.
அப்புடி என்ன சொன்னாரு.
அதாவது பிஜேபி ஆளு எஸ்.டி.சாவர்கார் இருந்தாரே அவரு இப்புடித்தான் போலீஸ் கிட்ட மாட்டுனதும் மன்னிப்பு கடிதம் எளுதி குடுத்துட்டு வெளியே வந்து காத்துக்கிட்டு இருந்த ஒண்ணும் தெரியாத பாமர மக்கள்ட்ட பெரிய தியாகி மாதிரி வீரமா பேசுனாருன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா இப்போ ஒங்க தலைவர் அதே பாணியில நடந்துக்கிட்டாரேப்பா. நீங்களும் பிஜேபி ஆளுங்களும் ஒரே ரகமான்னு கேக்குறாருங்க.
சே. எப்போ நாம வெளியேறுறோமோ அப்பத்தான் நமக்கு நிம்மதி கெடக்கும் போல.
சரி அஹமது நேரமாயிடுச்சு. பெறகு சந்திப்போம்.
வஸ்ஸலாம்
முல்லா 26.08.2007
0 Comments:
Post a Comment
<< Home