இமாம் கஸ்ஸாலியின் ஆதார நூல்கள்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..
நாம் இந்த வலைத்தளத்தில் சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து வரும் திருவாளர் பி.ஜெயினுலாபிதீன் அவர்களின் சமுதாய விரோத போக்கை சுட்டிக் காட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அது தான், 'ஒற்றுமைக்கு எதிரி யார்?'
அதற்கு பின்னோட்டம் இட்ட சகோதரர்கள் அக்கட்டுரையில் நாம் சுட்டிக்காட்டிய இமாம் கஸ்ஸாலி குறித்த விஷயத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
சுருக்கமான விபரத்தை எழுதிய பின்பும் ஆதாரம் உள்ளதா என கேட்டிருப்பதனால் கீழ்காணும் விபரங்களை தொகுத்துள்ளோம். மேலதிக விபரங்களுக்கு நாம் குறிப்பிட்டுள்ள புத்தகங்களை வாசித்துக் கொள்ளவும்.
இமாம் கஸ்ஸாலி அவர்கள் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கதும் பிரபலமானதுமான புத்தகம் தான்,
'இஹ்யாவு உலூம் அத்தீன்' இப்புத்தகத்தில் 'அல் ஆதாபு திலாவத்துல் குர்ஆன்' என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அல் ஆதாபுல் பாதினியா என்றும் குறிப்பிடப்படும்.
இந்தப் பகுதியில் இமாம் கஸ்ஸாலி தனது கருத்தாக குறிப்பிடுவது, 'ஒரு துளி இந்திரியத்தின் மூலம் எப்படி முழு உடம்பும் அடங்கியுள்ளதோ, அதே போல் நாம் காணும் படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் (கடவுளின்) படைப்புகளாக உள்ள நிலையில், அவை அனைத்திலும் நாம் இறைவனை காணலாம்'. அதாவது காணும் பொருள் யாவும் கடவுளே – எனப்படும் அத்வைத கொள்கையாகும்.
அதே போல் இமாம் கஸ்ஸாலியின் மற்றொரு புத்தகம் தான்,
இல்ஜாமுல் அவாம் அன் இல்முல் கலாம்.
இதிலும் அவர் தஸவ்வுஃப் கொள்கையை வலியுறுத்தியதால், அன்றய காலத்தில் வாழ்ந்த அறிஞர் இஸ்ஸுத்தீன் இப்னு அப்துஸ்ஸலாம் அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார். இவர் இமாம் கஸ்ஸாலியின் புத்தகங்கள் எரிக்கப்பட வேண்டும் என்று ஃபத்வா வழங்கியவர்.
அது மாத்திரமல்லாமல், இமாம் கஸ்ஸாலியின் நேரடி மாணவர் இப்னு அரபி ஆவார். இவர் அத்வைத கருத்துக்களை முஸ்லிம் உலகெங்கும் பரப்பியவர்களில் முக்கியமானவர். இவர் தனது ஆசிரியரான இமாம் கஸ்ஸாலி அவர்களைக் குறித்து சொல்லும் பொழுது,
'அத்வைத கொள்கையை பல அறிஞர்கள் பிரச்சாரம் செய்த பொழுதும், இமாம் கஸ்ஸாலியின் வருகைக்கு பின்பே அது முக்கியத்துவம் பெற்றது' என தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல்களில் முக்கியமானது 'அல் ஃபுதூஹாத் அல் மக்கியா' என்பதாகும்.
நமது கட்டுரையில் நாம் விரிவாக எழுதாவிட்டாலும், எவரையும் மதிப்பதாக இருந்தால், அவரது சமீபத்திய கருத்துக்களை அறிந்து அதனடிப்படையிலேயே மதிக்க வேண்டும், என்பதனை சுட்டிக்காட்டவே இமாம் கஸ்ஸாலியின் பிற்கால நடவடிக்கைகளினால் அவர் மதிப்பிழந்ததை குறிப்பிட்டிருந்தோம்.
அதே அடிப்படையில் திருவாளர் பிஜேவின் 1975 – 2000 வரையான விஷயங்களை முற்படுத்தி அவரது 2004 க்கு பிறகான இஸ்லாமிய விரோத போக்கை கண்டு கொள்ளாமல் விடுவோமானால் தக்லீத் எனும் தனி நபர் துதியில் இறங்கி முரீதுகளாகி இஸ்லாமிய வட்டத்தை விட்டே வெளியேற நேரிடும்.
சகோதரர்கள் அதற்கு முன்பாக சிந்திப்பார்களா.
இப்னு ஹஸன் 30.08.2007
0 Comments:
Post a Comment
<< Home