இடஒதுக்கீட்டை நிர்மூலமாக்க சங்பரிவார் சதி
இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை இல்லை
பிஜேபி சென்னை அலுவலகம்
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த அவசரச் சட்டத்தை அரசியல் அமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை அந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா., நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. லோகநாதன் சார்பில் கே.எம். விஜயனும், அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர். விடுதலையும் ஆஜராகினர்.
ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத தனி இடஒதுக்கீடு கொண்டு வந்து இயற்றப்பட்ட சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஏனெனில் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு சென்றதால் அந்தச் சட்டத்தை ரத்து செய்தது.
மீண்டும் ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு நான்கு சதவீதம் ஒதுக்கீடு அளித்து சட்டமியற்றியது. அந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வில்லை. எனவே அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது ஏற்புக்குரியது. ஏற்கெனவே முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இடஒதுக்கீடு சலுகை அனுபவித்து வருகின்றனர். இப்பொழுது அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தலைமை வழக்குறைஞர் வாதிட்டார்.
தலைமை நீதிபதி இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. இவ்வழக்கில் விரிவான விவாதம் நடத்த வேண்டியுள்ளது என்று கூறி நான்கு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நன்றி: தமுமுகவின் இணையதளம், இன்றைய முக்கியச் செய்திகள் பிரிவு
0 Comments:
Post a Comment
<< Home