Friday, October 26, 2007

இடஒதுக்கீடும் இவர்களும்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

ஏக்கப் பெருமூச்சோடு பலநாட்கள் (வருடங்கள்?) எதிர்பார்த்து ஏங்கித் தவித்த சமுதாயத்தினர் சற்றே இளைப்பாற இனிக்கும் செய்தியாக தனி இடஒதுக்கீடு இந்த ரமளானில் சாத்தியமாகியது. அல்ஹம்துலில்லாஹ்.

தமுமுக தனது தாரக மந்திரமாக முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன்வைத்த போது,

அதனை ஏகடியம் பேசி எள்ளி நகையாடிய முஸ்லீம் லீக், தற்பொழுது தாங்களும் அதற்காக பலமுறை குரலெழுப்பியதாக கூப்பாடு போடுகின்றனர். முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு பறிக்கப்பட்ட போது பதவியில் இருந்து கொண்டு பாராமுகமாய் இருந்தவர்கள், இன்று தமுமுகவின் முயற்சியால் மீண்டும் சாத்தியமாகின்ற பொழுது தன்னை நிலை நிறுத்துவதற்காக தாமும் போராடியதாக தப்பு தாளம் வாசிக்கிறது என்ற உண்மை அனைவரும் அறிந்த ஒன்று.

முஸ்லிம் லீக் மட்டுமல்ல, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாக உள்ள பல்வேறு இயக்கங்களும் இன்று உரிமை கொண்டாடி வருவதை காண முடிகிறது.

அந்த வகையில், இடஒதுக்கீட்டை பெறுவதற்காக எந்த ஒன்றையும் செய்திடாத ஒருவர், இணைந்திருந்த காலத்திலேயே முஸ்லிம்களின் வலிமையை பறைசாற்றிய தஞ்சைப் பேரணிக்கு எதிராக சதி செய்த தனித்தலைவர், முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்குவதையே தனது பிழைப்பாக கொண்டுள்ள எழுத்து வியாபாரி திருவாளர் கிரிமினல் பிஜே அவர்களும் இன்று தன்னால் தான் இடஒதுக்கீடு சாத்தியமாகியது என சவுண்டு விடுகிறார்.

அவரது பேட்டி தினமணியில் பிரசுரமானதும், அதுவரை இருண்டு போயிருந்த அவரது இரசிகமணிகள், பிரகாசமடைந்து விட்டனர்.

இடஒதுக்கீட்டிற்கென எந்த துரும்பையும் நாம் அசைக்காமல் இருக்கும் பொழுது, தமுமுகவின் நெருக்குதலால் இந்த இடஒதுக்கீடு அமுலுக்கு வந்துவிட்டதே. இந்நிலையில் சமுதாய மக்களிடம் நாம் எப்படி சமாளிப்பது என இல்லாத மூளையை கசக்கிக் கொண்டு இருண்டு போய் கிடந்தவர்கள் இஸ்லாமிய எதிரி குருமூர்த்தியின் நண்பன் வைத்தியநாதன் கருணை கிட்டியதும் பிரகாசமாகி விட்டனர்.

அரசியல் அநாதையாகி விட்டவர்களை கொஞ்சம் கைதூக்கி விடுவதற்காக பார்ப்பன பத்திரிக்கைகள் அவ்வப்போது கைக்கூலி பெற்றுக் கொண்டு, தங்களது தூரிகைகளை துடைத்துக் கொண்டு துள்ளிக் குதித்து வருவார்கள். அந்த நிலையைத்தான் தற்பொழுது தினமணியும் எடுத்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. அதனால் தான் குருமூர்த்தியை பேட்டி காணும் அதே வைத்தியநாதன் பிஜேவையும் பேட்டி கண்டார் போலும்.

மலேஷியாவில் மானம் கெட்டு, கைக்காசு செலவு செய்து பத்திரிக்கையில் விளம்பரம் செய்து, அதையே தனது ரசிகர்களிடம் பத்திரிக்கை செய்தி என படம் காட்டி அனுபவப்பட்டவர் இப்பொழுதும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாரோ என்று கூட ஒரு பேச்சு நிலவுகிறது.

தினமணிப்பேட்டியை போஸ்டர் வேறு அடித்து ஒட்டி அற்ப சுகம் காண ததஜ ரசிகர்கள் துடிக்கின்றனர். இது ஒன்றே தனி இடஒதுக்கீட்டிற்கும் ததஜவிற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என நிரூபிக்க போதுமானதாகும்.

அந்த பேட்டியிலும் எத்தனை முரண்பாடுகள்? எத்தனை பொய்கள்?

முதலாவதாக, கிரிமினல் பிஜேவின் சிறப்பம்சமாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் என்ன தெரியுமா – பதவி அரசியல் இவருக்கு இல்லாத நாட்டம் - என்பதாகும்.

படித்தவுடனேயே பலர் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்.

காரணம் தமுமுகவிலிருந்து தறி கெட்டு ஓடி திருச்சியில் நின்று கொண்டு இவர் புணர்நிர்மானம் செய்த அமைப்பு, அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பு என்பது தான். பின்னர் அதனையே தவ்ஹீத் ஜமாஅத் என்றும், பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் புதிய புதிய நாமகரணங்கள் சூட்டியதே அரசியலில் பதவி காண வேண்டுமென்ற இவரது அவாவினால் என்பது இவரது பரகசியமான அரசியல். இது மட்டுமல்ல, பதவி ஆசை இல்லாததால் தான், தான் துவங்கிய அமைப்புக்கு ஆரம்பத்தில் ஒரு பொம்மை தலைவரை அமர்த்தி விட்டு, பின்பு தலைவராகிக் கொண்டாரோ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இது மட்டுமல்ல, அப்பேட்டியில் ததஜவின் ஆரம்பம் என அவர் குறிப்பிட்டுள்ளது அப்பட்டமான பொய் என விஷயமறிந்தவர்கள் கொதித்துப் போயுள்ளனர். என்ன செய்வது, அவர் குறிப்பிடும் காலத்தில் தவழ்ந்தவர்களாகவும், நடை பழகியவர்களாகவும் இருந்தவர்கள் தானே அவரது இன்றய சீடர்கள். அவர்களுக்கு வரலாறு தெரியாததனால் தான், இப்பேட்டியை போஸ்டர் அடித்து எச்சில் தடவி ஒட்டிக் கொண்டுள்ளனர் போலும்.

தவ்ஹீத் என்ற வார்த்தையை வைத்து கட்சிக்கு விளம்பரம் தேடியது போதாதென்று மலிவு விளம்பரமாக (Cheap Popularity) தானே காசு கொடுத்து பத்திரிக்கை செய்தியாக விளம்பரத்தை கொடுத்து ரசிகர்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைத்திட, இந்த கிரிமினல், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்து விளக்கியது தான் காரணம் என்று ஒரு கேள்விக்கு பதிலாகவும், குலுங்கிய கும்பமேளா என்று முன்னுரையிலும், சிறை நிரப்பு போராட்ட அறிவிப்பு என்றும் இஷ்டத்திற்கு அவிழ்த்து விட்டுள்ளார்.

கும்பமேளா பற்றி பலமுறை பலரும் அதிலுள்ள அபத்தங்களை பட்டியலிட்டு உள்ளனர். வயல்வரப்பின் மீது ஒருவர் இருவராக நடந்து செல்லும் படத்தைக் காட்டி, அந்த ஏரியாவின் பரப்பளவில் பெருக்கி அப்படியாக பல இலட்சம் பேர் கூடியதாக புருடா விட்ட பொழுதே, உண்மையிலேயே பல இலட்சம் பேர் கூடும் ஹஜ்ஜின் செய்திகளை சுட்டிக்காட்டி சவுதியிலிருந்து ஒரு சகோதரர் கும்பமேளா ஒரு பொய், செட்அப் என விளக்கி இருந்தார்.

மார்க்க விஷயத்திலிருந்தே உதாரணம் காட்டிய போதும், அதனை ஒப்புக்கொள்ளாமல் இருந்தவர்களை இருப்பவர்களை எங்ஙனம் முஸ்லிம்களாக இருக்க முடியும்.

அதுமாத்திரமல்ல, கோயபல்ஸின் பிரதான சீடர்களும், பிரச்சாரகர்களும் தாங்கள் தான் என இப்பேட்டி மூலம் மீண்டும் பறைசாட்டியுள்ளனர்.

அதாவது, கோயபல்ஸ் தத்துவமே, ஒரு பொய்யைச் சொல்வது, மீண்டும் மீண்டும் சொல்வது, அது பொய் என்று பலரால் நிரூபிக்கப்படும் பொழுது மவுனம் காப்பது, சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பொய்யை கட்டவிழ்த்து விடுவது.

இதைத்தான் கும்பமேளா விஷயத்தில் இவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இப்பேட்டியில் கனிமொழி எம்.பி அவர்கள், தங்களை அழைத்து இடஒதுக்கீடு குறித்துப் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

மறுமையைப் பற்றி அஞ்சாமல் பொய் பேசுவதில் பெரும் பேர் பெற்றுவிட்ட இந்த கிரிமினல் பிஜே, கனிமொழியை சந்தித்து தங்களது கோரிக்கையை பற்றி எடுத்துச் சொல்லியதாக முன்பு தனது (களவாடிய) பத்திரிக்கையில் குறிப்பிட்டவர், இப்பேட்டியில் கனிமொழி தம்மை அழைத்துப் பேசியதாக கதையளந்துள்ளார்.

சிலருக்கு இரண்டுக்குமுள்ள வித்தியாசம் தெரியாததால், இவரைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் தலையாட்டி பொம்மைகளாக, மூளை கழுவி விடப்பட்ட முட்டாள் சீடர்களாக இருக்கின்றனர்.

கனிமொழியை இவர் சென்று சந்திப்பதாக இருந்தால், இவர் அவரிடம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்க வேண்டும். அதே சமயம், கனிமொழி இவரை சந்திப்பதாக இருந்தால், அதற்கான அழைப்பு அனுப்பட்டிருக்க வேண்டும். இப்பேட்டியில் தங்களை கனிமொழி அழைத்துப் பேசியதாக – தங்களை மேன்மைப்படுத்திக் காட்டுவதற்காக – புளுகியுள்ளார். இது உண்மையானால், கனிமொழியின் அழைப்பை இவரால் பகிரங்கப்படுத்த, பிரசுரிக்க முடியுமா?

மேலும் முஸ்லிம் சமுதாயத்திற்கான ஜீவாதார பிரச்சனையான, இடஒதுக்கீட்டையே ஒரே ஒரு சந்திப்பின் மூலம் சாத்தியமடையச் செய்யும் மந்திரவாதியான இந்த பிஜே, ஏன் துளசியேந்திரபுரம் என்ற சிறு கிராமத்தில் ஏற்பட்ட ஒரு நூலக எதிர்ப்புக்காக ஆர்ப்பாட்டம் அறிவித்தார் - என அறிவுள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இப்படியான அறிவானவர்கள் குறைவு என்பதால், ததஜ விசிறிகள் இந்த பேட்டி கண்டு விசிலடித்துத் திரிகின்றனர். அதனால் தான் ஒரு பேட்டியை போஸ்டர் அடித்து ஒட்டிக் கொண்டு அதனையும் வெட்கமில்லாமல் தனது சைட்டில் வெளியிட்டுள்ளார்கள் - இப்பொழுது சொல்லுங்கள் இவர்கள் விளம்பரபிரியர்களா இல்லையா?

அதைப் போலவே, தினமணியில் செய்திகளுக்கு வறட்சி ஏற்பட்டிராத நிலையில், ஒருவருடைய போட்டாவை பக்கத்தை நிரப்புவதற்காக சிறிதும் பெரிதுமாக இட்டிருப்பார்கள் என நம்ப இயலவில்லை. இதன் காரணத்தால் கூட இது ஒரு விளம்பரம் தான், பேட்டியில்லை என்று வாதிடுபவர்களும் உண்டு. விளம்பரம் விரும்பாதவர்களின் ஸ்டைல் இதுதான் என சொல்பவர்களும் உண்டு.

அரசியலில் நுழைவதற்கு அச்சாரமாகத்தான், தற்சமயம் அரசியல் அரங்கத்தில் நுழைந்துள்ளார், அதனால் தான் முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என தனது தொப்பியையும் கழட்டி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

ஆக மொத்தம் இட ஒதுக்கிட்டிற்காக எந்த ஒன்றையும் செய்யாமல், அது கிடைத்ததற்கு தான் தான் காரணம் என பேட்டி அளிப்பதிலிருந்து இவர்களின் சிறுமைத்தனத்தை சமுதாயம் இப்பேட்டியின் மூலம் சரிவரப் புரிந்து கொண்டது.

காலம் கடந்த பின்பாவது மூளை கழுவிவிடப்பட்ட முட்டாள் ததஜவினரும் புரிந்து கொள்வார்கள் என நம்புவோம்.

வஸ்ஸலாம்
இப்னு ஹஸன்

Labels: , , , , , , , , , ,

0 Comments:

Post a Comment

<< Home