Thursday, November 29, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 21

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம்.. .. வாங்க, வாங்க ஒமர் பாய். சௌக்கியமா இருக்கீங்களா?

அல்லாஹ்வோட கிருபையால சௌக்கியம் தான் அஹமது.

ஒமர் பாய். நீங்க சென்னைக்கு போயிருந்தீங்களா.

ஆமாம். நவம்பர் 24 நன்றி அறிவிப்பு மாநாட்டுக்கு போயிருந்தேன். அது எப்படி ஒங்களுக்குத் தெரியும்.

எனக்கு மட்டுமா தெரியும். நீங்க ஒக்காந்து இருந்தத என்னய மாதிரி நெட்ல பாத்த எல்லோருக்கும் தான் தெரியும். அது கிடக்கட்டும். நீங்க சொல்லுங்க.

ரொம்ப சிறப்பான ஏற்பாடு போங்க. மெட்ராஸு எட்டு தெசயிலயும் தமுமுக கொடி தான் பறந்துச்சு. ஒவ்வொரு பக்கத்துல இருந்தும் தமுமுக கொடியோட மோட்டர் சைக்கிளு, காரு, வேனுன்னு ஒரே கூட்டம் தான் போங்க.

ஆமாமா. நானும் கேள்விப்பட்டேன். நெட்டுல கூட போட்டிருந்தாங்களாமே. ஆனா மொத்தம் எவ்வளவு பேரு வந்தாங்கன்னு யாரும் ஒண்ணுமே சொல்லலியே.

என்ன இருந்தாலும் அஹமது.. .., நாம தமுமுக காரனுவ கிட்ட இருந்து படிச்சுக்க வேண்டிய நல்ல விஷயம் நெரயத்தான் இருக்கு.

விவரமா சொல்லுங்க ஒமர் பாய்.

இப்ப பாருங்களேன் அஹமது, நவம்பர் 24 மாநாட்டுக்காக தமிழ்நாட்டுல ஒவ்வொரு பகுதியில இருந்தும் ரயில்லயும், பஸ்லயும், கார்லயும் எவ்வளவு பேரு வந்திருந்தாங்க. ஆனா அவுங்க யாரும் நாம கும்பகோண கூட்டத்துக்கு குடுத்த பில்ட் அப் மாதிரி ஒண்ணுமே செய்யலையே.

எல்லாத்தையும் ஓவரா பில்ட் அப் பண்றது தானே நம்ம தலைவரோட பளக்கம். சரி நீங்க சென்னை மாநாடு பத்தி சொல்லுங்க.

அங்க நின்ன கூட்டத்தை பாத்தா, தீவுத்திடல் கூட நெறஞ்சுருக்கும் போல. அவ்வளவு கூட்டம். ஒரு நிமிஷம் அந்த கூட்டத்தை பாத்து நான் கொஞ்சம் பொறாம பட்டுட்டேன். அதெப்புடி அஹமது. தமுமுக காரங்க ஏற்பாடு பன்னுனா மட்டும் அவ்வளவு பேரு கூடிடுறாங்க. நாம ததஜ சார்பா கூப்டா ஒரு மாதிரி நாம தான் கூட்டம் கூடுனதா படம் காட்ட வேண்டியதிருக்கு. அப்புடி பொய் சொல்லி சமாளிச்சத மெயின்டெய்ன் பண்றதுக்காக திரும்ப திரும்ப அதையே சொல்ல வேண்டியதிருக்கு போங்க.

சரி சரி சலிச்சுக்காதீங்க, ஒமர் பாய். பொய் சொல்றதும், பொய்ய திரும்ப திரும்ப சொல்றதும், அண்ணன தக்லீது பண்றதும் தான் நாம படிச்சுக்கிட்ட தவ்ஹீத் பாடம். இப்ப போயி வருத்தப்பட்டா என்ன பிரயோசனம். நீங்க மேல சொல்லுங்க.

அதுவும் சரி தான் அஹமது. இந்த இடஒதுக்கீடு அறிவிப்பு வந்த சமயத்துல நம்ம சைட்ல துளசியேந்திரபுரம் கிளை விசயமாகத்தான் ஃபிளாஷ் நியூஸ் ஓடுச்சு. அத மாதிரி இப்போ சமுதாயமே திரண்டு வந்து நன்றி அறிவிப்பு மாநாடு நடக்கும் போது கும்பகோணம் மதரஸா விஷயமாத்தான் செய்தி போட்டாங்க.

இதுல என்ன ஆச்சரியம் இருக்கு ஒமர் பாய். ஜெயலலிதா சி.எம் ஆக இருந்தப்ப, ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு குடுத்தத எதுத்து அறிக்க விட்டாங்களே, அப்ப தமுமுக ஜெயலலிதாவ எதுத்து ஆர்ப்பாட்டம் பண்ணுன சேதிய எல்லா பத்திரிக்கையும் போட்டாங்க. நம்ம தலவரு மட்டும் தானே தினமலர் மாதிரி அந்த சேதிய போடாம இருட்டடிப்பு செஞ்சாரு. மறந்துட்டீங்களா.

பரவாயில்லையே அஹமது பாய். ஞாபகம் வச்சிருக்கீங்களே. ஆனா, நாமெல்லாம் மறந்திருப்போம்ங்கிற நம்பிக்கைல நம்ம பாக்கரு சேலத்துல இடஒதுக்கீடு யாரால்னு மீட்டிங் பேசுனாரு பாருங்க. படா தமாசு போங்க.

யாரு, நம்ம ஓம்னி பஸ் நந்தினி புகழ் பாக்கரா! அந்த மேட்டருக்குப் பொறவு அவரு, நம்ம தலைவரு பிஜே இப்புடி யாரு பேசுனாலும் காமெடியாதான் இருக்கு. சரி நீங்க சொல்லுங்க.

அந்த மீட்டிங்குல பாக்கரு மோடி விஷயத்தப்பத்தி பேசுனாரு. தெஹல்கா கொண்டு வந்து கொட்டுன ஆதாரங்கள வச்சு அழுது துடிச்சு பேசுனாரு.

ஏங்க ஒமர் பாய். இதுல என்ன காமெடிய கண்டீங்க நீங்க.

தெஹல்கா சொல்றதுக்கு முன்னாடியே பலபேரு, குஜராத் கலவரத்துல மோடியோட பங்கு பத்தி சொன்னப்போ, இந்த பாக்கரும் நம்ம தலைவரு பிஜேயும் என்ன சொன்னாங்க. கடந்த சட்டசப தேர்தல் பிரச்சாரத்த எடுத்துப்பாருங்க. மோடிக்கு மலர் கிரீடம் சூட்டுன ஜெயலலிதாவுக்கு வால்(அ)கால் புடிச்சுக்கிட்டு நின்னதுனால, கருணாநிதியையும், மோடியயும் கம்பேர் பண்ணுனா, மோடி, கருணாநிதியை விட எவ்வளவோ மேல்னு சொன்னாங்களா இல்லியா. இப்போ இப்புடி பாக்கரு சேலம் கூட்டத்துல பேசுனா அது தமாசு இல்லாம வேற எப்புடி எடுத்துக்கிறது.

அவரு பொதுக்கூட்டத்துல பேசுறது மட்டுமில்ல, தனிநபர் சந்திப்புல பேசுறதும் கூட காமெடிதான்னு மொதல்லயே நிரூபிச்சுட்டாரே. அத நீங்க தான் மறந்துட்டீங்க போல.

எங்கே.. .. .. எப்போ.. .. .. எனக்கு நினைவில்லையே.

சரியாப் போச்சு. ஜெயலலிதாவ கோட்டைல சந்துச்சு வெத்துப் பேப்பர விவரமான ஆணையம்னு தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு வந்தாங்களே. அந்த சந்திப்புல என்ன சொன்னாரு. அம்மா. உங்க ஆச்சியிலதாம்மா நாங்க நிம்மதியா சுவாச்சிச்சோம்னு சொன்னாரே. அத விட பெரிய காமெடி என்னங்க இருக்க முடியும்.

பலே பலே அஹமது. நல்லா தேறிட்டீங்க. சரியான நேரத்துல எனக்கே ஞாபகப்படுத்திட்டீங்க.

அது கெடக்கட்டும். நீங்க வேற எதாச்சும் சேதி சொல்லுங்க.

வேற என்னத்த நாஞ் சொல்றது. போன வாரம் நம்ம பத்திரிக்கைல சொத்து வாங்குறது விஷயமா ஒரு கேள்வி பதில் வந்திருக்கு.. ..

என்னது சொத்தா .. .. யார் பேர்ல.. ..

அதுதான் கேள்வியே. சொத்து வாங்குனா எப்புடி ரெஜிஸ்டர் பண்றதுன்னு கேட்ட கேள்விக்கு நம்ம தலைவரு சொல்லியிருக்குற பதில் இருக்கு பாருங்க. அதுல தான் விசேஷம்.

என்னன்னே சொல்லாம வழமப்படி பில்ட் அப் பண்றீங்க ஒமர் பாய்.

கவனமா கேளுங்க அஹமது. இப்போ சொத்து வாங்குனா ததஜ டிரஸ்ட் பேர்ல வாங்கனும்னு சொல்றாரு. ஆனா தமுமுகவுல இருந்தப்போ, சொத்து வேறொரு டிரஸ்ட் பேர்ல தான் வாங்கணும், தமுமுக டிரஸ்ட்னு வாங்குனா அது முடக்கப்பட்டு விடலாம், எனவே தனியான டிரஸ்ட் பேர்ல தான் வாங்கனும்னு அடம் புடிச்சு தனியா டிரஸ்ட் அமெச்சு வாங்க வச்சாரு.

இதுல என்ன வில்லங்கம்னே புரியல ஒமர் பாய்.

என்ன வில்லங்கம்னு அவர் பதில்ல தெளிவாவே இருக்கு. அதாவது தனியா டிரஸ்ட் அமெச்சா ஒருவேள கட்சி பிளவுபட்டா இந்த தனியான டிரஸ்ட்டிகளால நிர்வகிக்கப்படுற அந்த சொத்துக்கள், அந்த டிரஸ்டிகளோட விருப்பத்தின் பேரிலே, அது கட்சிக்கு கெடக்காம போயிடும் அதனால ததஜ டிரஸ்ட் பேர்ல தான் வாங்கனும்னு சொல்லியிருக்காரு.

அப்புடிப் போடு அருவாள. இப்ப எனக்கு தெளிவா புரிஞ்சு போச்சு. அதாவது தான் தமுமுகவுல இருந்து விலகி வந்தப்ப, தமுமுக சொத்துக்கள, தனி டிரஸ்ட் பேர்ல இருந்ததுனால ஈஸியா லவட்டிக்கிட்டு வந்த மாதிரி பாக்கரோ, அலாவுதீனோ ததஜவ ஒடச்சுக்கிட்டு வெளியேறினாலும் அந்த சொத்துக்கள் முழுசா தன்னோடயே இருக்கனும்னு தூரநோக்கோட ப்ளான் பண்றாரு போல.

கரைக்டா சொல்லிட்டீங்க. முன்ன மாதிரி இல்லாம இப்போ ததஜவுக்கு தலைவர் யாரு அண்ணன் பிஜே தான். டிரஸ்ட்டுக்கு.. .. அதுக்கும் அவரு தான். அப்போ எப்புடிப் பாத்தாலும் சொத்துக்கள் எதுவும் பிஜேவ மீறி யார்கிட்டேயும் போக முடியாது.

அடேங்கப்பா. தவ்ஹீது பேர்ல இவ்வளவு அரசியலா. தாங்காதுடாப்பா.

சரி அஹமது நேரமாயிடுச்சு. பெறகு சாவகாசமா சந்திப்போம்.

வஸ்ஸலாம்
முல்லா 28.11.2007

0 Comments:

Post a Comment

<< Home