வீரியத்துடன் வக்ஃபு வாரியம்
வீரியத்துடன் வாரியம் - சமுதாய மானம் காக்கும் தமுமுக (நக்கீரன்)
ஹைதர் அலி
- தலைவரே... வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான ஒரே கல்லூரி மதுரையில் இருக்கு. வக்ஃபு சேர்மன் தமுமுக ஹைதர் அலி தான் இதற்கும் சேர்மன். இந்தக் கல்லூரியில் 9 விரிவுரையாளர் போஸ்ட்டிங் காலியா இருக்கு. இதோடு அழகிரி சிபாரிசில் 9 பேர் கொண்ட பட்டியலைக் கொண்டு வந்து கல்லூரி முதல்வரிடம் கொடுத்தார் நாகேஷ் என்பவர். இந்த போஸ்டிங் தொடர்பா நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது லிஸ்ட்டைப் பார்த்த ஹைதர் அலி டென்ஷனாயிட்டார். 9 பேரில் 7 பேர் கல்லூரிக்கு சம்பந்தமில்லாத இந்துக்கள்ன்னு கோபமான ஹைதர் அலி இந்த பட்டியலை ஏற்க மாட்டேன்னு நிராகரிச்சிட்டார்.- 'அப்புறம்?'
- அழகிரி தந்த பட்டியல்னு கல்லூரி முதல்வர் சொன்ன போதும், 'என் பதவியை ராஜினாமா செய்தாலும் செய்வேனே தவிர, வக்ஃப் போர்டு கல்லூரியில் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யமாட்டேன். நான் கலைஞரிடமே இது பற்றி நேரில் பேசிக்கிறேன்'னு ஹைதர் அலி சொல்லிட்டார்.
அழகிரி தரப்பிலிருந்து பல முறை லைனுக்கு வந்தும் ஹைதர் அலி பேச மறுத்து விட்டார். இந்த நிலைமையில் கல்லூரி முதல்வரோ மதுரை மத்தி தொகுதி எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சா தான் ஹைதர் அலியிடம் சொல்லி பட்டியலை நிராகரிக்க வச்சிட்டார்னு சொல்லிட்டாராம். கவுஸ் பாட்சாவோ, என்னோட எம்.எல்.ஏ பதவியே நீங்க கொடுத்தது தான். என்னை தப்பா நினைத்தால் இந்தாங்க என் ராஜினாமா கடிதம்னு சொல்லி பேப்பரில் கையெழுத்து போட்டு அழகிரிகிட்டே கொடுத்துட்டாரு. லெக்சரர் போஸ்டிங் விவகாரத்தில் அழகிரிக்கும் ஹைதர் அலிக்கும் போட்டா போட்டி நிலவுது.
நக்கீரன் 21.11.2007
2 Comments:
This comment has been removed by the author.
முந்தைய சகோதரர் எழுதிய விமர்சனத்தை தெளிவாக படிக்க ஏதுவாக வெப் மாஸ்டர் வசதி செய்துள்ளார்.
Post a Comment
<< Home