முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடும், ஐயமும், தெளிவும்
கேள்வி: தமிழக அரசு முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்ததில் துரோகம் இழைத்து விட்டது என்றும் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு பதிலாக ஒன்றரை சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் பிரச்சாரம் செய்கிறார்களே இது உண்மையா?
பதில் : இது உண்மையில்லை. இடஒதுக்கீடு அளிக்கப்படும் முறையை பற்றி அறியாதவர்கள் இத்தகைய பொய்யைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றார்கள்.
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு செப்டம்பர் 15 அன்று வெளியிட்ட அரசாணையிலும், இதன் பிறகு அக்டோபர் 22ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திலும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தனித்தனியாக 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்த்தவர்களுக்கு மூன்றரை முஸ்லிம்களுக்கு ஒன்னரை என்று கூறி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று கூறுவது தவறாகும்.
இடஒதுக்கீடு அடிப்படையில் புதிதாக ஆட்களை வேலையில் சேர்க்கும் போதும், கல்வி நிறுவனங்களில் மாணவர் களைச் சேர்க்கும் போதும், இதேபோல் பதவி உயர்வு அளிக்கும் போதும் காலங்காலமாக கம்யூனல் ரோஸ்டர் (சுழற்சி) முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த ரோஸ்டர் முறை தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு நடைமுறைக்கு வந்த ஒன்றல்ல. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட அனைத்து மாநிலங்கüலும் இது நடைமுறையில் உள்ளது. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள கேரளாவிலும் இது நடைமுறையில் உள்ளது. இந்த அடிப்படையில் தான் தமிழகத்திலும் ரோஸ்டர் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்த ரோஸ்டர் முறை என்னவென்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது சர்ச்சைக்கு இலக்காகியுள்ள தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்கள் தொடர்பான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கடந்த நவம்பர் 15ம் தேதி டி.என்.பி.சி. வெளியிட்ட விளம்பரத்தில் 3368 தட்டச்சர்கள் மற்றும் 507 சுருக்கெழுத்தாளர்கள் தேர்வுச் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது (ரோஸ்டர் முறையில்லாமல்) எவ்வாறு பதவிகள் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறித்தும், ஆனால் ரோஸ்டர் முறையில் எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் அட்டவணையில் (படம் 1 & 2ல்) தரப்பட்டுள்ளது.
படம் - 2
மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை பார்வையிடும் போது ஒட்டுமொத்தமான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எந்தவொரு சமுதாயத்திற்கும் டி.என்.பி.எஸ்.சி. விளம்பரப்படி இடம் அளிக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக சுருக்கெழுத்தாளர் பணிக்கு பழங்குடியினர் ஐவர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஒருவர் தான் நியமிக்கப்படுவார் என்று டி.என்.பி.எஸ்.சி. விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் பிற்படுத்தப்பட்டோர் (பொது) பிரிவினர் 117 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த பிரிவைச் சேர்ந்த 77 சுருக்கெழுத்தாளர்கள் மட்டும் நியமிக்கப்படுவார்கள் என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 101 சுருக்கெழுத் தாளர்களுக்கு பதிலாக 96 சுருக்கெழுத்தாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. விளம்பரம் குறிப்பிடுகின்றது. ஆனால் இதே நேரத்தில் பொது பிரிவைச் சேர்ந்த 157 பேர் நியமிக்கப்படுவதற்கு பதிலாக இதைவிட அதிகமாக 184 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் இதேபோல் செட்யூல்ட் சாதி பிரிவைச் சேர்ந்த 91 சுருக்கெழுத்தாளர்களுக்கு பதிலாக 125 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி விளம்பரம் தெரிவிக்கின்றது. இதேபோன்ற முரண்பாடுகளை தட்டச்சர்கள் நியமனத்திலும் இருப்பதை மேலே உள்ள பட்டியலிலிருந்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த நிலைக்கு காரணம் ரோஸ்டர் முறையாகும். ரோஸ்டர் முறையில் ஒட்டு மொத்தமாக உள்ள அனைத்து இடங்களையும் அப்படியே பிரிக்கப்படுவதில்லை. மாறாக மாவட்ட வாரியாகவும் துறை வாரியாகவும் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகின்றது. ஒரு துறையில் காலியாக உள்ள இடங்கள் எத்தனை என்று கணக்கிடப்படுகின்றது. 200 பணியிடங்கள் என்று கணக்கிட்டு அந்த இடங்களை ஒவ்வொரு பிரிவினருக்கும் சுழற்சி முறையில் அüக்கப்படுகின்றது.
இந்த 200 இடங்கள் எப்படி சுழற்சி முறையில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அக்டோபர் 29, 2007 தேதியிட்ட அரசாணை எண் 241ல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி 200 இடங்களில் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 7 இடங்களும் (28,54,80,108,134,160,188) ஆகிய முறைகளிலும், பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு (14,40,68,94,120,147,174) ஆகிய முறைகளிலும் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு துறையில் 100 பணியிடங்கள் காலியாக இருக்குமேயானால் 3 முஸ்லிம்களுக்கு 4 கிறிஸ்தவர்களுக்கு இடம் அளிக்கப்படும். 50 இடங்கள் காலியாக இருந்தால் 1 முஸ்லிமிற்கும் 2 கிறிஸ்தவர் களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதே நேரத்தில் ஒரு துறையில் 13 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தால் முஸ்லிம் கள் கிறிஸ்தவர்கள் ஆகிய இருவருக்குமே வாய்ப்பு கிடைக்காது. இதே அடிப்படையில்தான் பல்வேறு பிரிவினருக்கும் துறை வாரியாக சுழற்சி முறைப்படி வாய்ப்பு அளிப்பதால் இந்த முறை ஒருசில பிரிவினர்களுக்கு கூடுதலான இடங்களும் வேறு சில பிரிவினருக்கு குறைவான இடங்களும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அடுத்த வேலை வாய்ப்பு அளிக்கப்படும் போது எண்ணிக்கையில் உள்ள இந்த ஏற்றற் தாழ்வு சரிசெய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக அந்த துறையில் உள்ள மொத்த இடங்களில் இடஒதுக்கீட்டின் விகிதாச்சார அடிப்படையில் பணியாளர்கள் இருக்கும் நிலை ஏற்படுத்தப்படும். உதாரணமாக நாம் சுட்டிக்காட்டியது போல் ஒரு துறையில் தற்போது 13 இடங்கள் நிரப்பப்பட்டால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வாய்ப்பே கிடைக்காது என்று குறிப்பிட்டோம். ஆனால் அடுத்த முறை அத்துறைக்கு ஆள் எடுக்கப்படும் போது சுழற்சி எண் 14ல் அதாவது கிறிஸ்த்தவர்களில் இருந்து வாய்ப்பு தொடங்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சி. விளம்பரப்படி பொதுப்பணித் துறையில் 172 தட்டச்சர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இதில் முஸ்லிம்கள் 6 பேரும் கிறிஸ்த்தவர்கள் 6 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இதே போல் பள்ளி கல்வி துறையில் 190 தட்டச்சர் பணியிடங்கள் உள்ளன. இதில் 7 முஸ்லிம்களும் 7 கிறிஸ்தவர்களும் நியமிக்கப்பட உள்ளார்கள். இதே போல் போக்குவரத்து துறை, மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை துறை ஆகியவற்றிலும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் சம எண்ணிக்கையில் பணியிடங்களை பெறுகின்றார்கள். சில துறைகளில் மிகக் குறைவான பணியிடங்கள் இருக்கும் போது பெரும்பாலான பிரிவினருக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது. உதாரணமாக நிலசீர்திருத்த துறையில் ஒரு தட்டச்சர் மட்டுமே நியமிக்கபட உள்ளார். இந்த முறை அது பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட உள்ளது. இதேபோல் தமிழ்நாடு தீயணைப்பு சேவை துறை, தடய அறிவியல் துறை, தொழில் மற்றும் வர்த்தகத் துறை உள்ளிட்ட சில துறைகளில் சொற்ப எண்ணிக்கையில் தட்டச்சர் கள் தேவைப்படுவதால் அனைத்து பிரிவினருக்கும் இம்முறை வாய்ப்பு கிடைக்காது. ஆனால் அடுத்த முறை இந்த முறை வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு பணியிடங்கள் அளிக்கப்படாமல் சூழற்சி வரிசையில் அடுத்துள்ள பிரிவில் இருந்து வாய்ப்பு வழங்கப்படும்.
கிறிஸ்தவர்களுக்கு 14வது சூழற்சியில் இருந்தும் முஸ்லிம்களுக்கு 28வது சூழற்சியில் இருந்தும் வாய்ப்பு அளிக்கப் படுவதால் இம்முறை கிறிஸ்தவர்களுக்கு கூடுதல் இடங்களும் முஸ்லிம்களுக்கு குறைவான இடங்களும் கிடைத் துள்ளன. இதற்குக் காரணம் கிறிஸ்தவர்களுக்ககான ஆங்கில எழுத்து C முதலிலும், முஸ்லிம்களுக்கான ஆங்கில எழுத்து M பிறகு வருவதாலும் கிறிஸ்தவர்களுக்கு முதலிலும் முஸ்லிம்களுக்குப் பிறகும் சுழற்சியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இடஒதுக்கீடு அளவு முஸ்லிம்களுக்கு குறைக்கப்பட்டு விட்டது, துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானதாகும்.
நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்
1 Comments:
தர்ஹாவில் ஆண்களோடு பெண்கள் கலந்து இருப்பதால் தவறு நடக்க வாய்ப்புள்ளது என்று சொல்லி, நியாயப்படுத்தி கூடாது என்றோம். ஆனால் தவ்ஹிது ஜமாஅத் நடத்தும் டிசம்பர்-6 மற்றும் பிரச்சினைக்கேற்ப நடத்தும் போராட்டங்களில் ஆண்களோடு பெண்கள் கலந்து இருப்பது மலிந்து காணப்படுவது மட்டுமில்லாமல் உரசிக்கொள்ளும் சல்லாப காட்சிகளும் இடம்பெறுகிறது. இதைப்பார்க்கும்போது தவ்ஹிது ஜமாஅத் ஆண்கள் பெண்களை இடிப்பதெற்கென்றே வருவதுபோல தென்படுகிறது.
ததஜ பொதுச்செயலாளர், நந்தினி என்ற மாற்றுமத பெண் புகழ் திரு பாக்கர் போன்றவர்களையும், நந்தினி பாக்கர் மேட்டரை நஜ்முன்னிஸா என்ற முஸ்லிம் பெண் மூலம் சல்லாபத்தோடு தெரிந்துகொண்டு வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பீ.ஜே போன்றவர்களையும் ஆர்பாட்டத்தில் மலிவாக காணமுடிந்தது.
தமிழன்பன்
திருவை
Post a Comment
<< Home