Wednesday, January 16, 2008

பிஜேயின் ஜெயலலிதாவை நோக்கிய பயணம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

தமிழகத்து பாசிச கும்பலின் அழைப்பின் பேரில் குஜராத்தின் பாசிச, நரபலி மோடி தமிழகத்திற்கு ஜெயலலிதாவின் விருந்துக்கு வந்தார். முஸ்லிம்களின் உயிர்களை பறித்து இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கும் கொலை வியாபாரி, சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்திற்குள் நுழைவதற்கு கடுகளவும் தகுதியற்றவர். இஸ்ரேலியர்களுக்கு இணையாக சதிவலை பிண்ணக்கூடிய பார்ப்பாணிய கும்பலின் -முஸ்லிம்களுக்கு எதிரான- சதித்திட்டங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற சமுதாய பேரியக்கம் இதற்கு எதிராக தனது சொந்த ஸ்டைலில் பாசிசத்திற்கு எதிரான அமைப்புகளை ஒன்று திரட்டி மோடிக்கு எதிராக குரல் கொடுக்க 'பாசிச எதிர்ப்பு முன்னணி' யை உருவாக்கி இருக்கிறது.

இந்த தருணத்தில் சமுதாயத்தின் மீது அக்கரை இருப்பதாக காட்டிக் கொண்டும் நடித்துக் கொண்டும் இருக்கிற பிஜே எனும் சுயநலக்காரரும் அவரது குடும்பத்து குஞ்சுகளும் தமுமுகவுக்கு மக்கள் ஆதரவு இல்லாதது போலவும் அதனால் தான் மற்ற இயக்கங்களோடு கூட்டு சேர்ந்து இருப்பதாகவும் தனது சின்ன புத்தி தனத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இவர்கள், முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கரையே இல்லாதவர்கள் என்பதற்கு இவர்களின் போக்கே சரியான சான்று, இவர்களால் தான் இந்த சமுதாயத்திற்கு, அதன் எதிரிகளால் பெரிய ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சமும் நமக்கு இருக்கிறது.

எப்போதும் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளும் போது, பிரத்தியேகமாக சில விதிவிலக்குகளையும் பிஜே சேர்த்துக் கொள்வார். உதாரணமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை நாங்கள் ஆதரிப்போம் என்று பிஜே எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தில் ஒரு ஷரத்தையும் கூடவே சேர்த்திருக்கிறார். பலர் இதை கவனித்திருக்க மாட்டீர்கள். அதாவது, திமுகவை, அதன் ஆட்சியை எதிர்த்து ஆர்பாட்டங்களோ போராட்டங்களோ செய்வது இந்த உடன்படிக்கையை பாதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான் நாம் சொல்கிறோம், ஜெயலலிதாவிடம் கோடி கோடியாக பணத்தை பெற்றுக் கொண்டு, புதிதாக ஆணையம் போட்டுவிட்டார் என்று மக்களிடம் பொய்யை சொல்லிக் கொண்டு, ஜெயலலிதாவை எதிர்த்து அறிக்கைகளோ போராட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ விமர்சனங்களோ செய்வது அவரை ஆதரிப்பதிலிருந்து எந்த விதத்திலும் பாதிப்புகளை ஏற்பாடுத்தாது என்று ஒப்பந்தமும் செய்து கொண்டு, ஜெயலலிதாவை எதிர்ப்பது போல் நடித்து, மக்கள் எல்லோரையும் கேணையர்களாக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது அத்தனை தில்லு முல்லுகளும் அவரோடு உடன் இருந்தவர்களுக்கு மட்டும் தான் நன்றாக தெரியும். ஆனால் டிவியில் நல்ல மனிதரைப் போல் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் நல்ல மனிதரைப் போல் தான் தோற்றமளிப்பார். வெகுவிரைவில் அவரின் மறுபக்கத்தை மக்கள் பார்க்கும் காலம் வரும். அப்போது நாம் சொல்வதற்குரிய ஆதாரங்களை கேட்கும் நிலை அவர்களுக்கு ஏற்படாது.

ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திற்காக புதுப்பிக்கப்பட்ட ஆணையத்தை புதிய ஆணையம் என்று திரும்ப திரும்ப மக்களிடம் சொல்லிக் கொண்டு அவரை ஆதரித்ததை நியாயப்படுத்தி வரும் பிஜே, மோடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவில்லையாம், ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தாராம். பாசிசத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் மோடி வந்த அன்று சென்னையை கலக்கிக் கொண்டிருந்த போது, இவரும் இவரது குஞ்சுகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கினார் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் இல்லையா?

முஸ்லிம் லட்டர் பேடு இயக்கங்களையெல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு தனது பாலிசியை தளர்த்திக் கொண்டு அந்த பண்டாரப்பரதேசி, ஃபிராடு பாப்பாத்தி ஜெயலலிதாவின் முன்னால் அமுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

கும்பமேளாவில் பத்து இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று பொது மக்களிடம் கூறிவிட்டு, ஜெயலலிதாவிடம் ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் என்ன வந்தது பிஜேக்கு?

அம்மா! உங்கள் ஆட்சியில் தான் நிம்மதியாக சுவாசித்தோம் என்று நல்ல பாம்பு ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது பிஜேயின் பினாமி பாக்கருக்கு?

ஆணை புதுப்பிக்கப்பட்டது, எல்லா அரசுகளும் வழக்கமாக செய்யும் வேலைதான், இதை ஆணை புதியதாக போட்டு விட்டார் என்று பிஜே ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்த ஆணையை கூட செல்லுபடியானதாக ஜெயலலிதாவால் செய்ய முடியவில்லை, அந்த பேப்பரை கைகளில் வைத்துக் கொண்டு இடஒதுக்கீடு கிடைத்து விட்டதைப் போன்று பிஜே ஏன் குதூகளிக்க வேண்டும்?

இத்தனையும் அவருக்கு பெட்டி கிடைத்திருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவித்து விட்டு, அதில் முன்னிலை வகிக்காமல் எங்கே சென்று ஓடி ஒளிந்து கொண்டார் இந்த பிஜே. அவர் அங்கு வந்திருந்தால் அவர் வாங்கிய பணத்திற்கும் அதிமுகவுடனான கூட்டணிக்கும் பங்கம் ஏற்பட்டு விடும் என்ற அச்சமா? ஒரு பொருளுக்கு ஒரு விலை என்ற கணக்குப்படி வாங்கிய பணத்திற்கு அதிமுகவிற்கு முஸ்லிம்கள் சிலரின் ஓட்டுக்களை வாங்கிக் கொடுத்தாகி விட்டது, வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் போயஸ் தோட்டத்திலிருந்து பெரிய தொகை வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாரோ?

இப்பொழுது வரை ஜெயலலிதாவோடு வைத்துக் கொண்ட கூட்டணியிலிருந்து பிஜே வெளிவந்து விட்டதாக எந்த வித அறிவிப்பும் இல்லை.

முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டில் 3.5 சதவிகிதம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று கருணாநிதியை திட்டக்கூடிய விஷயத்தில் கூட எதற்காகவோ வேண்டுமென்றே ஸ்லிப் ஆகிறார் என்பது பொது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது.

தெளிவான விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு, அதற்கு பல ஆதாரங்களை துணைக்கு அழைத்துக் கொண்டு வலுசேர்க்கக் கூடிய பிஜே, கருணாநிதி ஏமாற்றி விட்டார் என்ற பச்சைப் பொய்யை எடுத்துக் கொண்டு ஏன் வழுக்கி வழுக்கி விழுகிறார்? ஜெயலலிதாவிடம் எப்படியும் இந்த முறை பல கோடி கணக்கில் வராத கருப்புப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நப்பாசையா?

வெகு விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது, அதற்காக அதிமுக சில முஸ்தீபுகளை செய்து கொண்டிருக்கிறது. நரமாமிச மோடிக்கு தமிழகத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் 45 வகை உணவு பரிமாறப்பட்டதை உண்பதற்காகவா இங்கே வந்தார்? குஜராத்தில் மூவாயிரம் பேர்களை கொன்று குவித்து அதன் மூலம் ஆட்சியை பிடித்ததைப் போன்று தமிழகத்திலும் பாப்பாத்தி ஜெயலலிதா ஆதரவுடன் சிறுபான்மையினரையும் தலித் சமுதாயத்தினர்களையும் குறி வைத்து அவர்களின் இரத்தத்தை குடிப்பதற்காக நரேந்திர மோடி எனும் குள்ளநரி தமிழகத்திற்கு வந்து விட்டு சென்றிருக்கிறது.

தமிழகத்தில் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அனைவரும் உஷார் நிலையில் இருப்பது நல்லது.

நரேந்திர மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போன்று நடித்து விட்டு பிஜேயும் அவரது குஞ்சுகளும் கள்ளத்தனமாக அதிமுகவை ஆதரித்தால் தமிழக முஸ்லிம்கள் இவர்களை என்றைக்கும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லி வைக்கிறோம்.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா 16.01.2008

0 Comments:

Post a Comment

<< Home