தொண்டி அருகே முஸ்லிம்கள் மோதல்
தொண்டி அருகே முஸ்லிம்கள் மோதல் *பள்ளிவாசலுக்கு சீல்;போலீஸ் தடியடி
திருவாடானை: தொண்டி அருகே முஸ்லிம்களிடையே ஏற்பட்ட மோதலால் பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்ட நிலையில், போலீசார் மீது கல்வீசிய கும்பலை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதை தொடர்ந்து 34 பேரை போலீசார் கைது செய்ததால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் தனியாருக்கு சொந்தமான பள்ளிவாசல் உள்ளது. இதை உரிமை கொண்டாடுவதில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் எஸ்.பி.பட்டினம் ஜமாத்தார்களிடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று தவ்ஹீத்ஜமாத்தை சேர்ந்தவர்கள் சர்சைக்குரிய பள்ளிவாசலில் தொழுவதற்காக சென்றனர். இதற்கு ஜமாத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனிடையே ஜமாத்தார் போலீசார் மீது திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் செல்வம் என்ற போலீசார் காயம் அடைந்தார். அப்போது போலீசார் கும்பலை தடியடி நடத்தி விரட்டினர். சம்பவ இடம் வந்த ஆர்.டி.ஓ., இளங்கோ, டி,எஸ்.பி., மூவேந்தர், தாசில்தார் வரதராஜன் ஆகியோர் சர்சைக்குரிய பள்ளிவாசலுக்கு சீல் வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவ்ஹீத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டு திருவாடனை கொண்டு செல்லப்பட்டனர். இதை கண்டித்து தவ்ஹீத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் திருவாடானை டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த சிவகங்கை எஸ்.பி., ராஜசேகர் , ஏ.டி.எஸ்.பி.,க்கள் சூரியபிரகாஷ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி , கைதானவர்களை விடுதலை செய்தனர்.
ஆர்.டி.ஓ., இளங்கோ கூறுகையில்,145 சட்ட பிரிவின் படி பள்ளிவாசலுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. கோர்ட்டு மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது'' என்றார். தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த முகமது சாதிக் கூறுகையில், ""பள்ளிவாசல் எங்களுக்கு சொந்தமானது. சீல் வைத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.
ஜமாத்தை சேர்ந்த அஸ்கர் அலி கூறுகையில், ""எதிர் தரப்பில் உள்ள சிலர் தான் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். அவர்களால் தான் இந்த பிரச்னை எழுந்துள்ளது'' என்றார். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
1 Comments:
பிஜே மாதிரியான ஆட்கள் இருக்கும் வரை முஸ்லிம் சமுதாயம் வீழ்ச்சியடைந்து கொண்டே போகும். நம் சகோதரர்களுக்கிடையே அடி புடிகள் பெருகும். ஒற்றுமை குலையும். இறையருள் இல்லாமல் போகும்.
Post a Comment
<< Home