டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்!
டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்!
இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்படுத்த முயற்சி!!
பிப்ரவரி 7-ல் அரசியல் விழிப்புணர்ச்சி மாநாடு!
தலைமைக் கழகம் அறிவிப்பு!!
போர்கால அடிப்படையில் பணிகள் தொடக்கம்!!!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு நவம்பர் 7 அன்று சென்னையில் நடைபெற்றது. பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இதில் டிசம்பர் 6-ல் என்ன வகையான போராட்டத்தை அறிவிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளில் இறுதியாக ரயில் மறியல் போராட்டத்தை வீரியத்தோடு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டங்கள் நடத்துவது என்றும் ரயில்கள் செல்லும் ஊர்களில் மறியல் நடத்துவது என்றும், ரயில்கள் இயங்காத இடங்களில் ரயில் நிலையங்கள் செயல்பட்டால் அங்கு முற்றுகைப் போராட்டமாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இரண்டும் இல்லாத மாவட்டங்களில், பக்கத்து மாவட்டங்களோடு இணைந்தோ அல்லது அம்மாவட்டங்களில் உள்ள மற்றொரு பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களிலோ போராட்டத்தை நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.
அதோடு, பாபர் மஸ்ஜித் போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும் முயற்சியாக, கடந்த 2004 - டிசம்பர் 6-ல் தமுமுக டெல்லியில் பேரணி - மாநாடு நடத்தியதைப் போல, இவ்வருடமும் இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்பத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோழமை முஸ்லிம் அமைப்புகளுக்கு கடிதம் எழுதி, அந்தந்த மாநில தலைநகரங்களில் அவர்களின் சக்திகேற்ப போராட்டத்தை நடத்த அறிவுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், தெருமுனைப் பிரச்சாரங்கள், வாகன ஒலிபெருக்கி பிரச்சாரங்கள், களப்பணி ஆகியவற்றை போர்கால அடிப்படையில் தொடங்கிட வேண்டும் என இயக்க தோழர்களை தலைமைக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது தவிர மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக மாநாட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பிப்ரவரி 7, 2009 அன்று புதிய அரசியல் கட்சியின் துவக்க விழாவை நடத்துவது என்றும், அதை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி தென்னிந்தியாவை வியப்பில் ஆழ்த்துவது (இன்ஷாஅல்லாஹ்) என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இரட்டை செலவுகளை குறைக்கும் பொருட்டு தற்போது டிசம்பர் 6-ன் விளம்பரங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், டிசம்பர் 6ம் தேதியிலிருந்து தான் மாநாட்டு விளம்பரங்களையும் பணிகளையும் தொடங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரண்டு அறிவிப்புகளும் தமுமுக சகோதரர்களையும் சமுதாய ஆர்வலர்களையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தி; அவர்களை வீரியமும், உற்சாகமும் கொள்ள வைத்திருக்கிறது என பல முனை தகவல்களும் தெரிவிக்கின்றன.
நன்றி: தமுமுகவின் இணையதளம்
0 Comments:
Post a Comment
<< Home