சிறைவாசிகளோடு ஈகைத் திருநாள்
ஈகைத் திருநாளை சிறைவாசிகளோடு கொண்டாடிய
வேலூர் தமுமுகவினர்!
நமது செய்தியாளர்
வேலூர் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய வேலூர் மத்திய சிறைச் சாலை மற்றும் மகளிர் சிறைச்சாலை. இங்கே இருக்கக்கூடிய முஸ்லிம் கைதிகளுக்கு ஆண்டுதோறும் ரமலான் மாதம் நோன்பு நோற்பதற்கும், நோன்பு திறப்பதற்கும் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கடந்த சில ஆண்டுகளாக தமுமுகவின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட அவர்களுக்கு புத்தாடையும், பிரியாணி சமைப்பதற்கான உணவுப் பொருட் களும் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த உதவியை சிறை அதிகாரி களின் ஒத்துழைப்போடு உரிய அனுமதி பெற்று முஸ்லிம் கைதிகளிடம் நேரடி யாகக் கொடுத்து வந்தனர். சிறைக் குள்ளேயே முஸ்லிம்கள் ரமலான் நேரத் தில் சொந்தமாக சமைத்து சாப்பிடு வதற்கு பிரத்யேகமாக தனி இடம் ஒதுக்கப்பட்டு தரப்படுகிறது. கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பொருட் களை வழங்க சில அதிகாரிகள் சிறப்பு அனுமதி வழங்க மறுத்ததால் பல இன்னல்கள் ஏற்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முறையான அனுமதி தமுமுக தலைமைக் கழகத்தின் மூலம் சிறைத்துறை டி.ஜி.பி. நடராஜ் அவர்களிடம் பெறப்பட்டது.
மேலும் முஸ்லிம் சிறைவாசிகளின் விருப்பத்தின் அடிப்படையிலும், வேலூர் சிறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலும் இந்த ஆண்டு ரமலான் பெரு நாளன்று சிறைவாசிகள் அனைவருக் கும் சிறப்பு பிரியாணி உணவு வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு, அதனடிப்படையில் சிறைத்துறை டி.ஜி.பி. அவர்களிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து இரண்டு சிறைச்சாலை யிலும் உள்ள சிறைவாசிகள், ஊழியர் கள், பயிற்சி ஊழியர்கள், அதிகாரிகள் என்று சுமார் 2000 பேருக்கான உணவு தயாரிக்கும் பணி கள் முடுக்கிவிடப்பட்டன.
முன்னதாக அதிகாலை சுபுஹ் தொழுகையை முடித்தவர்களாக வேலூர் மாவட்ட, மாநகர, வார்டு கிளை நிர்வாகிகள் சுமார் 30 பேர் கொண்ட குழு சிறைக்குள்ளே அனுமதிக்கப்பட்டு, சிறை வளாகத்திலேயே பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் உணவு தயாரிக்கும் பணி உடனடி யாகத் துவங்கியது. சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஜெயிலர், துணை ஜெயிலர், உளவுத்துறை அதிகாரி கள் பலரும் இப்பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர்.
பகல் சுமார் 2 மணியளவில் ஜெயிலர் கருப்பையன் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஏஜாஸ் அஹமத், மாவட்ட உலமா அணி செயலாளர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில தொழிலாளர் அணி செய லாளர் ஜே. அவுலியா ஆகியோருடன் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணி துவங்கியது. குறித்தபடி மகளிர் சிறை உட்பட அனைத்து தரப்பினருக்கும் திருப்திகரமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இறுதியாக சிறை கண்காணிப்பாளர் மற்றும் ஜெயிலர் ஆகியோர் தமுமுக தொண்டர்களை அழைத்து, டி.ஜி.பி. யின் வாழ்த்துக் கடிதத்தையும், நன்றி யையும் வெளிப்படுத்தி, தமுமுகவின் ஈடு இணையற்ற சேவையைப் பாராட்டினர்.
சிறைவாசிகளோடு இந்த ஈகைத் திருநாளைக் கொண்டாடி மகிழ அரிய வாய்ப்பை நல்கிய சிறைத்துறை அதிகாரிகளுக்கும் மாநில, மாவட்ட கழகத்தின் சார்பாக சகோ. ஜே. அவுலியா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
புதிய சரித்திரம் படைத்த நிம்மதி யோடு, ஈத் பெருநாளை நிறைவாகக் கொண்டாடிய மன நிறைவுடன், மனைவி மக்களையும், பெற்றோரையும் சந்திக்க ஆர்வமுடன் தமுமுகவினர் புறப்பட்டுச் சென்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமுமுக நிர்வாகிகளுக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொண்டனர்.
சமத்துவ மகிழ்ச்சி
சிறைவாசிகளைப் பிரியும் போது கண்ணீர் மல்க வழியனுப்பியதுடன், உயர் வகுப்பு - கீழ் வகுப்பு என்ற அடிப்படையின்றியும், சாதி மத பேதங்கள் இல்லாமலும் எல்லோருக்கும் சமமான முறையில், திருப்தியான அளவுக்கு உணவு பரிமாறியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
27 ஆண்டுக்கும் மேலாக ஆட்டுக் கறி சுவையை அறியாதிருந்த நாங்கள் இன்று அந்த வாய்ப்பை பெற்றோம் என்று ஒரு சிறைவாசி மகிழ்ச்சியுடன் கூறினார்.
தூய்மையான மஸ்ஜித்
தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைச் சாலைகளில் வேலூர் மத்திய சிறைச் சாலையில் மட்டும்தான் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மஸ்ஜித் இடம் பெற்றுள்ளது. சுமார் 100 பேர் தொழும் வசதியுள்ள இம்மஸ்ஜித் தண்ணீர், கழிவறை, மின் விசிறி உள்ளிட்ட வசதிகளுடன் மிகத்தூய்மையாக பராம ரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கவலை மறந்து கண்ணீர் துறந்தனர்
தமுமுக நிர்வாகிகளும் - முஸ்லிம் சிறைவாசிகளும் இணைந்து ஈத் பெருநாள் சிறப்புத் தொழுகையை இங்குள்ள மஸ்ஜிதில் தொழுதனர். வேலூர் மாவட்ட உலமா அணிச் செயலாளர் மவ்லவி சம்சுதீன் நாசர் உமரி அவர்கள் தொழுகை நடத்தி குத்பா பேருரை ஆற்றினார். இறுதியில் ஹ வகுப்பு தண்டனைக் கைதி சகோ. மவ்லவி ஃபஜ்லி பாய் கூறுகையில், ஒவ்வொரு ஈத் நாட்களிலும் குடும்பத் தினரை நினைத்து கண்ணீரோடு தக்பீர் முழக்கமிடும் சிறைவாசிகள், தமுமுக சகோதரர்களின் வருகையால் அவற்றை மறந்து குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வுடன் இருப்பதாகவும், தமுமுகவைத் தவிர வேறு எந்த அமைப்புகளும் தங்களைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment
<< Home