மதுரை வக்ப் வாரிய கல்லூரி விவகாரம்!
மதுரை வக்ப் வாரிய கல்லூரி விவகாரம்!
முதல்வரிடம் தமுமுக முறையீடு!!
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை கடந்த ஜூலை 11 வெள்ளிக் கிழமை அன்று அவரது கோபாலபுர இல்லத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி ஆகியோர் சந்தித்தனர். அரை மணி நேரம் நடை பெற்ற இந்தச் சந்திப்பில் மதுரை வக்ப் வாரிய கல்லூரியின் நிர்வாகத்தில் சிலர் தேவையில்லாமல் விரிவுரையாளர் நியமனத்தில் தலையிட்டு குழப்பம் விளைவிப்பது குறித்து முறையிட்டனர். தமுமுக தலைவர்களின் முறையீட்டில் உள்ள நியாயங்களை உணர்ந்த முதல்வர் உடனடியாக தனது செயலாளர்களை அழைத்து குழப்பங்களை தீர்க்க உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம் என்ற அமைப்பு கடந்த 01.10.1992 முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மகளிருக்கு கதர், கைவினைப் பொருட்கள் மற்றும் சிறுதொழில் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதோடு ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையும் வழங்கும் இவ்வமைப்பு தனது நிதி ஆதாரமாகத் திரட்டும் நன்கொடைக்கு இணையான தொகையை அரசு மானியமாக(Matching Grant) வழங்கி வந்தது. இந்நிலையில் நடந்த முடிந்த அரசு மானியக் கோரிக் கையில் இச்சேவையை அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்படும் என்று அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் முஸ்லிம்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் அடைவதை பொறுக்காமல் இதுவரை அரசு வழங்கி வந்த மானியத்தை (Matching Grant) உச்ச வரம்பாக ரூ. 5 இலட்சம் என நிர்ணயித்தனர். இந்த நிர்ணயத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில் உடனே தமிழக முதல்வர் அவர்கள் உச்ச வரம்பு தொகையை நீக்கி உத்தரவிட்டு பழைய நிலையில் தொடரும் என்று வாக்களித்தார்.
மாணவர்களுக்கு கல்வி உதவி கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு சமுதாயம் தொடர்பான பிரச்சனைகளையும் இச்சந்திப்பின் போது முதல்வரின் கவனத்திற்கு தமுமுக தலைவர்கள் கொண்டு சென்றனர்.
0 Comments:
Post a Comment
<< Home