உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 28
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..
வ அலைக்கு முஸ்ஸலாம், வாங்க ஒமர் பாய். எங்க வல்லத்துல இருந்தா வர்றீங்க.
என்ன அஹமது? கிண்டல் பண்றீங்களா. வல்லம் மாநாடு தான் கால வாரி விட்டுடுச்சே. மொத நாளு வெளியான கூட்டத்தோடயே நான் ஓடி வந்துட்டேன்.
அப்போ ஏகப்பட்ட கூட்டம் வந்துடுச்சோ.
அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்ல. வந்த கூட்டமே மொத்தம் 40 இல இருந்து 50 ஆயிரம் தான் தேறும். அதுக்கே ஒழுங்கான வசதி செஞ்சு குடுக்காததுனால பல பேரு ஏந்தான் வந்தோமோன்ட்டு வருத்தத்தோட திரும்பி போயிட்டாங்க.
அப்போ.. .. 10 இலட்சம் பேரு கூடப்போறாங்க. 100 ஏக்கர்ல ISO (ஐஎஸ்ஓ) தரத்தோட பல ஏற்பாடுகள்ன்னு சொன்னாங்களே.
என்ன அஹமது தெரியாத மாதிரி கேக்குறீங்களே. பில்ட் அப் பண்றதுங்குறது நம்மாளு பிஜே ரத்தத்துலயே ஊறுனதாச்சே. தவிர ஒண்ண, பத்தா சொல்றது தன்னோட வளமைதான்னு சமீபத்துல WIN TV லயே அவரு சொன்னாரே மறந்துட்டீங்களா.
நாந்தான் அந்த கூத்தெல்லாம் பாக்குறதில்லைன்னு பல முற சொல்லிட்டேனே. சரி சரி நீங்க வல்லத்தப் பத்தி சொல்லுங்க.
கிட்டத்தட்ட 6 மாச காலமா, டிவில வளரும் சினிமா ரேஞ்சுக்கு ஒவ்வொரு நாளும் இதோ புல்டோசர் தரையை சமன் செய்கிறது. இதப் பாத்தீங்களா, சுத்தி மறைக்கிறதுக்கு ஷீட்டு வந்து ஏறங்குது. இதோ இப்போ பாக்குறீங்களே இது தான் ஷெட் போடுறதுக்கான தளவாட சாமான்கள். அப்புடி இப்புடின்னு தெனந்தோறும் ஒவ்வொரு ஸ்நாப் ஆ காமிச்சு என்னவோ அந்த எடத்த அப்புடியே ஒரு அவசர கால கேம்ப் ரேஞ்சுக்கு சொன்னாங்க. ஆனா ஒண்ணுமே செய்யல.
ஐயய்யோ. அப்புடீன்னா மக்கள் ரொம்ப செரமப்பட்டிருப்பாங்களே.
அதுனால தான் திருவிழா பாக்கன்னு வந்த கூட்டம் திரும்பிப் பாக்காம ஓடிடுச்சு. ஏகத்துவ பிரச்சாரத்த எல்லாம் பின்னால தள்ளிட்டு, எலும்பு கூடு பேசுது ஐயா வாங்க, அம்மா வாங்கன்னு சித்திர திருவிழா ரேஞ்சுக்கு கூப்பாடு போட்டாங்க. அத நம்பி திருவிழா வேடிக்கையைப் பாக்கலாம்னு வந்த கொஞ்ச நெஞ்ச பேரும் அடிக்கிற வெயிலுக்கு முகத்த கழுவக்கூட தண்ணி கெடக்ய்காம தள்ளாடிப் போயிட்டாங்க.
இருந்தாலும் பந்தல்ல கூட்டமா இருந்துச்சுன்னு கேள்விப்பட்டேனே.
வேற வந்த சனங்க இந்த வெயிலுல எங்க போயி நிப்பாங்க. அந்த கூட்டத்துலயும் அதிகமான பேரு தமுமுக காரனுவளாத்தான் தெரிஞ்சானுங்க. விசாரிச்சதுல என்ன இருந்தாலும் தவ்ஹீது மாநாடுன்னு சொல்லியிருக்காங்களே. ஷைத்தானே சொன்னாலும், ஆயத்துல் குர்ஸியோடய மகிமைய புறந்தள்ளாம ஏத்துக்கிட்டு இருக்குற நாம, பாகுபாடு பாக்காம மார்க்க பிரச்சாரங்கள்ல்ல கலந்துக்கத்தானே செய்வோம்னு சொல்லி ஆச்சரியப்பட வச்சுட்டாங்க.
இட ஒதுக்கீடுன்னு சொல்லி கும்பகோணத்துல கூட்டத்த சேர்த்து, கடைசில ஜெயாகிட்ட போயி கோனிகா பஷீருக்கு சீட்டு கேட்டு நின்னாப்ல, இப்போ தவ்ஹீது பேர்ல கூட்டத்த கூட்டி யாருகிட்ட போயி நிக்கப் போறாரோ.
அது தனியான அக்கப்போர் தான் போங்க. அதுக்கு அதுக்கு முன்னால இந்த தவ்ஹீதுங்குறத இவங்க எப்புடியெல்லாம் வித்து காசாக்குறாங்கன்னு கேளுங்க.
அதோட சேர்த்து ஓடாத குர்ஆன் CD யை குடுத்து காசு பாத்துட்டாங்களாமே.
சொல்றேன் அஹமது. விளக்கமா ஒன்னொன்னா சொல்றேன். பொறுமையா கேளுங்க. முதல்ல தமிழகத்தில் தவ்ஹீதின் வரலாறுன்னு, சுட்டுக்கிட்டு வந்த பத்திரிக்கைல ஒரு இஸ்ஸு முழுக்க எழுதியிருக்காங்க.
அதுல என்னங்க தப்பு கண்டுபுடிச்சீங்க. ஒரு வரலாறை அடுத்த தலைமுறைக்கு சொல்றது தப்பா.
அப்புடி இல்ல அஹமது. முஸ்லிம்களோட வரலாத்த சங்பரிவாரம் மாத்தி எழுதுதுன்னு சொல்லிட்டு, முஸ்லிம்களோட அடிப்படை அறிவான தவ்ஹீத் பத்துன கட்டுரைய முஸ்லிம்களே மாத்தி எழுதலாமா.
விரிவா சொல்லுங்க ஒமர் பாய்.
அஹமது, 1980 கள்ல்ல, மதீனாவுல இருந்து திரும்பி வந்த சில அறிஞர்களோட கடும் முயற்சியால தான் தமிழகத்துல தவ்ஹீத் பிரச்சாரம் தளிர்விட்டதுங்குறது தவ்ஹீத்வாதிகள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் நம்ம தலைவரோட அந்த பழைய முன்னோடிகள் யாரும் இல்லங்குறதுனால, இப்போ கெடச்சுருக்குற புதிய ரசிகர்கள்கிட்ட தன்ன ஒரு ஹீரோ, தியாகி ரேஞ்சுக்கு காட்டிக்கிறதுக்காக, அவுங்கள எல்லாம் தடம் மாறிட்டாங்கன்னு கூசாம எளுதியிருக்காருங்க.
அடப்பாவமே. அப்போ இவரோட இல்லன்னா, அவுங்க கொள்கையே மாறிப்போச்சுன்னு இவரு சொல்றாரோ.
அதவிட தமாசு என்னான்னா, மவுத்தாப்போன ஒண்ணு ரெண்டு பேரு மட்டும் கொள்கைல உறுதியா இருந்து மரணிச்சுட்டதா எளுதியிருக்காங்க. அதுபடி பாத்தா, மவுத்தாப் போனா மட்டும் தான் கொள்கைல உறுதின்னு ஒத்துகிடுவாங்க போல.
வேற என்ன எளுதியிருக்காங்க.
சொல்றேன். அதவிட எதையெல்லாம் மறச்சுட்டாங்கங்குறதையும் சொல்றேன் கேளுங்க. தவ்ஹீது பிரச்சாரத்துல மும்முரமா ஈடுபட்டுகிட்டு இருந்தப்போ, எதுத்து வந்தவங்க அடிச்சதுல பல்லுப் போச்சே. அந்த மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி பத்தி ஒண்ணுமே எளுதல.
அதுதான் அவரு சீடரு அதிர பாருக்கு.. .. பல்லுப்போயி சொல்லுப் போன மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதின்னு ஒரு கட்டுரைல எழுதியிருந்தாரே.
பாவம் அந்த அதிரை, என்ன செய்வாரு? தலைவர் பாணியில எதுகை மோனையோட எழுதுறதா நெனெச்சு எளுதியிருப்பாரு. தவ்ஹீதுக்காகத்தான் பல்லுப் போச்சுங்குற வெவரம் அவருக்கு எங்க தெரிஞ்சுருக்கப் போவுது. அத தவிர, ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி என்ன தலைவர மாதிரி கருப்பு சாயத்த அள்ளி அப்பிக்கிட்டா வந்து நிக்குறாரு. அதுனால அதிரை அப்புடி எளுதியிருப்பாரு விடுங்க.
சரி விட்டுடுவோம். நீங்க தொடருங்க.
இம்தாதி மட்டுமில்ல, இந்த பிஜே சொன்னாருங்குறதுக்காக உண்மையான தவ்ஹீத்வாதிகளான JAQH ஆளுங்களோட மல்லுக்கட்டி, திருச்சி சிங்காரத் தோப்பு பள்ளிய PJ வுக்கு வாங்கிக் குடுத்தாரே. அந்த அலி அக்பர் உமரியப் பத்தியும் ஒண்ணும் எளுதல.
அடப்பாவமே. தவ்ஹீது பிரச்சாரத்துக்காக ஊரு ஊரா சுத்துனவராச்சே அவரு. தவிர இன்னைக்கு வரைக்கும் வீரியமான தவ்ஹீது பிரச்சாரத்துல தான ஈடுபட்டுக்கிட்டு இருக்காரு, பஹ்ரைன், குவைத், சவுதின்னு பல பகுதிகள்ல்ல அவரு போயி பிரச்சாரம் பண்ணுனதா சொன்னாங்களே. அந்த அலி அக்பர் உமரியவே விட்டுட்டாரா. அப்போ ஆத்தங்கர அலாவுதீன் பாகவிய பத்தியும் ஒண்ணுமே சொல்லலியா.
அட என்னங்க அஹமது. இஸ்லாமிய பிரச்சார மையங்கள்ல்ல அதிகாரப்பூர்வமான அழைப்பாளர்களா இருக்குற மவ்லவிகளையே கண்டுக்காம மறைச்சவரு, ஒரு கிராமத்துல இருந்தாலும் அழைப்புப் பணிக்காக தன்னோட ஓய்வு நேரத்த முழுமையாக செலவழிக்கிற அலாவுதீன் பாகவியப் பத்தியா சொல்லப்போறாரு.
ஒமர் பாய் அலாவுதீன் பாகவின்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. நம்மள்ட்ட ஒரு அற்புத அலாவுதீன் இருந்தாரே. அவரு எங்க போனாரு. மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளரா கூட வரலியே.
என்ன அஹமது. புரியாத மாதிரி கேக்குறீங்க. டிவி சீரியல்ல நல்லா நடிக்காதவங்கள ஓரம் கட்டிட்டு நல்லா நடிக்கிறவுங்களத் தான போடுவாங்க. அத மாதிரி நம்ம அண்ணனோட மெகா சீரியல்ல அற்புத நடிகர் அலாவுதீனுக்கு ஓய்வு குடுத்துட்டு புதுப்புது நடிகர்கள எறக்கிட்டாங்கள்ல்ல.
அதுவுஞ் சரிதான். மெகா சீரியல் ரேஞ்சுக்குத்தான் இங்க பணிகள் நடக்குது. ஆமா இந்த மாநாட்டு விஷயங்களுக்கு டிவில ஒருத்தரு வந்து சாட்சி சொன்னாராமே.
அது ஒரு பெருங்கூத்து. கடைசில வேலிக்கு ஓணான் சாட்சிங்குற மாதிரி அது ஆகிப்போச்சு.
என்ன ஒமர் பாய், நடந்தது என்னன்னு கேட்டா பழமொழிய சொல்லிக்கிட்டு இருக்கீங்க.
அதாவது அஹமது, வேலி எவ்வளவு பலமானதுன்னு அத பொத்துக்கிட்டு வந்த ஓணான் சாட்சி சொன்னதா சொல்லுவாங்கள்ல்ல, அந்த கதயா, இவுங்களோட டிவில சம்பளம் வாங்குற ஒருத்தர புடிச்சுகிட்டு வந்து சாட்சி சொல்லச் சொன்னா, இவுங்களோட செயல்பாடுகள் சரியில்லண்ணா சொல்லுவாரு. தவிர அங்க அண்ணனும் பாக்கரும் போட்டிருந்த ஸ்டால்ல வித்த சிடி கள்ல்ல இவரு தான் வாய்ஸ் டப்பிங் பண்ணுனாராம்.
அதுசரி, பங்காளி சாட்சி சொல்லக் கூடாதுன்னு இஸ்லாமிய ஷரீஅத் சொல்லுதே. பங்காளின்னா சொந்தக்காரன் மட்டும் தான் இவரு போல பிஸினஸ் பங்காளி இல்லன்னு சொல்லி சமாளிப்பாரோ.
இந்த மாதிரி இஸ்லாமிய ஷரீஅத் பத்தியோ, உண்மையான தவ்ஹீதப் பத்தியோ யோசிக்காத கூட்டத்தத் தானே நம்ம அண்ணன் உருவாக்கிக்கிட்டு வற்றாரு. அவரு எளுதுன தர்ஜுமாவுக்கு T.ராஜேந்தர வச்சு வெளம்பரப்படுத்துனா மாதிரி, இப்போ T.S.S.மணிய வச்சு விளக்கம் குடுத்தாரோ என்னவோ.
அப்புடி என்னதான் சொன்னாரு அந்த மணி. அதத்தான் சொல்லுங்களேன்.
இவுங்க அவர வச்சு, அங்க ரொம்ப கூட்டமா இருந்துச்சுன்னு சொல்ல வக்க நெனச்சாங்க போல இருக்கு. ஆனா அவரு வந்து ஒக்காந்துகிட்டு, அங்க சுமாரா ஒரு 50 ஆயிரம் பேரு வந்திருப்பாங்ளான்னு – கேட்டு ஆரம்பிச்சு வைச்சதோட, நம்மாளு பதறிகிட்டு, நாம சேர் போட்டதுனால 60 இல இருந்து 70 னாயிரம் பேரு இருந்திருப்பாங்க. சேர் போடலைன்னா கொறஞ்சது ஒண்ணறை இலட்சம் பேரு அங்க இருந்திருக்க முடியும்னு வாக்கு மூலம் குடுத்தாரு.
அடக்கண்றாவியே, அப்போ 10 இலட்சம்னு டெய்லி கூவுனதுலாம் வெறும் நாடக வசனமாகவுல போச்சு. 1 இலட்சம் பேருக்கு கூட உக்கார வசதி செய்யலன்னா, அதுல எத்தனை பேருக்கு மத்த வசதிகள செஞ்சிருப்பாங்க. ஆக மொத்தம் அவுங்க சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லைன்னு நிரூபிச்சுட்டாங்க போங்க.
சரியாச் சொன்னீங்க அஹமது. இரண்டு பேருமே BJP அதாவது பாக்கரும், இன்று மாறிப்போன பிஜேவும் அவுங்க சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லைன்னு பல முறை நிரூபிச்சுட்டாங்க. இத வெளங்குன நீங்களும் நானும் இப்போ அதப்பத்தி கவலப்பட்டுகிட்டு இருக்கோம். அத வெளங்காத கூட்டமாப் பாத்து மேடையேத்தி வச்சு, குளுப்பாட்டி, புதிய வசூல் ராஜாக்கள் ஆக்கி வச்சுருக்காரு.
ஒமர் பாய் கொஞ்சம் வெளக்கமாத்தான் சொல்லுங்களேன்.
அஹமது.. .. ..
அவரு தவ்ஹீதுன்னு சொன்னத நம்புனோம், ஆனா அது உண்மையான தக்லீதாப் போச்சு. அவரு பாக்கரு மேல பாலியல் குற்றச்சாட்டு சொன்னத நம்புனோம். ஆனா பாக்கரு மிரட்டுனவுடன அத புஸ்வானமாக்கிட்டு பாக்கருக்கே அதிகப்படியான பொறுப்ப குடுத்து நம்மள முட்டாளாக்கிட்டாரு. கும்பமேளாவுல 10 இலட்சம் பேரு கூடுனாங்கன்னு அடிச்சுச் சொன்னாரு. பல பேரு நம்பளன்னாலும் ஒங்களயும், என்னையும் மாதிரி சில பேரு நம்புனோம். ஆனா ஜெயலலிதா கிட்ட போனவுடன ஒரு இலட்சம் பேருன்னு பம்மிப் போயிட்டாரு.
அதே மாதிரி தான் ஜகாத்து, குர்ஆன் தர்ஜுமா, ஸஹாபாக்கள் பத்துன விமரிசனம்னு அவரு சொன்னத நம்புனோம். ஆனா கடைசில தான் அவரோட திருகுதாளம்லாம் வெளங்குச்சு. அதமாதிரி தான் இந்த வல்லம் கூத்தும், 10 இலட்சம் பேரு, 100 ஏக்கரு, ஐஎஸ்ஓ தரத்துல ஏற்பாடுன்னு சொன்னாரு, தவ்ஹீது பிரச்சாரத்துக்காக இல்லாட்டாலும், இந்த 100 ஏக்கர்ல நடக்குற பொருட்காட்சியாவது பாத்து வரலாம்னு, சித்திர திருவிழா, கந்தூரி சந்தனக்கூட்டுக்கு போற மாதிரி கூட்டம் கொஞ்சம் பேரு வந்தாங்க. இதுலயும் தான் சொல்றதுக்கும், யதார்த்தத்துக்கும் சம்பந்தமேயில்லைனு நிரூபிச்சுட்டாரு.
ஒமர் பாய், இது தான் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குங்குற கதயா ஒவ்வொன்னா வெளுத்துப் போச்சே, நான் கேட்டது இதயில்ல. புது வசூல் ராஜாக்கள்னு சொன்னீங்களே, அந்த வௌரத்த சொல்லுங்க.
ஓ. அதக்கேட்டீங்களா. அஹமது.. .. .. தமுமுக நடத்துன நன்றி அறிவிப்பு மாநாட்டுல இயக்கத்துக்காக பாடுபட்ட பல சகோதரர்கள புறக்கணிச்சுட்டு, காசு குடுப்பாங்கங்குற எதிர்பார்ப்புல சில தொழிலதிபர்கள மேடையேத்தி வச்சுக்கிட்டாங்கன்னு புளுதி வாரி தூத்துனாரே ஞாபகம் இருக்கா.
நல்லா ஞாபகம் இருக்கு. சொல்லுங்க. ஆனா அன்னைக்கு இவரு சொல்ற யாருமே மேடைல கிடையாது. எல்லோருமே மேடைக்கு கீழ தான ஒக்காந்து இருந்தாங்க.
சரியாச் சொன்னீங்க. கீழ இருந்தவங்க முதலமைச்சருக்கு மரியாதை செலுத்துறதுக்காக மேடைல ஏறி எறங்குனதயே விமரிசிச்ச இவரு, தவ்ஹீது மேடைல எத்தி வச்சிருந்தது யாரண்ணு தெரியுமா. இங்க தமிழகத்துல தவ்ஹீதுனுடைய ஆரம்ப காலகட்டத்துல இருந்து அதாவது சரியாச் சொல்லணும்னா இந்த பிஜே, ஜாக்கில் இருந்தப்போ ஜாக்குலேயும், அத வுட்டுட்டு தமுமுகவுக்கு போனப்போ அங்கேயும் அங்க இருந்துக்கிட்டே அனைத்து தவ்ஹீது கூட்டமைப்புன்னு ஆரம்பிச்சப்போ அதுலயும், பெறகு அதே பேர ததஜன்னு மாத்திக்கிட்டாரே அப்பவும் கூடவே இருந்தாங்களே அவுங்கள்ல்ல யாரையும் மேடையேத்தல. மாத்தமா 2004ல தமுமுகவுல இருந்து ஓடுனாரே அப்போ, கல்ஃப்ல இருந்து ஏஜெண்டா வேல செஞ்சு காசு வசூல் பண்ணி அனுப்புனாங்களே அந்த வசூல் ராஜாக்களத்தான் அமர்வு தலைவரா உக்காரவச்சு அளகு பாத்தாரு.
அடக்கஷ்ட காலமே, அப்போ காசு குடுத்தா ததஜவுல தலைவர் போஸ்ட தவிர எதயும் வாங்கிடலாம் போல. சரி வேற ஒண்ணும் வல்லத்தப் பத்துன சேதி இல்லையா.
ஏன் இல்லாம. அது கெடக்கு வண்டி வண்டியா. எல்லாத்தையும் இப்பவே சொல்ல முடியாட்டியும், கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன், கேளுங்க.
என்னா, ரொம்ப செலவாயிடுச்சு. துண்டு வுளுந்துருச்சு. அதுனால காசு குடுங்கன்னு கேப்பீங்க. அது தான.
பரவாயில்லையே. நீங்க சொல்றது ஓரளவுக்கு சரிதான். அதாவது செலவாயிடுச்சு. துண்டு வுளுந்துருச்சுன்னு சொன்னாங்க. கூடவே இண்ணொன்னும் சொன்னாங்க பாருங்க. அதுதான் படா தமாசு.
அதச் சொல்லுங்க மொதல்ல.
அதாவது அஹமது, நான் என்னோட வார்த்தைல சொல்றத விட பாக்கர் சொன்னத அப்படியே சொல்றேன் கேளுங்க. அதாவதுமா, இரண்டாம் நாள் மீட்டிங்லாம் முடிஞ்சு போச்சு. கூட்டம்லாம் போயிகிட்டு இருக்கு. சுபுஹானகல்லாஹும்ம சொல்லியாச்சு. அப்பத்தான் ஒருத்தரு சொல்றாரு, இவ்வளவு பேரு வந்துட்டுப் போறாங்களே. ஒரு உண்டியல் வச்சுருந்தா கொஞ்சம் வசூலாவது ஆகி இருக்குமே. சமாளிச்சுக்கலாமேன்னு சொல்றாரு. மனசே இல்லாம அங்க கெடந்த பக்கெட்ட தூக்கி அனுப்புறேன். மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். பாதிக்கூட்டம் போனபொறவு கூட முத ரவுண்டு கலெக்ஷன்ல 5 இலட்சம் ரூபாயும், இரண்டாம் ரவுண்டு கலெக்ஷன்ல 4 இலட்ச ரூபாயும் கெடச்சுது – அப்புடீன்னு பாக்கரு டிவில சொல்றாருங்க.
ஆஹா பரவாயில்லையே. படு பயங்கர கலெக்ஷனா இருக்கே. இது தவிர கடையநல்லூர் மஜீதுங்குறவரு மட்டுமே தன்னோட உள்ளூர் வசூல் 3 இலட்சம்னும், வெளிநாட்டுல உள்ள கடையநல்லூர் காரங்க மூலமாக வசூல் 13 இலட்சம்னும் எளுதியிருக்காரே பாத்தீங்களா.
ஆமா. இப்புடி எல்லாத்தையும் கூட்டிப்பாத்தா பல கோடிகள் வரும் போல இருக்கே. ஆனா இந்த கடைசி நாள்ல்ல இரண்டு ரவுண்டு வசூல்ல 9 லட்சம் கெடச்சுதுன்னு சொல்றது ஓவர் பிலட் அப் மாதிரி தெரியுது. உண்மையான வெபரம் தெரியணும்னா இந்த மாநாட்டு வசூல் சம்பந்தமான வெள்ளை அறிக்கைய பிஜேபியில யாராவது அதாவது பாக்கரோ அல்லது மாறிப் போன பிஜே வோ வெளியிடாம ஒருத்தருக்கும் தெரியாது. அல்லது முன்னால ஜெயலலிதாகிட்ட வாங்குனதா சொன்னாங்களே அந்த கோடிகளுக்கு கணக்கு காட்ட இப்புடி சொல்றாங்களோ என்னவோ. ஒண்ணும் புரியல.
வருத்தப்படாதீங்க ஒமர் பாய். 2000 ல நடந்த மாநாட்டு வரசு செலவு கணக்கு கேக்கப்போயி தான் ஒருத்தருக்கு திருட்டுப் பட்டமும், மனநோயாளி பட்டமும் கெடச்சுது. இந்த வல்லத்துல எத்தனை பேரு கரைசேரப் போறாங்களோ அல்லது எத்தனை பேத்த கவுக்கப் போறாங்களோ. நீங்க சும்மா இருங்க. இல்லண்ணா உங்க பேரையும் அண்ணன் சமூக விரோதிகள் பட்டியல்ல சேர்த்துடப் போறாரு.
அதுவும் சரிதான் அஹமது. சமூக விரோதிகள் பட்டியல் சம்பந்தமாவும் சில விஷயங்கள் பேசிக்கிடணும். ஆனா டயம் இல்ல. இன்ஷா அல்லாஹ் பிறகு சந்திக்கும் போது சொல்றேன். வரட்டுமா. வஸ்ஸலாம்.
முல்லா 23.05.2008
0 Comments:
Post a Comment
<< Home