மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!
மூஸா முபாரக் அலி, சென்னை -1
கேள்வி: களவாடப்பட்ட பத்திரிகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் தமுமுகவினர் பதில் அளிக்க இயலவில்லை என்று ஒருவர் சொன்னதுடன், தனிப்பட்ட முறையில் தமுமுக தலைமையைப் பொதுக்கூட்டத்திலும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதனை அவர்கள் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பியுள்ளார்கள். தமுமுக ஏன் இன்னும் இதற்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதிக்கிறது.?
பதில்: பொதுக்கூட்டத்தில் மட்டும் அல்ல, தொலைக்காட்சியிலும் பகற்கொள்ளை அடிக்கப்பட்ட பத்திரிகையிலும் தாதா கலாச்சாரத்தைப் பின்பற்றும் அவர் தமுமுக மீது அவதூறுகளை சுமத்தித் தமுமுகவிற்கு நன்மை சேர்த்து வருகிறார். அவரது பேச்சையும் எழுத்தையும் இப்போதெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு மன நோயாளியின் முனகலாகவே அதனைப் பெரும்பாலும் மக்கள் கருதுகிறார்கள்.
3 மாதத்தில் தமுமுகவை அழித்துக் காட்டுவேன் என்று சபதம் செய்தவருக்கு இன்று தமுமுக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ஊர்களிலும், அனைத்து தரப்பினர் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து விட்டதைப் பார்த்துப் பொறுக்க இயலாமல் ஒரு மனநோயாளி போல் உளறிக் கொட்டுகிறார். பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட பணம், தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் திரட்டப்பட்ட பணம் இறைவன் கூறுவது போல் (திருக்குர்ஆன் 49:12) சொந்த சகோதரர்களின் மாமிசத்தை உண்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இறைவனிடம் வெகுமதி பெறும் நோக்கில் இந்தப் பேச்சு வியாபாரிக்கு நன்கொடை அளிக்கும் சகோதரர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், நன்மைக்குப் பதில் பாவச் சுமையை தூக்குவதற்கு உங்கள் பணம் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்று தமுமுக நாம் குறிப்பிட்டது போல் அனைத்துத் தரப்பு மக்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து விட்டது. மக்கள் பல வகையில் தங்கள் பாதுகாப்பு பேரியக்கமான தமுமுகவிற்கு தங்கள் அன்பைக் காட்டி வருகின்றார்கள். பெரும் தொழில் அதிபர்கள் முதல் சாதாரண சாமானிய மக்கள் வரை தமுமுகவிற்குத் தங்கள் அன்பை, ஆதரவை நல்கி வருகின்றார்கள்.
நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசிடம் எடுத்து உரைத்து அதனை நாம் எவ்வித பிரதி உபகாரமுமின்றி நிறை வேற்றி வருகிறோம். நமது சமுதாயத்தைச் சேர்ந்த பல அரசு ஊழியர்களின் நியாயமான பிரச்சனையையும் எவ்வித பிரதி உபகாரமுமின்றி தீர்த்துவைத்து வருகிறோம். இவற்றில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. மனநோயாளி குறிப்பிட்டதுபோல் பரங்கிப்பேட்டையிலும் எந்தவொரு ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் ஒரு தலைசிறந்த மருத்துவர் இந்தச் சமுதாயம் பயன்பெறுவதற்காகப் பல்வேறு கல்வி நிறுவனங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தனது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் நடத்தி வருகிறார்.
தமுமுக தலைவர் 22 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற ஒரு கல்வியாளர். அதாவது அந்த மனநோயாளி பேச்சாளரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாத்தியார். ஆம் கண்ணியமான தொழில் என்று போற்றப்படுகின்ற கல்வியைப் பிறருக்குப் போதிக்கும் வாத்தியார் தொழில் செய்து வருபவர். ஏன் இந்த மனநோயாளி கூட ஒருகாலத்தில் வாத்தியாராக இருந்தவர் தான்.. தமுமுக தலைவர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளச் சென்றபோது தனது பள்ளிக்கூடம், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, செவிலியர் பள்ளி போன்றவற்றைப் பார்க்க வருமாறு ஆஸ்திரேலிய டாக்டர் அழைப்பு விடுத்தார். ஒரு கல்வியாளர் என்ற முறையில் தனது கல்வி நிலையங்களைப் பார்வையிடவும், ஆலோசனைகளைப் பெறவும் ஆஸ்திரேலிய டாக்டர் தமுமுக தலைவரை அழைத்திருந்தார். இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது கடலூர் மாவட்டத் தலைவர் ஜின்னாவிடம் இந்த அழைப்பை ஏற்கலாமா என்று ஆலோசனைக் கேட்டு அவர் ஒப்புதல் அளித்த பிறகுதான் தமுமுக தலைவர் அங்கு சென்றார். தமுமுக தலைவர் ரகசியமாக அங்கு செல்ல வில்லை. அவருடன் கடலூர் மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும் சென்றனர். பூட்டிய அறையில் மன நோயாளி பிரமுகர் உளறி வருவதுபோல் எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை. பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் தலைவர் யூனுஸ் உட்பட தமுமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் பேசினார்கள் விருந்து சாப்பிட்டார்கள். இதனைக் குற்றம் என்று சொல்பவரை மனநோயாளி என்றுதானே சொல்ல வேண்டும்.
வக்ஃப் நிலம் எதுவும் தாரை வார்க்கப் படவில்லை என்பதை வக்ஃப் ஆவணங்களே பதில் சொல்லும். பரங்கிப்பேட்டை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் தமுமுக தலைவர் அழைக்கப்பட்டுச் சென்று வருகிறார். மனநோயாளி பிரமுகர் வசதிக்காக அதனை இங்கே பட்டியலிடுகிறோம்.
கடந்த இரண்டு மாத இடைவெüயில் சென்னை புதுக்கல்லூரி நிர்வாகமும் ஆசிரியர் சங்கமும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமுமுக தலைவரை அழைத்தார்கள். தமுமுக தலைவர் சென்று வந்தார். பிறகு ஒரு நாள் ஆசிரியர் சங்கம் தனியாகத் தங்கள் சங்க மாடத்திற்கு அழைத்து தமுமுக தலைவருடன் நமது கல்லூரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துக் கலந்துரையாடினார்கள். அவருக்கு விருந்தும் அளித்தார்கள்.
குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1981 முதல் இயங்கி வரும் முஸ்லிம் கலைக் கல்லூரி நிர்வாகம் தமுமுக தலைவரை அழைத்து, கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதன் பிறகு தமுமுக தலைவருக்கும் குமரி மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கும் விருந்தும் அளித்தார்கள். இதன் பிறகு இக்கல்லூரி வளாகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பி.எட். கல்லூரியை தமுமுக தலைவர் தொடங்கி வைத்தார். திருவிதாங்கோடு இஸ்லாமிய மாதிரிப் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிக்கு தமுமுக தலைவரை அழைத்துச் சென்று தங்கள் நிறுவனத்தைப் பார்வையிட வைத்து ஆலோசனைகளைப் பெற்றனர். பிறகு அப்பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவில் தமுமுக தலைவர் உரையாற்றினார்.
சேலத்திற்கு சமீபத்தில் தமுமுக தலைவர் சென்றிருந்த போது கே.வி. ஹாஜியார், தான் நடத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்து தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தார், சேலத்தில் இயங்கும் தாருல்சலாம் பள்ளி நிர்வாகி கள் தமுமுக தலைவரைத் தங்கள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனைகளைப் பெற்றார்கள்.
மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி நிர்வாகமும் தமுமுக தலைவரை சீரத்துன் நபி சிறப்புரை ஆற்ற அழைத்தது. அப்போது அந்த கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நிறுவனமான பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் தமுமுக தலைவரிடம் கல்வி தொடர்பான பல ஆலோசனைகளைச் செய்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரி தமுமுக தலைவரை அழைத்து வட்டியில்லா வங்கி குறித்து வணிகவியல் துறை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில் கல்லூரியை சுற்றிக்காட்டிப் பல ஆலோசனைகளை அக்கல்லூரி நிர்வாகம் தமுமுக தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டது. தேநீர் விருந்து அளித்தார்கள். இதுமட்டுமின்றி அதே டிசம்பர் மாதம் வேலூரில் உள்ள புகழ்பெற்ற ஆக்சிலியம் கல்லூரியில் மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற நாடு தழுவிய கருத்தரங்கத்தில் இஸ்லாமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் தமுமுக தலைவர் உரையாற்றினார். வேலூர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் வந்தனர். அக்கல்லூரியிலும் தேநீர் விருந்து தமுமுக நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்டது.
விரைவில் இன்ஷாஅல்லாஹ் சென்னை பல்கலைக்கழகத்தில் வட்டியில்லா வங்கிகள் குறித்த தனது ஆய்விற்காக டாக்டர் பட்டம் பெறவுள்ள தமுமுக தலைவர் தன்னை வாத்தியார் என்று அழைத்துக் கொள்வதைச் சிறப்புக்குரிய தகுதியாகவே கருதுகிறார். எம்.பி.ஏ. படித்தவர்கள் வணிக நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வது இயல்பாக இருந்த காலக்கட்டத்தில் தானே விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழில் இந்த வாத்தியார் தொழில் என்பதை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள். அந்தத் தொழிலை இளக்காரமாக விமர்சிப்பது அவர்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் பொறாமையையும் வஞ்சக உணர்வையும் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.
விருந்துக்கு அழைத்தால் செல்ல வேண்டும் என்பது தான் நபிவழி. யூதர்கள் அழைத்த விருந்திலும் நபிகள் நாயகம் (ஸல்) பங்குகொண்டார்கள். இதனைக் கொச்சைப்படுத்திப் பேசும் இவர்கள் உண்மையான தவ்ஹீத்வாதிகளா?
ஈரோட்டில் நமது சமுதாயத்தவர்கள் நடத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு அதிகார வர்க்கம் தேவையில்லாத தொல்லைகளை அளித்து வந்தனர். இதனை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரும் ஒரு உயர் அதிகாரியின் தலைமையில் இப்பிரச்சனையை ஆய்வுசெய்து நமது மக்களின் நலன் பாதுகாக்கப்பட வழிவகைச் செய்தார். எவ்வித பிரதி உபகாரமுமின்றி நாம் செய்த இந்த உதவியைக் குற்றம் என்று பேசுபவர் மனநோயாளியாகத் தானே இருக்க இயலும்.
இன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயற்பாடுகள் திறந்த புத்தகமாக ஆக்கப்பட்டுள்ளது. ஈ-கவர்னன்ஸ் என்று சொல்லப்படும் மின் நிர்வாக முறை தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் வக்ஃப் வாரியத்தில் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருகிறது. வக்ஃப் வாரியத்தின் நிலத்தின் ஒரு அடி கூட சட்டத்திற்கு புறம்பாகப் பயன்பட அனுமதிக்கப்படவில்லை. முந்தைய காலங்களைவிட தற்போது வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஜமாஅத் நிர்வாகிகளே சான்று வழங்குவார்கள். கடந்தகால நிர்வாகச் சீர்கேடுகளை யெல்லாம் சரிப்படுத்த ஓர் ஆண்டு காலம் பிடித்துள்ளது. இனி மேலும் சிறப்பாக வக்ப் வாரியம் இயங்க உள்ளது. இவ்வாறு வக்ப் நிர்வாகத்தில் சிறந்த முறையில் செல்வதைப் பார்த்து மனம்போன போக்கில் பேசினால் அதனைப் பைத்தியக்காரனின் முனகல் என்று தான் குறிப்பிட முடியும்.
தமுமுகவின் சமுதாயப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இரண்டு அவசர சிகிச்சை ஊர்திகளை அளித்தது போல் நமது சமுதாயப் பிரமுகர்களும் கார்களையும், ஏன் விமானங்களையும் கூடத் தமுமுகவிற்கு இன்ஷாஅல்லாஹ் வழங்குவார்கள். இதனைக் குற்றம் என்று பேசுபவரை மனநோயாளி என்றுதானே குறிப்பிட வேண்டும். தமுமுக பொதுச் செயலாளர் செய்துவரும் தொழிலையும் கொச்சைப்படுத்தியுள்ளார் அந்த மன நோயாளி. ஆனால் தமுமுக பொதுச் செயலாளர் ஹலாலான வியாபாரத்தை செய்துவருகிறார். ஆனால் மனநோயாளியோ, தான் மார்க்கத்தைக் காட்டி பிழைப்பு நடத்தவில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி கூற முடியுமா?
ஊர்தோறும் இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறோம் என்ற சாக்கில், தான் எழுதிய புத்தகங்களை - குர்ஆன் தமிழாக்கத்தை நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் அனைவருக்கும் இலவசமாகத் தருகிறேன் என நிகழ்ச்சி நடத்துபவர்களிடமும் - வெளிநாட்டில் உள்ளவர்களிடமும் கட்டாய வசூல் செய்து பணம் சம்பாதிப்பது - இதில் வேதனையானது என்னவெனில் பாதி புத்தகங்களை வினியோகித்துவிட்டு, மீதியை மீண்டும் கடைசரக்கு ஆக்குவது, தான் நடத்தும் அமைப்பின் சார்பாக வெளியிடப்படும் துண்டுப் பிரசுரம் முதல் எல்லாவகையான அச்சு வேலைகளையும் தனது மனைவியின் தம்பியிடம் மட்டுமே தந்து மைத்துனர்களுக்கும் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்.
தொலைக்காட்சியில் முதலீடு செய்வதற்காக மக்கள் பணத்தைத் திரட்டி, போட்ட முதலை விட மும்மடங்கு அதிகத் தொகையை வெற்றி தொலைக் காட்சியின் அதிபர் தெய்வ முதல்வனை மிரட்டி உருட்டி வாங்கிக்கொண்டு முதலீடு செய்த ரசிகர் கூட்டத்திற்கு அற்பசொற்பத்தைக் கொடுத்து ஏமாற்றிய நூதன ஏமாற்றுக் காரர்களின் சிதம்பர ரகசியம் இன்னும் பல உண்டு.
இந்த அளவிற்கு அந்த அப்நார்மல் மனிதனின் உளறல்களுக்கு பதிலளிக்க பக்கத்தை வீணாக்கியதற்காக வருந்து கிறோம். எனவே அந்த அப்நார்மல் மனிதர் நம்மை ஏசினால், நாம் மக்கள் உள்ளத்தில் அதிகமாக இடம்பிடித்து விட்டோம் என்று பொருள். அதேசமயம் அவர் மவுனமாக இருந்துவிட்டாலோ நாம் பலவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தம்.
நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்
0 Comments:
Post a Comment
<< Home