Friday, February 15, 2008

தேர்தல் நெருங்கும் சமயத்தில் தவ்ஹீது மாநாடா?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

பிஜே

ஜெயலலிதாவின் ஆட்சியில் அவரது ஆசியோடு கும்பகோணத்தில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் காலத்து கட்டுக்கதைகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு கட்டுக்கதைகளும் அப்போது அவிழ்த்து விடப்பட்டு, அவை தமிழகமெங்கும் உலா வந்து கொண்டிருந்தன.

இந்த கும்பகோணம் பேரணியின் இறுதியில் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்ற புரூடாவை ததஜவினர் உலவ விட்டிருந்தனர்.

பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்கு இப்படிப்பட்ட வளர்ச்சி தேவை தானா?

உலகத் தமிழ்மாநாட்டை எம்ஜிஆர் மதுரையில் நடத்தும் போது, இப்படிப்பட்ட சூப்பர்ஃபிசியல் புரூடாக்களை அவிழ்த்து விட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்று, எம்ஜிஆர் மாறுவேடம் அணிந்து உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்கிறார். அதனால் தான் மதுரை மாநகர் முழுவதும் தெருவிளக்குகள் புதிதாக போடப்பட்டுள்ளன என்றார்கள். அப்போது அவரது சினிமாவில் தாவிக்குதித்து வந்து வில்லன்களை பதம் பார்க்கும் காட்சிகள் தான் பலரது நினைவுக்கு வந்திருக்கும்.

கும்பகோணம் பேரணிக்கு ஜெயலலிதாவின் இடஒதுக்கீடு அறிவிப்பை எதிர்பார்த்து சென்றவர்கள் அனைவரும் ஏமாந்து போனார்கள்.

'மதத்தின் பெயரால் எவ்வளவு பெரிய அறிஞனையும் காலடியில் விழ வைத்து விடலாம்' என்ற சூத்திரத்தை மேடை தோறும் சொல்லிக் கொண்டு திரிந்த பிஜே, அதன் மீது நப்பாசை கொண்டும், தனக்கு கிடைத்த பொருளாதார ஆதரவைக் கொண்டும் தமுமுகவை ஹைஜாக் செய்வதற்கு திட்டமிட்டு தோற்றுப் போனார்.

தமுமுகவில் இருப்பவர்கள் எல்லோரும் இந்த முல்லாவின் காலடியில் கிடப்பதாக எண்ணிக் கொண்டு, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக தமுமுக தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுவதாக – எல்லா முஸ்லிம்களையும் ஒரே பிளாட்பார்மில் கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தமுமுகவை – குறை கூறிக்கொண்டு அதைவிட்டும் வெளியேறினார்.

அவரது சூத்திரப்படி அவரது காலடியில் கிடந்த ஒரு சிலரைத் தவிர, அவர் எதிர்பார்த்தபடி அவர் பின்னால் தமுமுகவினர் செல்ல வில்லை, தமுமுக முன்பை விட பன்மடங்கு வளர்ச்சியை அவர் சென்ற பின்புதான் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக இறைவனுக்கு எமது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

மதத்தின் பெயரால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தையும் செய்யலாம் என்ற சூத்திரத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடித்தான் பார்த்தார், அத்தனையும் அவருக்கு எதிராகவே அமைந்தது. அவரை மக்களுக்கு மேலும் வெளிச்சம் போட்டுத்தான் காட்டின.

இறுதியில் அவரது நப்பாசையில் மண் விழுந்தது தான் மிச்சம், தமுமுகவை அழிக்காமல் விட மாட்டேன் என்று கொக்கரித்ததும் அவரது இந்த சூத்திரம் தான் காரணம்.

அவரது பேச்சைக் கேட்பதற்கு மக்கள் ஓரளவுக்கு கூடுகிறார்கள் என்பதால், அத்தனை பேரும் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று கற்பனை செய்து கொண்டார்.

பிஜே உண்மையே பேசினாலும் சரி, பொய்யை உண்மை போல் பேசினாலும் சரி, பொய்யையே பேசினாலும் சரி, அவர் பேசும் போது நமக்கு சளிப்பு தட்டாது, கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றும். அவரைப் பற்றி விபரம் தெரிந்தவர்கள் வேண்டுமானால் நாலு வார்த்தை நறுக்கென்று பேசிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்கள்.

அப்படித்தான் கலைஞர் கருணாநிதியும் தப்புக் கணக்கு போட்டார். சென்ற இடங்களிலெல்லாம் அவருக்கு கூட்டம் கூடுகிறது என்பதால் தேர்தலில் ஜெயித்து விடலாம் என்று நினைத்து பல முறை மண்ணை கவ்வி இருக்கிறார்.

அவரது பேச்சின் இனிமைக்காகவே மட்டும் மக்கள் கூடினார்கள் என்பதை அவர் மிகவும் தமதமாகவே விளங்கிக் கொண்டார்.

கும்பகோணத்தில் பேரணியில் கூட்டத்தைக் கூட்டி தனக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருப்பதாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் காட்டி ஜெயலலிதாவிடமிருந்து பல கோடிகளை பெற்றுக் கொண்டார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பிஜே.

இந்த இடத்தில் ஒரு விஷயம் எமது நினைவுக்கு வருகிறது.

முஸ்லிம்கள் ஊர் என்றால் ஒரு ஜமாஅத் என்றிருக்கும், அந்த ஜமாஅத்திற்கு தலைவர் என்று ஒருவர் இருப்பார், தேர்தல் என்று வந்து விட்டால் ஜமாஅத் தலைவர் யாருக்கு ஓட்டுப் போடச் சொல்கிறாரோ அவருக்கே ஊர் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். இந்த ஜமாஅத் தலைவரை கவனித்து விட்டால் மொத்த ஓட்டுக்களையும் பெற்று விடலாம் என்று தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் ஜமாஅத் தலைவரை போட்டி போட்டுக் கொண்டு கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஜமாஅத் தலைவரின் வீட்டில் பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டும்.

ஊர் ஜமாஅத் தலைவர் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவரும் நடந்து கொண்டார்.

கும்பகோணத்தில் கூடிய முஸ்லிம்களை எல்லாம் பல கோடிகளுக்கு ஜெயலலிதாவிடம் விற்று விட்டார் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர் பிஜே.

இப்பொழுது நாம் சொல்லக்கூடிய விஷயங்களை விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள். நாம் சொல்வது நியாயமானது தான் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

2000 ல் மதுரையில் தவ்ஹீது மாநாடு நடத்தப்பட்ட போது, யாரும் யாரிடமும் விலை பேசுவார்கள் என்ற அச்சம் இருந்ததில்லை, துணிந்து மக்கள் தவ்ஹீது மாநாடுகளில் கலந்து கொண்டார்கள். இதற்கு முந்தைய தவ்ஹீது மாநாடுகளின் நிலையும் இது தான்.

ஆனால் இப்பொழுதெல்லாம் தவ்ஹீது மாநாடுகளுக்கு செல்வதற்கே பெரும் அச்சமாக இருக்கிறது. ஏனென்றால்,

மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த நேரத்தில் தவ்ஹீது மாநாடு என்றால் பிஜேவையும் அவருடன் கூட இருப்பவர்களையும் நம்ப முடியவில்லை.

தவ்ஹீது மாநாடு என்று கூறி கூட்டத்தைக் கூட்டிக் காட்டி மீண்டும் அரசியல்வாதிகளிடம் முன்பை விட கூடுதலாக பணம் பெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எனவே மே 10,11 ல் நடக்கக்கூடிய தவ்ஹீது மாநாட்டிற்கு செல்வதா, இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், ஒரு முஃமின் ஒரே பொந்தில் இரண்டு முறை கொட்டுப்பட மாட்டான் என்பது நபிமொழி. ஏற்கனவே கும்பகோணத்தில் கொட்டுப்பட்ட நீங்கள் இரண்டாம் முறையும் கொட்டுப்பட வேண்டுமா? சிந்தியுங்கள்.

வஸ்ஸலாம்

இப்னு ஃபாத்திமா
16.02.2008

0 Comments:

Post a Comment

<< Home