அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு
அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு!
சாத்தியமாகிறது டெல்லி பிரகடனம்!
அகில இந்திய அளவில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஆவண செய்யப்படும் என்றும் சச்சார் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் மாநில சிறுபான்மை ஆணையங்களின் வருடாந்திரக் கூட்டத்தில் உரையாற்றும்போது மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார்.
எமது அரசு சிறுபான்மை சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சச்சார் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதோடு, பிரதமரின் 15 அம்ச திட்டத்தையும் நிறைவேற்றுவோம். அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் சிவராஜ்பாட்டில் தெரிவித்தார்.
டெல்லியில் தமுமுக நடத்திய பேரணியின் வெற்றியாகவே கருதப்படுகிறது. முஸ்லிம்கள் சுய வேலை வாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர் ஆள் பற்றாக்குறையில் சிறுபான்மையின ருக்கான நலத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
சிறுபான்மையினருக்காக எத்தனையோ திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் அவையனைத்தும் சிறுபான்மை மக்களை சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியே என இந்தக் கூட்டத்தில் பேசிய தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் சஃபி குறைஷி குறிப்பிட்டார்.
நன்றி: தமுமுகவின் அதிகாரபூர்வ இணையதளம்
0 Comments:
Post a Comment
<< Home