Saturday, January 26, 2008

பிஜே - வரலாற்றில் செய்த எடிட்டிங் வேலை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மோடியின் தமிழக வருகையை எதிர்த்து A.F.F. தலைவர்கள்.

அல்லாஹ்வின் பெரும் உதவியினால் தமிழக முஸ்லிம்களின் 50 ஆண்டுகால இடஒதுக்கீட்டுக் கனவு சிறப்புக்குரிய 2007 ரமளான் மாத துவக்கத்தில் நிறைவேறியது. மனிதனை இறைவனின் அருளுக்குரியவனாக ஆக்க பயிற்சி அளிக்கும் அந்த மாதத்தை அடைந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த தமிழக மக்கள், இடஒதுக்கீட்டை பெற்றுவிட்டோம் என்ற மற்றொரு மகிழ்ச்சியையும் ஒருசேர பெற்றனர்.

இடஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்பட்டும் கூட, அதன் விபரீதங்களை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம்களும் முன்பு இருந்தார்கள்.

முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் இடஒதுக்கீடு அவசியம் என்பதை உணர்ந்து, அந்த ஒற்றைக் கோரிக்கையை முன் வைத்தே தமுமுக உதயமானது.
பூவா தலையா போட்டுப் பார்த்து தமிழகத்து அரசியல் கட்சிகளுக்கு தங்களது வாக்குகளை போட்டு வந்த முஸ்லிம்கள், இடஒதுக்கீடு தந்தால் அல்லது தருவதாக சொல்லும் கட்சிகளுக்கு தான் ஒட்டுப் போடுவோம் என்று தமுமுகவின் வருகைக்குப் பிறகு சொல்ல ஆரம்பித்தார்கள்.

தமுமுக உதயமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சாத்தியமானது.

அந்த இடஒதுக்கீடு திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டு, அதைத் தொடர்ந்து திமுகவிற்கு கொடுத்த அழுத்தங்களின் காரணமாக இடஒதுக்கீட்டை பெற்று விட்டோம்.

தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவேன் என்று வாக்களித்து விட்டு, முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை மீறிய, நயவஞ்சகி ஜெயலலிதா அவரது ஆட்சிக் காலம் முடியும் வரை இடஒதுக்கீட்டுக்காக ஒரு துரும்பைக் கூட நகர்த்த வில்லை.

தொல். திருமாவளவன் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக சீரணி அரங்கில் சொன்னீர்களே அதை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்? என்று ஜெயலலிதாவிடம் கேட்ட போது, நான் அப்படி ஏதும் வாக்குறுதி அளிக்க வில்லை என்று கூறினார்.

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தந்த போது, அந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதற்குப் பிறகும் இவர் இடஒதுக்கீடு தருவார் என்று எந்த கூமுட்டையாவது நம்புவானா?

அவரது இந்த திமிரான விமர்சனங்களை எதிர்த்து தமுமுகவினர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகை செய்யும் போராட்டத்தை துணிந்து செய்தார்கள்.

அதனாலேயே அதை அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் தமுமுக, திமுக கூட்டணியை ஆதரித்து 40க்கு 40 இடங்களிலும் வெற்றிக் கொடி நாட்டியது. தமிழக வரலாற்றில் இப்படிப்பட்ட ஸ்வீப் என்றைக்குமே நடந்ததில்லை. அதற்கு தமுமுக எடுத்த தேர்தல் நிலைபாடும், முஸ்லிம்களின் ஓட்டுக்களும் மிக முக்கிய காரணங்களாகும்.

இவ்வளவு நடந்த பிறகும், பாசிச விஷக்குறுதி உடம்பெங்கும் ஓவராக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவை ஆதரிப்பதங்கு எந்த முஸ்லிமுக்கு துணிச்சல் வரும்.

ஆனால் தமிழகத்தில் ஒருவர் துணிந்தார். அதற்கு ஜெயலலிதா தந்த பெட்டிகள் தான் முக்கிய காரணம் என்பதை பத்திரிக்கைகளும் சொன்னது, அதைவிட அரசு அலுவலர்களும் பிஜே பெட்டி வாங்கியதை உறுதி செய்தார்கள். அடுத்தடுத்து அவர் செய்த செயல்களும் அவர் ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கினார் என்பதை உறுதி செய்தன.

பிஜே என்ன ஜெயலலிதாவிடம் வேலை(?) செய்து விட்டு சம்பளமா வாங்கினார்? இவ்வளவு ரூபாயை இந்த மாத சம்பளமாக பெற்றுக் கொண்டேன் என்று எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, ஆதாரம் கேட்பவர்களிடம் காட்டுவதற்கு!

செய்த வேலை திருட்டு வேலை, ஃபிராடு வேலை, முஸ்லிம் சமுதாயத்தை பாப்பாத்தியிடம் லஞ்சத்திற்காக அடகு வைத்த வேலை. பாப்பாத்தி ஜெயலலிதா கடந்த ஆட்சியில் டாஸ்மார்க் வியாபாரத்தில் பெற்றுக் கொண்ட லஞ்சப்பணத்திற்கு, கணக்கில் வராத கறுப்புப்பணத்திற்கு ஜெயலலிதாவிடம் தான் ஆதாரம் இருக்குமா என்ன!? அல்லது அந்த கறுப்புப் பணத்தை பெற்றுக் கொண்ட பிஜேயிடம் தான் ஆதாரம் இருக்குமா?

அப்படியே ஆதாரங்கள் இருந்தாலும் எப்படி அதன் தடயங்களை மறைப்பது என்பதில் தான் பிஜே குறியாக இருந்திருப்பார்.

லஞ்சமாக ஜெயலலிதாவிடம் பெற்ற பணத்திற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்ட முதல் ஆள் பிஜேவாகத்தான் இருக்க முடியும். அதாவது லஞ்சத்திற்கு ஆதாரம் கேட்ட ஒரே ஆள் பிஜே தான்.

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பதற்கு அவரது முட்டாள் குஞ்சுகளால் தான் முடியும்.

அவர் ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கினார். அதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தந்தார்.

அதற்காக மக்களிடம் பொய்யான காரணத்தைக் கூறி எல்லோரையும் முட்டாள்களாக ஆக்க முயற்சித்தார்.

ஜெயலலிதா ஆணையம் போட்டு விட்டார், அதனால் தான் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று பொய் கூறினார். அந்த ஆணையம் கூட, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு வெளியிடப்பட்டதால் செல்லுமா? செல்லாதா? என்று இன்று வரை சர்ச்சையில் இருந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா போட்ட ஆணையம் புதியதாக அமைக்கப்பட்ட ஆணையம் அல்ல. ஏற்கனவே இருந்த ஆணையம் காலாவதியானதினால் மீண்டும் புதுப்பித்தார் என்பது தான் உண்மை. இதற்காகவெல்லாம் ஓட்டுப் போட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

தமுமுகவை விட்டு பிரிந்து செல்வதற்காக, தமுமுக தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுகிறது, என்று எப்படி ஒரு பொய்யை சொன்னாரோ அது போன்றது தான் மேலே குறிப்பிட்ட பொய்யுமாகும். தமுமுகவிலிருந்து பிரிந்து செல்வதற்காகவும் ஜெயலலிதாவிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டார் என்பது பத்திரிக்கைச் செய்தி.

நாம் மேலே குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு அவரது இப்போதைய விளக்கத்தை சற்று உன்னிப்பாக கவனிப்போம்.
சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்திற்கு நரபலி புகழ் நரேந்திர மோடியை விருந்துண்ண அழைத்தார் ஜெயலலிதா. அந்த பாசிச ஜெயலலிதாவின் பெட்டியை வாங்கிக் கொண்டு தமுமுகவிலிருந்து கால்கள் பிடரியில் பட ஓட்டமெடுத்த பிஜே 'விலக்கினார்கள், விலகினார்' என்று தமிழகத்து மக்களை குழப்பி நாடகமாடி முடித்தார். சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் பெட்டியை வாங்கிக் கொண்டு அவரை ஆதரித்த பிஜே, 'தமிழக முஸ்லிம்களுக்கு பிஜே செய்த துரோகத்திற்கு பதில் சொல்ல வேண்டும்' என்று சொன்னால், அறிவுப்பூர்வமாக பதில் சொல்கிறேன் என்ற பெயரில் மழுப்பலை பதிலாக்கி தப்பிக்க முயற்சிக்கிறார்.

மனிதர்களின் மறதியை மூலதனமாக்கி உண்மையில் நடந்த சம்பவங்களில் அவருக்கு சாதகமானவைகளை வைத்துக் கொண்டும், அவருக்கு பாதகமானவைகளை நீக்கியும் எடிட்டிங் செய்வதில் கைதேர்ந்தவர் பிஜே என்பது இப்பொழுது நிரூபணமாகி இருக்கிறது.

மோடியின் ஆட்சியை கலைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது கருணாநிதி மோடியை ஆதரித்தாராம், அந்த கருணாநிதியை தமுமுக ஆதரித்ததாம், அது தான் இப்பொழுது பிரச்சனையாம்.

மோடி வெற்றியை கொண்டாடுவதற்காக தனி விமானத்தில் குஜராத் சென்று மலர்செண்டு கொடுத்து விட்டு வந்தவரும், இந்த முறை மோடி தேர்தலில் வென்ற போது விருந்துண்ண தமிழகத்திற்கே அழைத்த பாசிச பாப்பாத்தி ஜெயலலிதாவை கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆதரித்த பாவத்திற்காக தமிழக முஸ்லிம்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று சொன்னால், தீர்மானம் நிறைவேற்றப்படும் போது மோடியை ஆதரித்த கருணாநிதியுடன் இருப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் பிஜேக்கு இல்லையாம். எவ்வளவு திமிர் இவருக்கு இருக்கிறது என்பதை கவனியுங்கள்.

இந்த விஷயத்தை இன்னும் விளக்கமாக சொன்னால் முழுமையான தெளிவு கிடைக்கும். நம்மை பொறுத்த வரை கருணாநிதி மோடிக்கு ஆதரவாக எடுத்த நிலைபாட்டை ஆதரிக்க வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மோடியின் ஆட்சியை கலைப்பதற்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்தது. அதுவும் பிஜேபியிடம் பெரும்பான்மை பலம் இருந்தது.

இடதுசாரிகளான கம்யூனிஸ்ட்டுகள் பிஜேபிக்கு எதிராக அப்போது இருந்ததால், மோடியின் ஆட்சியை கலைக்கும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்கள்.

நிச்சயமாக பெரும்பான்மை பலம் இல்லாத கம்யூனிஸ்ட்டுகள் போன்ற சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பெரும்பான்மை பலம் கொண்ட பிஜேபியை வெல்ல முடியாது. தீர்மானம் வெற்றி அடையாது. அதனால் மோடியின் ஆட்சியை கவிழ்க்க எந்த முகாந்திரமும் இருக்கவில்லை.

அப்படி இருக்கும் போது, அந்த நேரத்தில் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்த திமுக எப்படி பிஜேபிக்கு எதிராக, மோடிக்கு எதிராக வாக்களிக்கும்?

மிகக்குறைவான எம்பிக்களை அப்போது வைத்திருந்த திமுக, பிஜேபிக்கு எதிராக வாக்களித்தாலும் மோடியின் ஆட்சியை கவிழ்க்க இயலாது என்றிருக்கும் போது, தேவையற்ற முயற்சியை திமுக எப்படி எடுக்கும்? அப்படி எடுத்திருந்தால் பிஜேபியுடன் இருக்கும் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் அது அரசு அமைக்க ஏதுவாக இருக்குமோ அந்த கட்சிகளுக்குதான் ஓட்டுப் போட வேண்டும், இல்லாவிட்டால் அத்தனை ஒட்டுக்களும் பயனற்றதாக ஆகிவிடும் என்ற தத்துவத்தை நமக்கு போதித்தவர் பிஜே என்பதை நாம் இங்கே நினைவுபடுத்துகிறோம். அந்த தத்துவத்தின் படி கருணாநிதியை குறை சொல்ல இவருக்கு அருகதை இல்லை.

திமுக பிஜேபிக்கு எதிராக வாக்களித்திருந்தால் மோடியின் ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று பிஜே சொல்வது சுத்தப் பொய்.

திமுக அப்போது பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை நியாயப்படுத்துவது எமது நோக்கமல்ல, திமுக மட்டுமல்ல எந்த அரசியல் கட்சி அந்த இடத்தில் இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பதை இங்கே நினைவு படுத்துகிறோம்.


திமுக, பிஜேபியின் கூட்டணியில் இருக்கும் போது கூட்டணியை சிதைக்கும் விதமாக திமுக மட்டுமல்ல வேறு எந்தக் கட்சியும் நடந்து கொள்ளாது என்பது அறிவிலிக்கு கூட தெரியும். ஆனால், ஆட்சியில் இருக்கும் போது தனி விமானத்தில் சென்று மோடிக்கு மலர் கொத்து கொடுத்து மகிழ்ந்த ஜெயலலிதாவின் சிறுபான்மையினருக்கு எதிரான பார்ப்பண புத்தியை என்னவென்பது, இப்பொழுது ஆட்சியில் இல்லாமல் இருக்கும் போது தனிப்பட்ட, பிரத்தியேக விருந்துக்கு மோடியை ஜெயலலிதா அழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. சிந்தித்துப் பார்த்தால் யாருக்கு சிறுபான்மையினருக்கு எதிரான பார்ப்பணிய புத்தி இருக்கிறது? என்பது விளங்கும்.

இதிலிருந்து நமக்கு விளங்குவது என்னவென்றால், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவிடம் மேலோங்கி இருப்பது சிறுபான்மையினருக்கு எதிரான பார்ப்பணிய வெறி மட்டுமே. இவ்வளவு தெள்ளத் தெளிவாக தெரிந்திருந்தாலும் அவருக்கு சப்பைக்கட்டு கட்டும் பிஜேவை தெரிந்து கொள்ளுங்கள்.

தான் செய்த அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காக எந்த விதத்தில் மறைத்தும் திரித்தும் சொன்னால் விசிலடிச்சான் ததஜவின் குஞ்சுகள் குவ்வா குவ்வா என்று கத்திக் கொண்டு திரியுமோ அதற்காகவே டிவியிலும், களவாடிய பத்திரிக்கையிலும் வெட்கமில்லாமல் சொல்லித் திரிகிறார்.

சுயமாக சிந்திப்பவர்கள் ஒருபோதும் பிஜேயுடனும், தமுமுக என்ற ஒரு சமுதாய பேரியக்கம் இருக்கும் போது, முஸ்லிம்களை பிரித்து, போட்டி தமுமுக என்று ஒன்றை ஆரம்பித்து தில்லுமுல்லுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அவரது இயக்கத்திலும் இருக்க மாட்டார்கள்.

அவரது கட்சியில் இருக்கும் சுயநினைவு அற்றவர்களுக்காகவும் அவருக்காகவும் இறைவன் நேர்வழிகாட்ட பிரார்த்திப்போமாக.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா

0 Comments:

Post a Comment

<< Home