Friday, February 01, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 24

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வஅலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன கோவமா இருக்குறாப்ல தெரியுது.

என்ன செய்யுறது அஹமது. நம்ம தலைவர நம்பி வந்துட்டு, இப்போ அவரு நடத்துற கூத்த ஏத்துக்கவும் முடியாம, எதுக்கவும் முடியாம தவிக்கிற தவிப்புல நம்ம மேலயே கோவம் தான் வருது. ஆனாலும் என்ன செய்ய முடியும் சொல்லுங்க.

சரி ஒமர் பாய். நீங்களே இப்புடி ஆயிட்டா. நாங்கள்ல்லாம் என்ன பண்றது. சரி விஷயத்த சொல்லுங்க.

எல்லாம் இந்த மோடி விவகாரம் தான். மோடி வருகையை எதுத்து நம்ம கட்சி நடத்துன ஆர்ப்பாட்டம் எதுலயும் நம்மாளு பிஜே கலந்துக்கலியா. இத பத்தி நம்மாளுங்க பேச ஆரம்பிச்ச உடன அவுங்க கவனத்த திச திருப்புறதுக்காக தமுமுக அரசாங்கத்துக்கு பயந்துகிட்டு தனியா போராட்டம் நடத்தாம, கூட்டணி அமச்சு போராடுனாங்கன்னு எளுதி யிருக்காரு.

தமுமுக - ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணின்னு ஒரு அமைப்ப ஏற்படுத்தி தான போராட்டம் நடத்துனாங்க.

அதுல என்ன தப்பு அஹமது. ஒங்களுக்கு ஞாபகமில்லையா. 2004 ல ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிச்சாங்களே. அதுக்கு இந்த ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவிச்சாங்களே. அப்ப தமுமுக அத எதுத்து ஜெயலலிதா வீட்ட முற்றுகை போராட்டம் அறிவிச்சு நடத்தலியா.

ஆமா. நடத்துனாங்க. அத பாராட்டி எல்லா பத்திரிக்கையும் தான் எளுதுச்சு. நம்ம பத்திரிக்கைல தான் ஒண்ணுமே எளுதல.

எப்படி எளுத முடியும் அஹமது. அம்மாகிட்ட ஒப்பந்தமும் பண்ணிகிட்டு, அம்மாவ எதுத்து நடத்துன போராட்டத்த பாராட்டி எப்புடி எளுத முடியும். அதுவும் தமுமுக நடத்துன போராட்டம். அதப் போயி பாராட்டி எளுத முடியுமா.

சரி வுடுங்க ஒமர் பாய். அது முடிஞ்சு 3 வருஷத்துக்கு மேல ஆச்சு. அதுக்காகவா இப்போ கோவமா இருக்கீங்க.

இல்ல அஹமது. தமுமுக தனியா நடத்துன அந்த போராட்டத்த பாராட்டி எளுத அப்பவும் இவரு விரும்பல. இப்ப கூட்டணி சார்பா நடத்துன போராட்டத்த பத்தி எளுதவும் இவரு விரும்பல. ஆனா அதயே குறையாவும் சொல்லிக்கிட்டு திரியுறாரே அத நெனச்சாத்தான் கோவமா வருது.

விடுங்க ஒமர் பாய். ஆமா என்னவோ தமுமுக அரசாங்கத்துக்கு பயந்துகிட்டுத்தான் மத்தவங்களோட கூட்டு சேர்ந்து போராடுனதா சொல்றாரே நெசமாவா.

எப்புடி அஹமது. அரசாங்கத்துக்கு பயந்தா, இவரு எதுலயும் கலந்துக்காம ஓடி ஒளிஞ்சுகிட்டா மாதிரி அவுங்க இருந்திருக்கணும். ஆனா தமுமுக தலைவரும் சரி, பொதுச் செயலாளரும் சரி முற்றுகை போராட்டத்துல முன்னாலயுல நின்னாங்க.

ஆமா ஒமர் பாய். அதுமட்டுமில்ல. கூட்டணி அமைச்சாலும் அந்த AFF வையும் தமுமுக தானே வழி நடத்துனிச்சு. அதுமாத்திரமல்லாம அதுக்குனு ஒரு வழிகாட்டு குழுவ தமுமுக தலைவர் தலைமைல தான ஏற்படுத்துனாங்க. அப்புறம் எப்படி தமுமுக அரசாங்கத்துக்கு பயந்துகிட்டு தனியா நடத்தாம கூட்டு வச்சு நடத்துனாங்கன்னு சொல்ல முடியும்.

சரியாச் சொன்னீங்க அஹமது. இத தான் பாக்குறவன்லாம் கேக்குறான். இது மட்டுமில்லாம மோடி செஞ்சது என்ன ஜெயலலிதா நடந்துகிட்டா மாதிரி வெறுமனே முஸ்லிம்களுக்கு மட்டுமா எதிரா நடந்துகிட்டாரு. முஸ்லிம், கிருத்துவ, தலித்னு அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரா நடக்கலியா. அப்போ அவுங்களயும் சேர்த்துகிட்டு எதிர்ப்ப வலிமையா காட்டுறது எப்புடி தப்பாகும்.
இது என்ன நம்ம தலைவருக்கு மட்டும் தெரியாமயா இருக்கப் போவுது. அனாலும் ஜெயாவுக்கு பயந்துகிட்டு இவரு பதுங்குனதப் பத்தி யாராவது கேட்டு வைச்சா என்ன செய்யுறதுங்குற முன்னெச்சரிக்க நடவடிக்கையா இத கொளுத்திப் போட்டிருக்காரு. இனிமே நம்மாளுங்க யாரும் இவரு ஏன் போராட்டத்துல கலந்துக்கலங்குறதப் பத்தி பேச மாட்டானுங்க. தமுமுக பயந்து ஓடிடுச்சுன்னு தான் திரும்ப தீரும்ப பேசுவானுங்க.

ஆனா ஒமர் பாய். நீங்க சொல்ற மாதிரி நடக்கனும்னு தான் நம்மாளு இப்புடி செஞ்சிருப்பாரு.

அது மட்டுமில்ல அஹமது. இதே மாதிரி முன்னால, மத மாற்ற சட்டம்னு ஒண்ண ஜெயலலிதா கொண்டு வந்தாங்களே அப்பவும் தமுமுக இது மாதிரி மற்ற சமூக மக்களோட இணைஞ்சு தான் போராடுனாங்க. அப்ப இவரு தமுமுகவுல தான் இருந்தாரு. அப்ப ஜெயலலிதாவுக்கு பயந்துகிட்டா கிருத்தவங்களோட சேர்ந்து போராடுனோம். இரண்டு சமூகமும் பாதிக்கப்பட்டிருக்குங்குற அடிப்படைல தான சோந்து போராடுனோம். அத மாதிரி தான் இப்பவும். மோடி நடந்துகிட்டது முழு மனிதகுலத்துக்குமே எதிரானதுங்குற எண்ணம் யாருக்குலாம் இருக்கோ அவுங்க ஒண்ணா சேர்ந்து போராடுறது எப்புடி தப்பாகும்.

சரி. சரி. அதுக்காக கோவப்படாதீங்க. மத்தவங்களோட ஒத்துமையா இருக்குறது தான் நம்மாளுக்குப் புடிக்காதே. அதுனால இப்புடி சொல்லியிருப்பாரு விடுங்க.

இதோட விடலியே நம்மாளு. தமுமுகவுக்கு வாரியம் கெடச்சதுனால தான் இப்புடி பதுங்குறாங்கன்னு வேற சொல்லியிருக்காரு.

தமாஷ் பண்ணாதீங்க ஒமர் பாய். பதுங்குனது நம்மாளு தான். அவுங்க களத்துல தான நின்னாங்க.

பதுங்குறதுன்னா களத்துக்கு வராம பதுங்குறதுன்னு அர்த்தமில்லியாம். மத்தவங்களோட சேர்ந்து நின்னா பாதுகாப்பா இருக்குன்னு நெனெச்சு எல்லோரோடையும் கூட்டா நிக்கிறதாம். ஆனா ததஜ தலைமை தைரியமானவங்களாம், அதுனால தனியா போராட்டம் நடத்துனாங்களாம்.

ஒமர் பாய். இப்போ நாம யாரோட ஆதரவுமில்லாம தனியாத்தான் நிக்கிறோம் எல்லோரும் நம்மள விட்டு வெலகிட்டாங்கங்கிறத இப்புடி சூசகமா சொல்லியிருப்பாரோ.

இருக்கலாம் அஹமது. 2005 எலக்ஷனுல ஜெயலலிதாவ பாக்க கூட்டிக்கிட்டு போனோமே ஒரு கூட்டம். தனித்தனி ஆளா கூப்புட்டு சேர்த்து பெறகு அவுங்க இருக்குற அமைப்பெல்லாம் நம்மளோட சேர்ந்து வந்ததா பில்ட் அப் பண்ணுனப்பவே நம்ம சாயம் வெளுத்துப் போச்சு. இப்போ நாம கூப்டாலும் எவனும் வரமாட்டான். நம்மள எவனும் கூப்புடவும் மாட்டான். அம்மா மட்டும் தான் கதி.

என்ன ஒமர் பாய். இப்புடி சொல்லிட்டீங்க. அந்தம்மா பிஜேபி கூட கூட்டணி வப்பாங்க போல இருக்கே. அப்பவுமா நாம அம்மாவே கதின்னு நிக்க முடியும்.

வேற யாரு நம்மள சேத்துக்குவாங்க அஹமது. எது எப்புடி இருந்தாலும் அம்மாவே சரணம்னு கெடக்குறோம்கிறத போயஸ் தோட்டத்துக்கு தெரியப்படுத்துறதுக்காக தானே, மோடிய சாப்புட கூப்புட்ட ஜெயலலிதா வீட்ட முற்றுகை இடுவோம்னு சொல்லாம, மோடிய தமிழ்நாட்டுக்குள்ள நுழைய விட்ட கருணாநிதின்னு ஆர்ப்பாட்டத்தப்ப முதலமைச்சர எதுத்து கோஷம் போட்டோம்.

என்ன இருந்தாலும் கருணாநிதி நெனச்சுருந்தா, லாலு செங்சா மாதிரி மோடிய அரெஸ்ட் பண்ணி இருக்கலாம்ல.

என்ன அஹமது வெ வரங்கெட்ட தனமா பேசுறீங்க. அத்வானி ஒரு கூட்டத்த திரட்டிக்கிட்டு ஊர்வலம் போறதா வந்ததுனால சட்டம் ஒழுங்க காரணம் காட்டி அத்வானியோட சேர்ந்து கூட வந்த அத்தன பேரயும் கூண்டோட அரஸ்ட் பண்ணுனாரு நம்ம லாலு. ஆனா மோடியோட கத அப்புடி இல்லியே. இங்க இருக்குற சொவும், ஜெயலலிதாவும் கூப்டதுனால இங்க வர்ற ஒருத்தர எந்த அடிப்படைல அரெஸ்ட் பண்ணவோ, திருப்பி அனுப்பவோ முடியும்.

சரி நீங்க சொல்றது சரியாத்தான் இருக்கு. ஆனாலும் அமெரிக்காவே தட பண்ணின மோடிய தமிழகத்துலயும் தட பண்ணியிருக்கனும் தானே.

எப்புடி அஹமது முடியும். தமிழ்நாடு என்ன தனி நாடா. இந்தியாவுல இருக்குற ஒரு மாநிலம். அதுக்கு இந்தியாவுல வேற ஒரு மாநிலத்துக்கு முதல்வரா இருக்குற ஒருத்தன் வர்றத எப்புடி தடுக்க முடியும்.

அட ஆமாங்க. இத புரிஞ்சுக்காம போயிட்டேனே.

நீங்க மட்டுமில்ல அஹமது. நம்மாளுங்களுக்கு நம்ம தலைவரு எத எப்புடி சொல்றாரோ அப்புடிதான் வெளங்கும். அது உண்மைக்க மாத்தமா இருந்தாலும் அப்புடித்தான் வெளங்கிக்குவாங்க. அந்த தைரியத்துல தான் நம்மாளு வுட்டு அடிச்சுக்கிட்டு இருக்காரு.

கரெக்ட்டுங்க ஒமர்பாய். உண்மையிலேயே இவுங்க கருணாநிதிய கண்டிச்சு பேசுனதுக்கு பதிலா மோடிய கூப்பிட்ட சோவையோ, ஜெயலலிதாவயோ எதுத்து ஆர்ப்பாட்டமோ முற்றுக்கையோ நடத்தி இருந்தால் கொஞ்சமாவது நமக்கு மரியாதையாகவாவது இருந்திருக்கும்.

திரும்ப திரும்ப இந்த நெனப்பு வரக்கூடாதுங்குறதுக்காகத் தான், முன்னாலயுலாம் மோடிய தனியா எதுத்த தமுமுக இப்போ மட்டும் ஏன் கூட்டணி வச்சுக்கிச்சுன்னு வேற கௌப்பி வுட்டுருக்காரு. நாம இப்போ பேசிக்கிட்டா மாதிரி மோடிக்கு எதிரா தமுமுக போரட்டம் நடத்துனப்போ மோடி குஜராத்ல தான் இருந்தாரு. ஆனா இப்போ நம்ம ஏரியாவுக்கு வரும் போது நம்ம எதிர்ப்பு இன்னும் வலிமையா இருக்கணும்னா, மோடிக்கு எதிரான எல்லா சக்திகளையும் ஒரு முனைப்படுத்தி மோடி ஒரு மனித குல விரோதின்னு எல்லோருக்கும் புரிய வைக்கணுமா இல்லியா அப்புடீன்னு தமுமுக காரங்க சொல்றது நியாயமா படுது.

இந்த போராட்டத்துல கலந்துகிட்டவங்கன்னு மக்கள் உரிமைல செய்தி போடுறப்ப, ஹைதர் அலி பேரப்போட்டு தமுமுக பொதுச் செயலாளர்ன்னோ, வக்ப் வாரிய தலைவர்ன்னோ போடாம, சிறுபான்மையினர் அமைப்பு தலைவர்னு போட்டிருக்காமே. உண்மையா?

உண்மை தான். இதுல என்ன கொற இருக்கு அஹமது. அவரு சிறுபான்மையினர் அமைப்பு தலைவரா இருக்குறதுனால தான அப்புடி போட்டிருக்காங்க. இல்லாத பதவிய போடலையே. தவிர தமுமுக சார்பா ஏ.எப்.எப் முன்னணியில தமுமுக தலைவர் கலந்துகிட்டு இருக்கும் போது, ஹைதர் ஏன் தமுமுக சார்பா கலந்துக்கணும். அல்லது சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பா ஏன் கலந்துக்கக் கூடாது. இதுக்கும் வாரிய தலைவர் பதவிக்கும் ஏன் முடிச்சுப் போடணும்னு யோசிச்சாலே நம்மாளு இந்த வாரியத்துனால எப்புடி வெந்து நொந்து நூடுல்ஸா போயிருக்காருன்னு புரிஞ்சுடும்.

இன்னொன்னுங்க ஒமர் பாய். அதாவது ஏ.எப்.எப் கூட்டணி பேர்ல நடத்துன முற்றுகை போராட்டத்துல கலந்துகிட்ட மொத்த பேரையும் அதுல பங்கு பெற்ற அமைப்புகள் எண்ணிக்கைய வச்சு வகுத்துப் பாத்தா தமுமுக ஆதரவாளர்கள்னு 100 பேரு கூடத் தோறதுன்னு வேற எளுதியிருக்காரே.

சரியாப்போச்சு போங்க. நம்மாளு ஜெயலலிதா கூட சேர்ந்த பெறகு எதார்த்தத்தை புரிஞ்சுகவே முடியாதவரா ஆகிப் போயிட்டாரு போல. அப்போ என்னடான்னா கும்பகோண கூட்டத்தப்பத்தி ஆளாளுக்கு 10இல இருந்து 18 இலட்சம் வரைக்கும் கதையளந்தாங்களே. அப்ப அத நியாயப்படுத்த கும்பகோணம் சிட்டி மேப்பை எடுத்து வச்சுகிட்டு, ஒரு ஆள் நின்னா இத்துன சதுர அடி, மொத்த பரப்பளவு இத்துன சதுர அடி ஆக மொத்தம் அங்கு நின்னது நிச்சயமா 10க்கு மேலன்னு ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போட்டு காம்பிச்சாரு. அதையே ஜெயலலிதா முன்னால, கைய கவட்டுக்குள்ள வச்சுக்கிட்டு ஒரு இலட்சம் பேர் கூடுனாங்கன்னு சுரத்தில்லாம சொன்னது வேற விஷயம். அப்போ பெருக்கிப் பாத்தவரு இப்போ வகுத்துப் பாத்திருக்காரு போல.

சரி சரி எனக்கு புரிஞ்சுடுச்சு. இன்னும் ஒரே ஒரு சந்தேகம். தமுமுக காரங்க நம்மளப் பத்தி அதாவது நம்ம தலைவரப் பத்தி இல்லாததையும், பொல்லாததையும் எளுதுறதுனால தான் நம்மளோட டிவி நிகழ்ச்சிகள்ல அவுங்கலப்பத்தி பேசுனதா ஒரு கேள்வி பதில்ல எளுதி இருக்காரே. நெசமாவா.

அடப்போங்க அஹமது. நம்மாளு தவ்ஹீத சொல்லுவாரு. மக்களுக்கு மார்க்கத்த வெளங்க வைப்பாருன்னு நம்பி நம்மள மாதிரி ஆளுங்க நன்கொடையும், செல முதலாளிங்க விளம்பரமும் தந்தாங்க. ஆனா அதுல முக்காலே மூணு வீசம் நம்மாளு தமுமுகவ திட்டுறதுக்கும், மத்தவங்கள ஏசுறதுக்கும் தான் பயன்படுத்துறாரு. அதுனால இப்பல்லாம் நம்மாளுங்களே நம்ம டிவி நிகழ்ச்சிகள பாக்குறதுமில்ல, அதுக்கு நன்கொட தர்றதுமில்ல. அதுனால தான இப்புடி ஒரு கேள்வி பதில். இத படிச்ச வுடன ஏதோ கொஞ்ச பேராச்சும் இத நம்பி நன்கொட குடுப்பான் பாருங்க. அதுக்காகத்தான்.

உண்மைதான் ஒமர் பாய். நானும் கூட இப்ப நம்ம டிவி நிகழ்ச்சிகள பாக்குறதில்ல. அதுலயும் குறிப்பா நம்ம பாக்கரு வந்து மார்க்கம் பேசுறாரு பாருங்க. அதப் பாத்தாலே நமக்கு டென்ஷன் ஆகிறது. நம்ம வீட்லயும் என்னங்க இவரு மேல பொம்புள விவகாரம்னீங்க. இப்ப இவர வச்சு மார்க்கத்த சொல்றோம்கிறீங்களே. வெக்கமாயில்லயான்னு கேக்குறாங்க. அதான் ஏன் வம்புன்னு நம்ம நிகழ்ச்சிகள போடுறதே இல்ல.

சரி சரி அஹமது. ரொம்ப நேரமாயிடுச்சு. பெறகு சந்திப்போம். வர்றேன்.

வஸ்ஸலாம்
முல்லா 31.01.2008

(குறிப்பு: ஒமரின் கூற்று சாய்ந்த எழுத்திலும், அஹ்மதின் கூற்று கொட்டை எழுத்திலும் படிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கிறது.)

0 Comments:

Post a Comment

<< Home