Monday, January 28, 2008

JJ வின் சேலைக்குப் பின்னால் PJ ??

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

'கையில காசு வாயிலே தோச' என்ற மகத்தான (தவ்ஹீது?!) கொள்கையை பிரகடனப்படுத்தி 2005இல் அரசியல் அரங்கினில் திருவாளர் PJ களம் புகுந்த போதே அவரது களவாணித்தனம் அம்பலத்துக்கு வந்து விட்டது.

என்றாலும், வரலாறு அறியாத சில விவரங்கெட்டதுகள் சீடர்களாக கிடைத்து விட்ட சந்தோசஷத்தில் இந்த ஆன்மீக குரு ஆனந்த பரவசத்தில் உள்ளார் போலும். அதனால் தான் இன்றளவும், தான் போயஸ் தோட்டத்தில் புதையுண்டு கிடப்பதை மறைக்க சம்பந்தமில்லாமல் பேசி தமது சீடர்களை மேலும் முட்டாள்களாக்கிக் கொண்டுள்ளார்.

போயஸ் தோட்டத்து பொன்மகளிடம் சமுதாயத்தை அடகு வைத்து பெற்ற கோடிகளைப் பற்றி யாராவது கோடிட்டு காட்டினால், உடனே தமது சீடர்களிடம் ஆதாரமில்லாமல் அவதூறு பேசுகிறார்கள் என்று தட்டிக்கழித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமுதாயத்தை கூறுபோட JJ விடம் PJ பெற்றது இலஞ்சம்/கையூட்டு. இலஞ்சத்தையும், கையூட்டையும் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்துப் போட்டா ஒருவர் வாங்குவார் என்ற அடிப்படை கேள்வி ஞானம் கூட ததஜ அடிவருடிகள் எவருக்கும் இல்லாத காரணத்தால் அவரின் வாதத்தை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். அடிப்படை அறிவு சிறிதளவேனும் இருந்திருந்தால், பாக்கரின் பஸ் லீலைகளுக்காக ஒரு அமர்வு ஏற்படுத்தி அல்லாஹ்வின் மீது (பொய்யாக) சத்தியம் செய்தவர், இதற்கு ஏன் செய்யவில்லை என இப்பொழுதாவது கேள்வி கேட்டிருப்பார்கள்.

பாவம் அவர்கள் தான் மகுடிக்கு மயங்கும் அப்பாவி ஜந்துக்களாயிற்றே.

ஆனாலும், திருவாளர் PJ, தான் இப்பொழுதும் JJ வின் விசுவாசிதான் என்பதனை பல நிலைகளில் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்.

இஸ்லாமிய இன விரோதி, பார்ப்பனீய பாப்பாத்தி JJ வின் அழைப்பை ஏற்று அவரின் அன்பு அண்ணன் நரபலி நாயகன் மோடி போயஸ் தோட்டம் சென்றார். பாப்பாத்தி JJ வாசலில் வழி மேல் விழி வைத்து காத்திருந்து விருந்துக்கு அழைத்துச் சென்று அரசியல் பேரம் பேசி முடித்துள்ளார்.

இந்த நிலையில் JJ வோடு தான் கொண்டுள்ள UNDERSTANDING வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக PJ வும் ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். 10,12 நாட்களுக்கு முன்பாக அரசை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமாக உரையாற்றிய அண்ணன் (?!) தற்பொழுது மோடிக்கு எதிராக முழக்கமிடுவார் என எதிர்பார்த்து அங்கு கூடிய ததஜ அடிவருடிகள் ஏமாந்து போனார்கள்.

சென்னை ஆர்ப்பாட்டம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெற்ற எந்த ஆர்ப்பாட்டத்திலும் திருவாளர் PJ பங்கு பெறவே இல்லை. ஒருவேளை கமலாயத்தில் நடைபெற்ற மோடி வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பாரோ.

ததஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய PJ வின் பினாமிகள் கூட மோடியை விருந்துக்கு அழைத்த பாப்பாத்தி ஜெயாவை கண்டித்து மறந்தும் ஒரு வார்த்தை பேசவில்லை. மோடியின் அட்டூழியங்களைப் பற்றி பேசுவதை விட, மோடி தமிழகம் வருவதற்கு கருணாநிதி ஏன் அனுமதி வழங்கினார் என்ற ரீதியிலேயே அமைந்திருந்தது.

இதிலிருந்து ததஜ தொண்டர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்ற நிலை மாறி பூகோளமும் தெரியாது என்ற உண்மை விளங்கியது. அத்துடன் JJ விடம் PJ பெட்டி வாங்கியுள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளது. பெட்டி வாங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை JJ வின் விட்டை முற்றுகை இட்டிருப்பார். பணம் பெற்றுக் கொண்டதால் தான் பதுங்கி விட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.

இதற்கு மேல் எவருக்கும் சான்று தேவைப்படாது என எண்ணுகிறோம்.

எதையுமே சம்பந்தமில்லாமல் பேசி சமாளித்தே பழகிப்போன பிஜே, மோடி வருகையை எதிர்ப்பதைக் குறித்து எழுப்பப்பட்ட (செட்அப்) கேள்விகளுக்கும் குழப்படியான பதிலை வழவழ கொழகொழவென குளறி வைத்து அனைவரையும் குழப்பியுள்ளார்.

மோடியின் தமிழக வருகையை எதிர்த்து முதன் முதலில் களமிறங்கியது தமுமுக தான் என அனைவரும் அறிவர். தமுமுகவின் மின்னல் வேக சுறுசுறுப்பான செயல்பாடுகளை கண்டு மிரண்டு போன PJ, நிர்பந்தத்தின் காரணமாகவே களத்தில் மற்றவர்களை இறக்கி விட்டு தான் மட்டும் துயிலுறங்கப் போனார். தான் களத்திலிருந்து போராடாமல் (ஜெயலலிதாவின் சேலைக்குப் பின்னே?!) பதுங்கிக் கொண்டதை நியாயப்படுத்த வழமை போல வாய்சவடால் விட்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் தயவால் WIN TV யோ, தமுமுகவிலிருந்து திருடிச் சென்ற பாத்திரிக்கையோ இல்லையெனில் இவரின் முட்டாள்தனமான வாதங்கள் இவரின் அடிவருடி வட்டத்துக்குள்ளேயே முடங்கி விடும். PUBLIC MEDIA வையும் தனது முட்டாள் சீடர்கள் போல் எண்ணிக் கொண்டு விடுவதால் இவரின் வண்டவாளங்கள் நமது உதவியில்லாமலேயே தண்டவாளத்தில் ஏறிக் கொண்டுள்ளது.

மோடி வருகை குறித்த இவரின் கேள்வி பதிலைப் படித்த நண்பர், ததஜ சகோதரர்களுக்கு வரலாறு தெரியாமலிருப்பதன் காரணம் PJ செய்து வரும் வரலாற்று தில்லுமுல்லுகள் தான் என் குறிப்பிட்டார்.

அதுவும் உண்மை தான். அதனால் தான் தமிழகத்தில் தவ்ஹீது வளர்ந்த வரலாற்றை தான் விரும்புவது போல், தானே அதற்கு முழத் தகுதியானவன் போல் வரலாற்றை திருத்தி எழுதும் யூத, பார்ப்பனர்களைப் போன்ற முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, மோடி வருகை குறித்த இவரது பதிலில் உள்ள உளறல்களைப் பார்ப்போம்.

மோடி என்பவனின் அரக்கத்தனத்தை எதிர்க்க வியூகம் வகுத்த தமுமுக, தமிழகத்திலுள்ள சமூக நீதி ஆர்வலர்களையும், மனித உரிமை போராளிகளையும் ஒருங்கிணைத்து, 'ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி மோடி எதிர்ப்பை வலுவாக்கியது.

ஆனால் சமூக பிரச்சனையில் கூட ஒன்றிணைந்து போக முடியாத ஒற்றுமையின் எதிரி நவீன அபூஜெஹல் பிஜே, AFF ஐ தனது பதிலில் குறை கூறி உள்ளார்.

வரலாற்றை அறியாத தமது சீடர்களுக்கு பதிலளிப்பதால் வரலாற்றில் முதன் முறையாக தமுமுக 6 அமைப்புகளுடன் இணைந்து போராடியுள்ளது. அரசாங்க நெருக்கடியின் காரணமாக தனித்து போராட இயலாத அளவிற்கு வாரியத்தைப் பெற்று வீரியம் இழந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் யாரும் செய்யத் துணியாத செயலான, சினிமாக்காரன் ஒருவனை ஜும்ஆ மேடையில் இவர் ஏற்றி வைத்தாரே அவர், சொடுக்குப் போட்டு ஜும்ஆ மேடையில் சிலம்பாட்டம் (?) போல் சொல்லாட்டம் ஆடினாரே அந்த தொப்பை TR தான் இவருக்கு அடுக்கு மொழி ஆசான் போலும். அதனால் தான் எப்பொழுதும் வாரியம்/வீரியம் என பேசித் திரிகிறார்.

நண்பர் முன்பு குறிப்பிட்டதைப் போல வரலாற்றை திருத்தும் PJ வின் முயற்சியைப் பாருங்கள்.

உண்மையில் தமுமுக அமைத்த AFF இல் தமுமுக தவிர்த்து ஏனைய 12 இயக்கங்கள் இணைந்து உள்ளன. 12 அல்லது 13 என்று எழுதினால், 2005 தேர்தலின் போது, தான் கோனிகா பஷீருக்கு சீட் வாங்குவதற்காக JJ வை சந்தித்த பின் WIN TV க்கு அளித்த பேட்டியில் 12 இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்து (அன்றைய) முதல்வரை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதி கூறியுள்ளது என்று பில்ட் அப் செய்தாரே அது குறித்து எவரும் கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் AFF ஐ குறைத்து எழுதி/பேசி விட்டாரோ என்னமோ.

உண்மையில் அன்று (2005இல்) பிஜேவை நம்பி 12 அமைப்புகளெல்லாம் கூடவில்லை. இதனை சுட்டிக்காட்டிய பின் 12 அமைப்புகளல்ல, 12 பிரமுகர்கள் என சுருதியை குறைத்தார். பின்னர் அதுவுமில்லை என்ற உண்மை வெளியான போது வாயடைத்து மௌனமாகி விட்டார்.

AFF ஐ தமுமுக உருவாக்கியது வரலாற்றில் முதல்முறை என்பதே கூட தவறுதான். சமூக நீதியை நிலைநாட்ட தமுமுக தேவையான சமயங்களில் பிறருடன் இணைந்து இதற்கு முன்பும் களம் கண்டுள்ளது. பாப்பாத்தி ஜெயலலிதா, மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்த பொழுது, அதனை எதிர்த்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டணியை அமைத்ததை மறந்து விட்டாரா அல்லது நமது நண்பர் சுட்டிக்காட்டியது போல் மறைக்க முயற்சித்துள்ளாரா தெரியவில்லை.

அல்லது ஜெயலலிதாவிடம் பணம் பெற்ற அன்றே, அவருக்கு எதிராக சமுதாயம் நடத்திய போராட்டங்களை மறந்து/மன்னித்து விட்டாரோ தெரியவில்லை.

தமுமுக மற்றவர்களுடன் இணைந்து போராடியது அரசாங்க நெருக்கடியினாலாம். அரசுக்கு நெருக்கடி தராமல் இருக்க வேண்டும் என எண்ணியிருந்தால் இவர் நடத்தியது போல் அங்கும் இங்குமாக சிதறி சின்னாபின்னப்பட்டு அதனை அரசு எளிதாக கையாளுவதற்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். மாறாக, பல இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ததன் மூலம் அரசுக்குத்தான் நெருக்கடி தந்திருக்கிறார்களே அல்லாமல் அரசுக்கு சாதகமாக இம்முற்றுகை போராட்டம் நடைபெறவில்லை என்பதை நாடே அறிந்து கொண்டது.

ஜன-14 அன்று அரசும், காவல் துறையும் எந்த அளவுக்கு நெருக்கடிக்குள்ளானார்கள் என்பது சென்னைவாசிகளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அதனை கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதன் நோக்கம், இவ்விஷயத்தில் தனது துரோகத்தை மறைப்பதற்காகத் தானே அன்றி வேறில்லை.

வக்ஃப் வாரியம் குறித்து நாம் மட்டுமல்ல டெல்லியிலிருந்து வந்திருந்த மத்திய அரசின் குழு விசாரித்த வரையில் கூட, தமிழக வக்ஃப் வாரியத்தின் சமீப கால செயல்பாடுகள் மிக சிறப்புக்குரியதாகவே அமைந்துள்ளன. அதே சமயம் வாரியம் பெற்ற பின்னும் கூட தமுமுக, சமுதாய உணர்வுகளை பிரதிபலிப்பதிலோ, சமுதாய உரிமைக்காக குரல் கொடுப்பதிலோ, தனது வீரியமிக்க வழிமுறைகளை கூர்படுத்தியே வந்திருக்கிறது என்பதே உண்மை.

அப்படியிருந்தும், குறுமதியாளர் குறை கூறுகிறார். எனில் பொறாமையைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது என்பதனை சமுதாயம் புரிந்தே வைத்துள்ளது.

அதனால் தான், சமீபத்தில் அவர் திருடிச் சென்ற பத்திரிக்கையில் வெளியிட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்த நண்பர் POSTER ல பேரு போட்டிருந்தாலே இமாலய தப்பு மாதிரி வட்டம் போட்டிருக்காரே, படிக்க வந்த பொண்ணக் கூட்டிக்கிட்டு பஸ்ஸுல சாஞ்சுக்கிட்டு போனா தான் சரியான தவ்ஹீது(?!) போல இருக்குன்னு கமெண்ட் அடிக்கிறாரு.

அவரு குறிப்பிட்டது அஜித் படத்தோட தமுமுக பெயரில் ஒரு உடற்பயிற்சி கழகம் நடத்திய கபடிப் போட்டியப் பற்றிய விளம்பரத்தைத் தான்.

சமுதாய மக்கள் விழிப்போடு தான் இருக்கிறார்கள் என்று நண்பரின் கமெண்ட் நமக்கு உணர்த்தினாலும், இன்னும் பலர் அறியாத விட்டில் பூச்சிகளாய் இந்த அபூஜெஹ்லை நம்பி வெந்து கொண்டிருக்கிறார்களே என்றும் எண்ணத் தோன்றுகிறது.

வல்ல அல்லாஹ் முழு சமுதாயத்தையும் ஏமாற்றிப் பிழைக்கும் PJ போன்றவர்களின் சூழ்ச்சியிலிருந்து பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 29.01.2008

0 Comments:

Post a Comment

<< Home