ததஜவின் கட்சி மாநாடு
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு, தவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற ஒன்றை இந்த மாதம் நடத்த இருக்கிறது. சரி நடத்தட்டும், நடத்தி விட்டுப் போகட்டும், அதில் எமக்கு எந்தப் பிரட்சனையும் இல்லை. ஆனால் நாங்கள் தான் ஒட்டு மொத்த தவ்ஹீதையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளோம், தவ்ஹீத்வாதிகள் என்றால் எங்கள் அமைப்பில் இருக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் தவ்ஹீத்வாதிகள் இல்லை, என்றால் அதை எம்மால் ஏற்றுக் கொள்ள இயலாது. அப்படி சொல்லிக் கொண்டு திரிவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ததஜ எனும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு ஒரு கட்சி, அது தன்னுடைய ரசிகர்களுக்காக ஒரு கட்சி மாநாட்டை நடத்துகிறது அவ்வளவு தான். இன்னும் தெளிவாக சொல்லப் போனால் இந்த அமைப்பினருக்கும் தவ்ஹீதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சில உண்மை தவ்ஹீத்வாதிகள் இவர்களை உண்மை தவ்ஹீத்வாதிகள் என்று நம்பிக் கொண்டு இவர்கள் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். வெகுவிரைவில் அவர்கள், இந்த அமைப்பினரின் உண்மை முகத்தை விளங்கிக் கொள்வார்கள்.
எப்படி தெரியுமா? 'சுன்னத் வல் ஜமாத்' என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. இவர்கள், நாங்கள் தான் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள். ஆனால் அதில் இருக்கும் ஒருவர் கூட சுன்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள் அல்லர். அப்படி முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாக இருப்பவர்கள் அந்த அமைப்பில் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஷிர்க், பித்அத்தில் முழுமையாக மூழ்கிக் கிடக்கிறார்கள். அதுபோலவே, தவ்ஹீத் என்ற வார்த்தையை தனது அமைப்பின் பெயரோடு சேர்த்துக் கொண்டு, அதற்கு வேட்டு வைக்கக்கூடிய காரியங்களை செய்யக் கூடியவர்கள் தான் இந்த ததஜவினர்.
முதலாவதாக, தவ்ஹீதின் அடிப்படை கோட்பாடு விஷயத்திலேயே கோட்டை விட்டவர்கள் இந்த அமைப்பினர், இவர்களை எப்படி தவ்ஹீத்வாதிகள் என்று சொல்ல முடியும்.
திருக்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும் ஒன்றுக் கொன்று மோதாது என்பது தவ்ஹீத் கோட்பாட்டின் ஒரு அம்சம். ஆனால் ததஜவினர் திருக்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும் மோதும், மோதுகிறது என்கிறார்கள். அதற்காக பல ஹதீஸ்களை நிராகரிக்கவும் செய்கிறார்கள். அதனை நிரூபிப்பதற்காக அறிவுப்பூர்வமான வாதங்களை செய்து நிராகரிக்கிறார்கள். இதுதான் ததஜ எனும் கட்சியினரின் தவ்ஹீதை ஏற்றுக் கொள்ளும் லட்சணம்.
இதுமட்டுமல்ல, திருக்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும் தான் மார்க்கம் இது அல்லாதவை மார்க்கமாக ஆகாது என்பது தவ்ஹீத் கோட்பாட்டின் மற்றொரு அம்சம். இதிலும் கூட கோட்டை விட்டவர்கள் தான் ததஜ எனும் கட்சியினர்.
திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் மிகத் தெளிவாக சொல்லப்பட்டவைகளை எந்த பிரட்னையும் இன்றி அப்படியே ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தலாம். ஆனால் சில சட்டங்கள் அல்லது சட்டத்தின் உட்பிரிவுகள் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நேரடியாக சொல்லப்படாமல் இலைமறை காயாக சொல்லப்பட்டிருந்தால் அல்லது தெளிவான சான்றுகள் கிடைக்காமல் இருந்தால் அதனை எவ்வாறு அணுகுவது என்பது தான் ததஜவினருக்கு பெரிய சவாலாக இருக்கிறது.
திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளவற்றுக்கு மட்டும் விளக்கம் தந்து விட்டு, ஆதாரம் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இல்லை என்று வரும் போது, அந்த சட்டத்திற்கு, 'இல்லை' என்று பொதுவாக விளக்கம் தந்து விட வேண்டும் என்பது ததஜவினரின் நிலைபாடு.
உதாரணமாக ஜகாத் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு பொருளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது அபூதாவூதில் வரும் தெளிவான ஹதீஸ், ஆதாரம் இருந்தாலும், திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அதற்கு ஆதாரம் இல்லை என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஆதாரம் இல்லை என்பதனால் ஒருபொருளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க தேவையில்லை என்று ததஜவினர் முடிவு செய்வார்களாம்.
இப்படிப்பட்ட சமயங்களில் சஹாபாக்களின் அணுகுமுறை இவ்விஷயத்தில் எவ்வாறு இருந்தது என்பதை பார்க்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். இல்லையேல் ஒரு சட்டத்தில் எதிர்மறையான போக்கை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம்.
குர்ஆனைப் பின்பற்றுங்கள் என்று சொல்வதில் ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்வது அடக்கம். ஏனென்றால் அதே குர்ஆன் தான் ரசூலை பின்பற்றுமாறு கூறுகிறது. குர்ஆன், ஹதீஸ்களை பின்பற்றுமாறு சொல்வதில் ஸஹாபாக்களின் நடைமுறையை பின்பற்றுவதும் அடக்கம். ஏனென்றால் பல குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் ஸஹாபாக்களை பின்பற்றுமாறு கூறுகிறது.
ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் படி வாழ்ந்தார்கள். அவர்கள் தனது தோழர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடைப்படையிலான பயிற்சியை கொடுத்து மிகச்சிறந்த சமுதாயமாக மாற்றினார்கள். அதனால் சஹாபாக்களின் வாழ்க்கைச் சரிதங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் நடைமுறையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது தவ்ஹீத் கோட்பாட்டின் ஒரு அம்சமாகும்.
இதில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்து இன்று வரை ததஜவினர் எழுந்திருக்கவே இல்லை.
நாம் கூறிய இவ்விரண்டு விஷயங்களும் அகீதா என்னும் அடிப்படை நம்பிக்கை சார்ந்த விஷயங்களாகும். அகீதாவில் கோளாறு உள்ள ததஜவினரை எப்படி தவ்ஹீத்வாதிகள் என்று கூற முடியும்.
அதனால் தான், 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற கட்சிக்கும் தவ்ஹீதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறோம்.
வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா
06.05.2008
1 Comments:
நல்ல பதிவு. உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.இது போன்ற பல சமுத்சா விளிப்புன்ரவு பதிவுகளை பதிய சொல்லி வேண்டுகிறோம்.உங்கள் முயற்ச்க்கு அல்லா உதவி புரிவானாக.இயக்க ரீதியாக இல்லாமல் இஸ்லாமியர்கள் இன்று சந்த்த்து வரும் பிரச்சனைகளை அதன் உண்மை முகத்தோடு உங்கள் துணிவோடு இந்த சமுதாயத்தை நோக்கி எடுத்து செல்லுங்கள்.ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும் அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்
Post a Comment
<< Home