Saturday, March 29, 2008

ஹாதா இஃபுக்குன் முபீன்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

முஸ்லிம்கள் அதிகமாக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அவற்றில் பெண்கள் பற்றியோ அல்லது ஆண்கள் பற்றியோ கற்பு விஷயமாக அவதூறு பரப்பும் விஷயம் அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் கவனக் குறைவாகவே இருக்கிறார்கள்.

அவதூறு பரப்பும் விஷயத்தில் குறிப்பாக கற்பு விஷயத்தில் அவதூறு பரப்புவதில் மார்க்க அறிஞர்கள் அல்லது மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் முதல் பாமரன் வரை வழுக்கி விழக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இது தொடர்பாக குர்ஆன் ஹதீஸ் என்ன சொல்கிறது என்பதை அடுத்தடுத்து பார்ப்போம்.

'முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதனை கேள்வியுற்ற போது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, '(வகாலூ ஹாதா இஃபுக்குன் முபீன்) இது பகிரங்கமான வீண் பழியேயாகும்' என்று கூறியிருக்க வேண்டாமா?' (அல்குர்ஆன் 24:12)

இந்த வசனம், முஃமின்களின் தாயான ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சுமத்தப்பட்ட போது, அல்லாஹ் இறக்கிய வசனமாகும். இந்த வசனத்தில் நமக்கு தேவையான பாடம் இருக்கிறது.

பாலியல் தொடர்பான அவதூறு சுமத்தப்பட்டு, அவை மக்களிடையே உலா வரும் போது முஃமின்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த வசனம் மிகத்தெளிவாக சொல்கிறது.

முஃமின்களாகிய நாம், 'ஹாதா இஃபுக்குன் முபீன்' என்று கூறி அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்ள வேண்டுமாம்.

இந்த வசனம், நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயமாக இறக்கப்பட்ட வசனமாக இருந்தாலும், இது எல்லா முஃமின்களுக்கும் பொருந்தக் கூடிய வசனம் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இது, இன்னொரு விஷயத்தையும் நமக்குச் சொல்கிறது.

எவர் பாலியல் தொடர்பான விஷயத்தை நம்மிடம் கொண்டு வந்தாலும் உடனே இது, 'ஹாதா இஃபுக்குன் முபீன்' என்று கூறி அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த நபிமொழியை புகாரி 4750 என்ற எண்ணில் காணலாம்.

இப்போது விஷயத்துக்கு வருவோம், இந்த ஹதீஸ் ததஜவின் தலைவர் பிஜேக்கு தெரியுமோ அல்லது தெரியாதோ, அல்லது எழுதியன் ஏட்டைக் கெடுத்தால் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்ற பழமொழிக்கு சரியாக பொருந்தக் கூடியவரோ அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவரை எதிர்க்கக் கூடிய யாராக இருந்தாலும் அவர் மீது சுமத்தக்கூடிய முதல் குற்றச்சாட்டு மோசடி (குற்றச்சாட்டு) ஆகும். அதோடு சம்பந்தப்படுத்த முடியாதவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி அவரது நல்ல பெயருக்கு களங்கம் விளைவிப்பார்.

இப்படிப்பட்ட பீஜேக்கு மார்க்கம் சொல்லும் உபதேசம் தான் பாலியல் குற்றச்சாட்டை எவர் மீதும் அவ்வளவு சாதாரணமாக சுமத்தக் கூடாது என்பதாகும். அவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்த துணிந்தால் இவர் அநியாயக்காரர் என்பதை எல்லா முஃமின்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

யாரோ ஒருவர் மீது யாரோ ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்துவது ஒருபுறம் இருக்கட்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் வந்து தான் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டதாக சொல்லி தண்டனையை கோரி நிற்கிறார். முதல் தடவை அவர் முறையிடும் போதும், இரண்டாம் தடவை அவர் முறையிடும் போதும், மூன்றாம் தடவை அவர் முறையிடும் போதும் நபி (ஸல்) அவர்கள் தனது முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். அதன் பிறகு தான் அவருக்கு தண்டனை வழங்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்வதன் மூலம், இந்த மனிதர் இப்படிச் சொல்வதிலிருந்து சும்மா இருந்து விடக்கூடாதா? என்று நினைக்கிறார்கள். அடுத்து வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இங்கு என்ன நாடுகிறார்கள் என்பதை உமர் (ரலி) அவர்கள் தெளிவாகவே சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட விஷயங்கள் வெளியில் சொல்லப்படத்தக்க விஷயங்கள் அல்ல. அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கேட்டு விட்டு அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன். அவளுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறு செயல்களைச் செய்து விட்டேன். இதோ நான் (இங்கு தயாராக நிற்கிறேன்) என் விஷயத்தில் நீங்கள் நாடியதை நிறைவேற்றுங்கள்' என்று கூறினார்.

அவரிடம் உமர் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வே உனது குற்றத்தை மறைத்து விட்டிருக்க, நீ உன் குற்றத்தை மறைத்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். ஆனால் அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை.

பிறகு அந்த மனிதர் எழுந்து சென்று விட்டார். பின்னர் நபி (ஸல்) அவரை அழைத்து வர அவருக்குப் பின்னால் ஆளனுப்பினார்கள். அவரிடம், 'பகலின் இரு ஓரங்களிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்' (அல்குர்ஆன் 11:114) எனும் இந்த இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! இது இவருக்கு மட்டும் உரியதா? (அல்லது அனைவருக்குமா?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இல்லை, மக்கள் அனைவருக்கும் உரியது தான்' என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 5335)

இந்த ஹதீஸில் நமக்கு பாடம் இருக்கிறது.

பாலியல் தொடர்பாக அவதூறுகளை எவர் கொண்டு வந்தாலும் நீங்கள் முதல் நான் வரை இனிமேலாவது அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முஃமின்கள் மீது நல்லெண்ணம் கொண்டு இது பகிரங்கமான வீண் பழி என்பதை புரிந்து விலகிக் கொள்வோம். அல்லாஹ் நம் பாவங்கள் அனைத்தையும் அழித்து விட போதுமானவன்.

இன்னுமா புரியவில்லை! பாலியல் தொடர்பாக எந்த விஷயத்தை எவர் சொன்னாலும் அது உண்மையா? பொய்யா? என்று ஆராய்ந்து பார்க்க தேவையில்லை என்பது தான் எமது அறிவிப்பாகும்.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா
29.03.2008

0 Comments:

Post a Comment

<< Home