Sunday, January 24, 2010

கோட்டை மசூதிக்காக தொல்.திருமா ஆர்ப்பாட்டம்

கோட்டை மசூதிக்காக தொல்.திருமா ஆர்ப்பாட்டம்

வியாழன், 21 ஜனவரி 2010

வேலூர் கோட்டைக்குள் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் கோட்டைக்குள் உள்ள மசூதி தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி பல முஸ்லிம் அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

முஸ்லிம்களிடம் மசூதியை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அவர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்திலும் கோட்டையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 1800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

2 Comments:

At 11:27 PM, Blogger PUTHIYATHENRAL said...

உங்கள் எழுத்து பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். என் பெயர் அபூ சுமையா நான் அமேரிக்கா கலிபோனியாவில் உள்ளேன். என்னுடைய இனைய தளம் www.sinthikkavum.blogspot.com

 
At 7:00 AM, Blogger Unknown said...

nalla vesayam engku yaar seithalum ella muslim makkalum thunai nirka ellam valla eraivan thunai seyyanum ameen.....

 

Post a Comment

<< Home