Sunday, January 25, 2009

இரண்டாகப் பிளந்த தவ்ஹீத் ஜமாத்!

இரண்டாகப் பிளந்த தவ்ஹீத் ஜமாத்!
பெண் குற்றச்சாட்டு...

'மிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்'அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்'என்ற புது இயக்கம் உருவானது. இப்போது அதுவும் உடைந்து 'இந்திய தவ்ஹீத் ஜமாத்'என்றொரு புது அமைப்பு உதயமாகியிருக்கிறது.

'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்'அமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம்.பாக்கர் மீது செக்ஸ் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லி அவரையும் வேறு சிலரையும் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்ட பாக்கர், 'இந்திய தவ்ஹீத் ஜமாத்'தைத் தொடங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்தோம்.

''எதற்காக தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தோமோ அந்தச் செயல்பாட்டில் காலப்போக்கில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆலிம்கள் (மத குருமார்கள்),ஆலிம்கள் அல்லாதவர்கள் என்று பேதம் பார்க்க ஆரம்பித்தது ஜமாத் தலைமை. ஆலிம்களின் கை ஓங்கியது. 'எங்களால்தான் இஸ்லாத்தை வழிநடத்திச் செல்லமுடியும்!'என்று அவர்கள் சொன்னார்கள். இதுபோன்ற விஷயங்களுக்காகத்தான் த.மு.மு.க. அமைப்பு அப்போது பிரிந்தது. ஆலிம் அல்லாதவர் கள்தான் களப்பணிகளைச் செய்கிறவர்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு இயக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆலிம்கள் திட்டம் போட்டார்கள்.''

''பெண்கள் தொடர்பு, ஊழல் குற்றச்சாட்டுகள் உங்கள் மீது வைக்கப்பட்டிருக்கிறதே..?''

''ஐ.ஏ.எஸ். படிக்க வந்த ஒரு பெண்ணுக்கு ரூம் எடுத்துக்கொடுத்துப் படிக்க ஏற்பாடு செய்தேன். அந்தப் பெண்ணுடன் எனக்குத் தொடர்பு இருப்பதாக அவதூறு கிளப்பினார்கள். இஸ்லாத்துக்கு வந்த சகோதரி ஒருவருடன் ஊருக்கு பஸ்ஸில் போகக்கூடிய சூழ்நிலை உருவானது. இதேபோல ஜமாத் அலுவலகத்துக்குக் கடன் கேட்டு வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றேன் என்றும் குற்றம்சாட்டினார்கள். இவை எல்லாமே நாலரை ஆண்டுகளுக்கு முன்பு விசாரிக் கப்பட்டுத் தீர்க்கப்பட்டவை.

'ஒரு மனிதனை வீழ்த்த அவன் மீது பெண்கள் தொடர்பு,பொருளாதாரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி னாலே போதும்'என்று ஜமாத்தின் நிறுவனத் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீன் சொல்வார். இப்போது அதை என் மேலேயே பிரயோகித்திருக்கிறார்கள்.

என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைத்த குழு,என் மீது தவறு இல்லை என்றது. அதற்காகவே அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களை இயக்கத் திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். குற்றச்சாட்டுகளை பொதுக்குழுவில் வைக்கச் சொன்னேன். அவர்களோ கொஞ்ச காலம் என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார் கள். அது குற்றத்தை ஒப்புக்கொண்டது போலாகிவிடும் என்பதால் ஏற்கவில்லை. நிர்வாகக் குழுவிலிருந்த நிர்வாகிகளுக்குத் தெரியாமலே கூட்டம் போட்டு அதை செயற்குழுவுக்கு கொண்டு வந்து என்னை நீக்கினார்கள். எனக்கு ஆதரவாகப் பேசி ராஜினாமா செய்தவர்களை,அடுத்த சில நிமிடங்களிலேயே ஊழல் குற்றச்சாட்டு சொல்லி நீக்கினார்கள்!''

''விண் டி.வி-யில் முதலீடு செய்ததில் நீங்கள் ஊழல் செய்ததாகப் புகார் கிளம்பியதே...''

''நடத்த முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் அந்த டி.வி. என் கைக்கு வந்தது. என் உறவினர்கள் அதில் அதிகமாக முதலீடு செய்திருந்தார்கள். ஜமாத் சார்புடையவர்கள் 27 லட்ச ரூபாய்வரை முதலீடு செய்தார்கள். முதலில் நட்டம் ஏற்படும் என்று சொல்லித்தான் முதலீடு வாங்கினோம். மீண்டும் டி.வி.யை அவர்கள் திருப்பி எடுக்கும்போது ஒரு பங்கு முதலீடு செய்தால் மூன்று பங்கு கிடைக்கும் என்று டி.வி-யை நடத்தியவர்கள் சொன்னார்கள். ஆனால்,சிக்கலான இந்தத் தருணத்தில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குதான் தரமுடியும் என்றதால் வேறு வழியில்லாமல் அதைப் பெற்றுக்கொண்டோம். இதில் தான் ஒரு பங்கை நான் எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்கள். முதலீடு செய்தவர்களுக்கு இரண்டு பங்கு தொகையைக் கொடுத்துவிட்டோம். 2006-ம் ஆண்டிலேயே பி.ஜெயினுல் ஆபிதீன் முன்புதான் இந்த சடங்கே நடந்து முடிந்தது. அதை இப்போது கிளறுவதற்குக் காரணம்,என்னை வெளியேற்றவேண்டும் என்பதுதான். என்னை மட்டுமல்ல, 'நஜாத்'பத்திரிகையை நடத்திவந்த அபு அப்துல்லாவையும் இப்படி பொய்க்குற்றம் சாட்டி வெளியேற்றினார்கள். சுனாமி பணத்தைச் சுருட்டியதாக த.மு.மு.க-வைச் சேர்ந்த ஜவாஹிருல்லா,ஹைதர் அலி,லஸ்கர்-இ-தொய்பா அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார் என்று அமீன் பக்ரி ஆகியோரையும் இப்படித்தான் இயக் கத்தை விட்டு வெளியே அனுப்பினார் ஜெயினுல் ஆபிதீன்!''என்றார் பாக்கர்.

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனத் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீனிடம் பேசினோம். ''பாக்கர் மீது புகார்கள் வரத் தொடங்கியதுமே அவரை ஒதுங்கி யிருக்கச் சொன்னோம். அவரோ,மேலும் பண மோசடிகளில் இறங்கினார். விண் டி.வி. முதலீட்டில் இரண்டே கால் கோடி ரூபாய் உட்பட பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கிறார். நிலங்களை விற்றதிலும் அவர் மீது புகார்கள் வந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் ஒருவரிடம் இரண்டு கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். இதையெல்லாம் ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்தோம். அவர் நடத்திய ஹஜ் சர்வீஸிலும் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை.இத்தகைய காரணங்களால்தான் அவரை நீக்கி னோம்.''

''ஆலிம்களின் கை ஓங்கியிருப்பதாக பாக்கர் சொல்கிறாரே..?''

''தலைவர் ஒருவர் மட்டுமே ஆலிமாக இருக்கிறார். தலைமைப் பொறுப்பிலிருக்கும் 13 நிர்வாகிகளில் இருவர் மட்டுமே ஆலிம்கள். நானூறுக்கும்மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் நாலைந்து பேர்தான் ஆலிம்கள். 'அல்லாஹ்வை நம்புங்கள்,ஆலிம்கள் சொல்லும் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்'என்று சொல்லி வரும் நாங்கள் ஆலிம்களை ஊக்குவிக்கிறோம் என்றால்,மக்கள் எங்கள் இயக்கத்தை எப்படி ஏற்றுக் கொண்டிருப்பார்கள்?''

''நாலரை ஆண்டுகளுக்கு முன்பு பேசி விசாரித்துத் தீர்க்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் கிளறு வதாக பாக்கர் சொல்கிறாரே..?

''ஏற்கெனவே இருந்த குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படவில்லை. அதற்காக 40 நாள் பாக்கரை நீக்கி வைத்தோம். அழுது மன்னிப்புக் கேட்டார். முன்பிருந்த குற்றச்சாட்டுகளோடு இன்னும் சில இப்போது அவர் மீது சொல்லப்பட்டன. அலுவலகத்தில் வைத்து ஷகிலா பானு என்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இதுபற்றி அந்தப் பெண்ணே ஜமாத்திடம் புகார் கொடுத்தார். இரண்டு பேரை உட்காரவைத்து விசாரிக்க குழு முடிவு செய்தபோது பாக்கர், 'சேர்ந்து விசாரிக்கக்கூடாது'என்றார். தனியாக அவர் விசாரிக்கப்பட்டபோதும் அவர் அழைத்துவந்த சாட்சிகளே, 'ரூமில் இரண்டு பேரும் தனியாகத்தான் இருந்தார்கள்'என்றுஉண்மையைச் சொன்னார்கள். இவை முடிந்து போன விஷயமில்லை. இப்படி அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தும்,இரண்டு மூன்றுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.''

''பிடிக்காதவர்களை இப்படி குற்றச்சாட்டு களைச் சொல்லி வீழ்த்துவதுதான் உங்கள் இயல்பு என்று பாக்கர் தரப்பு சொல்கிறதே...''

''எனக்கு இதில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ,அதே அளவுக்கு பாக்கருக்கும் உண்டு. ஏனென்றால்,என்னோடு பாக்கரும் சேர்ந்தே அவர்கள் மீது சொன்னவைதான் அந்தக் குற்றச்சாட்டுகள். இப்போது அவற்றை நான் மட்டுமே சுமத்தியதாகச் சொல்லித் தப்பிக்க முடியாது. ஆமின் பக்ரி,தீவிரவாதக் குழுவோடு தொடர்பு வைத்திருந்ததற்காக சிறைக்கு போய்வந்தவர். இப்படி மற்றவர்கள் மீது நான் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக் கிறது!''என்றார் ஜெயினுல் ஆபிதீன்.

எம்.தமிழ்செழியன்
படம்: பொன் காசிராஜன்

நன்றி: ஜுனியர் விகடன்

Sunday, January 18, 2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது; பாக்கர் தலைமையில் புதிய அமைப்பு


சென்னை, ஜன. 16 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு டைந்து அதன் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம். பாக்கர் தலைமையில் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது தரவாளர்கள் மத்தியில் புதிய அமைப்பை எஸ்.எம். பாக்கர் றிவித்தார்.

பாக்கருடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஸ்.ம். சையது இக்பால், மாநிலப் பொருளாளர் அபுபக்கர் தொண்டியப்பா, மாநிலச் செயலாளர்கள் முகம்மது சித்திக், முகம்மது முனீர், முகம்மது சிப்ளி, பு பைசல் கியோரும் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ஸ்.ம். பாக்கர் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்'தின் தலைவராகவும், முகம்மது சித்திக் பொதுச் செயலாளராகவும், ஸ்.ம். சையது இக்பால் துணைப் பொதுச் செயலாளராகவும், அபுபக்கர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய அமைப்பு குறித்து ஸ்.ம். பாக்கர் செய்தியாளர்களிடம் கூறியது:

பல்வேறு மைப்புகளில் இருந்து துவும் செய்ய முடியாததால் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை தொடங்கி ள்ளோம்.

இந்த அமைப்பு யாருக்கும் எதிரானது ல்ல. நாங்கள் ன்றும் ஓரிறை (ஒரே கடவுள்) கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டுச் செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம். நாங்கள் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஆனால் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பிரசாரம் செய்வோம்.

திருக்குரான் மற்றும் நபி வழியை முஸ்லிம்கள் மத்தியில் போதிப்பது, செயல்படுத்துவது, மக்கள் தொகைக்கேற்ப முஸ்லிம்களுக்கு இட ஓதுக்கீடு கேட்டு போராடுவது, வரதட்சணை, மது, ஆபாசம், தீவிரவாதம், பிரிவினைவாதம், வட்டிக் கொடுமை, மூட நம்பிக்கைகள் போன்ற சமூக சீர்கேடுகளுக்கு எதிராக வீரியமுடன் போராடுவதற்காகவே இந்த இயக்கம்.

வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நிதி பெறமாட்டோம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்களிடமிருந்து மட்டுமே நிதி பெறுவோம் என்றார் பாக்கர்.

பாக்கர் நீக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அடிப்படை றுப்பினர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். பாக்கர் நீக்கப்பட்டதாக அதன் துணை பொதுச் செயலாளர் எஸ். கலீல் ரசூல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிவிப்பு: சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பாக்கரை அமைப்பின் அடிப்படை றுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பாக்கருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தினமணி