Thursday, June 29, 2006

பிஜேயின் இருபக்க வாதம்

தமுமுக என்ற மக்கள் இயக்கத்திடமிருந்து களவாடப்பட்டதும், ஏழைகளுக்காக வசூலிக்கப்பட்ட சுனாமி நிதியிலிருந்து பிராணவாயு செலுத்தப்பட்டு உயிர்பிக்கப்பட்டதுமான உணர்வு வார இதழ் 10:41 ல் 'காயிதே மில்லத்தை மறந்த கருணாநிதி' என்ற தலைப்பில் கீழ்கண்ட செய்தி வெளியிட்ப்பட்டுள்ளது.

'...ஆனால் தமிழக முதலமைச்சராக 5வது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த முறை காயிதே மில்லத் சமாதிக்குச் செல்லவில்லை. (பெரியார், அண்ணா சமாதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.)

காயிதே மில்லத் பிறந்த நாளான ஜுன் 5ம் தேதி, காயிதே மில்லத் சமாதிக்குச் செல்வதை தவிர்க்கும் வகையில் திட்டமிட்டே ஜுன் 4-ம் தேதி டெல்லி பயணம் சென்றுள்ளார். இதற்கு என்ன காரணம் எனில், இந்த முறை அவர் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதி முஸ்லிம்கள் தேர்தலின் போது அவருக்கு அதிகளவில் வாக்களிக்க வில்லை என்ற கோபமே! என கூறப்படுகிறது. இதன் மூலம் கருணாநிதி தனது சுயரூபத்தை நிரூபித்துள்ளார் என்று அவரது அணியில் இடம் பெற்ற சிறுபான்மைப் பிரிவினர் புலம்புவதாகத் தெரிகிறது.'

முன்னுக்குப் பின் முரணான செய்தியை அருகருகே போட்டு மக்களை மடையர்களாக்குவதில் பிஜேக்கு நிகர் பிஜே தான்.

காயிதே மில்லத் சமாதியல் பகுத்தறிவுவாதிகள் மலர்வளையம் வைக்கக்கூடாதாம். அரசியல்வாதிகள் மலர் வளையம் வைக்க வேண்டுமாம்.

காயிதே மில்லத் பெயரை மாவட்டத்திற்கும் தெருக்களுக்கும் வைத்து விடுவதாலும் காயிதே மில்லத் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து விடுவதாலும் காயிதே மில்லத்திற்கு மணிமண்டபம் கட்டுவதாலும் மட்டும் முஸ்லிம்களை கவர முடியாது, முறையாக அவர்களுக்குரிய உரிமைகளை கொடுப்பதற்கு எந்த கட்சி முன்வருகிறதோ அந்த கட்சிக்கே முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கும் என்று சொன்ன அந்த பிஜேயின் நாக்கு, இப்பொழுது வேறு விதமாக பேச ஆரம்பித்துள்ளது.

காயிதே மில்லத் பெயரை மாவட்டத்திற்கும் தெருக்களுக்கும் வைக்காமல் இருப்பதும் காயிதே மில்லத் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைக்காமல் இருப்பதும், காயிதே மில்லத்திற்கு மணிமண்டபம் கட்டாமல் இருப்பதும் நல்ல செயல்கள் தானே, இதனைச் செய்வதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் நன்மையுண்டா?

இப்படிப்பட்ட செயல்களை கருணாநிதி செய்யாமல் நழுவி விட்டார் என்று சொல்வது எந்த அளவுக்கு மடத்தனம் என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

'என கூறப்படுகிறது' - 'புலம்புவதாகத் தெரிகிறது' என்று எழுதுவதெல்லாம் ஆதாரமற்ற செய்தியை எழுதுவதற்கும் ஆதாரம் கேட்டால் எழுதியவர் எளிதாக தப்பித்துக் கொள்வதற்குமே இந்த வாசகங்கள் பயன்படுத்தப்படும்.

அல்லது தவ்ஹீது என்ற பெயருக்கும், ஏகத்துவம் என்ற பெயருக்கும் சொந்தக்காரரான பிஜேக்கு தனிப்பட்ட முறையில் வந்த வஹியாகக்கூட கீழ்காணும் வாசகங்கள் இருக்கலாம். அதாவது,

'இதற்கு என்ன காரணம் எனில், இந்த முறை அவர் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதி முஸ்லிம்கள் தேர்தலின் போது அவருக்கு அதிகளவில் வாக்களிக்க வில்லை என்ற கோபமே! என கூறப்படுகிறது. இதன் மூலம் கருணாநிதி தனது சுயரூபத்தை நிரூபித்துள்ளார் என்று அவரது அணியில் இடம் பெற்ற சிறுபான்மைப் பிரிவினர் புலம்புவதாகத் தெரிகிறது.'

அவர் சொல்லும் கருணாநிதியின் கோபத்தையும், அவர் சொல்லும் சிறுபான்மைப் பிரிவினரின் புலம்பலையும் எவ்வாறு தெரிந்து கொண்டார்? இவர் நெருங்கவே முடியாத இவ்விருவரின் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள இவருக்கு வஹீயா வந்தது?

இன்னும் என்னென்ன வஹீ அவருக்கு இதுபோன்று வரப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

அதே உணர்வு (வார) வாத இதழில் இப்படிச் சொல்லப்படுகிறது.

காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து போனல் மட்டுமே
முஸ்லிம்கள் இவர்களை ஆதரித்து விட மாட்டார்கள். முஸ்லிம்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய
பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இதை கொடுக்கும் கட்சியைத் தான் முஸ்லிம்கள் ஆதரிப்பார்கள்.

'...எனவே காயிதே மில்லத்தின் நினைவிடத்துக்கு மலர்ப் போர்வை
போர்த்தி, முஸ்லிம்களின் காதில் பூச்சுற்றும் நாடகத்தை மறந்து விட்டு, முஸ்லிம்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் முனைய வேண்டும்....'

காயிதே மில்லத் சமாதிக்கு கருணாநிதி வந்திருந்தால், சிறுபான்மையினரை கருணாநிதி ஏமாற்றிவிட்டார் என்று உணர்வில் செய்தி வந்திருக்கும்.

காயிதே மில்லத் சமாதிக்கு கருணாநிதி வராமல் போனதால், சிறுபான்மையினரை கருணாநிதி மறந்து விட்டார் என்று செய்தி ஆக்கப்பட்டுள்ளது.

இதைப் படிக்கும் போது பிஜேக்கு மறை கழன்று போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தில் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும் சமாதி வழிபாட்டை ஒருவர் (எவராக இருந்தாலும் சரி) செய்தால் எப்படி அதை தடுக்க முடியுமோ அப்படி தடுக்க வேண்டியதை விட்டு விட்டு, கருணாநிதி சமாதி வழிபாட்டுக்கு வரவில்லை அதனால் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கிறார் என்று எழுதுவதற்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்.

இவர்கள் தான் தவ்ஹீதைச் சொல்பவர்களாம், இவர்கள் தான் மார்க்கத்தை நிலை நிறுத்தப்போகிறவர்களாம்.

யாரையோ விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக மார்க்கத்திற்கு விரோதமான செயலைக்கூட செய்ய வேண்டும் என்று சொல்லத் துணிந்தவர்கள் இந்தப் பிஜேயும் அவரின் அடிவருடிகளும் என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்.

இப்னு பாத்திமா 29.06.2006

Tuesday, June 27, 2006

ஆடு நனைகிறதென்று ஓநாய்க்கு கவலையாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி..

தமுமுகவிடமிருந்து களவாடப்பட்ட உணர்வு (10:41) வார இதழில் 'மதானி விவகாரம்: கேரள முதல்வரின் கோரிக்கையும் - தமிழக முதல்வரின் நழுவலும்' என்ற தலைப்பில் கீழ்காணும் விபரங்கள் உள்ளன.

அதற்கு பதிலளித்த கருணாநிதி, 'சிறைக் கைதிகள் வழக்குகள் நீதி மன்றத்தில் உள்ளன. நீதிமன்ற பிரச்சனையில் தன்னால் தலையிட முடியாது. அவர்களை ஜாமீனில் விடுவது தொடர்பாக
நீதி மன்றத்தை அணுகுமாறு' கேரள முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் சிறுபான்மைப் பிரிவாகச் செயல்படும் அமைப்புகள் இப்போது என்ன சொல்லப் போகின்றன? தங்களது முகத்தை எங்கே வைத்துக் கொள்ள போகின்றன என்பதை சமுதாய மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். கருணாநிதி ஆட்சிக்கு வந்ததுமே கோவை சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும்
விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என பேசியவர்களின் முகத்தில் கருணாநிதி நன்றாக கரியைப் பூசி உள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் கோவை சிறைவாசிகள் பற்றி
கருணாநிதியிடம் உறுதி மொழி பெற்றுள்ளதாக பேசியது என்ன ஆனது? ஆளுநர் உரையிலும் இது பற்றி ஏதும் கூறப்படவில்லை. இது நீதிமன்றப் பிரச்சனை என்று இப்போது தெளிவாக
அறிவித்துள்ளார். இப்போது சிறைவாசிகளுக்காக போராட்டம் நடத்துவார்களா?

கோவை சிறைவாசிகளின் விடுதலை பற்றி பேச (அ) எழுத பீஜேக்கோ அல்லது திருடப்பட்ட உணர்வு இதழுக்கோ எந்த அருகதையும் இல்லை.

ஆடு நனைகிறதென்று ஓநாய் கவலைப்பட்டதாம் - அந்த ஓநாய்க்கும் இந்த பீஜேக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?

கோவை சிறைவாசிகள் விஷயத்தில் அவர்களுக்கு எதிராக பீஜே, போலீஸ் தரப்பு அப்ரூவர் என்பது பச்சிளம் பாலகனுக்கும் தெரியுமே. இவர் எப்படி அவர்களின் விடுதலைக்காக கவலைப்படுவார்?

பீஜே, போலீஸ் தரப்பு அப்ரூவர் என்பதை சொன்ன கோவை சிறைவாசிகள், 'தனக்கு மன்னிப்பு கடிதம் எழுதாவிட்டால் அவர்களின் விடுதலைக்காக முயற்சி செய்ய மாட்டேன்' என்று சொன்னவர் எவ்வாறு அவர்கள் விடுதலைக்காக கவலைப்படுவார்? மாறாக அவர்கள் வெளியே வரக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்.

ஜெயலலிதாவை சந்திக்கச் சென்ற போது கூட பீஜே, 'ஒரு சிலர் தான் இதில் நிரபராதி, மற்றவர்கள் குற்றவாளி' என்று வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை சிறைவாசிகளுக்காக அன்றைய முதல்வரிடம் கோரிக்கைகள் வைத்த சம்சுதீன் காஸிமியின் காலை மிதித்து இது பற்றி பேச விடாமல் தடுத்தார் இந்த பீஜே. இவரா கோவை சிறைவாசிகளுக்காக பரிந்து பேசுவார்.

'நீதிமன்ற பிரச்சனையில் தன்னால் தலையிட முடியாது' என்று கருணாநிதி சொன்னது நலுவலாம். 'நீதிமன்ற பிரச்சனையில் தன்னால் தலையிட முடியாது' என்று ஜெயலலிதா பீஜேக்கு எதிரே சொன்னாரே அது தான் சரியான கூற்றோ?

தான் எந்த கட்டத்திலும் கைது செய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசியல் பலம் தேடி ஜெயலலிதாவின் பின் புலத்தில் ஒழிந்து கொண்டிருக்கும் பீஜேக்கு, கருணாநிதி எது சொன்னாலும் பிடிக்காது.

'நீதிமன்ற பிரச்சனையில் அரசு கூட தலையிட முடியாது' என்பது தான் உண்மை, 'நீதிமன்ற பிரச்சனையில் அரசு தலையிட முடியும்' என்று பீஜே சொல்ல வருகிறாரோ? அப்படிச் சொன்னால் அவர் நாலாம் கிளாஸ் படித்தவர் என்பதை தனக்குத் தானே நிரூபித்துக் கொண்வராவார். அவருக்கு எப்படி சட்டம் தெரியும்? இதை ஆளுநர் எப்படி பேசுவார்? மூதறிஞருக்கு என்னவாயிற்று?

இன்ஷா அல்லாஹ் கோவை சிறைவாசிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். பீஜேயின் முகத்திலும் அவரின் அடிவருடிகளின் முகத்திலும் கரி பூசப்படும், அப்போது அவர்களின் முகத்தை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும்.

இப்னு பாத்திமா 28.06.2006

ரஸ்மியின் நாற்றத்தில் உமரின் பங்கு

அவைருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி..

யாருடைய நாற்றமோ பொறுக்காமல் எழுதியுள்ளதாகக் கூறும் ரஸ்மியின் எழுத்துக்களில் தான் எத்தனை சுகந்தம்???

எவரிடமிருந்தும் இதற்கு மேல் நாற்றமேயடிக்காது எனும் அளவிற்கு அழுகி நாறும் ரஸ்மி, யாரோ ஒருவரை நாற்றம் பிடித்தவர் என்கிறார்.

யாரோ ஒருவருக்கு எழுதப்பட்ட இந்த 'முடை நாற்ற மடல்', உண்மையை மறைத்தும் திரித்தும் கூறும் (உறக்கத்தில் இருக்கும்) உமரால் சம்பந்தமில்லாத பலருக்கு ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் நிதானமாக இம்மடலுக்கு பொழிப்புரையும் எழுதப்பட்டு அதே உமரால் (ரஸ்மி லெட்டர் ஓர் விளக்கம்) அனுப்பப்பட்டுள்ளது.

நாம் மீண்டும் மீண்டும் கூறுவது போல், உண்மைக்கும் இந்த உமருக்கும் எள்முனையளவு கூட சம்பந்தமில்லை என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார்.

ர.லெ.ஒ.வி (ரஸ்மி லெட்டர் ஓர் விளக்கம்) எனும் மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது போல்

ரஸ்மி எழுதிய கட்டுரையின் முகப்பில் கீழ் கானுமாறு கட்டம் கட்டி எழுதி அனுப்பியிருந்தோம்.
ராவுத்தருக்கு நாம் பதில் எழுதுவதற்கு முன் இலங்கையைச் சேர்நத சகோதரர் ரஸ்மி அவர்கள் ஒரு கட்டுரை எழுதி அதை இளையவனுக்கு அனுப்பி வைத்திருந்தார் அது நம்முடைய ஐடிக்கும வந்தது அதில் வாரத்தைப் பிரயோகம் கொஞ்சம் கடுமையாக இருந்ததாக நாம் உணர்ந்து அதை பப்ளிஸ் செய்யாமல் விடடு வைத்தேம் இப்பொழுது நமக்கு எழுதிய பதிலில் அவர் உபயோகப் படுத்திய வாரத்தைப் பிரயோகங்களின் மூலம் அவர் முற்றிலும் சகோதரர் ரஸ்மி அவர்கள் கையாண்ட வாரத்தைப் பிரயோகங்களுக்கு தகுதியாகிறார் என்பதால் முதலில் அதை பப்ளிஸ் செய்து விட்டு அது மக்களிடம் போய் சேர்ந்த பின் நமது
பதிலை வெகு விரைவில் அவருக்கும் அவரது சகாக்களுக்கும் அனுப்புவோம்.
என்ற வார்த்தைகள் கட்டம்கட்டி எழுதி அனுப்பப்பட வில்லை.

இந்த கட்டம் கட்டப்பட்ட எச்சரிக்கை (அ) விளக்கம் இல்லாமல் தான் ரஸ்மியின் லட்டர் உமரால் ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது.

எனவே இதுவே இந்த உமருக்கும் உண்மைக்கும் எள்முனை அளவு கூட சம்பந்தம் இல்லை என புரிந்து கொள்வதற்கு போதுமான சான்றாகும்.

அடுத்தாக நம்முடைய கடிதத்தின் ஒரு பகுதியை சுட்டிக்காட்டி அதனால் தான் ரஸ்மியின் நாற்றத்தை ஃபார்வேர்ட் செய்ததாக உமர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் மீண்டும் குறிப்பிடுகிறோம், நாம் எடுத்துக்காட்டியது ஓர் அழகிய உதாரணம் மட்டுமே.

நாம் கஷ்டப்பட்டு உருவாக்கிய தோட்டத்தை பாதுகாப்பதற்காக நாய் வளர்க்கிறோம். முதலில் சாதுவாக நன்றியோடு இருந்த நாய் பின்னர் வெறி ஏற்பட்டு நம்மை, வளர்த்த எஜமானர்கள் என்று கூட பார்க்காமல் மேலே விழுந்து பிறாண்டுவதும் கொலை வெறியோடு கடித்துக் கதற துரத்துவதுமாக இருந்தால், நம்மை நாம் உருவாக்கிய நந்தவனத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்தால், என்ன நிலை நமக்கு ஏற்படுமோ, அந்த நாய் குறித்து நாம் என்ன எண்ணுவோமோ அந்த நிலையில் தான் தமுமுகவின் ஒவ்வொரு தொண்டனும் உள்ளான்.

இந்த வலி, பறிகொடுத்தவனுக்குத்தான் புரியும். புறித்துச் சென்றவர்கள் பரிகாசம் தான் செய்வார்கள். எனவே தான் பரிகாசம் செய்யும் இந்த உமர் பறித்தவர் கூட்டத்தில் உள்ளவர்தான் என அவரே சான்று பகருகிறார்.

தனக்கு சொந்தமான ஒன்றை மீட்கப் போராடுவதும் ஜிஹாது தான் என்ற அடிப்படையில் போராடும் வழி தெரியாமல் பரிதவிக்கும் ஒவ்வொரு தமுமுக தொண்டனும் நாளை மறுமையில் நிச்சயம் படைத்த ரப்பிடம் முறையிடுவான்.

அதற்கு முன்பாகவே அபகரித்தவற்றை திரும்ப ஒப்படைத்து சம்பந்தப்பட்டவர்களிடம் பொது மன்னிப்பு பெறவில்லையானால் மறுமையில் முப்லிஸாக நேரிடும் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நினைவூட்டி நிறைவு செய்கிறேன்.

ராவுத்தர் 28.06.2006

Sunday, June 25, 2006

உறக்கத்தில் இருக்கும் உமருக்கு,

பிஸ்மில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உண்மையை மறைத்துக் கூறும் உமருக்கு...

தனக்குத்தானே புகழ் அடைமொழி இட்டுக்கொள்ளும் உமருக்கு வேண்டுமானால் பெயருக்கும், சாதிப்பிரிவுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம். பெயரை பண்பாக கருதுவதனால்தான் தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்டார்போலும், அடியார்களில் அழகானவர் (ஜெயினுலாபிதீன்) எனப்பெயர் வைத்துக்கொண்டு, அடியார்களின் சொத்துக்களை அபகரிக்கும் கொள்ளையராக வலம் வருவதை கண்டும் உமர் புரிந்து கொள்ளவில்லை.

என்ன செய்வது, உண்மையை திரித்துக்கூறும் நிலையில் அவரே உண்மையை உரத்துக்கூறுவதாக கற்பனையில் மிதப்பவரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்கமுடியும்?

அவர் எழுதியிருந்த விஷயம் முத்துப்பேட்டை டாட் காமில் இருப்பதாக முன்பு குறிப்பிட்டிருந்ததை அவ்வாறு வெளியிடப்படவில்லை என நாம் மறுத்திருந்தோம். பெயர் விஷயத்தில் வரிந்துகட்டி எழுதியவர் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

கற்பனையில் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கப் பார்க்கும் கோயபல்ஸின் குரு உமர்தான், எனவே அவர் கோயபல்ஸ் தத்துவத்தை கூறும்போது ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உதாரண்ததை ஏற்கமுடியாது என குறிப்பிட்டிருந்தோம்.

ஏனெனில் எமக்கு எடுத்துக்கூறப்படுபவைகளில் உண்மை எது, உண்மையின் பெயரால் இட்டுக்கட்டபடுவை எவை என்ற தெளிவு எமக்குண்டு. உமரது கோயபல்ஸ் கூச்சலுக்கு நாம் செவி சாய்க்கவில்லை. ஏமாறத்தயாராகவில்லை என்பதால் எம்மீது அவருக்கு வருத்தம் ஏற்படுவது நியாயம் தான்.

ஏன்ன செய்வது பிரதர்! தவ்ஹீதிற்கும் தக்லீதிற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக நான் மட்டுமல்லாமல், அல்லாஹ்வின் பெரும் கிருபையால் தமுமுகவிலுள்ள ஒவ்வொரு தவ்ஹீத்வாதியும் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்களே.

பாவம் உதாரணம் சொல்லவந்து அது அவருக்கே புரியாமல் போனதால் பாதியிலே விட்டுவிட்டு விழி பிதுங்கி நிற்கிறார்.

அடுத்தவன் தோட்டத்தில் உள்ள பம்ப் செட் நீர் பாய்ச்சிக்கொண்டு அது நந்தவன சோலையாக இருக்கிறதாம் . . . என்னுடைய, என்னைப்போன்ற ஒவ்வொரு தமுமுககாரனின் வியர்வையில், ரத்தத்தில் செழித்திருந்த நந்தவனத்தை காவல்காக்க வளர்த்த நாய், வெறிகொண்டு, வளர்த்த எஜமானர்களையே குதறிக்கொண்டுள்ளது. வெறிநாய்குரிய வைத்தியம் நிறைவேற்றப்பட்டால், அந்நாய் பின்னால் சுற்றும் பைத்தியங்கள் தெளிந்துவிடும். (இது ஓர் உதாரணம்)

பறிகொடுத்துள்ள எங்களுக்குத்தான் அதன் வலி தெரியும் - திருடிச்சென்றவர்களுக்கு அது தெரியாது என எழுதியிருந்தோம். இக்கருத்தை கேலிப்பொருளாக்கியதிலிருந்து அந்த வலி தனக்கு தெரியாது, ஏனெனில் நாங்கள் திருடியவர்கள் என உமர் ஒப்புக்கொண்டுள்ளார். நன்றி!

இஸ்லாமிய சட்டம் ஜகாதாக இருந்தாலும், நபித்தோழர்கள் பற்றிய விமரிசனமாக இருந்தாலும், குர்ஆன் தர்ஜமாவிலுள்ள குளறுபடிகளாக இருந்தாலும், ஏன் குலுங்கிய கும்பகோண கணக்காக இருந்தாலும்,
கடற்கரையே இல்லாத வேலூருக்கு சுனாமி நிதி பங்கிட்டதாக இருந்தாலும், சுனாமி நிதியில் களவாடிய உணர்வு வார இதழின் நஷ்டம் ஈடுசெய்யப்பட்டதாக இருந்தாலும், சுனாமி நிதியில் ததஜ இயக்கத்தவருக்கு சீருடை வாங்கியதாக இருந்தாலும் இவைபோன்ற எண்ணற்ற விஷயங்களில் குர்ஆன் சுன்னாபடி தனிப்பட்ட கருத்து என ததஜவினர் (உமர் உட்பட) கருத்துக்கள் கேட்கப்பட்டால் அதற்குரிய பதில்கள் தான் நாம் முன்னர் எழுதியிருந்தோம்.

அப்படி இல்லையாம் சுடச்சுட பதில் எழுதுகிறாராம்.

என்ன பதில் நாம் குறிப்பிட்டிருந்த கேள்வியையும் அதற்கு அவர் அளித்துள்ள பதிலையும் பார்வையிடுங்கள்.
நமது கேள்வி
குற்றம் சாட்டப்பட்டவருடைய வாக்கு மூலம் எப்படி தீர்ப்பாக அமையும் ?

அவரது பதில் : தொடர்பில்லாமல் சம்பந்தமில்லாமல் குற்றம் சாட்டுபவன் பைத்தியக்காரன் சித்த பிரமைக்காரன்.

எது தொடர்பும் சம்பந்தமும் இல்லாதது. தமுமுகவின் வருமானத்திற்கு வழிவகைகாணும் விதமாக டிரஸ்ட் உருவாக்கப்பட்டு அதற்கென நிதி உதவிகள் பெறப்பட்டு சொத்துக்கள் வாங்கும் சமயம் அல்லாஹ்வை சாட்சியாக்கி அமானிதமாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதே. அந்த அமானிதத்தை களவாடிக்கொண்டதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டுமென்ற அச்சம் இல்லாதவர்களுக்கு இஸ்லாத்துடன் தொடர்பும் சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை தான்.

ஆனால் பலநூறு, பல்லாயிரக்கணக்கான சமுதாய ஆர்வலர்கள் வாரி வழங்கியது தமுமுக எனும் விருட்சம் பட்டுப்போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். அவர்கள் இஸ்லாத்தோடும் சமுதாயத்தோடும் தொடர்பும் சம்பந்தமும் உள்ளவர்கள். எனவே இவ்வுலகில் இல்லாவிட்டாலும் மறுமையில் பறிகொடுத்தவற்றிற்கு பகரமாக நன்மைகளையும், பொறுமை காத்ததற்காக பாவமன்னிப்பையும் அல்லாஹ்விடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் உள்ள நன்மக்கள். அவர்களுக்கு என்றென்றும் அல்லாஹ்வின் அருள் கிட்டும்.

கலிமா சொன்னால் முஸ்லிம்தான் என பேராசிரியர் கூறினாராம் கலிமா சொல்லாமலேயே முஸ்லிம் ஆகலாம் என உமர் கூறுவாரோ.

இஸ்லாத்தில் துவக்கமே ஷஹாதத் கலிமாவில் தானே உள்ளது. அதை கூறுவது எப்படி தவறாகும்.

இறுதியாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (ஷிர்க்கைத்தவிர) தான் நாடியவைகளை மன்னிக்கிறான். ஆனால் ஒரு அடியான் மற்றொரு அடியானுக்கு அநீதி இழைத்துவிட்டால் சம்பந்தப்பட்டவர் மன்னிக்காத வரை அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை - என்ற எச்சரிக்கையை நினைவூட்டி, பலநூறு பல்லாயிரக்கணக்கானவர்களின் பங்களிப்பான ட்ரஸ்டையும், பத்திரிக்கையையும் திரும்ப ஒப்படைத்து அவர்கள் அனைவர்களிடமும் மன்னிப்பை பெறாதவரை மீட்சி இல்லை எனக்கூறி நிறைவு செய்கிறேன்.

ராவுத்தர் 20.06.2006

Tuesday, June 20, 2006

உண்மையை மறைத்துக் கூறும் உமருக்கு,

பிஸ்மில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உண்மையை மறைத்துக் கூறும் உமருக்கு...

தனக்குத்தானே புகழ் அடைமொழி இட்டுக்கொள்ளும் உமருக்கு வேண்டுமானால் பெயருக்கும், சாதிப்பிரிவுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம். பெயரை பண்பாக கருதுவதனால்தான் தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்டார்போலும், அடியார்களில் அழகானவர் (ஜெயினுலாபிதீன்) எனப்பெயர் வைத்துக்கொண்டு, அடியார்களின் சொத்துக்களை அபகரிக்கும் கொள்ளையராக வலம் வருவதை கண்டும் உமர் புரிந்து கொள்ளவில்லை.

என்ன செய்வது, உண்மையை திரித்துக்கூறும் நிலையில் அவரே உண்மையை உரத்துக்கூறுவதாக கற்பனையில் மிதப்பவரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்கமுடியும்?

அவர் எழுதியிருந்த விஷயம் முத்துப்பேட்டை டாட் காமில் இருப்பதாக முன்பு குறிப்பிட்டிருந்ததை அவ்வாறு வெளியிடப்படவில்லை என நாம் மறுத்திருந்தோம். பெயர் விஷயத்தில் வரிந்துகட்டி எழுதியவர் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

கற்பனையில் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கப் பார்க்கும் கோயபல்ஸின் குரு உமர்தான், எனவே அவர் கோயபல்ஸ் தத்துவத்தை கூறும்போது ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உதாரண்ததை ஏற்கமுடியாது என குறிப்பிட்டிருந்தோம்.

ஏனெனில் எமக்கு எடுத்துக்கூறப்படுபவைகளில் உண்மை எது, உண்மையின் பெயரால் இட்டுக்கட்டபடுவை எவை என்ற தெளிவு எமக்குண்டு. உமரது கோயபல்ஸ் கூச்சலுக்கு நாம் செவி சாய்க்கவில்லை. ஏமாறத்தயாராகவில்லை என்பதால் எம்மீது அவருக்கு வருத்தம் ஏற்படுவது நியாயம் தான்.

ஏன்ன செய்வது பிரதர்! தவ்ஹீதிற்கும் தக்லீதிற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக நான் மட்டுமல்லாமல், அல்லாஹ்வின் பெரும் கிருபையால் தமுமுகவிலுள்ள ஒவ்வொரு தவ்ஹீத்வாதியும் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்களே.

பாவம் உதாரணம் சொல்லவந்து அது அவருக்கே புரியாமல் போனதால் பாதியிலே விட்டுவிட்டு விழி பிதுங்கி நிற்கிறார்.

அடுத்தவன் தோட்டத்தில் உள்ள பம்ப் செட் நீர் பாய்ச்சிக்கொண்டு அது நந்தவன சோலையாக இருக்கிறதாம் . . . என்னுடைய, என்னைப்போன்ற ஒவ்வொரு தமுமுககாரனின் வியர்வையில், ரத்தத்தில் செழித்திருந்த நந்தவனத்தை காவல்காக்க வளர்த்த நாய், வெறிகொண்டு, வளர்த்த எஜமானர்களையே குதறிக்கொண்டுள்ளது. வெறிநாய்குரிய வைத்தியம் நிறைவேற்றப்பட்டால், அந்நாய் பின்னால் சுற்றும் பைத்தியங்கள் தெளிந்துவிடும். (இது ஓர் உதாரணம்)

பறிகொடுத்துள்ள எங்களுக்குத்தான் அதன் வலி தெரியும் - திருடிச்சென்றவர்களுக்கு அது தெரியாது என எழுதியிருந்தோம். இக்கருத்தை கேலிப்பொருளாக்கியதிலிருந்து அந்த வலி தனக்கு தெரியாது, ஏனெனில் நாங்கள் திருடியவர்கள் என உமர் ஒப்புக்கொண்டுள்ளார். நன்றி!

இஸ்லாமிய சட்டம் ஜகாதாக இருந்தாலும், நபித்தோழர்கள் பற்றிய விமரிசனமாக இருந்தாலும், குர்ஆன் தர்ஜமாவிலுள்ள குளறுபடிகளாக இருந்தாலும், ஏன் குலுங்கிய கும்பகோண கணக்காக இருந்தாலும்,
கடற்கரையே இல்லாத வேலூருக்கு சுனாமி நிதி பங்கிட்டதாக இருந்தாலும், சுனாமி நிதியில் களவாடிய உணர்வு வார இதழின் நஷ்டம் ஈடுசெய்யப்பட்டதாக இருந்தாலும், சுனாமி நிதியில் ததஜ இயக்கத்தவருக்கு சீருடை வாங்கியதாக இருந்தாலும் இவைபோன்ற எண்ணற்ற விஷயங்களில் குர்ஆன் சுன்னாபடி தனிப்பட்ட கருத்து என ததஜவினர் (உமர் உட்பட) கருத்துக்கள் கேட்கப்பட்டால் அதற்குரிய பதில்கள் தான் நாம் முன்னர் எழுதியிருந்தோம்.

அப்படி இல்லையாம் சுடச்சுட பதில் எழுதுகிறாராம்.

என்ன பதில் நாம் குறிப்பிட்டிருந்த கேள்வியையும் அதற்கு அவர் அளித்துள்ள பதிலையும் பார்வையிடுங்கள்.

நமது கேள்வி:
குற்றம் சாட்டப்பட்டவருடைய வாக்கு மூலம் எப்படி தீர்ப்பாக அமையும் ?

அவரது பதில் : தொடர்பில்லாமல் சம்பந்தமில்லாமல் குற்றம் சாட்டுபவன் பைத்தியக்காரன் சித்த பிரமைக்காரன்.

எது தொடர்பும் சம்பந்தமும் இல்லாதது. தமுமுகவின் வருமானத்திற்கு வழிவகைகாணும் விதமாக டிரஸ்ட் உருவாக்கப்பட்டு அதற்கென நிதி உதவிகள் பெறப்பட்டு சொத்துக்கள் வாங்கும் சமயம் அல்லாஹ்வை சாட்சியாக்கி அமானிதமாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதே. அந்த அமானிதத்தை களவாடிக்கொண்டதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டுமென்ற அச்சம் இல்லாதவர்களுக்கு இஸ்லாத்துடன் தொடர்பும் சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை தான்.

ஆனால் பலநூறு, பல்லாயிரக்கணக்கான சமுதாய ஆர்வலர்கள் வாரி வழங்கியது தமுமுக எனும் விருட்சம் பட்டுப்போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். அவர்கள் இஸ்லாத்தோடும் சமுதாயத்தோடும் தொடர்பும் சம்பந்தமும் உள்ளவர்கள். எனவே இவ்வுலகில் இல்லாவிட்டாலும் மறுமையில் பறிகொடுத்தவற்றிற்கு பகரமாக நன்மைகளையும், பொறுமை காத்ததற்காக பாவமன்னிப்பையும் அல்லாஹ்விடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் உள்ள நன்மக்கள். அவர்களுக்கு என்றென்றும் அல்லாஹ்வின் அருள் கிட்டும்.

கலிமா சொன்னால் முஸ்லிம்தான் என பேராசிரியர் கூறினாராம் கலிமா சொல்லாமலேயே முஸ்லிம் ஆகலாம் என உமர் கூறுவாரோ.

இஸ்லாத்தில் துவக்கமே ஷஹாதத் கலிமாவில் தானே உள்ளது. அதை கூறுவது எப்படி தவறாகும்.

இறுதியாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (ஷிர்க்கைத்தவிர) தான் நாடியவைகளை மன்னிக்கிறான். ஆனால் ஒரு அடியான் மற்றொரு அடியானுக்கு அநீதி இழைத்துவிட்டால் சம்பந்தப்பட்டவர் மன்னிக்காத வரை அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை - என்ற எச்சரிக்கையை நினைவூட்டி, பலநூறு பல்லாயிரக்கணக்கானவர்களின் பங்களிப்பான ட்ரஸ்டையும், பத்திரிக்கையையும் திரும்ப ஒப்படைத்து அவர்கள் அனைவர்களிடமும் மன்னிப்பை பெறாதவரை மீட்சி இல்லை எனக்கூறி நிறைவு செய்கிறேன்.

ராவுத்தர் 20.06.2006

Wednesday, June 07, 2006

குற்றவாளியின் வாக்குமூலம் தீர்ப்பாகுமா?

அன்பு வாசகர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தீன் முஹம்மதுவின் கள்ளத்தனம் தோலுரிக்கப்பட்டதால், அவர் பின் வாங்கப்பட்டு, உமர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் என நாம் குறிப்பிட்டதும் துள்ளிக்குதித்து மீண்டும் தனது வழக்கமான பொய்களுடன் தீன் முஹம்மது வரத் துவங்கியுள்ளார்.

இதன் மூலம், இவர் எங்களுடைய ஆள் அல்ல, இப்படி ஒருவரே எங்களுக்குத் தெரியாது என ததஜ மீண்டும் மறுக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளார்.

உமர், தனது தலைவரின் பாணியை தவறாமல் பின்பற்றுபவர். அதாவது அவரது அடிவருடி. எனவே தான், நாம் எழுதிய விஷயத்திற்கு பதில் தரும் முன் நமது பெயரைப் பிடித்துத் தொங்குகிறார்.

நாம் குதிரை மேய்ப்பவருமல்லர், இஸ்லாம் தடை செய்த ஜோதிடக்காரருமல்லர். தவிர உமர் குறிப்பிட்டுள்ளது போல் இக்கடிதம் முத்துப்பேட்டை டாட் காம் இலும் இல்லை.

கோயபல்ஸ்கே இவர்கள் குரு என்பதால், தத்துவத்தின் விளக்கத்தை இவர்களிடமிருந்து பெறலாம். ஆனால் உதாரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமுமுகவிற்காக ஆரம்பிக்கப்பட்ட உணர்வு தமுமுகவை தாக்கி எழுதுவதும், தமுமுகவிற்காக துவக்கப்பட்ட டிரஸ்ட்டின் வருமானம் வேறு வகையில் விரயமாக்கப்படுவதையும் காணும், மனசாட்சியுள்ள உண்மை தவ்ஹீதுவாதிகள் எவரும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய சத்தியமான ஒரு விஷயம், அவை களவாடப்பட்டுள்ளது என்பதாகும்.

பறி கொடுத்துள்ள எங்களுக்குத்தான் அதன் வலி புரியும். திருடிச் சென்றவர்களுக்கோ திருட்டுக்கு தோள் கொடுப்பவர்களுக்கோ அந்த துயரம் புரியாது. பட்டால் தான் புரியும்.

பேராசிரியர் சொல்வதை எதிரொலிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. உண்மையாக மக்கள் மன்றத்தில் தெளிவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அங்கு என்ன நிலை? தனது சொந்த புத்தியை உபயோகித்து பதிலளிக்க எவருமில்லை. ஜகாத் ஆக இருந்தாலும் சரி, டவுசராக இருந்தாலும் சரி, சுனாமியாக இருந்தாலும் சரி, டிரஸ்ட் ஆக இருந்தாலும் சரி, தேர்தலில் அதிமுக ஆதரவு என்றாலும் சரி எதுவும் 'அண்ணன் சொன்னால் சரி', 'அண்ணன் செய்தால் சரி', 'அவரிடமே பேசுங்கள்', 'கேட்டுச் சொல்கிறோம்' என்பது தான் பதில்கள்.

இந்த இலட்சணத்தில் நம்மைப்பார்த்து வாந்தி முதல் பல அநாகரீகமான வார்த்தைகளை எழுதியுள்ளார். இவ்வார்த்தைகள் அனைத்தும் அவர்களுக்கே பரிபூரணமாக பொருந்தும்.

திருச்சி ரோஷன் மஹாலில் கூடிய கூட்டத்தை ததஜ கூட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் உமர், அதனை ததஜவின் முதல் மாநில பொதுக்குழு என தனது மெயிலில் குறிப்பிட்டது ஏன்? இதுதான் கோயபல்ஸ்தனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு. ததஜ என அப்பொழுது பெயரிடப்படவில்லை என இன்று ஒப்புக்கொள்ளும் உமர், தான் பொய்யுரைத்ததற்கு தானே சாட்சியாக பல்லிளிக்கிறார். பரிதாபம்.

இதே போலத்தான் மேலக்காவேரி பதிலும், மேலக்காவேரியில் கேள்வி கேட்டவர், 'நீங்கள் டிரஸ்டை தூக்கிக் கொண்டு ஓடியதாக குற்றம் சாட்டப்படுகிறதே?' எனக் கேட்கிறார். அதற்கு பிஜே பதில் சொல்லி விட்டாராம். அதுவே தீர்ப்பாம். குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் எப்படி தீர்ப்பாகும் என்பதுவே நமது கேள்வி. நாம் மட்டுமல்ல அந்த டிரஸ்ட்டை உருவாக்கியதற்காக நிதி வசூலித்த, நன்கொடைகளை வாரி வழங்கிய பலநூறு, பல்லாயிரக்கணக்கான தமுமுககாரர்கள் மற்றும் சமுதாய ஆர்வலர்களின் கேள்வியும் இதுதான்.

இதனை தீர்ப்பாக எடுத்துக் கொள்ள நியாயவான்கள் யாரும் உடன்பட மாட்டார்;கள். ஏனெனில் உமர் அளவிற்கு உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் வேறு எவருக்குமில்லை. தமுமுகவிற்கான நிரந்தர வருவாயை உருவாக்க என்ற கொள்கை வகுத்து வசூல் செய்யப்பட்டதை அறியாத, அந்த நிதியில் பங்களிக்காத யாரோ ஒரு அனாமதேயம் கேட்ட கேள்விக்கு, குற்றச்சாட்டுக்கு ஆளானவர் கூறியதே தீர்ப்பு என அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மறந்தவர்கள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.

தீர்ப்பளிப்பதில் தவறிழைக்காதவனான அல்லாஹ்வின் சன்னிதானத்தில் இவர்களின் நிலை என்னவாகும். திருடியதை திரும்ப ஒப்படைப்பதுடன் மரணத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட எம் அனைவரிடமும் மன்னிப்பு பெறவில்லையானால் அதோகதிதான் என எச்சரிக்கிறோம்.

டிரஸட் விஷயத்தில் தமுமுகவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார் என குற்றம் சாட்டிய பொமுது, அதனை நம்ப இயலாதவர்களாக, பொதுவாக நல்லெண்ணம் வைக்க வேண்டும் என நம்பியவர்களாக, ததஜவிற்கு வால் பிடித்தவர்கள் சாரி - கொடி பிடித்தவர்கள் கூட சுனாமி நிதியை சுருட்டி சீருடை வாங்கியதாக (கள்ள) கணக்கு எழுதியதில் கோதித்துப் போய் விட்டனர்.

ஆனாலும், தான் நம்பி வந்த மண்குதிரை கரைவது கண்டு, கண்ணீருடன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். திட்டச்சேரி சித்தீக் முதல் டி ஆர் பட்டிணம் அப்துர்ரஹ்மான் கான் வரை இதுதான் நிலை.
தமுமுகவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது, சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது, சுனாமியில் சருட்டியது, சமுதாயத்தை தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்து கையூட்டுப் பெற்றது, சமுதாய இளைஞர்களை சீரழிவிற்கு உள்ளாக்கியது என ஒவ்வொன்றாக வல்ல அல்லாஹ் வெளிக் கொண்டு வருவான்.

அந்த நம்பிக்கையில் தான் பாதிக்கப்பட்ட தமுமுககாரனும், கோவை சிறைவாசிகளும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்து வருகிறார்கள். அந்த பிரார்த்தனை வீண்போகாது.

இறுதியாக கூட தனது கோயபல்ஸ் தனத்தை விட்டுவிட உமருக்கு மனமில்லை போலும். பேராசிரியர் டிக்ளேர் செய்தார் என தனது வழக்கமான பாணியில் மொட்டையாக குறிப்பிட்டுள்ளார். அதை விபரமாக வெளியிட வேண்டும். முன்பு ஒருமுறை முற்றம் பத்திரிக்கையில் 'பேராசிரியர், தான் தவ்ஹீதுவாதியல்ல' என பேட்டி அளித்துள்ளதாக முடிந்தவரை பரப்பினார்கள். அப்படி ஒரு பேட்டியே வெளிவரவில்லை என நிரூபித்த பின் துள்ளிக் குதித்தவர்கள் (உமரின் பாஷையில் - வாந்தி எடுத்தவர்கள்) அடங்கிப்போனார்கள். இதுவும் அந்தவகை தானோ?

அன்புடன், ராவுத்தர் 08.06.2006

Sunday, June 04, 2006

மீண்டும் பொய்யன் தீன் முஹம்மது.

மௌலவி முஜிபுர்ரஹ்மான் விஷயத்தில் பொய்யுரைத்து ஈமெயில் அனுப்பி பித்னா செய்து கொண்டிருந்த பொய்யன் தீன் முஹம்மது மற்றொரு பொய் மூலம் மீண்டும் முளை விட்டிருக்கிறார்.

அவர் அனுப்பிய மெயிலில், 'அல்லாஹ்வின் கட்டளைகளையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் போதித்து வரும் (தமிழ்நாடு) தவ்ஹீது ஜமாத்தினரை எதிர்ப்பது ஒன்றையே பிரதான கொள்கையாக கொண்டிருக்கும் கள்ள இணையதள கலக அரசியல்வாதிகள் பேராசிரியர் இளையவன் அவர்களின் வழிகாட்டுதல்களால் மனநோயால் பீடித்த கலக கள்ள இணையதளத்தின் மூலம் இன்னும் இவர்கள் வெறி பிடித்தவர்களாகவே இருந்து தர்கா வணக்கத்தையும் மவ்லுதையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை' - என்றென்றும் அன்புடன் தீன் முஹம்மது, என்று எழுதியுள்ளார்.

இதில் உள்ள பொய்கள்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ததஜவை அழிப்பதற்காக இது வரை எந்த செயலிலும் ஈடுபட வில்லை. ஆனால் தமுமுகவை அழிப்பது ஒன்றே தமது குறிக்கோளாகக் கொண்டு ததஜ இயங்கி வருகிறது. இதனை அதன் தலைவர் பல இடங்களில் உறுதி படுத்தியுள்ளார்.

தமுமுக தர்கா வழிபாட்டை பரப்புகிறது என்ற அபாண்டமான பொய்யை எழுதியுள்ள தீன் முஹம்மது அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சுகின்ற கூட்டத்தில் ஒருவராக நமக்குத் தெரியவில்லை.

கனிராவுத்தர் 04.06.2006

Friday, June 02, 2006

தொடரும் ததஜவின் கோயபல்ஸ்தனம்

சில நாட்களுக்கு முன் ஒரு வலைப்பூவில் (தமிழக முஸ்லிம் அரசியல் மேடை) ததஜவின் தீன் முஹம்மது என்பவரின் சர்ச்சைக்குரிய மெயில்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் கலக்கப்பட்டிருந்த பொய்கள் பட்டியலிடப்பட்;டது.

அதனை தொடருந்து தீன் முஹம்மது ஓரம்கட்டப்பட்டு உமர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் அவருக்கு சளைத்தவரல்ல, இவர் எந்த அளவிற்கு மிகைப்படுததுவார் அதாவது பொய்யுரைப்பார் எனப்பார்த்தால், ஆரம்பத்திலேயே தனக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதாக பறைiசாற்றிக்கொள்வார்.

ஈமெயிலில் இவர் அனுப்பும் கடிதத்தை பல்லாயிரக்கணக்கானவர்கள பார்வையிடுவதாக இருந்தால் அனைவருக்கும் இவர் மெயில் அனுப்ப வேண்டும். ஆனால் இவர் யாருக்கெல்லாம் அனுப்புகிறாரோ அவை அனைத்தும் வெளிப்படுத்தப்படுவதில்லை. எனவே ஒருவருக்கு அனுப்புவதையே ஓராயிரம் பேருக்கு அனுப்பியதாக கருதிக்கொண்டு, ஒரு சிலருக்கு அனுப்புவதை பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அனுப்பப்பட்டதாக கற்பனையில் மிதக்கிறார் போலும்.

மிகைப்படுத்துதல் என்பதே அளவுக்கு மீறி மிகைத்து, நியாய உணர்வு மறத்துப்போய், உண்மையை மறைத்தே கூறும் இவர், தனக்குத்தானே இட்டுக்கொண்ட அடைமொழி (உண்மையை உரத்துக்கூறும் உமர்) இவரின் கோயபல்ஸ் தனத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

தனது கோயபல்ஸ்தனத்தின் அடுத்த கட்டமாக புதிய ஒரு கருத்தை பரப்ப முயற்சிக்கிறார். முளையிலேயே கிள்ளி இதனை ததஜ சகோதர்கள் தடுத்து நிறுத்தாவிட்டால், பின்னாளில் தமது சொத்துக்களை பறிகொடுக்க நேரிடலாம்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, பி.ஜே பெட்டி வாங்கிக்கொண்டார் என பரவலாக சமுதாய மக்கள் பேசிக்கொள்வதன் தாக்கம், ததஜவின் தீவிர ரசிகனையும் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தமுமுகவினர் சுனாமி திருடர்கள் என பி.ஜே தான் கையகப்படுத்திய பத்திக்கையில் மீண்டும் வெளியிட்டு திசை திருப்ப முயற்சித்தார்.

சுனாமியை தங்களது இயகத்தவர்களுக்கு சீருடை வாங்கவும், தனது பத்திரிக்கையின் நஷ்டத்தை ஈடு செய்வதற்கும் உபயோகப்படுத்திக்கொண்ட ததஜவினர்தான் உண்மையான சுனாமி திருடர்கள் என்று தமுமுகவினர் விளக்கப்பத்தியதோடு, ததஜ தலைமை பொதுச்சொத்துக்களை அபகரிப்பதில் எந்த அளவு முனைப்பானவர்கள் என்பதை பட்டியலிட்டார்கள்.

அதன்படி தமுமுகவிடமிருந்து டிரஸ்ட் மற்றும் பத்திரிக்கையை அபகரித்துக்கொண்டவர், தமுமுக அலுவலகத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டவர் என பிஜே மீது அடுக்கடுக்கான புகார்கள் பொதுமக்களிடம் பரவ ஆரம்பித்ததும், அவற்றிற்கு தனது கோயபல்ஸ் புத்தியில் கடைந்தெடுத்த பதிலாக, உண்மையை மறைத்துக்கூறும் உமர் ஒரு மெயில் அனுப்பியுள்ளார்.

அந்த மெயிலில் தமுமுகவிலிருந்து பி.ஜே ஓடியபோது (அல்லது விரட்டப்பட்டபோது) ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி கட்சியும் பேனரும் தமுமுகவிற்கு என்றும், டிரஸ்ட் பத்திரிக்கையும் ததஜவுக்கு என்றும் ஒப்பந்தம் செய்தார்களாம்.

வரலாற்று புரட்டு பற்றி கேள்விப்பட்டுள்ளோம் அவையெல்லாம் கடந்தகால வரலாற்றை இஸ்லாத்திற்கு(அ)முஸ்லிமிற்கு எதிராக திரித்து நிகழ்கால(அ)வருங்கால சந்ததியினருக்கு போதிக்கும் முயற்சி ஆகும்.

ஆனால் திருவாளர் உண்மையை மறைக்கும் உமர் அவர்கள் வரலாற்று புரட்டில் புரட்சி செய்யும் யூத, சங்பரிவார கூட்டத்தினரையே மிஞ்சி விட்டார். கோயபல்ஸ்கே குருவாகும் தகுதி வந்துவிட்டால் தானோ என்னவோ தமுமுகவிற்கு சொந்தமான டிரஸ்ட் குறித்து நடுத்தெருவில் வைத்து ஒப்பந்தம் செய்து கொண்டதாக உளறியுள்ளார்.

திருச்சியில் நடந்த ததஜவின் முதல் பொதுகுழுவில் . . .
என்று தனது மெயிலில் குறிப்பிட்டுள்ளது கூட பச்சைப்பொய்தான்.

ஏனெனில் தமுமுகவிலிருந்து ஓடிப்போய் திருச்சியில் நின்று கொண்டு அழைத்தபோது ததஜ என்ற பெயருள்ள எந்த அமைப்பும் பூமியில் இருக்கவில்லை.
இல்லாத அமைப்புக்கு ஏது பொதுகுழு, அப்புறமென்ன முதல் பொதுக்குழு?
இப்படி, உண்மைக்கு சம்பந்தமே இல்லாதவற்றை கூறுபவர்தான் தனக்குத்தானே உண்மையை உரத்துக்கூறும் என புகழாரம் சூட்டிக்கொண்டு எழுதியுள்ளார்.

அடுத்ததாக மேலக்காவேரியில் யாரோ ஒருவர் கேள்வி கேட்டாராம் அதற்கு பொய்வாளர் பி.ஜே கூறிய பதிலே தீர்ப்பாக அமைந்துவிட்டதாம்.

குற்றம்சாட்டப்பட்டவர், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கலாம் ஆனால் அதுவே எப்படி தீர்ப்பாக ஆகும்.

இப்படி நியாயமான கேள்விகளை கேட்பவர்கள் உண்மையை மறைத்துக்கூறும் உமரின் பார்வையில் புரியாத ஜென்மங்கள்.

நமது கேள்வியெல்லாம் . . .
1. இந்த உமர் பி.ஜேபின் பினாமியா?
2. குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலமே தீர்ப்பாகும் என்பது அபாயகரமான அடிப்படையை கடைந்தெடுத்த தவ்ஹீத்வாதிகள் நாங்கள் தான் எனக்கூறும் ததஜ சகோதரர்கள் ஏற்று ஏற்றுக்கொள்கிறார்களா?
3. உமரின் மெயிலில் குறிப்பிடப்பட்டவை உண்மையா அல்லது கற்பனையா என ததஜ தெளிவாக்க வேண்டும் (ஏனெனில் இது ததஜவினர் ஒத்துக்கொண்ட தீர்ப்பு என எழுதியுள்ளார்)
4. உண்மைதான் என ஏற்றுக்கொள்வார்களேயேனால், கடந்த இருவருடங்களுக்கு மேலாக இதுகுறித்து ததஜ தலைமை ஒன்றுமே சொல்லாதது ஏன்?
5. உண்மைதான் என ஏற்றுக்கொள்வார்களேயேனால் இப்போது ததஜ இயக்கத்தின் பெயரால் சேகரித்து வைத்துள்ளதையெல்லாம் நாளை இழக்க தயாராகட்டும்.
6. அல்லது தீன் முஹம்மது விஷயத்தில் நடந்தது போல், உமரும் ஒரு கள்ள ததஜ விசுவாசி என்றும், உமரது கருத்துக்கள் எல்லாம் கற்பனையே என்றும் புறந்தள்ளப்போகிறார்களா? இல்லை எப்படியானாலும் உமர் பிஜேயின் பினாமிதான் பிஜேயின் ஒப்புதலுடன் தான் இக்கருத்துக்களை எழுதியுள்ளார் என ஒப்புக்கொள்ளப்போகிறன்றனரா?

ஒருவேளை பொருளாதார மோசடி எவ்வளவு நடந்தாலும் எங்களால் எதிர்த்து பேச முடியாது என எப்போதும்போல் புழுங்கப்போகிறார்களா?

ஏனெனில், இதுவரை பொருளாதார விஷயத்தில் எதிர்கேள்வி கேட்ட பனைக்குளம் ஷாஹுல் ஹமீது இன்று ஓரம்கட்டபட்டுவிட்டார்.

அதேபோல் அல்கோபாரிலுள்ள திட்டச்சேரி சித்தீக், பொருளாதார விஷயத்தில் ததஜ தலைமையின் முரண்பாடுகளை பட்டியலிட்டபோது ஸ்பீக்கர்போனில் போட்டுக்கொடுக்கப்பட்டு உடனே பதவியிலிருந்து துரத்தப்பட்டார்.

இத்தகைய முன் உதாரணங்களைக் கண்டு வாய்மூடிய மௌனிகளாகப்போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

கனி ராவுத்தர். 03.06.2006