Wednesday, August 30, 2006

விளக்கமா? மழுப்பலா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அறிவை அடகு வைத்துள்ள ததஜவின் பொய்யை உரத்துக் கூறும் உமர், சுனாமி திருடர்களுக்கு ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார்.

அந்த விளக்கத்தைப் படித்தாலே தறுதலை கூட்டம் ததஜவினர், எந்த அளவுக்கு மாங்காய் மடையர்கள் என்பதனை விளங்கிக் கொள்ளலாம்.

தவ்ஹீத் வியாபாரி கிரிமினல் பிஜேவின், கிரிமினல் கூட்டம் ததஜ, ஆழிப் பேரலையின் பெயரால் அமுக்கிக் கொண்ட பெருந்தொகையை, அவர்கள் வெளியிட்ட (கள்ள)கணக்கின் மூலமாகவே பகிரங்கப்படுத்திய கனவான்களின் கேள்விகளுக்கு விளக்கம் என்ற பெயரில் மழுப்பி புலம்பியுள்ளார் திருவாளர் உண்மையை மறைத்துக் கூறும் கிரிமினல் உமர்.

சுனாமி நிதியில், கிரிமினல் கூட்டம் ததஜ சுருட்டிக் கொண்ட தொகை, கணக்கிலடங்காததாக இருந்தாலும், வெளியிடப்பட்ட (கள்ள) கணக்கின் அடிப்படையில் எழுந்த கேள்விகள்:

1) சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட தொகையில், களவாடிய பத்திரிக்கை நஷ்டத்தை ஈடுகட்ட ரூ. 2 இலட்சம் ஒதுக்கீடு - எந்த அடிப்படையில் ஹலாலானது.

2) ஜனவரி 2005 முதல் வாரம் முதல் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட (குண்டர்களுக்கு) தொண்டர்களுக்கு, மார்ச் 2005 க்குப் பின் முடிவான சீருடை வழங்க எப்படி நிதி ஒதுக்கப்பட்டது.

3) விளம்பரம், வினியோகம், இதர செலவுகளை மறுமையை நம்பாத எத்தனையோ இயக்கங்கள் (அ) தனி நபர்கள் கூட தாமே ஏற்றுக் கொண்ட நிலையில் - உலக சரித்திரத்தில் முதன் முறையாக - எல்லாவற்றிற்கும் (கள்ள) கணக்கெழுதி பொருளாதாரத்தை சுரண்டிக் கொண்டது - எந்த வகையில் நியாயமானது.

(இதற்கு பதிலளித்த (?) வகையில், தாங்கள் தவ்ஹீதைச் சொன்னாலும், சமுதாயப்பணிகளை செய்வதாக சொல்லிக் கொண்டாலும், கூலி வாங்காமல் ஒன்றும் செய்ததில்லை - செய்வதில்லை - செய்யப் போவதுமில்லை என ஒப்புக் கொண்ட உமருக்கு நன்றி!)

இப்படி முன்வைக்கப்பட்ட எந்த கேள்விக்கும் முறையான பதில் இல்லாமல் மழுப்பியதன் மூலம் கிரிமினல் பிஜே தலைமையிலுள்ள கிரிமினல் கூட்டம் ததஜவே சுனாமி திருடன்கள் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

உண்மை தவ்ஹீத் வாதிகளே! சுய சிந்தனையுள்ள முஸ்லிம்களே சிந்திப்பீர்.

வஸ்ஸலாம்.

ராவுத்தர் 31.08.2006

த.த.ஜ.வினரின் தற்கொலை முயற்சி

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

லுஹா, பி.ஜெ, மசூதுயூசுபி போன்ற பூசாரிகள் மஸ்ஜிதுர்றஹ்மான் பணத்தில் மஞ்சள் குளிப்பு நடத்தி வருகிறார்கள். கடையநல்லூர் பள்ளியை வக்பு போர்டுக்கு கீழ் கொண்டு வந்தார்கள். அதே மாதிரி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானுக்கும் வக்பு அதிகாரிகள் வந்து விட்டார்கள். மக்களே பள்ளியை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்து விட்டார்கள் ஓடி வாருங்கள் என்று மைக்கில் சத்தம் போட்டு இருக்கிறார்கள். துப்பரவாக இருந்தாலும் இல்லா விட்டாலும் எல்லா பெண்களும் வாருங்கள் என அழைத்து 60க்கும் மேற்பட்ட பெண்களை பள்ளிக்குள் வைத்துள்ளார்கள். அவர்களில் பெரும்hலானவர்கள் தொழ முடியாதவர்கள். அதாவது சுத்தமில்லாதவர்கள்.



எல்லாரையும் கூலி பேசி கூட்டி வந்துள்ளார்கள். த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்ற லுஹா நேற்று காடை பஷPர் வீட்டில் கூட்டம் போட்டு ரவுடிகளை பேரம் பேசி உள்ளார். ஒரு ஆளுக்கு 2000ரூபாய் என 15 பேரை ஏற்பாடு செய்துள்ளார். இந்த 15 பேரும் இரவு முழுவதும் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்ட புதிய முஅத்தினும் இமாமும் இன்று அஸரில் பள்ளிக்குள் சென்றார்கள். லுஹாவால் கூலிக்கு பிடித்து வரப்பட்ட சுனாமி திருடர்களான த.த.ஜ.வினரில் 14 பேர் பள்ளியின் 3வது தளமான மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள். சிலர் கீழே படுத்துக் கொண்டு செத்து விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள்.



பி.ஜெ.க்கு தேவைப்பட்டால் தற்கொலையை ஹராம் என்பார். தேவைப்பட்டால் முஸ்தபா ரஷhதி போன்றவர்கள் உடலில் குண்டை கட்டி சிந்தாதிரி பேட்டைக்கு அனுப்பி ஹலால் என்பார். அந்த பி.ஜே. இப்பொழுது தற்கொலை ஹலால் என கூறி விட்டார். எனவே த.த.ஜ. வினர் தற்கொலை முயற்சி செய்ததால் வக்பு சூப்ரண்டெண்ட் கடையநல்லூர் உஸ்மான் மைதீன் திரும்பி விட்டார். தவ்ஹீது வியாபாரிகளான லுஹாவோ, பி.ஜெ.யோ, மசூதுயூசுபியோ தற்கொலை செய்ய மாட்டார்கள் பிறரைத்தான் தூண்டி விட்டுத்தான் பிழைப்பு நடத்துவார்கள்.

துபையிலிருந்து சகோ. பஸ்லுல் இலாஹி

Tuesday, August 29, 2006

பிஜே - ஆப்பசைத்த குரங்கா?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்

கடையநல்லூர் ஜாக் பள்ளியை வக்பு பள்ளி என தீர்ப்பாயம் மூலம் தீர்ப்பு பெற்றது த.த.ஜ. அதன் எதிரொலி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு அதிகாரிகள் நுழைந்து விட்டனர். கோர்ட் தீர்ப்பு வரும்வரை பள்ளி வக்பு வாரிய பொறுப்பில்இருக்க வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள். த.த.ஜ.வினரும் லுஹாவும் அதிகாரிகளின் கைகளை பிடித்து கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் பார்க்காத இடத்தில் நின்று காலில் விழவும் தயாராக ஆகி விட்டார்கள். எப்படியாவது பேரம் பேசி முடித்து விடுங்கள் என கிரிமினல் அண்ணன் உத்தரவு போட்டுள்ளார். போலீஸ் படை புடை சூழ மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு அதிகாரிகள் நுழைந்து விட்டனர்.

மற்ற செய்திகள் விரைவில்

துபையிலிருந்து ஃபலுலுல் இலாஹி

Monday, August 28, 2006

சுனாமி திருடன்கள்



மேற்கண்ட 75 லட்சத்தில் ஒவ்வொரு மாவட்ட த.த.ஜ.வும் என்ன என்ன வகையில் செலவு செய்தன என்ற விபரம் இல்லை. மாநில தலைமை செலவு செய்த விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. மாநில தலைமையின் செலவு விபரங்களை படித்தாலே மாவாட்ட தலைமைகள் செய்த செலவின் லட்சணங்களை புரியலாம்.

சுனாமியின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கே கொடுக்கப்பட்டது. மேச் செலவுகள் அனைத்தையும் த.த.ஜ.வினரே செய்து கொண்டனர் என்று பீற்றினர். அவர்கள் தலைமை வெளியிட்டுள்ள கணக்கு கூட அவர்கள் தலைமை மேய்த செலவுகளை காட்டிக் கொண்டிருக்கிறது.

1. சுனாமி ரசீது பிரிண்டிங் செலவு 9,000. இது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய்ச் சேர்ந்த செலவு அல்ல. இந்தச் செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியான எந்த பயனும் இல்லை. எந்த பிரிண்டிங் வேலையாக இருந்தாலும் அது பி.ஜே. மைத்துனன் ஷம்சு மூலமோ இன்னொரு மைத்துனன் இதாயதுல்லாஹ் மூலமோதான் நடந்தாக வேண்டும். சிவகாசிக்கு போய் பிரிண்ட் செய்யப்பட வேண்டியதாக இருந்தாலும் சரி. இது த.த.ஜ.வில் எழுதப்படாத விதியாக உள்ளது. ஆக இந்த பிரிண்டிங் செலவு மூலம் இலாபமாக குறைந்தது கால் சதவீதம் பி.ஜே. குடும்பத்திற்குத்தான் சேர்ந்துள்ளது.

2. பாலிதீன் பைகள் 1,500. இந்தச் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்தது அல்ல. மேற்கண்ட விபரப்படி பி.ஜே. குடும்பமே பயன் அடைந்துள்ளது.

3. நிவாரணப் பணியாளர்கள் பனியன் தொப்பி 20,000. திடீரென வந்ததுதான் சுனாமி. அது வந்தவுடன் காப்பாற்ற சென்றவர்களுக்குப் பெயர்தான் நிவாரணப் பணியாளர்கள். முதலிலேயே தங்களுக்கு பனியன் தொப்பி வாங்கச் சென்றால் அவர்கள் சுனாமி நிவாரணப் பணியாளர்களா? சுனாமி கொள்ளையர்களா? அது வரை பனியன் தொப்பிக்கு கூடவா வக்கற்று இருந்திருக்கிறார்கள்? அவர்கள் 20,000க்கு வாங்கியதாகக் காட்டும் பனியன் தொப்பிகளில் டி.என்.டி.ஜே. கொடியுடன் கூடிய கலரில் உள்ளது. சுனாமி வந்தது 2004 டிசம்பரில். ஐ.ஜே.பி.யின் கொடியை திருடி த.த.ஜ.வால் முடிவு செய்யப்பட்ட கொடி என்ற பொய்யை அறிவித்தது. 2005 மார்ச்சில். 2005 மார்ச்சுக்குப் பிறகு வாங்கிய த.த.ஜ. பனியன் தொப்பிகளை சுனாமி கணக்கில் சேர்த்துள்ளார்கள். ஆக த.த.ஜ. பனியன் தொப்பி போட்டுத் திரிபவர்களைக் கண்டால் சுனாமி திருடர்கள் என எளிதில் அடையாளம் காணலாம். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல. இந்த பனியன் தொப்பி வாங்கியதில் உள்ள லபாமும் பி.ஜே. குடும்பத்திற்கே போய் சேர்ந்துள்ளது.

4. டி.ஏ. 5,260. இந்த டி.ஏ. யாருக்கு சுனாமி நிவாரணப் பணியாளர்கள் போர்வையில் வந்த சுனாமி கொள்ளையர்களான த.த.ஜ.வினருக்குத்தான். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல.

5. டெம்போ ஆட்டோ வகை 235.

6. டீ செலவு 30.

7. நிவாரணப் பொருட்கள் பாதுகாக்க இரவு வாட்சுமேன் 30. த.த.ஜ.வின் சுனாமி நிவாரணப் பொருட்களை பாதுகாக்க இரவு வாட்சுமேனாக யார் இருந்திருப்பார்கள். த.த.ஜ.காரன்தான் இருந்திருப்பான். கூலி வாங்கும் இவனுக்குப் பெயர் நிவாரணப் பணியாளனா? த.த.ஜ. காரன் இல்லை என்ற வாதம் வைப்பார்கள். ஒரு இரவு கூட வாட்சுமேனாக இருக்க த.த.ஜ.வில் ஆள் இல்லையா? அதுவும் மாநில தலைமையின் கதியா இது.

8. ஆட்டோ கூலி 50.

9. நபர் கூலி 50. நபர் கூலி எதற்கு என்ற விபரம் இல்லை. இந்த வேலையை கூட கூலி கொடுக்காமல் செய்ய த.த.ஜ.வில் ஆள் இல்லை. ஒரு நபர் கூட இல்லை.

10. ஈரோடு அரிசி இறக்க 80. அரிசியை கூட கூலி இன்றி இறக்க த.த.ஜ.வில் ஆள் இல்லை. அதுவும் மாநில தலைமையின் லட்சணம் இது. ஆக த.த.ஜ.வே கூலிப்படைதான் என்பதற்கு இது ஆதாரம்.

11. கூரியர் 309.

12. போட்டோ 250. த.த.ஜ.வினர் கூலி வாங்கி விட்டு செய்த வேலையை சேவையாகக் காட்ட எடுக்கப்பட்ட போட்டோக்கள் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தலையில். பத்திரிக்கை என்ற முறையில் உணர்வில் கேமரா இருந்துமா இந்த உணர்வற்ற இரக்கமற்ற ஈனச் செயல். உணர்வு கேமராவில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான் இது. பள்ளிக் கணக்கிலேயே கள்ளக் கணக்கு எழுத ஆலோசனை கூறிய மகான் ஆயிற்றே அண்ணன் பி.ஜே.

http://mdfazlulilahi.blogspot.com/2002/08/13-2.html

13. ஆட்டோ 97.

14. கடிதம் தபால் தலை 474.

15. ஜெராக்ஸ் 100. த.த.ஜ. தலைமையில், உணர்வில் ஜெராக்ஸ் மிஷpன் இல்லையா? இதுவும் உணர்வில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான்.

16. போக்கு வரத்து 7725.

17. உணர்வு 2,00,000.

18. இரண்டு மாத தல ஒளிப்பதிவு கேமரா வாடகை 60,000. இதில் பாக்கர் மூலம் பி.ஜே.க்கு போகும் பங்கு.

19. ஒளிப்பதிவுக் குழு உணவு மற்றும் பிரயாணம் 60 நாள் 12,000. சுனாமி பெயரால் ஒளிப்பதிவுக் குழு மட்டும் இரண்டு மாதம் தின்று உள்ள தொகை மட்டும் 12,000. த.த.ஜ.வின் விளம்பரத்துக்கு எடுக்கப்பட்ட எல்லா வீடியோ செலவையும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய பணத்திலிருந்து எடுத்து விட்டார்கள்.

20. நிதி உதவி கோரி விளம்பரம் 180 நாள். 50,000. த.மு.மு.க.வின் தஞ்சைப் பேரணிக்கு பாக்கர் அல்லாஹ்வுக்காக இலவசமாக விளம்பரம் செய்தார் என்று கூறி பி.ஜே. நீலிக் கண்ணீர் வடித்தார். அது பொய் என சான்று பகிர்கின்றது இந்த சுனாமி கொள்ளை. இதில் விளம்பர கமிஷனில் பி.ஜே.க்கு போனது எவ்வளவு என்பது பாக்கருக்கு மட்டுமே தெரியும்.

21. எடிட்டிங் கன்வேஷன் மற்றும் ஒளிபரப்புச் செலவு 78,000. இப்பொழுது டாண் டி.வி. எடிட்டிங் வகைக்கு என மகன் முஹம்மதுக்கு மாதம் 75 வரை சவூதியிருந்து வர வகை செய்தவர் பி.ஜே. சுனாமி எடிட்டிங்கிலாவது விட்டுக் கொடுத்து இருக்கலாம்.

22. தலைமை மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கல்வி உதவிக்காக நேரடியாக செலவு செய்யப்பட்டது 44,200.

தலைமை மூலம் நேரடியாக செலவு செய்யப்பட்ட சுனாமி செலவு வகை விபரங்கள் என்று தலைப்பிட்டு அவர்கள் 22 வகையான செலவுகளை எழுதியுள்ளனர். இதில் 21 வகையான செலவுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவுகள் அல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக எந்த பயனும் இல்லை. இதை அவர்களே 22வது செலவில் குறிப்பிட்டும் காட்டி உள்ளார்கள்.

த.த.ஜ. மாநில தலைமை செய்த மொத்த செலவு 4,89,540. இந்த நாலே முக்கால் லட்சத்தில் 4,45,340ரூபாய் அதாவது நாலரை லட்சம் ரூபாய். 21 வகையான மற்ற செலவுகள் செய்துள்ளார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக செலவு செய்யப்பட்டது 44,200. மட்டும்தான் அதாவது ஆயிரக் கணக்கில் மட்டும்தான்.

இதை நாம் சொல்லவில்லை பத்திரிக்கை திருடர்களும், டிரஸ்டு திருடர்களும், கொடித் திருடர்களமான சுனாமி கொள்ளையர்கள் வெளியிட்ட கணக்குத்தான் அவர்களை அடையாளம் காட்டி நிற்கிறது. சீச்சீ வெட்கக் கேடு தூ தூ மானக் கேடு.

பைத்தியங்களுக்கு பைத்தியம் முற்றி விட்டால் அது பைத்தியக்கார டாக்டர் போல் பேச ஆரம்பித்து விடும். உண்மையான டாக்டர் அசல் பைத்தியங்களை செக் பண்ணி கூறியவைகளையெல்லாம் நல்லவர்களைப் பாhத்து அந்த பைத்தியங்கள் சொல்லிக் கொண்டிருக்கும். அதன் வெளிப்பாடுதான்

shrrazmi@yahoo.com

என்ற முகவரியிலிருந்து வந்துள்ள மெயில் என்பதையும் பதிவு செய்து கொள்கிறோம்.

பி.ஜெ. சொன்ன தேதியில் கணக்கை சமர்ப்பித்தது.

சுனாமி கணக்குகளை காட்டத் தயாரா? என்று தமுமுகவுக்கு சவால் விட்டார் பீ. ஜெய்னுலாப்தீன். அந்த சவாலை ஏற்று பி.ஜெ. சொன்ன தேதியில் கணக்கை சமர்ப்பித்தது. வரவு, செலவு மற்றும் பாக்கி தொகை என அனைத்து கணக்குகளையும் பத்திரிகையாளர் சோலை, ஐஏஎஸ் அதிகாரி கருப்பன், உயர்நீதிமன்ற வக்கீல் சிராஜுதீன், காயிதே மில்லத் கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான் ஆகியோரின் முன்னிலையில் 10-12-2005 அன்று பொது மக்களிடத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

ஆனால், சவால் விட்ட பீ. ஜெய்னுலாபிதீனோ நாட்கள் அல்ல பல மாதங்களைக் கடந்து முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்கள் உள்ளடங்கிய கூட்டத்தில் சமர்ப்பித்ததாகக் கூறிவிட்டு உணர்வில் அதனை வெளியிட்டுள்ளார். அதிலும் பிழை 1, 2, 3 என்று போய்க் கொண்டே இருக்கிறது. அதேபோல் தவறு 1, தவறு 2, தவறு 3, தவறு 4 என தொடர்................ந்து தவறு 12ல் முடிகிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மக்கள் உரிமையில் தெரிவித்தபடி 68 லட்சம் ரூபாய்க்கு வரவு, செலவு, மீதம் தொகையை பட்டியலிட்டது.

ஆனால் பீ. ஜெய்னுலாபிதீனோ பொதுக்கூட்ட மேடைகளில் சுமார் 1 கோடி ரூபாயை சுனாமி நிதி வசூலித்ததாக பீற்றிக் கொண்டார். ஆயினும் உணர்வில் 83 லட்ச ரூபாய்க்கு வரவு காட்டினார். ஆனால் இன்றோ 8 லட்சத்தை கள்ளக் கணக்கு காட்டி, 75 லட்ச ரூபாய் மட்டும் வரவு என்று கூறுகிறார். இது ஒருபுறமிருக்க, செலவு விபரங்களைப் பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது.

சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.

அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.

விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.

அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.

கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம்.

பாதிப்பே இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30,000 ரூபாயாம்

சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்

இப்படியாக நீண்டுக் கொண்டே போகிறது கள்ளக் கணக்கு. இவர்களை நம்பி நிதி அனுப்பிய சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா? இனியும் இவர்களை நம்பி ஏமாறப் போகிறீர்களா?

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, துபை.


Wednesday, August 23, 2006

முஸ்லிம்களே! பிஜேவிடம் ஏமாறாதீர்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

ததஜவினர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள் போலும். தமுமுகவிலிருந்து விலகி ஓடிய பின் கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகள் கணக்கில் அடங்காதவை. குறிப்பாக வசூல் என்று வந்து விட்டால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வதற்கு அவர்கள் தயங்கியதே இல்லை. ஒவ்வொரு முறையும் மும்மூர்த்திகளில் ஒருவர் மாற்றி ஒருவர், முறை வைத்துக் கொண்டு மக்களிடையே முறையிடுவார்கள்.

ஏமாந்த முஸ்லிம்கள் தங்கள் பொருளாதாரத்தை வாரி வழங்குவார்கள். இதனைப் பெற்றுக் கொண்டபின் முறையான கணக்குகள் எதனையும் மக்கள் மன்றத்தில் சமர்ப்பிப்பதே கிடையாது. இதற்கு நடுவில் வேறு ஒருவர் வேறு ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு களம் இறங்குவார்.

இந்த வகையில் எதிர் வரும் ரமளானை முன்னிட்டு விஷேச வசூலில் ததஜ இப்பொழுதே களம் இறங்கி விட்டது.

தற்சமயம் ததஜ மும்மூர்த்திகளில் ஒருவரான கிரிமினல் அலாவுதீன் (உபயம்: முகவைத்தமிழன்) சின்னத்திரையில் தோன்றி பொதுமக்களின் பொருளாதாரத்தில் பங்கு கேட்டு நிற்கிறார். அவர் குறிப்பிடக்கூடிய வாசகங்கள் குறித்து நமக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன.

கிரிமினல் அலாவுதீன் டான் டிவி நிகழ்ச்சிகளுக்காக கடந்த எட்டு மாதமாக பொதுமக்களின் பொருளாதார உதவி குறைந்து விட்டதாக குறைபட்டுக் கொள்கிறார்.

நமது கேள்விகளெல்லாம்,

1) இவரது வாக்குமூலத்தின் படி பொதுமக்களின் ஆதரவு ததஜவிற்கு குறைந்து வருகிறது. அவர் குறிப்பிடுவது போல் எட்டு மாதமாக பொதுமக்கள் ஆதரவு குறைந்து வருவது உண்மையானால் கும்பகோணத்தில் குலுக்கியது 15 என்றும் 12 என்றும் 10 லட்சத்திற்கு மேல் என்றும் கூறிக் கொண்டதெல்லாம் அப்பட்டமான பொய் என்று நிரூபணமாகிறது.

ததஜவின் வழமைப்படி பில்ட்அப் செய்த கணக்குதான் இது என்று ஒத்துக் கொண்ட கிரிமினல் அலாவுதீனுக்கு நன்றி.

2) டான் டிவியில் அவர்களது நிகழ்ச்சியில் விளம்பரங்களுக்கு குறைவை நாம் கண்டதில்லை. அப்படியானால் அந்த விளம்பரங்கள் அனைத்தும் இலவசமாக ஒளிபரப்பப்பட்டதா? இதுவும் பில்ட்அப் வகையராக்களில் ஒன்றா?

3) இதுவரை வசூலிக்கப்பட்ட பொருளாதாரத்தை ஆங்காங்கே முதலீடு செய்யும் படி தலைமையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தம்மாம் போன்ற நகரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆக, இதுவரை வசூலித்ததெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் டிவி நிகழ்ச்சிகளுக்கு கொடுப்பதற்காக புதுவசூல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?

4) சுனாமி கணக்கில் களவாடிய பத்திரிக்கையின் நஷ்டத்தை ஈடுகட்டவும் தொண்டரடிப்பொடிகளுக்கு சீருடை வாங்குவதற்கும் உபயோகப்படுத்திக் கொண்டது போல் டிவி ஒளிபரப்புக்காகவும் ஃபித்ரா போன்ற பொது காரணங்களைச் சொல்லியும் வசூலிக்கப்படும் பணம் இனி எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்யப்படுமோ? அல்லது முதலீடு செய்யப்பட்டதாக தவ்ஹீத்-தக்லீத்வாதிகளுக்கு சொல்லப்பட்டு சுருட்டப்படுமோ? யார் கண்டது?.

தமிழறிந்த முஸ்லிம்களே! உண்மை தவ்ஹீதுவாதிகளே! இனியுமா தவ்ஹீது வியாபாரி கிரிமினல் பிஜேவிடம் (உபயம்: முகவைத்தமிழன்) ஏமாறப் போகிறீர்கள்.

இறையடியான். 23.08.2006

Sunday, August 20, 2006

பிஜே அடித்த அந்தர் பல்டி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை புதுப்பிப்பது என்பது ஒவ்வொரு அரசாங்கமும் செய்து வருகின்ற ரொட்டீன் வேலை. அதனால் இதுவரை எந்த பயனையும் முஸ்லிம் சமுதாயம் கண்டதில்லை.

தமுமுகவின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்த திமுகவிற்கு ஆதரவு அளிக்க தமுமுக முகம் நோக்கி இருக்கும் நேரத்தில், தமுமுகவிற்கு எதிராகவே நடக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்துக் கொண்ட பிஜே, சங்பரிவாரக்கும்பலின் முடிசூடா ராணி ஜெயலலிதாவிற்கு ஆணையத்தை காரணம் காட்டி ஆதரவு வழங்க முடிவு செய்தார்.

தேர்தல் நிலைபாடு என்பது அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்று அவரது தவறான நிலைபாட்டுக்கு சப்பைக்கட்டு கட்டினார்.

தனிமெஜாரிட்டி சீட்டுக்களைப் பெற்று ஆட்சிப் பொறுப்பில் வீற்றிருந்த ஜெயலலிதாவை எதிர்கட்சி ஸ்தானத்திற்கு இறக்கிய பெருமை பிஜேக்கு உண்டு. இதை மறைப்பதற்காகவும், தான் பெற்றுக் கொண்ட கூலிக்கு வேலை செய்து விட்டதை பறைசாட்டுவதற்காகவும் 'பலமான எதிர்கட்சி, பலவீனமான ஆளும் கட்சி' என்று பிஜே துதி பாடிக்கொண்டு திரிகிறார்.

தான் பெற்றுக் கொண்ட கூலிக்காக மற்றொரு அபாண்டமான அவதூறையும் போட்டு வைத்துள்ளார். திமுக ஆட்சியைப் பிடித்தது முஸ்லிம்களால் இல்லை என்பது தான் அவரது சமுதாயத்திற்கு செய்த சாதனை(?)களில் ஒன்றாகும்.

ஏதோ ஒரு காரணத்திற்காக ஏற்கனவே முடிவு எடுத்துக் கொண்டு சப்பைக்கட்டு கட்டுவதற்காக அடுக்கடுக்கான ஆதாரங்களை துணைக்கு அழைத்துக் கொண்டு தனது ஆதரவாளர்களிடம் நியாயப்படுத்தி பேசுவார். அவரது பேச்சில் மயங்கிய எம்மைப் போன்றவர்கள் அவரின் முன்னுக்குப் பின் முரணானவைகளைக்கூட சரி கண்டு விடுகிறார்கள்.

கோபாலபுரத்தில் கருணாநிதியின் இல்லத்தில் அவரைச் சந்திக்க சென்ற பிஜே, உயிரினும் மேலான தவ்ஹீதை பின்னுக்குத் தள்ளி வைத்து விட்டு, கருணாநிதியைக் கண்டவுடன் எழுந்து நின்று, இருகரம் கூப்பி, வணக்கம் என்று பிஜே சொன்னார் என்று நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம்.

இப்போது நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக விளங்கிக் கொள்ளலாம். அதாவது, எல்லாவிதமான கோல்மால் வேலைகளையும் பிஜே செய்வார். தனக்கு ஆபத்து என்று வந்து விடுமானால், அருகில் யார் கிடைத்தாலும் பிடித்துக் கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்வார். அது உயிர் நண்பனாக இருந்தாலும் சரிதான்.

அதே போன்று விவாதம் விவாதம் என்று அழைப்பார், விவாதத்தில் தான் தோற்பது போன்று தெரிந்தால் பொய்யைக்கூட அல்லாஹ்வின் மீது சத்தியமாக உண்மை என்று பொய்ச் சத்தியம் செய்து விட்டு பார்வையாளர்களை நம்ப வைத்து விட்டு ஓடி விடுவார். இது கடைசி கட்டத்தில் நடக்கும்.

அதே போன்று சமீபத்தில் ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார்.

உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியக்கூடிய விஷயங்களைக்கூட தனது வாதத்திறமையால் பொய்யாக்கி விட்டு, பொய்யை உண்மையாக்கக் கூடியவர்தான் இந்த பிஜே. சங்பரிவார கும்பலோடு இறுக்கமான தொடர்பு கொண்ட ஜெயலலிதாவை பிஜே ஆதரித்ததை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதியை கடுமையாக சாடிப்பேசினார்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். பிஜே செய்த தவறுக்கான பரிகாரமாக, உளவுத்துறையை சேர்ந்த ஐஜி சிவனான்டியையும், உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ரத்தினசபாபதியையும் தனது நண்பர்களாக ஆக்கிக் கொண்டு பிஜே இன்ஃபார்மராக வேலை செய்து வந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் உளவுத்துறை அதிகாரி சிவனான்டி சாதாரண வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சிவனான்டி தான் பிஜேக்கு கூலி வாங்கிக் கொடுத்தவராவார். இவர்களின் மூலமாகத் தான் கோவை சிறைவாசிகளை வெளிக்கொண்டு வர முடியாத அளவுக்கு சில வேலைகளையும் செய்து கொண்டிருந்தார் இந்த பிஜே.

தமுமுக தலையிட்டு அந்த அதிகாரியின் மாற்றலுக்காக கடுமையாக போராடி அந்த அதிகாரிக்கு மாற்றலும், சிபிஐ விசாரணையையும் பெற்றுத் தந்துள்ளது.

இதுபோன்ற செயல்பாடுகளால் தமுமுக தனது சமுதாயத்திற்காக பாடுபடக்கூடிய விஷயத்தில் பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எல்லாவற்றிற்கும் சமுதாய துரோகி பிஜே தான் காரணமாக இருக்கிறார்.

இப்பொழுது, உளவுத்துறை அதிகாரி (காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர்) ரத்தினசபாபதியும் சமீபத்தில் ஊட்டிக்கு கிரைம் பிராஞ்சுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தனது நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டதை உணர்ந்து கொண்ட பிஜே திமுகவை ஆதரிக்க ஆரம்பித்து விட்டார்

முத்துப்பேட்டை அன்சாரி நோட்டீஸ் வினியோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். அதற்காக பெண்களையும் சிறுவர்களையும் திரட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த பிஜே, அந்தக் கைதைக்கூட நியாயப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

எப்படித் தெரியுமா? இந்தத் திறமை அவருக்கு மட்டுமே உண்டு.

முத்துப்பேட்டை அன்சாரியை சாதாரண கேஸில் தான் கைது செய்தார்களாம். கொலைக் கேஸ் ஏதும் போடவில்லையாம். அதனால் இந்த ஆட்சி நல்ல ஆட்சியாம். பாவம்! முத்துப்பேட்டை தவ்ஹீதுவாதிகள்.

பிஜே கண்ணுக்கு இன்று சாதாரணமாக தெரியும் இந்த கைதை கண்டித்தா, தவ்ஹீதுவாதிகள் தனது பொருளையும் நேரத்தையும் சக்தியையும் செலவழித்தார்கள்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஏற்றுக் கொண்ட தவ்ஹீதுவாதிகளே இப்பொழுதாவது தவ்ஹீதின் பெயரால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் தவ்ஹீது வியாபாரி பிஜேயை புரிந்து கொள்ளுங்கள். அவரது அந்தர் பல்டிகளை அறிந்து கொள்ளுங்கள்.

இப்னு ஃபாத்திமா 20.08.2006

Wednesday, August 16, 2006

உமரின் திரிபுவாதம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!

உண்மையை திரித்துக் கூறும் உமர் போன்ற ததஜ அடிமைகளுக்கு தமிழ் மொழி கூட தெரியவில்லை என்பதைப் பார்க்கும் பொழுது பரிதாபம் தான் பிறக்கிறது.

என்ன செய்வது! அவர்களின் தானைத்தலைவர் தமுமுகவிலிருந்து விலகி ஓடியபொழுது விளையாடிய அவரது வார்த்தை சுழலில் சிக்கியதால், இன்று படிப்படியாக தமிழே புரியாமல் போய்விட்டது போலும்.

அன்று, தவ்ஹீத் வியாபாரி பி.ஜேவின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் முரண்பாடான செயல்களை விமரிசித்த தமுமுகவை, தவ்ஹீதிற்கு எதிரான இயக்கம் என திரித்துக் கூறியதை ஏற்று அவரின் பின் சென்றதால் ஏற்பட்ட பின் விளைவு - இன்று மார்க்கமும் தெரியாமல், தமிழும் புரியாமல் அலை போதுகிறார்கள்.

யாரோ ஒருவரின் ஈமெயிலில் ஜே ஏ க்யூ ஹெச் என தமிழில் எழுதியிருந்ததை எம் ஹெச் ஜே என சம்பந்தமே இல்லாமல் வாசித்துக் கொண்டு கண்ணில் பட்டவர்களிடத்தில் எல்லாம் கதையளந்து கொண்டிருந்தபோதே, தமிழ் வாசிப்பில் அவர்களுக்கிருந்த தடுமாற்றம் விளங்கியது.

சில தமுமுக சகோதரர்கள் அக்கறையாக தமிழ் கற்றுக் கொடுத்த பின், மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஓடிப் போய் மறைந்தது ஒரு வருடத்திற்கு முன்புள்ள செய்தி.

அதே பாணியில், உண்மையை திரித்துக் கூறும் உமர், தமிழ் தெரியாமல், புரியாமல் ஒரு பத்திரிக்கை செய்தியை ஒட்டி மெயில் அனுப்பியுள்ளார்.

தினமலர் பத்திரிக்கையில் வெளியான தமுமுகவின் மாநில செயலாளர் தமிமுன் அன்சாரியின் பேட்டி குறித்து விமர்சித்துள்ளார்.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு என்ற பழமொழிக்கேற்ப மகா, மகா கெட்டிக்காரனான தவ்ஹீத் வியாபாரி பிஜெவின் பொய்யும், புரட்டும் சந்தி சிரித்துக் கொண்டிருப்பதால் அவரது சுன்னத்தின் (நடைமுறையின்) அடிப்படையில் ததஜவை கலைக்க திட்டம் வைத்துள்ளார்களோ, என்னவோ தெரியவில்லை. இதற்கு அச்சாரமாக தமீமுன் அன்சாரி பேட்டியை திசை திருப்பிப் பார்க்கிறார்.

'ததஜ தலைவர், தமுமுகவில் இணைய முன்வந்தால் ஆதரிக்கத் தயார்' - அன்சாரி பேட்டி

அவரது பேச்சு சாராம்சத்தின் சுருக்கம் 'அண்ணன் அவர்களை தமுமுகவின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுடன் ததஜவிலும் நீடிக்க மாட்டீர்கள்' என்பதுவுமாகும். இது உண்மையை திரிக்கும் உமரின் மெயில்.



உண்மையை திரிக்கும் உமர், அன்சாரியின் பேட்டியை திரித்துள்ளதைப் பாருங்கள்.

நமது கேள்வி:

தினமலர் பேட்டியில் - அன்சாரி அவர்கள், திரும்பி வந்து பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிடாத பொழுது, கற்பனையாக கதை எழுதி, அதற்கு விளக்கமும் அளித்துள்ளது ஏன்?

- கும்பகோண பொதுக் கூட்டத்தை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கணக்கு சொல்லி ஏமாற்ற நினைத்து உண்மை வெளிப்பட்டதில் அன்றைய முதல்வர் முன் உறைந்து போய், ஒரு இலட்சம் தான் என ஒப்புக் கொண்டதால், முஸ்லிம்கள் காரி உமிழ்ந்தார்களே அதனாலா?

- கும்பகோண பொதுக் கூட்டத்தை சொல்லி வசூலித்த பணத்திற்கு கணக்கு காட்டவில்லை என்றும், சாமானியர்களின் நன்கொடைகளை சந்துக்கு சந்து டிஜிட்டல் பேனர் வைத்து சுய தம்பட்டத்திற்காக வீண் விரயம் செய்தது ஏன் என்றும் ததஜவிலுள்ள தவ்ஹீத்வாதிகள் கேள்விக் கணைகளால் துளைத்தார்களே! இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவா?

- சுனாமியின் பெயரால் வசூல் செய்து, தனது இயக்கத்தவர்களுக்கு சீருடை வாங்கவும், தனது களவாடிய பத்திரிக்கையின் நஷ்டத்தை ஈடுகட்டவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமையில் பங்கு போட்டுக் கொண்ட உலக மகா அயோக்கியத்தனத்தை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதோரும் கண்டித்தார்களே! அதிலிருந்து தப்பிக்கவா?

- இறுதியாக, போயஸ் தோட்டத்தின் பொன்மகளிடம் அடிபணிந்து, இல்லாத ஆணையத்தை, வெளியான அரசு ஆணை போல் பிலட்அப் செய்ததனால், முஸ்லிம்களின் ஒட்டு மொத்த சாபத்திற்கு ஆளாகி நிற்கின்றீர்களே அதிலிருந்து மீட்சி பெறவா?

எதற்காக இந்த நாடகம்?

தமீமுன் அன்சாரி குறிப்பிட்டது, 'திரும்பினால் ஆதரிக்கத் தயார்' - அதாவது செல்வாக்கை இழந்து, ஆதரவு தேடி திரும்பி வந்தால் - கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லீமிற்கும் உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தமுமுக - உதவும், ஆதரவு அளிக்கவும் தயார்.

ஆதரவு தேவைப்படும் நிலையில் உள்ளவர்களை அநாதரவாக விட்டுவிடக் கூடாது என்ற நல்ல உள்ளத்தின் கருணையின் வெளிப்பாடு. இதனை பொறுப்புக்களை தாரைவார்க்க தயாராக இருப்பதாக கற்பனையில் மிதந்து கொண்டு ஏன் கதை எழுத வேண்டும்.

தமுமுகவின் அடிமட்ட தொண்டனாக இணைந்து, மக்கள் நலப்பணிகளில் தமுமுகவின் சீரிய வழிகாட்டுதலின் படி செயலாற்ற முன்வரும் ஒவ்வொரு முஸ்லீமையும் வரவேற்க தமுமுக என்றென்றும் தயாராக இருக்கிறது. அதனடிப்படையில் தான் ததஜ தலைவர் வந்தாலும் அவருக்கும் தமுமுக ஆதரவளிக்கும்.

இதற்கு மேலும் தனது திரிபு முயற்சிகளை கைவிடுமாறு உண்மையை திரிக்கும் உமருக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.

வல்ல அல்லாஹ் அனைவரையும் நேர்வழிப்படுத்துவானாக.

ராவுத்தர் 16.08.2006

Monday, August 14, 2006

ததஜவின் அடுத்தகட்ட வசூல் வேட்டை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்புச் சகோதரர்களே! அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!! விழிப்புணர்வுடன் சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில், ஆரம்பித்து விட்டது அடுத்த கட்ட ததஜ வசூல் வேட்டை.

ஆம் முன்பு ஒருமுறை, அண்ணனின் முன்னால் சகா, அபூஅப்துல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டது போல், தவ்ஹீத் வியாபாரி பிஜே மீண்டும் ஒரு வசூல் வேட்டையில் குதித்துள்ளார்.

இதற்கு முன் வசூலிக்கப்பட்ட எந்த ஒரு பொது நிதியிலும் முறையான கணக்கை சமர்ப்பிக்காதவர், மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் கள்ள கணக்கு எழுத வைத்தவர், ஒவ்வொரு ரமளானிலும் தமுமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ரமளான் நிகழ்ச்சிகளில் உரையாற்ற பெருந்தொகை பெற்றுக் கொண்டு, தான் இலவசமாகவே உரை நிகழ்த்துவதாக பொய்யுரைத்தவர், இப்பொழுது கூட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்று சொல்லி வசூலித்தபின், தான் ஆசிரியராக இருக்கும் களவாடப்பட்ட உணர்வு பத்திரிக்கைகாக ரூபாய் 2 இலட்சத்தை சுருட்டிக் கொண்டவர்,

இத்தனை சிறப்புகளை பெற்ற சீமான் மீண்டும் ரமளான் நிகழ்ச்சி என்ற பெயரில் வசூல் வேட்டையாட வருகிறார். உஷார்.

இதுவரை வசூல் செய்து தன்னை வளப்படுத்திக் கொண்டது ஒரு புறம் இருக்க, இவர் வசூலித்து நடத்திய நிகழ்ச்சிகளினால் சமுதாயத்திற்கு எத்தனை இழுக்குகள், எத்தனை இழப்புகள்.

இஸ்லாமிய சமுதாய சகோதரர்களே தங்களின் மேலான கவனத்திற்காக சில தகவல்களை பட்டியலிடுகிறேன். தவ்ஹீத் வேடதாரிகள் கூட சிந்திக்க கடமைப்பட்டுள்ள சில தகவல்கள்.

தவ்ஹீதின் பெயரால் உண்மை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை உறிஞ்சி கொழுத்த தவ்ஹீத் வியாபாரி பிஜே, தமுமுகவிலிருந்து விலகி ஓடியதன் பின் தொடராக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சிகளில் தரமாக உள்ளதாக கருதும் அளவிற்கு உள்ளவை, அவர் தமுமுகவில் இருந்த பொழுது முஸ்லிம் டிரஸ்ட் சென்னை என்ற முகவரியோடு ஒளிபரப்பக்கூடிய தமுமுக தலைமையகத்தில் நடைபெற்றவை மட்டும் தான்.

இவற்றை தவிர்த்து வெளியாகும் நிகழ்ச்சிகளின் தரம், சக முஸ்லிம்களை தரக்குறைவாக விமரிசிப்பதாகவும், பிற முஸ்லிம் அமைப்புகளை சாடுவதாகவுமே இருந்து வருகிறது.

தான் துவங்கி, ஆரம்பத்திலிருந்த பொம்மை தலைவரை, தலைகுப்புற தள்ளி விட்டுவிட்டு தானே தலைவராகிக் கொண்ட ததஜவைத் தவிர, மற்ற அமைப்புகள் அனைத்தையும் வழி தவறிய அமைப்பினர் என தொலைக்காட்சிகளில் முழங்கியது.

தன்னோடு இருந்த மவ்லவி ஹாமித் பக்ரி, மவ்லவி சம்சுதீன் காஸிமி போன்றவர்களை தரக்குறைவாக விமரிசித்தது.

இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான ஜக்காத் விஷயத்தில் தனது முரண்பட்ட கருத்தை உலகெங்கும் உலவ விட்டது.

இஸ்லாமிய வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற, சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட உத்தம ஸஹாபாக்களை கிரிமினல் என்றும், ரவுடி என்றும் மனம் போன போக்கில் விமர்சித்தது.

செயல்பாட்டுக்கு வராமல், ஒப்புக்காக அமைக்கப்பட்ட ஆணையத்தை, முஸ்லிம்களின் துயர்துடைக்க வந்த அரசு ஆணை போல் பில்ட்அப் செய்து முஸ்லிம்களிடையே பொய்யுரைத்தது.

தேர்தலில் அம்மா அரசு தோல்வி அடைந்ததும், அரசியலில் முஸ்லிம்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வலுவானவர்களில்லை என பேட்டியளித்து சமுதாய அந்தஸ்தை தரைமட்டமாக்கியது.

கம்ப ரசத்திற்கு நிகராக இஸ்லாமிய மார்க்கத்தை, விவாதத்தில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆபாசமாக விமர்சித்தது.

அன்பான சகோதரர்களே! தவ்ஹீத் வியாபாரி பிஜே சமீபகாலமாக இஸ்லாத்திற்கு எதிராக, இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமைக்கு எதிராக இறங்கியுள்ள செயல்பாடுகளில் ஒரு சிலவற்றைத்தான் குறிப்பிட்டுள்ளோம். நீண்ட பட்டியலின் சுருக்கமே நமக்கு கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.

நமது பொருளாதாரம் தீய வழிகளில் செலவழிக்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள தவ்ஹீத் சகோதரர்களே! நமது நிதியுதவி இப்படிப்பட்ட இழிவான செயல்களுக்கு பயன்படுத்தப்பட காரணமாகி விடக்கூடாது. எனவே இனியும் தவ்ஹீதின் பெயரால் ஏமாந்து விடாதீர்கள். கவனம். கவனம்...

ராவுத்தர் 14.08.2006

Saturday, August 12, 2006

பிஜேயின் சுயரூபம்

இறைவனின் திருப்பெயரால்...

பச்சை சாயம் வெளுத்துப் போச்சு...!
அண்ணன் வேசம் கலைஞ்சு போச்சு...!!

சுனாமி நிதி மோசடி! உணர்வு மூலம் ஒப்புதல்!

ஏகத்துவத்திற்காக இன்னுயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் கொள்கைச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சுனாமி பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் மீட்பு மற்றும் துயர் துடைப்பு பணிகளில் முழுவீச்சில் முஸ்லிம்கள் ஈடுபட்டார்கள். முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளும் வீரியமாக சேவையாற்றினர். ஜாக், ஜமாத்தே இஸ்லாமி, மனித நீதிப்பாசறை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ஜம்இய்யத்து உலமா, தமுமுக, பரங்கிப் பேட்டை ஜமாத் மஜ்லீஸ் மற்றும் ஏராளமான உள்ளூர் ஜமாத்துக்களும் சிறப்பாக பணியாற்றினர். மேற்கண்ட எல்லா அமைப்புகளும் அவரவர் சக்திக்கேற்ப நிதிகளை சேகரித்தார்கள்.

அந்த நேரத்தில் விண் டிவியின் மூலம் அனைத்தையும் தாங்களே செய்வது போன்ற கருத்தை அண்ணன் பி.ஜே உருவாக்கினார். அவரளவுக்கு யாரும் வசூலில் ஈடுபட வில்லை. அகில இந்திய அமைப்புகளான ஜம்இய்யத்து உலமாவும், ஜமாத்தே இஸ்லாமியும் தலா 1 கோடிக்கு மேல் வசூல் செய்தனர்.

1 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களிடம் பெற்று விநியோகம் செய்த தமுமுக 68 லட்ச ரூபாய் நிதியையும் சேகரித்தது.

இந்த சூழ்நிலையில் 78 லட்ச ரூபாய்க்கு மேல் நிதி வசூல் செய்ததாக அண்ணன் பி.ஜே கூறிக் கொண்டார். உணர்விலும் அப்படி சில கணக்குகளை வெளியிட்டார். தமுமுகவை விட நாங்கள் தான் அதிகமாக நிதி சேரித்தோம் என்று பெருமை பேசிக் கொண்டார். இதன் மூலம் தாங்கள்தான் தமிழ்நாட்டிலேயே பெரிய அமைப்பு என்று சொல்லிக் கொள்ளவும் தவறவில்லை.

இதைப் பலரும நம்பினர். அதிகமானோர் குழம்பினர். சிறிய அமைப்பு எப்படி இவ்வளவு நிதியை திரட்டியது என்று ஆச்சரியப்பட்டனர்.

விண் டிவி மூலம் விளம்பரம் செய்ததால் ஒருவேளை அதிகமாக நிதி சேர்ந்ததில் ஆச்சரியமில்லை என்று பலரும் பேசிக் கொண்டனர். ஒவ்வொரு வாரமும் மக்கள் உரிமை மற்றும் உணர்வு பத்திரிக்கைகளை படித்தவர்கள் வசூலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முந்துவதாக நம்பினர்.

இப்போது பூனைக்குட்டி வெளிவந்து விட்டது.

உணர்வு (10:8) அக்டோபர் 28 - நவம்பர் 3, 2005 இதழில் பக்கம் 13-ல் கேள்வி பதில் பகுதியைப் படியுங்கள்.

கேள்வி: இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சுனாமி நிவாரணத் தொகையாக ரூபாய் 2 ஆயிரம் தருவதாக கூறி ரேஷன் கார்டு நகல் மற்றும் கையொப்பம் பெற்றுச் சென்றனர். இதுவரை எந்தப் பணமும் வழங்கப்படவில்லை. ஆனால், நாகப்பட்டிணம் உள்ளூர் தொலைக்காட்சியில் பணம் கொடுத்ததாகக் கூறி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தெளிவுபடுத்தவும். (ஏ.பகுருதீன், நாகப்பட்டிணம்)

பதில்: (முக்கியப் பகுதிகள் மட்டும்)
'...அப்படி எந்த நபரின் பெயரையாவது நாம் குறிப்பிட்டிருந்தால் எங்களுக்கு உரிமையுடன் சுட்டிக்காட்டினால் அதை விசாரித்து
தக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

சுனாமி நிதியை பொருத்தவரை அதை சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் வகையில் தவிர நாம் செலவு செய்யவில்லை. செலவு கணக்குகளை நாம் உணர்வில் வெளியிடாததால் இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன.

சுனாமிக்காக நிதி திரட்டிய சில அன்பர்கள் அறிவித்த சில தொகைகள் இன்னும் வந்த சேரவில்லை. அவர்கள் வாக்களித்தன் அடிப்படையில் உணர்வில் பட்டியலை வெளியிட்டோம். உணர்வில் வெளியான பட்டியலில் சிலரது பெயர்களும் தொகைகளும் விடுபட்டுள்ளன.

இதனால் உணர்வில் வெளியான பட்டியல், நமக்கு வந்து சேர்ந்த
தொகை ஆகியவற்றை பரிசீலித்து ஆடிட் செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் முழுமையான கணக்கை வெளியிடுவோம். தவ்ஹீத் ஜமாத்தைப் பொறுத்தவரை சுனாமி உள்ளிட்ட அனைத்து
கணக்குகளிலும் தனது நம்பகத்தன்மையை சந்தேகமற நிரூபிக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறோம்'.

கொள்கைச் சகோதரர்களே... இந்த பதில் மூலம் அண்ணன் கொடுக்கும் வாக்குமூலத்தில் இருந்து நீங்கள் இயல்பாகவே ஏராளமான அர்த்தங்களை புரிந்து கொள்ளலாம்.

1. வாசகரின் கேள்வியின் மூலம் நிவாரண நிதி கொடுக்காத நபர்களுக்கு நிதி கொடுத்ததாக உள்ளூர் டிவியில் தவ்ஹீத் ஜமாத் செய்தி வெளியிட்டுள்ளது.

2. நாகூரில் நிதி வழங்கும் விஷயத்தில் மோசடி நடந்துள்ளது.

3. சுனாமி கணக்கை நேர்மையாக, உண்மையின் அடிப்படையில் வெளியிடும் நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இல்லை.

உணர்வில் '...சுனாமிக்காக நிதி திரட்டிய சில அன்பர்கள் அறிவித்த சில தொகைகள் இன்னும் வந்த சேரவில்லை. அவர்கள் வாக்களித்தன் அடிப்படையில் உணர்வில் பட்டியலை வெளியிட்டோம்' என்று கூறியிருப்பதன் மூலம்

4. உணர்வில் வெளியான பெயர் மற்றும் நிதி பட்டியல் போலியானது. பல பெயர்கள் கற்பனையானவை. தொகையும் அப்படியே.

5. நிதி தருவதாக பலர் சொன்னதை நம்பி அவசரப்பட்டு இஷ்டத்திற்கு பல பெயர்களையும் அதற்கேற்ப தொகைகளையும் எழுதி உணர்வில் கணக்கு காட்டியுள்ளார்கள்.

6. அப்படி சொன்ன தொகை வசூலாகவில்லை. இனி வரப்போவதுமில்லை.

7. 'பரிசீலித்து ஆடிட் செய்து கொண்டிருக்கிறோம்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதை பார்க்கும் பொழுது மக்களுக்கும் - அரசுக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக போலியான கணக்குகளை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அண்ணன் கேட்டால் அள்ளிக் கொடுக்கும் கொள்கைச் சகோதரர்களே...

உணர்வில் அண்ணனே அவரை அறியாமல் உண்மைகளை கக்கி உள்ளதைக் கண்டு பதறுகிறீர்களா?

இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். ஏன் இப்படி அண்ணன் பி.ஜே செய்ய வேண்டும்?

காரணங்கள் இருக்கின்றன.

1. தான் கேட்டால் நிதி தருவதற்கு பெரும் கூட்டம் இன்னும் தன்னிடம் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காகவும்,

2. தன்னை நம்புபவர்களுக்கு மத்தியில் சுனாமி நிதியை பிரம்மாண்டமாக காட்டி தன் மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்காகவும்,

3. தமுமுகவை விட நாம் தான் பலமாக இருக்கிறோம் என்ற மாயையை காட்டுவதற்காகவும்,

4. சக தவ்ஹீத் அமைப்புகளை மன ரீதியாக பலவீனமடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும்,

அண்ணன் பி.ஜே அவர்கள் இஸ்லாம் கூறும் நேர்மையான வழிமுறைகளுக்கு மாறாக பொய் கணக்குகளைக் காட்டியிருக்கிறார்.

அவசரப்பட்டு சிக்கிக் கொண்ட அண்ணன் பி.ஜே அவர்கள் தான் மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்டார்.

அதனால் தனக்கே உரிய நரித்தந்திரங்களை அவிழ்த்து விட்டிருக்கிறார். கடந்த ஆறு மாத காலமாக உணர்விலும், மொட்டை மெயில்கள் வாயிலாகவும் பிற அமைப்புகள் வசூல் செய்த சுனாமி நிதியைப் பற்றி சந்தேகங்களை கிளப்பி விட்டார்.

இதன் மூலம் தான் நேர்மையாக இருப்பதைப் போலவும் பிறர் சுனாமி நிதியை அபகரித்து விட்டதைப் போலவும் (போன்ற) தோற்றத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார். தனது சிஷ்யர் பரக்கத் அலி மற்றும் நாகர்கோவில் நடிகர் மூலமும் ஆதம் மற்றும் தீன் முகம்மது என்ற பெயரில் மற்ற சமுதாய அமைப்புகள் சுனாமி நிதியை மோசடி செய்து விட்டதாக ஈ மெயில் மூலம் வதந்திகளைப் பரப்பினார்.

தொடர்ந்து பிற அமைப்புகள் மீது சுனாமி அவதூறு பரப்பினால் தான்.... தான் மாட்டிக் கொள்ளும் பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடாது என்பதே அவருடைய திட்டம்.

அப்படியே மாட்டிக் கொண்டாலும் மற்ற அமைப்புகள் மீது பழி விழுந்ததால் எங்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள் என்று தன் வாதத்திறமையின் மூலம் திருட்டை திசை திருப்பி விடலாம் என திட்டமிட்டிருக்கிறார்.

தெருவில் பிக் பாக்கெட் திருட்டில் ஈடுபட்ட திருடன் தப்பி ஓடும்போது யாரையோ பார்த்து திருடன் ஓடுகிறான் திருடன் ஓடுகிறான் என்று கத்திக் கொண்டே அவன் தப்பி ஓடி விடுவான். இதனடிப்படையில் தான் அண்ணன் பி.ஜே அவர்கள் ஆறு மாதமாக செயல்பட்டு வந்திருக்கிறார். இதிலிருந்து அண்ணன் பி.ஜே அவர்களின் அபாயகரமான 'மூளையை' புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கனவே சுனாமி விநியோகம் மற்றும் செலவுகளில் நாகூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்குள் சண்டை நடந்து நாகை மற்றும் நாகூர் வட்டாரமே நாறியது. பலருக்கும் நிதி கொடுத்ததாக சொல்லி அது கொடுக்கப்பட வில்லை. அதன் விளைவாகவே நாகபட்டிணத்திலிருந்து ஏ.பகுருதீன் என்பவர் உணர்வில் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அண்ணன் பி.ஜே அவரையும் அறியாமல் உண்மையைக் கக்கிவிட்டார். இல்லை! இல்லை!! அந்த ரப்புல் ஆலமீனாம் வல்ல அல்லாஹ் அவரை அம்பலப்படுத்தியுள்ளான். எல்லா சமுதாய அமைப்புகளும் சுனாமி நிதி சேகரிக்க தனி கணக்கை வங்கிகளில் தொடங்கினார்கள். தமுமுக சார்பில் 'சுனாமி ரிலீஃப் ஃபண்ட்' என்றும், ஜமாத்தே இஸ்லாமி சார்பில் 'ரிலீஃப் ஃபண்ட்' என்றும் பகிரங்கமாக வசூலித்தார்கள்.

அண்ணன் பி.ஜே அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிதிப்பிரிவான 'தமிழ்நாடு ஜகாத்' என்ற தனது அமைப்பின் பெயரில் மட்டுமே நிதியை சேகரித்தார்கள். சுனாமிக்கு தனி கணக்கை தொடங்கவில்லை. எனவே, நிதியளித்தவர்களின் சந்தேகம் வலுக்கிறது.

இதில் எவ்வளவு பணம் தனி நபருக்கு சென்றதோ? எவ்வளவு பணம் நடிகர்களின் பேட்டியை ஒளிபரப்பும் விண் டிவிக்கு செலவிடப்பட்டதோ? யாருக்கு தெரியும்?

'உணர்வில் வெளியான பட்டியலில் சிலரது பெயர்களும் தொகைகளும் விடுபட்டுள்ளன' என்ற வரியும் 'சுட்டிக்காட்டினால் தக்க நடவடிக்கை எடுப்போம்' என்ற தற்காப்பான சமாதான வரிகளும் இதையெல்லாம் உறுதிப்படுத்துகின்றன.

தவ்ஹீது சொந்தங்களே! அடுத்தவர்களை அவமானப்படுத்துவது, தவ்ஹீதுவாதிகளைப் பிரிப்பது, சக தவ்ஹீத் பேச்சாளர்களை அழிப்பது, தன் மோசடிகளை கண்டு கொண்டவர்களை தவ்ஹீது வட்டாரத்திலிருந்து தனிமைப்படுத்த துடிப்பது என அண்ணன் பி.ஜே இரண்டு முகங்களோடு அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அனுப்பும் நிதியை தவ்ஹீதை வளர்க்க பயன்படுத்தாமல் சக தவ்ஹீது அமைப்புகளை அழிக்கவே பெரிதும் பயன்படுத்துகிறார்.

அவர் தைரியமிருந்தால் 1984-முதல் தவ்ஹீது சொந்தங்களிடம் வசூல் செய்த நிதியையும் அது செலவு செய்த விதத்தையும் தவ்ஹீது அமைப்புகளுக்கு மத்தியில் 'வெள்ளை அறிக்கையாக' வெளியிடட்டும். அவர் வெளியிட மாட்டார். தன்னிடமிருந்து பிரிந்த தவ்ஹீது பிரமுகர்கள் அதையெல்லாம் தின்று விட்டார்கள் என்று வாய் கூசாமல் பழி போடுவார்.

அவர் மறுமைக்காக இறையச்சத்தோடு பணியாற்றிய காலம் மாறிப் போய் விட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அரசியல் கட்சியின் தலைவர் ஆனது முதல் தன் பலத்தைக் காட்டுவதற்காக அரசியல்வாதியைவிட மோசமாக அவர் செயல்படுவது உண்மை தவ்ஹீதுவாதிகளை வேதனையில் ஆழ்த்துகிறது. அவரது பொறாமைத்தனமான செயல்பாடுகளின் அடுத்த அசிங்கமாக இப்பொழுது வெளிவந்திருப்பது தான் சுனாமி நிதி மோசடி.

நமக்கு தலைவர்களோ, அமைப்புகளோ முக்கியமில்லை. வழிகாட்டும் குர்ஆனும், நெறிகாட்டும் ஹதீஸ்களும் இருக்கின்றன. இனி அண்ணன் பி.ஜேயின் கருத்துகளை ஆய்வு செய்த பிறகே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தயாராகுங்கள்.

'அழைப்புப் பணி'யை மட்டுமே செய்யும் தவ்ஹீது அமைப்புகளுக்கு மட்டுமே நிதி உதவி செய்வோம். யாருக்கு நிதி கொடுத்தாலும் பகிரங்கமாக கணக்குக் கேட்போம்.

இவண்: நபிவழி தவ்ஹீத், தமிழ்நாடு - புதுவை, வெளியீடு - 1
வெளியீட்டகம்: மதுரை,
மின்னஞ்சல்:
nabivazhi_tawheed@hotmail.com

(குறிப்பு: பி.ஜேயின் நிம்மதியான தூக்கத்தை கலைத்த நோட்டீஸ் இது தான், தொடர்ந்து அவருக்கு தூக்கம் பிடிக்காமல் போனதும் இந்த நோட்டீஸ் வெளியான பிறகு தான். அதை முத்துப்பேட்டை பிளாக்கில் பிரசுரித்து பொய்யர்களின் முகத்திரையை கிழிக்கிறோம். ஆ-ர்)

Friday, August 11, 2006

அறியாமையில் ததஜவினர்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ததஜவினர் தமுமுகவின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளில் ஒன்று தான், ததஜவின் டான் டிவி நேரத்தை தமுமுகவினர் அதிக விலை கொடுத்து எடுத்துக் கொண்டார்கள் என்பது.

'ஒரு குறிப்பிட்ட நேரத்தை டிவி நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்து விட்டால் ஒப்பந்தம் முடியும் வரை எவரும் வாங்க முடியாது' என்ற அறிவு இல்லாமல் ததஜ தலைவருக்கு பின்பாட்டுப்பாட ஏராளமான ஆமாம்ஞ்சாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமுமுக நிகழ்ச்சி நடத்துவதற்காக டான் டிவிக்காரர்களை அணுகிய போது அந்தக் குறிப்பிட்ட நேரம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தை அப்படியே தமுமுக ஒப்பந்தம் செய்து கொண்டது. ஏன் அந்த நேரம் காலியாக இருந்தது? என்பது ததஜவினருக்கும் டான் டிவிக்காரர்களுக்குமே தெரிந்த ரகசியம். அதில் நாம் நுழைய விரும்ப வில்லை.

ததஜவின் நேரத்தை தமுமுக அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்கள் என்று லப்போ லப்போ என்று அடித்துக் கொள்பவர்கள் தமுமுகவினரிடம் கேட்ட அதே கேள்வியை டிவிக்காரர்களிடமே கேட்க வேண்டியது தானே!

தமுமுகவினர் அந்த நேரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வில்லை என்பதை உறுதியாக சொன்னார்கள். மேலும் உங்களுக்கு தேவைப்பட்டால் நாங்கள் டான் டிவியினர் கொடுத்த ரசீதை காட்டத் தயார் என்றார்கள். அனாவசியமாக அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதோடு, ததஜவினர் டான் டிவிக்கு வழங்கிய தொகையின் ரசீதை காட்டுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்கள். இது வரை அந்த ரசீது வந்தபாடில்லை. அப்படி இருக்கும் போது ததஜவினர் இது சம்பந்தமாக பேசுவதற்கும் எழுதுவதற்கும் எந்தவித அருகதையும் இல்லை.

இருந்தாலும் தமுமுகவினர் டான் டிவியின் நிர்வாகத்தை நேரடியாக கேட்டார்கள். இந்த விஷயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். இருவருக்கும் கொடுக்கப்பட்ட விலையில் வித்தியாசம் இருப்பதை டான் டிவியினர் ஒத்துக் கொண்டார்கள். அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு டிவிக்காரர்கள் மற்றொரு டிவியில் நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்தால் ரேட் வேறு. மற்றவர்களுக்கு ரேட் வேறு. இதில் ராத்திரி ரௌஸ் புகழ் விண் டிவியின் முன்னால் சிஈஓ மற்றும் பிஜேயின் விண் டிவி பினாமி பாக்கர் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதால் அந்த கண்செசன் ரேட் கிடைத்திருக்கிறது.

விண்டிவி கைமாறிய பிறகு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டால் தமுமுக கொடுக்கும் அதே தொகையைத் தான் ததஜவும் கொடுக்க வேண்டியது வரும், அதாவது அதிகமாக கொடுக்க வேண்டியது வரும், அல்லது தமுமுக கொடுக்கும் ரேட் குறைக்கப்படும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும். தமுமுகவினருக்கு இவ்விஷயத்தில் பித்னாவின் மூலம் பெரும் உதவி புரிந்த ததஜவினருக்கு மிக்க நன்றி.

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பது பழமொழி. இதற்கு ததஜவினர் எந்த அளவுக்கு பொருந்திப் போகிறார்கள் என்பதற்கு கீழ் காணும் செய்தி நல்ல உதாரணமாகும்.

ததஜவினரின் திருட்டுத் தொழிலில் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டது தான் 'உணர்வு' வார இதழ். அதன் 10:48 ல் ஒரு கிறுக்குத்தனமான செய்தி வெளியாகி இருக்கிறது.

சிறுபான்மை கமிஷனுக்கும் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கும் வித்தியாசம் தெரியாத அறிவிலிகள் தான் பத்திரிக்கை நடத்துகிறார்களாம்.

இடஒதுக்கீடு விஷயத்தில் ஜெயலலிதா பாராமுகமாக இருந்தாராம், ததஜவின் நெருக்கடி காரணமாக, இடஒதுக்கீடு வழங்குவதற்காக, முதல்கட்ட நடவடிக்கையாக ஒரு கமிஷனை அமைத்தாராம்.

கேப்பையில் நெய் வழிகிறது என்று பிஜே சொல்கிறார், நம்மையெல்லாம கேணயன்களாக நினைத்துக் கொண்டு. இவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்கிறோமே! தன்னைப் பற்றி முஸ்லிம்கள் என்ன நினைப்பார்கள் என்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை பெரிய விஷயமே அல்ல.

இந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை ஜெயலலிதா முதன்முதலாக அமைக்கிறார் என்றால் பிஜே சொல்வதை நம்ப முடியும், இருந்தாலும் 5 சதவிகிதம் நம்பிக்கை மட்டுமே வைக்கலாம். ஆனால் இந்த ஆணையம் 1993ல் இருந்து செயல்பட்டு வருகிறது என்பது பிஜேக்கு தெரியாதா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா? அந்த ஆணையத்தை தான் ஜெயலலிதா புதுப்பிக்கிறார்.

இந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் உயிரோடு தானே இருந்தது, அந்த காலங்களில் இட ஒதுக்கீட்டிற்காக துரும்பைக்கூட நகர்த்தாத ஜெயலலிதாவை ஆதரிப்பதற்கு வெட்கமாக இல்லை? அதுவும் பொய்யான வாக்குறுதியை வாழ்வுரிமை மாநாட்டில் முஸ்லிம்களுக்கு தந்து விட்டு, அவர் ஆட்சிக்கு வந்த பிறகு தானே, இது நடந்தது. இந்த முஸ்லிம் மூதறிஞருக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என்ன?

அந்த காலகட்டத்தில் தானே ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒடுக்கீடு தந்தது தொடர்பாக கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை புதுப்பித்ததை வாய்கூசாமல் இடஒதுக்கீட்டிற்கான முதற்கட்ட நடவடிக்கை என்று இன்னும் எவ்வாறு எழுத மனம் வருகிறதோ அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

தேர்தல் நிலைபாடு தேர்தலோடு போச்சு என்று ததஜ அறிவித்த பிறகும் அது தொடர்பாக எதுவும் எழுதாமல் இருப்பது ததஜவில் ஒட்டிக் கொண்டிருக்கும் ததஜ அண்டு கம்பெனினருக்கு நன்மை பயக்கும், இல்லையேல் கம்பெனியை இழுத்து மூட வேண்டியது வரும் என்பதை எச்சரிக்கிறோம்.

ஆணையம் தொடர்பான மேலும் விபரங்கள் தமுமுகவின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்:

http://www.tmmkonline.org/tml/others/109739.htm

இப்னு ஃபாத்திமா 11.08.2006

Thursday, August 10, 2006

ததஜவின் டான் டிவி வசூல்

அன்புச்சகோதரர் இப்னு ஃபாத்திமாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தங்களின் வெளியீட்டில் ததஜ அலாவுதீன் டான் டிவியில் விடுக்கும் வேண்டுகோள் குறித்து எழுதியிருந்தீர்கள். தாங்கள் குறிப்பிட்ட ராப்பிச்சை என்ற வாசகம் சற்று கடுமையாக இருக்கிறது, என்றாலும் அவர்கள் யாசகம் கேட்பதை ததஜ தொடங்கிய அன்றிலிருந்தே செயல்படுத்தி வருகிறார்கள். இதில் பொதுமக்களாகிய நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை என்ற வலைப்பதிவில் வெளியான ஒரு ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல் நமது பொருளாதாரம் எந்த வகையில் உபயோகப் படுத்தப்படுகிறது என்று சீர்தூக்கிப் பார்ப்பதாகும்.

இது வரை அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் சக இயக்கங்களைச் சாடுவதற்கும் சக முஸ்லிம்களை காபிர் என்றும் முஷ்ரிக் என்றும் முனாபிக் என்றும் திட்டித்தீர்ப்பதற்குத்தான் உபயோகப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

தவிர, வெறும் நான்கு விளம்பரங்களை வைத்துக் கொண்டு தடுமாறினாலும் பொதுமக்களிடம் நிதி வேண்டுகோள் வைக்காமல் இருந்து வரும் தமுமுக ஒளிபரப்பக் கூடிய இஸ்லாமிய சமுதாயத்திற்கு தேவையான பல அரிய செய்திகள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற நல்லெண்ணம் கொள்ளும் நம் போன்ற சகோதரரர்கள் தாராளமாக நேரடியாக நன்கொடைகளை அனுப்ப முன்வர வேண்டும்.

ஆனால் 11 விளம்பரங்களுக்கும் அதிகமாக ஒளிபரப்பி வரக்கூடிய ததஜவின் தெலைக்காட்சி மேலும் நிதி அனுப்பச் சொல்லி வேண்டுகோள் விடுக்கிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.

1) பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களைச் சொல்லி பொதுமக்களிடம் நிதி சேகரித்து அதற்கு எந்த முறையான கணக்கும் வெளியிடாமல் தன்னை வளப்படுத்திக் கொண்டது போல் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காக கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

2) அல்லது, தற்பொழுது வெளிவரும் விளம்பரங்கள் அந்தந்த நிறுவனங்கள் (அ) நபர்களின் அனுமதியில்லாமல் வெறுமனே அவர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டு என்று பில்ட்அப் செய்வதற்காக கட்டணம் பெறப்படாமல் வெளியிடப்படுபவைகளாக இருக்க வேண்டும்.

இதை நாம் அனுமானமாக சொல்ல வில்லை, சுனாமி வசூலில் கூட இது போல பில்ட்அப் செய்து பல்வேறு நபர்களின் பெயரால் பெரும் தொகை எழுதிவிட்டு கணக்கு காட்டும் சமயத்தில் அவை வந்து சேர வில்லை என்று கதை அளந்ததை நாம் அறிவோம்.

எனவே தான் ஒவ்வொருவராக களம் இறக்கப்பட்டு தற்பொழுது திரையில் நாகூர் ஏ.எஸ் அலாவுதீன் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார். இதைவிட மிக இலகுவான வழிமுறை ஒன்று இருக்கிறது, தேர்தல் சமயத்தில் அன்றைய ஆளும் கட்சியிடம் பெற்றதையும் தொலைக்காட்சி மூலம் கிடைத்த லாபத்தையும் முதலீடு செய்தாலே டான் போன்ற மலிவு தொலைக்காட்சிகளை வருடம் முழுக்கவும் நடத்த இயலும். இன்றைய தேதியில் அதிகமான சொத்துக்கள் உள்ள தமிழகத்தின் ஒரே மௌலவி பிஜே என்பது தமிழறிந்த அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

ராவுத்தர் 10.08.2006

Tuesday, August 08, 2006

களவாடப்பட்ட உணர்வின் கள்ளத்தனம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தமுமுகவினரிடமிருந்து களவாடப்பட்ட 'உணர்வு' வார இதழ் சுடச்சுட செய்தி தருகிறோம் என்ற பெயரில் தமுமுகவினர் பற்றி பொய்யான செய்திகளைத் தருவது ஒரு புறம் இருந்தாலும், தமுமுகவினர் சம்பந்தப்படாத செய்திகளைக் கூட கொஞ்சம் தூக்கலாக எழுதி படிப்பவர்களை மடையர்களாக ஆக்கிவருகிறது.

அனைத்துத் தவ்ஹீது கூட்டமைப்பு என்ற பெயர் கொண்ட தவ்ஹீது அமைப்பை ததஜ என்ற அரசியல் கட்சியாக பெயர் மாற்றம் செய்து கொண்ட பிறகு பிஜே, பல தில்லுமுல்லுகளை செய்து வந்தார். அதில் ஒன்று தான் சவூதி அரேபியாவில் இருக்கும் தஃவா சென்டர் சம்பந்தப்பட்ட விஷயங்களாகும்.

சவூதி அரேபியாவில் தஃவா சென்டரில் தமிழ் பிரிவு நடத்தும் ஒருநாள் நிகழ்ச்சிகள் தொடர்பாக 'உணர்வு' வார இதழில் விளம்பரம் கொடுப்பது வழக்கம். முன்பெல்லாம் எப்படி விளம்பரம் வடிவமைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறதோ அப்படியே அது வெளிவரும்.

பிஜே தமுமுகவிலிருந்து பிரிந்த பிறகு உணர்வு வார இதழில் வெளிவந்த விளம்பரங்களில் ஒருநாள் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் வித்தியாசமாக வெளிவந்தது. சவூதியில் இல்லாதவர்களுக்கு வேண்டுமானால் அதன் எதார்த்த நிலை தெரியாமல் இருக்கலாம். ஆனால், சவூதியில் உள்ளவர்கள் அந்த விளம்பரங்களைப் பார்த்து விட்டு காரித் துப்பினார்கள் என்பது தான் உண்மை.

தஃவா சென்டர் நடத்தும் ஒருநாள் நிகழ்ச்சியை ததஜவினர் தான் நடத்துகிறார்கள் என்று திரித்து விளம்பரம் செய்தார்கள். அதற்கு கடுமையான எதிர்ப்பு அலை கிளம்பியவுடன் கொஞ்சம் அடக்கி வாசிக்கலானார்கள்.

ஆனாலும் தனது தில்லுமுல்லு திருட்டுத்தனத்தை, எதிர்ப்பிற்கு பிறகும் கைவிட வில்லை. தஃவா சென்டர் தரும் விளம்பரத்தை அப்படியே போட்டு விட்டு அடிக்குறிப்பு எழுதினார்கள். எப்படி தெரியுமா? இதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும்.

'டிஎன்டிஜே நடத்தும் ஒருநாள் நிகழ்ச்சி வெற்றி அடைய வாழ்த்துகிறோம்' என்று அடிக்குறிப்பு எழுதினார்கள். ஏதோ சவூதிஅரேபியா தஃவா சென்டர்களிலெல்லாம் டிஎன்டிஜே யின் ஆட்சி நடப்பதாக காட்டிக் கொண்டார்கள்.

இப்படித்தான் சமீபத்திய உணர்வு 10:47 ல் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. 'வரதட்சணை இல்லாத் திருமணத்திற்கு எதிர்ப்பு' -நேரடி ரிப்போர்ட் என்று தலைப்பு தரப்பட்டுள்ளது.

இந்த தலைப்பிற்கும் இதன் கீழ் தரப்பட்டிருக்கும் மேட்டருக்கும் சம்பந்தமே இல்லை. வரதட்சணை கொடுத்துத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எதிர் தரப்பினர் கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ததஜவினர்.

அதுசரி, இந்தத் திருமணம் - 'நபிவழித் திருமணமா?' அல்லது 'வரதட்சணையில்லா திருமணமா?' எது சரி. வரதட்சணை இல்லாத திருமணம் என்றால் அந்த விஷயம் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். குராபிகளின் திருமணங்களில் கூட பல திருமணங்கள் வரதட்சணை இல்லாமல் நடக்கத்தான் செய்கின்றன. அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. உண்மையைச் சொல்லுங்கள்! இந்த தலைப்பு இடப்பட்டதற்கான நோக்கம் என்ன? தவ்ஹீது திருமணம், நபிவழித் திருமணம் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் வரதட்சணை இல்லாத் திருமணம் என்று கூற ஆரம்பித்து இருப்பதன் நோக்கம் என்ன?

'மணமக்கள் மாலை அணிய வேண்டும்' என்று தான் ஆவணியாபுரம் ஜமாஅத்தினர் கூறியிருக்கிறார்கள். (பார்க்க உணர்வு வார இதழ்) இதை ஒரு பெரிய விஷயமாக ஆக்க முடியாது என்பதை உணர்ந்த 'உணர்வு' பத்திரிக்கையினர் இல்லாத விஷயத்தை இருப்பதாக கதை கட்டியிருக்கிறார்கள்.

'திருமணம் எனது சுன்னத்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், அதனால் எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்களோ அப்படித்தான் செய்ய வேண்டும். ததஜ என்பது அரசியல் கட்சியாக இருப்பதால் தான் 'நபிவழித் திருமணம்' என்று எழுதுவதற்கு கை கூசுகிறதோ? எழுதுங்கள்! எழுதுங்கள்! வரதட்சணையில்லாத திருமணம் என்றே எழுதுங்கள்.

'வரதட்சணை வாங்க வேண்டும், அப்போது தான் ஊர் ஓலை கொடுப்போம், நிக்காஹ் ரிஜிஸ்டர் கொடுப்போம் என்று நாங்கள் எப்போது சொன்னோம் என்று ஊர் ஜமாஅத்தினர் கேட்கிறார்கள்?

உணர்வில் வெளியிடப்பட்ட செய்திபடி, ததஜ எனும் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் மட்டுமே, வரதட்சணையில்லா திருமணம் நடத்தக்கூடாது என்று ஜமாத்தினர் சொன்னதாக கூறப்படுகிறது. இதை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது.

வரதட்சணையில்லாத திருமணம் நடத்தக்கூடாது என்று நீங்கள் சொன்னீர்களா? என்று ஊர் ஜமாஅத் நிர்வாகிகளிடம் இவர்கள் கேட்கவும் இல்லை, அவர்கள் இது விஷயமாக தப்பித்தவறி கூட பதில் எதும் கூறவில்லை.

மாப்பிள்ளை கூட 'வரதட்சணை வாங்கினால் தான் திருமணம் செய்து வைப்போம்' என்று ஊர் ஜமாஅத்தினர் கூறியதாக உணர்வில் எந்த தகவலும் இடம் பெறவில்லை.

வரதட்சணையில்லாத திருமணம் நடத்தக் கூடாது என்று சொல்வது உணர்வின் பில்ட்அப்.

'உணர்வு' உள்ளதை உள்ளபடி எழுத வேண்டும் என்பது தான் எம்முடைய, வாசகர்களுடைய, தமிழ்நாடு மக்களுடைய எதிர்பார்ப்பாகும். உணர்வில் உண்மைதான் வெளிவரும், பொய் வெளிவராது என்ற நிலைமை மாறி, உணர்வில் உண்மையே வெளிவராது என்ற நிலைக்கு வந்திருப்பது மனவருத்தத்தை தருகிறது.

அதற்காக ஊர் ஜமாஅத்தினரின் நடவடிக்கையில் மாலை அணிந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என்ற போக்கை நாம் கண்டிக்கிறோம்.

நபி (ஸல்) காலத்தில் இவ்வளவு பூக்களுக்கு எங்கே செல்வார்கள்?, நவீன காலத்தில் இப்பொழுது கூட சவூதி அரேபியாவுக்கு பூக்கள் எல்லாம் விமானம் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் மாலை அணிந்திராத போது நாம் ஏன் அணிய வேண்டும் என்று ஊர் ஜமாஅத்தினர் யோசிக்க வேண்டும்.

தவ்ஹீது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறும் ஊர் ஜமாஅத்தினருக்கு எமது நன்றியை தெரிவிப்பதோடு, மாலை அணியும் விஷயமும் ஒரு பொருட்டே அல்ல என்பதையும் சிந்திக்க வேண்டும்.

மாலை அணிவது மட்டும் மாற்றுமத கலாச்சாரமாக இல்லாமல் இருந்தால் நாமும் மாலை அணியுமாறு பரிந்துரை செய்திருப்போம், ஏனெனில் அது ஒரு நறுமணப் பொருள் அவ்வளவு தான். மாற்றுமதத்தினர் தனது மத சடங்குகளாக மாலையை பயன்படுத்துவதால் ஹதீஸின் அடிப்படையில் அதை வேண்டாம் என்கிறோம். அதற்கு பதிலாக நறுமணப் பொருள்களான அத்தர், செண்ட் வகைகளை உபயோகிப்பது நபிவழியும் சஹாபாக்களின் வழிமுறையாகும்.

மிகச் சிறிய அர்ப்ப விஷயத்தை பூதாகரமாக்கி மதரஸாக்களை கைப்பற்ற முயற்சிப்பது, பள்ளி வாயில்களை கைப்பற்ற முயற்சிப்பது, அல்லது இழுத்து மூடுவது, பிரச்னையின்றி அண்ணன் தம்பிகளாக பழகும் ஊர்களில் மார்க்கத்தின் பெயரால் பகையை மூட்டி கலவரங்களை மூட்டிவிடுவது ததஜவினருக்குரிய பிறவிக்குணமாகும். இவர்களை புரிந்து கொண்டு ஊர் ஜமாஅத்தினரே! எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

இப்னு ஃபாத்திமா 08.08.2006


Wednesday, August 02, 2006

ததஜ எனும் ஒட்டுண்ணி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பாரசைட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது தனக்குத் தேவையான இரத்தம் எனும் உணவை பிற உயிரினங்களின் உடலில் ஒட்டிக் கொண்டு உறிஞ்சி உயிர் வசிக்கும் ஒரு வகையாகும். அந்த வகையைச் சேர்ந்தது தான் ததஜ எனும் அரசியல் கட்சியாகும்.

பாரசைட்ஸ் போன்ற கேவலமான வேலையைத்தான் ததஜவின் தலைவர் பிஜே செய்து கொண்டு வருகிறார்.

'உணர்வு' என்ற பத்திரிக்கை தமுமுக எனும் சமுதாய பேரியக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். தனக்கென்று ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்துக் கொள்ள வக்கில்லாத ததஜ, உணர்வு பத்திரிக்கையை தமுமுகவிடமிருந்து திருடிக் கொண்டு தமுமுகவிற்கு எதிரான பொய்யான கருத்துக்களை அதில் எழுதி வருகிறது. அதனால் தான் சொல்கிறோம். தமுமுகவிடமிருந்து 'உணர்வு' பத்திரிக்கையை எடுத்துக் கொண்டார், அதிலேயே தமுமுகவைப் பற்றி விமர்சனம் செய்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார் பாரசைட் போல.

'முஸ்லிம் மீடியா டிரஸ்ட்' தமுமுக என்னும் பேரியக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பது எந்த தன்மானமுள்ள தவ்ஹீதுவாதிக்கும் நன்றாகவே தெரியும். இதற்காக வேண்டி வீடியோ கேமராக்கள், ரிக்கார்டிங் வசதிகள் போன்றவைகள், டிவி நிகழ்ச்சிகள், பத்திரிக்கைகள் வெளியிடுதல் 'உணர்வு', 'ஒற்றுமை' போன்றவைகளுக்கான முதலீடுகள் செய்யப்பட்டன. அவை அத்தனையையும் ததஜ எனும் பாரசைட் எடுத்துக் கொண்டிருக்கிறது. தமுமுகவிலிருந்து பிஜே பிரிந்த போது ஒரு சிறு டிவி நிகழ்ச்சியைக்கூட தயாரிக்க முடியாமல் அதற்கான உபகரணங்கள் இல்லாமல் தர்ம சங்கட நிலைக்கு தமுமுக தள்ளப்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ததஜ எனும் பாரசைட் தமுமுகவிடமிருந்து 'முஸ்லிம் மீடியா டிரஸ்ட்'டை' உறிஞ்சிக் கொண்டு, கொளுத்திருக்கிறது.

'முஸ்லிம் டிரஸ்ட்' என்பதும் தமுமுகவின் நிரந்தர வருமானத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்டதாகும். தமுமுகவிலிருந்து பிரிந்து சென்ற பிஜே, அதற்குச் சொந்தமான 'முஸ்லிம் டிரஸ்ட்'ல் தான் வகிக்கும் பொறுப்பை முறையாக தமுமுகவிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வது தான் ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும். தமுமுகவிலிருந்து விலகுவாராம், ஆனால் 'முஸ்லிம் டிரஸ்ட்' பொறுப்பை மட்டும் விட மாட்டாராம், எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இந்த முஸ்லிம் டிரஸ்டின் கீழ் இருப்து தான் சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் கமர்ஷியல் காம்ப்ளக்ஸின் இரண்டு பிளாட்டுகளாகும். இதற்காக கட்டிட காண்ட்ராக்டர் தந்த தண்டத்தொகை, அரண்மனைக்காரன் தெருவிலிருக்கும் ததஜவின் அலுவலக வாடகைக்காக செலுத்தப்பட்டது. இப்பொழுது அதன் கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டதால் அதில் கிடைக்கும் வாடகைத் தொகை முழுக்க முழுக்க ததஜவிற்காக பயன்படுத்தப்படுகிறது. தமுமுக மக்கள் இயக்கத்திற்காக வாங்கப்பட்ட அந்த பிளாட்டுகளும் அதன் வாடகையும் அதற்கு பயன்படாத வகையில் பாரசைட் வேலையை பார்த்துக் கொண்டிருப்பவர் தான் உலக மகா அயோக்கியர் பிஜே என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதே போன்றே மதுரையில் இதற்கு சொந்தமான சொத்தையும் அதன் வருமானத்தையும் ததஜ எனும் பாரசைட் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கிறது.

இவை போக 'அல்முபீன்' எனும் மாத இதழை அபகரித்துக் கொள்ள நினைத்த பிஜே, அந்த இதழை தன் வசப்படுத்துக் கொண்டு பின்னர் சிறிது சிறிதாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். 'ஏகத்துவம்' என்ற பெயர் அல்முபீனுக்கு இடப்பட்டது, ஐஏசி என்பது, இல்லாத ஜமாத்துத் தவ்ஹீத் ஆக மாற்றப்பட்டது. பப்ளிஷர் அண்ட் ஓனர் பிஜேயின் மகன் முஹம்மத் என்ற பெயர் முதலில் இடப்பட்டடு வெளிவந்தது. பின்னர் தான் அலாவுதீன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஏகத்துவம் பிஜேயின் தனிச்சொத்தாக மாறிவிட்டது. பிஜேயும் ததஜவும் ஒட்டுண்ணி எனும் பாரசைட் என்பதற்கு இன்னும் சான்று வேண்டுமா?

தனது கொடியை தேர்ந்தெடுக்கும் போது கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட கொடி பிற இயக்கங்களின் கொடியாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். என்ன நடந்தது? ஏற்கனவே ஒரு முஸ்லிம் இயக்கம் வைத்திருக்கும் கொடியை தேர்ந்தெடுத்து, அவமானப்பட்டது தான் மிச்சம். இதில் கூட தமுமுகவின் கறுப்பு வெள்ளை நிறத்தை ஒத்திருந்ததை மறுக்க முடியாது. அதாவது திருட்டுக் கொடி. அதே போன்றே டீசர்ட்டும் திருட்டு. தமுமுகவின் டீசர்ட்டை ஒத்திருக்கிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட, ஏழைகளுக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை 'உணர்வு' பத்திரிக்கையின் சர்க்குலேசன் குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவும் ததஜவினருக்காக டீசர்ட் வாங்குவதற்காகவும் செலவிடப்பட்டது, அதோடு கடற்கரையே இல்லாத இடங்களுக்கும் சுனாமி நிதி வினியோகிக்கப்பட்டதாக கள்ளக்கணக்கு எழுதியது போன்றவையும் பணம் எனும் இரத்தம் எப்படியெல்லாம் தனது கட்சிக்காக உறிஞ்சி எடுக்கப்படுகிறது என்பதற்கு சான்றுகளாகும்.

அவர்களின் ஒட்டுண்ணி வேலை, கடைசியில் டான் டிவி நிகழ்ச்சியில் நன்கொடை வேட்டையில் வந்து முடிந்திருக்கிறது. இவர்களுக்கு கொள்கை என்பது இரண்டாம் பட்சம் தான் பணம் என்பது தான் பிரதானம் என்பதை மேற்கண்ட விஷயங்கள் நிரூபிக்கின்றன.

மொத்தத்தில் ததஜ எனும் அரசியல் கட்சி பிறரின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் அர்ப்ப பாரஸைட் இயக்கமாகும். தவ்ஹீது நிலைத்திருக்கும், கியாம நாள் வரை தவ்ஹீதுக்காக பாடுபடும் ஒரு கூட்டம் இருக்கும் ஆனால் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்ற கட்சியின் வாழ்நாள் மிகவும் குறைவு என்பதற்கு மேற்கண்ட விஷயங்கள் சான்றாகும்.

ததஜவிற்கும் பிஜேக்கும் அஸ்தமனம் என்பது வெகுதொலைவில் இல்லை.

பிறரது சொத்துக்கள் மூலம் நடத்தப்படும் ததஜவில் இருப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஹராமாகும். பிஜேயை வணங்கும் குராஃபிகள் வேண்டுமானால் அதில் இருந்து கொள்ளட்டும். உண்மை தவ்ஹீதுவாதி ததஜவை விட்டு விலகுவது தான் நல்லது. இல்லையேல் மறுமையில் பிஜேயுடன் நீங்களும் டிரஸ்ட் விஷயமாக விசாரணைக்காக கொண்டு வந்து நிறுத்தப்படுவீர்கள் என்பதை கூறிக்கொள்கிறோம்.

இப்னு ஃபாத்திமா 02.08.2006