Wednesday, May 31, 2006

சுனாமி திருடர்கள் யார்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சுனாமி திருடர்கள் யார்?

அன்பான வாசக சகோதர்களே!

இப்பொழுதும் இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டது. இதே இந்தோனேஷியாவில் 2004 டிசம்பரில் ஏற்பட்ட கடல் நிலநடுக்கத்தை எவராலும் மறக்கமுடியாது. தெற்காசிய மக்கள்தொகையை கணிசமாக குறைத்து, பல நாடுகளில் பொருளாதாரத்தை சீர்குலைத்த சுனாமி எனும் ஆழிப்பேரலையை, நெஞ்சில் ஈரமுள்ள எவரால் மறக்க முடியும்?

ஆனால் என்ன செய்வது, வல்ல இறவைனின் படைப்பில் ஈரமில்லா நெஞ்சுடையவர்களும், எலும்பில்லாத நாக்கால் உண்மையோடு பொய்கலந்து ஏமாற்றும் வித்தை தெரிந்தவர்களும் நம்மிடையே இருக்கத்தானே செய்கிறார்கள்.

குறிப்பாக சுனாமியை பினாமியாக்கி சேகரித்ததில் கணிசமாக சுருட்டிக்கொண்டாவர்கள் அத்துடன் நின்றாலாவது சமுதாயம் மறந்துவிட்டிருக்கும், ஆனால் சுருட்டிக்கொண்டதை மறைப்பதற்காக மற்றவர்களை குறைகூறித் திரிகிறார்கள் இந்தக் குறைமதியாளர்கள்.

ஆமாம், சுனாமி பெயரால் வசூலித்து தனது இயக்கத்தவர்களுக்கு சீருடை வாங்கிக்கொடுத்து அதன் மூலம் தனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொண்டவாகள், மற்றவர்களை (அதாவது கலப்பில்லாத முறையில் சுனாமிக்காக வசூலித்ததை, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே செலவு செய்த தமுமுகவை) சுனாமி திருடர்கள் என அடைமொழி இட்டு ஏளனம் செய்கின்றனர்.

ஒரு வசனத்தை அவர்களுக்கு, நினைவூட்டிவிட்டு அவர்களுடைய இலட்சணத்தை அவர்களது வாக்குமூலம் மூலமாகவே காண்போம்.

மூஃமின்களே! எந்த ஒரு கூட்டத்தினரும், மற்றொரு கூட்டத்தினரை பரிகாசம் செய்ய வேண்டாம். (ஏனெனில்) இவர்களைவிட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும் . . . . . . அன்றியும் கெட்ட புனைப்பெயர்களைக்கொண்டு பட்டப்பெயர் சூட்டிக் கொள்ளாதீர்கள் . . . . .(49 : 11)

தமுமுகவிற்கு கெட்ட புனைப்பெயர் சூட்டும் ததஜ தலைவர், தன்னைப்பற்றி 'தான் அபூஜஹ்லைவிட கொடுமையானவன்' என்று கூறியிருந்தும் கூட திருவாளர் பி.ஜே. வைப்பற்றி குறிப்பிடும் பொழுதெல்லாம் தமுமுகவினர் அபூஜஹல் பி.ஜே என குறிப்பிடுவதில்லை, அவர்களாக புனைந்து கெட்ட புனைப்பெயர் வைக்காததோடு, அவரே குறிப்பிட்ட அடைமொழியைக்கூட உபயோகப்படுத்த அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடிய உண்மை தவ்ஹீத்வாதிகளாக தமுமுகவினர்தான் இருந்துவருகின்றனர்.

தமுமுகவிலிருந்து பிரிந்து சென்றபொழுது, அவருடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்த டிரஸ்ட் சொத்துகளை, அதன் உரிமையாளர்களாக தமுமுகவிடம் திரும்ப ஒப்படைக்காமல், திருடிச்சென்றது உண்மையாக இருந்தும், திருவாளர் பி.ஜே வை டிரஸ்ட் திருடன் என திரும்ப, திரும்ப சொல்வதற்கு கூச்சப்படக்கூடிய உண்மை முஸ்லிம்களாகத்தான் தமுமுகவனர் இருந்து வருகின்றனர்.

ஏனெனில் வெட்கம் ஈமானின் ஒருபகுதி என்பதை உணர்ந்த உண்மையாளர்கள் தமுமுகவினர் இதுபோன்ற ஒப்பீடுகள் அதிகம் இருந்தாலும், சுனாமியைப்பற்றிய ஒப்பீட்டை இப்போது பாருங்கள்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, நிதி சேகரிக்க தனியான ஒரு வங்கிக்கணக்கு ஆரம்பித்தது தமுமுக.

ஆனால் சுனாமி நிவராண நிதியை ததஜ வசூலித்தது தனது ஒரே வங்கிகணக்கில் தான். இதனால் என்ன ஆகும். ஆரம்பம் முதலே செயல்பட்டு வந்த ததஜவின் கணக்கில்தான் அவர்கள் நன்கொடை வசூலிக்கிறார்கள். (டான் டிவியில் ஒவ்வொரு நாளும் தோன்றி நன்கொடை அனுப்பச்சொல்லி வேண்கோள் விடுப்பதை காணலாம்) இதைத்தவிர ஜகாத் பணமும் (வாழ்க்கையில் ஒரு முறை ? ? ?) அதே வங்கி கணக்கில்தான் வசூலிக்கப்படுகிறது.

கடந்த வருடம் குலங்கியதாக கதைவிட்ட கும்பகோணத்திற்காக உண்டியல் குலுக்கியதும் இதே வங்கிக்கணக்கில்தான். நுன்கொடை அனுப்பும் நல்ல உள்ளங்கள் அவர்களாக முன்வந்து வகைப்படுத்தினாலொழிய அறிந்து கொள்ள முடியாத வகையில் அனைத்து;ம ஒரே வங்கி கணக்கில் வசூல் செய்ததன் பின் சுனாமி வகைக்காக அனுப்பப்பட்ட தொகை இயக்க நன்கொடையாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்காது என்பதற்கான எவ்வித உத்திரவாதமுமில்லை.

இப்படி நன்கொடைகளை வகைப்படுத்தாமல் கலந்து விட்டவர்தான், சுனாமிக்காக தனி வங்கி கணக்கின் மூலம் வசூலித்து வினியோகித்த தமுமுகவை அல்லாஹ்விற்கு அஞ்சாமல் ஏளனம் செய்கிறார்.

வசூலித்ததே இந்த இலட்சணத்தில் என்றால், வினியோகம் செய்தது அதைவிட கொடுமை.

சுனாமி நிதி வினியோக பட்டியலில் ததஜ கணக்கு காட்டியுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்த நன்கொடையாளர்கள் அனேகர்.

ஏனெனில் கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு ததஜ சுனாமி நிவாரணமாக கணக்கு காட்டியுள்ளது ரூபாய் 60 ஆயிரம், கடற்கரையே இல்லாமல் எப்படி சுனாமி தாக்கியது என்பது ததஜ தலைமையே அறிந்த ரகசியம்.

கடற்கரை இல்லாத வேலூருக்கு ததஜ செலவிட்டதாக எழுதியுள்ளது அக்மார்க் கணக்காம். ஆனால், அந்தமான் மற்றும் விசாகபட்டிணத்திற்கு தமுமுக செலவிட்டது கள்ள கணக்காம். ஏன் விசாகப்பட்டிணத்திலும் அந்தமானிலும் சுனாமி தாக்குதல் நடைபெற வில்லையா? அல்லது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடாதா?

கடற்கரை இல்லாத வேலூருக்கு சுனாமி நிதியை செலவிடலாமாம் ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டோரின் எதிர்கால உபயோகத்திற்காக நாகையில் தமுமுக முன்னிற்று சமுதாய கூடம் கட்டுவது தவறாம்.

சுனாமி பாதிப்பை உணர்ந்து உடனடியாக களத்தில் இறங்கி மீட்புபணியில் தமுமுக செய்கிற பொழுது, தன்னுடைய ஒழுக்க கட்டுப்பாட்டின் காரணமாக சீருடை அணிந்து சிறப்பாக தமுமுக தொண்டர்கள் பணியாற்றினார்கள்.

உடனடி மீட்பு பணியிலோ, நிவாரண முகாம் அமைப்பதிலோ வேகம் காட்டாத ததஜ பின்னர் சுதாரித்து சுனாமி நிவராண நிதி திரட்டியபின், அந்த பணத்திலேயே தனது சீடர்களுக்கு சீருடை அணிவித்து அழகு பார்த்தது.

சுPருடைக்காக செலவிடப்பட்;ட ரூபாய் 40 ஆயிரம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் உணவு, உடை, உறைவிடத்திற்காக அன்பளிப்பாக அளிக்கப்பட்டதா? ததஜ வின் இயக்கத்தவருக்கு சீருடை வாங்கவா?

சுனாமி சீரமைப்புக்காக பெற்ற தொகையில் ரூபாய் 40 ஆயிரத்தை தனது தொண்டர்களுக்கு தாரைவார்த்த ததஜ, முறையாக வினியோகித்த தமுமுவை சுனாமி திருடர்கள் என அடைமொழி இடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா?

இவை அனைத்தையும்விட உச்சகட்;ட கொடுமை, சுனாமிக்காக வசூலித்த பணத்தில் ரூபாய் இரண்டு இலட்சம் உணர்வு பத்திரிக்கைக்காக எடுத்துக்கொண்ட கயமைத்தனம்.

இப்படி எல்லா வகைகளிலும் மோசடி செய்தவர், நியாயமாக செலவிட்டவரைப்பார்த்து திருடன் எனச்சொல்வது அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பாதவற்றின் வெளிப்பாடாகும்.

தனது தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளாவிடில், ததஜ ஆரம்பிக்கும் முன் அதன் தலைவர் செய்த அத்தனை நல்லறங்களும் பாழாய்போய்விடும் என எச்சரிக்கிறோம். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!.

இறையடியான் 31.05.2006

Sunday, May 21, 2006

தேர்தல் ஒரு பெட்டிக்கடை விஷயமா?

அன்பான வாசகர்களே!

ஒரு வழியாக தமிழகத் தேர்தல் முடிவடைந்து, பெரும்பாலானோரின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சி மாற்றமும் நடந்து விட்டது.

புதிய ஆட்சி தனது தேர்தல் கால வாக்குறுதிகளை சூட்டோடு சூடாக ஆணைகளாக அறிவித்து அனைவரது ஆதரவையும் தக்க வைக்க முயற்சிக்கிறது. வாழ்த்துக்கள்.

இத்தேர்தல் மூலம் முஸ்லிம் சமுதாயம் பெற்றிருக்கும் பலன் மகத்தானதாகும். சமுதாய முன்னேற்றத்திற்காக உண்மையாகவே உழைப்பது யார்? முஸ்லிம்களின் பெயரையும் கொள்கைகளையும் சொல்லிக் கொண்டு, முஸ்லிம் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவர் யார் என்பதனை அறிந்து கொள்ள, இத்தேர்தல் முஸ்லிம்களுக்கு பேருதவியாக இருந்தது.

காலாவதியான ஒன்றை, உரிய நேரத்தில் புதுப்பிக்காமல், காலம் தாழ்த்தி தேர்தல் கால அறுவடைக்காக, தேர்தல் அறிவிப்பு வெளியான பின், வரைவு அறிக்கை போல சும்மா இதுபோல அமைக்க உள்ளோம் என்று ஒரு 'மாதிரி' படிவத்தை காட்டிய மாத்திரத்திலேயே, அம்மா முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறிவித்து விட்டார் - அல்ஹம்துலில்லாஹ் என கூத்தாடியவர்கள் குறித்து சிலர் (குறிப்பாக நாம்) விமர்சித்த போது பலரால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் நம்மை சாடினார்கள்.

அந்தோ! பரிதாபம்!! இன்று அத்தகையோர் தாங்கள் உண்மையென நம்பிய ததஜவினரின் தகுதியையும், தரத்தையும் அறிந்து தலை குனிந்து நிற்கின்றனர்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னுள்ள நிலை பற்றி ததஜவின் வலைத்தளம், ரசிகர்களை தக்க வைக்கும் வழமையான முயற்சியில் வீடியோ கிளிப்பிங்களை வெளியிட்டது. அதே வீடியோவை டான் டிவி மூலம் ஒளிபரப்பவும் செய்தது. வழக்கமாக வலைத்தளத்தில் வருவதை, பிஜே பேசுகிறார் அல்லது எழுதியுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அதிலுள்ள நியாய, அநியாயங்களைப் பற்றி ஆராயாமல் அப்படியே பரப்பக்கூடிய ததஜவினர் தற்சமயம் வெளியாகியுள்ள இந்த வீடியோவை வினியோகிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

காரணம், திருவாளர் பிஜே அந்த வீடியோவில் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும் நகைப்புக்குரியது, உண்மைக்கு மாற்றமானவைகளாகும். ஏதோ பிஜே இப்பொழுது தான் உண்மைக்கு மாறாக பேசுகிறார் என நாம் குறிப்பிடுவதாக எண்ண வேண்டாம். அவர் மக்கள் பேரியக்கமான தமுமுகவிலிருந்து விலகியதிலிருந்தே உண்மைக்கு மாற்றமாகத்தான் பேசி வருகிறார்.

ஒரே ஒரு வித்தியாசம், அன்று அவர் மறைத்தவை ஒரு சிலருக்கு மட்டுமே அறிந்த உண்மைகள். ஆனால் இன்று அவர் மறைக்க முயல்வதோ பலரும் அறிந்த பட்டவர்த்தமான ததஜ மற்றும் சாமானிய பொது ஜனத்தினால், இன்று பிஜே கூறும் முழுப்பூசணிக்காயை தேனீர் கோப்பையில் மறைக்கும் விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிஜேயின் சமீபத்திய உரையிலுள்ள அபத்தங்களை பட்டியலிட்டால் வார்த்தைக்கு வார்த்தை வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும்.

ஏற்கனவே ஒன்றிரண்டு விஷயங்களை சில சகோதரர்கள் குறிப்பிட்டு விட்டார்கள். எனவே அதல்லாத சில அபத்தங்களை முதல் தவணையாக நாமும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இன்னும் கூட சில அப்பாவிகள் பிஜேயின் கபட நாடகத்தை அறியாமல் உள்ளதால் அவர்களுக்காக இதனை வழங்குகிறோம். இதனை மறுப்பவர்கள் தாராளமாக விளக்கமளிக்கலாம்.

ஆரம்பமாக, தேர்தல் தோல்வியால் துவண்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு உதாரணம் சொல்கிறார். அதாவது 'இலட்சக்கணக்கில் முதலீடு செய்து வியாபாரம் செய்பவர், பெட்டிக்கடையில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக வருந்தமாட்டார்' எனக் குறிப்பிடுகிறார்.

இன்று இலட்சக் கணக்கில் அல்ல, கோடிகளில் புரளும் அவர் முந்தய சங்கரன்பந்தல் பெட்டிக்கடை ஞாபகத்தில் சொன்னாரோ அல்லது இன்று பெற்ற 'பெட்டி' குறித்து சொன்னாரோ தெரியாது, ஆனால், இந்த தேர்தலை முஸ்லிம்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஒன்றாக தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவிட்டு இன்று பெட்டிக்கடையாக (சிறு விஷயமாக) தள்ளிவிடச் சொல்வதன் மர்மம் என்ன?

அடுத்ததாக, ஐந்து வருடத்தில் அதிக போராட்டங்களை நடத்தியது நாங்கள் தான் என்கிறார். வெறும் இரண்டு வருடங்களே ஆன ததஜ எப்படி 5 ஆண்டுகளாக போராடி இருக்க முடியும்? ஒரு வாதத்திற்காக கடந்த இரு வருடங்களை எடுத்துப் பார்த்தால் கூட ததஜ குறிப்பிட்டு சொல்லும் படியான எந்த போராட்டத்தையும் பெரிய அளவில் நடத்த வில்லை. மாறாக 2004 டிசம்பர் 6ல் தமுமுக டெல்லியில் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தையும், 2004ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா வீட்டு முற்றுகைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி தான் கையகப்படுத்திய பத்திரிக்கையில் (உணர்வில்) செய்தி வெளியிட்டார்.

இதனை ஒட்டிய நமது சந்தேகம், தேர்தல் அறிவித்ததும் முதல்வர் ஜெ ஜெவைச் சந்தித்த ததஜ நிர்வாகிகள் கடந்த ஐந்து வருடத்தில் தான் நிம்மதியாக சுவாசித்தோம் என்று புளகாங்கிதம் அடைந்து கூறினார்களே, நிம்மதியாக இருந்த போது அதிக அளவில் எவ்வாறு போராட்டம் நடத்தினார்கள் என யாராவது விளக்க முடியுமா?

தேவைப்பட்டால் மீண்டும் தொடருவோம்.

இறையடியான் 21.05.2006

Tuesday, May 09, 2006

மருங்காபுரி ருகையா மாலிக் என்ற சல்மா

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 08-05-2006

மருங்காபுரி ருகையா மாலிக் என்ற சல்மா

அன்புள்ள ரைசுத்தீன் அவர்கட்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஒரு விபச்சாரியும் (சல்மா) த.மு.மு.க.வும் என்ற தலைப்பில் நீங்கள் அனுப்பிய மெயில் கண்டேன். நீங்கள் அனுப்பிய அந்த மெயிலை பலரும் எனக்கு பார்வேடு செய்திருந்தனர். இஸ்லாமிய உணர்வுடன் நீங்கள் செய்திருக்கும் விமர்சனத்திற்கு உரிய மகத்தான நற்கூலிகளை அல்லாஹ் தங்களுக்குத் தந்தருள்வானாக ஆமீன். தேர்தல் நேரமாக இருப்பதால் எனக்குத் தெரிந்த உண்மைகளை உடனடியாக நேற்றே தரவில்லை. உடனடியாக பதில் தந்தால் ஓட்டுக்காக தந்த மாதிரியும் ஆகி விடும். எனவே வாக்குப் பதிவு முடிந்த பின் எழுதுகிறேன்.

உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்தி.

மருங்காபுரி சல்மாவின் கடந்த கால ஆபாச எழுத்துக்களை துகிலுரிந்து காட்டியுள்ளீர்கள். இதில் கற்பனை கலவையின்றி உண்மைகளைத்தான் எழுதியுள்ளீர்கள். இருந்தாலும் உரிய ஆதாரங்களை காட்டி இருந்தீர்கள். ஆனால் இவளுக்காக ஜவாஹிருல்லாவும் ஹைதர் அலியும் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார்கள் என்று எழுதியுள்ளதுதான் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய அரசியல்வாதிகள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்து விட்டால் பால் அதன் தன்மையை இழந்து விடும். ஒரு குடம் விஷத்தில் ஒரு துளி பால் கலந்து விட்டால் விஷம் அதன் தன்மையை இழந்து விடாது. உண்மைகளை வெளிக் கொண்டு வரும்பொழுது பொய்மை கலந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொய்மை கலந்து விட்டால் உண்மை எடுபடாது. சல்மாவின் கடந்த கால எழுத்துக்களை இன்றைய அரசியல்வாதிகள் அங்கீகரிப்பார்கள். இஸ்லாமிய அரசியல்வாதிகள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

மருங்காபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ருகையா மாலிக் என்ற சல்மா 31-03-2006 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு த.மு.மு.க. அலுவலகம் வந்தார். அவருடன் அவரது கணவரும் வந்திருந்தார். தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை சந்தித்தார். தலைவருடன் மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ பாஸி, ரஷhதி அவர்களும் இருந்தார்கள். அப்பொழுது நானும் த.மு.மு.க. அலுவலகத்தில் இருந்தேன். ருகையா மாலிக்கின் எழுத்துக்கள் இஸ்லாத்திற்கு விரோதமானது. அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

இனி நான் முழுமையாக அரசியல் பணிகளையே செய்வேன்.

ஷஷநான் திருந்தி விட்டேன். நான் முஸ்லிம் என்பதால்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. நமது சமுதாயத்தின் சார்பில்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. எனவே சமுதாயத்திற்காக பாடுபடுவேன். எங்கள் தலைவரும் (கருணாநிதி) சொன்னார். உன் சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று. எனவே இனி நான் முழுமையாக அரசியல் பணிகளையே செய்வேன் என்றார் ருகையா மாலிக் என்ற சல்மா.

ஏற்க வேண்டுமா மறுக்க வேண்டுமா? இஸ்லாத்தின் நிலை என்ன?

சல்மாவைப் போன்றே அனைத்து முஸ்லிம்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் த.மு.மு.க. இவரை ஆதரித்து பிரச்சாரம் செய்கின்றதோ என்னவோ என எழுதியுள்ளீர்கள். நான் திருந்தி விட்டேன் என்று ஒருவர் சொல்லும்பொழுது அதை ஏற்க வேண்டுமா மறுக்க வேண்டுமா? இஸ்லாத்தின் நிலை என்ன? 6 மாதங்களுக்கு முன்பு த.மு.மு.க.வின் மக்கள் உரிமையில் சமுதாய விரோதியாக, காபிராக சித்தரித்து விட்டோம். எனவே நீங்கள் திருந்தி விட்டதாகக் கூறுவதை ஏற்க மாட்டோம் என்று கூற வேண்டுமா?

எப்படி எழுதினீர்களோ ஏன் எழுதினீர்களோ தெரியவில்லை.

முஸ்லிம்கள் குறைவாக உள்ள அந்த தொகுதியில் த.மு.மு.க.வின் மாநில பொறுப்பாளர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு செல்லவே இல்லை. அப்படி இருக்க ஜவாஹிருல்லாவும் ஹைதர் அலியும்; ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார்கள் என்ற உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்தியை எப்படி எழுதினீர்களோ ஏன் எழுதினீர்களோ தெரியவில்லை. இதை மீண்டும் பதிவு செய்து கொள்கிறேன்.

அவர்களைப் பற்றிய செய்தி வெளியே வரவில்லை அவ்வளவுதான்.

இன்னொன்றையும் தங்கள் கவனத்திற்கு தர விரும்புகிறேன். ருகையா மாலிக் என்ற சல்மாவை விட மோசமானவர்களும் இன்றைய அரசியலில் இருக்கிறார்கள். அதுவும் முஸ்லிம் சமுதாய அமைப்பில் இருக்கிறார்கள். அதன் சார்பில் எம்.எல்.ஏ.வாகவும் ஆகி இருக்கிறார்கள். சல்மா பற்றிய செய்தி வெளி வந்து விட்டது. அவர்களைப் பற்றிய செய்தி வெளியே வரவில்லை அவ்வளவுதான்.

அந்த கட்சியினர் மூலமே வெளிப்பட்டு விட்டது.

கருணாநிதி அவர்களாவது ஷஷஉன் சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி உள்ளார். ஷஷதேர்தலில் போட்டியிட சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை பிரதர் என்று சொல்லக் கூடிய இப்லீஸ்தான் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் சமுதாய அமைப்பின் தலைவனாக உள்ளான். இது இந்த தேர்தலில் அந்த கட்சியினர் மூலமே வெளிப்பட்டு விட்டது.

மேலப்பாளையம் முழுவதும் ஒரே பரபரப்பு.

04-05-2006 வியாழன் அன்று காலையில் மேலப்பாளையத்திற்கு முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் வந்துள்ளார். மேலப்பாளையம் முழுவதும் ஒரே பரபரப்பு. என்ன பரபரப்பு. 03-05-2006 புதன் அன்று காயல்பட்டிணம் சென்றேன். ஐக்கிய சமாதான பேரவை நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு தலைமை வகித்தேன். ஹாமித் பக்ரி மன்பஈ, அப்துர்றஹ்மான் ஷpப்லி மிஸ்பாஹி ஆகியவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதில் கலந்து கொண்டுவிட்டு வந்ததால் சுபுஹுக்குப் பிறகே உறங்கினேன். எனவே பரபரப்புக்குரிய காரணத்தை மாலையில்தான் அறிந்தேன்.

மணியாச்சி காஜா வேட்டியை உருவி அம்மணமாக்கி விட்டார்கள்.

மேலப்பாளையத்தில் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இரண்டு கோஷ;டி உள்ளது. ஒன்று முன்னாள் எம்.எல்.ஏ. கோதர் மைதீன் அமைத்துள்ள புதிய அணி. இன்னொன்று முன்னாள் எம்.எல்.ஏ. ஷம்சுல் ஆலம் தலைமையிலானது. இதில்தான் ஷஷஎங்க முஸ்லிம் லீக் தலைமையை நாய் கூட மதிக்காது என்று பேசிய மணியாச்சி காஜா என்பவர் உள்ளார். முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் வந்த காரில் மணியாச்சி காஜா என்பவர் தொங்கிய வண்ணம் வந்துள்ளார். முஸ்லிம் லீக் தலைமையை நாய் கூட மதிக்காது என்று பேசிய நீ எதற்கு வந்தாய் என்று எதிர் கோஷ;டியினர் மணியாச்சி காஜா வேட்டியை உருவி அம்மணமாக்கி விட்டார்கள்.

ஷம்சுல் ஆலம் மேலப்பாளையம் போலீஸில் கம்ளைண்ட் செய்துள்ளார்.

உள்ளாடை எதுவும் அணியாத அவர் எதிர் அணியை தாக்க முயன்றுள்ளார். தான் நிர்வாண நிலையில் இருந்த போதிலும் எதிர் அணியை தாக்க வேண்டும் என்பதற்காக கல்லை தேடியுள்ளார். போலீஸார்தான் அவருக்கு வேஷ;டியை எடுத்துக் கொடுத்து உடுத்தி விட்டுள்ளனர். போலீஸ் கேஸ் ஆகி எப்.ஐ.ஆர். போட்ட பின்னர் சமாதானம் ஆகி உள்ளனர். முஸ்லிம் லீக் கொடிக் கம்பத்தில் பெயிண்ட் அடித்து புதுப்பித்து விட்டார்கள். புதுப்பித்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஷம்சுல் ஆலம் மேலப்பாளையம் போலீஸில் கம்ளைண்ட் செய்துள்ளார்.

இதையெல்லாம் எண்ணிப் பாருங்கள். சமுதாய துரோகிகளால் சாக்கடையாக ஆக்கப்பட்டு விட்ட இன்றைய அரசியலை விட்டு ஒதுங்கி விட வேண்டுமா? சமுதாயத்தின் பெயரால் சாக்கடையில் உழன்று கொண்டிருக்கும் பன்றிகளை அகற்றி விட்டு அரசியலை சுத்தம் செய்து, இஸ்லாம் கூறும் அரசியலை செய்து காட்ட வேண்டுமா? எது இஸ்லாம் சிந்தியுங்கள். வஸ்ஸலாம்.

அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

Monday, May 08, 2006

பெட்டி வாங்கினாரா பிஜே?

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிஜெ, தான் பெட்டி வாங்கவில்லை என்பதற்கு ஆதாரமாக 12 (?) பிரமுகர்கள் சேர்ந்து முதல்வரை சந்தித்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். அவருடைய வாக்குப் படி திருமாவளவனும் வைக்கோவும் தனியாக சந்தித்ததால் பெட்டி வாங்கியதாக குற்றம் சாட்டுகிறார். ஏன்றாலும் தான் மட்டுமே யோக்கியன் என்று இது வரை மார்க்க விசயங்களில் பிற ஆலிம்களை எப்படி விமர்சனம் செய்தாரோ, அதேவகையில் இப்பொழுதும் வைக்கோவையும் திருமாவையும் விமர்சித்துள்ளார். உண்மையில் தனியாகச் சென்ற அந்த இருவரும் தங்களது தனியான சந்திப்பின் போது பெட்டி வாங்க வில்லை. பேரம் படிந்து அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கான கையொப்பம் இடத்தான் அவர்கள் முதல்வரை தனியாக சந்தித்தார்கள். அதற்கு முன்பே பேரம்படிந்து பணப்பட்டுவாடா முடிந்து விட்டது என்பது தான் உண்மை. அதே போலத்தான் பிஜெவும் தனது சமுதாய மக்களை முதல்வரிடம் விலைபேசி உடன்பாடு ஏற்பட்டது.

அவருடைய வாதத்திறமையால் 12 பேர் இணைந்து எப்படி பெட்டி வாங்கி இருக்க முடியும் என்பது போல் வினவுகிறார். பெட்டி கொடுப்பவர்கள் 12 பேரை ஒன்றாக அழைத்து வைத்து ஒருவருக்கு மட்டும் பெட்டி தரமாட்டார்கள். அதே சமயம் தனி இடத்தில் பெட்டி பேரம் முடிவாகி அது கைமாறியதன் பலனாக தனக்குள்ள செல்வாக்கை முதல்வர் முன் காட்டுவதற்காக வருத்தி வருத்தி அழைத்து 12 பலி ஆடுகளை முதல்வர் முன் காட்சிப் பொருளாக்கி இருக்கலாம்.

அதுதான் எதார்த்தமான உண்மையும் கூட அதில் தெரியாத்தனமாக உண்மையை பேசக்கூடிய ஒரு கறுப்பு ஆடு நுழைந்த காரணத்தினால் எல்லா ஆடுகளின் வேசம் கலைந்து விட்டது அதனை மக்கள் முன் சமாளிப்பதற்காக தனது வாதத்திறமையை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்.

பாவம் பிஜெ தேர்தல் முடிந்ததும் அவருடைய சுயரூபம் அனைவருக்கும் விளங்கத்தான் போகிறது.

இறையடியான் 08.05.2006

Thursday, May 04, 2006

தனக்கத் தானே எழுதிக் கொண்ட கடிதமா?

தவ்ஹீதின் பெயரால் தனிக்கட்சி கண்டவர் தவ்ஹீதிற்குள் அரசியல் நடத்தியவர், தற்சமயம் தவ்ஹீதுவாதிகள் என பட்டம் சூட்டிக் கொண்ட தக்லீதுவாதிகளின் துணையோடு தனியொரு அரசியல்வாதியாக பரிணமித்து விட்டார்.

கோவை சிறைவாசிகள் விஷயத்தில் அரங்கத்தில் ஒன்றும் அந்தரங்கத்தில் ஒன்றுமாக அறிக்கைகள் விட்டு அசத்திக் கொண்டுள்ளார்.

அறையில் (காவல் துறையையும் உளவுத்துறையையும் கையில் வைத்துள்ள முதல்வரின் முன்) கோவை சிறைவாசிகள் குற்றவாளிகள் என்றும், வெளியில் அவர்களின் விடுதலைக்காக முதல்வரிடம் மன்றாடியதாகவும் கதையளக்கிறார்.

நீதி மன்றத்தில் கோவை சிறைவாசிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்து விட்டு மக்கள் மன்றத்தில் அவர்களின் விடுதலைக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்கிறார்.

இத்தகைய இரட்டை நிலைபாட்டை பரம்பரை அரசியல்வாதிகள் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். அதே நேரத்தில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வித்தியாசம் தெரியாமல் இவர் உளறுவதைக் கண்டு நகைக்கவும் செய்கின்றனர்.

இடஒதுக்கீடு தொடர்பாக கருணாநிதி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அக்கடிதம் கருணாநிதி தனக்ககுத்தானே எழுதிக் கொண்டதாக பி.ஜே விமர்சனம் செய்கிறார்.

பாண்டிச்சேரி முதல்வர் அமைச்சரவையில் இயற்றிய தீர்மானத்தை தேர்தல் கால அரசியல் கட்சியான ததஜ ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு காங்கிரஸ் முதல்வர் தனது சக காங்கிரஸ் அமைச்சர்களுடன் கலந்து உருவாக்கி காங்கிரஸ் பிரதமருக்கு அனுப்பியதை தனக்குத்தானே எழுதிக்க கொண்ட தீர்மானம் என விமர்சிக்க வில்லை.

மாறாக ஒரு மாநில எதிர்கட்சித் தலைவர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தனக்குத்தானே எழுதிக் கொண்டதாக விமர்சிக்கிறார்.

உண்மையில் திமுக ஒரு மாநிலக்கட்சி, அதே சமயம் தேசியக்கட்சியான காங்கிரஸுடன் இணைந்து மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. கூட்டணிக்கட்சித் தலைவர் ஒருவர் தனது ஆலோசனையை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்ததை பி.ஜெ விமர்சிக்கிறார் எனில் இவருக்கு அரவே அரசியல் தெரியவில்லை என்றுதான் பொருள்.

இதைப் போலவே கோவை சிறைவாசிகள் விஷயத்தில் புதுக்கதை ஒன்றையும் பரப்பி வருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை எல்லா வகைகளிலும் தடுத்த அதிமுகவை ஆதரிக்கும் ததஜ, இச்சிறைவாசிகளின் விடுதலைக்காக மத்திய அரசில் திமுக சட்டம் ஏன் இயற்றவில்லை என்ற ஒரு வினோதமான கேள்வியை எழுப்பி தனது அதிமுக விசுவாசத்தை வெளிக்காட்டி உள்ளார்.

இச்சிறைவாசிகள் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் ஜாமீன் இன்றி அலைக்கழிக்கப்படுவது மாநில அரசின் வரம்புக்கு உட்பட்ட சட்ட பிரிவுகளில் தான்.

இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும், அதற்கு திமுக பாடுபடவில்லை என்றும் கூறுவது சட்ட விஷயங்களில் அவருக்குள்ள தெளிவின்மையையே காட்டுகிறது.

இதன் மூலம் பிஜெக்கு அரசியலும் தெரியவில்லை, சட்ட நுணுக்கங்களும் தெரியவில்லை என்று பொருளாகிறது, அல்லது தெரிந்து கொண்டே தமக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையான பேச்சாற்றலைக் கொண்டு மக்களை வழிகெடுக்கிறார் என்று பொருள்.

இரண்டில் எது உண்மை என்பது தேர்தல் முடிந்தால் தெரிந்து விடும்.

இறையடியான் 04.05.2006

Tuesday, May 02, 2006

தவ்ஹீது ஜமாத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு

சமுதாய பேரியக்கமாம் தமுமுகவை, ஆளும் வர்க்கத்தின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி உடைத்த திருவாளர் பிஜெ அன்று தமுமுக, தவ்ஹீதிற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சுமத்தினார். பின்னர் தமுமுக அரசியல்வாதிகளோடு நெருங்கிப்பழகி அவர்களுக்காக எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர் இது இஸ்லாத்திற்கு முரணானது என வாதிட்டார்.

மரியாதை நிமித்தம் எழுந்து பின் அமர்ந்ததை கொச்சைப்படுத்தி பேசினார். உடனே அவரது சீடர்கள் இதனை மிகவும் தரக்குறைவான கீழ்தரமான விமர்சனங்களுடன் தொடர்ந்து மெயில் அனுப்பி வந்தனர்.

அவர்கள் அத்தனை பேரின் முகத்திலும், அகத்திலும் (கொள்கையிலும்) டன் கணக்கில் கரி பூசி விட்டார் ததஜ தலைவர் திருவாளர் பிஜெ.

கடந்த 21.04.2006 அன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பான நேருக்கு நேர் நிகழ்ச்சியின் முடிவில் இருகரம் கூப்பி தெளிவாக வணக்கம் என்று கூறி நிகழ்ச்சியை முடித்தவர் வேறு யாரும் அல்ல வடிகட்டிய தவ்ஹீதுவாதி என தமக்குத் தாமே புகழாரம் சூட்டிக் கொண்ட சாத்சாத் பிஜெ தான்.

தவ்ஹீதின் பெயரால் சிந்திக்காமல், அறிவை அடகு வைத்துவிட்டு பிஜேவை பின்பற்றியவர்களே, அன்று கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டில் நடந்த ஒரு சந்திப்பின் போது வரவேற்பறையில் காத்திருந்த பிஜே கலைஞரைக் கண்டதும் இருகரம் கூப்பி எழுந்து நின்று வணக்கம் சொன்னார் என சிலர் தெரிவித்த போது இது கட்டுக்கதை என உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு உண்மையை உதரித்தள்ளியவர்களே! இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

அதைவிட முக்கியம் இத்தகைய பிஜெவை பின்பற்றி பிறரை கேவலமாக கீழ்தரமாக விமர்சனம் செய்ததற்காக மறுமையில் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

சகோதரர்களே! தயவு செய்து உண்மையை சிந்தித்து விளங்கி மரணத்திற்கு முன் தவ்பா செய்து கொள்ளுங்கள்.

இறையடியான். 02.05.2006