Sunday, April 29, 2007

இல.கணேசன் மீது மான நஷ்டஈடு வழக்கு

தமுமுக தலைவர் அறிவிப்பு

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் முத்துப்பேட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு இல.கணேசன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது...

இல.கணேசன்

முத்துப்பேட்டையில் பெரியார் சிலை கடந்த 21/04/2007 அன்று உடைத்து சேதப்படுத்தப் பட்டிருக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியதாகும். ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் நலன் என பன்முக தளங்களில் போராடிய பெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தவர்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான முத்துப்பேட்டையில் விஷமிகள் சிலர் அவரது சிலையை சேதப்படுத்தியிருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.

பெரியார் சிந்தனையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைத் தீயை மூட்ட ஆதிக்க நரிகள் தீட்டிட்ட சதியாகவே இதைப் பார்க்கிறோம்.

இவ்விஷயமாக முத்தரையர் சமூகத்தை சேர்ந்த மனோகரன் என்பவரும், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த மீரா உசேன் என்பவரும் அவசர கோலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைரேகை நிபுணர்கள் சோதனைகள் நடத்த வருவதற்கு முன்பே, மீரா உசேனை குற்றவாளி என தேடி அலைந்த காவல்துறை, கைரேகை நிபுணர்களின் முடிவைக் கூட கேட்காமல் அவரைக் கைது செய்துள்ளதாக அவ்வூர்மக்கள் தெரிவிக் கிறார்கள். அது போல் மனோகருக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை என முத்தரையர் சமுதாய மக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நிலவரம் இப்படியிருக்க, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவரான இல.கணேசன் இச்சிலை உடைப்பு தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளார்.

இது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமுமுகவின் நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ இவ்விஷயத்தில் கைது செய்யப்படாத போது, மீரா உசேன் என்பவருக்கும் தமுமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லாதபோது இல.கணேசன் பொய் பழி சுமத்தியிருப்பது அவரது பதற்றத்தைக் காட்டியுள்ளது. அவரது திசை திருப்பும் முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமுமுக மீது பொய் பழி சுமத்திய இல.கணேசன் மீது ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்டஈடு வழக்கு விரைவில் தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

நன்றி : தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Sunday, April 15, 2007

ஜுபைல் மாநகரில் ஒருநாள் இஸ்லாமிய மாநாடு

அறிவு சார்ந்த வினா விடை போட்டிகள், சரியான விடைகளுக்கு சிறந்த பரிசுகள். வினாத்தாள்களை பெரும்பாலான சவூதி அரேபியாவின் தஃவா மற்றும் வழிகாட்டி நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். சரியான விடைகளை எழுதி 22.04.2007 க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

நீங்கள் அனைவரும் இந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு அறிவமுதம் பெற வாருங்கள்.

கைதியின் கதை

கைதியின் கதை - சாதான்குளம் அப்துல் ஜப்பார்

கைதியின் கதை சமூக நீதிக்கு வேண்டி போர் செய்த ஒரு
போராளிக்கேற்பட்ட 'கதியின்'கதை.


இது ஒரு சோகக்கதையின் சுகப்பிரசவம். கடின உழைப்பின் கண்ணீர் தொகுப்பு. இது பூனைக்கு மணி கட்டும் கதையல்ல. புலிக்கு விலங்கிடும் முயற்சி.



முட்டாள்கள் தினத்தன்று பல அறிவு ஜீவிகள் சங்கமித்த மாலைப்போதில், ரஷ்ய கலச்சார மைய மண்டபத்தில் நடைபெற்ற ஆளூர் ஷானவாசின் ஆவணப்படத்தைப் பார்த்தபோது என் சிந்தையில் தோன்றிய எண்ணங்களின் வரி வடிவம் இது.

என்னுடைய நாற்பது ஆண்டுகால கேரள வாழ்க்கையின் கடைசிப்பகுதியில்தான் அப்துல் நாசர் மதானியைப் பற்றி நான் தெரிய வருகிறேன். குறுகிய காலத் தில் தன் நாவன்மையாலும், புரட்சிகரமான சிந்தனைகளாலும், சிம்மத்தின் கர்ஜணையை ஒப்பிடும் அளவுக்கிருந்த கம்பீரமான குரலாலும் அறிவு ஜீவி களின் சிந்தையில் மட்டும் அல்ல சாமான்யர்களின் உள்ளத்திலும் ஓர் அசைக்க முடியாத இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.




இஸ்லாம் தங்கள் குடும்ப சொத்து, முஸ்லிம்கள் தங்கள் கோலுக்கு ஆடும் குரங்குகளாய் தங்கள் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் என்று எண்ணி இறுமாந்திருந்த "முஸ்லியாக்கள்" மார்களுக்கும், அரசியல் தங்கள் சொந்த பிரைவேட் லிமிடட் கம்பெனி அதில் தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பங்குண்டு என்று 'மொனாபொலி-பிசினஸ்'
(ஏகபோக வர்த்தகம் செய்து கொண்டிருந்த சில முஸ்லிம் மேட்டுக் குடியி னருக்கும் மதனி துக்கத்தைக் கெடுக்கும் சிம்ம சொப்பனமாகப் போனதில் ஆச்சரியமில்லை.


கேரளம் கல்வி அறிவுக்கு எவ்வளவு பேரும் புகழும் பெற்றதோ அந்த அளவுக்கு சாதிக் கொடுமைகளுக்கும் பெயர் போனது. நீறு பூத்த நெருப்பாக, அதே சமயம் தொட்டால் சுட்டுப் பொசுக்கி விடுமளவுக்குள்ள சாதி வெறி கேரளத்தை விட வேறு எங்கும் இருக்குமா என்பது சந்தேகமே.



இந்த நாயர் - நம்பூதிரி உயர் சாதி கூட்டுக்கெட்டு ஈழவர், தலித், மலை சாதியினர் இன்ன பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகள் வெண்மணி சம்பவங்களையெல்லாம் வெறும் 'ஜுஜுபி' என்று சொல்ல வைத்துவிடும்.


இதிலிருந்து ஈழவர்களை விடுவிக்க நாராயண குரு சுவாமிகள்,
"ஒரு சாதி - ஒரு மதம் - ஒரு தெய்வம் மனுசனுக்கு" என்கிற தாரக மந்திரத்துடனும், "சங்கடிக்குவின் - சக்தமாகுவின் "(ஒன்று படுங்கள் - சக்தி பெறுங்கள் என்கிற கோஷத்துடனும் களமிறங்கினார்.

ஈழவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஒட்டுமொத்த கேரளீயர்களுக்குமாக இடதுசாரி இயக்கங்கள் தீவிர சமரங்களை முன்னெடுத்துச்சென்றன.. ஈழவர் எழுச்சியும் இடது சாரிகளின் இயக்கம் சார்ந்த அரசியல் அமைப்புகளும் இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு மாநிலத்தில் கம்யூனிச ஆட்சி ஏற்பட வழி வகுத்தது. ஆட்சிக்கு வந்தது சாதனைதான் ஆனால் சிலவற்றில் அவசரப்பட்டு விட்டார்கள். இருந்து கொண்டு கால் நீட்ட வேண்டும் என்கிற இயற்கை விதியை மறந்து நின்று கொண்டே கால் நீட்ட முயன்று கீழே விழுந்து கொண்டார்கள்.

எப்போதுடா சறுக்கும் என்று கண் கொத்திப் பாம்பாகக் காத்துக் கொண்டிருந்த உயர்சாதி விஷ வட்டம் "விமோசன சமரம்" என்கிற பெயரில் உணச்சிக்கொந்தளிப்புகளை ஏற்படுத்தி அரசைக் கவிழ்க்கும் காரியத்தை கன கச்சிதமாக செய்து முடித்து விட்டது. அதே சமயம் 'புரட்சி' அரசியலுக்குச் சொந்தக் காரர்களான இடது சாரிகளை 'வாகு' அரசியலுக்கு தோதுவாகப்
பக்குவப் படுத்தி விடவும் செய்தது. 'அனுபவம் ஆசான்' என்கிற மளையாளப் பழமொழியின் முழுப் பொருளையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

இடதுசாரிகளின் அரசியல் அட்டவணையில் 'சமரம்' இருந்த இடத்தில் ' சமரசம்' என்கிறம் அம்சம் வந்து குடி புகுந்து கொண்டது. இன்னொரு விமோசன சமரம் இனி ஏற்படாது என்பதை உறுதி செய்துகொள்ளும் அரசியல் புத்திசாலித்தனம் அவர்களுக்கு வந்துவிட்டது. கடின சித்தமுடைய இடது சாரி சித்தாந்த வாதிகளுக்கு இது ஒரு கசப்பான விஷயமாக அமைந்து போய் விட்டது.

'மதேரத்வம்' என்று மலையாளத்தில் குறிப்பிடப்படும் 'மதசார்பின்மையின்'
ஏகப் பிரதிநிதிகள் கூறிக்கொண்டே பரஸ்பரம் பரம வைரிகளான இடது சாரிகளும், காங்கிரசும் ' ஆபத்துக்கு பாவமில்ல என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் 'இந்துத்வ" சக்திகளோடு ரகசிய தேர்தல் உடன் பாடுகள் செய்து கொண்டு அரசியலையே கேலிக்கூத்தாக்கினர்.

சாதிக் கோட்டைகள் மெல்ல மெல்ல தகரும் நிலை கண்டு சங்கடப்பட்டுப்போய்க் கிடந்த 'சனாதனிகள்' எதிர்பார்த்த மாற்றங்கள் ஏமாற்றங்களாகப் போய் விட்டதால் மனம் வெம்பிய இடதுசாரி அறிவுஜீவிகள் ஒரு புதிய சமூக அமைப்பை ஏற்ப்படுத்தி விட துடித்து நின்ற இளைஞர் கூட்டம்,கட்டுத் தளைகளை உடைத்துக்கொண்டு வெளியே வரத் துடித்த ஒடுக்கப் பட்ட - ஒதுக்கப் பட்ட ஒரு மக்கள் பிரிவு என்று ஒரு 'கொதிநிலை' அரசியல் உருவாகி வந்த கால கட்டம்.

இந்த கால கட்டத்தின் கதா நாயகனாக, அமுக்கப்பட்டவர்களின் ஆற்றாமைகளை - ஆத்திரங்களை ஓங்கி ஒலிக்கும் ஒரு குரலாக, விடை கிடைக்காத பல சமூக அவலங்களுக்கு விடைகளை ' கண்டெத்தும்' ஒரு புது சக்தியாக - ரத்தமாக அப்துல் நாசர் மதானி அரசியல் வானில் உயர்ந்து வந்தார்.

ஓர் இஸ்லமிய மார்க்க அறிஞர் என்பதிலும் உபரியாக ஓர் இடது சாரி தேசியச் சிந்தனையாளராகவும் முஸ்லிம்கள் மட்டும் என்றில்லாமல் சந்தர்ப்பங்கள் மறுக்கப் பட்ட மக்களின் சக்தி அரணாகவும் அவர் தன்னைக் கெட்டிப் படுத்திக் கொண்டார்.

அவரை ஒரு மதவாதி என்று ஒரு குறுகிய கூட்டுக்குள் அடைத்து விட முயன்றார்கள் - முடியவில்லை. அவர் அரசியல் ரீதியாகக் கிளப்பி விட்ட சூட்டின் தகிப்பையும் தாங்க இயலவில்லை. முகத்துக்கு நேராக வந்து மோத முடியாதவர்கள், முதுகில் குத்தும் முயற்சிகளில் இறங்கினர். அவரது வளர்ச்சியும், பேரும் புகழுமே அவருக்கு வினையாக வரலாம் அதற்கு அவர் கொடுக்க வேண்டிய விலை மிகப் பெரிதாக இருக்கலாம் என்று அரசியல் அவதானிகள் கணக்குப்போட்டனர் - அதுதான் நடந்துள்ளது என்று நம்பத் தோன்றுகிறது.

இவரால் காயப் படாதவர்கள் கூட இவரை தங்கள் அரசியல் எதிரியாக எண்ணிச் செயல் பட்டதும்,வகுப்புத் துவேஷத்தையே தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டலையும் சில நாசகாரச் சக்திகள் இவரை வகுப்புத் துவேஷியாகச் சித்தரித்து அந்தத் தணலில் குளிர் காய்ந்ததுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பித்துக் கொள்ளத் தெரியாத ஒரு நிர்பாக்கியசாலியை அடி, அடி என்று அடித்து நொறுக்கியாயிற்று., சரீரத்தை சல்லடைக் கண்களாய் துளைத்தாயிற்று. என்றாலும் இவை எவற்றாலும் அவரது உள்ள உறுதியை - கொள்கைப் பிடிப்பை தொடக்கூட முடியவில்லை என்பதுதான் அவரது ஆன்மீக பலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

புறத் துன்பங்களை எண்ணி 'ஐயோ - அப்பா' என்று கதறாமல் இறைவன் நாட்டப்படியே எல்லாம் நடக்கின்றன என்று தான் மட்டுமல்ல,தன் மனைவி, மக்கள், தந்தை மற்றும் சுற்றமும் நம்பும் நிலை அடி பட்டவர்க்கல்ல அடித்தவர்களுக்குத்தான் தோல்வி என்கிற நிலையை தோற்றுவித்துள்ளதே, அந்த 'அவர்களுக்கு' ஏற்பட்டுள்ள வெட்கக் கேட்டை எந்த முகத்திரை கொண்டு மூடி மறைப்பார்கள்.?

இம்மை வாழ்வின் துன்பங்கள் எனக்குத் துச்சம் இறைவன் எனக்கருளப்போகும் மறுமை வாழ்வின் மகத்துவதுக்கு என்னை நானே தயார் படுத்திகொள்கிறேன்
என்று முழக்கமிடும் ஒரு கொள்கை வீரனை எந்தத் தடியால் அடித்துத் தகர்ப்பீர்கள்? தூய சஹாபாக்களின் துயர் மிகு சரித்திரங்கள் அவருக்குத் துணையாய், வழிகாட்டியாய் திகழும்போது எந்தச் சிறைச்சாலை - எந்தச் சித்திரவதை அவரை என்ன செய்துவிட முடியும்?

அதுவல்ல இங்கு பிரச்னை. இது தண்டனை வழங்கப் படாமலேயே தண்டனை போன்ற கொடுமையை அனுபவிக்கும் அப்துல் நாசர் மதானியின் கதையல்ல இது. மனித உரிமைக்காகப் போராடும் மக்களின் கதை. சட்டத்தை அமுல் படுத்து அதில் தப்பே இல்லை. ஆனால் சரியாக அமுல் படுத்து என்பதுதான் கோரிக்கையே. நீதி பரிபாலனத்தில் தண்டிக்கப் பட்டவனும் தனக்கு நீதி வழங்கப் பட்டிருக்கிறது என்று நம்பும் அளவுக்கு அது இருக்க வேண்டும் என்பதுதான் நியாயத்தை விரும்புவோரின் ஆதங்கம்.

ஓராயிரம் வார்த்தைகள் சொல்லும் ஒரு சங்கதியை ஒரு நிழற்படம் அதைவிட அருமையாகச் சொல்லிவிடும் என்பார்கள். ஓராயிரம் நிழற்படங்கள் சொல்லாத - சொல்ல முடியாத ஒரு விஷயத்தை ஒரு குறும்படம் மிக அழகாக - தெள்ளத் தெளிவாகச் செய்துவிடும் என்றும் கூறுவார்கள். அந்தக் கூற்றை ஆளூர் ஷானவாசின் நெறிப்படுத்தலில் வெளியாகியுள்ள "கைதியின் கதை"
மெய்ப்படுத்தி இருக்கிறது.

தொழில் நுட்ப நேர்த்தி இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். ஆளூர் ஷானவாசின் தலைமையிலான இளைஞர் கூட்டத்தின் ஆளுமையில் அது மிகச்சிறப்பக்கவே அமைந்துள்ளது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கலையை மிக அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் ஆளூரார்.

மனித மனசாட்சிகளை உலுக்கும் படம். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மனிதர்கள்தானா? மனசாட்சி உள்ளவர்கள்தானா என்கின்ற ஒரு காத்திரமான கேள்வியையும் ஓசைபடாமல் எழுப்பிவிட்டு இந்தப்படம் முடிவடைகிறது. ஆனால் இது ஏற்படுத்தப் போகும் நல்ல மாற்றங்கள் தொடரும் என்று நம்பலாம்.


'கைதியின் கதை' ஆவணப்படத்தை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Friday, April 13, 2007

பாக்கர் பெற்ற ஞானஸ்நானம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இஸ்லாத்தின் பெயரால் வயிறு வளர்க்கின்றனர் என சகட்டு மேனிக்கு அனைவரையும் குற்றம் சுமத்தியவர்கள்,

தாங்கள் மட்டுமே வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என தம்பட்டம் அடித்தவர்கள்,

தூய்மையை நிரூபிப்பதற்காக எவரையும் துச்சமென எண்ணி தூக்கி வீசக்கூடிய தன்மை உள்ளவர்களென தெருவெல்லாம் வெற்று கூச்சலிட்டவர்கள்,

இவர்கள் யாரெனப் புரியவில்லையா?

அந்தோ பரிதாபம்! இவர்கள் தான் தவ்ஹீதின் பெயரால் தகிடுதத்தங்கள் புரிந்து வரும் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தினர்.

இவர்களின் தலைமை சமீபத்தில் அடித்த கூத்து அரசியல்வாதிகளையே அசர வைத்து விட்டது.

நாம் பல முறை குறிப்பிட்டுள்ளோம்,

பிஜேபிக்கும் பிஜே பாhட்டிக்கும் வேற்றுமையை விட ஒற்றுமைகளே அதிகம்.

பிஜேபியின் அத்வானி மீது பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. தான் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அத்வானி ராஜினாமா செய்தார். பொதுவாழ்வில் தூய்மையை நிரூபிப்பதற்காக பதவியை துறந்தவர் என புகழாரம் சூட்டப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளாகவே மீண்டும் பதவியேற்றுக் கொண்டதோடு துணைப் பிரதமராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். குற்றச்சாட்டிலிருந்து எப்படி ஞானஸ்நானம் பெற்றாரோ எவரும் அறியார்.

இதைப்போலவே,

பிஜேயின் பினாமி பாக்கர் சமீபத்தில் தறுதலை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். காரணம்,
கையும் கன்னியின் மெய்யுமாக பேருந்து நிலையத்தில் மாட்டிக் கொண்டதால், தான் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றாக பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது என ஜால்சாப்பு சொல்லிப் பார்த்தும் முடியாமல், முடிவில் விஷயம் சந்தி சிரித்த காரணத்தால் ராஜினாமா செய்தார். பிஜேயின் பரம ரசிகர்கள், ஆஹா பார்த்தீர்களா! எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், சந்தேகம் என்று வந்து விட்டால் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் நாங்கள் தூக்கியெறிந்து விடுவோம். அவருடைய கடந்த கால பங்களிப்பு பற்றி பேசி சப்பை கட்டு கட்ட மாட்டோம். காரணம் நாங்கள் வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என பேசித் திரிந்தனர்.

இவர்கள் வடிகட்டிய தவ்ஹீத்வாதிகளல்லர். மாறாக வடிகட்டிய முட்டாள்கள் என 2004 முதலே சில விஷயமறிந்தவர்கள் கூறி வந்தனர்.

அது உண்மைதான் என இப்பொழுது ததஜவினர் நிரூபித்துள்ளனர்.

ஏனெனில், பாக்கரின் ராஜினாமா விஷயத்தில் ததஜவின் சாதாரண தொண்டனை விட அதிகமதிகமாக அந்த சம்பவத்திற்கு தஃப்ஸீரும், தஃவீலும் செய்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.

பாக்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தனது தொண்டரடிப் பொடியனருக்கு தனது வலைத்தளத்தின் மூலமாக வஞ்சகத்தனத்தை வலைவிரித்தவர் தான் இந்த பிஜே.

பாக்கர் அந்த பேருந்தில் எப்படி அமர்ந்திருந்திருப்பார். பேருந்து ஓட்டத்தில், அருகருகில் அமர்ந்திருப்பவர் இருளின் துணையோடு என்னென்ன செயல்களிளெல்லாம் ஈடுபட்டிருப்பார் என விஸ்தாரமாக தனது கற்பனை ஓட்டத்தில் கதையளந்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.
தனது நவீன குரு (பீர்) பிஜேவிடம் முரீது பெற்ற முட்டாள் சீடர்கள், உடனே கொள்கை குன்றுகள் போல் வீரவசனம் பேசித் திரிந்தனர். இயக்கத்தின் கொள்கைகளுக்காக, குற்றம் சுமத்தப்பட்டவரை துரத்தி அடித்ததாகவும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பதவி இறக்கம் செய்ய தயங்க மாட்டோம் என முழங்கி வந்தனர்.

இவர்கள் அத்தனை பேர் மூஞ்சியிலும் டன் கணக்கில் கரியை அள்ளி பூசிவிட்டனர் கிரிமினல் தலைவன் பிஜேயும் அவரது பினாமி (டு)பாக்கரும்.
இவர்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு குப்பையும் கிடையாது என்பதனை இதன் மூலமாக அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர்.
கொள்கை என்று ஒன்று இருந்திருந்தால் 2004 ல் ஒய்.கே.மேன்சன் விவகாரத்திலேயே (டு)பாக்கரை தூக்கி எறிந்திருப்பர்.
என்ன செய்வது. அப்பொழுது தான் தமுமுகவிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த சொத்துக்களுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்துள்ள நிலையில், அப்பொழுது பிஜே தலைவராக கூட ஆகாத நிலையில், (டு)பாக்கர் மீது கைவைத்தால் தனது எதிர்காலம் அப்பொழுதே அஸ்தமித்து விடும் என கிரிமினல் தலைவன் பிஜேவுக்கு தெரியும். எனவே தான் ஒய்.கே.மேன்சனுக்கு வக்காலத்து வாங்கினார்.

அதனை அப்பொழுதே நாம் சுட்டிக்காட்டினோம்.

ஆனால் அறிவோடு சிந்தித்து விளங்கிக் கொண்டவர்கள் குறைவு.
இத்தகையோரின் மடமைத்தனத்தையே தனது மூலதனமாகக் கொண்ட கிரிமினல் பிஜே, ஒய்.கே.மேன்சன் விவகாரத்தை சப்பைக்கட்டு கட்டி பேசியதை நினைவு படுத்திப் பாருங்கள்.
'தப்பு செய்றவன் இப்புடி எல்லாருக்கும் தெரியுறா மாதிரியா செய்வான். யாருக்கும் தெரியாம எங்காவது தூரமா ஒதுக்குப்புறமா போய்தானே செய்வான்' என்று தர்க்கம் புரிந்தார்.

நவீன முரீதுகளாகிய ததஜவினர் தலை ஆட்டி ஆமோதித்தனர்.

ஒருவேளை தலைவர் குறிப்பிட்ட தப்பு செய்வதற்கான இலக்கணத்தை புரிந்து கொண்டனர் போலும்.
ஆனால், அன்று ஒய்.கே.மேன்சனை காபந்து செய்த கிரிமினல் பிஜே இன்று கோவில்பட்டி பேருந்து விவகாரத்தில் வெளியிட்ட ஆடியோவில் பேசியிருப்பதைப் பாருங்கள்.

'பெண்கள் விஷயத்தைப் பொறுத்தவரை, தப்பு நடக்காவிட்டாலும், நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வரக்கூடிய சூழல் இருந்தாலும் உடனே பதவி விலக வேண்டும். இது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு'

இந்த கட்டுப்பாடு எப்பொழுது யாரால் விதிக்கப்பட்டது. இது குறித்து அறிவிப்பு எப்பொழுது வெளியானது. ஒரு ததஜ அடிவருடிக்கும் தெரியாது.

இதோடு விடவில்லை. மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்வது எப்படி என்றும் விளக்கமளிக்கிறார். அதனை மீண்டும் எடுத்து எழுதி அனைவரையும் தப்பு செய்யுமாறு துண்டுவதற்கு நாம் தயாரில்லை.

ஆனால், இதனைத் தொடர்ந்து அவர் பேசியுள்ளது தான் ஹைலைட்.

கிரிமினல் பிஜேயின் கோவில்பட்டி பேருந்து தஃப்ஸீரைப் பாருங்கள்.

'ஒண்ணா பயணம் செஞ்சது அறிவில்லாத செயல். பக்கத்து பக்கத்து ஸீட்ல இருந்திருக்கீங்க. இரவு நேர பயணம். நீங்க அங்கிட்டும், அவுங்க இங்கிட்டும் சாஞ்சிருப்பீங்க.. .. ..'
இப்படியாக அவரது வர்ணணை செல்கிறது.

சகோதரர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். 2004 க்கும் 2007 க்கும் உள்ள வித்தியாசத்தை.
2004இல் பலர் சாட்சியாக நடைபெற்ற ஒன்றை மூடி மறைக்க முயற்சி எடுத்தவர், 2007இல் பேருந்திற்கு உள்ளே பக்கத்தில் இருந்து கண்டது போல் விபரமாக, விரசமாக விளக்கம் அளித்தது ஏன்?

அதுதான் கிரிமினல் பிஜேயின் கிரிமினல் திட்டம்.

2004இல் கொள்கை, கத்தரிக்காய் என கூவி இருந்தால், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு (டு)பாக்கர் கிளம்பியிருப்பார். பிஜே பாயை பிராண்டியிருப்பார்.

மகனுக்கென மூன் மீடியாவை உருவாக்கியிருக்க முடியாது.

தேவநாதனின் வின்டிவியை வளைத்திருக்க முடியாது.

தோட்டத்து பணப்பயிரை அறுவடை செய்திருக்க முடியாது.

இப்படி எத்தனையோ காரணங்கள்.

ஆனால் இன்றோ, மேற்கூறியவற்றையும் அதற்கும் மேலாகவும் கண்டாகி விட்டது.
கைகழுவினால் கூடுதல் இலாபம் பெறலாம் என கிரிமினல் முளை வேலை செய்ததால் நாடகத்தை நடத்த திட்டமிட்டார்.

சாதாரண ஜெயினுலாபிதீனை தனது வியாபாரத்திற்காக பிஜே என பிரம்மாண்டப்படுத்தி பிரபலப்படுத்திய வியாபாரிக்குத்தானே அந்த பிராண்டை எப்படி ஒழக்க முடியும் எனத்தெரியும். பிஜே எனும் பிராண்டை ஒழிக்க வியாபாரி (டு)பாக்கர் என்ன செய்தாரோ தெரியவில்லை. பாக்கர் இப்பொழுது ஞானஸ்நானம் பெற்றுவிட்டார்.

ஆகவே,
மான்ய மகா ஜனங்களே!

பாலியல் தவறு செய்வது எப்படி என கற்றுக் கொடுக்கவும், தவறு செய்தவர்களை தட்டிக் கொடுத்து பதவியில் அமர்த்தவும், தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்றும் தயாராக இருக்கிறது என்ற நல்ல செய்தியை ததஜவின் கிரிமினல் தலைவன் பிஜேவின் சமீப கால நடவடிக்கை ஊர்ஜிதப்படுத்துகிறது.

தவிப்போடு ததஜவில் தொடரும் உண்மை தவ்ஹீத்வாதிகளுக்கு விடுதலை வேட்கையை அதிகப்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் அடிமையாய் இருக்கப் போகிறார்களா. விடுதலை கோஷம் எழுப்பி வெளியேறப் பேகிறார்களா.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 14.04.2007

Sunday, April 08, 2007

மக்கள் தொலைக்காட்சியில் 'சிறுபான்மையினருக்கு சமூக நீதி'

ஞாயிற்றுக்கிழமை (08/04/2007) இரவு 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் சிறுபான்மையினருக்கு சமூக நீதி என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சி புதன்கிழமை (11/04/2007) அன்று மாலை 4.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது இன்ஷாஅல்லாஹ். காணத் தவறாதீர்கள்...