Thursday, June 26, 2008

தம்மாம் நகரில் தமுமுக நடத்தும் இலவச மருத்துவ முகாம்

தம்மாம் நகரில் தமுமுக நடத்தும் இலவச மருத்துவ முகாம்
நாள்: 27.06.2008


பெரியதாக்கிப் பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.

Monday, June 23, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 29

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன இப்பல்லாம் மாசம் ஒரு வாட்டி தான் நம்மளத் தேடி வர்றீங்க.

என்ன செய்யுறது அஹமது. நம்ம ஆளுங்க டிவில அடிக்கிற கூத்து நாளுக்கு நாளு படுகேவலமாப் போவுது.

நாந்தான் டிவி பாக்குறதில்லையே. நீங்க சொன்னாத்தான் வெவரம் தெரியுது. சொல்லுங்களேன்.

எல்லாம் வல்லத்தோட பிற்சேர்க்கை தான். வல்லத்துல வாங்குன அடிக்கு, மாவுக்கட்டு போடுற வேல தான் டிவியில நடக்குது.

என்னன்னு தெளிவாத்தான் சொல்லுங்களேன்.

அதாவது, வல்லத்துல தடம் புரண்டவர்கள்னு ஒரு லிஸ்ட் வச்சுருந்தாங்கள்ள, அதப்பாத்த ஒருத்தரு, ததஜவுல இல்லங்குறதுக்காக ஏன் மத்தவங்கள இப்புடிச் சொல்லணும்னு சாந்தமா ஒரு கேள்விய கேட்டுப்புட்டாரு.

அடடே.. .. அதக்கேட்ட நம்ம நந்தினி பாக்கரு கொதிச்சு எந்திருச்சிட்டாரோ.. .. ..

அது சாதாரணமா நடக்குறது தான். ஆனா அன்னைக்கு இந்த கேள்விக்கு பதில் சொன்னது ஒரு புதுமுகம். இப்பெல்லாம் புதுமுக நாயகர்கள் வச்சுத் தான படத்த ஓட்ட வேண்டியிருக்கு. அவரு சொன்ன பதில்ல இருந்தே அவருக்கும், தவ்ஹீதுக்கும் சம்பந்தமில்லன்னு நிரூபிச்சுட்டாரு.

அதுசரி. இந்த இலட்சணத்துல மத்தவங்கள தவ்ஹீதுல இருந்து தடம் புரண்டவங்கன்னு கூசாம சொல்றாங்களோ!. ஆமா என்ன சொன்னாருன்னு சொல்லவேயில்லியே.

வர்றேன். பொறுங்க. குர்ஆனும் ஹதீஸும் தான் தவ்ஹீதாம். ஆனா இந்த ஜாக்கு காரங்க ஸஹாபாக்களையும் சேர்த்துக்கிட்டதுனால அவங்க தவ்ஹீதுல இருந்து தடம் புரண்டுட்டாங்களாம்.

அட மடையர்களா. ஸஹாபாக்கள் இல்லைன்னா, குர்ஆனும் ஹதீஸும் நமக்கு கெடச்சிருக்குமா. இல்ல குர்ஆனும் ஹதீஸும் ஸஹாபாக்கள் பத்தி சொல்லாம இருக்கா. என்ன கூத்து இது. உண்மையில இவுங்க தான் இப்போ தடம் புரண்டுட்டா மாதிரி தெரியுது.

என்ன செய்யுறது அஹமது. இந்த பதில உக்காந்து சொல்லிக்கிட்டிருக்குற அல்தாபிக்கு, 1985 இல பிஜே, காயல்பட்டிணத்துல என்ன பேசுனாருங்குறது தெரிஞ்சுருக்காது தான. அப்போ அவருக்கு கூட யாருல்லாம் இருந்தாங்களோ, அவுங்க வேணா, இப்புடி ஒரு பதிலச் சொல்ல கொஞ்சம் யோசிக்கலாம். அதுனால தான் இப்பல்லாம் புதுமுகங்கள களத்துல எறக்குறாங்க.

சே.. .. .. இந்த அளவுக்கு கேவலமாப் போவாங்கன்னு கொஞ்சம் கூட நெனக்கலியே ஒமர் பாய்.

இப்ப நொந்து என்ன பண்றது அஹமது. கூத்து இன்னமும் இருக்கு.

சொல்லுங்க கேட்போம். பாக்குறததான் நிறுத்திட்டேன். ஒங்கள்ட்ட இருந்து கேக்கலண்ணா நாட்டு நடப்பே தெரியாதவனா ஆயிடுவேன். அதுனால சொல்லுங்க கேப்போம்.

2006 ல கும்பகோணம் குலுங்குனதுனால தான பிஜே ஹஜ்ஜு பண்ணலியாம். தெரியுமா ஒங்களுக்கு.

அட இது என்ன புதுக்கதையா இருக்கு.. .. வெவரமாச் சொல்லுங்க.

சொல்றேன்.. .. .. அந்த கேள்வி நேரம் நிகழ்ச்சில .. .. ஒருத்தரு கேக்குறாரு.. .. .. அண்ணன் எங்கெங்ல்லாமோ போயி சத்தியத்த எத்தி வச்சிருக்காங்கல்ல, அதப்போல சவுதிக்கு ஏன் வரக்கூடாது. வந்து இங்க இருக்குற உலமாக்களோட ஒரு விவாதம் ஏற்பாடு பண்ணி தராவீஹ் 20 ரக்அத் இல்ல 8 ரக்அத் தான்னு நிரூபிக்கலாமே.. .. அப்புடீன்னு ஒரு கேள்விய கேட்டாரு.

என்ன இவரு அடிமடியிலேயே கைய வக்கிறாரே.. .. .. சவுதிக்குப் போயி அண்ணன் என்னா தமிழ்ல்லயா விவாதம் நடத்த முடியும்.

அது வேற கத. ஆனா இதுக்கு அந்த புதுமுகம் அல்தாபி என்ன சொன்னாரு தெரியுமா. சவுதி கவர்ண்மென்ட் யாரையாவது கண்ணியப்படுத்தணும்னு நெனச்சா, அவுங்கள ஹஜ்ஜுக்கு அழச்சு கவுரவிப்பாங்க. அந்த அடிப்படைல அண்ணன 2 வருசத்துக்கு முன்னால ஹஜ்ஜுக்கு அளச்சாங்க. ஆனா ஹஜ்ஜுக்கு நெருக்கமான நேரத்துல கூப்பிட்டதுனால போக முடியாமப் போச்சு – அப்படீன்னு அவுத்து வுட்டாரு பாருங்க.

ஸ்டாப். ஸ்டாப். 2 வருஷத்துக்கு முன்னால ஹஜ்ஜுக்கு அளச்சும் இப்ப வர ஹஜ்ஜு பண்ணாம இருக்காரா. என்ன கொடும ஒமர் பாய் இது.

இருங்க. அதவிட முக்கியமானதெல்லாம் இருக்கு. அல்தாபி இப்புடி சொல்லிக்கிட்டு இருக்கும் போதே நம்ம பக்க வாத்தியம் பாக்கரு இருக்காரே, அவரு சொல்றாரு.. .. .. அதவிட அப்போ கும்பகோண கூட்டம் ஏற்பாடு ஆகி கிட்டு இருந்ததுனால போவ முடியலன்னு சொல்றாரு.

ஹாய். பக்கவாத்தியம் பாக்கரு – ம். இது கூட நல்லாத்தான் இருக்கு. அது கெடக்கட்டும். கும்பகோணம் மீட்டிங்குக்கு ஹஜ்ஜ முடிச்சுட்டே வந்திருக்கலாமே.

அட என்ன அஹமது, நீங்களும் வெவரமில்லாம பேசுறீங்க. சவுதில இருந்து இவர கூப்புட்டது ஓசில ஹஜ்ஜு பண்ணிட்டு போங்கண்ணு சொல்றதுக்கா?.

அப்புடி கூப்புட்டதாத்தான அல்தாஃபி சொன்னதா, நீங்க இப்போ சொன்னீங்க.

வாஸ்தவம் தான் அஹமது. டிவி நிகழ்ச்சில பிரதானமா இப்புடி பொய்யச் சொல்லித்தான் காலத்த ஓட்டுறாங்கங் குறதுக்காகத் தான் இதச் சொன்னேன்.

அப்ப உண்மையான நெலவரம் என்னன்னு தான் சொல்லுங்களேன்.

அதாவது அஹமது, நம்மாளு பிஜேவின் திருக்குர்ஆன் விரிவுரைன்னு ஒரு புக்கு போட்டாரே.

என்ன ஒமர் பாய் இப்புடிச் சொல்லிட்டீங்க. அது தஃப்ஸீர் டைப்ல வந்த தர்ஜமாவுல.

சரிதான். ஆனா இதயும் நம்மாளு அவரோட மத்த புத்தகங்க ரேஞ்சுக்கு அவரோட கற்பனய கலந்து கட்டி எழுதியிருந்ததுனால, சவுதி கவர்ண்மென்ட் அவர அங்க கூப்பிட்டு விசாரிக்கணும்னு தான் ஹஜ்ஜுக்கு ஏற்பாடு பண்ணுனாங்க. ஆனா அங்க போனா தன்னோட சாயம் வெளுத்துரும், அதோட சிலோன், துபாய், மலேசியாவுல இருந்து தப்புச்சு வந்த மாதிரில்லாம் வர முடியாதுங்குறதுனால இவரு போகவே இல்லை.

அடக் கண்றாவியே. இதுல இவ்வளவு வெஷயம் இருக்கா. அத மறச்சுத்தான் கும்பமேளாவ வச்சு நந்தினி பாக்கரு கத வுட்டாரா.. .. ..

அதுமட்டுமில்ல அஹமது. சிலோன்ல இருந்து கூட அழைப்பு வந்துச்சு ஆனா வல்லத்துல (பள்ளம் தோண்டுற??!) வேல இருந்ததுனால போக முடியலன்டும் பக்கவாத்தியம் பாக்கரு உட்டு அடிச்சாரு பாருங்க. . . அது ஒரு தனி காமெடி.

என்னது இது ஒமர் பாய். உண்மையாவே அப்புடி ஏதாச்சும் வந்திருச்சுன்னா ஒடனடியா பத்திரிக்கைலயும் டிவிலயும் ஃபிளாஷ் போட்டிருப்பாங்களே. அட அந்த மீட்டிங்குல பேசுறப்பயாவது இதப் பத்தி சொல்லியிருப்பாங்களே. அப்பல்லாம் சொல்லாம இருந்துட்டு இப்போ சொலறதுல இருந்தே இது பொய் தான்னு ஈஸியா வெளங்கும்.

அப்புடியும் வெளங்காம பல பேரு கொடி புடிக்கிறதுனால தான அஹமது, பிஜேபி (B-BAQER, PJ-PJAINULABIDEEN) இரண்டு பேரும் வசூல வாரி சுருட்டிகிட்டு இருக்காங்க. இப்புடி ஒரு பதில எப்போ சொல்றாருன்னா, ஒருத்தரு சிங்கப்பூர்ல இருந்து ஃபோனப் போட்டு, அண்ணன் மலேசியாவுல பேச முடியாம திரும்பிப் போயிட்டாரே அவரு மறுபடியும் எப்போ அங்க வந்து பேசுவாருன்னு கேட்டாரு.

அடடா. அவரு இனி மலேஷியாவுக்கு திரும்ப போகவே முடியாதுங்குற வெஷயம் அவருக்குத் தெரியல போல..

அதே தான். அப்புடி வெவரங்கெட்டதனமா கொஞ்ச பேரு இருக்குறதுனால, அவங்கள கூடக் கொஞ்சம் குஷி ஏத்துறதுக்காகத்தான் நம்ம பாக்கரு சிலோன்ல இருந்து கூப்புட்டாங்க, போவ முடியல. அதமாதிரி சிங்கப்பூர் மலேசியாவுல இருந்தும் கண்டிப்பா கூப்புடுவாங்க. அப்போ அவசியம் வருவாருன்னு சொன்னாரு.

அடப்போங்க ஒமர் பாய். இன்னும் 10 நாள் களிச்சு துபாய்ல்ல இருந்து கூட கூப்புட்டாங்க. அதுவும் அவ்காஃப்ல இருந்தே கூப்புட்டாங்க. ஆனா பாருங்க அந்த நேரத்துல கடலூர் மகளிர் அணி மாநில மாநாடு நடந்துச்சா அதான் போவ முடியலன்னு கூடச் சொல்வாங்க போல.

அஹமது. வரவர ஒங்க நக்களு கூடிப்போச்சு. ஆனா உண்மைக்கே நீங்க சொல்றாப்புல நடந்தாலும் ஆச்சரியப்படுறதுகில்ல. ஏன்னா அங்க இருக்குறவங்களுக்கு அந்த மாநாடு எந்த கட்சி நடத்துச்சுண்டு கூடத் தெரியாது. ஜாக் (JAQH)குக்கும் எம்.ஹெச்.ஜே (MHJ)க்கும் கூட வித்தியாசம் தெரியலையாமுல்ல.

ஆமா ஒமர் பாய். நானுந்தான் கேள்விப்பட்டேன். வல்லம் மாநாட்டுல அமர்வு தலைவர்களா இருந்தவங்க 2004க்கு அப்புறமா தவ்ஹீதுக்குள்ள வந்தவங்களாமே!.

இருக்கும் இருக்கும். 1985 ல இருந்தே பிஜேவுக்கு வாள்போல சுத்திக்கிட்டு இருந்தவங்கள எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு, வசூல்ல முந்துறவங்களுக்குத்தான் இப்போ மொதலிடம்.

பொத்தம் பொதுவாச் சொல்லாம அப்புடி யார தூக்கி எறிஞ்சாங்கண்ணு சொல்லுங்களேன்.

ஒண்ணா, ரெண்டா அஹமது. இவரு ஆட்டி வச்சா மாதிரி எல்லாம் ஆடி கடைசில வெக்கத்த விட்டு வெரைல அடிவாங்கி சாவக் கெடக்குறேன்னு டிராமப் போட்டாரே அந்த அலாவுதீன் எங்க.???

அட ஆமா. அவரு ஏன் வல்லத்துக்கு வரலியாம்.. .. ..

அவராவது பரவாயில்லை. போட்ட வேஷத்துக்கு கொறயில்லாத வகையில, பினாமியா பினாங்குலயோ, சிங்கப்பூர்லயோ செட்டில் ஆயிட்டாரு. ஆனா இந்த தளபதி குத்புதீன் மாதிரி எத்தனையோ பேரு இருந்தும், மாநாட்டு மேடைல வசூல் ராஜாக்களத்தான கவுரவிச்சாங்க.

ஆமாங்க ஒமர் பாய். இந்த தளபதி குத்புதீனாவது யோசிச்சு பாக்க வேணாமா. இவரும் சவுதில தான இருந்தாரு. அவரு இருந்தப்ப எத்தன தவ்ஹீத் மீட்டிங்குகள்ள கலந்திருப்பாரு. எத்தன பேர்கிட்ட பிஜேவோட ஆடியோவையும் வீடியோவையும் தூக்கிக் கொண்டு போயி குடுத்து பார்க்க வச்சுருப்பாரு. அப்புடி ஒருத்தரக் கூட பாக்காதவர மேடைல அமர்வு தலைவரா தூக்கி வச்சிருந்ததப் பாத்தப்ப எப்புடி துடிச்சிருப்பாரு.

என்ன.. .. .. தவ்ஹீத் வாடையே இல்லாத கோட்டூர் ரபீக்க, மாவட்ட ததஜ தலைவரா சம்சுல்லுஹா ரஹ்மானியும், தென்காசி சுலைமானும், கடையநல்லூர் ஸைபுல்லாஹ்வும் ஏத்துக்கிடலையா அதுமாதிரி, ததஜவுல இதுலாம் சகஜமப்பான்னு தட்டி வுட்டுட்டு போயிருப்பாரு.

சே.. .. .. தவ்ஹீதுங்குற ஒரே கொள்கைக்காக பல கஷ்டங்கள ஏத்துகிட்ட சகோதரர்கள் இன்னக்கு பொறக்கணிக்கப்பட்டு, அரபு சல்லி சேர்த்துக் குடுக்குற ஏஜெண்டுகள்ளாம் ஏத்தம் பெற்றாங்கண்ணா ததஜ ஏகத்துவ பாதையிலிருந்து ஏகத்துக்கும் வெலகிப் போயிடுச்சுன்னு டிக்ளேர் பண்றதாத்தான் அர்த்தம்.

சரி அஹமது. ஓவரா கவலப்பட்டு ஒடம்ப கெடுத்துக்காதீங்க. இன்னைக்கு இவ்வளவு போதும். நான் பெறகு வர்றேன். வரட்டா.

வஸ்ஸலாம்

முல்லா 24.06.2008

Saturday, June 21, 2008

அன்புள்ள அம்மா...

அன்புள்ள அம்மா...

அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக்கவனம் பெற்றன.

அந்த நூல்கள் அவருள் பிரளயத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்டஉதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள். தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.

சென்னை டெபுடி கமிஷ்னர் காமினியின் அழைப்பின் பேரில் தமுமுக வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.

இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம். -ஆசிரியர்.

அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக்கூற முடியாதவை. உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.

என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு. யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத் திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை. கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன். இதில் எந்த ஒரு உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன். உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள். மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா அழாதீங்கம்மா!

ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு..

ரஜிதா (எ) ஹமிதா

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Saturday, June 14, 2008

வல்லத்தில் பீஜே தோண்டிய பள்ளம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

தவ்ஹீதை புதைக்க வல்லத்தில் பீஜே தோண்டிய பள்ளம்

அன்புச் சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ..

ஆறு மாத காலமாக படாத பாடு பட்டு, அனுதினமும் கூக்குரலிட்டு அழைத்தும் ஐம்பதினாயிரம் பேரைக்கூட கூட்ட முடியாத பீஜே, ஓரிரு நாட்கள் அழுது புலம்பிய பின், தற்சமயம் மீண்டும் தனது பழைய பல்லவியான 'பல இலட்சம் மக்கள்' என்பதனை பாட ஆரம்பித்துள்ளார். பின்பாட்டுப் பாடுவதற்கு தற்சமயம் புதிய பிண்ணனிப் பாடகர்கள் கிடைத்துள்ளார்கள்.

உண்மையில் வல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தால் தவ்ஹீத் எழுச்சி அடைந்திருக்கிறதா? அதில் கலந்து கொண்டவர்களாக இருந்தாலும், அல்லது பாக்கர் பிஜே ((BJP) உபயம்: முல்லா) வே தொலைக்காட்சியில் பிளாஷ் பேக் சொன்னார்களே அதனைப் பார்த்த எவராக இருந்தாலும் சரி – கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வார்கள்.

ஏனெனில்,

வல்லம் மாநாட்டிற்காக 100 ஏக்கர் நிலத்தில், ISO தரத்தில் எற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்று நாள்தோறும் கூவினார்கள்.

ஆனால், 50 ஆயிரம் பேர் மட்டுமே அமரத்தக்க வகையில் மேற்கூரையிட்டு அதற்கும் குறைவானவர்கள் உபயோகிக்கதக்க அளவில் தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்ததாக அவர்களே தொலைக்காட்சியில் ஒப்புக் கொண்டார்கள்.

வாக்கு மாறுவது தவ்ஹீத்வாதியின் பண்பாக இருக்க முடியாது. எல்லாம் செய்வதாக வாக்களித்து அவற்றில் ஒன்றைக்கூட உருப்படியாக செய்யாமல், எல்லாம் செய்வதற்காக எல்லோரிடத்திலும் வாரி வசூலித்து விட்டு, வளமை போல அதனை பங்கு பிரித்துக் கொள்வதும் தவ்ஹீத்வாதியின் இலக்கணமாக இருக்க முடியாது.

வாக்கு மாறும் நயவஞ்சகர்களாகவும், வாரிச் சுருட்டும் வஞ்சகர்களாகவும் இருப்பவர்களால் தவ்ஹீதிற்கு எழுச்சி ஏற்பட முடியாது.

உலக முஸ்லிம்கள் காணத் துடிக்கும் கஅபாவை சினிமா செட் ரேஞ்சுக்கு செட் போடுவது தவ்ஹீதிற்கு ஏழுச்சியைப் பெற்றுத் தராது.

கஃபாவை காணுவதற்காகவே தங்களது வருமானத்தை சேமிக்கும் இந்தோனேஷியா முஸ்லிம்களைப் போல அல்லாமல், கஃபாவை செட் போட்டு தனது வருமானத்தைப் பார்க்கும் இவர்களால் தவ்ஹீத் ஒருபோதும் எழுச்சி பெற முடியாது.

கபுர் வணங்கிகள் செய்வதைப் போல, இந்த (கஃபா) செட்டை, அது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்று சுற்றி வந்த மக்கள் அதனை தொடுவதும் முத்தமிடுவதையும் கண்டவர்கள், தவ்ஹீதிற்கு இதை விட பெரிய இழுக்கு இருக்க முடியாதென கூறியது பரிதாபமானது.


வல்லத்தில் கூடியது தவ்ஹீதிற்காக அல்ல, மாறாக திருவிழா கூட்டம் தான் என்பதனை பிஜே-பி யும் ஒப்புக் கொண்டனர்.

அதனால் தான் அங்க தொடாதீங்க, இங்க சுத்தாதீங்கன்னு கூவிகிட்டு நின்னாங்க.

அதவிட பெரிய கூத்து, ஸ்கூல் எக்ஸிபிஷன்ல செய்யுறதெல்லாம் செய்யுறதுக்கு ஸ்டால் போட்டாங்க. ஏன்னா ஸ்கூல் பசங்க லீவுல சுத்துறதுக்கு ஒரு சித்திர திருவிழா மாதிரி இருக்கட்டுமேன்னு நெனச்சாங்க போல இருக்கு.

அதனால தான் திருவிழா ரேஞ்சுக்கு குதிரையேத்தம், ராட்டிணம்னு ஏற்பாடு செஞ்சிருக்காங்க.

இதுனால தவ்ஹீதுக்கு எழுச்சி ஏற்படுமா?

அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் கூட அமெச்சூர் நாடகத்தன்மையே மேலோங்கி இருந்தது.

உதாரணத்திற்கு ஜனாஸா குளிப்பாட்டும் செயல்முறை விளக்கம்.

ஜனாஸா குளிப்பாட்டும் முறையை குறும்பட வடிவில் தயாரித்து வழங்கியிருக்கலாம் அல்லது ஒரு டம்மி பொம்மையை வைத்து விளக்கி இருக்கலாம். அதனை விடுத்து, உயிருள்ள ஒருவனை படுக்க வைத்து விளக்கம் என்ற பெயரில் விரசமாக்கி இருக்கிறார்கள்.

இத்தகைய செயல்பாடுகளால் தவ்ஹீத் ஒருபோதும் எழுச்சியடையாது.

அரங்கங்கள் அனைத்தும் ததஜ லிமிடட் கம்பெனி பங்குதாராகளான பிஜேபி (பாக்கர், ஜெயினுலாபிதீன் பக்கீர்) யினருக்கு படி அளக்கும் அட்சய பாத்திரங்களாகத் தான் விளங்கின.

அந்த அரங்கங்களில் தவ்ஹீத் குறித்த பிற அறிஞர்களின் ஆக்கங்களையோ, வெளியீடுகளையோ காண முடியவில்லை. மாறாக எங்கும் எதிலும் லிமிடட் கம்பெனியினரின் ஆதிக்கம் தான். லிமிடட் கம்பெனியின் ஆண்டு விழா கூட்டம் என்றால் இப்பொழுது வந்திருந்த கூட்டத்தில் 10 இல் ஒரு பாகம் கூடத் தேறாது என்பதனால் தவ்ஹீதின் பெயரில் வியாபாரம்.

சொந்த வியாபாரம் செய்ய வந்த இடத்தில், தவ்ஹீதை கடைப்பிடித்து வாழ்ந்து நேர்மையாக நடந்து கொண்டதால் இஸ்லாத்தை நோக்கி உலக மக்கள் திரண்டு வரும்படி செய்தனர் ஸஹாபாக்கள். அது தான் உண்iமாயன தவ்ஹீத் எழுச்சி.

மாறாக இந்த பிஜேபியினர் (பாக்கரும் ஜெயினுலாபிதீனும்) தவ்ஹீதையே தனது வியாபார மூலதனமாக்கி அதிலும் பொய், புரட்டு, பித்தலாட்டம் போன்ற அனைத்து வகைகளையும் கலந்து வயிறு வளர்க்கின்றனர். எனவே தான் வல்லத்தில் நடைபெற்ற கூத்தை தவ்ஹீதின் தளர்ச்சியாகவே காணுகிறோம். இத்தகைய மோசடித்தனங்கள் ஒருக்காலும் எழுச்சியை உண்டாக்காது.

உச்சகட்டமாக இஸ்லாமிய அறிஞர்களை தடம் புரண்டவர்கள் என்ற தலைப்பிலும், உண்மையாகவே 2004 முதல் தடம் புரண்டு போய் புலம்பிக் கொண்டிருக்கும் உலவியை உலகளாவிய இஸ்லாமிய அறிஞர்கள் வரிசையிலும் பொறித்து வெளியிட்டுள்ள கயமைத்தனம்.

தெளிவாகத் தெரிந்த முனாஃபிக்குகளையே கூட வெளியிடத் தயங்கிய ரஸுல் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதாகச் சொல்லும் இவர்களுக்கு இத்தகைய பட்டியல் வெளியிட முடிகிறதென்றால் அதற்கு காரணம் அகந்தையும் பொறாமையும் தான்.

அகந்தையும் பொறாமையும் ஒருபோதும் தவ்ஹீதின் எழுச்சிக்கு வழிகோலாது.

இறுதியாக ஒரு காமெடி டிராக்.
2004 க்குப் பிறகு தவ்ஹீத் வட்டத்திற்குள் வந்த சிலர், 2004 ஏப்ரலில் தவ்ஹீத் என்பது லிமிடெட் கம்பெனியின் மூலதனமாகி விட்டதால், அடாவடி, அராஜகம், எட்டப்ப வேலைகள் என்று சுற்றி இருந்தவர்களை செல்லா காசாக்கி விட்டு, தலைமையின் நோக்கத்தை சரியாகப் புரிந்து மார்க்கத்தையும் மனிதாபிமானத்தையும் மறந்து வசூலை மட்டுமே வாடிக்கையாக்கிக் கொண்ட ஒருவர் இரண்டாம் நாள் அமர்வில் அமர்வு தலைவராக இருந்து அடித்தது வெடிக்கையான கூத்து.

புதுமுக கதாநாயகனுக்கு டைரக்டர் பாக்கர் என்ன டிரெயினிங் குத்தாரோ தெரியவில்லை. கதாசிரியர் (ஜேபி) ஜெயினுலாபிதீன் எழுதிக் குடுத்த கதை வசனத்தை மறந்து விட்டோ, அல்லது கூட்டத்தை கண்ட குஷியில் மறைத்து விட்டோ, சொந்த வசனம் பேசி சொதப்பினார்.

'நாங்கள் காற்றுள்ள பந்து, தண்ணீருக்குள் அழுத்தினால் திமிறிக் கொண்டு வெளியில் வருவோம்' என்றெல்லாம் வீரவசனம் பேசினார்.

காற்றடிக்கும் திசையெல்லாம் தாங்கள் உருண்டோடுவதை சூசகமாக குறிப்பிட்டார் போலும். அதைவிட பெருங் கேலிக் கூத்து அவரது உரையின் நிறைவுப் பகுதி.

'.. .. .. என்று அறைகூவல் விடுக்கிறோம் என்று நான் கூறிக் கொள்கிறேன்'.

மார்க்கம் மட்டுமல்ல. இவர்களிடத்தில் பாவம் தமிழும் தள்ளாடுகிறது. கம்பன் கழகம் இவரது ஊரில் தானே இருக்கிறது. ஒழுங்காக படித்திருந்தால் உருப்படியாக தமிழாவது தெரிந்திருக்கும்.

அதுசரி ஜே.ஏ.கியூ.ஹெச் (JAQH) என்று எழுதியிருந்ததையே ஹைச்.ஜவாஹிருல்லாஹ் (H.J) என்று வாசித்து, அவதூறு பரப்பிய அறிவுச் செம்மல் அல்லவா.

புதுமுக கதாநாயகனின் கூத்து முற்றுப் பெறவில்லை.

தவ்ஹீதின் ஆரம்ப காலத்தில், பள்ளி இமாம்கள் கல்யாணம் நடத்தி வைக்கும் அழகை (?!) மேடைதோறும் காய்ச்சி எடுப்பார்கள். பாவம் இந்த புதுமுகம் வசூலில் சாதனை படைத்ததால் மேடையேற்றப்பட்டவர் அல்லவா. அதனால் பழைய சம்பவங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே இத்தகையவரது தலைமையில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தவர்களோ அல்லது அதற்கு அனுமதி வழங்கியவர்களோ இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போலும்.

சுயமரியாதை தவ்ஹீத் திருமணங்களை இவர் நடத்திய அழகிருக்கிறதே அடடா.. ..
மாப்பிள்ளைக்கு திருமண ஒப்பந்தத்தை சொல்லிக் கொடுக்கிறார் பாருங்கள்.
'.. .. ..இவரின் மகளை .. .. ..மகருக்கு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டேன்'.

அதாவது உண்மையில் இவர் தான் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்கிறார். பிறகு மாப்பிள்ளையின் கதி - - - அடப்பாவிகளா இதனைத் தானே பட்டி தொட்டி எங்கும் கேலிக்கூத்தாக்கினீங்க. இப்ப அதே கேலிக் கூத்த தவ்ஹீத் பெயரால் செய்தால் மட்டும் சரியா.

அதனால் தான் சொல்கிறோம். வல்லத்தில் நடைபெற்றது எழுச்சி மாநாடல்ல. மாறாக வசூல்மாநாடு.

என்று காசுக்காக களியக்கா விளையில் ஜமால் அன்கோவிடம் தோற்றுப் போனாரோ அன்றே இந்த பிஜே தன்னிடமிருந்த தவ்ஹீதை சாகடித்து விட்டார்.
இப்பொழுது அதனைப் புதைப்பதற்குக்குத்தான் வல்லத்தில் பள்ளம் தோண்டியிருக்கிறார். அவர் தோண்டிய பள்ளத்தில் அவரே மாய்வார் என்பது மட்டுமே திண்ணம்.

ராவுத்தர்
15.06.2008

Sunday, June 01, 2008

தமிழக முதல்வருக்கு தமுமுக நன்றி!

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு:குறைகளை நிவர்த்தி செய்த தமிழக முதல்வருக்கு தமுமுக நன்றி!

தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று 1995ஆம் ஆண்டு முதல் பல போராட்டங்கள், மாநாடுகள் மூலம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரி வந்தது. இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தவாறு தமிழக அரசு 15.9.2007 அன்று பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் அதிகாரிகளின் குளறுபடிகள் காரணமாக 3.5 சதவீத ஒதுக்கீடு முழுமையாக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கிடைக்காத நிலையை, அருந்ததியர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் அதற்கு முன்பாக தமிழக முதல்வரை நேரிலும் சந்தித்து எடுத்துரைத்ததைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் களையப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்து இன்று அதற்கான அரசாணை வெளியிட்டமைக்கு தமிழக முஸ்லிம்கள் சார்பிலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(செ. ஹைதர் அலி)பொதுச்செயலாளர்