Tuesday, July 29, 2008

இந்திய அமெரிக்க அணுசக்தி

இந்திய அமெரிக்க அணுசக்தி - சூழ்ச்சி- துரோகம்- அடிமைத்தனம்

எம்.தமிமுன் அன்சாரி

(இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து மேலும் விபரம் அறிய துடிப்பவர்களுக்காக இக்கட்டுரை துணுக்குகளாக தரப்படுகிறது.)

அணு சக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் 1963-ல் தாராப்பூர் அணுமின் நிலையத்திற்காக இந்தியா-அமெரிக்கா வோடு ஏற்கனவே செய்துள்ளது. அதில் சர்ச்சைக்குரிய 'ஹைடு' சட்டம் இல்லை. ஆனால் இப்போதைய ஒப்பந்தத்தில் 'ஹைடு' சட்டம் சேர்க்கப்பட்டது தான் சிக்கல்களுக்கு காரணம்.

ஒப்பந்தம் என்றால் இருதரப்பும் சேர்ந்து திட்டமிட்டு ஆலோசிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த 'ஹைடு' ஒப்பந்தம் முழுக்க முழுக்க அமெரிக்க அதிகாரிகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பு மதிக்கப்படவேயில்லை. கேட்கப்படவும் இல்லை.

அமெரிக்காவின் 'ஹைடு' சட்டத்தின்படி இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமெரிக்காவுக்கு எதிராக இல்லை என ஒவ்வொரு வருடமும் அமெரிக்க ஜனாதிபதி - அமெரிக்க பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமாம். அமெரிக்காவின் தவறுகளை இந்தியா எதிர்த்தால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும்!

அமெரிக்க கடற்படை சர்வதேச கடல் எல்லைகளில், தனக்கு பிடிக்காத நாடுகளின் கப்பலை தாக்கினால், இந்தியாவும் அதற்கு உதவ வேண்டும். அமெரிக்கா, ஈரான், வடகொரியா, க்யூபா போன்ற தனக்கு பிடிக்காத நாடுகளை தாக்கினால், அதற்கு துணையாக இந்தியாவும் தனது படையை அனுப்பி அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு துணை போக வேண்டுமாம்! இது சுற்றி வளைத்து கூறப்பட்டுள்ளது.

இதையெல்லாம் விட கொடுமை என்னவெனில், ஈரானை அமெரிக்கா தாக்கினாலும், மிரட்டினாலும் அனைத்து விவகாரத்திற்கும் இந்தியா மறு பேச்சு பேசாமல் தனது ஒத்துழைப்பை (?) தர வேண்டுமாம். இதற்கும் அணு ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை.

அமெரிக்கா இந்தியாவோடு ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட விரும்பினால், அது என்ன துறை சார்ந்த ஒப்பந்தமாக இருந்தாலும், இந்தியா உடனடியாக தலையாட்டி மறுவார்த்தை பேசாமல் கையெழுத்து போட வேண்டுமாம்!

இந்தியா முன்பு போல் அணு குண்டு சோதனைகளை தற்காப்புக்காக மறந்தும் நடத்திட கூடாது. அப்படி அத்துமீறி செயல்பட்டால் ஒப்பந்தப்படி அமெரிக்காவிடம் பெற்ற அணு உலைகள், இயந்திரங்கள், மறு சுழற்சி செய்த அணுப் பொருட்கள் ஆகியவற்றை அமெரிக்கா திரும்ப பெற்றுக் கொள்ளுமாம்! அதாவது 10 லட்சம் கோடி இந்திய பணத்தில் தயாரான அணு சக்தி திட்டங்களை அமெரிக்கா நினைத்தால் ஒரே நாளில் இழுத்து மூடி விட முடியும்!

அமெரிக்கா நினைத்தால் ஒப்பந்தத்தை நினைத்த நேரத்தில் முறிக்க முடியும். ஆனால் இந்தியா ஒப்பந்தத்தை முறிக்க விரும்பினால் ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்காவுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டுமாம்.

நாம் இப்போது தயாரிக்கும் மின்சாரத்தை விட, அமெரிக்க ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு இரு மடங்கு கூடுதல் செலவாகும். அதுவும் 2020-ஆம் ஆண்டுதான் உற்பத்தி தொடங்குமாம்!

தற்போது இந்தியாவில் 3% மின் தேவைகள் மட்டுமே அணு உலைகள் மூலம் பெறப்படுகிறது. மீதி 97% மின்தேவைகள் நிலக்கரி, காற்றாலை, சூரிய வெப்பம், அருவி, கடல் என இயற்கையை பயன்படுத்தியே பெறப்படுகிறது.

இப்போது அமெரிக்க ஒப்பந்தம் மூலம் போடப்படும் அணு உலைகள் மூலம் 2020-ஆம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் வரைதான் மின் உற்பத்தி பெறமுடியுமாம்! ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள வசதிகளை பயன் படுத்தி 2040-ஆம் ஆண்டில் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இப்போது நம்மிடம் இருக்கும் எரிவாயு நிலையங்களும், அணு மின் நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் போதுமானவை.

அமெரிக்காவிடம் தான் யுரேனியம் பெற முடியும் என்ற நிலையில் இந்தியா இல்லை. ஜார்கண்ட், ஆந்திரா, மேகலயாவில் யுரேனிய தாதுக்கள் குவிந்து கிடக்கின்றன. உலக அளவில் கேரளாவில் மட்டும் 34% அளவுக்கு அணுவுக்கு தேவையான தோரியம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் மத்திய அரசு இதனை தோண்டி பயன்படுத்தாமல் இந்தியாவிடம் எதுவுமில்லாதது போலவும், அமெரிக்காவிடம் தான் அது இருப்பது போலவும் நாடகம் போடுகிறது.

ஒருவேளை இந்தியாவுக்கு எதிர்காலத்தில் கூடுதல் மின்தேவையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆபத்துக்கள் இல்லாத காற்றாலை, கடல், அலை, அருவி ஆகியவற்றை நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்க முடியும் என அப்துல் கலாம் ஐயரை தவிர, மற்ற இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா 1979-க்கு பிறகு தனது நாட்டில் அணு உலைகளை நிறுவவில்லை. ஆனால் இந்தியாவில் நிறுவத் துடிக்க காரணம். இதனால் பல அமெரிக்க தொழிலதிபர்களின் 'நலன்களும்' இந்திய அரசியல்வாதிகளின் 'நலன்களும்' அடங்கியுள்ளன.

இந்திய அணு உலைகள் மொத்தம் 22. அதில் 4 உலைகள் மட்டுமே சர்வதேச கண்காணிப்பில் இருக்கின்றன. அமெரிக்காவுடன் 'ஹைடு' ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இனி கூடுதலாக 14 அனு உலைகளை சர்வதேச கண்காணிப்புக்கும், அமெரிக்க உளவுத்துறைக்கும் திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

இதை மக்களிடம் வெளிக்காட்டாமலும், நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்காமலும் ரகசியம் காக்கப்படுவதும், இது பற்றிய விபரங்களை இந்தியர் களிடம் சொல்லாமல், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ஒப்பந்தம் போட துடிப்பதும்தான் புரியாத புதிராக உள்ளது.

மொத்தத்தில் நேருவின் சீரிய சர்வதேச ராஜதந்திரம், இந்திரா காந்தியின் துணிச்சல், ராஜீவ் காந்தியின் சுயசார்பு ஆகியவற்றை குழி தோண்டி புதைக்கத் துடிக்கும் காங்கிரஸ் கம்பெனியை வரலாறு மன்னிக்காது.

நன்றி: தமுமுகவின் இணையதளம்.

Sunday, July 27, 2008

கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை

தமிழ் நாட்டின் முதன்மையான மீன் பிடி பகுதியாகவும மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு இரண்டாவது இடத்தினை பெற்று விளங்கும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியானது, கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளக்குகிறது. இங்கு தற்போது பத்துக்கும் மேற்பட்ட கல்விக்கூடங்கள் மக்களுக்கு கல்வியினை போதிக்கும் பணியினை திறம் பட செய்து வருகிறது.

அங்குள்ள ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு நேரிடையாக சென்று,அவர்கள் எவ்வாறு கல்வி சேவையினை செய்து வருகிறார்கள் என்பதினை பற்றி வாசகர் ஒருவர் தொகுத்த கட்டுரையின் சாராம்சம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகனோ அல்லது மகளோ 8வது அல்லது 10வது படித்தால் போதும் என்ற மனப்பான்மையயுடன் தான் ஒவ்வொரு பெற்றோரும் இருந்தனர். ஆனால் இன்றோ என்னுடைய மகனும் மகளும் படிக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் ஒவ்வொரு பெற்றோரும் மாறி விட்டார்கள். இந்த மாற்றத்தால் விளைத்தது தான் முத்து நகரில் பல கல்வி நிறுவனங்கள்.

1. அரசு உதவி பெறும் ஆவன்னா நேனா துவக்கப்பள்ளி
2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
3. பிரிலியண்ட மெட்ரிக்குலெஷ்ன பள்ளி
4. ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
5. வின்னர்ஸ் மெட்ரிக்குலெஸன் பள்ளி
6. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி
7. இந்து சமய அறநிலை ஆட்சித்துறைக்கு உட்பட்ட கோவிலூர் பெண்கள் மேல்நலைப்பள்ளி
8. சரஸ்வதி வித்யாலா மெட்ரிக்குலேஷன் பள்ளி
9. பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
10. முத்துப்பேட்டை கல்வி பேரவை
11. கணிப்பொறி மென்பொருள் பயிற்சி மையம்

20.5.1941 ஆம் ஆண்டு ஜனாப். முகம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களால் துவங்கப்பட்ட, ஆவன்னா நேனா பள்ளியானது நகரின் புராதன பள்ளிக்கூடமாக இன்றும் விளக்குகிறது. தற்போது இங்கு 510 மாணாக்கர்கள் கல்வி பயிலுகிறார்கள். 14 ஆசிரியர் மற்றும் ஆசிரியை பணி புரிகிறார்கள். 1 முதல் 5 வகுப்புகள் இங்கு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 உட் பிரிவுகள் உள்ளன என்பதினை பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. பெ. சீதா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அல்லாஹ் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளையின் சார்பில் நகரின் எல்லைப்பகுதயில் 16.6.1986 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரிலியண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியானது கல்வி சேவையினை 26 ஆண்டுகளாக செய்து வலருகிறது. இப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் என்றால், முத்து நகரில் துவங்கப்படட்ட முதல் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை திறமையும் தகுதியும் வாய்நத ஆசிரியர் ஆசிரியைகளை கொண்டு பாடங்கள் போதிக்கப்படுகிறது. பரிவுடன் பண்புடன் கல்வியினை போதித்து ஒழுக்கத்திற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. 11க்கும் மேற்பட்ட வகுப்புகளுக்கு கணிப்பொறிகளை கொண்டு மாணாக்கர்களுக்கு கணிப்பொறி பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் 3வது மொழியாக ஹிந்தியும் கற்பிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி. குழந்தைகள் அமைதியாக படிப்பதற்கு பள்ளியை சுற்றிலும் இயற்கையான சூழல் பரந்த விளையாட்டு மைதானம்.

மேலும், தாளாளர் மற்றும் முதல்வரான. ஜனாப். முகம்மது யாகூப் MA., Bsc., B.ED அவர்கள் கூறும் போது எங்கள் பள்ளியில் தற்போது 49 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். அதில் 3 ஆசிரியைகள் இஸ்லாமியர்கள். 1467 மாணாக்கர்கள் கல்வி பயில்கிறார்கள். நல்ல தரத்துடன் நாங்கள் மாணாக்கர்களுக்கு கல்வியினை கற்று தருகிறோம். அல்லாஹ்வின் கிருபையால் நல்லதொரு பள்ளிக்கூடம் என்று சுற்று வட்டார மக்கள் எங்கள் பள்ளியினை சொல்கிறார்கள். பெற்றேர்கள் அனைவரும் தன்னுடைய சந்ததிகளுக்கு இம்மைக்கு கொடுக்கக்கூடிய கல்வியினை கொண்டு மறுமைக்கு விளைநிலைமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

பெண்களும் கல்வி பயில வேண்டும் என்ற உயர்நத நோக்கில் 10.6.1996 அன்று முத்துப்பேட்டை அப்துல் காசிம் நகரில் ரஹ்மத் அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்ட ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியானது தன்னுடைய கல்வி பணியினை நன்கு செய்து வருகிறது. அப்பள்ளியின் முதல்வரான திருமதி. சகுந்தலா M.A M.Ed.,M.Phil. அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் போது, எங்கள் பள்ளியானது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியாகும். இங்கு படித்து வெளியில் சென்ற பல மாணவிகள் பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படைக்கொண்டு படித்து வருகிறார்கள்.

தற்போது எங்கள் பள்ளியில் 900 மாணவிகள் பயில்கிறார்கள். அதில் மாற்று மத மாணவிகள் 300 பேர்கள். மதநல்லிணம் அடிப்டையில் செயல்படும் எங்கள் பள்ளியில் 40 ஆசிரியைகள் 40 பேர்கள் மாற்று மதத்தினர். நாங்கள் பெண்கள் கல்வியின் அவசியத்தினை உணர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கல்வியினை போதித்து வருகிறோம். இங'கு ஐங்கால தொழுகை மற்றும் இஸ்லாமிய அடிப்படைகள் கொள்கைகளும் போதிக்கப்படுகிறது. பள்ளியின் உள்ளே தற்போது பள்ளி வாசல் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. மதியம் 12 முதல் 1230 வரை அரபி வகுப்புகள் பயிற்று விக்கப்படுகிறது புனித மாதமான ரமலானில் சிறப்பு தொழுகை நடைபெறும். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இஸ்லாமிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதற்காக 3 ஆசிரியைகள் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் ரஹ்மத் அறக்கட்டளையானது, பல சேவைகளை செய்து வருகிறது. தற்போது 11ம் வகுப்பில் சோந்துள்ள அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு இலவசக்கல்வி அதாவது பள்ளிகட்டணம் விடுதிக்கட்டணம் பத்தகம் போன்றவற்றை அளித்து வருகிறது. மற்றும் 10ம் வகுப்ப தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முத்துப்பேடடை முஸ்லிம் ஜமாத் கொடுத்து வருகிறது. அதில் எங்கள் பள்ளியின் பல மாணவிகள் பயன் பெற்றனர்.

ஊடகத்துறையிலும் எங்கள் அறக்கட்டளையானது பல சேவைகளை செய்து வருகிறது. இணையத்தளம் மூலமாக திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்ற வற்றை நூலாக வெளியிட்டு வருகிறது.அதனை வெளிநாட்டவர்கள் விரும்பி பார்க்கிறார்கள். பல எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணிகளை எங்கள் நிறுவனம் செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முத்துப்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் இலங்கை சார்ந்த எழுத்தாளர் மானா மக்கீன் அவர்கள் எழுதிய முத்தான முத்துப்பேட்டை என்ற நூலானது வெளியிட்ப்பட்டது. மற்றும் ஜுலை 6 - 2008 அன்று சிங்கப்பூரில் எழுத்தாளார் ராணி மைந்தன் அவாகள் எழுதிய முஸ்தபா - சிங்கப்பூரில் ஒரு வெற்றி தமிழர் என்ற நூலானது வெளியிடப்பட்டது. அந்த விழாவிற்கு சிங்கை மற்றும் மலேஷியாவை சார்ந்த பல தமிழர் அமைப்புக் கலந்துக்கொண்டது.
எங்கள் பள்ளியின் ஆலோசகர்களாக, திரு.மலைச்சாமி ஐ.ஏ.எஸ்., கவிப்பேரரசு. திரு. வைரமுத்து, கவிக்கோ. அப்துல் ரஹ்மான்ஈ திரு. மு. கல்யாண சுந்தர தேவர் அவர்களும் உள்ளனர். பள்ளயின் நாட் குறிப்பிபில் திரு. வைரமுத்து அவர்கள் எழுதிய நாளை உலகம் நமக்கு.. நன்மை யாவும் நமக்கு.. நாங்கள் சேர்ந்து கைகள் தட்டினால் விடிந்து போகும் கிழக்கு.. என்ற பாடலானது பள்ளி பாடலாக இடம் பெற்றுள்ளது.

எங்கள் பள்ளியின் தாளாளர் ஜனாப். எம். ஏ. முஸ்தபா அவர்கள், தனிப்பட்ட முறையில் 20 இலட்சம் ஊக்கத்தொகையினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு, ஆய்வினை செய்யும் மாணாக்கர்களுக்கு கொடுத்து உதவி உள்ளார்.

20.1.1992 ஆம் ஆண்டு துவங்கபட்ட வின்னர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியானது நகரின் மைய பகுதியான புதுத்தொருவில் உள்ளது. இதன் முதல்வர் மற்றும் தாளாளர் ஹெச். எம். ரஷீஸ் கான் எம்.ஏ.பி.எட.அவர்களை நேர் காணும் போது, தற்போது எங்கள் பள்ளியில் 237 மாணவ மாணவிகள் கல்வி பயில்களிறார்கள்.15 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணி புரிகிறார்கள். பத்தாம் வகுப்பு தேரிவில் எங்கள் ப்ளியானது100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. எங்கள் பள்ளியானது இந்தகல்வியாண்டு முதல் ஆலங்காடு என்ற பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. மாணாக்கர்களுக்கு சிநறந்த கல்வியனை நாங்கள் நன்றாக செய்து வருகிறோம்.
இந்த பள்ளியின் முதல்வரை பற்றி சில தகவல்கள் முத்துப்பேட்டை ஹெச். எம். ஆர் என்று அன்பாக இங்குளள மக்களால் அழைக்கப்படும் இவர் சிறந்த எழுத்தாளர். இவரின் திருமணமானது 31.8.1961 ஆம் ஆண்டு காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் அவர்களால் நடத்தி வைக்க்பட்டது. 1964 ஆம் ஆண்டு 1994 வரை முத்துப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார்.

இவர் நர்கிஸ் - பத்திரிகையின் கடைசி பக்க சிந்தனை, முஸ்லிம் முரசு, ஆனந்த பொலிவு, நூருல் இஸ்லாம் குண்டூசி போன்ற பத்திரிகைகள் மற்றும் பல விழா மலர்கள் நீடூர் மதரஸா ஆண்டு மலர், நர்கிஜ் மாத இதழின் 15ஆம் ஆண்டு மலர், மயிலாடுதுறை மீலாது விழாமலர், பள்ளி வாசல் திறப்பு விழாமலர் மலர்கள் போன்றவற்றில் இவரின் படைப்புகள்.

அன்பு, அறிவு, பொறுமை பற்றிய இவர் எழுதிய தத்துவர்ந்த நூலானது வாஷிங்டன் உலக நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. மற்றும் சிங்கை வாசக சாலையிலும் இவரின் நூலானது இடம் பெற்றுள்ளது.

சிற்ந்த கல்வி மான்களை உருவாக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் பல கல்வி நிறுவனங்கள் முத்து நகரில் முத்தாக விளங்குகிறது.. அத்துடன் பல இஸ்லாமிய அமைப்புகளும் , முஸ்லிம் இயக்கங்களும், வெளிநாட்டு வாழ் அமைப்புகளும் , தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கல்வி சேவைகளை செம்மையாக செய்து வருகிறது. வரும் காலத்தில் முத்துப்பேட்டை நகரானது கல்வியில் மேன்பாடு பெற்ற நகராக மாற உள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே.

தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

Tuesday, July 15, 2008

மதுரை வக்ப் வாரிய கல்லூரி விவகாரம்!

மதுரை வக்ப் வாரிய கல்லூரி விவகாரம்!
முதல்வரிடம் தமுமுக முறையீடு!!


தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை கடந்த ஜூலை 11 வெள்ளிக் கிழமை அன்று அவரது கோபாலபுர இல்லத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி ஆகியோர் சந்தித்தனர். அரை மணி நேரம் நடை பெற்ற இந்தச் சந்திப்பில் மதுரை வக்ப் வாரிய கல்லூரியின் நிர்வாகத்தில் சிலர் தேவையில்லாமல் விரிவுரையாளர் நியமனத்தில் தலையிட்டு குழப்பம் விளைவிப்பது குறித்து முறையிட்டனர். தமுமுக தலைவர்களின் முறையீட்டில் உள்ள நியாயங்களை உணர்ந்த முதல்வர் உடனடியாக தனது செயலாளர்களை அழைத்து குழப்பங்களை தீர்க்க உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம் என்ற அமைப்பு கடந்த 01.10.1992 முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மகளிருக்கு கதர், கைவினைப் பொருட்கள் மற்றும் சிறுதொழில் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதோடு ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையும் வழங்கும் இவ்வமைப்பு தனது நிதி ஆதாரமாகத் திரட்டும் நன்கொடைக்கு இணையான தொகையை அரசு மானியமாக(Matching Grant) வழங்கி வந்தது. இந்நிலையில் நடந்த முடிந்த அரசு மானியக் கோரிக் கையில் இச்சேவையை அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்படும் என்று அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் முஸ்லிம்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் அடைவதை பொறுக்காமல் இதுவரை அரசு வழங்கி வந்த மானியத்தை (Matching Grant) உச்ச வரம்பாக ரூ. 5 இலட்சம் என நிர்ணயித்தனர். இந்த நிர்ணயத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில் உடனே தமிழக முதல்வர் அவர்கள் உச்ச வரம்பு தொகையை நீக்கி உத்தரவிட்டு பழைய நிலையில் தொடரும் என்று வாக்களித்தார்.

மாணவர்களுக்கு கல்வி உதவி கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு சமுதாயம் தொடர்பான பிரச்சனைகளையும் இச்சந்திப்பின் போது முதல்வரின் கவனத்திற்கு தமுமுக தலைவர்கள் கொண்டு சென்றனர்.

நன்றி: தமுமுக இணையதளம்

Saturday, July 12, 2008

நரேந்திரமோடியை எதிர்த்து தமுமுக ஆர்ப்பாட்டம்

நரேந்திரமோடியின் சென்னை வருகையைக் கண்டித்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது


குஜராத் இனப்படுகொலையாளன் நரேந்திரமோடி (11.07.08) அன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்.


தகவல் அறிந்தவுடன் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் இரண்டு மணி நேர இடைவேளைக்குள் மாலை 7.மணியளவில் தமுமுகவின் சார்பாக மாநிலச் செயலாளர் அப்துஸ் சமது தலைமையில் அரும்பாக்கத்தில் கல்லூரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Wednesday, July 09, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 30

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். இன்னக்கி என்ன சேதி கொண்டு வந்திருக்கீங்க.

என்ன செய்யுறது அஹமது. சமுதாயச் செய்திகளுக்கு முன்னுரிமை குடுக்கணும்கிற அடிப்படைல ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கையே சமுதாயத்தப் பத்தி கவலப்படாம, தனி நபரோட மரியாத மக்கள் மத்தியில கொறஞ்சுடாம இருக்குறதுக்காக அடுத்தவங்க மேல புளுதி வாரி தூத்துற வேலயத் தான் செஞசுகிட்டு இருக்கு.

ஸ்டாப். ஸ்டாப். வளம போல சுத்தி வளக்காம ஸ்ட்ரெய்ட்டா வெஷயத்துக்கு வாங்க.

அதாவது அஹமது. இந்த உணர்வு பத்திரிக்க இருக்கே.. ... ..

ஓ நல்லா தெரியுமே. நமமாளு தமுமுகவுல இருந்து ஓடிப்போகும் போது சுருட்டிக்கிட்டு வந்தாரோ அது தானே.. .. ..

அதே தான். அந்த பத்திரிகைல இப்பல்லாம் தமுமுக தலைவர்கள தாக்குறதுக்கே பல பக்கங்கள யூஸ் பண்றாங்க. அந்த அடிப்படைல இப்போ தமுமுக பொதுச் செயலாளர தாக்கி பல பக்கங்கள்ல்ல அரைச்ச மாவவே அரைச்சுருக்காரு.

தமுமுகவோட பொதுச் செயலாளரப்பத்தி இன்னைக்கு நேத்தா எளுதுறாரு. 2004 இல பத்திரிக்கய எப்போ அப்பிக்கிட்டுப் வந்தாரோ அப்பய்லயிருந்து தான் எளுதி எளுதி மாஞ்சு போறாரு. ஆனா அவரு எளுதுறத நம்பத்தான் இப்போ ஆளுக கொறஞ்சு போயிட்டாங்க.

சரியாச் சொன்னீங்க அஹமது. இப்போ ஆளுக கொறஞ்சுகிட்டு போறதுனால, அதுலயும் குறிப்பா வல்லம் மீட்டிங்குக்கு அப்புறமா இவரு சொல்றத நம்புறதுக்கு ஆளுங்க இல்லாததுனால பக்கத்த நெறக்கிறதுக்காக என்னென்னமோ வித்த காட்டிப்பாக்குறாரு.

ஒமர் பாய். ஏற்கனவே இப்புடி மத்தவங்களப் பத்தி அக்கப்போர் எளுதுனதுனால பத்திரிக்க சர்குலேசனே கொறஞ்சு போச்சு, அதுக்காக வேற வல்லத்துல சலுகை வெலயில சந்தா சேர்த்துப் பாத்தாங்க. அப்பவும் யாரும் சீண்டாததுனால, இப்போ ஜுலை செயற்குழு வரைக்கும் நீட்டிச்சிருக்காங்க.

பரவாயில்லியே. நெறய தகவல் தெரிஞ்சு வச்சுருக்கீங்களே. இப்பவே 4 மாசத்துக்கு மேல கூவியே சந்தா சேரமாட்டேங்குது. இந்த லட்சணத்துல இப்புடி மத்தவங்களப் பத்தி எளுதிகிட்டு இருந்தா வருசம் பூரா சலுகை வெலைல குடுத்தாலும் பத்திரிக்க விக்காது.

சரி அத வுடுங்க. வேறென்ன சேதி வச்சுருக்கீங்க.

மழை விட்டும் தூவானம் வெடலங்குற மாதிரி இன்னமும் வல்லம் மேட்டரு தான்.. .. வேற ஒண்ணுமில்ல வல்லத்துல வைச்சிருந்த தடம் பொரண்டவங்க லிஸ்ட் பத்தித்தான்.

அதப்பத்தித்தான் கேள்வி நேரத்துல கேள்வி கேக்கப்பட்டு அல்தாபி கூட பதில் சொன்னதா சொன்னீங்களே.

ஜனங்க முன்ன மாதிரி இல்ல, அஹமது. முன்னாடிலாம் அண்ணன் சொல்லிட்டா அம்புட்டுதான். அதுதேன் வேத வாக்கு. அதபுடிச்சுக்கிட்டுத்தேன் ஒவ்வொருத்தனும் தொங்குவான். அண்ணன் பாஷைல சொன்னா வாந்தியெடுப்பான். இப்போ அந்த நெலம இல்ல. அதுனால அதே கேள்விக்கு மறுபடி மறுபடி பதில் சொல்ல வேண்டியிருக்கு.

இதுமாதிரி கேட்ட கேள்வியவே திரும்ப கேட்டா, கேஸட்ட வாங்கிக் கேளுங்கண்ணு வியாபார விளம்பரம் செய்வாங்களே. அப்புடி செய்யலியா.

கூத்து என்னன்ணா, இந்த கேள்வி மொதல்ல கேக்கப்பட்ட போது அதுக்கு பதில் சொன்னது பிஜே, மறுபடியும் கேக்கப்பட்ட போது பதில் சொன்னது அல்தாஃபி, அப்புறம் அதே கேள்வி வந்தபோது பதில் சொன்னது ரஹமத்துல்லாஹ். இதுல என்ன விசேஷம்னா, மூணு பேரும் சொன்ன பதிலு மூணு வெதமா இருந்தது தான்.

குர்ஆன் ஹதீஸ்லயே மாறுபட்ட கருத்துக்கள சொல்லக் கூடியவங்களாச்சே. அவுங்க மனோ இச்சைப்படி செஞ்ச இந்த வேலைக்கு எப்புடி ஒருமித்த கருத்த சொல்ல முடியும். அவுங்க அவுங்களுக்கு தோனுன மாதிரி அடிச்சு வுட்டிருப்பாங்க.

அதே தான். அதுலயும் ரஹ்மத்துல்லாஹ் சொன்ன பதில்ல பிஜே கேட்டிருந்தா அவரே ஆடிப்போயிருப்பாரு. அதாவது, அந்த லிஸ்ட்ல உள்ளவங்கள்லாம் தவ்ஹீது பிரச்சாரத்துல ஈடுபட்டிருக்காங்கலாம். அவுங்க சொல்லக்கூடிய வெசயங்கள்லாம் ஜமாத்துக்கு மாத்தமா இருக்காம். அதுனால அவுங்க பேசுறதக் கேட்டு அவுங்களும் ததஜவ சேர்ந்தவங்கன்னு யாரும் முடிவு பண்ணிடக் கூடாதுங்குறதுக்காக அப்புடி ஒரு லிஸ்ட் போட்டாங்களாம்.

உண்மையிலேயே சரியான தமாஷ் ஒமர் பாய். லிஸ்ட் போட்டது தவ்ஹீதுல இருந்து தடம் பொரண்டவங்கன்னு சொல்றதுக்கு. ஆனா அந்த லிஸ்ட்ல உள்ளவங்க தவ்ஹீத பரப்புறதுக்காக எவ்வளவு செரமப்பட்டாங்கன்னு தெரிஞ்சவங்க யாரும் இவுங்க போட்ட லிஸ்ட்ட ஏத்துக்க முடியாதுங்குறத அவுங்க ஆளுங்களே ஒத்துக்கிட்டாங்க போங்க. சரி இதுக்கு மேல வல்லத்தப் பத்தி பேசாம லேட்டஸ்ட்டா எதாவது இருந்தா சொல்லுங்க.

அதுவுஞ் சரிதான். ததஜவுல நடக்குற கூத்து தான் நாளுக்கு ஒரு வெதமா இருக்கே. புதுசாவும் பல வெஷயம் இருக்கு.

அதச் சொல்லுங்க மொதல்ல. ஜுலை 1 ஆம் தேதி பொதுக்குழு கூடுச்சாமே அது வெவரத்தச் சொல்லுங்க.

அதத்தான் சொல்லப் போறேன். ததஜ, அதிமுக லெவல்ல போயிட்டிருக்கு.

என்ன சொல்றீங்க ஒமர் பாய். அண்ணன் கால்ல எல்லோரும் வுளுந்து எந்திரிச்சாங்களா.

சேச்சே. அப்புடிலாம் எதுவுமில்ல. நான் அதிமுக ரேஞ்சுன்னு சொன்னவுடனே நீங்க இந்த அளவுக்கு யோசிக்கத் தேவ இல்ல. ஆனா பொதுக்குழுவுல புதுசா யாருக்காவது பதவி கெடய்க்குமுல. அத மாதிரி இங்கயும் பல பேருக்கு புதுசா பதவி கெடச்சுருக்கு.

அப்புடியா சேதி. யாரு அந்த அதிருஷ்ட சாலிங்க.

இதுவரைக்கும் எந்த நிர்வாகப் பதவியும் வகிச்சுறாத நம்ம சுலைமான் தான் இப்போ மாநில தலைவர்.

என்ன சொல்றீங்க ஒமர் பாய். பொதுச் செயலாளர் பாக்கரோட அவரு எப்புடி ஒத்துப் போவாரு. அவருக்கும் இவருக்கும் எப்பவும் ஆகாதே. நந்தினி வெவகாரத்துல பாக்கர பதவிய வுட்டு தூககணும்னு நின்னவராச்சே.

கொஞ்சம் பொறுமையா இருங்க அஹமது. முழுசா சொல்றதுக்குள்ள அவசரப்படாதீங்க. நீங்க நெனக்கிறமாதிரி உரசல்லாம் எதுவும் நடக்காது. ஏன்னா இப்போ பாக்கரு பொதுச் செயலாளர் இல்ல.

என்ன ஒமர் பாய். குண்டு மேல குண்டு போடுறீங்க. அவுங்க ரெண்டு பேரையும் வச்சுத்தான ததஜவையே BJP(பாக்கர் ஜெயினுலாபிதீன் பக்கீர்)னு சொன்னீங்க.

ஆமா அஹமது. இப்பவும் அது இல்லன்னு ஆகிப் போயிடுமா. இல்ல BJP (பிஜேபி) இரண்டு பேரும் ததஜவ வுட்டே போயிட்டாங்களா. ஒரிஜினல் (BJP)பிஜேபி ல அத்வானி மறுபடியும் தலைவரா ஆனது மாதிரி இங்கயும் நடக்காதுங்குறதுக்கு என்ன உத்திரவாதம்.

ஓ அப்புடிச் சொல்றீங்களோ. சுலைமானுக்கு என்ன அனுபவம் இருக்குனு யோசிச்சேனே இல்லாம, அதயே காரணமா வச்சு மறுபடியும் அவரு தலைவரா ஆவாருன்னு யோசிக்கலியே.

அதுமட்டுமில்ல அஹமது. இப்பவும் கூட நம்ம திருவாரூர் தளபதி குத்புதீன் மாதிரி ஆளுங்களுக்கு பதவி குடுக்கல்ல. அவரு பாவம் இன்னமும் பிஜே வ நம்பிக்கிட்டு அவருக்காக ஓடிக்கிட்டு இருக்காரு.

எனக்கு ஒரு சந்தேகம் ஒமர் பாய். இரண்டு பேருல யாராவது ஒருத்தராவது நிர்வாகத்துல இருந்திருக்கலாமே. ஏன்னா தமுமுகவுல இருந்து அனுபவம் பெற்று ஓடிவந்த மும்மூர்த்திகள்ல்ல அலாவுதீன் மொதல்லயே களிச்சு கட்டிட்டாங்க. இப்போ இவுங்க ரெண்டு பேரும் சேர்ந்து தனியா நிக்கிறதப் பாத்தா டவுட்டா இருக்கே.

ஒரு புண்ணாக்கும் இல்ல அஹமது. பொதுக்குழுவுல வல்லம் பெயிலியரப்பத்தி காரசாரமா பேச்சு வந்திருக்கு. அதுக்கு வசூல் பண்ணுன தொகை, வசதிகள் ஒண்ணும் பண்ணாம சுருட்டிக்கிட்டதுன்னு ஏகத்துக்கு எல்லோரும் எகிறவுடன வேற வழியில்லாம இரண்டு பேரும் எறங்கி ஓடிட்டாங்க போல.

அதுமட்டுமில்ல. நான் என்ன நெனச்சேன்னா, முதல்ல ஒரு வாட்டி பாக்கர பதவியில இருந்து எறக்கி வுட்டதுனால பிஜேவுக்கு வந்த நெருக்கடிய வச்சு பாக்கும் போது, பாக்கர எறக்கணும்னா தானும் எறங்குறதத் தவிர வேற வழியில்லன்னு ஆகிப் போனதுனால பிஜே எறங்கியிருப்பாரோன்னு தோணுது.

அதாவது சின்ன வயசுல படிச்ச தொப்பி வியாபாரியும் குரங்கும்ங்கிற கத மாதிரி

ஹா ஹா. சரியாச் சொன்னீங்க ஒமர் பாய்.

சரி அஹமது நேரமாச்சா. பெறகு சந்திப்போம். வஸ்ஸலாம்

முல்லா 09.07.2008

Tuesday, July 01, 2008

தம்மாமில் தமுமுக மருத்துவ முகாம்

தம்மாம்: சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில் முதன் முறையாக தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனுபவம் வாய்ந்த பதர் அல் ராபி மருத்துவமனையுடன் இணைந்து தமுமுக இம் முகாமினை நடத்தியது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் ஏறத்தாழ 500 தமிழர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நன்றி: தட்ஸ் தமிழ்