Sunday, March 14, 2010

பென்னாகரம்- பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?

பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?


பென்னாகரம் இடைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வழங்கவெனக் கொண்டு வரப்பட்ட, பெருந் தொகையான வேட்டி, சேலை மற்றும் அரிசி மூட்டைகளும், அவற்றைக் கொண்டு வந்த இரு லாரிகளும் சிக்கியுள்ளதாகத்
தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிபட்ட பொருட்களும் லாரிகளும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்தாக மேலும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பிடிபட்ட பொருட்களுடன் திமுக கொடிகளும் காணப்பட்டமையால், இது திமுகவினரால் மேற்படி தொகுதிக்குள் கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும் சோதனைச் சாவாடிகள் பலவற்றைக் கடந்து இப்பொருட்களை ஆளுங்கட்சியினர் தவிர மற்றவர்களால் இப்படிக் கொணர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிடிபட்ட லாரிகளின் ஓட்டுனர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும், இந்த லாரிகள் மீது சந்தேகம் கொண்ட பாமக கட்சித் தொணண்டர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து லாரிகள்
சோதனையிடப்பட்டு, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.