Friday, April 18, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 27

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர் பாய்.

கடைசில கும்பகோண பூனைக்குட்டி வெளிய வந்துருச்சு பாத்தீங்களா.

அவசரமா ஓடாம, நிதானமா வெளக்கமா சொல்லுங்க ஒமர் பாய். கும்பகோணத்துல என்ன பூனக் குட்டியா. ராஜபாளையம் நாய் மாதிரி கும்பகோண பூனையா. புரியலியே.

சரி சரி பொறுமையா சொல்றேன் கேளுங்க. கும்பகோணத்துல ததஜ சார்பா 2005ல கூட்டம் போட்டாங்களே ஞாபகமிருக்கா.

ஓ! அப்போ நம்ம ஆளுங்க அடிச்ச கூத்த அவ்வளவு லேசுல மறக்க முடியுமா. 10, 12, 15 ன்னுல கூடுன கூட்டத்த ஏல அறிவிப்பு மாதிரி ஏத்திக்கிட்டு போனாங்களே.

அதே தான். அந்த கணக்குலாம் சும்ம ஜுஜுபி... .. ஊலலல்லான்னு நம்ம தலைவர் வாயாலேயே நேத்திக்கி (16.04.2008) ஒத்துக்கிட்டது தான் இன்னெக்கி டால்க் ஆஃப் த டவுன்.

அப்புடியா. நெசமா சொல்றீங்க. அன்னைக்கு தமுமுக காரன்லாம் இந்த எண்ணிகைலாம் சும்மா பில்ட் அப் பண்றானுங்க. கூடுன கூட்டம் 50 ஆயிரத்துக்கும் கொறயாத்தான் இருக்கும்னு சொன்னப்ப, தமுமுக காரனுவ தான் தலையை எண்ணி உட்டானுங்களா, கூட்டம் 10 இலட்சத்துக்கும் மேல கூடுனது தான் உண்மைன்னு பத்திரிக்கைல எளுதுனாரே அப்ப அதுகூட ஊ.. ..லலல்லாவா.. ..என்ன கொடும இது ஒமர் பாய்.

நேத்து அவரு உட்ட ஸ்டேட்மெண்ட்டுக்கு பதிலா, தமுமுக காரனுவ சொன்னது உண்மை தான்னு சொல்லியிருந்தாலாவது கொஞ்ச நஞ்சமாவது மரியாத மிஞ்சி இருந்திருக்கும்.

அப்புடி ஒட்டு மொத்த மரியாதயையும் போக்குற மாதிரி என்ன தான் சொன்னாரு ஒமர் பாய்.

வெளக்கமாவே சொல்றனே. துபாய்ல ஜட்டி மர்கஸ்ன்னு ஒண்ணு இருக்குல.

அய்யோ ஒமர் பாய், அது ஜட்டி மர்கஸும் இல்ல, பனியன் மர்கஸும் இல்ல, அதுக்குப் பேரு ஜெ.டி மர்கஸ். இதுல இருந்து தான பஸ்ஸுக்குள்ள ஜல்சா புகழ் பாக்கரு மாநாட்டு வசூல் பத்தி டிராமா ஆடுனாருன்னு நீங்க தான முன்னால சொன்னீங்க. அந்த ஜெ.டி மர்கஸ் தான் இது. அதுல என்னாச்சு.. .. ..

அதுக்கு ஒண்ணும் ஆகல. அதுல இருந்து ஒருத்தர் கும்பகோணத்துல கூடுன கூட்டத்த பத்தி கேட்டதுக்கு நம்மாளு சொல்றாரு, 'அதாவதுமா, அரசியல்வாதிள்லாம் 1 இலட்சம் பேரு கூடுனா அத 10 இலட்சம்னு தான் சொல்வாங்க' – அப்புடீங்குறாரு.

அடச்சீ. வெட்கக்கேடாவுல போச்சு. கடைசில, தான் ஒரு தவ்ஹீத்வாதியில்ல. அரசியல்வாதிதான்டுல ஒப்புதல் வாக்கு மூலம் குடுத்திருக்காரு. 4 வருசம் களிச்சாவது ஒத்துக்கிட்டாரே. இன்னமும் இவரு மார்க்கத்த ஒழுங்கான மொறயில சொல்வாருன்னு எப்புடிங்க நம்ப முடியும்.

இந்தாளு தவ்ஹீது பேரச் சொல்லி தமுமுகவ ஒடைக்க முயற்சி செஞ்சப்பவே தமுமுககாரங்க எச்சரிக்க பண்ணுனாங்க. ஆனா அதயும் நம்பாம இவரு தவ்ஹீதுக்காகத்தான் இப்புடி செய்றாருன்னு நம்பி நாமெல்லாம் அவரு பின்னால ஓடுனோம்.

வாஸ்தவம் தான். ஆனா பாக்கரோட பஸ்லீலைகள் தெரிஞ்சதுக்கப்புறம் நான் அமைதியாகிட்டேன். நீங்க தான் இன்னமும் ஒட்டிக்கிட்டு இருக்குற மாதிரி தெரியுது.

நம்ம சோக கதய விடுங்க அஹமது. இன்னமும் ஏமாறுறதுக்கு ஆள் இருக்குறா மாதிரித்தான் தெரியுது.

எப்புடி சொல்றீங்க அஹமது. மாசத்துக்கு ஒரு போலி சாமியாரப் பத்துன நியூஸ் வந்தப்புறமும் கூட எவ்வளவு பேரு மறுபடியும் மறுபடியும் ஏமாந்து நிக்கிறாங்கன்னு நீங்க பாக்கலியா. அத மாதிரி தான் இதுவும்.

ஒருவேள நீங்க கடந்த மொற சொன்னா மாதிரி இந்த மாநாடு முடிஞ்சப்புறமா ததஜவ அரசியல் கட்சின்னு டிக்ளேர் பண்ணுவாரோ.

இருக்கலாம் அல்லது எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டு, இப்போ நடக்குற உச்சகட்ட வசூல வச்சு இவரும் பாக்கரும் பாகம் பிரிச்சுக்கிட்டு போகலாம்.

இன்னக்கி வர்ற வசூல பாகம் பிரிச்சுக்குவாங்களே தவிர ஊத்தி மூடிட்டுலாம் போவமாட்டாங்க. போன தடவ கும்பகோண கூட்டத்த காட்டி ஜெயலலிதாகிட்ட வசூல் பண்ணன மாதிரி இப்போ கூடுற கூட்டத்த எங்க அடகு வக்கலாம்னு உக்காந்து யோசிப்பாங்க.. .. ..

அதுவும் சரிதான். கும்பகோண கூட்டத்த பில்ட் அப் பண்ணிட்டு இன்னக்கி அரசியல்வாதின்னா அப்புடித்தான் சொல்வாங்க. அதுனால நாங்க சொன்னது சரிதான்னு சப்பகட்டு கட்டுறவங்கன்னு தெரிஞ்சப்புறமா எவன் வல்லத்துக்கு போவான். அதுனால எப்புடியாவது கூட்டத்த சேர்த்து காட்டணும்னு மக்கா செட்டு என்ன.. .. மதீனா செட்டு என்ன.. .. இன்னும் இதக் காட்டிலும் அதிகமாவும் இருக்குனு டெய்லி டிவில வெளம்பரம் பண்றாங்களே பாக்கலியா.

ஒமர் பாய். நாந்தான் ஒங்கள்ட்ட பலமொற சொல்லிட்டேனே. பாலியல் பாக்கர வச்சுகிட்டு தவ்ஹீது பிரச்சாரமான்னு என்னக்கி வீட்ல கேட்டாங்களோ அன்னைலயிருந்து நாந்தான் பாக்குறதே இல்லியே.

அதுனாலதான் ஒங்களுக்கு நம்மாளோட பித்தலாட்டம்லாம் தெரியாமப் போகுது. இப்போ கூட பாருங்க, ஒரு கேள்விக்கு பதிலளிக்கிறேன் பேர்வழின்னுட்டு, தவ்ஹீதுவாதிகள் நடந்துக்குறத வச்சுத்தான் மத்தவங்க நம்ம ஜமாத்துக்கு வருவாங்கன்னு சொல்றாரு. அதாவது ஒருத்தர் தவ்ஹீதுல இருக்காறா இல்லயாங்குறத முடிவு பண்றது அவரோட ஜமாத்தாம். அப்புடீன்னா இதுவர நாம எதுத்துக்கிட்டு வந்த மத்த பீர்மார்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்.

இதுவர நம்மளயல்லாம் ஏமாத்திட்டுத்தான் இருந்தாருன்னு அவரே நேத்து ஒத்துக்கிட்டதா சொல்லியிருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சு இந்த 4 வருசத்துல இவரு தவ்ஹீதுங்குற பேருக்கு இருந்த மரியாதயவே கெடுத்து குட்டியசுவராக்கிட்டாருன்னு தான் சொல்லணும்.

ஆமாங்க அஹமது. அதுவும் உண்ம தான். தமுமுகவுல இருந்த வரைக்கும் தன்னோட சொந்த கருத்துன்னு வெச்சுக்கிட்டு இருந்ததயெல்லாம், தவ்ஹீது ஜமாத்துங்குற பேர்ல எறக்கி வுட்டாரு. ஒண்ணா ரெண்டா அப்புடி எறக்குன வெசயங்கள். ஜகாத்துல தொடங்கி ஸஹாபாக்கள திட்டுனது மாத்திரமல்லாம, குராபிகள்ட்ட போயி விவாதம் பண்றேன்ன சொல்லி அவனுக வளத்து விட்டு நம்ம மூஞ்சியில கரியப்பூசிட்டாரு போங்க.

என்ன செய்யுறது ஒமர் பாய். இப்போ தான இவரோட ஒரிஜினல் மூஞ்சி தெரியுது. தமுமுககாரங்க சொன்னது சரியாத்தான் போச்சு. தனக்கு தவ்ஹீதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். தானொரு ஒரிஜினல் அரசியல்வாதின்னு அவரு வாயாலேயே அல்லாஹ் வெளியாக்கிட்டான். அதுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம் போங்க.

சரி சரி பெறகு சந்திப்போம். வஸ்ஸலாம்.

முல்லா 19.04.2008

Wednesday, April 16, 2008

தேர்தலுக்கு முன் வரும் மாநாடுகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. .


யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது பிரபலமான பழமொழி. தேர்தல் வரும் பின்னே, மாநாடுகள் வரும் முன்னே என்பது தற்கால புதுமொழி. போட்டி போட்டுக் கொண்டு பலரும் பல பெயர்களில் மாநாடுகள் நடத்தத் துவங்கி விட்டனர்.

இளைஞர் மாநாடு என்றும், மாநில மாநாடு என்றும், பெண்கள் மாநாடு என்றும் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிபெருக்கிகள் உரத்து ஒலிக்க தேர்தல் திருவிழா துவங்கி விட்டது போல் தான் தோன்றுகிறது.

அரசியல் மாநாடுகள் மட்டுமின்றி, ஆன்மீக மாநாடுகள் கூட ஆதரவு பலத்தைக் காட்டி அரசியல் கட்சிகளிடம் ஆதாய பேரத்தை நடத்துவதற்காக ஆங்காங்கே நடத்தப் போகின்றன. அப்படிப்பட்ட ஒரு மாநாட்டிற்கான அழைப்பைப் பாருங்கள்.

'தங்களின் அரசியல் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவும், பலப்படுத்திக் கொள்ளவும் அல்லது அரசியலில் அடியெடுத்து வைக்கவும் மாநாடுகள் நடத்தப் படுகின்றன. ஆனால் இவைகளில் முற்றிலும் மாறுபட்ட இதுவரை சமுதாயமே கண்டிராத வகையில் படைத்த இறைவனையே வணங்க வேண்டும், படைப்புகளை வணங்கக் கூடாது என்ற ஓர் இறை மந்திரம் உலகமெங்கும் பரவுவதற்காக நடத்தப்படுகிறது இந்த மாநாடு' – என்ற முன்னறிவிப்புடனும் ஒரு மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்ட வாசகத்தை எழுதியிருப்பவர் உலக மகா அயோக்கிய சிகாமணி சாட்சாத் பிஜே தான். இவரிடத்தில் ஒரு பண்பு உள்ளது. அதாவது தான் நாடியுள்ள அயோக்கியத்தனத்தை பிறர் செய்வதாக குற்றம் சுமத்தி மக்கள் முன்னால் தான் ஒரு நியாயவான் போல பறைசாற்றிக் கொண்டு விட்டு, பிறகு மெதுவாக தான் எவற்றையெல்லாம் எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாரோ அவற்றை செயல்படுத்த துவங்கி விடுவார். இவரின் இந்த குணத்தை அறிந்தவர்களுக்கு இந்த அழைப்பின் மூலம் இவர் விடுத்திருக்கும் செய்தி தான் - ததஜ அரசியல் பரிணாமம் எடுக்கப் போகிறது.

நாம் இப்படி எழுதியதும், ஓய்ந்து போய்விட்ட உமரோ, அடங்கிப் போன அஹமது அலியோ அல்லது அவ்வப்போது பிஜேவிற்கு வால் பிடித்து சூடு பட்டுக் கொள்ளும் அதிரை ஃபாரூக்கோ ஆவேசமாக வெளிவரலாம். என்றாலும் கூட நாம் எழுதியுள்ளது வாஸ்தவம் தான் என அவர்களும் கூட உள்ளூர ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

ஏனெனில்,

ஏப்ரல் 2004 இல், இனி தான் நினைத்த படி தமுமுக தலைமையை ஆட்டுவிக்க முடியாது என்ற நிலை வந்ததும், தமுமுகவின் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு தமுமுகவிலிருந்து ஓடினாரே.. .. அன்று அவர் கூறியது என்ன தெரியுமா?

பலர் மறந்திருப்பார்கள், பலர் அவ்வாறு கூறியதை நம்பி தமுமுகவிலிருந்து வெளியேறி அவருடன் கைகோர்த்து நின்ற சில நாட்களிலேயே அவரது சிந்தனை, சீர்கேட்டின் பக்கம் செல்வதை உணர்ந்து சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டனர். இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்ள இயலாத சிலரும், தனது சொந்த நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென்ற எண்ணம் கொண்ட சில சுயநலமிகளும் தான் மிஞ்சி இருக்கின்றனர். எனவே தான் மீண்டும் மக்களை திரள வைக்க வேண்டுமென்றால் அன்று சொன்னதையே இன்றும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினால் தான் தவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அரசியல் பரிணாமத்திற்கான அடிக்கல் நாட்ட முயற்சிக்கிறார்.

அன்று தமுமுகவிலிருந்து விலகி ஓடிய போது சொன்ன காரணம், 'தமுமுக – தவ்ஹீது கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது. அதனால் அதிலிருந்து வெளியேறி விட்டேன். இனி தவ்ஹீது கொள்கையை உயர்த்துவதற்காக பணியாற்றப் போகிறேன். தவிர, தமுமுக என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது நிறைவேறி விட்டது. எனவே தமுமுக என்ற ஒன்று, அதன் பணிகள் எதுவும் இன்று அவசியமற்றதாகி விட்டது. எனவே அங்கிருப்பவர்கள் உடனடியாக வெளியேறி என் பின்னே அணிவகுக்க வேண்டும்' – என்று மேடைகளிலும், தமுமுக ஆறு மாதங்களில் அழிந்து விடும் எனவே இங்கு வந்து விடுங்கள் என தனி நபர்களிடமும் கதை அளந்து பார்த்தார்.

80 களிலிருந்து அவருடன் இருந்தாலும், அவரது நோக்கத்தை புரிந்து கொள்ளாத சிலர் அவர் கூறிய தவ்ஹீத் எனும் தாரக மந்திரத்தால் மயங்கி அவரின் பின் சென்றனர். எந்த தமுமுகவிற்கான அவசியமோ, அவர்களின் பணியோ இந்த தமிழகத்திற்கு அவசியமற்றதாகி விட்டதாகச் சொன்னாரோ, அதே தமுமுகவை காப்பியடித்து கொடி முதல் கொள்கை வரை பின்பற்ற ஆரம்பித்தார்.

தவ்ஹீத் தான் என் உயிர் மூச்சு, நாங்கள் கொடி தூக்கும் கோமாளிகளல்ல மாறாக இது கொள்கை காக்கும் கூடாரம் என கொக்கரித்தவர்கள் பெற வேண்டியதை பெற்றுக் கொண்டதாலோ அல்லது வேறு எந்த நிர்பந்தத்திற்காகவோ அதைப் பற்றி பிறகு மூச்சுக்கூட விட வில்லை. ஆனால் தவ்ஹீத் என்ற பெயரால் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதனை தாமதமாக உணர்ந்து கொண்ட பலர் மவுனமாக ஒதுங்கிக் கொண்டனர்.

அரசின் ஆதரவோடும் அன்று இருந்த அரசியின் ஆசியோடும், அனுசரணையோடும் கும்பமேளா ஒன்றை நடத்த முயற்சித்தார். ஆனால் அந்த கும்பமேளாவை தவ்ஹீதின் பெயரால் நடத்த முற்படவில்லை. தவ்ஹீத்தான் எமது உயிர் மூச்சு என்று சொல்லிக் கொண்டாலும், இஸ்லாமிய எதிரியான செல்வியோடு அரசியல் கூட்டணி காண வேண்டும். அதனால் தவ்ஹீத் என்று சொல்லி அதனால் பொதுமக்கள் (அவரது பாஷையில் குராஃபிகள்) வராமல் போய் விட்டால் பேரம் படியாது என்ற பயத்தினால் தமுமுகவின் முழுமுதற் கோரிக்கையை கையில் எடுத்து இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாடு என்று பெயரிட்டு கும்பமேளாவிற்கு கூட்டத்தை சேர்க்க நாடினார்.

அந்தோ பரிதாபம். அதிலும் தோல்வி தான். தமுமுக இதே ஒதுக்கீடு கோரிக்கைக்காக தஞ்சையில் திரண்ட போது அலை அலையாய் ஆர்ப்பரித்து வந்த தமிழக முஸ்லிம்கள் இவரின் கும்பமேளாவிற்கு குறைந்த அளவிலேயே கூடினர். ஒன்னரை லட்சத்தை தாண்டாத அந்த கூட்டத்தை உருப்பெருக்கி, அதனையும் பல முறை பெருக்கி 10 இலட்சத்திலிருந்து 18 இலட்சம் வரை இஷ்டத்திற்கு எண்ணிக்கையை அறிவித்து இங்கிலாந்து மகாராணியின் ஒட்டியாணத்தை ஏலம் விடுவது போல சமுதாயத்தை ஏலம் விட்டார்.

என்றாலும் அரசியின் முன் அடங்கி ஒடுங்கி ஒரு இலட்சம் பேர் வரை கூடினார்கள் என்று சுருதி குறைந்து ஸ்வரம் வாசித்தார்.

இது 2005 கதை. அன்று சொன்ன அதே கதையை இன்று விட முடியாது. அரசியின் முன்பாக அடங்கி ஒடுங்கி குடுத்த வாக்குமூலம் சம்சுதீன் காஸிமி போன்றோர்களால் சந்திக்கு இழுத்து வரப்பட்டு விட்டது. தவிர அன்று அரசியல் பேரம் பேச இடஒதுக்கீடு கோரிக்கையை முகமூடியாய் பயன்படுத்தியது போல் இன்று படம் காட்ட வழியில்லை. பெயரளவிற்காவது ஒரு அரசு ஆணை வெளியாகி விட்டது. அதற்காக தலைவரை தனியே சந்தித்து அடிமை சாசனமும் எழுதிக் கொடுத்தாகி விட்டது. அதனால் இடஒதுக்கீடு பற்றிப் பேச முடியாது. எனவே தான் மீண்டும் தவ்ஹீத்.

சமுதாயத்தை கூட்டி வந்து அரசியிடம் காண்பித்து பேரம் நடத்தியதில் பெரும் தொகை கைமாறியதாக அன்றே ஒரு பேச்சு அடிபட்டது. அப்படி அரசியிடமிருந்து சேர்ந்த பணத்தை சந்தேஷமா, செலவு பண்ண பக்குவமா – பத்திரப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்ததால் தலைவரை தனியே சந்தித்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தாகி விட்டது.

எனவே வேறு வழியே இல்லை.

தேவையான சமயத்தில் பிஜேபிக்கு இந்துத்துவா கைகொடுப்பது போல, பிஜேவிற்கு கை கொடுப்பது தவ்ஹீது கோஷம் தானே. இதனை கூவியதால் தானே தமுமுகவிலிருந்து ஒரு சிலரையாவது அசைக்க முடிந்தது. இதனை கூவிக் கொண்டிருப்பதால் தானே அப்பாவி தமிழ் முஸ்லிம்களை கொஞ்சமாவது தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, அவர்களின் உழைப்பை உறிஞ்சி கொளுக்க முடிகிறது.

எனவே வேறு வழியே இல்லை. உள்ளூர் மக்களிடம் ஆதரவை எப்படிப் பெறுவது என்பதற்கு கும்பமேளாவில் கிடைத்த அனுபவம் கைகொடுக்கும். இலவச பயண ஏற்பாட்டாலும், உணவு ஏற்பாட்டாலும் ஓரளவுக்கு ஆட்களை திரட்ட இயலும். இதனைச் சொல்லியே ஏமாந்த வெளிநாட்டு ரசிகர்களிடம் ஒரு தொகையை வசூலிக்கவும் இயலும்.

இத்தனைக்கு பிறகும் எதிர்பார்த்த கூட்டம் கூட வில்லையானாலும் கவலையில்லை கும்பமேளாவில் பெற்ற அனுபவம் உள்ளது. ஒரே இடத்திலுள்ளவர்களை வெ வ்வேறு கோணங்களில் எடுத்து மிக பிரம்மாண்டமாக படம் காட்டுவதற்கான கருவிகளும் சாதனங்களும் வசதி வாய்ப்புகளும் வின்டிவியின் தயவில் தயாராக இருக்கவே இருக்கின்றது. எனவே கவலையில்லை.

தவிர, வரப்பையும், வாய்க்காலையும் கும்பகோண தெருக்களையும் நீள அகலத்தால் பெருக்கி மாநாட்டு வருகையாளர்களை கணக்கிடுவதில் பதிய முறையை கடைப்பிடித்து அரசியல்வாதிகளுக்கெல்லாம் அரிச்சுவடி கற்றுக் கொடுத்த வாத்தியார் - தவ்ஹீத் எம்ஜிஆர் - அல்லவா, இந்த பிஜே. இந்த அடிப்படையில் வல்லத்தில் வளைத்துப் போடப்பட்ட நிலத்தின் நீள அகலங்களைப் பெருக்கி லட்சகணக்கில் அல்ல கோடிக்கணக்கில் குழுமியதாக கணக்க காட்டி விடலாம்.

எனவே தான் தவ்ஹீத் பெயரில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அதையும் கூட சற்று கவனித்துப் பார்த்தால், இவர் செய்து வரும் வரலாற்று இருட்டடிப்பு பளிச்சென விளங்கும். அதாவது தமிழக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஏன் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என தொலைக்காட்சிகள ஒவ்வொன்றும் நல்ல நாள் பெருநாளுக்கு அறிவிப்பு செய்வதை கண்டிருக்கிறோம்.

அரசியின் கண்ணசைவில் கைமாறிய தொகையை தொலைக்காட்சியில் முதலீடு செய்து மீண்டும் அதே தொலைக்காட்சியை அதே அரசியிடம் விற்றுப் பெருத்த பணம் பார்த்த அனுபவத்தால் இவரும் அதே டிவி பாணியை கடைப்பிடித்துள்ளார் போலும்.

'முற்றிலும் மாறுபட்ட இதுவரை சமுதாயமே கண்டிராத வகையில் .. .. .. .. ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காக.. .. ..'

வரலாற்றை மாற்றி எழுதுவதிலும், மறைப்பதிலும் சோ, குருமூர்த்தி வகையறாவிற்கு இணையாக பிஜேவும் விளங்குகிறார் என்ற கூற்று உண்மைதான் போலும். 2000 இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு ஏகத்துவ எழுச்சி மாநாடு முன்னர் நடத்தப்பட்டது, அன்று இவருடன் இருந்தவர்களில் பலர், இவரின் வேஷம் விளங்கியதால் இவரை விட்டு விலகிச் சென்று விட்டனர்.

அன்றய மதுரை ஏகத்துவ மாநாட்டில் பிஜே, பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பக்கமே சுற்றித் திரிந்தார் என பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்த லுஹா கூட, மஸ்ஜிதுர் ரஹ்மான் கணக்கு வழக்கிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பின்னர் அமைதியாகி விட்டார்.

அதேபோல், மற்றொரு மேலப்பாளையத்துக்காரர் மாநாட்டு வரவு செலவுகளை கவனித்துக் கொண்டிருந்தவர் மாநாட்டுப் பணிகளில் நடைபெற்ற வீண் விரயங்களை தட்டிக்கேட்ட காரணத்தினாலும், பிஜேவின் நடவடிக்கைகளை ஆட்சேபித்ததாலும், மாநாடு முடிந்தவுடன் பொருளாதார அவதூறு சுமத்தப்பட்டு, மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு அமைப்பிலிருந்தும், இயக்கத்திலிருந்தும் ஓரம்கட்டப்பட்டார்.

இதுதான் ஃபளுலுல் இலாஹி வெளியேற்றப்பட்டதன் பின்னணி.

இவையெல்லாம் இன்றய தளபதிகளின் நினைவிற்க வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மதுரை மாநாடு பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையோ என்னவோ.

பாக்கரின் பஸ் பயண லீலைகள் சம்பந்தமாக, கடலூர் முன்னாள் ததஜ நிர்வாகிகள் பிஜேவை முபாஹலா செய்ய அழைத்த போது ஓடோடிச் சென்று, அங்கு கூடியிருந்தவர்களை ஏன் வல்ல அல்லாஹ்வையே முட்டாளாக்குவது (நவூபில்லாஹ்) போல இவர் அவருக்குச் சொன்னதை அவர் எனக்குச் சொல்ல, அதைத் தான் நான் இவர்களுக்குச் சொன்னேன் எனக் குறிப்பிட்டாரே அது போன்று கூட ஃபளுலுல் இலாஹி விடுக்கும் முபாஹலா சவாலை சந்திக்க முடியாமல் வெருண்டோடிக் கொண்டு இருப்பவர் தான் இந்த தவ்ஹத் வாத்தியார் -எம்ஜிஆர் - பிஜே.

சேலம் கண்ணன் என்பவர் அவரிடம் சொல்லி, அவர் என்னிடம் சொன்னதைத் தான் நான் புகாராக அளித்தேன் என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சர்க்காரியா கமிஷன் முன்பு ஆஜராகிச் சொன்னாரே அதேபோல் கடலூர்காரர்களிடம் பிஜே சொன்னதால் மாத்திரம் அவரை நாம் தவ்ஹீது வாத்தியார் என்று குறிப்பிடவில்லை. மாறாக மதுரை மாநாடு விஷயத்தில் லுஹா, இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டும் கூட ஒரிஜினல் வாத்தியார் எம்ஜிஆர் விஷயத்தில் ஒத்துப் போவதால் இவரை தவ்ஹீது வாத்தியார் எனக் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த தவ்ஹீது வாத்தியார் - எம்ஜிஆர் பிஜேவின் அழைப்பில் உள்ள மற்றொரு வாசகம் 'ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காக.. .. ..'

இந்த மாநாடு(?) நடக்க இருப்பது வல்லத்தில். மாநாடு நடைபெற இருப்பது தமிழ் மொழியில் மட்டுமே அப்புறம் எப்படி.. .. .. உலகமெங்கும் பரவுவதற்காக .. .. .. ???

எதையுமே மிகைப்படுத்தி பழக்கப்பட்ட திருவாளர் பிஜே, தவ்ஹீதின் உலகத் தலைமை தனக்கு வழங்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டார் போலும். அதனால் தான் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் தான் நடத்தும் இம்மாநாடு உலகமெங்கும் பரவும் என்று புருடா விட்டுள்ளார். அதாவது, உலகமெங்கும் ஏகத்துவ ஒளி பரவாமல் அந்தகாரம் சூழ்ந்திருப்பது போலவும், இனி இவர் நடத்தப்போகும் மாநாட்டிற்கு பிறகு தான் உலகமெங்கும் ஏகத்துவம் எதிரொலிக்கப் போகிறது போன்றதொரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.

ஆனால் உண்மையான தவ்ஹீத் எழுச்சி மாநாடுகள் உலகெங்கும் பரவலாக பல்வேறு பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்டு வருவதை தவ்ஹீதின் பால் நாட்டமுள்ள அனைவரும் அறிவார்கள். சமீபத்தில் கூட உலகெங்கும் இருந்து வருகை தந்த பல அறிஞர்களைக் கொண்டு சென்னையில் பிரம்மாண்டமாக பத்து நாட்கள் பீஸ் (PEACE) மாநாடு நடந்தது. இதில் விசேஷம் என்னவெனில், பத்து நாட்களும் தமிழ், மலையாளம், உருது இவற்றுடன் ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் நடத்தப்பட்டமையால், முஸ்லீமல்லாத பல சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு உண்மையான ஏகத்துவத்தை விளங்கிச் சென்றனர்.

யதார்த்தம் இவ்வாறு இருக்கையில், ஏதோ இவர் வல்லத்தில் ஏற்றி வைக்கப்போகும் ஜோதி தான் உலகெங்கும் ஒளிபரப்பப் போவதைப் போன்றதொரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். உண்மையில் சென்னையில் நடைபெற்ற பத்து நாள் பீஸ் மீட்டிங்கில் தனது அடிப்;பொடிகள் எவரும் கலந்து கொள்ளக்கூடாதென தடை விதித்தவர், ஏகத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதை தடுத்து ஜும்ஆ உரையாற்றியவர், தன்னிடம் சம்பளம் வாங்கும் மவ்லவிகள் மூலமாக ஜும்ஆ உரையாற்ற வைத்தவர், இத்தனை தகுதிகளையும் தனிச்சிறப்புகளையும் பெற்றவர் தான், 'ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காகத் தான் இந்த தவ்ஹீத் மாநாடு' என்று அழைப்பு விடுத்துள்ளார்.

80 களில் இவரிடம் காணப்பட்ட தவ்ஹீத் கொள்கை உறுதி இன்று இல்லை என்பதை உண்மையான தவ்ஹீத்வாதிகள் அறிவர். அதற்கான சமீபத்திய சான்று தான் பாக்கர் - பஸ் - நந்தினி – பிஜேவின் ஆடியோ – பாக்கர் நீக்கம் - பாக்கரின் துபாய் பயணம் - மிரட்டல் - மீண்டும் பாக்கருக்கு முன்னிலும் கூடுதல் அதிகாரத்துடனான பதவி. இத்தனைக்குப் பிறகும் இவரிடமிருந்து ஏகத்துவத்தை விளங்க முயற்சிப்பவர் ஒன்று மார்க்கமறியாதவராக இருக்க வேண்டும் அல்லது இவர் என்ன செய்தாலும் கண்மூடி பின்பற்றும் தக்லீத்வாதியாக இருக்க வேண்டும். ஆக மொத்தம் ஸஹாபாக்கள் துவங்கி அனைத்து இஸ்லாமிய அறிஞர்களையும் ஏசிய இவரை, சுயநலத்திற்காக தவ்ஹீத் கொள்கையில் தடுமாறும் இவரை, உண்மையான தவ்ஹீத்வாதிகள் ஒருக்காலும் பின்பற்ற மாட்டார்கள்.

இந்த அச்சம் அவருள்ளும் எழுந்துள்ளதன் விளைவு தான் கவர்ச்சி அம்சங்களாக பல விஷயத்தை இந்த மாநாட்டில் இணைத்துள்ளார் போலும்.

இந்த மாநாடு சுயம்வர மாநாடாகவும் நடைபெற உள்ளதாம். ஆம். ஆணும் பெண்ணும் கலந்து செல்லும் தர்ஹா, கூடு, உரூஸ் போல இதுவும் ஒரு திருவிழா கோலம் பூண இருக்கிறது. இது போல பல நவீனத்துவங்களை (பித்அத்களை) நடத்தியாவது கூட்டம் சேர்த்தாக வேண்டுமென்ற நிர்பந்தம் காரணமாகத் தான் இத்தனை முஸ்தீபுகளும். இதற்கெல்லாம் மேலாக உச்சகட்டமாக வேறொரு முயற்சியும் நடந்து வருவதாக அறிகிறோம். இது இஸ்லாமிய சமூகத்திற்குள் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும். அதாவது மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வைப் போன்ற அமைப்பை இந்த மாநாட்டுத் திடலிலும் அமைக்க இருப்பதாக அறிகிறோம். இதே போன்றதொரு முயற்சியை 2000 ஆம் ஆண்டு மதுரையில் ஏற்பாடு செய்த ஏகத்துவ எழுச்சி மாநாட்டிலும் செய்திருந்தார். அன்றய தேதியில் பலரின் ஆட்சேபனைகளுக்கு இந்த காரியம் உள்ளானது. என்றாலும் 2000 ல் இருந்தவர்கள் இன்று அவருடன் இல்லையென்ற காரணத்தினாலும் இது போன்ற ஏதாவது ஒரு செட்டைக் காட்டியாவது மக்களை அங்கு இழுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினாலும் இதை செய்திருக்கிறார்.

உலகிலேயே முதல் வணக்கத்தலமான கஃபாவை காட்சிப் பொருளாக்குவதை முஸ்லிம்கள் எவரும் விரும்ப மாட்டார். குறிப்பாக, உண்மை தவ்ஹீத்வாதிகள் அதனை எதிர்க்கவே செய்வார்கள். ஒரு சில மாதங்களுக்கு முன் உலகின் முன்னணி நிருவனமான ஆப்பிள் கம்பியூட்டர் கம்பெனி அமெரிக்காவில் பளிங்கு கற்களால் கஃபாவை உருவாக்க முனைந்த போது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்ததே இதற்கு சாட்சி. வரலாற்றிலும் கூட அப்ரஹா மன்னன் அபாபீல் பறவைக் கூட்டத்தால் அழிக்கப்படுவதற்கு முன்னால் ஏமன் நாட்டில் கஃபாவைப் போன்றதொன்றை அவன் உருவாக்கியது வரலாற்றுப் பதிவு. என்றாலும் அதனை அப்போது இருந்த முஸ்லிம்களும் எதிர்த்தார்கள் என்பதும் வரலாறு.

ஆக எப்பாடு பட்டாவது இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டாவது தன் ரசிகர்களுக்கும் ஏதமறியாத அப்பாவி முஸ்லிம்களுக்கும் படம் காட்டி அதன் மூலம் பணமும் பலத்தையும் கொள்முதல் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறார் போலும். இதற்காக எவ்வளவு செலவழித்தாலும் அவரைப் பொறுத்த அளவில் அவை அனைத்துமே இவ்வுலக வியாபாரத்தில் இடப்படும் முதலீடு தான்.

இதைப் போலவே 2005 ஜனவரியில் கூட்டிய (கூடிய அல்ல) கூட்டத்தைக் காட்டி போயஸ் தோட்டத்து பொன் மகள் (அன்றய அரசி)யிடம் சன்மானம் பெற்றுக் கொண்டார். தேர்தல் நேரத்தில் தளபதியாகவும் செயல்பட்டார். அதனால் தான் இப்பொழுது என்ன செலவானாலும் அதனை மீண்டும் என்கேஷ் பண்ணிக் கொள்ளலாம் என்று தாரளமாக செலவு செய்கிறார். இதைச் சொல்லியே ஒரு பெருந்தொகை வசூலிக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

எல்லாம் முடிந்த பின் தப்பித் தவறி யாரேனும் கணக்கு கேட்டாலோ, ஃபளுலுல் இலாஹிக்கு நேர்ந்த கதி தான் என்பதை உணர்ந்த இந்நாள் தளபதிகள் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளனர்.

ஏற்கனவே மக்களை விலை பேசி சேர்த்த பணத்தை செழிக்க வைப்பதற்காக சிலு சிலு சிங்கப்பூரில் வியாபார முதலீடு செய்து தனது பினாமியை – அற்புத மனிதன் அலாவுதீனை (40 பேர் ஏறி உயிர் நிலையில் உதைத்த பின்னும் உயிர் பிழைப்பவர் அற்புத மனிதராகத் தானே இருக்க முடியும்) நாடு கடத்தியாகி விட்டது.

இந்த மாநாட்டை யாரிடம் காட்டி சமுதாயத்தை விலை பேச காத்திருக்கிறாரோ?! இதன் மூலம் பெறும் கையூட்டைக் கொண்டு பினாமியாக பிஸினஸ் நடத்தும் பாக்கியம் எந்த தளபதிக்கு கிடைக்கப் போகிறதோ.

பொறுத்திருந்து பார்ப்போம்.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 15.04.2008

Wednesday, April 09, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 26

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க. வாங்க ஒமர் பாய். சவுக்கியமா?

அல்லாஹ்வோட கிருபைல சவுக்கியமாத்தான் இருக்கேன் அஹமது. ஆனா நம்மாளு நடந்துக்கிறத நெனச்சாத்தான் ஒரே கவலையா இருக்கு.

கவலய பங்கு வச்சாத்தான் பாரம் கொறயும். நம்ம கிட்ட கொஞ்சம் ஒதுக்குங்க.

கரெக்ட் தான். வெஷயமும் எட ஒதுக்கீடு பத்தித்தான்.

என்ன சொல்றீங்க ஒமர் பாய். எட ஒதுக்கீடு கெடக்கிறதுக்கு முயற்சி செஞ்சத விட இப்பத்தான் ததஜ மும்முரமா அதப்பத்தி பேசுறாங்க.

அதுல தான் வில்லங்கமே இருக்கு, அஹமது.. .. ..இந்த எட ஒதுக்கீடு கெடக்கிறதுக்காக தமுமுக ஒற்றைக் கோரிக்கை, இரட்டைக் கோரிக்கை, மாவட்ட மாநாடுகள், வாழ்வுரிமை மாநாடு, இடஒதுக்கீடு கோரி பேரணி – சென்னை, தஞ்சை, புதுவை, டெல்லின்னு வரிசையா நடத்தி அரசு எந்திரத்த அசச்சுப் பாத்தாங்க.

அது தான் எல்லாருக்கும் தெரியுமே ஒமர் பாய். முத்தாய்ப்பா நன்றி அறிவிப்பு மாநாடு கூட நடத்தி, எட ஒதுக்கீடுக்கு அதிகம் பாடுபட்டது தமுமுக தான்னு நிரூபிச்சாங்களே.

அதுல தான் வில்லங்கமே. இப்புடி எல்லா தரப்புலயும் தமுமுக வால தான் எடஒதுக்கீடு கெடச்சதுங்குறது பதிவாகிப் போனதால் அதுல உள்ள கொறைகள வச்சு நம்மாளு அரசியல் பண்ண ஆரம்புச்சுட்டாரு.

எந்த வெஷயத்தையும் அரசியலாக்குறதுங்குறது தான் நம்ம தலைவரு பீஜேவுக்கு கை வந்த கலையாச்சே.

கரெக்ட். எட ஒதுக்கீடு அறிவிப்பு வந்ததும் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இடிஞ்சி போயி மூலைல உக்காந்து இருந்தவரு, தமுமுக நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப் போவுதுன்னு தெரிஞ்சு இனியும் சும்மா இருந்தா நம்மள தொலச்சுப்புடுவாங்கன்னு அவசர அவசரமா போயி கலைஞர சந்திச்சு அடிம சாசனம் எளுதி குடுத்துட்டு வந்தாரு.

ஒமர் பாய். பளய வெஷயத்தச் சொல்லி ஏன் வளவளன்னு இளுக்குறீங்க. இப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.

இல்ல அஹமது. பளசெல்லாம் மறந்திருப்போம்னு தான அவரு இப்போ புதுசா பேசிக்கிட்டிருக்காரு. அதுனால தான் சொன்னேன். அப்புடி அடிம சாசனம் எளுதிக் குடுத்தவரு டிஎன்பிஎஸ்சி வெளம்பரத்த வச்சுக்கிட்டு தெரு முனைல பொத்தாம் பொதுவா எட ஒதுக்கீடு கெடய்க்கலன்ன ஆவேசமா மொழங்குனாரு.

ஆனா தமுமுக தான் டிஎன்பிஎஸ்சி வெளம்பரம் வந்ததும் யாரப் பாத்து கேக்கனுமோ அவுங்கள்ட்ட போயி நோட்டீஸே குடுத்துட்டு வந்தாங்களே.

என்ன செய்யுறது அஹமது. அறிவுப்பூர்வமா அணுகுறத விட உணர்ச்சிபூர்வமா அணுகுறதுதான அரசியல்வாதிகளோட பாணி. அதத்தான் அண்ணன் பீஜே செஞ்சாரு. தமுமுக காரங்க போயி அதிகாரிகளோட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்குறப்போ இவரு மக்களக் கூட்டி பொத்தம் பொதுவா ஒண்ணுமே கெடக்கலன்னு புலம்பி தள்ளிட்டாரு.

தமுமுக தான், TNPSC வெளம்பரம் வந்ததுல இருந்து என்னென்ன நடந்துச்சுன்னு வெளக்கமா அவுங்க பத்திரிக்கைல எளுதுனாங்களே.

வாஸ்தவம் தான். அவுங்க எளுதுனத எடுத்துப் போட்டுத்தான் இப்போ நம்மாளு குட்டய கொளப்பிக்கிட்டு இருக்காரு.

இவருக்கு ஏன் ஒமர் பாய் இந்த வேல. போன வாரம் கூட ஒருத்தரு வந்து, ஏம்பா ஒங்களுக்கு பத்திரிக்கய்ல போட சேதி இல்லங்குறதுக்காக ஒரு ஈ மெயில்ல வந்தத எல்லாம் போட்டு பக்கத்த நெரப்பணுமான்னு கேட்டாரு. நாந்தான் அந்த பத்திரிக்கயே படிக்கிறதில்லையே. இருந்தாலும் அவரு கிட்ட சிரிச்சு சமாளிச்சு அனுப்புச்சுட்டேன்.

அது மாதிரி தான் இப்போ மக்கள் உரிமைல வந்த வெஷயங்கள எடுத்துப் போட்டு பக்கத்த நெரப்ப முயற்சி பண்ணியிருக்காரு.

அவுங்க பத்திரிக்கைல வந்திருந்த செய்திகள்னா அப்புடி கொளப்புறமாதிரி எதுவும் இருக்காதே. நம்மாளு தான் பஸ்ஸுல உரசிக்கிட்டுப் போனதுனால தவ்ஹீத்வாதி இல்லைன்னு எழுதுவாரு, பொறவு இல்ல இல்ல அது இன்னாரு இன்னாருட்டச் சொல்லி இன்னாரு எங்கிட்ட சொன்னதத்தான் யாஅல்லாஹ் நான் சொன்னேன்கிறத நீயே அறிஞ்சவன். அதுனால நானா சொன்னதா இவுங்க சொல்றது பச்சப் பொய்யின்னு எம்ஜிஆர் அண்ணாயிசத்துக்கு சொன்ன வெளக்கம் மாதிரி உளறுவாரு.

கரெக்டா சொன்னீங்க அஹமது. தவ்ஹீது கொள்கையவே சமரசம் பண்ணக்கூடிய இவரு, டிஎன்பிஎஸ்சி வெஷயத்துல தமுமுக அரசு அதிகாரிகளப் பாத்துட்டு வந்து சொன்னதயும் அப்புறமா கமிட்டி அமச்சு அதனொடய முடிவுகள வச்சு மொதல்வர்ட்ட பேசுன சேதிகளையும் போட்டு தமுமுக அன்னைக்கு முட்டுக் கொடுத்தாங்க அதுக்குப் பெறகு எம்பி சீட்டு கெடக்ய்கலன்ன ஒடனே மொதல்வர பாத்து பேசுறாங்க. இதத்தான் நாம மொதல்லயே மீட்டிங் போட்டு சொன்னோம்னு இப்போ எளுதியிருக்காரு.

சரியாப் போச்சு போங்க. இவரு மீட்டிங் போட்டு ரோஸ்டர் முறயே நடைமுறைல இல்ல, தமுமுக சும்மா கத வுடுதுன்னு சொன்னாரு. தமுமுக ரோஸ்டர் மொற இருக்காம்னு அதிகாரிகள்ட்ட கேட்டு சொன்னதுக்கு பொறவு தான இவரு ரோஸ்டர் மொற இருக்கத்தான் செய்யுது. ஆனா இத ஏன் மொதல்லயே சொல்லலன்னு தானே குதிச்சாரு. இப்போ என்னடான்னா ரோஸ்டர் முறைங்குறது நீதி கட்சி கால நடைமுறைன்னு கருணாநிதி சொன்னதத்தான் ததஜவும் சொல்லுச்சுன்னு சொல்ல வர்றாரா என்ன.. .. .. .. அடேங்கப்பா.. .. .. .. பயங்கரமான அரசியல்வாதியா இருக்காரே.. .. ..

இதுக்கே ஆச்சரியப்படுறீங்களே அஹமது. இத வச்சு அவரு மண்ணடில பேசுனத கேட்டிருந்தீங்கன்னா இவருக்கும் மார்க்கத்துக்கும் சம்பந்தமிருக்க முடியாதுன்னு சொல்லி இருப்பீங்க. போங்க.

அப்புடி என்னத்த பேசிட்டாரு ஒமர் பாய்.

அரசியல் பண்ணுறதுன்னு எறங்கிட்டா, நாலாந்தர அரசியல்வாதிகள விட மோசமா இருப்பேன்னு சொல்றா மாதிரி நாகரீகமில்லாம பேசி ரசிகர்கள குஷிப்படுத்திட்டாரு போங்க.

ஓஹோ அதுனால தான் தமுமுக காரங்க தங்களோட மவுனத்த உதறிட்டு மக்கள் உரிமைல எளுதுனாங்களோ. சும்மா இருக்குறவங்களயும் இருக்க வுடாம, இளுத்து சந்தியில வுடுறது தான நம்ம தலவரோட ஸ்டைலே.

சரியாச் சொன்னீங்க. எட ஒதுக்கீடு விஷயத்துல மும்முரமா செயல்பட்டா மாதிரி, அத காப்பாத்துறதுலயும் கவனமா காய் நகர்த்திகிட்டு வர்ற தமுமுகவோட உறுதிய குலைக்கணும்னா இது மாதிரி சந்து மொனையில நின்னு குரைக்கணும்னு யாரு இவருக்கு ஐடியா குடுத்தாங்களோ அல்லது இவரே தனியா உக்காந்து யோசிச்சாரோ தெரியல. ஆனா வம்பு சண்டைக்கு வழி உண்டாக்குறாரு.

ஒமர் பாய். தனக்கு ஆகாதவங்க மேல என்னென்ன மாதிரியெல்லாம் அவதூறு பரப்பி அவங்கள ஓரம் கட்டுறதுங்குறதுல படிக்காமயே பட்டம் வாங்குனவராச்சே நம்மாளு. இவரு பாச்சா பலிக்காம போனது தமுமுக கிட்ட தான்னு நெனக்கிறேன். இருந்தாலும் விடாம முயற்சி பண்றாரு போல.

ஆமாமா, ஆறு மாசத்துல அளிஞ்சு போயிடும்னு ஜோசியம் சொன்னவரு, இன்னைக்கு ஆலவிருட்சமா நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டு போவுதேங்குற வயித்தெரிச்சல்ல மீட்டிங் போட்டு பேசுனது மாத்திரம் மல்லாம பத்திரிக்கையிலேயும் புடிச்சு மாஞ்சு மாஞ்சு எளுதியிருக்காரு.

ஓஹோ! விஷயமே கெடய்க்காம காஞ்சு போயி ஈமெயிலையும், கொசு மெயிலையும் போட்டு எடத்த நிரப்புனவரு இப்போ தமுமுகவ வச்சு பக்கத்த நெறக்கிறாறோ.

சரியாச் சொன்னீங்க. இன்னெக்கி இல்ல, ததஜவ ஆரம்புச்சதுல இருந்தே இதே பொழப்பு தான். தமுமுக பத்தி எளுதாம அவரால பத்திரிக்க நடத்த முடியாது.

அதுனால தான் நானே இப்போ உணர்வுக்கு பதிலா மக்கள் உரிமைய படிக்கிறேன். சரி சரி நீங்க அவரு என்ன செஞ்சாருன்ன சொல்லுங்க.

பரங்கிப்பேட்டை வெஷயமா இவரு கேட்டதுக்கு தமுமுக பதில் சொல்லலியாம்.

அடப் பைத்தியங்களா. பரங்கிப்பேட்டை வெவகாரத்த விலாவாரியா எளுதுனது மட்டுமில்லாம, வக்ஃப் போர்டு விஷயமா அரசாங்க ஸைட்டுல போயி கூட யாரும் செக் பண்ணிக்கலாம்னு நெஞ்சு நிமித்தி சொல்லியிருக்காங்களே. இவுங்களோட காமாலைக் கண்களுக்கு அது தெரியலியா? அல்லது வளம போல மறைக்குறதுக்கு முயற்சி பண்றாங்களா.. .. ..

கோவப்படாதீங்க அஹமது. நம்மாளு டெக்னிக்கே அடுத்தவர்கள சீண்டிப்பாத்து, கோவப்படுத்தி அத வச்சு அரசியல் பண்றது தானே. அப்புடி சீண்டுனதுனால தமுமுக அவர மனநோயாளின்னு எளுதுச்சு. மத்தவங்கள யெல்லாம் மனநோயாளின்னு சொல்லி மனது குளுந்துகிட்டு இருந்தவர அவரோட செயல்களின் அடிப்படைல உண்மையான மனநோயாளியாத்தான் இருப்பாரோங்குற சந்தேகத்துல எளுதுனவொடன பித்தம் தலைக்கேறி பாய பிராண்ட ஆரம்பிச்சுட்டாரு போல. அதுனால தான் இந்த வாரம் 5 இடத்துல போட்டு பொலம்பி தள்ளியிருக்காரு.

ஒமர் பாய். அவரு ஸஹாபாக்கள கிரிமினல்ன்டும், இமாம்கள அவன் இவன்டும், யூசுப் அல்கர்ளாவி போன்ற அறிஞர்கள லூசுப்பயண்டும், சவுதி அப்துல்லாஹ் பின் பாஸ குருடண்டும் கேவலமா பேசுனப்போ நாம அமைதியா இருந்ததுனால தான் இந்த நெலம. திருச்சி அபூஅப்துல்லாஹ் வுல ஆரம்பிச்சு இவரோட இருந்த எல்லாரையும் திட்டுன இவர மனநோயாளின்னு சொல்றது தப்பே இல்லீங்க.


சரி அஹமது, நாய் வால நிமித்த முடியாது. விடுங்க. அதுனால தான் தமுமுக கூட அவருடைய கூப்பாட்டுக்கெல்லாம் பதில எளுதிட்டு, அவரு மேக்கொண்டு எளுதுனா நாம சரியான பாதைல இருக்கோம், இதோட அமைதியாயிட்டா நாம சோர்ந்து போயிருக்கோம்னு அர்த்தம்னு எளுதி முடிச்சுட்டாங்க. ஆனாலும் அவரோட இயல்ப மாத்த முடியாதில்லியா. அதுதான் மறுபடியும் பொலம்பியிருக்காரு. தான் அபூஜஹ்ல விட மோசமானவன்னு சொன்னத இதன் மூலமாவும் அவரு நிரூபிச்சுட்டாரு போங்க.

அதுவுஞ் சரிதான். இதுதான் சாக்குன்னு ஓடாதீங்க. மே மாச மகாமக நியூஸ் எதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.

அது ஒரு தனிக்கத போங்க. ஒவ்வொரு டிவியிலயும் புதுசா எடுத்துக்கிட்டு இருக்குற சினிமாவுக்கு பில்ட் அப் குடுப்பாங்களே அது மாதிரித் தான். அங்க அது வைக்கப் போறோம், இங்க இது வைக்கப் போறோம். மேஜிக் ஷோ காட்டப் போறோம் அப்புடி இப்புடின்னு ஒரே கூப்பாடுதான் போங்க.

அதாவது கோயில் திருவிழா மாதிரி, தர்கா கந்தூரி கூடு மாதிரி இது ஒரு தவ்ஹீது கூத்து விழான்னு சொல்லுங்க.

உண்ம தான். வர வர இவரு அடிக்கிற கூத்தப் பாத்தா தவ்ஹீதுங்குற பேருக்கு இருக்குற மரியாதய இவரு கெடுத்துருவாரு போல. அந்த மகாமக திருவிழாவுல இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா.

சொன்னாத்தான ஒமர் பாய் தெரியும்.

லட்சக்கணக்கான ரூபா செலவளிச்சு கஅபாவோட மாதிரி செஞ்சு வைக்கப் போறாராம்.

என்ன சொல்றீங்க ஒமர் பாய். இப்புடி ஒண்ணு செஞ்சதுனால 2000த்துல நடந்த மதுர மாநாட்டுலயே பலபேரு ஆட்சேபம் தெரிவிச்சாங்க. அது தெரிஞ்சிருந்தும் இப்போ ஏன் மறுபடியும் இந்த வீண் முயற்சியும் வீண் செலவும்.

இந்த 2000 மதுர மாநாட்டு கதயெல்லாம் என்ன மாதிரி, உங்கள மாதிரி பளய ஆளுங்களுக்குத்தான தெரியும். இப்போ நம்மாள சுத்தி நிக்கிறதுலாம் புதுசா வந்த ரசிகர்கள் தான. அதுனால அவங்களோட தாகத்த தீர்க்குற மாதிரி செட் போட்டு காட்டப் போறாரு போல.

செட் போடுறதோட நிக்கச் சொல்லுங்க ஒமர் பாய். ஜகாத் விஷயத்துல குளப்படி பண்ணுனா மாதிரி, இப்போ மக்காவுல நெருக்கடியா இருக்கு அதுனால இத தவாஃப் பண்ணுனாலும் அங்க பண்ணுனதுக்கு சமம்னு புரட்சிகரமான ஃபத்வா குடுத்துறப் போறாரு.

ஜகாத் விஷயத்துல வாங்குன சூட்டுக்குப் பிறகு இது மாதிரியான முயற்சில எறங்கமாட்டார்னு தான் நெனக்கிறேன். இன்னக்கி இருக்குற தொழில் நுட்ப வசதிகள வச்சு கஅபாவ முப்பரிமாண திரைல காட்டி வெளக்கம் சொன்னாலே போதுமானதா இருந்திருக்கும். தேவையில்லாம இப்படி ஒரு முயற்சி பண்ணி கூட்டம் சேர்க்கணுமான்ன பாக்குறவன்லாம் கேக்குறான். பதில் சொல்ல முடியல.
சரி பரவாயில்ல. ரெஸ்ட் எடுங்க. பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 09.04.2008

Labels: ,

Sunday, April 06, 2008

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

முனைவர் அ. தஸ்தகீர்


ஒளரங்கசீப்

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் காலவாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் - ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜ புத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக் கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Some Foirmans Sauads and parwawas (1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக்கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகை யில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்