Thursday, November 29, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 21

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..

வ அலைக்கு முஸ்ஸலாம்.. .. வாங்க, வாங்க ஒமர் பாய். சௌக்கியமா இருக்கீங்களா?

அல்லாஹ்வோட கிருபையால சௌக்கியம் தான் அஹமது.

ஒமர் பாய். நீங்க சென்னைக்கு போயிருந்தீங்களா.

ஆமாம். நவம்பர் 24 நன்றி அறிவிப்பு மாநாட்டுக்கு போயிருந்தேன். அது எப்படி ஒங்களுக்குத் தெரியும்.

எனக்கு மட்டுமா தெரியும். நீங்க ஒக்காந்து இருந்தத என்னய மாதிரி நெட்ல பாத்த எல்லோருக்கும் தான் தெரியும். அது கிடக்கட்டும். நீங்க சொல்லுங்க.

ரொம்ப சிறப்பான ஏற்பாடு போங்க. மெட்ராஸு எட்டு தெசயிலயும் தமுமுக கொடி தான் பறந்துச்சு. ஒவ்வொரு பக்கத்துல இருந்தும் தமுமுக கொடியோட மோட்டர் சைக்கிளு, காரு, வேனுன்னு ஒரே கூட்டம் தான் போங்க.

ஆமாமா. நானும் கேள்விப்பட்டேன். நெட்டுல கூட போட்டிருந்தாங்களாமே. ஆனா மொத்தம் எவ்வளவு பேரு வந்தாங்கன்னு யாரும் ஒண்ணுமே சொல்லலியே.

என்ன இருந்தாலும் அஹமது.. .., நாம தமுமுக காரனுவ கிட்ட இருந்து படிச்சுக்க வேண்டிய நல்ல விஷயம் நெரயத்தான் இருக்கு.

விவரமா சொல்லுங்க ஒமர் பாய்.

இப்ப பாருங்களேன் அஹமது, நவம்பர் 24 மாநாட்டுக்காக தமிழ்நாட்டுல ஒவ்வொரு பகுதியில இருந்தும் ரயில்லயும், பஸ்லயும், கார்லயும் எவ்வளவு பேரு வந்திருந்தாங்க. ஆனா அவுங்க யாரும் நாம கும்பகோண கூட்டத்துக்கு குடுத்த பில்ட் அப் மாதிரி ஒண்ணுமே செய்யலையே.

எல்லாத்தையும் ஓவரா பில்ட் அப் பண்றது தானே நம்ம தலைவரோட பளக்கம். சரி நீங்க சென்னை மாநாடு பத்தி சொல்லுங்க.

அங்க நின்ன கூட்டத்தை பாத்தா, தீவுத்திடல் கூட நெறஞ்சுருக்கும் போல. அவ்வளவு கூட்டம். ஒரு நிமிஷம் அந்த கூட்டத்தை பாத்து நான் கொஞ்சம் பொறாம பட்டுட்டேன். அதெப்புடி அஹமது. தமுமுக காரங்க ஏற்பாடு பன்னுனா மட்டும் அவ்வளவு பேரு கூடிடுறாங்க. நாம ததஜ சார்பா கூப்டா ஒரு மாதிரி நாம தான் கூட்டம் கூடுனதா படம் காட்ட வேண்டியதிருக்கு. அப்புடி பொய் சொல்லி சமாளிச்சத மெயின்டெய்ன் பண்றதுக்காக திரும்ப திரும்ப அதையே சொல்ல வேண்டியதிருக்கு போங்க.

சரி சரி சலிச்சுக்காதீங்க, ஒமர் பாய். பொய் சொல்றதும், பொய்ய திரும்ப திரும்ப சொல்றதும், அண்ணன தக்லீது பண்றதும் தான் நாம படிச்சுக்கிட்ட தவ்ஹீத் பாடம். இப்ப போயி வருத்தப்பட்டா என்ன பிரயோசனம். நீங்க மேல சொல்லுங்க.

அதுவும் சரி தான் அஹமது. இந்த இடஒதுக்கீடு அறிவிப்பு வந்த சமயத்துல நம்ம சைட்ல துளசியேந்திரபுரம் கிளை விசயமாகத்தான் ஃபிளாஷ் நியூஸ் ஓடுச்சு. அத மாதிரி இப்போ சமுதாயமே திரண்டு வந்து நன்றி அறிவிப்பு மாநாடு நடக்கும் போது கும்பகோணம் மதரஸா விஷயமாத்தான் செய்தி போட்டாங்க.

இதுல என்ன ஆச்சரியம் இருக்கு ஒமர் பாய். ஜெயலலிதா சி.எம் ஆக இருந்தப்ப, ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு குடுத்தத எதுத்து அறிக்க விட்டாங்களே, அப்ப தமுமுக ஜெயலலிதாவ எதுத்து ஆர்ப்பாட்டம் பண்ணுன சேதிய எல்லா பத்திரிக்கையும் போட்டாங்க. நம்ம தலவரு மட்டும் தானே தினமலர் மாதிரி அந்த சேதிய போடாம இருட்டடிப்பு செஞ்சாரு. மறந்துட்டீங்களா.

பரவாயில்லையே அஹமது பாய். ஞாபகம் வச்சிருக்கீங்களே. ஆனா, நாமெல்லாம் மறந்திருப்போம்ங்கிற நம்பிக்கைல நம்ம பாக்கரு சேலத்துல இடஒதுக்கீடு யாரால்னு மீட்டிங் பேசுனாரு பாருங்க. படா தமாசு போங்க.

யாரு, நம்ம ஓம்னி பஸ் நந்தினி புகழ் பாக்கரா! அந்த மேட்டருக்குப் பொறவு அவரு, நம்ம தலைவரு பிஜே இப்புடி யாரு பேசுனாலும் காமெடியாதான் இருக்கு. சரி நீங்க சொல்லுங்க.

அந்த மீட்டிங்குல பாக்கரு மோடி விஷயத்தப்பத்தி பேசுனாரு. தெஹல்கா கொண்டு வந்து கொட்டுன ஆதாரங்கள வச்சு அழுது துடிச்சு பேசுனாரு.

ஏங்க ஒமர் பாய். இதுல என்ன காமெடிய கண்டீங்க நீங்க.

தெஹல்கா சொல்றதுக்கு முன்னாடியே பலபேரு, குஜராத் கலவரத்துல மோடியோட பங்கு பத்தி சொன்னப்போ, இந்த பாக்கரும் நம்ம தலைவரு பிஜேயும் என்ன சொன்னாங்க. கடந்த சட்டசப தேர்தல் பிரச்சாரத்த எடுத்துப்பாருங்க. மோடிக்கு மலர் கிரீடம் சூட்டுன ஜெயலலிதாவுக்கு வால்(அ)கால் புடிச்சுக்கிட்டு நின்னதுனால, கருணாநிதியையும், மோடியயும் கம்பேர் பண்ணுனா, மோடி, கருணாநிதியை விட எவ்வளவோ மேல்னு சொன்னாங்களா இல்லியா. இப்போ இப்புடி பாக்கரு சேலம் கூட்டத்துல பேசுனா அது தமாசு இல்லாம வேற எப்புடி எடுத்துக்கிறது.

அவரு பொதுக்கூட்டத்துல பேசுறது மட்டுமில்ல, தனிநபர் சந்திப்புல பேசுறதும் கூட காமெடிதான்னு மொதல்லயே நிரூபிச்சுட்டாரே. அத நீங்க தான் மறந்துட்டீங்க போல.

எங்கே.. .. .. எப்போ.. .. .. எனக்கு நினைவில்லையே.

சரியாப் போச்சு. ஜெயலலிதாவ கோட்டைல சந்துச்சு வெத்துப் பேப்பர விவரமான ஆணையம்னு தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு வந்தாங்களே. அந்த சந்திப்புல என்ன சொன்னாரு. அம்மா. உங்க ஆச்சியிலதாம்மா நாங்க நிம்மதியா சுவாச்சிச்சோம்னு சொன்னாரே. அத விட பெரிய காமெடி என்னங்க இருக்க முடியும்.

பலே பலே அஹமது. நல்லா தேறிட்டீங்க. சரியான நேரத்துல எனக்கே ஞாபகப்படுத்திட்டீங்க.

அது கெடக்கட்டும். நீங்க வேற எதாச்சும் சேதி சொல்லுங்க.

வேற என்னத்த நாஞ் சொல்றது. போன வாரம் நம்ம பத்திரிக்கைல சொத்து வாங்குறது விஷயமா ஒரு கேள்வி பதில் வந்திருக்கு.. ..

என்னது சொத்தா .. .. யார் பேர்ல.. ..

அதுதான் கேள்வியே. சொத்து வாங்குனா எப்புடி ரெஜிஸ்டர் பண்றதுன்னு கேட்ட கேள்விக்கு நம்ம தலைவரு சொல்லியிருக்குற பதில் இருக்கு பாருங்க. அதுல தான் விசேஷம்.

என்னன்னே சொல்லாம வழமப்படி பில்ட் அப் பண்றீங்க ஒமர் பாய்.

கவனமா கேளுங்க அஹமது. இப்போ சொத்து வாங்குனா ததஜ டிரஸ்ட் பேர்ல வாங்கனும்னு சொல்றாரு. ஆனா தமுமுகவுல இருந்தப்போ, சொத்து வேறொரு டிரஸ்ட் பேர்ல தான் வாங்கணும், தமுமுக டிரஸ்ட்னு வாங்குனா அது முடக்கப்பட்டு விடலாம், எனவே தனியான டிரஸ்ட் பேர்ல தான் வாங்கனும்னு அடம் புடிச்சு தனியா டிரஸ்ட் அமெச்சு வாங்க வச்சாரு.

இதுல என்ன வில்லங்கம்னே புரியல ஒமர் பாய்.

என்ன வில்லங்கம்னு அவர் பதில்ல தெளிவாவே இருக்கு. அதாவது தனியா டிரஸ்ட் அமெச்சா ஒருவேள கட்சி பிளவுபட்டா இந்த தனியான டிரஸ்ட்டிகளால நிர்வகிக்கப்படுற அந்த சொத்துக்கள், அந்த டிரஸ்டிகளோட விருப்பத்தின் பேரிலே, அது கட்சிக்கு கெடக்காம போயிடும் அதனால ததஜ டிரஸ்ட் பேர்ல தான் வாங்கனும்னு சொல்லியிருக்காரு.

அப்புடிப் போடு அருவாள. இப்ப எனக்கு தெளிவா புரிஞ்சு போச்சு. அதாவது தான் தமுமுகவுல இருந்து விலகி வந்தப்ப, தமுமுக சொத்துக்கள, தனி டிரஸ்ட் பேர்ல இருந்ததுனால ஈஸியா லவட்டிக்கிட்டு வந்த மாதிரி பாக்கரோ, அலாவுதீனோ ததஜவ ஒடச்சுக்கிட்டு வெளியேறினாலும் அந்த சொத்துக்கள் முழுசா தன்னோடயே இருக்கனும்னு தூரநோக்கோட ப்ளான் பண்றாரு போல.

கரைக்டா சொல்லிட்டீங்க. முன்ன மாதிரி இல்லாம இப்போ ததஜவுக்கு தலைவர் யாரு அண்ணன் பிஜே தான். டிரஸ்ட்டுக்கு.. .. அதுக்கும் அவரு தான். அப்போ எப்புடிப் பாத்தாலும் சொத்துக்கள் எதுவும் பிஜேவ மீறி யார்கிட்டேயும் போக முடியாது.

அடேங்கப்பா. தவ்ஹீது பேர்ல இவ்வளவு அரசியலா. தாங்காதுடாப்பா.

சரி அஹமது நேரமாயிடுச்சு. பெறகு சாவகாசமா சந்திப்போம்.

வஸ்ஸலாம்
முல்லா 28.11.2007

Tuesday, November 27, 2007

கருணை இல்லம் போல் பாடுபடும் தமுமுக

கருணை இல்லம் போல் பாடுபடும் தமுமுகவிற்கு 2 ஆம்புலன்ஸ்கள் சொந்த செலவில் வழங்குவேன்: கலைஞர்


சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்ததற்காக நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டின் தலைவர் ஜனாப் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களே, வரவேற்புரையாற்றிய ஜனாப் ஹைதர் அலி அவர்களே, திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றிய ரிஃபாயி அவர்களே, விஞ்ஞானி அப்துல் ஜலீல் அவர்களே, நன்றியுரையாற்ற இருக்கும் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்களே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பர் நல்லக்கண்ணு அவர்களே, பேராயர் சேவியர் அருள்ராசு அவர்களே, எஸ்றா சற்குணம், பீட்டர் பெர்னாண்டோ அவர்களே, தொகுப்புரையாற்றும் தமிமுன் அன்சாரி அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே...

நன்றி கூறுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்

அரங்கத்தின் உள்ளும் புறமும் பல்லாயிரக்கணக்கிலே குழுமியிருக்கிறீர்கள் என்ற நிலையை நானும் அறிவேன். இது நம்முடைய உள்ளமும் புறமும் நிரம்பியிருக்கின்றது என்பதற்கு அடையாளம். உள்ளும் புறமும் நிரம்பியிருந்தால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உள்ளே காலியாக இருந்து, வெளியேயும் அதே நிலை என்றால் நமக்கு மக்கள் தருகின்ற ஆதரவு எவ்வளவு என்ற கணக்கை சுலபத்திலே எடுத்துவிட முடியும். ஆனால் இப்போதெல்லாம் நாட்டிலே நன்றி கூறுகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, எடுத்துக்காட்டாக இந்த விழா அமைந்திருக்கின்றது.

தமிழகத்தில் நன்றி கூறுகின்றவர்களா? அடடே, ஆச்சர்யமாக இருக்கிறதே என்று நாம் நினைத்த காலம் உண்டு. இப்போது நன்றி கூறுகின்றவர்கள் இவ்வளவு பேரா? ஆயிரக்கணக்கிலா, இலட்சக்கணக்கிலா? என்று நாம் மகிழ்ச்சி யடையக் கூடிய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இது எண்ண கணிதம்

ஒன்றைக் கவனித்தால் வேடிக்கையாக அல்ல, ஏதோ ஒரு குறிப்பை உணர்த்துவதாக அமைந்திருக்கின்றது. இன்று விழா நடைபெறும் நாள் 24ஆம் தேதி சிறுபான்மை சமுதாயத்தாருக்கு, முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவ பெருமக்களுக்கும் இடஒதுக்கீடு சம நிலையிலே இருவருக்கும் அளிப்பது என்ற முடிவெடுத்து, அதை முதன்முதலாக அறிவித்தது, கவர்னர் பேரவையிலேயே உரையாற்றிய போது தான் - அப்படி அவர் உரையாற்றியது 24-05-2006. கவர்னர் உரையில் நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி இந்த அரசு விரைவில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டைச் செய்யுமென்ற செய்தியை அறிவிப்பாக வெளியிட்டது 24.05.2006. ஆளுநர் உரையிலே அறிவித்ததும் 24, அது நிறைவேறி நன்றி கூறுவதும் 24.

இன்னொரு ஒற்றுமை. நம்முடைய தமுமுக பொதுச் செயலாளர் அவர்கள் வரவேற்புரையாற்றும்போது சொன்னார், 1995ஆம் ஆண்டு தமுமுக உதயமாயிற்று என்று. நாம் இந்த நான்கு எண்களையும் கூட்டிப்பார்த்தால் அதுவும் 24. அவ்வளவு ஏன்? நான் பிறந்த ஆண்டே 1924. நம்மிடையே எவ்வளவு ஒற்றுமை இயல்பாகவே அமைந்திருக்கிறது என்பதை இதை விட அழுத்தந்திருத்தமாக, சிறப்பாக எண் வைத்து ஜாதகம் கணிப்பாளர்களே, எண் இல்லாமலே எண்ணத்தை வைத்து இந்த ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கின்றது.

ரத்தத்தில் ஊறிய ஒன்று.

இன்று நேற்றல்ல, நெடுங்காலமாக நாம் உறவு கொண்ட இரு சமுதாயத்தினர். மன்னிக்க வேண்டும். இரு சமுதாயம் என்று சொன்னதற்காக - ஒரு சமுதாயத்தினர் தான் - எல்லோருக்கும் சகோதரர்கள் தான் - சிறுபான்மைச் சமுதாயம் முன்னேற வேண்டும், உரிமைகளைப் பெறவேண்டு மென்பதற்காக நீண்டகாலமாக கோரிக்கை வைத்து, குரலெழுப்பி, போராடி இந்த உண்மையை உணர்ந்து உணர்வுகளை மதித்து, நாங்கள் செயல்பட்டு தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமென்றால் - அது மன்னிக்க வேண்டும் - யாரும் தவறாக கருதிக் கொள்ளக்கூடாது - இது எங்களுடைய ரத்ததோடு ஊறிய ஒன்று.

1920-25ம் ஆண்டுகளில் இந்த மாநிலத்தை ஆண்ட கட்சி, முழுமையான பலத்தோடு ஆண்ட கட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒருபுறத்திலே வெள்ளைக்காரர்களுடைய ஆதரவோடும், மக்களுடைய வாக்குகளைப் பெற்றும் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்ற போதே, இப்போது இடஒதுக்கீடு என்று சொல்கிற இந்தத் தத்துவத்திற்கு , இந்தக் கொள்கைகைக்கு அப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் பயனை சிறுபான்மைச் சமுதாயத்திற்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு - பச்சையாகச் சொல்ல வேண்டுமேயானால் மேலார், உயர்ந்தோர், என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனர்களை அன்னியில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயத்திற்காக நீதி வழங்கிய ஆட்சிதான் - நீதிக்கட்சியின் ஆட்சி. 1920-25ஆம் ஆண்டுகளில் எப்படி எங்களுக்கு திடீரென்று - கருணாநிதிக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் நினைவு வந்ததென்றால், இது ரத்ததிலே ஊறிய உணர்வு. இன்று நேற்றல்ல - நீங்கள் கூறுகின்ற நன்றி இதற்கெல்லாம் நமக்கு ஆதரவளித்த, மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் கட்சியினுடைய துணையாக, வழிகாட்டுதலாக இருக்கின்ற அம்மையார் சோனியா காந்தி அவர்களுடைய ஆதரவோடு மாத்திரமல்ல - பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுடைய ஆதரவோடு மாத்திரமல்ல, குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் - நான் அல்ல, என்னுடைய அமைச்சரவையிலே இருக்கின்ற நண்பர்கள் அல்ல எங்களையெல்லாம் இப்படிப்பட்ட கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்து, நீங்கள் சொன்னவுடன் அதைப் புரிந்து கொள்கின்ற சக்தியையும் அளித்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழி இது - எனவே இந்த நன்றியெல்லாம் அவ்வழி செல்ல வேண்டிய நன்றியே தவிர இவ்வழி எனக்குத் தர வேண்டிய நன்றியல்ல. நன்றி கூறியிருக்கிறீர்கள். நான் நன்றிக்கு நன்றி கூறுகிறேன். நன்றி கூறிய உங்களுக்கெல்லாம் நன்றி கூறுகிறேன்.

நலிந்தோருக்கு உதவும் தமுமுக

நம்முடைய வரவேற்புரை ஆற்றிய பொதுச் செயலாளர் (ஹைதர் அலி) குறிப்பிட்டார், நம்முடைய மாநாட்டின் தலைவரிடமும் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தேன். அவர்களும் 'ஆமாம்' என்றார்கள். இந்த தமுமுக இயக்கம் 1995ஆம் ஆண்டிலே தோன்றிய போது அப்போது ஐந்து ஆம்புலன்ஸ் வண்டிகளோடு பணிகளை ஆற்றியது என்றும், இப்போது 31 ஆம்புலன்ஸ் வண்டிகள் என்றும் சொன்னார்கள். ஆக இந்த இயக்கத்தினுடைய பணி, ஆக்க வேலை மக்களுக்குத் தொண்டாற்றுவது - மக்கள் சமுதாயத்திலே நலிந்த பிரிவினருக்கு நன்மைகளைச் செய்வது, அவர்களுடைய உடனடி உதவிகளிலே ஒன்றாக இயலாதவர்களுக்கு, ஆதரவற்ற வர்களுக்கு, அனாதைகளுக்கு உதவுகின்ற இந்தப் பணியையும் சில கருணை இல்லங்களைப் போல, அன்பு இல்லங்களைப் போல, இந்தப் பணிகளையும் இவ்வளவு பெரிய இயக்கம், தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கின்ற தமுமுக என்ற இந்த இயக்கம் ஏற்றுக் கொண்டு அதற்காக மிகக் குறுகிய காலத்திலே ஐந்தாக இருந்த ஆம்புலன்ஸ் வண்டிகளை 31, என்ற அளவிற்கு பெருக்கி யிருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க, மகிழத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.

எண்ண சொந்த செலவில்

ஆம்புலன்ஸ் அதிகமாகப் பயன்படுகின்ற அளவிற்கு நோய்நொடிகள், நலிவுகள் வரவேண்டுமென்று நான் விரும்பவில்லை. ஆனால் வந்த நலிவுகளைப் போக்க ஆம்புலன்ஸ் வண்டிகள் தேவை. அப்படிப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகளின் உதவிகளை அளிக்க, சில ஆண்டுகளிலேயே - ஐந்தாக இருந்தது 31 ஆக ஆகியிருக்கின்றது. எனக்கு அவர்கள் நன்றி பாராட்டுகின்ற இந்த விழாவிலே நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பொறுப்பில் உங்களுடைய 31 ஆம்புலன்ஸ் வண்டிகளோடு இன்னும் இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகளை நீங்கள் வாங்கிக் கொள்ள அதற்குரிய நிதி எவ்வளவு என்று இந்த அமைப்பின் சார்பில் தலைவரும், பொதுச் செய லாளரும் எனக்கு எடுத்துச் சொன்னால், என் சொந்தப் பொறுப்பிலே நான் இந்தத் தொகையை வழங்கி - இந்த நாள் நம்முடைய நினைவிலே நிற்க வேண்டிய நாள், நலிந்தோருக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள - நமக்கு வழிகாட்டியாக உள்ளவர்களின் பெயரால் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறை வேற்றிய நாள் என்ற வகையிலே இது அமையும் என்ற முறையிலே நான் இதை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


நான் உங்களில் ஒருவன்

நான் சிறப்பு விருந்தினர் என்று இங்கே வாழ்த்துரை வழங்கியவர்கள் எல்லாம் சொன்னார்கள். நான் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன் என்றார்கள். மன்னிக்க வேண்டும், நான் விருந்தினர் அல்ல - விருந்தினர்களாக உள்ளவர்களையெல்லாம் வரவேற்கின்ற உங்களில் ஒருவன். என்னைப் பெருமைப்படுத்துவதாக எண்ணி விருந்தினர் என்று சொல்லி, என்னை வேறுபடுத்த வேண்டாம், நீங்கள் வேறு, நான் வேறல்ல என்ற இந்த தத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடிப்போம்.

நாம் தமிழ்நாட்டிலே இன்று நேற்றல்ல, இங்கே என்னை அறிமுகப்படுத்திப் பேசிய நண்பர் (தமிமுன் அன்சாரி) குறிப்பிட்டதைப் போல தாருல் இஸ்லாம் ஒரு கையிலே, குடியரசு பத்திரிக்கை இன்னொரு கையிலே என்ற அளவிற்கு இளம்பிராயத்திலேயே முஸ்லிம் லீக்கின் பிறைக் கொடியை ஒரு கையிலும், திராவிட இயக்கத்தின் கொடியை ஒரு கையிலுமாக வளர்ந்தவன் நான்.

காப்பாற்றிய லுங்கி

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொது வாழ்வுக்கு சொந்தக் காரன். நான் பாண்டிச்சேரியிலே அடிபட்டு, உதைப்பட்டு, உயிர் போய் விட்டது என்று என்னை குண்டர்கள் விட்டு விட்டு சென்ற பிறகு, நான் அங்கிருந்து தப்பித்து பெரியார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது, மீண்டும் யாரும் என்னை அடையாளம் கண்டு தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நான் கட்டிச் சென்ற ஆடை 'லுங்கி' தான் என்பதையும் - நான் இன்று நேற்றல்ல, இந்த விழாவிற்காக அல்ல, இதை என்னுடைய 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தி லேயே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதைச் சொல்லி - நாம் ஆடையில், எண்ணத்தில், உணர்வுகளில், ஒன்றுபட்டு நிற்கின்றோம். அப்படிப்பட்ட சமுதாய ஒற்றுமையைப் பேணிக்காக்கின்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஒரு பக்கத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா. இன்னொரு பக்கத்திலே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இவர்கள் எல்லாம் இணைந்து நம்மை வழி நடத்திச் சென்றிருக் கின்றார்கள். தொடர்ந்து இந்த வழியிலே சகோதரர்களாக செல்வோம் என்று குறிப்பிட்டு, நான் ஒரு கூட்டத்தில் சொன்னதைப் போல, 'இந்து முஸ்லிம் சீக் ஈசாயி. ஆபஸ் மே ஹை பாயி பாயி' என்ற அந்தத் தத்துவத்தை இந்தியாவிலே கடைப்பிடிப்போம், அதுதான் இந்த விழாவின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டு, நீங்கள் இதயம் மலர்ந்து உங்களுடைய மனம் கனிந்து நன்றியை அரும்புகளாக, மலர்களாக, ஆக்கி என் தலையிலே சொரிந்தமைக்காக என்னுடைய வணக்கத்தை, நன்றியை, மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு - இவைகள் எல்லாம் தொடர்ந்து நான் உங்களுக்கு பணியாற்றுவதற்காக தரப்பட்ட முன்பணம் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கின்றேன்.

- இவ்வாறு முதல்வர் கலைஞர் உரையாற்றினார்.
(நன்றி: முரசொலி 25.11.2007)

Tuesday, November 20, 2007

புதுச்சேரி முஸ்லிம்களுக்கு தனி இயக்குனரகம்

முஸ்லிம்களுக்கு தனி இயக்குனரகம் முதல்வருக்கு தமுமுக கோரிக்கை


காரைக்கால்: முஸ்லிம்களுக்கு தனி அமைச்சகம் மற்றும் இயக்குனரகம் உருவாக்க வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து தமுமுக காரைக்கால் லியாக்கத் அலி, முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் எதிர் கட்சி தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'ஆந்திரா, கேரள அரசுகள் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தத்தம் மாநில மக்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளன. அதுபோல் புதுச்சேரி மாநிலத்திலிருந்து வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்.


சிறுபான்மை மக்களின் நலனுக்காக பிரதமரின் 15 அம்ச நலத்திட்டத்தின் பரிந்துரைகள் அமல்படுத்த மேற்கு வங்க அரசு, மாநில வருவாயில் 15 சதவிகிதத்தை ஒதுக்கியுள்ளது. இதே முறையை பின்பற்றி புதுச்சேரி வாழ் சிறுபான்மை மக்களுக்காக தனி நிதியையும் ஒதுக்கிட வேண்டும்.


புதுச்சேரியில் சிறுபான்மை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒட்டு மொத்தமாக செலவிடப்படுகிறது. இதனால் சிறுபான்மை மக்களின் நலனுக்கு மிகக் குறைந்த நிதியே செலவாகிறது. ஆகவே தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் சிறுபான்மையினருக்கு தனி இயக்குனரகம் உருவாக்க வேண்டும்.


தென்னிந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்காக தனி இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் மட்டும் இடஒதுக்கீடு இல்லாதது முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஆகவே முதல்வர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி மிக விரைவில் தனி இடஒதுக்கீடு சட்டத்தை புதுச்சேரியிலும் கொண்டு வர வேண்டும்' இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


நன்றி: தினமலர் 20.11.2007

Sunday, November 18, 2007

வீரியத்துடன் வக்ஃபு வாரியம்

வீரியத்துடன் வாரியம் - சமுதாய மானம் காக்கும் தமுமுக (நக்கீரன்)

ஹைதர் அலி

- தலைவரே... வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான ஒரே கல்லூரி மதுரையில் இருக்கு. வக்ஃபு சேர்மன் தமுமுக ஹைதர் அலி தான் இதற்கும் சேர்மன். இந்தக் கல்லூரியில் 9 விரிவுரையாளர் போஸ்ட்டிங் காலியா இருக்கு. இதோடு அழகிரி சிபாரிசில் 9 பேர் கொண்ட பட்டியலைக் கொண்டு வந்து கல்லூரி முதல்வரிடம் கொடுத்தார் நாகேஷ் என்பவர். இந்த போஸ்டிங் தொடர்பா நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது லிஸ்ட்டைப் பார்த்த ஹைதர் அலி டென்ஷனாயிட்டார். 9 பேரில் 7 பேர் கல்லூரிக்கு சம்பந்தமில்லாத இந்துக்கள்ன்னு கோபமான ஹைதர் அலி இந்த பட்டியலை ஏற்க மாட்டேன்னு நிராகரிச்சிட்டார்.

- 'அப்புறம்?'

- அழகிரி தந்த பட்டியல்னு கல்லூரி முதல்வர் சொன்ன போதும், 'என் பதவியை ராஜினாமா செய்தாலும் செய்வேனே தவிர, வக்ஃப் போர்டு கல்லூரியில் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யமாட்டேன். நான் கலைஞரிடமே இது பற்றி நேரில் பேசிக்கிறேன்'னு ஹைதர் அலி சொல்லிட்டார்.

அழகிரி தரப்பிலிருந்து பல முறை லைனுக்கு வந்தும் ஹைதர் அலி பேச மறுத்து விட்டார். இந்த நிலைமையில் கல்லூரி முதல்வரோ மதுரை மத்தி தொகுதி எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சா தான் ஹைதர் அலியிடம் சொல்லி பட்டியலை நிராகரிக்க வச்சிட்டார்னு சொல்லிட்டாராம். கவுஸ் பாட்சாவோ, என்னோட எம்.எல்.ஏ பதவியே நீங்க கொடுத்தது தான். என்னை தப்பா நினைத்தால் இந்தாங்க என் ராஜினாமா கடிதம்னு சொல்லி பேப்பரில் கையெழுத்து போட்டு அழகிரிகிட்டே கொடுத்துட்டாரு. லெக்சரர் போஸ்டிங் விவகாரத்தில் அழகிரிக்கும் ஹைதர் அலிக்கும் போட்டா போட்டி நிலவுது.

நக்கீரன் 21.11.2007

Tuesday, November 13, 2007

நன்றி அறிவிப்பு மாநாடு - அழைப்பிதழ்

பெரியதாக்கிப் பார்க்க படத்தின் மீது டபுள் கிளிக் செய்யுங்கள்.

Monday, November 12, 2007

பத்திரிக்கை பயங்கரவாதி பிஜே

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..
சமீப காலமாக தமிழக முஸ்லிம்களால் ஓரங்கட்டப்பட்ட ததஜவினர் தாங்கள் திருடிச் சென்ற பத்திரிக்கையில் எழுதிக் கிழிப்பதும், ஆங்காங்கே பேசிப் பழிப்பதுமான ஒரு விஷயம் வக்ஃப் வாரியம் சம்பந்தப்பட்டதாகும்.

ஆஹா.. .. சமுதாயத்தின் மீது இவர்களுக்கு அதீத அக்கறை வந்து விட்டது போலும் என எண்ணி விடாதீர்கள். ஏனெனில் இதற்கு முன்பு இவர்கள் நிம்மதியாக சுவாசித்தார்களே அந்த அம்மாவின் ஆட்சியிலே, அம்மாவின் அன்புத் தோழியின் அரவணைப்பில் வக்ஃப் வாரியம் செயலிழந்து கிடந்த பொழுது போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் அடங்கி கிடந்தார்கலோ என்னவோ அமைதியாகவே இருந்தனர்.

இன்று மட்டும் எப்படி வேகம் வந்தது.

காரணம், வக்ஃப் வாரிய தலைவராக தமுமுக வின் தலைவர்களில் ஒருவர் அமர்ந்திருப்பது தான் இவர்களின் கண்ணை உறுத்துகிறது.

போயஸ் தோட்டத்து சகவாசம் கிட்டியதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதிக்குரிய அனைத்து அம்சங்களையும் கற்றுக் கொண்ட கிரிமினல் பிஜே தனது அரசியல்வாத திறமையை பரீட்சித்துப் பார்க்க துவங்கி விட்டார் போலும்.

பதவிக்கு வர முடியாத அளவிற்கு மக்கள் செல்வாக்கு இழந்தவர்கள் பதவிக்கு வருபவர்கள் மீது பழி உரைத்து பதவி நீக்கம் அல்லது பதவி இறக்கம் செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபடுவர். அரசியல்வாதியின் இந்தச் செயலை அப்படியே அடியொற்றி தற்பொழுது தடுமாற்றத்தில் இருக்கும் ததஜ தலைவர் செய்ய ஆரம்பித்துள்ளார்.

ஊரார் உழைப்பிலேயே உல்லாசம் காணும் இயல்புடைய இவர், தான் களவாடிச் சென்ற பத்திரிக்கையில், ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதாவது வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுகளை அனுப்பித்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொகுத்து முதலமைச்சர் மற்றும் பலருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே சமுதாய சேவையை நோக்கமாக இவர் கொண்டிருப்பாரேயானால், வக்ஃப் வாரியத்தில் ஏதேனும் குளறுபடிகள் காணக்கிடைத்தால், அதனை வாரியத்தின் தலைவர் அவர்களுக்கு, அதாவது தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களுக்கு மகஜர் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருப்பார்.

ஆனால் தன்னோடு ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தவர் இன்று பெருமதிப்புக்குரிய தலைவராக வலம் வருவதை பொறுத்துக் கொள்ள இயலாமல் பொறாமை தீயில் வெந்து துடிக்கிறார் பாவம். வெகு காலத்திற்குப் பிறகு, இப்பொழுது தான் வக்ஃப் வாரியம், ஒரு துடிப்பான தலைமையின் வழிகாட்டுதலில் செயல்படத் துவங்கியுள்ளது.

இதுவரை உறங்கிக் கிடந்த பணியாளர்களை, தட்டி எழுப்பி, தட்டிக் கொடுத்து, தகவல்களை திரட்டி வருவதால், பல இடங்களில் வக்ஃப் சொத்துக்களை மீட்டு எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புராதான கால வாடகை நிர்ணயத்தின்படி வசதிகள் அனுபவித்துக் கொண்டு, வக்ஃப் போர்டை வஞ்சித்து வந்த வாடகைதாரர்களிடமிருந்து சந்தை நிலவரப்படி வாடகை நிர்ணயித்து வசூல் செய்ய வழிவகை செய்யப்பட்டு வருகின்றது.

இப்படியாக, ஆக்கபூர்வமான வேளைகள் நடைபெற்று வரும் வேளையில், என்ன புகார் காண்டம் வாசிக்க இவர் காத்துக் கிடக்கிறார் என்றுதானே யோசிக்கிறீர்கள்.

என்ன செய்வது, ஜெயலலிதாவிடம் சேர்ந்ததனால், தமிழகத்தில் ஒரு பழமொழி சொல்வார்களே எதனோடோ சேர்ந்த கன்றும் மலத்தைத் தின்னும் என்பார்களே அதைப்போல, கருணாநிதியையும் திமு கழகத்தையும் எதிர்ப்பது மட்டுமே தனது கொள்கையாக ஜெயலலிதா கொண்டுள்ளாரோ அதேபோல், தமுமுகவையும், அதன் தலைவர்களையும் எதிர்ப்பது மட்டுமே தனது சமுதாய சேவை என்று இவர் செயல்பட்டு வருகிறார்.

அதனால் தான் தஃவாவின் பெயரால் வசூல் செய்து ஃபித்னாவை விதைத்து வருகிறார்.

தமுமுகவின் தலைமை நிர்வாகியான ஹைதர் அலி அவர்கள் வக்ஃப் வாரியத்தின் தலைவரானதிலிருந்தே பிஜே தனது உறக்கத்தை தொலைத்து விட்டு, ஹைதரின் பதவிக்கு வேட்டு வைக்க ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்து வருகிறார்.

வேட்டு வைப்பது, வெடி வெடிப்பது, வெட்டிச் சாய்ப்பது எல்லாம் இந்த கிரிமினல் பிஜேவுக்கு கைவந்த கலைதானே. சந்தேகமிருப்பவர்கள் நாகூர் பார்சல் குண்டு மற்றும் ஆலிம் ஜார்ஜ் கொலையில் கைதாகி உள்ளவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

இத்தகைய சிறப்பம்சங்கள் பொருந்திய இவரது எண்ணத்திற்கு மாற்றமாக, கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்த பாராளுமன்ற இணைக்குழு தனது கருத்தை பதிவு செய்துள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் வக்ஃப் வாரிய செயல்பாடுகளை ஆய்வு செய்து வரக்கூடிய இக்குழு கடந்த அக்டோபர் 24 அன்று தமிழகம் வந்து சேர்ந்து முறையான ஆய்வை நடத்திய பின், இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழக வக்ஃப் வாரியம் தான் மிகச்சிறப்பாக செயல்படுகிறது என்ற நற்சான்றிதழை அளித்துச் சென்றுள்ளது.

நியாயமான அதிகாரிகள் அதிலும் முஸ்லிம் அதிகாரிகள் அல்லது நிர்வாகிகள் மீது சேறு பூசி அபாண்டமாக எழுதுவது ஜுனியர் விகடன் போன்ற பார்ப்பனர்களின் பணி மட்டுமல்ல, பாப்பாத்தி என அறிவிப்பு செய்த செல்வியுடன் சேர்ந்து கொண்டதால் அத்தகைய பத்திரிக்கை பயங்கரவாதத்தை தன்னாலும் பரப்ப முடியும் என கிரிமினல் பிஜே இதன் மூலம் நிரூபித்து வருகிறார்.

எனவே, இஸ்லாமிய சமுதாயம் பார்ப்பனர்களிடமிருந்து மட்டுமல்ல, பத்திரிக்கை பயங்கரவாதி பிஜேவிடமிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

ராவுத்தர் 12.11.2007

Monday, November 05, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 20

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வ அலைக்கு முஸ்ஸலாம் .. .. வாங்க வாங்க ஒமர் பாய். என்ன ஆச்சு உங்களுக்கு.. .. ஒரு மாசத்துக்கு மேலா ஆளையே காணாமே.. ..

என்ன பண்றது அஹமது, ரமளான் வந்ததா.. .. அப்புடி கொஞ்சம் பிஸியாகிட்டேன். பெறகு ஈத் அது இதுன்னு வேலயாப் போச்சு போங்க.. ..

சரி சரி பரவாயில்லை.. .. என்ன லேட்டஸ்ட் விஷயம் அதச் சொல்லுங்க கேப்போம்.

ஒண்ணா ரெண்டா அஹமது. அது கெடக்கே ஏகப்பட்டது. எதுல இருந்து ஸ்டார்ட் பண்றதுன்னு தான் யோசிக்கிறேன்.

இதுல யோசிக்க என்னங்க இருக்கு ஒமர் பாய். நம்ம சமுதாயத்துக்கு கெடச்ச இட ஒதுக்கீட்ல இருந்தே ஸ்டார்ட் பண்ணலாமே.

அதுவுஞ் சரிதான். இட ஒதுக்கீடு அறிவிப்பு வந்து அஞ்சாறு நாளா கம்முனு கெடந்த நம்ம தலவரு, யோசிச்சுப் பாத்து எட்டு நாள் களிச்சு வெள்ளி மேடைல நம்ம ததஜவுனால தான் கலைஞரு இட ஒதுக்கீடு குடுத்தாருன்னு குண்டப் போட்டாரு, பாருங்க.. ..

அதுதான் நமுத்துப் போன புஸ்வானமாப் போச்சே. கனிமொழிட்ட குடுத்த கோரிக்கை தான் கனிவோடு பரிசீலிக்கப்பட்டு கருணையோடு கவனிக்கப்பட்டு அவசர சட்டம் போட்டாங்கன்னு சொன்னத கேட்டு நம்மாளுங்களே சிரிப்பா சிரிச்சாங்களே.

ஆனா தமுமுககாரன் அளவுக்கு இல்லாட்டாலும், நாமளும் முற்றுகை போராட்டம்லாம் நடத்தத் தான செஞ்சோம்.

ஹோல்டான் அஹமது. என்ன ஒளர்ரீங்க. முற்றுகைப் போராட்டம் எப்போ நடந்துச்சு.

ஏன் நாந்தான் படிச்சனே, கும்பகோணம் பேரணி, ஜன 29 ஆர்ப்பாட்டம், சிறை நிரப்பு போராட்டம் அப்புறம் சட்டசபை முற்றுகை எல்லாம் நடந்து, அதுனால தான் அரசு பயந்து போய் குடுத்துருச்சுன்னு எளுதியிருந்தாங்களே.

சரியாப்போச்சு போங்க. கும்பகோணம் பேரணிங்குறது எதுக்குனு நம்ம தலைவரே, அந்தம்மா முன்னால கைய கவட்டுக்குள்ள வச்சுக்கிட்டு சொன்னாரே. அத மறந்துட்டீங்களா.

யாரு, ஜெயலலிதாட்டயா, என்ன சொன்னாரு, எனக்கு நெனைவில்லையே.

அந்த சந்திப்புல நம்மாளு ரெண்டு வெஷயத்த ஒத்துக்கிட்டு வந்தாரு. முதலாவது கும்பகோணத்துல கூடி கூத்தடிச்சது ஒரு இலட்சம் பேர் தான்னும், ரெண்டாவதா, இதுனால கோனிகா பஷீருக்கு இந்த தேர்தல்ல 4 இடமாச்சும் குடுக்கணும்னும் தான் சொன்னாரு.

அட ஆமா. எனக்கே மறந்து போச்சே.

இப்புடி எல்லோரும் மறந்திருப்பாங்கன்னு தான் இப்போ பிளேட்ட மாத்தி ஓட்டுறாரு. இரண்டாவதா என்னது ஜன 29 ஆர்ப்பாட்டம். இது எதுக்கான்னா, பஷீருக்கு சீட்டு கேட்கத்தான் கும்பமேளாவ நடத்துனோம்குறத மறச்சு இடஒதுக்கீட்டுக்காகத் தான் இதச் செஞ்சோம்னு மறு பிரகடனம் செய்றதுக்காக நடத்தப்பட்டுச்சு.

அப்ப சிறை நெரப்பு போராட்டம், சட்டசபை முற்றுகைலாம்.. ..

சிறை நெரப்பு போராட்டம் கூட, தமுமுக அடுத்தத்த காய் நகர்த்தல்களை வேகமாச் செஞ்சுக்கிட்டு வருதே, கூடிய சீக்கிரம் இட ஒதுக்கீடு வாங்கிடுவாங்க போல இருக்கே, அப்ப நாமளும் சொல்லிக்கிறதுக்கு என்னவாச்சும் வேணுமேன்னு நடத்தப்பட்டது தான்கிறது ஒங்களுக்குத் தெரியாதா?

அப்ப சட்டசபை முற்றுகைப் போராட்டம்.. ..

ஹா ஹா .. ஹா.. .. என்ன அஹமது இவ்வளவு ஏமாளியாவா இருப்பீங்க.. சட்டசபை முற்றுகைன்னு தான் சொன்னோமே இல்லாம தேதியச் சொன்னோமா.. .. இல்லியே. இதுல இருந்தே தெரியலியா இது சும்மா ஊலலல்லான்னு. ஆனா தமுமுக என்ன செஞ்சுச்சு. டிசம்பர் 31க்குள்ள இட ஒதுக்கீடு தரலன்னா திடீர் போராட்டங்களை பல தினுசுல, பல வழியில நடத்துவோம்னு கெடு குடுத்து மெரட்டுனாங்கள்ல்ல. ஜனவரி 1 ஆம் தேதிலேயிருந்து ஒரு நாள் பஸ் ஓடாது, ஒரு நாள் ரயில் ஓடாது, ஏன்? ஒரு நாள் எந்த விமானமும் கூட பறக்காதுன்னு படு தெம்பா அறிக்கையெல்லாம் கொடுத்தாங்களே! அரசு அதுக்கு அசையுமா? சும்மா முற்றுகைன்னு சொல்லிட்டு கையகட்டிக்கிட்டு ஒக்காந்து இருக்குறதுக்காக அசையுமா?

அட ஆமா ஒமர் பாய். நீங்க சொல்றது சரிதான். அதுனால தான் தமுமுக முன் நின்று முதல்வருக்கு பாராட்டு கூட்டம்லாம் போடுறாங்க போல இருக்கு.

இல்லையா பின்ன. பாராளுமன்ற தேர்தல்ல இருந்து திமுகவோட நெருக்கமா இருந்து அவுங்களோட ஒவ்வொரு கூட்டத்துலயும் தவறாம கலந்து, மறக்காம இட ஒதுக்கீட்டுக்காக குரல் குடுத்தப்ப எல்லாம் தமுமுக காரங்கள நாம எப்புடி கொச்சைப் படுத்துனோம். அவ்வளவு அவமானத்தையும் சமுதாயத்துக்காக தாங்கிக்கிட்டதுனால அவுங்களோட முயற்சிக்கு அல்லாஹ் வெற்றிய குடுத்தான். அதுக்காக விழா எடுக்குறாங்க. நம்மாளு தான் கலஞரு, மோடிய விட மோசக்காரன்னு ஜெயலலிதா கட்சி மேடைல பேசுனாரே. அவரா போயி விழா எடுக்க முடியும்.

ஆமா ஒமர் பாய். கேக்கனும்னு தான் இருந்தேன். மோடி பத்தி இவ்வளவு விஷயம் வெளிய வருதே. இந்த மோடிக்கு முடிசூட்டப் போன ஜெயலலிதாவுக்கோ, இடஒதுக்கீடு தந்த கருணாநிதிய விட இந்த நரபலி மோடி தங்கம்னு சர்ட்டிபிகேட் குடுத்த நம்ம அண்ணனுக்கோ இது தெரியாமலா இருந்திருக்கும்.

அஹமது, தெஹல்கா வெளியிட்ட இந்த விபரங்கள் முழுசும், இந்தியாவுல உள்ள எல்லாருக்குமே தெரியும். ஆனா சாட்சி சொல்லத்தான் ஆளு கிடைக்காம அல்லாடிக்கிட்டு இருந்தாங்க. அதுனால அம்மாவுக்கும் சரி அண்ணனுக்கும் சரி இதெல்லாம் நல்லாவே தெரியும். தெரிஞ்சாலும், நான் ஒரு பாப்பாத்திதான்னு சட்டசபைலயே சொன்ன அந்த அம்மா, வெளிப்படையா நான் இஸ்லாமிய விரோதிதான்னு டிக்ளேர் பண்ற மாதிரி மோடிக்கு முடிசூட்டப் போச்சு. ஆனா நம்ம அண்ணன் பிஜே தான் அம்மாட்ட வாங்குன பொட்டிக்காக, முஸ்லிமா இருந்துகிட்டே மோடிக்கு நல்ல சர்டிபிகேட் குடுத்தாரு.

ஆனா, தமுமுக இட ஒதுக்கீட்டுக்காக நடத்துன போராட்டத்துலேலாம் 2004க்கு முன்னால நாமளும் தானே கலந்துகிட்டோம். அத நம்மாளு சொல்றதுல என்ன தப்பு கண்டு புடிச்சீங்க.. ..

அப்புடி சொன்னாத்தான் பரவாயில்லையே அஹமது. என்னமோ இவரு தான் எல்லாத்தையும் செஞ்சது மாதிரியில்ல சவுண்டு வுடுறாரு. இவரு தஞ்சாவூர் பேரணிய தடுமாற வைக்கணும்கிறதுக்காகவே நடுவுல நெஞ்சப் புடிச்சிக்கிட்டு ஆசுபத்திரில போயி படுத்தாருங்குறது மறந்து போயிருமா என்ன.. ..

ஒமர் பாய். இதுல கூட பாத்தீங்களா. நம்ம அண்ணனுக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஒத்துமைய பாத்தீங்களா. அவுங்களும் கோர்ட் கேஸுன்னு வந்துட்டா ஒடனே ஆஸ்பத்திரியில போயி அட்மிட் ஆயிடுவாங்களே.. .. ஹா.. ஹா.. ஹா..

தமிழ்நாட்டு இடஒதுக்கீடு விஷயத்துலதான்னு இல்லாம, புதுச்சேரி, மத்திய அரசுல கூட இடஒதுக்கீடு குடுத்தாங்கன்னா அதுக்கும் காரணம் ததஜன்னு நம்ம தலைவர் சொல்லியிருக்காரே.

வேற என்ன சொல்வாரு நம்மாளு. என்னதான் சொன்னாலும், எளுதினாலும் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு அப்டீங்குற விஷயத்த பொறுத்த அளவுள, அத முன்னெடுத்து முயற்சி பண்ணுனதும், அதுக்காக இடைவிடாம போராடுனதும், அத வாங்குவதற்காக பல தியாகங்களைச் செஞ்சதும் தமுமுக தான்கிறது ஊரறிஞ்ச உண்மையாப் போச்சு. அதுல போயி பங்கு கேக்கணுமாயிருந்தா என்னவாவது பொய்யச் சொல்லித்தான நாமளும் அதுக்காக பாடுபட்டோம்னு சொல்லிக்க முடியும்.

என்ன அப்புடி சொல்லிட்டீங்க ஒமர் பாய். நாம என்ன செய்யாததையா சொன்னோம். இப்ப கூட பாருங்க நம்ம அடிச்சுக்கிட்டு வந்த பத்திரிக்கைல, புதுவை முதலமைச்சர சந்திச்ச ஃபோட்டோவுலாம் வந்திருக்கே. நீங்க பாக்கலியா.. ..

பாத்தேன். பாத்தேன். அஹமது. ஏன் ரங்கசாமிக்கு மகள் இல்லியா? கனிமொழி மூலமாக தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வாங்கியது உண்மையாக இருந்துச்சுன்னா, ரங்கசாமி மகள்கிட்டேயே மனு கொடுத்தால் போதுமே என்று சில பேரு நக்கலா கேட்டதையும் சகிச்சுக்கிட்டேன். ஆனா நான் சொல்ல வந்தது என்னான்னா, புதுவை முதலமைச்சரோட நம்ம ஆளுங்க இருக்கிற ஃபோட்டோவ போட்டு நாங்க முயற்சி செய்றோம்னு சொன்னா பத்தாதா. ஏன் தமுமுக காரங்களோட படத்தையும் போடணும்??
அப்படி போட்டு அதுக்கு ஒரு கமெண்ட் வேற.

அது தானே ஒமர் பாய் நம்மாளோட ஸ்பெஷாலிட்டி. எல்லாரையும் இப்புடி கொச்சைப்படுத்தலன்னா, எப்புடி அவரோட இமேஜ பாதுகாக்க முடியும்.. ..

கரெக்ட் தான். இந்த விஷயத்துல நம்மாளும் மோடியும் ஒண்ணு தான். அந்த ஃபோட்டாவுல ஏதோ போறபோக்குல குடுக்கப்பட்ட மனு. அதுனால தான் ரங்கசாமி வந்தவங்கள ஒக்கார கூட வுடாம நின்ன மேனிக்கு மனுவ வாங்கிக்கிட்டு தமுமுக காரனுவள விரட்டி அடிச்சுட்டாருங்குற மாதிரில எளுதியிருக்காரு. ஆனா அது உண்மையா.. .. ..

என்ன இப்புடி சந்தேகத்தை கிளப்புறீங்க ஒமர் பாய். அதுதான் ஆதாரத்துக்கு படம்லாம் போட்டிருந்தாரே.. .. ..

என்னத்த சொல்றது அஹமது. எதையாவது ஒண்ணப் போட்டு, அதுக்கு சம்பந்தமில்லாத ஒண்ணு தான் இதுன்னு சொன்றது அவரோட வழக்கமாப் போச்சு. அதக் கேட்டு தலையாட்டுறதும் தமுமுக காரனோட மல்லுக்கு நிக்கிறதும் நம்மளோட வழமையாப் போச்சு போங்க .. .. ..

சரி சரி .. .. சலிச்சுக்காம விஷயத்த வெளக்குங்க.

அதாவது, கடந்த 23.10.2007 அன்னிக்கு, சில ததஜ நிர்வாகிகள் புதுவை முதலமைச்சரை சந்திச்சது உண்மை தான். ஆனா அதுக்கும் முன்னால 04 ஆம் தேதியே காரைக்கால் மாவட்ட தமுமுக காரங்க மனு குடுத்துட்டாங்க. அதப் பாத்ததுக்கு பின்னால தான் 23 ஆம் தேதி நம்ம மாநில நிர்வாகி துணைக்கி நமச்சிவாயத்த அளச்சுகிட்டுத்தான் போய் பாக்க முடிஞ்சுது.

அதாவது, தமிழ்நாட்டுல இடஒதுக்கீடு அவசர சட்டம் அறிவிப்பு வெளியானதுமே, தமுமுக நிர்வாகிகள் கலைஞரைப் போய் பாத்து நன்றி தெரிவிச்சாங்க. அதுக்குப் பிறகு தான் நம்மாளுங்க போயி கலைஞரப் பாத்தாங்க. அதுமாதிரி தான் புதுவையிலும் நடந்திருக்குன்னு சொல்ல வர்றீங்களா.

ஆமாமா. இப்பல்லாம் தமுமுக பின்னாடி தான் நாம போக வேண்டியிருக்கு. சமுதாயப் பிரச்சனைகள கையாள்றதுல அவுங்க தான் எல்லோருக்குமே முன்மாதிரியா இருக்காங்க.

அது வாஸ்தவம் தான். இந்த போட்டோ விபரத்த சொல்றேனுட்டு என்னன்னமோ பேசுறீங்க.

அதத் தான் சொல்ல வந்தேன். நம்ம தலவரு வெளியிட்டிருக்குற படம் ஒருவேள இந்த காரைக்கால் மாவட்ட தமுமுக காரங்கள முதல்வர் ரங்கசாமி சந்திச்ச படமா இருக்கலாம். மாநில நிர்வாகிகளுக்கு கெடக்கிற மரியாத மாவட்ட நிர்வாகிகளுக்கு கெடக்கிறத விட கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்கிறது எல்லாருக்குமே தெரியுமே. இதுல தமுமுக காரனுவள கொச்சைப் படுத்துற அளவுக்கு என்ன இருக்கு.
அதுக்கும் மேலா, ஒரு மாவட்டத்தச் சேர்ந்த நிர்வாகிகள் எந்த ஒரு சிபாரிசும் இல்லாம நேரடியா முதல்வர் ரங்கசாமிய சந்திக்க முடியும். ஆனா நமக்கு மாநில நிர்வாகியாவே இருந்தாலும் ஒரு சிபாரிசு தேவப்படுதே இத நெனச்சு வருத்தப்படுறத வுட்டுட்டு, இந்த மாதிரி எளுதி அற்ப சுகமடையனுமான்னு பலர் கேக்குறாங்க.

அதுவுஞ் சரிதான் ஒமர் பாய். இன்னொன்னையும் கவனிச்சீங்களா. இந்த புதுச்சேரி முஸ்லிம்கள் இடஒதுக்கீடு விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே தமுமுக முன்னணியில தான் இருக்கு. 2005ல் நடந்த கவன ஈர்ப்பு மாநாட்டுல இருந்து இப்போ நடந்த இரு சக்கர பேரணி வரைக்கும் வித்தியாசமான அணுகுமுறைகள்ல இடஒதுக்கீடு கோரிக்கைக்கு அழுத்தம் குடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க.

ஆமா அஹமது. போராட்ட முறைகள்ள புதுமைகளை கொண்டு வந்து மத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்குறது இன்னக்கி தேதியில தமுமுகவாத்தான் இருக்க முடியும். அதிலேயும் தமுமுக டில்லியில நடத்துன ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு அகில இந்தியாவே தமுமுகவ திரும்பிப் பாக்குதுனு சொன்னா தப்பில்ல.

ஆனா வர வர தலவரு களப்போராட்டத்த விட கனிமொழிய சந்திச்சோம். ரங்கசாமிகிட்ட மனு குடுத்தோம். டில்லிக்கு தபால் போட்டோம்னு போற போக்கப் பாத்தா முஸ்லிம் லீக்குக்கு ஆன கதி தான் நமக்கும் ஆகும் போல தெரியுது.

சரியாச் சொன்னீங்க அஹமது. களுத தேஞ்சு கட்டெறும்பா போன கதயாத்தான் நம்ம கத ஆகிப்போச்சு.
சரி சரி .. .. ரொம்ப நேரமாச்சு. பக்கத்துல ஒரு வேலய முடிச்சுட்டு வந்துர்றேன்.மத்த விஷயங்களைப் பத்திப் பிறகு பேசலாம்.

சரிங்க ஒமர் பாய். போய்ட்டு சுருக்கா வந்துருங்க.

அஸ்ஸலாமு அலைக்கும்.. ..

முல்லா 04.11.2007

ரஹீமா நகரில் ஒருநாள் இஸ்லாமிய மாநாடு

ரஹீமா நகரில் 8ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு (அழைப்பிதழ்)
நாள்: 30.11.2007


பெரியதாக ஆக்க படத்தின் மீது டபுள் கிளிக் செய்யுங்கள்.

Saturday, November 03, 2007

தமுமுகவின் சுனாமி கணக்கு விபரம்

சுனாமி கணக்குகளை மக்கள் முன்னிலையில் சமர்ப்பித்தது த.மு.மு.க

அரிய சேவைகளின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அமைப்புகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

சுனாமி பேரழிவின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற தமுமுக சமீபகாலமாக தமிழகத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழக பொதுநல வரலாற்றில் யாரும் செய்யாத முன்மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறது தமுமுக! சுனாமி பேரலையின் போது நிவாரண உதவிகளுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும் பொதுமக்களிடம் சுனாமி நிவாரண நிதியைத் திரட்டினார்கள். அதுபோல் தமுமுகவும் ரூ.68,36,873.07 நிதியாக திரட்டியது.

இந்நிலையில் திரட்டிய நிதியிலிருந்து இதுவரை எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பதையும், மீதியுள்ள தொகையை என்ன செய்யப் போகிறோம் என்பதையும் இன்று 10.12.2005 (சனிக்கிழமை) சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவில் உள்ள எஸ்.வி.ஆர். (மிலன்) திருமண மண்டபத்தில் திரளாகக் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை சமர்பித்தது.

தாங்கள் திரட்டிய நிவாரண நிதி குறித்த விவரங்களையும் வருமானவரித் துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கைகளையும் பொதுமக்களைத் திரட்டி அந்நிகழ்வில் தாக்கல் செய்த தமுமுகவின் நடவடிக்கை தமிழக பொதுநல வரலாற்றில் நல்ல முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் பத்திரிகையாளர் சோலை அவர்கள், பஞ்சமீட்பு இயக்கத்தின் தலைவரும் ஒய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கருப்பன் ஐ.ஏ.எஸ் அவர்கள், காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் அவர்கள், சிறுபான்மை கூட்டமைப்பின் செயலாளர் பாதர் சேவியர் இவர்களுடன் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அனைத்து வரவு-செலவு கணக்குகளையும் கவனித்துக் கொண்டிருந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் உளவுத்துறையினரும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.

வங்கி கணக்குகள், மீதமுள்ள வங்கி இருப்புகள் உள்பட பல ஆவணங்களை டிஜிட்டல் திரையின் வழியாக ஆதாரங்களுடன் பொதுமக்களுக்கு தமுமுக கணக்குகளை சமர்ப்பித்தது.

இடையிடையே பொதுமக்கள் எழுப்பிய ஐயங்களுக்கு அவர்கள் உரிய முறையில் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்து முழு விவரங்களும் தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tmmk.in தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தமுமுக அறிவித்துள்ளது.

சுனாமி நிதி விவர பட்டியல்
வசூலான மொத்த தொகை 68,36,837.07
இதுவரை நிவாரண உதவிகளுக்கு
செலவிட்ட தொகை 33,25,435.25
மீதமுள்ள தொகை 35,11,437.82

இதில் மீதமுள்ள தொகையில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் அறிவுரைக்கேற்ப நாகூர் அருகே சுமார் 25 லட்ச ரூபாய் செலவில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ''பேரிடர் பாதுகாப்பு மையம்'' கட்டப்பட உள்ளதாகவும், மற்றுமொரு ஐந்து லட்சத்தில் காரைக்காலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர பயன்தரும் கட்டமைப்பை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் தமுமுக விரைவில் பயன்படுத்தும். மீதமுள்ள தொகையில் சுனாமியில் பாதிக்கப்பட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்களின் மனுக்களை பரிசீலித்து தேவையான உதவிகள் செய்யப் போவதாகவும் தமுமுக அறிவித்துள்ளது.

மேலும், 2004 மற்றும் 2005 ஆண்டுகளில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு தமுமுக சார்பில் வசூல் செய்து வினியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் (ஃபித்ரா) குறித்த நிதிநிலை அறிக்கையும் அக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

2004ஆம் வருடத்தில் 20,73,940 ரூபாய்க்கும், 2005ஆம் வருடத்தில் 27,69,762 ரூபாய்க்கும் ஃபித்ரா உதவிகள் வழங்கப்பட்டதற்கான விவரங்களையும் மக்கள் மன்றத்தில் சமர்பித்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பார்வையாளர்களாக பங்குகொண்ட தாவூத் மியாகான் மற்றும் கருப்பன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் தமுமுகவின் முன்மாதிரியை பின்பற்றி பொதுமக்களிடம் மற்ற அமைப்புகளும் கணக்குகளை சமர்பிக்க வேண்டும் என்று கூறினர்.

இந்நிகழ்ச்சிக்கு தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையேற்றார். பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக மாநிலச் செயலாளர் பி. அப்துர் ரஹீம் திருக்குர்ஆன் விரிவுரையுடன் கூடிய தொடக்கவுரையை நிகழ்த்தினார். மாநிலப் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் கணக்குகளை வாசிக்க, கணக்காளர் ஹாரூண் ரஷீத் அவற்றுக்கு உரிய ஆதாரத் தகவல்களை அளித்தார். மாநிலச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

அல்லாஹ்வின் மீது ஆணையாக...

தமுமுகவின் கணக்காளராக 1999 முதல் பணியாற்றி வருபவர் சகோதரர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத். எம்.காம். பட்டதாரியான இவர் கணிணியில் கணக்குகளை பராமரித்து வருகிறார். கணக்காளர் சகோ. ஹாரூண் அவர்கள் கணக்குகளை வாசிக்க முற்படுவதற்கு முன்பு ''அல்லாஹ்வின் மீது ஆணையாக... இதில் எந்த மோசடியும் நடக்கவில்லை'' என்று கூறியதும் பொதுமக்களோடு நின்றிருந்த தமுமுகலிவினர் கண்கலங்கி விட்டனர்.

உளவுத்துறையும் பார்வையாளர்களாக...!

மிலன் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கூடியபோது, நமது கணக்குகளை அறிய பத்திரிகையாளர்களோடு மத்திய மாநில அரசுகளின் உளவுப் பிரிவினரும் வந்திருந்தனர். நாம் பகிரங்கமாக கணக்கு காண்பிப்பதால் அவர்களும் அமர இடவசதி செய்து கொடுக்கப்பட்டது. அவர்களிடம் அனைத்து கணக்குகளின் நகல்களையும் தமுமுக தலைமையகம் ஒப்படைத்தது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தமுமுக மக்கள் மன்றத்தில் கணக்குகளை சமர்ப்பித்தது பற்றி பிரபலங்கள் பேசுகிறார்கள்...

திரு. சோலை (மூத்த பத்திரிகையாளர்)

தமுமுக - இஸ்லாமிய இளைஞர்களை பெருமளவில் பெற்றிருக்கின்ற இயக்கம். பலர் இதன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்திருக்கிறார்கள். அது நடக்கவில்லை என்றதும் நிதி விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்கள்.

அந்த களங்கத்தைத் துடைப்பதற்காக பொது இடத்தில் கூடி, மக்கள் முன்பாக அரசு அதிகாரிகளையும், பத்திரிக்கையாளர்களையும் அமர வைத்து கணக்குகளை காட்டியிருப்பது பெரிய விஷயம். இதோடு இதை முடிச்சிடுங்க. இனி சமுதாய நலனிலும், அரசியல் விவகாரங்களிலும் கவனம் செலுத்துங்க. தமுமுகவை உடைப்பது வகுப்புவாத சக்திகளோட திட்டம். அதுக்கு யாரும் துணைபோய் விடக்கூடாது.

திரு.கருப்பன் ஐ.ஏ.எஸ். (சிறப்பு பார்வையாளர்)

1970களில் புகழ்பெற்ற 'மஸ்டர் ரோல்' ஊழலை சென்னை மாநகராட்சியில் கண்டுபிடித்தவர் திரு.கருப்பன் ஐ.ஏ.எஸ். அவர்கள். நிகழ்ச்சியில் சிறப்புப் பார்வையாளராக பங்கேற்ற அவர் கூறுகையில், ''நான் காலையிலிருந்தே முழு நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறேன். உங்கள் மடியில் கனமில்லை, எனவே உங்களுக்கு பயமில்லை. இதுபோல் யாரும் துல்லியமாக கணக்குகளை காட்டுவதில்லை. அப்படி செய்தால் நமக்கு மகிழ்ச்சி''.

ஜனாப். தாவூத் மியாகான் (சிறப்பு பார்வையாளர்)

காயிதே மில்லத் கல்லூரி தாளாளரும், காயிதே மில்லத் அவர்களின் பேரனுமாகிய தாவூத் மியாகான் அவர்கள் கூறுகையில், ''ஆரம்பத்தில் இதற்கு ஏன் ஒத்துக் கொண்டீர்கள் என வருத்தப்பட்டேன். பின்னர் நியாயம் உள்ளவர்களிடம் இருக்க வேண்டிய ஆவேசம் என்பதால், அதை உணர்ந்து கொண்டேன். மிக நுணுக்கமாக வரவு செலவு கணக்குகளை வெளியிட்டீர்கள். அனைவரையும் அழைத்து கணக்குகளை சமர்பித்தது நான் அறிந்தவரை தமிழக வரலாற்றில் எந்த அமைப்பும் செயல்படுத்தியதில்லை. நீங்கள் வரலாற்றை படைத்திருக்கிறீர்கள். அனைத்து அமைப்புகளும் இதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். இதில் நடுவர் குழுவில் இடம்பெற்ற அமைப்புகளும் இதுபோல் கணக்குகளைக் காட்ட வேண்டும். இதுபோல் சிறப்புப் பார்வையாளர்களாக வருகை தந்த பலர் வித்தியாசமான இந்நிகழ்வை சிலாகித்து பாராட்டினர்.

மவ்லவி ஷம்சுத்தீன் காஸிமி (சென்னை மக்கா பள்ளி இமாம்)

கடினமான தன் எழுத்துப் பணிகளுக்கு நடுவே தமுமுக மக்கள் மன்றத்தில் கணக்குகளை ஒப்படைத்தது குறித்து கூறுகையில், ''நான் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. ஆயினும் தமுமுக பொதுமக்களுக்கு மத்தியில் கணக்குகளை சமர்பித்தது வரவேற்கத்தக்கது. எல்லா அமைப்புகளும் வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்று தங்களுக்கு நிதி வழங்கியவர்களிடம் கணக்குகள் சமர்ப்பிப்பதுதான் நல்ல நடைமுறையாக இருக்கும்.

ஷைக். இக்பால் மதனீ (இமாம், ஷார்ஜா தமிழ் பள்ளி - யூ.ஏ.இ)

எனக்கு அழைப்பு தந்திருந்தார்கள். நான் ஹதீஸ் தொகுப்பு பணியில் ஈடுபட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது. மற்றபடி நிகழ்ச்சிகளைக் கேட்டறிந்தேன். பழிகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். மக்களிடம் கணக்குகளை காட்டிவிட்டீர்கள். அதனால் நல்ல முன்மாதிரியை ஏற்படுத்தி விட்டீர்கள்.

கணக்கு காட்டுவதில் முந்திக் கொண்டது தமுமுக!

அவதூறு கிளப்பும் வரை ஏன் காத்திருந்தீர்கள் முன்பே சுனாமி கணக்குகளை வெளியிட்டிருக்க வேண்டியதுதானே என சிலர் கேட்கலாம்.

சுனாமி நிதி வசூல் செய்த எந்த அமைப்பும் நமக்குத் தெரிந்து 13.12.2005 வரை முழுமையாக கணக்கை வெளியிடவில்லை.

காரணம், வசூல் செய்த நிதியிலிருந்து ஒவ்வொரு அமைப்புகளும் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பணிகள் நிறைவடைந்தால்தான் கணக்குகளை வெளியிட முடியும். அனைத்து அரசு சாரா அமைப்புகளின் நிலையும் இதுதான்!

நாம் வசூலித்த நிதியிலிருந்து இதுவரை ஏறக்குறைய 50 சதவீதத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறோம். ஆனால், 10 சதவீதம் கூட செலவழிக்கவில்லை என்று தனது பிரசுரத்தில் பீ.ஜே. பொய் சொல்லியுள்ளார்.

நம் மீது அவதூறுகளைக் கிளப்பியவர்கள் 13.12.2005 வரை எந்தக் கணக்குகளையும் வெளியிடவில்லை என்பதையும் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

பிரசிடென்ட் ஹோட்டலில் நிகழ்ச்சியா?

நடுவர்(?) குழு 9ஆம் தேதி இரவு இருதரப்புக்கும் கொடுத்த கடிதத்தில், டிசம்பர் 10 அன்று அவர்கள் முடிவு செய்திருந்த பிரசிடென்ட் ஹோட்டலில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து என அறிவித்துவிட்டனர். அவர்களின் நடுவர் குழுவே நிகழ்ச்சியை ரத்து செய்ததாகக் கூறிவிட்ட நிலையில் எதிர்தரப்பினர் அதே தேதியில் அங்கு காத்திருந்ததாக சொல்லி வருகின்றனர். இது என்ன நாடகம்?

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

(குறிப்பு: தமுமுகவின் மீது களங்கம் கற்பிப்பதற்காக எடுத்துள்ள ஆயுதங்களில் ஒன்று 'சுனாமி நிதி கணக்கு'. மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தினாவட்டில் மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தப்படுவதை தடுக்க யுனிகோட் ஃபார்மேட்டில் முத்துப்பேட்டை வலைப்பூ இதை பதிவு செய்கிறது.)