Sunday, October 24, 2010

கிளீவேஜ் காட்டினால் 'ஃபைன்'!

கிளீவேஜ் காட்டினால் 'ஃபைன்'!


இத்தாலி-அபரிமிதமான கிளீவேஜ் காட்டி டிரஸ் அணிந்தால் அபராதம்

சோபியா லாரன், மோனிகா பெலுச்சி போன்ற கவர்ச்சி தாரகைகளைக் கொடுத்த இத்தாலியின் கேஸ்டல்மெரே டி ஸ்டேபியா என்ற சின்ன நகரில், கவர்ச்சிகரமான குட்டைப் பாவாடை அணிவது, அபரிமிதமான கிளிவேஜ் தெரியும்படியாக டிரஸ் போடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் செலுத்த வேண்டும்.

தடையை மீறி இதுபோல உடை அணிந்தால் 695 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேப்பிள் அருகே உள்ளது இந்த சின்ன நகரம். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், செக்ஸியான உடைகளுடன் பெண்கள் நடமாடுவதையும் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவாம்.


இது போல ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இந்த நகர நிர்வாகம் யோசித்து வருகிறதாம். மொத்தமாக 41 புதிய உடைக் கட்டு்பபாடுகளை அது தீட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நகர நிர்வாகம் கூறுகையில், ஆணோ, பெண்ணோ, நாகரீகமாக உடை அணிவது என்பதை விட மதிப்புக்குரிய வகையிலான உடைகளை அணிவது மிகவும் முக்கியம். இது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்று கூறியுள்ளது.


நகர மேயர் லூகி போபியோ கூறுகையில், இந்த நகரில் அநாகரீகம் பெருகி விடாமலும், செக்ஸ் தொடர்பான குற்றங்கள் பெருகி விடாமலும் தடுக்க கவர்ச்சிக்கு அணை போடுவது அவசியம் என்றார்.

இதுபோல பொது இடங்களான பூங்காக்கள், தோட்டங்கள் ஆகியவற்றில் கால்பந்து ஆடுவதையும் தடை செய்யப் போகிறார்களாம்.

இவ்வளவு கட்டுப்பாடு காட்டும் இத்தாலியில், அந்த நாட்டு பிரதமர் போடும் காமக் களியாட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.


Source: thatstamil