Saturday, March 29, 2008

ஹாதா இஃபுக்குன் முபீன்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

முஸ்லிம்கள் அதிகமாக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அவற்றில் பெண்கள் பற்றியோ அல்லது ஆண்கள் பற்றியோ கற்பு விஷயமாக அவதூறு பரப்பும் விஷயம் அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் கவனக் குறைவாகவே இருக்கிறார்கள்.

அவதூறு பரப்பும் விஷயத்தில் குறிப்பாக கற்பு விஷயத்தில் அவதூறு பரப்புவதில் மார்க்க அறிஞர்கள் அல்லது மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் முதல் பாமரன் வரை வழுக்கி விழக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இது தொடர்பாக குர்ஆன் ஹதீஸ் என்ன சொல்கிறது என்பதை அடுத்தடுத்து பார்ப்போம்.

'முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதனை கேள்வியுற்ற போது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, '(வகாலூ ஹாதா இஃபுக்குன் முபீன்) இது பகிரங்கமான வீண் பழியேயாகும்' என்று கூறியிருக்க வேண்டாமா?' (அல்குர்ஆன் 24:12)

இந்த வசனம், முஃமின்களின் தாயான ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சுமத்தப்பட்ட போது, அல்லாஹ் இறக்கிய வசனமாகும். இந்த வசனத்தில் நமக்கு தேவையான பாடம் இருக்கிறது.

பாலியல் தொடர்பான அவதூறு சுமத்தப்பட்டு, அவை மக்களிடையே உலா வரும் போது முஃமின்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த வசனம் மிகத்தெளிவாக சொல்கிறது.

முஃமின்களாகிய நாம், 'ஹாதா இஃபுக்குன் முபீன்' என்று கூறி அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்ள வேண்டுமாம்.

இந்த வசனம், நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயமாக இறக்கப்பட்ட வசனமாக இருந்தாலும், இது எல்லா முஃமின்களுக்கும் பொருந்தக் கூடிய வசனம் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இது, இன்னொரு விஷயத்தையும் நமக்குச் சொல்கிறது.

எவர் பாலியல் தொடர்பான விஷயத்தை நம்மிடம் கொண்டு வந்தாலும் உடனே இது, 'ஹாதா இஃபுக்குன் முபீன்' என்று கூறி அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த நபிமொழியை புகாரி 4750 என்ற எண்ணில் காணலாம்.

இப்போது விஷயத்துக்கு வருவோம், இந்த ஹதீஸ் ததஜவின் தலைவர் பிஜேக்கு தெரியுமோ அல்லது தெரியாதோ, அல்லது எழுதியன் ஏட்டைக் கெடுத்தால் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்ற பழமொழிக்கு சரியாக பொருந்தக் கூடியவரோ அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவரை எதிர்க்கக் கூடிய யாராக இருந்தாலும் அவர் மீது சுமத்தக்கூடிய முதல் குற்றச்சாட்டு மோசடி (குற்றச்சாட்டு) ஆகும். அதோடு சம்பந்தப்படுத்த முடியாதவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி அவரது நல்ல பெயருக்கு களங்கம் விளைவிப்பார்.

இப்படிப்பட்ட பீஜேக்கு மார்க்கம் சொல்லும் உபதேசம் தான் பாலியல் குற்றச்சாட்டை எவர் மீதும் அவ்வளவு சாதாரணமாக சுமத்தக் கூடாது என்பதாகும். அவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்த துணிந்தால் இவர் அநியாயக்காரர் என்பதை எல்லா முஃமின்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

யாரோ ஒருவர் மீது யாரோ ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்துவது ஒருபுறம் இருக்கட்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் வந்து தான் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டதாக சொல்லி தண்டனையை கோரி நிற்கிறார். முதல் தடவை அவர் முறையிடும் போதும், இரண்டாம் தடவை அவர் முறையிடும் போதும், மூன்றாம் தடவை அவர் முறையிடும் போதும் நபி (ஸல்) அவர்கள் தனது முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். அதன் பிறகு தான் அவருக்கு தண்டனை வழங்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்வதன் மூலம், இந்த மனிதர் இப்படிச் சொல்வதிலிருந்து சும்மா இருந்து விடக்கூடாதா? என்று நினைக்கிறார்கள். அடுத்து வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இங்கு என்ன நாடுகிறார்கள் என்பதை உமர் (ரலி) அவர்கள் தெளிவாகவே சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட விஷயங்கள் வெளியில் சொல்லப்படத்தக்க விஷயங்கள் அல்ல. அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கேட்டு விட்டு அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன். அவளுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறு செயல்களைச் செய்து விட்டேன். இதோ நான் (இங்கு தயாராக நிற்கிறேன்) என் விஷயத்தில் நீங்கள் நாடியதை நிறைவேற்றுங்கள்' என்று கூறினார்.

அவரிடம் உமர் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வே உனது குற்றத்தை மறைத்து விட்டிருக்க, நீ உன் குற்றத்தை மறைத்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். ஆனால் அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை.

பிறகு அந்த மனிதர் எழுந்து சென்று விட்டார். பின்னர் நபி (ஸல்) அவரை அழைத்து வர அவருக்குப் பின்னால் ஆளனுப்பினார்கள். அவரிடம், 'பகலின் இரு ஓரங்களிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்' (அல்குர்ஆன் 11:114) எனும் இந்த இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! இது இவருக்கு மட்டும் உரியதா? (அல்லது அனைவருக்குமா?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இல்லை, மக்கள் அனைவருக்கும் உரியது தான்' என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 5335)

இந்த ஹதீஸில் நமக்கு பாடம் இருக்கிறது.

பாலியல் தொடர்பாக அவதூறுகளை எவர் கொண்டு வந்தாலும் நீங்கள் முதல் நான் வரை இனிமேலாவது அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முஃமின்கள் மீது நல்லெண்ணம் கொண்டு இது பகிரங்கமான வீண் பழி என்பதை புரிந்து விலகிக் கொள்வோம். அல்லாஹ் நம் பாவங்கள் அனைத்தையும் அழித்து விட போதுமானவன்.

இன்னுமா புரியவில்லை! பாலியல் தொடர்பாக எந்த விஷயத்தை எவர் சொன்னாலும் அது உண்மையா? பொய்யா? என்று ஆராய்ந்து பார்க்க தேவையில்லை என்பது தான் எமது அறிவிப்பாகும்.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா
29.03.2008

Thursday, March 27, 2008

மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!

மூஸா முபாரக் அலி, சென்னை -1

கேள்வி: களவாடப்பட்ட பத்திரிகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் தமுமுகவினர் பதில் அளிக்க இயலவில்லை என்று ஒருவர் சொன்னதுடன், தனிப்பட்ட முறையில் தமுமுக தலைமையைப் பொதுக்கூட்டத்திலும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதனை அவர்கள் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பியுள்ளார்கள். தமுமுக ஏன் இன்னும் இதற்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதிக்கிறது.?

பதில்: பொதுக்கூட்டத்தில் மட்டும் அல்ல, தொலைக்காட்சியிலும் பகற்கொள்ளை அடிக்கப்பட்ட பத்திரிகையிலும் தாதா கலாச்சாரத்தைப் பின்பற்றும் அவர் தமுமுக மீது அவதூறுகளை சுமத்தித் தமுமுகவிற்கு நன்மை சேர்த்து வருகிறார். அவரது பேச்சையும் எழுத்தையும் இப்போதெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு மன நோயாளியின் முனகலாகவே அதனைப் பெரும்பாலும் மக்கள் கருதுகிறார்கள்.

3 மாதத்தில் தமுமுகவை அழித்துக் காட்டுவேன் என்று சபதம் செய்தவருக்கு இன்று தமுமுக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ஊர்களிலும், அனைத்து தரப்பினர் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து விட்டதைப் பார்த்துப் பொறுக்க இயலாமல் ஒரு மனநோயாளி போல் உளறிக் கொட்டுகிறார். பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட பணம், தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் திரட்டப்பட்ட பணம் இறைவன் கூறுவது போல் (திருக்குர்ஆன் 49:12) சொந்த சகோதரர்களின் மாமிசத்தை உண்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இறைவனிடம் வெகுமதி பெறும் நோக்கில் இந்தப் பேச்சு வியாபாரிக்கு நன்கொடை அளிக்கும் சகோதரர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், நன்மைக்குப் பதில் பாவச் சுமையை தூக்குவதற்கு உங்கள் பணம் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று தமுமுக நாம் குறிப்பிட்டது போல் அனைத்துத் தரப்பு மக்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து விட்டது. மக்கள் பல வகையில் தங்கள் பாதுகாப்பு பேரியக்கமான தமுமுகவிற்கு தங்கள் அன்பைக் காட்டி வருகின்றார்கள். பெரும் தொழில் அதிபர்கள் முதல் சாதாரண சாமானிய மக்கள் வரை தமுமுகவிற்குத் தங்கள் அன்பை, ஆதரவை நல்கி வருகின்றார்கள்.

நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசிடம் எடுத்து உரைத்து அதனை நாம் எவ்வித பிரதி உபகாரமுமின்றி நிறை வேற்றி வருகிறோம். நமது சமுதாயத்தைச் சேர்ந்த பல அரசு ஊழியர்களின் நியாயமான பிரச்சனையையும் எவ்வித பிரதி உபகாரமுமின்றி தீர்த்துவைத்து வருகிறோம். இவற்றில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. மனநோயாளி குறிப்பிட்டதுபோல் பரங்கிப்பேட்டையிலும் எந்தவொரு ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் ஒரு தலைசிறந்த மருத்துவர் இந்தச் சமுதாயம் பயன்பெறுவதற்காகப் பல்வேறு கல்வி நிறுவனங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தனது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் நடத்தி வருகிறார்.

தமுமுக தலைவர் 22 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற ஒரு கல்வியாளர். அதாவது அந்த மனநோயாளி பேச்சாளரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாத்தியார். ஆம் கண்ணியமான தொழில் என்று போற்றப்படுகின்ற கல்வியைப் பிறருக்குப் போதிக்கும் வாத்தியார் தொழில் செய்து வருபவர். ஏன் இந்த மனநோயாளி கூட ஒருகாலத்தில் வாத்தியாராக இருந்தவர் தான்.. தமுமுக தலைவர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளச் சென்றபோது தனது பள்ளிக்கூடம், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, செவிலியர் பள்ளி போன்றவற்றைப் பார்க்க வருமாறு ஆஸ்திரேலிய டாக்டர் அழைப்பு விடுத்தார். ஒரு கல்வியாளர் என்ற முறையில் தனது கல்வி நிலையங்களைப் பார்வையிடவும், ஆலோசனைகளைப் பெறவும் ஆஸ்திரேலிய டாக்டர் தமுமுக தலைவரை அழைத்திருந்தார். இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது கடலூர் மாவட்டத் தலைவர் ஜின்னாவிடம் இந்த அழைப்பை ஏற்கலாமா என்று ஆலோசனைக் கேட்டு அவர் ஒப்புதல் அளித்த பிறகுதான் தமுமுக தலைவர் அங்கு சென்றார். தமுமுக தலைவர் ரகசியமாக அங்கு செல்ல வில்லை. அவருடன் கடலூர் மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும் சென்றனர். பூட்டிய அறையில் மன நோயாளி பிரமுகர் உளறி வருவதுபோல் எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை. பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் தலைவர் யூனுஸ் உட்பட தமுமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் பேசினார்கள் விருந்து சாப்பிட்டார்கள். இதனைக் குற்றம் என்று சொல்பவரை மனநோயாளி என்றுதானே சொல்ல வேண்டும்.

வக்ஃப் நிலம் எதுவும் தாரை வார்க்கப் படவில்லை என்பதை வக்ஃப் ஆவணங்களே பதில் சொல்லும். பரங்கிப்பேட்டை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் தமுமுக தலைவர் அழைக்கப்பட்டுச் சென்று வருகிறார். மனநோயாளி பிரமுகர் வசதிக்காக அதனை இங்கே பட்டியலிடுகிறோம்.

கடந்த இரண்டு மாத இடைவெüயில் சென்னை புதுக்கல்லூரி நிர்வாகமும் ஆசிரியர் சங்கமும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமுமுக தலைவரை அழைத்தார்கள். தமுமுக தலைவர் சென்று வந்தார். பிறகு ஒரு நாள் ஆசிரியர் சங்கம் தனியாகத் தங்கள் சங்க மாடத்திற்கு அழைத்து தமுமுக தலைவருடன் நமது கல்லூரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துக் கலந்துரையாடினார்கள். அவருக்கு விருந்தும் அளித்தார்கள்.

குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1981 முதல் இயங்கி வரும் முஸ்லிம் கலைக் கல்லூரி நிர்வாகம் தமுமுக தலைவரை அழைத்து, கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதன் பிறகு தமுமுக தலைவருக்கும் குமரி மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கும் விருந்தும் அளித்தார்கள். இதன் பிறகு இக்கல்லூரி வளாகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பி.எட். கல்லூரியை தமுமுக தலைவர் தொடங்கி வைத்தார். திருவிதாங்கோடு இஸ்லாமிய மாதிரிப் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிக்கு தமுமுக தலைவரை அழைத்துச் சென்று தங்கள் நிறுவனத்தைப் பார்வையிட வைத்து ஆலோசனைகளைப் பெற்றனர். பிறகு அப்பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவில் தமுமுக தலைவர் உரையாற்றினார்.

சேலத்திற்கு சமீபத்தில் தமுமுக தலைவர் சென்றிருந்த போது கே.வி. ஹாஜியார், தான் நடத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்து தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தார், சேலத்தில் இயங்கும் தாருல்சலாம் பள்ளி நிர்வாகி கள் தமுமுக தலைவரைத் தங்கள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனைகளைப் பெற்றார்கள்.

மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி நிர்வாகமும் தமுமுக தலைவரை சீரத்துன் நபி சிறப்புரை ஆற்ற அழைத்தது. அப்போது அந்த கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நிறுவனமான பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் தமுமுக தலைவரிடம் கல்வி தொடர்பான பல ஆலோசனைகளைச் செய்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரி தமுமுக தலைவரை அழைத்து வட்டியில்லா வங்கி குறித்து வணிகவியல் துறை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில் கல்லூரியை சுற்றிக்காட்டிப் பல ஆலோசனைகளை அக்கல்லூரி நிர்வாகம் தமுமுக தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டது. தேநீர் விருந்து அளித்தார்கள். இதுமட்டுமின்றி அதே டிசம்பர் மாதம் வேலூரில் உள்ள புகழ்பெற்ற ஆக்சிலியம் கல்லூரியில் மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற நாடு தழுவிய கருத்தரங்கத்தில் இஸ்லாமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் தமுமுக தலைவர் உரையாற்றினார். வேலூர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் வந்தனர். அக்கல்லூரியிலும் தேநீர் விருந்து தமுமுக நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்டது.

விரைவில் இன்ஷாஅல்லாஹ் சென்னை பல்கலைக்கழகத்தில் வட்டியில்லா வங்கிகள் குறித்த தனது ஆய்விற்காக டாக்டர் பட்டம் பெறவுள்ள தமுமுக தலைவர் தன்னை வாத்தியார் என்று அழைத்துக் கொள்வதைச் சிறப்புக்குரிய தகுதியாகவே கருதுகிறார். எம்.பி.ஏ. படித்தவர்கள் வணிக நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வது இயல்பாக இருந்த காலக்கட்டத்தில் தானே விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழில் இந்த வாத்தியார் தொழில் என்பதை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள். அந்தத் தொழிலை இளக்காரமாக விமர்சிப்பது அவர்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் பொறாமையையும் வஞ்சக உணர்வையும் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

விருந்துக்கு அழைத்தால் செல்ல வேண்டும் என்பது தான் நபிவழி. யூதர்கள் அழைத்த விருந்திலும் நபிகள் நாயகம் (ஸல்) பங்குகொண்டார்கள். இதனைக் கொச்சைப்படுத்திப் பேசும் இவர்கள் உண்மையான தவ்ஹீத்வாதிகளா?

ஈரோட்டில் நமது சமுதாயத்தவர்கள் நடத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு அதிகார வர்க்கம் தேவையில்லாத தொல்லைகளை அளித்து வந்தனர். இதனை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரும் ஒரு உயர் அதிகாரியின் தலைமையில் இப்பிரச்சனையை ஆய்வுசெய்து நமது மக்களின் நலன் பாதுகாக்கப்பட வழிவகைச் செய்தார். எவ்வித பிரதி உபகாரமுமின்றி நாம் செய்த இந்த உதவியைக் குற்றம் என்று பேசுபவர் மனநோயாளியாகத் தானே இருக்க இயலும்.

இன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயற்பாடுகள் திறந்த புத்தகமாக ஆக்கப்பட்டுள்ளது. ஈ-கவர்னன்ஸ் என்று சொல்லப்படும் மின் நிர்வாக முறை தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் வக்ஃப் வாரியத்தில் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருகிறது. வக்ஃப் வாரியத்தின் நிலத்தின் ஒரு அடி கூட சட்டத்திற்கு புறம்பாகப் பயன்பட அனுமதிக்கப்படவில்லை. முந்தைய காலங்களைவிட தற்போது வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஜமாஅத் நிர்வாகிகளே சான்று வழங்குவார்கள். கடந்தகால நிர்வாகச் சீர்கேடுகளை யெல்லாம் சரிப்படுத்த ஓர் ஆண்டு காலம் பிடித்துள்ளது. இனி மேலும் சிறப்பாக வக்ப் வாரியம் இயங்க உள்ளது. இவ்வாறு வக்ப் நிர்வாகத்தில் சிறந்த முறையில் செல்வதைப் பார்த்து மனம்போன போக்கில் பேசினால் அதனைப் பைத்தியக்காரனின் முனகல் என்று தான் குறிப்பிட முடியும்.

தமுமுகவின் சமுதாயப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இரண்டு அவசர சிகிச்சை ஊர்திகளை அளித்தது போல் நமது சமுதாயப் பிரமுகர்களும் கார்களையும், ஏன் விமானங்களையும் கூடத் தமுமுகவிற்கு இன்ஷாஅல்லாஹ் வழங்குவார்கள். இதனைக் குற்றம் என்று பேசுபவரை மனநோயாளி என்றுதானே குறிப்பிட வேண்டும். தமுமுக பொதுச் செயலாளர் செய்துவரும் தொழிலையும் கொச்சைப்படுத்தியுள்ளார் அந்த மன நோயாளி. ஆனால் தமுமுக பொதுச் செயலாளர் ஹலாலான வியாபாரத்தை செய்துவருகிறார். ஆனால் மனநோயாளியோ, தான் மார்க்கத்தைக் காட்டி பிழைப்பு நடத்தவில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி கூற முடியுமா?

ஊர்தோறும் இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறோம் என்ற சாக்கில், தான் எழுதிய புத்தகங்களை - குர்ஆன் தமிழாக்கத்தை நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் அனைவருக்கும் இலவசமாகத் தருகிறேன் என நிகழ்ச்சி நடத்துபவர்களிடமும் - வெளிநாட்டில் உள்ளவர்களிடமும் கட்டாய வசூல் செய்து பணம் சம்பாதிப்பது - இதில் வேதனையானது என்னவெனில் பாதி புத்தகங்களை வினியோகித்துவிட்டு, மீதியை மீண்டும் கடைசரக்கு ஆக்குவது, தான் நடத்தும் அமைப்பின் சார்பாக வெளியிடப்படும் துண்டுப் பிரசுரம் முதல் எல்லாவகையான அச்சு வேலைகளையும் தனது மனைவியின் தம்பியிடம் மட்டுமே தந்து மைத்துனர்களுக்கும் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தொலைக்காட்சியில் முதலீடு செய்வதற்காக மக்கள் பணத்தைத் திரட்டி, போட்ட முதலை விட மும்மடங்கு அதிகத் தொகையை வெற்றி தொலைக் காட்சியின் அதிபர் தெய்வ முதல்வனை மிரட்டி உருட்டி வாங்கிக்கொண்டு முதலீடு செய்த ரசிகர் கூட்டத்திற்கு அற்பசொற்பத்தைக் கொடுத்து ஏமாற்றிய நூதன ஏமாற்றுக் காரர்களின் சிதம்பர ரகசியம் இன்னும் பல உண்டு.

இந்த அளவிற்கு அந்த அப்நார்மல் மனிதனின் உளறல்களுக்கு பதிலளிக்க பக்கத்தை வீணாக்கியதற்காக வருந்து கிறோம். எனவே அந்த அப்நார்மல் மனிதர் நம்மை ஏசினால், நாம் மக்கள் உள்ளத்தில் அதிகமாக இடம்பிடித்து விட்டோம் என்று பொருள். அதேசமயம் அவர் மவுனமாக இருந்துவிட்டாலோ நாம் பலவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தம்.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Tuesday, March 18, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 25

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே உமர் பாயா. என்ன ஒரேயடியா காணாமல் போயிட்டீங்க.

என்ன. . . அதுக்காக ஆள் கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனுவா போடப் போறீங்க.

ஆஹா அப்புடியெல்லாம் பாப்புலாரிட்டி தேடலாம்ங்கிற திட்டம்லாம் இருக்கோ. ஆமா நீங்க தான் நம்ம தலவரு பீஜே செய்யுறத அப்படியே செய்யுற ஆளாச்சே.

சே. என்ன அஹமது என்னயும் அந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே. நம்ம தலவரு பீஜே தான் அரசியல்வாதியா உருவெடுத்துகிட்டு வர்றாரு. அதுனால எதுல எப்புடி வெளம்பரப்படுத்துறதுன்னு உக்காந்து யோசிப்பாரோ என்னவோ. ஆனா இந்த கோர்ட் ஆளுங்களுக்கு எப்புடியோ அது வெளங்கிப் போனதுனால, ததஜ போட்ட கேஸு விளம்பரத்துக்காக போட்டதுன்னு கண்டுபுடிச்சு அபராதம் போட்டுட்டாங்க.

அந்த அபராதத்த கட்ட மாட்டோம். சுப்ரீம் கோர்ட்டுக்குப் போவோம்னுல பீஜே பேசியிருக்காரு.

ஹா. . .ஹா. . .ஹா. . . இவ்வளவுக்குப் பெறகும் நீங்க அவரு சொல்றத நம்புறீங்களா. பாவம். அஹமது நீங்க.

அதுவும் சரிதான் ஒமர்பாய். இப்புடி டிவில சொல்லிட்டு சத்தமில்லாம போயி கோர்ட்ல அபராதத்த கட்டிட்டு வந்துருவாரு தான். சரி அத வுடுங்க.

ஒரு வழியா வக்ஃப் வாரிய கட்டடம் தெறந்துட்டாங்க போல.

உண்மையிலேயே சந்தோஷம் தான் ஒமர் பாய். கோடிக்கணக்குல சொத்து உள்ள வக்ஃப் வாரியம் தன்னோட செயல்பாடுகளுக்காக இன்னொரு எடத்துல வாடக குடுத்துக்கிட்டு இருந்ததே ஒரு அவமானம் தான். பரவாயில்ல இந்த தமுமுகவால சமுதாயத்துக்கு கெடச்ச இன்னொரு பெரும இது.

ஆமாங்க அஹமது. வக்ஃப் எடத்த அனுபவிக்கிறவனெல்லாம் குறஞ்ச வாடகய குடுத்துக்கிட்டு இருக்கும் போது, சொந்த எடம் இருந்தும் ஒழுங்கான பராமரிப்பு இல்லாததுனால அதுல கட்டிடம் கட்ட வழியில்லாம வாடக இடத்துல இருக்க வேண்டியதாப் போச்சு. ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார கும்பல்கிட்ட இருந்து அந்த எடத்த வக்ஃப் வாரியம் கையகப்படுத்தவே தமுமுக தான் தொன செஞ்சுச்சு. அதுக்கு பலனா இப்போ தமுமுக பொதுச்செயலாளர் பேரு கல்வெட்டுல வக்ஃப் கட்டடத்துல பதிஞ்சு போச்சு போங்க.

தமுமுக பொதுச் செயலாளரோட பேரு கல்வெட்டுல பதிஞ்சா, தமுமுகவோட பேரு அரசாங்க கெஸட்லயே பதிவாகிப்போச்சே.

ஆமாங்க அஹமது. நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துனப்போ தமிழக மக்கள் மனசுல பதிஞ்சது. அந்த இடஒதுக்கீட முழுமையா பெறணும் அதுவும் பாதுகாப்பா பெறணும்னு பல அறிவுப்பூர்வமான நடவடிக்கைல எறங்குனதுனால இப்போ அரசாங்க கெஸட்லயும் தமுமுக தன்னோட பேர பதிவு பண்ணிடுச்சு போங்க.

சரியாச் சொன்னீங்க ஒமர் பாய். முஸ்லிம்களோட எட ஒதுக்கீட்டுக்காக ஆரம்பத்துல இருந்தே தீவிரமா முயற்சி பண்ணுனதெல்லாம் தமுமுக தான். அந்த கிரடிட் தமுமுகவுக்கு போயிடக் கூடாதுன்னு தான் நம்ம தலவரு பீஜே என்னென்னமோ செஞ்சு பாத்தாரு. கடசியில இந்த இடஒதுக்கீடு விஷயத்துல அவரோடது எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டண்ட்தான்னு கோர்ட் சொல்லிடுச்சு போங்க.

ஆமா அஹமது. எட ஒதுக்கீடு அறிவிப்பு வந்தப்போ, அளுது வடிஞ்சு மூலைல மொடங்கி கெடந்தாரு. தமுமுக தலைவர்கள் தமிழக முதல்வர சந்திச்ச உடனே முளிச்சுக்கிட்டு, ததஜவால தான் இடஒதுக்கீடு கெடச்சதுன்னு அறிக்க வுட்டாரு.

அதுவும் கனிமொழிகிட்ட குடுத்த மனுவால இடஒதுக்கீடு கெடச்சுதுன்னு சொன்னாரு.

ஆமா. அதுமாதிரி இப்பவும் ஒரு கத வுட்டு இருக்காரு பாருங்க. அதுதான் இந்த ஸீஸன் ஜோக்.

அட, எட ஒதுக்கீடு வெஷயத்துல கோர்ட் குட்டுன குட்டுல அதப்பத்தி இனி பேசவே மாட்டாருன்னுல நெனச்சேன். இப்ப என்னத்த சொன்னாரு.

அதுதான் அஹமது அவரோட டெக்னிக். உள்ளூர் சப்போர்ட் இல்லன்னாலும், வெளிநாட்டுல செல பேரு இவரு மொகத்த டிவில மட்டும் பாத்துட்டு, வேற சேனல் கெடைக்காம விண்டிவிய மட்டும் பாத்துக்கிட்டு கெடக்குறாங்கள்ல, அவுங்களயாவது தக்க வச்சுக்கலாமேன்னு, கடந்த வாரம் அனைத்து கட்சி கூட்டம் முடிஞ்சு கருணாநிதி குடுத்த அரசு அறிக்கைல பாதிய வாசிச்சு காட்டி அவரால் தான் இது சாத்தியமாச்சுன்னு கத வுட்டிருக்காரு.

ஸ்டாப். ஸ்டாப். ஒமர் பாய், கொஞ்சம் வெளக்கமா புரியுறா மாதிரி சொல்லுங்க.

அதாவது அஹமது போன வாரம் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு விஷயமா கோட்டைல அனைத்து கட்சி கூட்டம் நடந்துச்சு தெரியுமா.

ஓ! அதுதான் தெரியுமே.

அதுல டாக்டரு கிருஷ்ணசாமி கோவிச்சுக்கிட்டு வெளியே போனாரே தெரியுமா.

ஓ! அதுதான் தெரியுமே.

அப்போ வெளக்கம் சொன்ன முதலமைச்சர் கலைஞரு, இதுமாதிரி நல்ல நோக்கத்தோட நாம போடுற திட்டங்கள் சில அதிகாரிகளால முறையா நடைமுறைப்படுத்தப்படாம போறதுனால பயனாளிகளும் பாதிக்கப்படுறாங்க. அரசாங்கத்துக்கும் கெட்ட பேரு வருதுன்னு சொன்னாரே அது தெரியுமா?

ஓ! அதுதான் தெரியுமே. அதோட சேர்த்து இங்க இருக்குற ஹைதர் அலி முஸ்லிம்கள் தனி இடஒதுக்கீட்டுலயும் அது மாதிரி பாதிப்புகள் ஏற்பட்டிருக்குன்னு சொன்னது மாத்திரமல்ல, இரண்டு நாளுக்கு முன்னால, தமுமுக தலைவர்கள் என்ன வீட்ல சந்திச்சப்பவும் இதச் சொன்னாங்க. இந்த அரசு நிச்சயமாக அதனை சரி செய்யும்கிற உத்திரவாதத்த குடுத்திருக்கேன்னும் சொன்னாரே. அதுவும் தெரியுமே.

எல்லாஞ் சரி. இந்த மேட்டர நம்ம தலைவரு பிஜே. டிவில எப்புடி சொன்னாருன்னு தெரியுமா.

அதுதானே தெரியாது.

அதத்தான் சொல்லப் போறேன். கவனமா கேளுங்க. இந்த அறிக்க பத்திரிக்கைல வந்ததோட தமுமுக ஸைட்லயும் போட்டிருந்தாங்க. ஆனா பத்திரிக்கைகலாம் இரண்டு நாள் களிச்சுத்தான அரபு தேசத்துக்குப் போவும். தவிர தமுமுக ஸைட்ட நம்மாளு எவன் பாக்கப் போறாங்குற நெனப்புல அவுத்து வுட்டாரு பாருங்க.

இதுதான் ஒமர் பாய் ஒங்கள்ட்ட புடிக்காத வெஷயம். ஒண்ணு ஷார்ட்டா சொல்லுவீங்க. இல்லன்னா இழுத்தடிப்பீங்க.

கோச்சுக்காதீங்க அஹமது. நீங்க பத்திரிக்கைல படிச்சீங்களே அந்த அறிக்கய மடிச்சு வச்சுக்கிட்டு அதுல கருணாநிதி குடுத்த உறுதிமொழிய மட்டும் வாசிச்சு, பாத்தீங்களா ததஜ போயி, முதல்வரோட செயலாளர் சண்முக சுந்தரத்துகிட்ட மனு குடுத்துட்டு வந்ததுனால தான் கலைஞரு புரிஞ்சுகிட்டு இப்புடி அறிக்க குடுத்துருக்காரு. அதுனால ததஜ தான் இந்த மாற்றத்த கொண்டு வந்துச்சு. தமுமுக காரனுவ வாரியத்த வாங்கி கிட்டு வீரியமில்லாம போயிட்டானுவ – அப்புடீன்னு அடிச்சு உட்டாரு பாருங்க.

அடச்சே, இந்த மனுசனுக்கு ஏன் இப்புடி புத்தி பெரண்டு போச்சோ தெரியலியே. எப்புடி இருந்த இவரு இப்புடி ஆயிப்போயிட்டாரேன்னு வருத்தப்படுற அளவுக்குல ஆகிப்போச்சு.

ஆமா போங்க. அவரு டிவி ஸ்டூடியோவுல மைக்க புடிச்சுகிட்டு உக்காந்துக்குவாராம். இவரோட எடுபுடிகள அனுப்பிச்சு முதல்வரோட மகள்ட்டயோ, செயலாளர்ட்டயோ ஒரு கடுதாசு குடுப்பாராம். உடனே முதல்வரு அத வாங்கி படிச்சுட்டு அடடா பெரியார், அண்ணாவுக்கு பொறவு நாம மதிக்கப்பட வேண்டியவர்ட்ட இருந்து ஓல வந்துருக்கு. உடனே அதச் செஞ்சுடணும்னு ஆக்ஷன் எடுப்பாராம். எப்புடி இருக்கு கதன்னு கேட்டீங்களா!

ஒமர் பாய். அதுதான் தமிழ்ல்ல ஒரு பழமொழி இருக்கே. கேக்குறவன் கேனையனா இருந்தா, கேப்பைல நெய் வடியுதுன்னு சொல்றவன் இருக்கத்தான் செய்வான்.

அடுத்தவன் செய்யுற நல்லதயெல்லாம் (மைக்க) புடிச்சுக்கிட்டு மூலைல கெடக்குற ஒருத்தன், தான் தான் எல்லாத்தையும் செஞ்சேன்னு சொல்றதே ஒரு பித்தலாட்டம். அதுக்கு மேல தமுமுக ஒண்ணுமே செய்யல, வாரியத்துக்காக அரசாங்கத்த முட்டு கொடுத்து பேசுறாங்கன்னு பேசுறது அயோக்கியத்தனம்.

ஆவேசப்படாதீங்க ஒமர் பாய். 2004 லயிருந்தே அயோக்கியத்தனத்தையும் பித்தலாட்டத்தையும் நம்பித்தானே நம்ம தலைவரு பிஜே கட்சி நடத்திகிட்டு வர்றாரு. அவரோட பித்தலாட்டங்கள இனங்கண்டு பழய ஆளுங்கள்லாம் கழண்டுகிட்டாங்க. இப்போ கெடச்சுருக்கிர ரசிகர் கூட்டத்துக்கு ஒண்ணும் தெரியாதுங்குற நம்பிக்கைல தான் அடிச்சு வுட்டுகிட்டு இருக்காரு.

சரியாச் சொன்னீங்க அஹமது. நாங் கொஞ்ச நேரம் முன்னாடி சொன்ன மாதிரி இப்பல்லாம் ரசிகர்களோட ஆதரவுல தான் இப்போ கட்சி ஓடிக்கிட்டிருக்கு. இந்த வார பத்திரிக்கைல கூடப் பாத்திருப்பீங்களே, ஜித்தாவுல இருந்து ஒரு ரசிகர் எளுதுன கடிதத்துல கூட, தமுமுக டிவி நிகழ்ச்சில மார்க்கம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் குறைவு. உங்க நிகழ்ச்சி தான் நிறைவா இருக்குன்னு எளுதியிருக்காரு பாத்தீங்களா.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாக்கர வச்சு மார்க்க நிகழ்ச்சி நடத்துற கொடுமைய கண்டதுல இருந்து விண் டிவி ப்ரகிராம பாக்குறத நிறுத்திட்டேன். இப்புடி குண்டக்க மண்டக்க பொய்யயும், அவதூறயும் எளுதுறதுனால உணர்வு பத்திரிக்கை படிக்கிறதயும் நிறுத்திட்டேன். நீங்க வந்து சொன்னாத்தான் எனக்கு இந்த கூத்தெல்லாம் தெரியுது.

இந்த ரசிகர் புதுசா சேர்ந்திருப்பார் போல. இவர மாதிரியே இன்னும் பல புதிய ரசிகர்களை ஈர்க்குற மாதிரி பீஜே டிவில பேசணும்னு வேற எளுதியிருக்காரு. அதவிட பெரிய கூத்து என்ன தெரியுமா?

சொல்லுங்க கேட்போம்.

அதாவது, நீங்க உணர்வு படிக்கிறத நிறுத்துனா மாதிரி, பலபேரு பல பகுதிகள்ல நிறுத்திட்டாங்க. அதுனால பனைக்குளத்திலிருந்து ஒருத்தரு எளுதுன கடிதத்த இந்த வாரம் போட்டிருக்காங்க. ஆனா அது வேற காமெடி டிராக்காப் போச்சு.

அப்புடி என்ன எளுதியிருக்காரு ஒமர் பாய்.

தவ்ஹீத்வாதிகள் உணர்வு பத்திரிக்கைய புறக்கணிச்சுட்டாங்கங்குற விஷயத்த தெளிவா போட்டு ஒடச்சிருக்காரு.

இதுல என்ன காமெடி கண்டீங்க ஒமர் பாய். ஒருவேள எப்புடி இந்த உண்மய வெளியிட்டாங்கன்னு வேண்ணா ஆச்சரியப்படலாம்.

கரெக்ட் தான். ஆனா, அந்த கடிதத்துல, அந்த வாசகர் என்னா எளுதியிருக்காருன்னா.. .. உணர்வு பத்திரிக்க இப்போ கடும் பொருளாதார நெருக்கடியில இருக்கு. அதுனால லட்சக்கணக்குல இருக்குற ததஜ ஆளுங்க சந்தா அனுப்புனாங்கன்னா, அது கோடி கணக்குல வரும். பெறகு அத வச்சு ஆம்புலன்ஸ் சேவை, மாநில மாநாடு, மாவட்ட மாநாடுன்னு ஏகப்பட்ட வேலைகளைச் செய்யலாமேன்னு எளுதியிருக்காரு பாருங்க அதுதான் ஹைலைட் காமெடி.

அடடா.. .. என்னங்க இவரு, இவரு சொல்றத கேட்டு யாராவது சந்தா அனுப்சா கூட ஒருத்தனுக்கும் பத்திரிக்கை வந்து சேராது போல இருக்கே. சந்தா தொகைலாம் ஆம்புலன்ஸுக்கும், மாநில, மாவட்ட மாநாட்டுக்கும் போயிடுச்சுன்னா எப்புடி பத்திரிக்கையோட பொருளாதார நெருக்கடி தீரும். காசு குடுத்தவனுக்கு எப்புடி பத்திரிக்கை போயி சேரும். கேக்கவே தல சுத்துதே.

இதுதான். இதத்தான் காமெடின்னு சொன்னேன். சரியாச் சொல்றதா இருந்தா டிராஜிக் காமெடி. பாத்துகிட்டீங்களா, இதுதான் இன்னைக்கி இருக்குற ததஜ அடிவருடி அறிவாளிகளோட நலம. மொதலாவது உணர்வு பத்திரிக்க பொருளாதார நெருக்கடில இருக்குதுன்ன சொல்றதா இருந்தா அவரு ஒரு நிர்வாகியாத்தான் இருக்கணும். சாதாரண வாசகனுக்கு பொருளாதார நெருக்கடிலாம் தெரிஞ்சுருக்க சான்ஸே இல்ல. அப்டீன்னா, யாரோ ஒரு நிர்வாகி, சாதாரண வாசகன் எளுதுறமாதிரி எளுதிப் பிரிண்ட் போட்டு சந்தா சேர்க்க டிரை பண்ணி இருக்காருன்னு தான் அர்த்தம்.

இதுல என்ன வித்தியாசத்த கண்டீங்க ஒமர் பாய். தனக்கு வருமானம் வரணும்கிறதுக்காக பீஜே தான் என்ன வேணும்னாலும் செய்வாரே, மறந்துட்டீங்களா. தர்ஜுமா சேல்ஸ் கம்மியானவுடனேயே அடுக்கு மொழி நடிகர் டி.ராஜேந்திரன கூட்டிட்டு வந்து ஜும்மா பண்ற மேடைல ஏத்தி விரல சொடுக்கி பாட்டுப்பாட வச்சு தாஜுமாவ விளம்பரப்படுத்துனாரே நியாபகம் இல்லியா.

அடடே.. .. பரவாயில்லையே. நீங்க நியாபகம் வச்சிருக்கீங்களே அஹமது. ஆனா இப்புடி யோசிக்கிறவங்க கொறவா இருக்குற தைரியத்துல, தமுமுக காரங்க பண்றத விமரிசிச்சு பொழுத களிச்சிக்கிட்டு இருக்காரு இந்த பிஜே.

எது? அஜித் நற்பணி மன்றம் சார்பா நடந்த கபடிப்போட்டி விவகாரத்தத்தானே சொல்றீங்க.

அதுதான் முடிஞ்சு போச்சே. அஜித் பேர்ல உள்ள நற்பணி மன்றம் ஒரு வெளயாட்டுப் போட்டி நடத்துனா அதுக்கு ஆதரவு தெரிவிச்சது ஒண்ணும் தவறிலலைன்னு நம்மாளுங்களே பேசுனாங்களே. இது வேற.

அது என்ன புதுசா?

இது சம்பவம் நடந்த பாலசமுத்திரம் மக்களுக்கே கூட தெரியாத ஒரு செய்தி. அத இரண்டு மாசம் களிச்சு தோண்டி எடுத்து போட்டிருக்காரு.

மேட்டரு என்னன்னு சொல்லவேயில்லியே.

அதாவது அஹமது. திண்டுக்கல் பக்கத்துல பாலசமுத்திரம்கிற ஊர்ல தமுமுகவோட புது கௌ இருக்கு. அதுல புதுசா நிர்வாகிகளா தேர்வான செல பேரு பளய பளக்கத்துல கந்தூரி விழா போஸ்ட்டர அடிச்சிருக்காங்க. இது தெரிஞ்ச உடன மாவட்ட நிர்வாகிகள் ஒடிப்போயி, 'யப்பா ராசா, நீ தமுமுகவுல இருக்கணும்னா இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு மாத்தமா நடக்கக் கூடாதுப்பா. கந்தூரிங்கிறது இஸ்லாத்துக்கு விரோதமான செயல்'னு சொன்னவுடன, ஒட்டுன போஸ்டர எல்லாம் கிளிச்சு எறிஞ்சுட்டாங்க.

இதுல கூப்பாடு போடுறதுக்கு என்னங்க இருக்கு ஒமர் பாய். நல்ல வெஷயம் தானே நடந்திருக்கு. குராஃபத்துல இருந்தவன தமுமுக நிர்வாகியாக்கி, இஸ்லாத்த கத்துக் குடுத்து தவ்ஹீத்வாதியாவுல மாத்தியிருக்காங்க.

அதான், இப்புடி யோசிக்கிறவங்க ததஜவ்ல கம்மிங்கிறதுனால தான், ஜனவரில நடந்த ஒரு வெஷயத்த, இப்போ மார்ச்ல கொண்டு வந்து கொட்டுறாரு.

சரி வுடுங்க ஒமர் பாய். மே மாச திருவிழா பத்தி ஒரு நியூசும் நீங்க சொல்லலியே.

அடடே பாத்தீங்களா அஹமது. நா மறந்தே போயிட்டேன். மே மாச திருவிழா விஷயமா நீங்க டிவில பாத்திருப்பீங்க தானே.

ஹலோ.. ..நாந்தான் அப்பவே சொல்லிட்டேனே. என்னிக்கி இந்த பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாக்கர கொண்டு வந்து இஸ்லாமிய பிரச்சாரம் பண்ண வச்சாங்களோ, அன்னியிலிருந்து நான் ததஜ புரகிராம பாக்குறதயே உட்டுட்டேனே.

அப்படீன்னா நீங்க பாக்காதது கூட நல்லது தான்.

வெவரமா சொல்லுங்க ஒமர் பாய்.

சொல்றேன். சொல்றேன். அதாவது அஹமது மே மாச நடத்த இருக்குற மாநாட்டுக்கு பலவழிகள்ல்ல எப்புடியாச்சும் ஆள் திரட்டி காட்டணும்னு ரொம்ப மெனக்கெடுறாங்க. தமுமுக மாதிரி கொறச்ச கால அவகாசத்துல, நாம கூப்ட உடனே மக்கள் வரமாட்டாங்கன்னு நல்லா தெரிஞ்சு போச்சு. அதுனால ஆறு மாசத்துக்கு முன்னால இருந்தே ஆள் புடிக்க அலையுறாங்க.

இதுக்கும் நான் டிவி பாக்காததுக்கும் என்னங்க சம்பந்தம்.

இருங்க சொல்றேன். ஆள் படிக்கிறதுல ஒரு வகையா, தெனிக்கும் டிவியில மாநாட்டு செய்திகள்னு அதுல என்னன்ன மாதிரி செய்யப்போறோம்னு படம் காட்டிக்கிட்டு வர்றாங்க.

அதாவது தயாரிச்சுக்கிட்டு இருக்கிற சினிமாவ பத்தி டிவில டிரைலர் போடுவாங்களே அது மாதிரியா?

சரியாச் சொன்னீங்க. கிட்டத்தட்ட அது மாதிரி தான். ஆனா அதுல காட்டுன உச்ச கட்ட காமெடி என்னன்னா.. .. இடைல ஒரு நாளு பாக்கரு வந்து பிஜே கூட வீடியோ காண்பரன்ஸ்ல பேசினாரு பாருங்க, அதுதான் உச்சகட்ட காமெடி.

நல்லது. நான் பாக்காம இருந்தது கூட நல்லதுக்கு தான். ரதி மீனா பஸ் சம்பவத்துக்குப் பெறகு எல்லாமே காமெடியாத்தான் போச்சு. ஆமா ஒரு சந்தேகம். பாக்கரும் பிஜேவும் ஒண்ணா உக்காந்துகிட்டு தானே பேசிக்கிட்டு இருப்பாங்க. அப்ப எப்புடி வீடியோ காண்பரன்ஸ்?

ஓ.. .. உங்களுக்கு வெஷயமே தெரியாதோ. பாக்கரு இப்போ மாநாட்டு வசூலுக்காக கல்ஃப் டூர்ல இருக்காருல்ல. அதுல துபாய்ல இருந்தோ, குவைத்ல இருந்தோ பேசியிருப்பாரு போல.

துபாய் கத்தாருக்குலாம் நம்ம தலைவரு பிஜே போக முடியாதுங்கிறதுனால இவரு போயிருப்பாரு போல. சரி வெஷயத்துக்கு வாங்க.

வசூலுக்கு போன எடத்துல உள்ளவங்களயும் இம்ப்ரஸ் பண்ணனும், இத டிவி வழியா பாக்குற அத்தன பேரையும் முட்டாளாக்கணும்கிற எண்ணமோ, என்னவோ தெரியல மாநாட்டு வசூல் சம்பந்தமா ஒரு டிராமாவே நடத்தயிருக்காங்க போங்க.
அதாவது, அந்த டெலி காண்பரன்ஸ் மூலமா பாக்கரு பிஜேகிட்ட சொல்றாரு.. .. அண்ணே மாநாட்டுக்காக நம்ம நிர்வாகிகள் மட்டத்துல பேசும் போது சொன்னீங்களே அண்ணே.. .. இந்த மாநாட்டுக்காக நாம நம்மள்ட்ட இருக்குற முழு சக்தியையும் செலவழிச்சு மத்தவங்களுக்கு உதாரணமா இருக்கணும்னு சொன்னீங்களே அண்ணே.. .. சொன்னதோட இல்லாம உங்க சக்திக்கும் மீறி ரூபாய் 10,000 த்த குடுத்து வசூலை ஆரம்புச்சு வைச்சீங்களே அண்ணே.. .. அதே மாதிரி தாண்ணே இங்க இருக்குற சகோதரர்கள் ஒரு மாச சம்பளத்த கூட தர்றதுக்கு ரெடியா இருக்காங்கண்ணே.. .. ..அப்புடி இப்புடின்னு பேசியிருக்காரு.

சே.. .. .. இப்புடிலாம் நடிக்கணுமா. ஆக மொத்தம் உச்சகட்ட வசூலா இது இருக்கணும்னு முடிவெடித்துட்டாங்க போல. தொக கணிசமானதா இருந்தாத்தான் பிரிச்சுக்க வசதியாயிருக்கும்னு நெனச்சாங்க போல. போன தடவ கும்பமேளாவுக்கு போயஸ் தோட்டத்துல இருந்து மேமிச்சமா மிஞ்சி கெடச்சுச்சு. இப்போ அதுக்கு வழியில்லாததுனால கொஞ்ச நெஞ்சம் மிஞ்சி இருக்கிற ரசிகர்கள்ட்ட இருந்து உறிஞ்சி எடுத்துறணும்னு தீர்மானம் போட்டுட்டாங்க போல. போன தடவ நம்மளயெல்லாம் சமுதாயத்தின் பேர்ல கூட்டிட்டு போயிட்டு ஜெயலலிதா முன்னால நின்னப்ப, கோனிகா பஷீருக்கு சீட்டு கேட்கத்தான் கும்பமேளா நடத்துனோம்னு சொன்னாரு. இப்போ கூடுற கூட்டத்த வச்சு என்ன பண்ண காத்திருக்காரோ தெரியலியே.. .. ..

பொறுத்திருந்து பார்ப்போம். அப்போ நான் வர்றேன். வஸ்ஸலாம்

முல்லா 18.03.2008

Saturday, March 15, 2008

முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு முழுமையாக வேண்டும்

செ.வெ.எண்.194
நாள்.12.3.2008


அருந்ததியர் வகுப்பினருக்குத் தனி உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 12.3.2008 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானமும் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய நிறைவுரையும்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் இவ்வளவு நேரம் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று அரிய கருத்துக்களையெல்லாம் வழங்கியமைக்காக – ஒரு புரட்சிகரமான முடிவை அரசின் சார்பில் நாமனைவரும் சேர்ந்தெடுத்தோம் என்ற நிலையை உருவாக்கி உதவியமைக்காக – என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரேயொரு கட்சியின் (அ.தி.மு.க) முடிவு மாத்திரம் - ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அதுவும் ஒத்துப் போகக் கூடிய முடிவாகத் தான் இருக்கும் - எனவே இந்த அருமையான – அமைதியாக நடைபெற்ற உணர்ச்சி மயமாக நடைபெற்ற – அடித்தட்டு மக்களுக்காக ஒரு விடிவு காலத்தை உருவாக்கக் கூடிய நல்ல எண்ணத்தோடு கருத்துக்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு இடையில் ஒரு சில விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டாலுங்கூட – நான் அதற்காக உங்களோடு சேர்ந்து வருத்தப்படுகிறேன் - உங்கள் சார்பாக என் வருத்தத்தை நான் வெளியிடவும் விரும்புகிறேன்.

இங்கிருந்து வெளிநடப்பு செய்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், இந்தக் கூட்டமே தன்னுடைய இஷ்டத்திற்கு விரோதமானது என்ற தன்னுடைய நிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் முதலிலே, தம்பி டி.ராஜேந்தர் பேசும் போதே கூட கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் என்ன சொன்னார் என்பதை குறுக்கிட்டுச் சொன்னேன். அதை விட அதிகமான கருத்துக்களைத் தான் இந்தக் கூட்டத்தின் நோக்கத்திற்கு விரோதமாக அவர் வெளியிட்டிருக்கிறார் என்றால் - இது தான் தாழ்த்தப்பட்ட மக்களுடைய தலையெழுத்து என்ற வைதீக பாஷையிலே சொல்ல வேண்டும். அவர்களுக்காக வாதாட வேண்டிய ஒருவர் - அவர்களுக்கு விரோதமான கருத்துக்களை இங்கே வெளியிட்டு, நம்மையெல்லாம் இங்கே அமர்ந்து அரிய யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நம்மையெல்லாம் குற்றவாளிகளாக ஆக்கி விட்டு, சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறிய இரண்டு வரிகளை மட்டும் முதலில் படித்தேன். அதன் விபரம்

- 'தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்குவது என்ற கருத்து ஏற்றுக் கொள்ள இயலாது. ஆந்திராவைப் போல பிரச்சினை ஏற்படும். அப்படி ஒதுக்கினால் எல்லா ஜாதியினருக்கும் ஒதுக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக தாழ்த்தப்பட்ட மக்களின் ஒதுக்கீட்டில் கை வைக்கக்கூடாது. இந்தக் கூட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டை தட்டிப் பறிக்கும் செயலாகும். ஏற்கனவே, எஸ்.சி.க்கு என்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது அமல்படுத்தப்படவில்லை. இந்தக் கூட்டம் ஒரு திசை திருப்பும் கூட்டமாகும். இதுவரை ஏற்பட்டுள்ள 'பேக்லாக் வேகன்சி'யை இதுவரை 'கிளியர்'செய்யவில்லை' என்று குற்றஞ்சாட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

இது நூற்றுக்கு நூறு உண்மையல்ல. நாம் நல்ல எண்ணத்தில் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதை நடைமுறைப்படுத்துகின்ற இடத்திலே உள்ள சில அதிகாரிகள் சில தவறுகளைச் செய்து விடக்கூடும். இங்கே நம்முடைய த.மு.மு.க. சார்பில் பேசிய நண்பர் ஹைதர் அலி பேசும்போது இட ஒதுக்கீடு அரசின் சார்பாக சிறுபான்மையோருக்குச் செய்யப்பட்டாலுங்கூட, அதிகாரிகள் அதை சரிவர நடைமுறைப்படுத்த வில்லை. செயல்படுத்தவில்லை என்றார். இதை அவர் இந்தக் கூட்டத்திலே மாத்திரமல்ல, என்னிடம் நேரடியாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்த போது சொன்னார்கள். நான் அதை விசாரித்த போது, கிறித்தவ சமுதாய மக்களுக்கு எவ்வளவு சதவிகிதமோ அதே சதவிகிதம் இஸ்லாமிய மக்களுக்கும் என்று நாம் அறிவித்திருந்தாலுங்கூட, கிறித்தவர்களுக்குக் கிடைக்கின்ற இடஒதுக்கீடு, சரியாக வழங்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமியர்களுக்குத் தரப்பட வேண்டிய அந்த 3.5 சதவிகித ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்பது உண்மை தான். இதை நான் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு சதவிகிதம் என்று அறிவித்தால், சதவிகிதக் கணக்கைத் தான் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு, நீதிக்கட்சிக் காலத்திலே போடப்பட்ட முறையை வைத்துக் கொண்டு, இப்பொழுதும் அதே முறையில் தான் செய்வோம் என்று கூறுகின்ற சில அதிகாரிகள் இதிலே தலையிட்ட காரணத்தால் வந்த வினை இது. நான் அதற்காக, உடனடியாக அதிகாரிகள் கூட்டத்தையும், அமைச்சர்கள் கூட்டத்தையும் கூட்டி, அதை சரி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். எதையும் அறிவிப்பது வேறு. நடைமுறைப்படுத்துவது வேறு என்பதற்கு இது ஒரு தக்க உதாரணம். அதற்காக அறிவிப்பதே தவறு என்று ஆகி விடாது. ஒரு நல்ல காரியத்தை அறிவிப்பதே தவறு என்று ஆகிவிடக் கூடாது. ஒருவர் சரியாக செய்ய வில்லை என்றால், ஒரு அதிகாரி தவறு செய்தால், அதற்காக அந்தத் தத்துவமே, கொள்கையே, அதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

இப்படித் தான் நண்பர் கிருஷ்ணசாமி அவர்கள் இங்கே இந்தக் கருத்தை வெளியிட்டு விட்டு வெளியேறி இந்தக் கூட்டத்தைப் பற்றியே ஒரு தவறான கருத்தை ஆதி திராவிட மக்களிடத்திலே ஏற்படுத்த முயன்றிருக்கிறார். அதற்காக நான் உள்ளபடியே உங்கள் அனைவரோடும் சேர்ந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முடிவாக இந்தக் கூட்டம் தொடங்கியது, நடந்தது, முடிந்தது என்ற அளவோடு இல்லாமல் ஒரு நல்ல முடிவை எடுத்தது என்ற அளவில் உங்கள் அத்தனை பேருடைய கருத்தும் ஒத்துவரும் என்ற உணர்வோடு இந்த தீர்மானக் குறிப்பை உங்கள் முன்னால் நான் படித்துக் காட்டுகிறேன். இதில் திருத்தம் இருந்தால் தயவு செய்து சொல்ல வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தீர்மானம்

'சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் அடித்தளத்திலே உள்ள ஆதி திராவிட மக்களுக்குள்ளேயே அருந்ததியர் எனப்படுவோர் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருப்பதால், அவர்களைக் கைதூக்கிவிடும் முயற்சிகளில் ஒன்றாக, தற்போது ஆதி திராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்கிடவும்;,

அருந்ததியர் எனப்படுவோருள் எந்தெந்தப் பிரிவினரை உள்ளடக்குவதென்றும், அந்த மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவைப் பற்றிவும் விரிவான முறையில் விசாரித்தறிந்து அண்மையில் மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி அமைந்துள்ள கமிஷனின் நிலையையும் ஆராய்ந்து, தேவைப்பட்டால் அவர்களையும் கலந்து கொண்டு, அரசுக்குப் பரிந்துரை செய்திட உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசரைக் கொண்ட ஒரு நபர் குழு (One Man Committee) அமைப்பதென்றும்,

அந்தக் குழுவின் அறிக்கையை ஆறு மாத காலத்திற்குள் பெற்று அதை நடைமுறைப் படுத்துவது பற்றி அரசு முடிவெடுப்பதென்றும்,

இந்த அனைத்து அரசியல் கட்சிகளின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது'.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை.9



நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்



Monday, March 10, 2008

இடஒதுக்கீட்டின் நடைமுறைச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு - முதல்வர் உறுதி

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறை சிக்கல்கள் விரைவில் நீக்கப்படும் தமுமுக தலைவர்களிடம் முதல்வர் நேரில் உறுதிமொழி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா மற்றும் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி ஆகியோர் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை அவரது இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சந்தித்தனர். சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிக்கல்கள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அதிகாரிகள் ஏற்படுத்தி வரும் சிக்கல்கள் உள்ளிட்ட பல பரிச்னைகளை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றை நீக்குமாறு தமுமுக தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதத் தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதையொட்டிச் சில அரசு பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வுச் செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரங்களைச் செய்தது. இந்த விளம்பரங்களில் மொத்தப் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு சேர வேண்டிய 3.5 சதவிகிதம் அளவிற்குப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்வாணைய அதிகாரிகளிடம் கேட்ட போது ரோஸ்டர் முறையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தனர். இருப்பினும் முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை தமுமுக எடுத்து சென்றது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள விளம்பரங்கள், ரோஸ்டர் முறை குறித்து அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று தமுமுக சார்பாக அமைக்கப்பட்டது. தமுமுக தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு தனது பரிந்துரைகளையும் மாற்றுத் திட்டத்தையும் வகுத்தது. இதன் பிறகு தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத் துறையின் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களைத் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமையில் இந்தக் குழுவினர் சந்தித்து, இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத அளவிற்குப் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் குறித்து விளக்கினர். இதனைத் தொடர்ந்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன் ஆகியோரையும் இந்தக் குழுவினர் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புகளின் இறுதி கட்டமாக முதலமைச்சர் கலைஞர் அவர்களைத் தமுமுக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் சந்தித்தனர். தற்போது நடைமுறையில் உள்ள ரோஸ்டர் முறையில் பணிகளை மாவட்ட வாரியாகப் பிறகு மாவட்டங்களில் உள்ள அலுவலகங்கள் எனப் பிரித்து அந்த அலுவலகங்களை யூனிட்டாக கருதி அங்குள்ள பணியிடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்படுவது முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாது செட்யூல்ட் பழங்குடி மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை முதல்வரிடம் மிக விரிவாகத் தமுமுக தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

முதல்வரைச் சந்தித்த அன்றைய தினம் த.அ.ப.தேர்வாணையம் வெளியிட்டுள்ள நில அளவர் மற்றும் வரைவாளர் பணிநியமனத்திலும் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டினர். காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்த ரோஸ்டர் முறையில் மாவட்டங்கüல் உள்ள அலுவலகங்களை யூனிட்களாக கருதுவதற்கு எந்தவொரு அரசாணையும் இல்லை என்பதையும் தமுமுக தலைவர்கள் முதல்வரிடம் சுட்டிக்காட்டினர். முதல்வரும் தமுமுக தலைவர்கள் எடுத்தவைத்த வாதங்களில் உள்ள நியாயங்களை முழுமையாக உணர்ந்து இது குறித்துத் தொடர்புள்ள அரசு அதிகாரிகளின் கூட்டத்தை உடனே கூட்டி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பின் போது முதல்வரின் தனி செயலளார்கள் திரு. ராஜமாணிக்கம் மற்றும் திரு. ராஜரத்தினம் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

சிறுபான்மை கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வர் உத்தரவிட்ட பிறகும் அதனை நிரப்புவதற்கு முட்டுக்கட்டை போடும் கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகளின் போக்கை முதலமைச்சரிடம் தமுமுக தலைவர்கள் சுட்டிக்காட்டி இந்த பிரச்சனையில் அவர் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டுமெனத் தமுமுக தலைவர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். உடனடியாக முதல்வர் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியைத் தனது அறைக்கு அழைத்தார். அமைச்சரிடம் சிறுபான்மை கல்லூரிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தமுமுக தலைவர்கள் எடுத்துரைத்தனர். இப்பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காணுமாறு முதல்வர் உத்தரவிட்டார்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்துள்ள மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை கடந்த மே 22ம் தேதி பிரதமரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதை முதல்வரிடம் சுட்டிக்காட்டிய தமுமுக தலைவர்கள் அந்த அறிக்கை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப் பிரதமரை அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

நீண்ட காலமாகப் பிணை மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் இருக்கும் குணங்குடி அனிபாவின் நிலையை எடுத்துக் கூறி அவரை உடனே விடுதலைச் செய்வதற்கு ஆவணச் செய்ய வேண்டும் என்றும் முதல்வரிடம் தமுமுக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மொத்தத்தில் இந்தச் சந்திப்பு மிகப் பயனுள்ளதாகவும் சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதற்கான அறிகுறியாகவும் அமைந்திருந்தது.


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Thursday, March 06, 2008

விளம்பர நோக்கிற்காக செயல்படும் அமைப்பு ததஜ

விளம்பரத்துக்காக வழக்கு: த.த.ஜ.விற்கு உயர்நீதிமன்றம் அபராதம்!

சென்னைப் பல்கலைக் கழகத்தின் பணிநியமனத்தில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றவில்லை, எனவே, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என அறிவிக்கக்கோரி த.த.ஜ.வின் வக்கீல் சிராஜுதீன் மூலம் அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் செய்யது இக்பால் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகோபாத்தியாயா, எம். வேணுகோபால் ஆகியோர், பணியிடங்கள் தொடர்பாக பொதுநல வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பாக நாளிதழ்களில் இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளதால் இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே வழக்கு தாக்கல் செய்த த.த.ஜ மாநிலச் செயலாளர் செய்யது இக்பால் 10 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தில் 6 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

விளம்பர நோக்கிற்காக செயல்படும் அமைப்பு என்று உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ததஜ) என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Saturday, March 01, 2008

பயங்கரவாதம் இஸ்லாத்துக்கு மாறானது

பி.பி.சி வானொலியில் தமுமுக தலைவரின் பேட்டி


பி.பி.சி.தமிழோசை: இந்தியாவின் பழைமைவாத முஸ்லிம் கல்வி அமைப்பு என்று கருதப்படும் தேவ்பந்தி அமைப்பின் கல்விமான்கள் இன்று வடஇந்தியாவின் தேவ்பந்தி நகரில் நடத்திய மாநாட்டில், பயங்கரவாதம் இஸ்லாத்துக்கு மாறானது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்தி அறிக்கையில் கேட்டோம்.

இந்த தீர்மானம் குறித்து தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் போராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் கருத்துக் கேட்டேன்.

போரா.ஜவாஹிருல்லாஹ்: காலத்தின் அவசியம் கருதி அழைக்கப்பட்ட மாநாடு அது. சுமார் பத்தாயிரம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்து பங்கு கொண்டிருக்கிறார்கள்.


சர்வதேச ஊடகங்களிலும் சரி, இந்தியாவிலுள்ள ஊடகங்களிலும் சரி, தொடர்ந்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கக்கூடிய ஒரு போக்கும், அதற்கு தூண்டுதலாக இஸ்லாமும், குறிப்பாக இஸ்லாமிய கல்வியை போதிக்கக்கூடிய மத்ரஸாக்களும் தான் காரணமாக இருக்கிறது என்று ஒரு தவறான சித்திரம் தொடர்ந்து வரையப்பட்டு வருகின்றது.

அதை கலையக்கூடிய முகத்திலே, கலையக்கூடிய முகாந்திரமாக இந்த மாநாட்டில் மிகத்தெளிவாக, ஏனென்றால் இப்போதெல்லாம் - 1400 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறியாக வரையறுக்கப்பட்ட காலத்திலிருந்து அது பயங்கரவாத நடவடிக்கைகளை மிக கண்டிப்புடன் எதிர்த்திருக்கின்றது.

போர்களத்தில் கூட குருமார்கள், பெண்கள், குழந்தைகள் ஏன்!? செடி கொடிகளைக்கூட... பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, செடி கொடிகளுக்குக்கூட பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, அழிக்கக் கூடாது என்று சொல்லக்கூடிய மார்க்கம் இஸ்லாம். அதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள், நாங்கள் மனமார வரவேற்கிறோம்.

பி.பி.சி.தமிழோசை: இப்பொழுது மாறி இருக்கின்ற உலகச் சூழலில், குறிப்பாக செப்டம்பர் 11, அந்த அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கு பின்னால் உலகம்...உலக அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களை கணக்கில் கொண்டு இந்த தீர்மானம் வரையப்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?

போரா.ஜவாஹிருல்லாஹ்: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஒரு தவறான சித்திரம் - நீங்கள் சொன்னது போல செப்டம்பர் 11, க்குப் பிறகு இன்னும் அதிவேகமாக - முஸ்லிம்களையும் இஸ்லாமையும் குறிவைத்து இது போன்ற, ஆங்கிலத்திலே 'maligning' என்று சொல்லுவார்கள். இஸ்லாமிய சமுதாயத்தையே ஒரு கேவலமாக சித்தரிக்கக் கூடிய போக்கு இருக்கிறது. எனவே அதை கருத்தில் கொண்டு செய்திருக்கின்றார்கள்.

பி.பி.சி.தமிழோசை: இந்த தேவ்பந்தி என்ற இந்த அமைப்பு வந்து, ஒரு பழைமை.... ஒரு கண்சர்வேட்டிங் அமைப்பாக கருதப்படுகிறதே? அதனுடைய இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்களே, அதனுடைய உந்துதல் - ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த அந்த தாலிபான்கள் இயக்கத்தினருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மாதிரி ஒரு பழைமைவாதம்....மான ஒரு இயக்கமாக ஒரு அமைப்பாக கருதப்படுகின்ற இந்த அமைப்பிலிருந்து இந்த தீர்மானம் வருவது என்பது இஸ்லாத்திலுள்ள இந்த மாதிரியான ஒரு மிகவும் மையமான அமைப்பில் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றம் என்று சிலர் கருதுகின்றார்கள். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

போரா.ஜவாஹிருல்லாஹ்: நிச்சயமாக சிந்தனை மாற்றம் கிடையாது. ஏனென்றால் நான் குறிப்பிட்டது போல, இஸ்லாம் என்பது ஒரு வறையறுக்கப்பட்ட வாழ்வியல் நெறி. அதிலே திருக்குர்ஆனும் நபிகள் நாயகத்தின் வழிமுறையும் தான் இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்கிறது. அதிலே யாரும் பிறகு எந்த ஒரு மாற்றமும் கொண்டுவர முடியாது.

தேவ்பந்த் மத்ரஸாவில் அதில் பயின்றவர்கள் பிறகு.... தேவ்பந்த் மத்ரஸா என்பது இன்று நேற்றல்ல, விடுதலைக்கு முன்பே இயங்கக்கூடிய தொன்மையான ஒரு இஸ்லாமிய கல்விக்கூடம். அங்கே பயின்றவர்கள் பாக்கிஸ்தானில் இது போன்ற ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி இருக்கலாம். அதில் யாராவது ஒருவர் வழிகேடர்களுடன்... ஏனென்றால், ஆப்கானிஸ்தானிலே தொடங்கியது என்பது ஒரு விடுதலைப் போராட்டம். ரஷ்யா - யூ.எஸ்.எஸ்.ஆரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து 1979ல் தொடங்கப்பட்டது ஒரு விடுதலைப் போராட்டம்.

அதற்குப் பிறகு அது திசை மாறி இன்று பின்லேடன் போன்றவர்கள் எல்லாம் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப ஒரு பயங்கரவாத நிலைக்கு அதை கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கின்றது. அதற்காக வேண்டி அந்த மத்ரஸாவின் மீதும் அதன் சித்தாந்தத்தின் மீதும் பழி போடுவதும், அதன் காரணமாக இங்கே சிந்தனை மாற்றம் ஏற்பட்டு இது போன்ற ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தல்ல.

தமுமுக தலைவரின் பேட்டியை கேட்க இங்கே சொடுக்குங்கள்