Friday, September 28, 2007

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று முதல் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துன் நாசர் மதனி உட்பட 8 பேருக்கு இன்று முறைப்படி விடுதலை வழங்கப்பட்டது.

மேலும் 41 பேருக்கு 5 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலத்தை முழுவதும் அவர்கள் அனுபவித்து விட்டதனால் தண்டனைக் காலம் கழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இன்று மட்டும் 49 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தீர்ப்புகள் தொடருகின்றன...

Thursday, September 27, 2007

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் கோட்டா தவறில்லை

புதுடில்லி: முஸ்லிம்களில் ஒரு பிரிவினர், பிற்படுத்தப்பட்டோராக ஒதுக்கப்படும் போது அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 4 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க ஆந்திர அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து போடப்பட்ட மனுவை, ஐகோhட் தள்ளுபடி செய்தது. இப்போது இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்துள்ளது.

வழக்கில் அவசர சட்டத்துக்கு எதிராக ப.ஜ.க.தலைவரும், பிரபல வக்கீலுமான அருண் ஜெட்லி வாதாடினார். 'இரண்டு முறை அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு அவை நீதி மன்றத்தில் ரத்து செய்யப்பட்டன. மூன்றாவது முறையாக இப்போது அவசர சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. ஆந்திராவில் 2 சதவிகித முஸ்லிம்களைத் தவிர, மற்றவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது' என்றார் அவர்.

ஆந்திர அரசு வக்கீல் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், முஸ்லிம் சமுதாயத்தில் 34 பிரிவினர் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களில், 10 பிரிவினர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படும்' என்றார்.

முஸ்லிம் மதத்தில் உள்ள சில பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்று பிரித்து வைக்கும் போது அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு தரலாம் அதில் தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியுள்ளது.

நன்றி: தினமலர்

இடஒதுக்கீட்டை நிர்மூலமாக்க சங்பரிவார் சதி

இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை இல்லை


பிஜேபி சென்னை அலுவலகம்

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த அவசரச் சட்டத்தை அரசியல் அமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை அந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா., நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. லோகநாதன் சார்பில் கே.எம். விஜயனும், அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர். விடுதலையும் ஆஜராகினர்.

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத தனி இடஒதுக்கீடு கொண்டு வந்து இயற்றப்பட்ட சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஏனெனில் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு சென்றதால் அந்தச் சட்டத்தை ரத்து செய்தது.

மீண்டும் ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு நான்கு சதவீதம் ஒதுக்கீடு அளித்து சட்டமியற்றியது. அந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வில்லை. எனவே அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது ஏற்புக்குரியது. ஏற்கெனவே முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இடஒதுக்கீடு சலுகை அனுபவித்து வருகின்றனர். இப்பொழுது அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தலைமை வழக்குறைஞர் வாதிட்டார்.

தலைமை நீதிபதி இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. இவ்வழக்கில் விரிவான விவாதம் நடத்த வேண்டியுள்ளது என்று கூறி நான்கு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நன்றி: தமுமுகவின் இணையதளம், இன்றைய முக்கியச் செய்திகள் பிரிவு

Monday, September 24, 2007

கலைஞரின் தலைக்கு விலையா?

ஏழு கோடி தமிழர்களும் அணி வகுப்பார்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

பேரா.ஜவாஹிருல்லாஹ்

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மத்திய வழிகாட்டும் தலைமை பீடத்தின் தலைவர் இராம் விலாஸ் வேதாந்தி ''திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் வெட்டி எறிபவருக்கு அயோத்தியில் உள்ள சன்னியாசிகள் தங்கம் பரிசளிப்பார்கள்'' என்று கூறியுள்ளார். இல்லாத ராமர் பாலத்தை முன் வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைபவர்கள், அதில் வெற்றி பெற முடியாத நிலையில் தங்கள் வன்முறை குணத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ராமர் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என கலைஞர் கேள்வி எழுப்பியதை அறிவுப்பூர்வமாக எதிர் கொள்ளாமல், அவர் உயிரையே பறிக்க துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக தலைவர், தமிழக முதல்வர் என்ற தகுதிகளை மீறி இந்திய அரசியலின் முதுபெரும் தலைவராக வீற்றிருக்கும் கலைஞர் அவர்களை காவி பயங்கரவாத கூட்டம் கொல்ல துடிப்பது இந்திய அரசியலுக்கும், ஜனநாயகத்துக்கும் விடப்பட்ட மிரட்டலாகும். எளிய மக்களை கொன்று குவிப்பதில் அனுபவம் பெற்ற காவி கூட்டம், நாட்டின் மூத்த தலைவரையே கொல்ல துடிக்கிறது என்றால் இவர்களை சட்டரீதியாக ஒடுக்குவது காலத்தின் கட்டாயமாகும்.

எதிர்ப்புகளிலேயே வளர்ந்த கலைஞர் துணிச்சல்மிகு பொது வாழ்வுக்கு சொந்தக்காரர் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமேயானால் ஏழு கோடி தமிழர்களும் மத வெறியர்களுக்கு எதிராக, கலைஞருக்கு ஆதரவாக அணி திரள்வார்கள் என்பதை கூறிக் கொள்கிறோம். வேதாந்தியை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும். மத வெறியை தூண்டி நாட்டின் அமைதியை குலைக்க துடிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்.

Thursday, September 20, 2007

பயற்சிக்காலம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


தமிழக முஸ்லிம்களுக்கு இந்த வருடத்திய ரமளான் மாதம் மிக மகிழ்ச்சிகரமான நிகழ்வைக் கொண்டு துவங்கியுள்ளது. 1952ல் முஸ்லிம் சமுதாயம் இழந்து விட்ட இடஒதுக்கீடு உரிமையை 55 வருடங்கள் கழித்து திரும்பப் பெற்றுள்ளார்கள். அந்த இடஒதுக்கீடு உரிமை இந்த ரமளான் மாதத்தின் துவக்கத்தில் கிடைத்த மகிழ்ச்சியை தமிழக முஸ்லிம்கள் அடைந்துள்ளார்கள்.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வேலையை பிழையின்றி செய்து முடிப்பதற்கு ட்ரைனிங் எனும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது தான் தவறுகள் குறைந்து அந்த குறிப்பிட்ட வேலை திருப்திகரமாக செய்து முடிக்கப்படும்.

டைப்பிங் என்னும் தட்டச்சு பணிக்கு செல்லக்கூடியவர்கள் அதற்குரிய பயற்சிக் கூடத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். இல்லையேல் குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடிக்க முடியாமல் டைப்பிஸ்ட்டின் வாழ்க்கையே நரக வாழ்க்கையாக ஆகிவிடும்.

சரியான முறையில் பயிற்சி எடுத்துக் கொண்டு தட்டச்சு செய்பவர் இமை இமைக்கும் நேரத்தில் பல வார்த்தைகளை தட்டச்சு செய்து விடுவார். கண்களுக்கும் மூளைக்கும் கைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு முறையாக சீராக ஆக்கப்பட்டு வேலை துரிதமாக முடிக்கப்படும்.

இதுபோன்றே, முறையாக டிரைவிங் எனும் ஓட்டுனர் பயிற்சி பெறுபவரும் விபத்துக்களை தவிர்த்துக் கொண்டு பயணிக்க இயலும். ஆபத்து நெருங்கும் போது அல்லது குறுக்கே மனிதர்கள் வந்து விடும் போது மூளை யோசிக்கும் முன்பு பிரேக் போட்டு உயிரை காப்பாற்றுவார்.

இது எவ்வாறு நடக்கிறது என்பதை தமிழில் அழகான வார்த்தையால் கூறுவார்கள், அதாவது இது ஒரு அனிச்சை செயலாக நடக்கிறது என்பார்கள்.

ஆம். எதிர்பாராத விதத்தில் தான் அணிந்திருக்கும் வேட்டி அவிந்து விடும் போது கைகள் எவ்வாறு விரைந்து செயல் பட்டு பற்றிப் பிடித்துக் கொள்கிறதோ அது போன்றது தான் பயிற்சி அளிக்கப்படும் எந்த செயலும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பயிற்சி அளிக்கும் காலம் தான் ரமளான் மாதம் ஆகும்.

இந்த மாதத்தில் தான் மனிதன் தவறு அல்லது பாவம் செய்யாமல் தவிர்ந்து கொள்வதற்கும் நன்மையை செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது, அதன் மூலம் இறையச்சம் உடையோர் ஆகலாம்' (அல்குர்ஆன் 2:183)

இங்கே நோன்பு எனும் பயிற்சி உங்களுக்குள் இறையச்சத்தை உண்டாக்குகிறது என்பது மேற்கண்ட இறை வசனத்திலிருந்து கிடைக்கும் விளக்கமாகும்.

மற்ற மாதத்தின் பகல் நேரத்தில் உண்ணவும் பருகவும் உடலுறவு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டவை, ரமளான் மாதத்தில் அனுமதிக்கப்பட வில்லை, அதையும் கூட இறைவனுக்காக விட்டு விடுகிறோம் எனும் போது இறைவனால் அனுமதிக்கப்படாத எந்த விஷயத்தையும் நம்மால் விட்டுவிட இயலும். இந்த பயிற்சி ரமளான் மாதம் முழுக்க அளிக்கப்படுகிறது.

ரமளான் மாதத்தில் தான தருமங்கள் செய்யுமாறு வலியுறுத்தப்படுகின்றன, தனது உழைப்பை இறை திருப்திக்காக தான தருமம் செய்யும் போது பாவத்தை சம்பாதிக்க எவரேனும் விரும்புவாரா?

இந்த பயிற்சி சரிவர எடுத்துக் கொள்ளப்பட்டால் அவர் செல்லும் இடம் சொர்க்கத்தை தவிர வேறு இல்லை.

இந்த ரமளான் மாதத்தை பாழாக்கி விடாமல் இறை நோக்கத்தை புரிந்து நடந்து இம்மை மறுமை வெற்றியை பெறுவோமாக. ஆமீன்.

அன்புடன்

இப்னு ஃபாத்திமா 20.09.2007

Thursday, September 13, 2007

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு - சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு: சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு


சென்னை: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.


கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்



குறிப்பு:


தமுமுகவின் இரட்டை கோரிக்கைகளில் ஒன்றான சிறைவாசிகளின் விடுதலை கடந்த வாரம் நிகழ்ந்தது. இப்பொழுது ரமளான் பரிசாக பிராதான கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டிற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமுமுகவின் முயற்சிகளுக்கு வெற்றியளித்த வல்ல ரஹ்மானுக்கே புகழனைத்தும்.

அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, September 11, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 19

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


ஆக்டர் பிஜே ஆன் மூவ்

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர் பாய். சௌக்கியமா?

சௌக்கியம் தான் அஹமது. என்ன நீங்க மண்ணடி கூட்டத்துக்கு கூட வராம போயிட்டீங்க.

எது? மலேசியாவுல அடிவாங்கிட்டு மண்ணடில மீசை முறுக்குன மீட்டிங்குக்கா. அதுதான் ஏர்போட்ல வச்சே சொல்லி முடிச்சாச்சே. அதுக்கு மேலா என்ன இருக்கப் போவுதுன்னு தான் மீட்டிங்குக்கு வரல.

சரியாப் போச்சு போங்க. எல்லாம் ஒரே மாதிரியாவா இருக்கும். இடத்துக்கு இடம் கொஞ்சம் கொஞ்சமா மெருகேத்துவாரே தலைவரு. அது தெரியாதா ஒங்களுக்கு.

சரி ஒமர் பாய் என்னதான் நடந்ததுன்னு சொல்லுங்களேன். கேப்போம்.

அஹமது. இந்த மலேசிய பயணம் சம்பந்தமா கடந்த 20.08.2007 ல இருந்து பல செய்திகள் பலவிதமா வெளிவந்துகிட்டு இருக்கு. ஆனாலும் ஆளுங்க எப்படி எப்படியெல்லாம் பல்டி அடிக்கிறாங்க, எந்தெந்த வகைல எல்லாம் பில்ட் அப் பண்றாங்கன்னு நெனெச்சாத்தான் ஒரே வேடிக்கையா இருக்கு.

சொல்லுங்களேன் ஒமர் பாய் நாமளும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.

அதாவது அஹமது நெட்ல வந்த ஃபோட்டோ, பத்திரிக்கை கட்டிங்லாம் போன தடவையே சொன்னேனே.. .. ..

ஆமாமா. இவுங்களே காசு குடுத்து மலேசிய மக்கள் ஓசைல போட்டுட்டு, அத என்னமோ அந்த பத்திரிக்கை வெளியிட்ட செய்தி மாதிரி நெட்டுல போட்டு ஏமாத்தி இருக்காங்கன்னு விவரமா சொன்னீங்க தான். அது இல்லாம வேற எதாச்சும் இருக்கா.

ஏன் இல்லாம? அஹமது.. .. நம்ம தலைவருக்கு நம்மளப்பத்தி ஏகப்பட்ட நம்பிக்கை இருக்கு. அதுனால சகட்டு மேனிக்கு அள்ளி வுடறாரு பாருங்க. தாங்கமுடியலடா யப்பா.. ..

சரி ஒமரு. சொல்ல வந்தத சொல்லுங்க. இவரு ஜக்காத் விஷயத்துல தொடங்கி எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டியே பளக்கப்பட்டதால என்னதான் உண்மைய வெளங்குனாலும் இப்பவும் அவரு சொன்னா தலையாட்டுறதா தான இருக்கோம். அந்த தெம்புல அவுத்துவுட்டுருப்பாரு. நீங்க சொல்லுங்க.

சைட்ல இப்புடி போட்டு இடி வாங்குனதுனாலயோ என்னமோ, இந்த படத்த இப்ப வந்த உணர்வுல போடாம, சும்மா ஒரு செய்தியா போட்டிருக்காங்க போல.

அதுல என்ன கொறய கண்டுபுடிச்சீங்க.

அஹமது.. .. இப்பல்லாம் நம்மாளுங்க எந்த விசயத்தையும் தனக்கு சார்பா வளைச்சு நெளிச்சு பெண்டு எடுத்து தான பேசுறாங்க. அதுனால அதுல நா மட்டுமில்ல யார் வேணும்னாலும் கொஞ்சம் யோசிச்சா பல விசயம் முரண்பாடா இருக்குறத தெரிஞ்சுக்க முடியும்.

சரி சரி நீங்க யோசிச்சத சொல்லுங்களேன்.

பொறுங்க அஹமது. மலேசியா எஸ்.டி.சி ஹால்ல நடந்த மீட்டிங் போட்டோ வ நெட்ல இருந்து எடுத்து வந்து காட்னேன்ல.

ஆம் நானும் பாத்தேன். பொம்பளங்கல்லாம் கூட இருந்தாங்களே.

அதக்கூட தமுமுக காரங்க, 'என்னப்பா பெண்களுக்கு தனி இட வசதின்னு சொல்லிட்டு ஒரு மறப்பு கூட கட்டாம உக்கார வச்சுருக்கீங்களே' ன்னு கேலி பேசுறானுவ.

ஏம் பேச மாட்டாங்க. சரி அவனுகள விடுங்க. நம்மாளுங்களுக்கு சும்மா நம்பர ஏத்தி சொல்லிட்டு, வாங்கி கட்டிக்கிறதே வாடிக்கையாப் போச்சு.

என்னன்னு வெளங்கலியே.

நீங்க பாத்த போட்டோவுல பொம்பளய்ங்க ஒரு கால்வாசி பேரு இருந்திருப்பாங்களா.

ஆமா இருந்திருப்பாங்க.

அண்ணனும் உணர்வுல எழுதியிருக்காரு. அதுல 75 பெண்கள் உட்பட 900 பேரு கலந்துகிட்டாங்கன்னு எழுதியிருக்காரு.

அப்புடியா எளுதியிருக்காரு. அந்த கூட்டத்தப்பாத்தா இவரு சொன்ன பொம்பளய்ங்களோட எண்ணிக்கப் பிறகாரமே பாத்தாலும் 300க்கு மேல தேறாது. அட ஒக்காந்து இருந்தவங்களே சுத்தி நிண்டவன் நெளிச்சவன்னு கணக்கு பாத்தாலும் 400 க்கு மேல தேறாது. இதப்போயி ஏன் 900ம்னு சொல்லனும்.

இதுவாவது பரவாயில்லை. மலேசியா போலிஸு அலக்களிக்கன்னா 5000 பேரு வந்திருப்பாங்கன்னு பில்ட் அப் பண்றதும் அவருக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.. .. பாவம். ஏன் இப்புடி நடந்துகிறாருன்னு தான் நமக்கு புரிய மாட்டேங்குது.

ஏன் புரியாம. எல்லாம் இந்த அரசியல்ல அடி எடுத்து வைக்கத்தான். மலேசியாவுல கூட எனக்காக 5000 பேரு கூடுவாங்கன்னு சொன்னா தானே மத்த அரசியல்வாதிகள்ட்ட ஒரு கெத்து கிடைக்கும். ஏன் கும்பகோணத்துல 10 இலட்சம் பேர்னு சொன்னது கூட அப்புடி படம் காட்டத்தான.

அப்புடி சொன்னதுக்கு தான் சவுதில இருந்து ஹஜ்ஜுக்கு வர்றவுங்களோட படத்தப் போட்டு ஒருத்தர் செம்மையா சூடு வச்சு எளுதி கிளிச்சுப்புட்டாரே. நீங்க தான எனக்கு சொன்னீங்க.

அதயெல்லாம் அப்பப்ப ஜனங்க மறந்துடுவாங்கங்குற நம்பிக்கைல தான அண்ணன் அடிச்சு வுடறாரு. அவரு மேக்கொண்டு எளுதியிருக்குறத கேளுங்க அஹமது.

சொல்லுங்க ஒமர் பாய்.

ஏர்போர்ட்லயோ, நெட்லயோ சொல்லாத ஒரு விஷயத்த எளுதியிருக்காரு. அதாவது அவர ஷரீஅத் கோர்ட்ல நிப்பாட்டி 10 கேள்விங்க கேட்டாங்களாம். அதுல மொத 2 கேள்வி தீவிரவாதம் சம்பந்தப்பட்டது. அதுக்கு என்ன சொன்னேன்னு எளுதுனவரு, மீதி உள்ள 8 கேள்விக்கும் என்ன பதில் சொன்னாருன்னு எளுதாம, ஆதாரங்கள அள்ளிப் போட்டேன்னு மட்டும் எளுதியிருக்காரு. எந்த ஆதாரங்கள அள்ளிப்போட்டாருன்னு தெரிஞ்சா தான், ஜக்காத் விஷயத்துல ஸஹாபாக்கள் விஷயத்துல எல்லாம் இவரு தன்னோட கருத்த மாத்திக்கிட்டாரான்னு தெரிய வரும். இப்புடி மொட்டையா எளுதுனா, மலேசிய ஷரீஅத் கோர்ட்டும் இவரு சொல்ற ஜகாத் முறய ஏத்துக்கிட்டாங்கன்டுல அர்த்தம் வரும்.

அதானே. அப்போ மலேசியாவுலயும் இவரு சொல்ற மொறப்படி ஜக்காத் குடுக்கப்போறாங்களா என்ன. ஒண்ணுமே புரியலியே. எதுத்து பேச முடியாத ஆதாரம்னு சொல்றதா இருந்தா அது எல்லோரும் கடப்புடிக்கிற ஜகாத் மொறயா தானே இருக்கணும். அப்புடீன்னா இவரு அவுங்க முன்னால அத ஏத்துக்கிட்டாரோ. அப்புடி இல்லாம இவரோட ஜகாத் கொள்கைய சொல்லியிருந்தா உடனே புடிச்சு உள்ளய்ல தள்;ளியிருப்பாங்க. அப்போ இவரு அறையில ஒண்ணும் அம்பலத்துல ஒண்ணும் பேசுவாருங்குறது சரிதான் போல.

இதயும் கேளுங்க அஹமது. ஞாயிற்றுக்கிழமை (19.8.07) மீட்டிங்குக்கு பெறகு, திங்கக்கௌம (20.8.07) அன்னக்கி நைட்டு ஒரு வீட்டுக்கு சாப்புடப்போனதாகவும் அங்க வச்சு போலீஸ் சுத்தி வளச்சு கூட்டிக்கிட்டு போனதாகவும் எளுதியிருக்காரு.

போலீஸ் சுத்தி வளச்சு கூட்டிக்கிட்டு போனாங்கன்னா கைது பண்ணி வெலங்கு போட்டு கூட்டிக்கிட்டு போனாங்களா.

அப்புடித்தான் இருக்கும் போல. அத இவரு சரியா எளுதல. ஆனா மலேசியாவுல விசாரிச்சு அப்புடித்தான் வெலங்கு போட்டு கூட்டிக்கிட்டு போனாங்கன்னு எளுதுன நக்கீரன் நிரூபர புடிச்சு காச்சி எடுத்துட்டாராம். அதுக்கும் மேல திங்கக்கிழம நைட்டு விசாரிச்சுட்டு வுட்டுட்டாங்க. செவ்வாக்கழம ஷரிஅத் கோர்ட்டுக்கு வரச் சொன்னாங்கன்னு எளுதி இருக்காரு.

அதுக்கென்ன வந்தது. முதல் கட்ட விசாரணை ஒரு இடத்துலயும் அடுத்த கட்டமா வேற எடத்துலயும் நடக்கத்தான செய்யும்.

இதுல நான் சொல்ல வந்ததே வேற. இங்க தமிழ்நாட்டுல செவ்வாக்கௌம காலைல (21.08.07) தமுமுக காரங்க பிஜே கைதுன்னு எஸ்.எம்.எஸ் குடுத்தாங்களாம். செவ்வாக்கௌம நைட்டு ஷரீஅத் கோர்ட்ல இருந்து வெளிய வந்தப்புறமா தான என்னய போலீஸு லாக்கப்ல அடைச்சுச்சு. ஆனா காலைலயே கைதுன்னு செய்தி அனுப்புறதா இருந்தா அது இவுங்க பண்ணுன ஏற்பாடுன்னு வெளங்கிக்க போதுமான ஆதாரமா இருக்குன்னு வேற எளுதி இருக்காரு.

அதுசரி. 30 போலீஸ் சுத்தி வளச்சு, மால போட்டா கூட்டிக்கிட்டு போவாங்க. அந்த சேதிய கேட்டு இவுங்க பிஜே கைதுன்னு எஸ்.எம்.எஸ் அனுப்புச்சிருப்பாங்க. அதுக்குப் போயி ஏன் இப்புடி சுத்தி வளச்சு வியாக்கியானம் பண்ணனும்.

அஹமது .. .. நாம செய்றது தான நமக்கு மொதல்ல நெனப்புக்கு வரும். 2004.ல பிரபல ரவுடி கோட்டூர் ரஃபீக்க வச்சு தமுமுக தலைமையகத்த கைப்பத்த திட்டம் போட்டாரே. அப்ப நம்ம குணச்சித்திர நடிகர் அலாவுதீன் தானே கீழ வுளுந்து அடிச்சுட்டாங்க, மிதிச்சுட்டாங்கன்னு கூப்பாடு போட்டாரே அப்போ, சம்பவம் நடந்த அரைமணி நேரத்துல மேலப்பாளையம், பாளைங்கோட்டைல எல்லாம் போஸ்டர் ஒட்டுனாங்களே, ஞாபம் இருக்கா. குணச்சித்திர நடிகர் அலாவுதீன வச்சு நாடகம் போட ஏற்பாடு செஞ்சதுனால தான் போஸ்டர்லாம் அடிச்சு ரெடியா வச்சுருந்திருக்காங்க. இல்லாட்டி அரைமணி நேரத்துல எப்புடி ஒட்ட முடியும்னு அப்போ தமுமுக காரங்க சொன்னாங்களே அதுதான் ஞாபகம் வருது போங்க. தான் அப்புடி முன்னேற்பாடா இருந்தது மாதிரி தான் இப்பவும் நடந்திருக்கும்னு நெனக்கிறாரு போல.3

ஆனா ஒண்ணு, இவரு செவ்வாக்கௌம காலைல வெளிய இருந்தது பெயில்ல தான்னு வேற பேசிக்கிறாங்க. பெயில் வாங்கிக் குடுத்தவரு தமிழக வம்சாவளியச் சேர்ந்தவருண்ணும் பேசிக்கிறாங்க. ஆனா இவரு சாமர்த்தியமா அதப்பத்தி ஒண்ணுமே சொல்லாம எளுதாம மறைச்சுட்டாரு.

அவருக்கு சார்பா இல்லைன்னா ஹதீஸ்களயே கூட மறச்சுருக்காரு. இது என்ன பெரிய விஷயம். சரி ஒமர்பாய் வேற எதுவும் சங்கதி இருக்கா.. ..

ஏன் இல்லாம அஹமது. நம்மாளுங்க, கற்பனைய தட்டி வுட்டு கத சொல்றதுல சின்னத்திரை சீரியல் கதாசிரியர்களையும் மிஞ்சிட்டாங்க போங்க.

அட, சீரியலை மிஞ்சுற அளவுக்கு என்ன நடந்துச்சு ஒமர் பாய்.

அஹமது, நம்ம தலைவர் மலேசியாவுல இருந்து விடுதலயானத பெங்களூரு டாக்டர் ஹனீஃப் ரேஞ்சுக்கு கத வுட்ட நம்மாளுங்க, பிஜே விடுதலையில் பெரும் பங்காற்றிய மத்திய மாநில அரசுகளுக்கும் விண் டிவி தேவநாதனுக்கும் நன்றி சொன்னாங்கல்ல... அத நிரூபிக்கிற விதத்துல என்னமாச்சும் சொல்லனும்ல அதுக்காக .. ..

அதுக்காக.. .. ..

பொறுங்க அஹமது. சொல்றேன். அதாவது 21ம் தேதி செவ்வாக்கிளம, பிஜேவ 30 போலீஸு படையோட வந்து கைது பண்ணிக்கிட்டு போனாங்கல்ல அந்த நைட்டு இங்க மெட்ராஸுல ததஜ ஆபீஸுல நம்ம அலாவுதீன் தலமைல ஆலோசனை நடந்துச்சாம். அதுல அடுத்த நாள் அதாவது 22ம் தேதி காலைல மலேசிய துணை தூதரகம் முன்னால போராட்டம் நடத்துறன்னு முடிவாச்சாம்.

ஆர்ப்பாட்டம் சாயங்காலமாவுல நடந்துச்சு. அதுவும் பிஜே பிளைட்ல ஏறுனதுக்கு அப்புறமாவுல நடந்துச்சு.

அதேதான். கொஞ்சம் அவசரப்படாம கேளுங்க புரியும். நாந்தான் சொன்னேனே. மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கிட்டதுனால விடுதல பண்ணுனாங்கன்னு சொன்னாத்தான் டாக்டர் ஹனீஃப் ரேஞ்சுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க. அத ஊர்ஜித படுத்துறதுக்கான கத தான் இவ்வளவும்.

சரி சரி மேல சொல்லுங்க.

22ம் தேதி காலைல முற்றுகைன்னு முடிவு செஞ்சுட்டு, 21ம் தேதி நைட்டு சைட் விசிட்டுக்கு தவ்ஃபீக்குறவரு போனாராம். அங்க போய் பாத்தா ததஜ மக்கள் ஏற்கனவே வந்து குழமி இருந்தாங்களாம்.

அதாவது தலைமைல இருந்து தகவல் கெடக்கிறதுக்கு முன்னாலேயே வந்துட்டாங்களாமா. என்ன கொடுமை சார் இது.

அப்புடி என்னமாவது கத சொன்னாத்தான் மக்கள் எழுச்சியப் பாத்து மலேசியா மிரண்டதுன்னு வீர வசனம் பேசலாம்.

உண்மைல, காலைல நடத்த முடிவு செஞ்சத சாயங்காலத்துக்கு மாத்துனதே, காலைல என்னமாவது ஆர்ப்பாட்டம்னு நடத்தப்போக, அங்க உள்ள வச்சுருக்க ஆள உள்ளயே நிரந்தரமா மொடக்கிருவாங்களேன்னு பயந்ததுனால தான ஃபிளைட் டைம பாத்து ஜாக்கிரதயா சாயங்காலமா ஆர்ப்பாட்டம் செஞ்சுருக்காங்க. இந்த லெட்சணத்துல இப்புடி ஒரு கத வசனம்.

சேச்சே. வர வர தரம் ரொம்ப தான் கீழே போய்க்கிட்டு இருக்கு. எங்க போயி முட்டுமோ தெரியலியே.

சரி அஹமது. நேரமாயிடுச்சு. பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 11.09.2007

Sunday, September 09, 2007

சகோதரர் சைபுத்தீனுக்கு விளக்கம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
சகோதரர் சைபுத்தீன் அவர்களின் மெயிலுக்கு ராவுத்தர் பதிலளிக்கிறார் (சைபுத்தீனின் மெயிலை பார்க்க கீழே செல்லவும்)
அன்புச் சகோதரர் சைபுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

எமது 'மலேசிய பயணமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்' கண்டு அதிர்ச்சியுற்றதாக குறிப்பிட்டிருந்தீர்கள். பலரும் அதிர்ச்சியுறவே செய்தார்கள். அறிஞர் என்று தாம் நம்பிய ஒருவர் ஆடிய அரசியல் சித்து விளையாட்டுக்களை அறிந்த பலர் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்ததனால் தான் நாம் எழுதியிருந்த கேள்விகளை எழுப்பினார்கள்.

ஆனால் தங்களின் அதிர்ச்சி அந்த வகையினால் அல்ல என உணர முடிகிறது.

நாம் மதிக்கும் ஒருவரைப் பற்றிய உண்மைகள் இந்த அளவிற்கு உள்ளதா என்ற அதிர்ச்சியினால், தாங்கள் கொண்டிருக்கும் பெரு மதிப்பு உண்மையை ஏற்றுக் கொள்ள தடையாக இருக்கின்ற காரணத்தால் ஏற்படுகின்ற அதிர்ச்சி.

அதனால் தான், நாம் எழுதியுள்ளவற்றில் பெரும்பாலானவை கற்பனை என குறிப்பிட்டுள்ளீர்கள். நாம் எழுதியுள்ளவற்றில் பெரும்பான்மையாக பிஜேவின் பேச்சுக்களை மேற்கோள் காட்டி உள்ளதால் அவ்வாறு தங்களுக்கு தோன்றியிருக்கலாம். பீஜேயின் பேச்சுக்கள் அனைத்தும் அக்மார்க் கற்பனை கதைகள் தான் என புரிந்து கொண்டமைக்கு நன்றி.

மாறாக நாம் எழுதியுள்ள 19 ஆம் தேதி எஸ்.டி.சி. க்கும் 20 ஆம் தேதி ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துக்கும் இடையிலான விபரம் குறித்து தாங்கள் கற்பனை என கருதுவீர்களேயானால், மலேசிய பத்திரிக்கைகள் மற்றும் மலேசியாவிலுள்ளவர்களின் பேட்டி என எமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவை எழுதப்பட்டது என தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த ஆதாரங்களையும் கூட அண்ணன் கூறினால் தான் ஏற்றுக் கொள்வோம் என ஆட்டு மந்தை கூட்டமாக இருக்க மாட்டீர்களென நம்புகிறோம்.

பிஜே உடன் இருந்தது போல் எழுதியுள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். எமது கூற்றை மறுக்கும் தாங்கள் பிஜே வோடு இருந்தீர்களா. ஒருவேளை அவ்வாறு ஒன்றாக பயணப்பட்டவர்களில் தாங்களும் ஒருவர் எனில் நாம் எடுத்து வைத்திருக்கும் வினாக்களுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து விடலாமே.

எம்மைப் போன்ற இன்னும் பலர், இதுபோல எழுதுவதன் மூலம் பிரபலமாக முயற்சிப்பதாகவும் எழுதியுள்ளீர்கள். சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன் போன்றோரை தோலுரித்து காட்டுபவர்கள், தாம் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை. மாறாக உண்மையான மார்க்கம் களங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக களம் இறங்குபவர்கள். நானும் அத்தகையோரில் ஒருவன். எனக்கு பிரபலமாக வேண்டும் என்ற எந்த எண்ணமும் கிடையாது.

எதனைச் செய்வதற்கு முன்பாகவும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என அறிவுறுத்தி உள்ளீர்கள். நன்றி. எதற்கும் இந்த அறிவுரையை பிஜேவுக்கும் சொல்லி வைப்பீர்களேயானால் உங்களுக்கு புண்ணியமாய் போகும். ஏனென்றால் அவர்தான் அல்லாஹ்வின் அச்சம் சிறிதுமின்றி ஆதாரம் இல்லாமல் அடுத்தவர் மேல் சேறு வாரி பூசிக் கொண்டு திரிகிறார். அவர் தான் அல்லாஹ்வின் அச்சமின்றி அவன் விதித்த ஜகாத் கடமையை தன் விருப்பம் போல் வியாக்கியானம் அளித்து வருகிறார்.

அவர் தான் அல்லாஹ்வின் அச்சமின்றி திருக்குர்ஆன் வசனத்தை திரித்து வளைத்து பொருள் எழுதி விரிவாக்கம் என்ற பெயரில் அற்ப கிரயத்திற்கு விற்பனை செய்து வருகிறார்.

அவர் தான் அல்லாஹ்வின் அச்சமின்றி சுவர்க்கம் நரகம் என்பதெல்லாம் கற்பனை. இன்றளவும் அவை படைக்கப்பட வில்லை. இதே பூமியில் தான் அவை உருவாக்கப்படும் என உளறி வருகிறார்.

அவர் தான் அல்லாஹ்வின் அச்சமின்றி அல்லாஹ்வின் வல்லமையோடு விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்.

எனக்கும் திருவாளர் பிஜேவுக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை என்பதால் அவரை சென்று சந்திக்கவோ, பேசித் தீர்த்துக் கொள்ளவோ எமக்கு எவ்வித தேவையுமில்லை.

ஜகாத் தொடங்கி சுவர்க்கம் நரகம் ஸஹாபாக்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு மார்க்க விஷயங்களில் அவர் தெரிவித்து வரும் கருத்து தனிநபரின் கருத்து என கூறட்டும். அப்பொழுதும் எமக்கும் அவருக்குமிடையில் எவ்வித தேவையும் ஏற்படப்போவதில்லை.

மாறாக இவற்றை, வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்வதால், எதிர்க்க வேண்டிய மார்க்க கடமை எமக்கிருக்கிறது. அவரைப் பின்பற்றி மார்க்கத்திலிருந்து விலகிச் செல்லும் தங்களைப் போன்றோர் உண்மை மார்க்கத்தை உணர்ந்து அதில் உறுதியோடு நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவரின் சமீபத்திய சுயநலமிக்க செயல்பாடுகளின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியுள்ளது.

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி, சுயநல ஷைத்தானின் தீங்குகளிலிருந்து நம்மை பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 10.09.2007

From:Ahamed Saifudeen (ஜங்க் மெயில்களை தவிர்க்க மெயில் முகவரியை நீக்கி விட்டோம்.)
Date: Sep 4, 2007 1:57 PM
Subject: Re: [முத்துப்பேட்டை] மலேசியா பயணமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்
To: Muthupettai Admin <muthupettai@gmail.com>

Dear Brother,

Assalamu Alaikum.

I shocked to see your mail. Just to gain popularity you are spreading Fithah's. Most of your mail content is based on assumptions. You have drafted a mail as if you were with PJ that time. There are many people like you who are doing the same thing to gain popularity. They were part of some movements earlier, due to some reasons they kicked off from that.

Anyway before doing anything, fear Allah. If you have some problem with PJ, go and meet PJ and solve it. Don't spread fitnah in the Ummah.

Instead doing this, do some good deeds and do dawah which will help you in the hereafter.

Thanks for your great effort (with lot of assumptions).

Your Brother,
Saifudeen

Saturday, September 08, 2007

கீ.வீரமணியின் துரோகம்

கேள்வி : தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து முதல்வர் தி.க. தலைவர் வீரமணியிடம் மட்டும் ஆலோசனை நடத்துவதை மக்கள் தொலைக்காட்சியில் நீதியின் குரல் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் குறைகூறியுள்ளார். முஸ்லிம்களின் ஆதரவாளர் தானே வீரமணி. அவர் மீது ஏன் இந்த கோபம்?

வேலுமனி, சென்னை – 10

கீ.வீரமணி

பதில் : முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஒரு கேள்விக்கு திராவிட கழகத் தலைவர் தோழர் கீ.வீரமணி அவர்கள் விடுதலை நாளிதழில் பதில் அளிக்கும் போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக முஸ்லிம்கள் தங்கள் நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென எழுதியுள்ளார். நாமும் அதனை தான் சொல்கிறோம். வீரமணி மாறிவிட்டார். அவரது மேற்பார்வையில் தயாரானது பெரியார் படம். பெரியாரும் திராவிட கழகமும் தொடக்க காலத்தில் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு முஸ்லிம்கள் பெரிதும் காரணமாக இருந்தார்கள். ஆனால் இந்த பங்களிப்பு வீரமணி மேற்பார்வையில் வெளிவந்துள்ள பெரியார் படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதே போல் பெரியாரின் பல உரைகள் அந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆனால் இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்ற தலைப்பில் சீலையம்பட்டியில் செட்யூல்ட் இன மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது குறித்து திருச்சியில் ஆயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் பெரியார் ஆற்றிய உரை படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரது நண்பராக மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வானில் ஒரு இமயமாக வாழ்ந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப். நாடாளுமன்றத்தில் தமிழுக்காக குரல் கொடுத்தவர். பெரியார் தனது சம காலத்தில் வாழ்ந்த பல தலைவர்கள் நடிகர்களை சந்தித்ததையெல்லாம் கவனமாக படத்தில் பதிவுச் செய்ய வைத்துள்ள வீரமணி காயிதே மில்லத்துடன் பெரியார் வைத்திருந்த நட்பை பதிவுச் செய்யாமல் இருட்டடிப்பு செய்துள்ளார்.

பெரியார் படம் தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில் தமுமுக சார்பாக கீ.வீரமணி அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதப்பட்டும் அவர் அதை பொருட்படுத்த வில்லை. முஸ்லிம்களின் தலைவர் காயிதே மில்லத்திற்கு பெரியார் படத்தில் இடம் இல்லை. ஆனால் பிராமணர்களின் தலைவர் ராஜாஜி மிக தாராளமாக படத்தில் இடம் பெற்றுள்ளார். முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக திரு.கீ.வீரமணி வைத்துள்ள வாதங்கள் சொத்தையானவை. அவர் முதல்வருக்கு இடஒதுக்கீடு குறித்து தவறான சட்ட விளக்கத்தை அளித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. முஸ்லிம்களுக்கு யார் நண்பர்கள், யார் நண்பர்கள் போல் வேடம் தரிப்பவர்கள் என்பது நன்றாக தெரியும்.

நன்றி : மக்கள் உரிமை

Wednesday, September 05, 2007

முஸ்லிம்களுக்கு விரைவில் தனி இடஒதுக்கீடு

முஸ்லிம்களுக்கு விரைவில் தனி இடஒதுக்கீடு அளிக்க தமிழக முதல்வர் முடிவு!

தமுமுக பொதுக்குழு தீர்மானத்தின் எதிரொலி!!


தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகித தனி இடஒதுக்கீட்டை விரைவில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் தேர்தலில் வாக்களித்தது போல் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இல்லையெனில் இடஒதுக்கீடு பெறும்வரை தொடர்ச்சியான தடையை மீறும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியின் நீதியின் குரல் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சி.ஆர்.பாஸ்கரன் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட இடஒதுக்கீடு வழங்க தாமதமாவதற்கு என்ன காரணம் என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் கேட்க,

''இந்தப் பிரச்சனையில் தமிழக அரசிடம் மனஉறுதி இல்லை. ஆனால் எங்களை இளிச்சவாயர்கள் என்று அரசு நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள்'' என்று எச்சரித்துவிட்டு ''பாபநாசம் பொதுக் குழு தீர்மானத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்தப் போகிறோம்'' என்றும் கூறினார்.

குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும் தமுமுக தலைவர் இதனை உறுதியாக எடுத்துரைத்தார். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தமுமுக தயார் என்பதை இந்த நிகழ்வுகள் அரசுக்கு உணர்த்தின.

இதன் விளைவாக கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் துரைமுருகன், அரசு தலைமை வழக்குறைஞர் விடுதலை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம், பிற்படுத்தப்பட்டோர் துறைச் செயலளார் வாசுதேவன், சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன், உள்துறைச் செயலாளர் மாலதி ஆகியோர் பங்குகொண்டனர். இக்கூட்டத்தில் மேலும் தாமதப்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணையைத் தயாரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதாகத் தெரிய வருகின்றது.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

பிஜே கைது செய்யப்பட்டது வருந்தத்தக்கது - தமுமுகவின் தமீம் அன்சாரி

மலேசியாவில் பீ.ஜே. கைதுக்கு யார் காரணம்?
உண்மை ஆம்பலமாகிறது!!

அன்பார்ந்த சகோதரர்களுக்கு,
எம். தமிமுன் அன்சாரியின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


பிரபல தொலைக்காட்சி பேச்சாளர் சகோ. பீ.ஜே. அவர்கள் என் மீது சுமத்தியுள்ள பொய் குற்றச்சாட்டுகள் குறித்து சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். இதனால் 'மக்கள் உரிமை'யின் பக்கங்கள் வீணடிக்கப் படுகிறதே என்ற வருத்தத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். விளக்கம் தரப்படாவிட்டால் அத்தகவல்கள் உண்மையென சில அப்பாவிகள் நம்பிவிடக் கூடாதே என்பதற்காகவே இந்த விளக்கம்.


சிங்கப்பூரும், மலேசியாவும் எனக்குப் புதிதல்ல. இயக்க ரீதியாக மட்டுமின்றி எனது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக நான் போய் வரும் நாடுகள் அவை!

கடந்த 2004ஆம் ஆண்டில் கூட 'மக்கள் உரிமை'யின் அறிமுக நிகழ்ச்சிக்காக சென்று வந்திருக்கிறேன்.

திட்டமிட்ட பயணம்
கடந்த மே மாதம் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், கேப்டன் அமீருத்தீன் ஆகியோர் சிங்கப்பூர் மலேசியாவில் எழுச்சிகரமான சமுதாயப் பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள இயக்க சகோதரர்கள் ஆகஸ்ட் மாதம் தமிமுன் அன்சாரி மலேசிய சிங்கப்பூருக்கு வரவேண்டும் என்று நிர்வாக ரீதியாக முடிவெடுத்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் எனது மலேசிய பயணம் அமைந்ததே தவிர, ஏட்டிக்குப் போட்டி என்ற அடிப்படையில் அல்ல. யார் போட்டியாக வந்தது என்பது ஊரறிந்த உண்மை!

நானும் சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவரும் இந்நாள் மாநிலச் செயலாளருமான மௌலா நாஸர் அவர்களும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று சேருகிறோம்.

அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு
பினாங்கில் ஆகஸ்ட் 4 அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் அமைப்பான 'ஈமான்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் ஆகஸ்ட் 12 அன்று அரங்க நிகழ்ச்சியில் மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (கிம்மா) என்ற கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேச ஏற்பாடாகிறது. இந்த 'கிம்மா' கட்சி என்பது சையத் இப்ராகிம் தலைமையில் வலிமை மிக்க பிரிவாக இயங்கும் நிலையில், இதிலிருந்து பிரிந்த ஒரு குழு அமீர் ஹம்ஸா என்பவர் தலைûயில் போட்டி கிம்மா என்றும் தனியாக செயல்படுகிறது.

எங்களுக்கும் எதிர்ப்பு
போட்டி கிம்மா (அமீர் ஹம்சா பிரிவு) சார்பில் எங்களது நிகழ்ச்சிக்கு பெரும் இடையூறு தரப்படுகிறது. மௌலா நாசர் மற்றும் வேங்கை இப்ராஹிம் ஆகியோரின் செல்பேசிகளுக்கு மிரட்டல் விடப்பட்டது. என்னை தீவிரவாதியாகவும், தமுமுகவை கிளர்ச்சி அமைப்பு என்றும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 12 அன்றைய நிகழ்ச்சி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது.

மலேசிய இந்திய முஸ்லிம் காங்ரஸ் தலைவர் சையத் இப்ராஹிமிடம் மலேசிய காவல்துறை எங்களைப் பற்றி விசாரிக்கிறது. அவர் உத்தரவாதம் கொடுத்ததாலும், எங்களைப் பற்றிய உண்மையான விவரங்களைக் கொடுத்ததாலும், இந் நிகழ்ச்சி ஏற்கனவே முறைப்படி அனுமதி பெற்று சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாலும் கடைசி நேரத்தில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்! இதையெல்லாம் பரபரப்பு தேவையில்லை என்ற காரணத்தினால் நாங்கள் வெளியே சொல்லவில்லை.

நிகழ்ச்சி முடிந்த பிறகு நானும் மௌலா நாசரும் ஆகஸ்ட் 13ஆம் தேதியே மலேசியாவை விட்டு வெளி யேறி சிங்கப்பூருக்கு வந்துவிட்டோம். சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி நான் சென்னை வந்துவிட்டேன்.

பொய்ப்பழிகள்
இந்நிலையில்தான் ஆகஸ்ட் 18ஆம் தேதி சகோ. பீ.ஜே. தலைமையிலான குழு மலேசியா புறப்படுகிறது.

அவர்கள் 19ஆம் தேதி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சி காவல்துறையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக மலேசியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதையும், அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டதும் எனது சொந்த ஊரில் இருந்தபோது கேள்விப்படுகிறேன். இதுவே உண்மை!

ஆனால், இதற்கெல்லாம் நான்தான் காரணமென்றும், நான்தான் பீ.ஜே.வுக்கு எதிராக அந்நாட்டு சமய இலாகாவில் புகார் கொடுத்ததாகவும் பீ.ஜே. டி.வி.யிலும், பொதுக்கூட்டத்திலும் பேசியது மட்டுமின்றி, களவாடப்பட்ட பத்திரிகையிலும் எழுதியுள்ளார்.

அந்தப் பத்திரிகையை படித்தபோது சிரிப்பாக இருந்தது. அதில் எவ்வளவு மிகைப்படுத்தலும், பொய்யும் இருக்கிறது என்று ரசித்துப் படிக்க வேண்டியிருந்தது.
அவரது மண்ணடி கூட்டப்பேச்சு கூட பொய்களை அழகாக ஜோடித்துப் பேசியதாகவும் பார்த்தவர்கள் கூறினார்கள்.

ஒரு கோடி!
இவரது கைதுக்காக மலேசிய போலீசுக்கு ஒரு கோடி வரை லஞ்சமாக செலவு செய்யப்பட்டதாக சகோ. பீ.ஜே. பேசியுள்ளார்! எழுதியுள்ளார். கஞ்சா வழக்கில் கைது செய்ய முயற்சி என்று கற்பனை செய்து தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருக்கிறார். மலேசியா என்ன பிச்சைக்கார நாடா என்று தெரியவில்லை?
ஒருவேளை மலேசியாவில் இவருக்கு எதிராக தமுமுக செயல்பட முனைந்திருக்குமேயானால் வெறும் 1000 ரூபாய் செலவு செய்திருந்தாலே போதும் என்பது விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்!

மிகைப்படுத்தி
''அரை மணிநேரம் கூட உங்களை இங்கு வைக்க முடியாத அளவுக்கு, உங்கள் நாட்டில் உங்கள் மக்கள் நெருக்கடி தந்ததால்தான் நீங்கள் தாயகம் அனுப்பப்படுகிறீர்கள் என்று அவரிடம் மலேசிய காவலர்கள் கூறியதாக உணர்வு பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது. அப்படி என்ன கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்பட்டது என்பது தெரியவில்லை!

இவர் டி.வி.யில் பேசிய பிறகுதான் இவர் கைது செய்யப்பட்டதே பரவலாக தமிழகத்திற்குத் தெரியும்!

மேலும், இவருக்காக மத்திய மாநில அரசுகள் தலையிட்டதால் தான் இவர் விடுவிக்கப்பட்டதாக கூறுகிறார். உண்மையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டிருந்தால் அது செய்தித் தாள்களில் மிகப்பெரும் செய்தியாக வந்திருக்கும்!

உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் டாக்டர் ஹனீப் கைது செய்யப்பட்டபோது மத்திய அரசு குரல் கொடுத்தது. கர்நாடக அரசு மத்திய அரசை நிர்பந்தித்தது. இந்தியாவே பரபரப்பாக இருந்தது. செய்தி ஊடகங்கள் அலறின. நாடு பரபரப்பாக எதிர்பார்த்தது. இதற்கெல்லாம் காரணம் மத்திய மாநில அரசுகளின் தலையீடுகள் என்பது பாமரனுக்கும் தெரியும்.

இதுபோன்ற ஏதாவது நிகழ்வுகள் சகோ. பீ.ஜே. அவர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டதா? என்பதை மக்கள் விவாதத் திற்கு விட்டுவிடுகிறோம். அவர் அங்குள்ள சமய இலாகாவிடம் பேசியதைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' வசனங்கள் தான் ஞாபகம் வருகிறது.

27 ஆண்டுகள் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவும், 9 ஆண்டுகாலம் தமிழக சிறையில் வாடிய அப்துல் நாசர் மதானியும் கூட இப்படியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.

இதுவெல்லாம் உங்களுக்கு எதற்கு? என்று வாசகர்கள் கேட்கலாம்.

மேற்கண்ட அவரது பேச்சுக்களும், எழுத்துக்களும் எப்படி சிரிப்பாக அல்லது பொய்யாக இருக்கிறதோ அதைவிட மோசமான பொய்ப் பழிதான் என் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டவே அவற்றை பணிவன்போடு குறிப்பிட வேண்டியதாகிவிட்டது!

உண்மைதான் என்ன?


சகோ. பீ.ஜே. அவர்களுக்கு எதிராக நான் மலேசிய அரசிடமோ காவல் துறையிடமோ சமய இலாகாவிடமோ எந்த ஒரு அறிக்கையையோ, தகவல்களையோ அளிக்கவில்லை என்பதே வலிமையான உண்மையாகும். நேரில் மட்டுமின்றி தபால் வழியிலோ, மின்னஞ்சல் வழியிலோ, செல்போன் வழியாகவோ கூட அவருக்கு எதிராக மேற்கண்டவர்களிடம் நான் எதையும் அளிக்கவில்லை என்பதே உண்மை! அப்படிப்பட்ட யாரையும் நான் சந்திக்க வில்லை! அதற்கெல்லாம் நேரமும் இருக்கவில்லை!

அவர் கைது செய்யப்பட்டது வருந்தத்தக்கது. அதற்கு என் மீது 'அணுகுண்டு' பொய்களை வீசியது கண்டிக்கத்தக்கது.

நடந்தது என்ன?
ஆகஸ்ட் 12 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற எங்களது நிகழ்ச்சியை எதிர்த்த போட்டி கிம்மா கட்சியின் அமீர் ஹம்ஸா பிரிவுதான் சகோ. பீ.ஜே. அவர்களின் நிகழ்ச்சியையும் எதிர்த்தது. இது மலேசிய டி.என்.டி.ஜே. அமைப்பின் தலைவர் பஷீர் உள்ளிட்டோர் அறிந்த உண்மையாகும். எங்களுக்கு நேர்ந்த எதிர்ப்புகளை நாங்கள் அரசியலாக்க வில்லை.

நாங்கள் மலேசியா போவதற்கு (ஆகஸ்ட் 2, 2007) முன்பிருந்தே பீ.ஜே. மலேசியாவுக்கு வரக்கூடாது என்று அங்கு ஏராளமான முயற்சிகள் நடந்துள்ளன. அதை பீ.ஜே. அவர்களே உணர்வு பத்திரிகையில் அவரையும் அறியாமல் ஒப்புக் கொண்டுள்ளார்.

''நாங்கள் அங்கே செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, எங்களுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரமும் அறிக்கைகளும் அடிக்கடி நாளிதழ்களில் வர ஆரம்பித்தன. எங்களுக்கு எதிராக மலேசிய அரசிடமும் எதிரிகள் புகார் கொடுத்திருந்தனர்.''

'மலேசியாவில் நடந்தது என்ன?' (உணர்வு முதல் பக்கம் உரிமை 11 குரல் 52) வெளிவந்த செய்தி.

இப்படி பி.ஜே. அவர்களே ஒத்துக் கொள்வது ஒருபுறமிருக்க, பீ.ஜே. கைதுக்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில் மலேசிய மக்கள் ஓசை (22-8-2007) நாளிதழில் போட்டி கிம்மா (அமீர் ஹம்ஸா பிரிவு) அமைப்பு பேட்டியளித்துள்ளது. அதில்,

''சுற்றுலா விசாவில் இந்த சொற்பொழிவாளர்கள் (அதாவது பீ.ஜே. மற்றும் பாக்கர்) கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஜாலான் பத்துகேவ்ஸில் போலீஸ் அனுமதியின்றி சொற் பொழிவை நடத்த முயன்றனர். இதுதொடர்பாக நாங்கள் போலீஸில் புகார் செய்தோம். அதன்பின்னர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ரிஸ்டா கட்டடத்திலும் ஒரு கூட்டத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியது.

மேலும் இவர்கள் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக அனுமதியையோ, ஜாக்கிம் என்ற இஸ்லாமிய இலாகாவின் அனுமதியையோ பெறவில்லை என்பதுடன், நமது நாட்டின் வழிமுறைகளையும் பின்பற்ற வில்லை.

அவர்கள் தொடர்ந்து இந்த நாட்டில் இருக்கவோ, சொற்பொழிவு நடத்தவோ அனுமதிக்கக்கூடாது என்று உள்துறை அமைச்சரை கேட்டுக் கொண்டும் மகஜரை துணை அமைச்சரின் பார்வைக்கு சமர்ப்பித் திருக்கிறோம்''

மக்கள் ஓசை (மலேசியா) 22.8.2007
இன்னும் தெளிவாகக் கூறுவதெனில், நாங்கள்தான் பீ.ஜே. அவர்களுக்கு இடையூறுகள் கொடுத்தோம் என்பதை போட்டி கிம்மா (அமீர் ஹம்சா) பிரிவின் பொதுச் செயலாளர் கமால் பாட்ஷா அவர்கள் மிகத்தெளிவாக மலேசிய நண்பன் நாளிதழில் 19.8.2007ஆம் தேதி பேட்டியளித்துள்ளார்.

''இருவரும் (பீ.ஜே. மற்றும் பாக்கர்) 19.8.2007ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அம்பாங் ரிஸ்டாவில் பேசுவதற்கு எங்கள் முயற்சியால் தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஜாலான் ஈப்போ முத்தியாரா காம்பளக்ஸில் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பத்துகேவ்ஸ் ஆசிரமத்தில் பேசுவதாக தகவல் அறிந்ததும் கோம்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். நேற்று அதையும் தடுத்து நிறுத்தினோம்''

மேற்கண்டவாறு போட்டி கிம்மா கட்சி (ஹமீர் அம்ஸா பிரிவு) தாங்கள்தான் பீ.ஜே.க்கு எதிராக செயல்பட்டவர்கள் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.


எங்கள் நிகழ்ச்சிக்கு த.த.ஜ. நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர். அதுபோல் பி.ஜே. அவர்களின் நிகழ்ச்சிக்கு ஏராளமான தமுமுக சகோதரர்களும் எங்கள் அனுமதியுடனே சென்றார்கள். அந்நிகழ்ச்சியின் போது லுஹர் தொழுகை நடைபெற்றது. அந்த தொழுகைக்கு இமாமத் செய்தவர் மலேசிய தமுமுகவின் அமைப்புக்குழு உறுப்பினர் பொதக்குடி தாஜுத்தீன் ஆவார். இது சகோ. பாக்கருக்கும் தெரியும். இந்த அளவுக்கு நாம் நாகரீகமாக நடந்து கொண்டோம்.

துளி அளவும் தொடர்பில்லை!
* சுற்றுலா விசாவில் சமயப் பிரச்சாரம் செய்தது
* சமய இலாகாவில் அனுமதி பெறாதது
* போலீஸார் தடுத்த பிறகும் மீண்டும் வேறொரு இடத்தில் கூடியது
ஆகிய காரணங்களுக்காக சகோ. பீ.ஜே. கைது செய்யப்பட்டதாக மலேசிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் முன்பு நான் பேசவிருந்த (தமுமுக ஆதரவு) நிகழ்ச் சிக்கு யார் இடையூறு செய்தார்களோ அதே குழுதான் பீ.ஜே.வுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து சென்று அங்கு பணிபுரியும் முஸ்லிம் தமிழ் உலமாக்களும் செயல்பட்டுள்ளனர்.

இதில் தமுமுகவுக்கோ, எனக்கோ துளி அளவும் தொடர்பில்லை.
ஏன் வீண் பழி விழுகிறது?

தனது அறியாமையில் அல்லது ஆத்திரத்தில் சகோ. பீ.ஜே. மலேசியாவில் சிக்கிக் கொண்டுவிட்டார். பொதுவாழ்வில் சில நேரம் எதிர்பாராமல் இப்படி நடப்பது இயல்பு. ஆனால் இதை அனுதாப அலையாக மாற்றவும், அரசியல் ஆதாயம் அடைவதற்காகவும் உண்மையான எதிரிகளை விட்டுவிட்டு என் மீதும், தமுமுக மீதும் பழிபோட்டுள்ளார்.

மலேசியாவில் செயல்படும் கிம்மா (அமீர் ஹம்ஸா பிரிவு) அமைப்பை எதிர்ப்பதால், அல்லது குற்றம் சுமத்து வதால் அவருக்கு அரசியல் லாபம் கிடைக்கப் போவதில்லை.

பழியை தமுமுக பக்கம் திருப்பும் போது அது தனக்கு அரசியல் லாபமாகவும், சோர்ந்துபோன அவரது கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியாகவும் இருக்கும் என்பதாலேயே அநியாயமாக என் மீதும் தமுமுக மீதும் பழிசுமத்துகிறார்.

மலேசியாவில் விசாரணை
பீ.ஜே.யை விசாரித்த மலேசிய சமய இலாகாவின் தமிழ் பிரிவு பொறுப்பாளர் லத்தீப் என்பவரிடம் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் பெரோஸ்கான் அவர்கள் ''பீ.ஜே. கூறிய குற்றச்சாட்டுகளைக் கூறி உங்களிடம் தமுமுகவைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவர் பீ.ஜே.வுக்கு எதிராக புகார் அளித்திருந்ததாகவும் அதை உங்கள் விசாரணைக்குழு பீ.ஜே.யிடம் கூறியதாகவும் பீ.ஜே. கூறியுள்ளாரே என்று கேட்டுள்ளார். அவரோ, ''அப்படி யாரும் எங்களிடம் எந்தப் புகாரும் தரவில்லை'' என்று கூறியுள்ளார். அல்லாஹ் உண்மையை அம்பலப்படுத்தி விட்டான்.

யார் இந்த பெரோஸ்கான்? இவர் சிங்கப்பூரில் வசிக்கும் இளையான்குடிக்காரர். தாஃவா பணி செய்பவர்! பீ.ஜே.யை விசாரிக்கும் முன்பாக மலேசிய சமய இலாகாவின் தமிழ் பிரிவு பொறுப்பாளர் லத்தீப் அவர்கள், ஆடிட்டர் பெரோஸ் கானிடம், பீ.ஜே.யைப்பற்றி விசாரித்திருக்கிறார். அவர்களுக்குள் தாஃவா பணி நிமித்தமாக பழக்கமுண்டு! அப்போது பீ.ஜே.யைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களைக் கூறியவர்தான் பெரோஸ்கான். மேலும் பெரோஸ்கான், ததஜ து.பொ.செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீனுக்கும் பழக்கமானவர்.

உங்கள் கருத்து என்ன?
என் மீது சுமத்தியுள்ள சகோ. பீ.ஜே. அவர்களின் பொய்யுக்கு நான் கடைசியாக சொல்லும் பதில் என்னவெனில் ''நான் இதுகுறித்து மேலும் உண்மை அறிய பீ.ஜே. அவர்களுடன் மலேசிய செல்லத் தயாராக உள்ளேன். அங்குள்ள உலமாக்கள் 'தமிமுன் அன்சாரிதான் இந்தக் குற்றச்சாட்டுக்களை தந்ததாகக் கூறினர்' என்று பீ.ஜே. கூறியுள்ளார். இது உண்மையா? பொய்யா? என்பதைக் கண்டறிய நான் தயார்! சகோ. பீ.ஜே. தயாரா? அதே மலேசிய சமய விவகார சபை முன்பு நான் விசாரணைக்குத் தயார்! பீ.ஜே. வருவதற்கு தடை இருந்தால் எஸ்.எம்.பாக்கர் மலேசியா வரட்டும்! இருவருக்கும் பொதுவான இரண்டு சாட்சிகளையும் கூட வைத்துக் கொள்வோம்.

வேண்டுகோள்
சகோ. பீ.ஜே. அவர்கள் என்னை விட சுமார் 25 வயது மூத்தவர். அவரை விட அனுபவத்திலும் திறமையிலும் நான் இளையவன்! சின்னப்பையன்!!

அவருக்கு எனது அன்பான வேண்டுகோள் என்னவெனில், 'அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்' என்பதே!

தமுமுகவிலிருந்து பிரிந்த தருணத்தில், ''கர்பலா யுத்தம் நடக்கும்'' என தமுமுக மாணவரணியிடம் சகோ. பி.ஜே. கூறியதாக சொன்னார்கள். தயவு செய்து அவர் அதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.


தமுமுக மற்றும் ததஜ சகோதரர் களுக்கு மத்தியில் நிலவும் உறவை கெடுக்க வேண்டாம். அவரவர் சேவை களை செய்து சமுதாயத்திற்கு நன்மைகளை செய்வோம். தொண்டர்களை சீண்டிவிடும் வேலையை நிறுத்துங்கள். நீங்கள் அவதூறு கிளப்புவதையும், அதற்கு நாங்கள் பதில் சொல்வதையும் சமுதாயம் விரும்பவில்லை. சமுதாயம் அமைதியையும் ஒற்றுமையையும் மட்டுமே விரும்புகிறது.

இந்த வேண்டுகோளை அல்லாஹ்வுக்காக ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நன்மைகளைத் தருவானாக!

அன்புடன்
எம். தமிமுன் அன்சாரி

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Monday, September 03, 2007

மலேசியா பயணமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


900 பேர்(?) கலந்து கொண்ட பிஜேயின் மலேசியா நிகழ்ச்சி

சமீபத்தில் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் நிர்வாகிகள் மலேசியா சென்று, அங்கு விசாவை தவறாக பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டு இனி இங்கு நுழையவே கூடாது என்று சிவப்பு முத்திரையுடன் நாடு திரும்பியது நாடறிந்த விஷயங்களாகும். ஆனாலும், தாங்கள் ஏதோ அன்னிய நாட்டில் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டது போல் முழு நீள படமொன்றை தனது ஆதரவு தொலைக்காட்சியிலும், தான் நடத்தும் பிரைவேட் கம்பெனியான இணைய தளத்திலும் வெளியிட்டு தனது அரசியல்வாதி குணத்தை தறுதலை ஜமாஅத் தலைவர் கிரிமினல் பிஜே அம்பலப்படுத்தி உள்ளார்.

அண்ணன் சொல்றாரு, அத அப்படியே வழிமொழிவோம் என அறிவை அடகு வைத்து விட்ட அடிவருடி ரசிகர்கள் வாய் பிளந்து, பிஜேவின் வாக்கை வாந்தி எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு உறைக்கா விட்டாலும், மயக்கத்திலிருக்கும் ஒரு சிலராவது தெளிவடைவார்கள் என்ற எண்ணத்தில் பொது மக்கள் சுட்டிக்காட்டும் சில முரண்பாடுகளை முன் வைக்கிறோம்.

'மலேசியாவில் நடந்தது என்ன?' என்ற தலைப்பில் நவீன அரசியல்வாதி கிரிமினல் பிஜே சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றுகிறார்.

அதில் தாங்கள் 17 ஆம் தேதி மலேயாவிற்கு பயணமானதாகவும், 19 ஆம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக மலேசிய பத்திரிக்கைகளில் பல நாட்கள் விளம்பரம் வெளிவந்ததாகவும், அவ்விளம்பரங்களை தடை செய்யாததன் மூலம் மலேசிய அரசு தங்களது கூட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது எனவும் கூறுகிறார்.

பத்திரிக்கையில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்தும் அரசு அனுமதியோடு தான் வெளியிடப்படுகிறதா? ஒருவர் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானால் பத்திரிக்கையில் விளம்பரப்படுத்தினாலே போதுமென்கிறாரா? – என்ன செல்ல வருகிறார் அந்த அதிமேதாவி. பத்திரிக்கை (அ) சுவரொட்டி என எவ்வகையிலும் விளம்பரப்படுத்தினாலும், விளம்பரமே இல்லா விட்டாலும் அரசு (அ) காவல் துறை அனுமதித்தால் எந்த கூட்டத்தையும் நடத்தி விடலாம். என்ன தான் விளம்பரப்படுத்தினாலும், அனுமதி இல்லையேல் எவரும் எந்த கூட்டத்தையும் நடத்த முடியாது எனும் அரிச்சுவடி கூட அறியாதவரையா அறிஞர் என்று போற்றுகின்றனர்? வெட்கக்கேடு. தவிர, பிஜே அம்பாங் ரிஸ்டாவில் பேசுவதற்கு தடை என்று மலேசிய பத்திரிக்கையில் செய்தி 18 ஆம் தேதியே வெளியாகி விட்டது. மலேசிய பத்திரிக்கைகளை தமிழக முஸ்லிம்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என மனப்பால் குடிக்கிறாரா இந்த அரசியல்வாதி.. ..? என்று பொதுமக்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

'ஞாயிறன்று நிகழ்ச்சி நடப்பதாக அறிவித்திருந்த மண்டபத்தை மண்டப நிர்வாகிகள் தர மறுத்து விட்டனர். பின்னர் வேறொரு அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு அதுவும் கடைசி நேரத்தில் கேன்சல் ஆகி விட மூன்றாவதாக ஒரு ரெஸ்டாரெண்டில் ஹால் ஏற்பாடு செய்யப்பட்டது'. என தொடர்ந்து குறிப்பிடுகிறார்.

முன்பதிவு செய்யப்பட்ட அரங்கங்கள் பின்னர் கேன்சல் செய்யப்படுகிறது என்றால் அரசு அனுமதி மறுத்ததனால் தானே அரங்கங்களும் அனுமதி மறுத்திருக்கின்றன என்ற எதார்த்தம் புரியாதவரா இந்த ஏகத்துவ அறிஞர். எதார்த்தம் புரியவில்லையாயின் இவர் எந்த வகையில் சமகால பிரச்சனைகளை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்க முடியும்? என்றும் பொது மக்கள் வினவுகின்றனர்.

'பெரும் அலைக்கழிப்புக்குப் பின் மூன்றாவதாக ரெஸ்டாரெண்டில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டு 900 நபர்கள் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சி 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெற்றது' எனக் கூறுகிறார்.

ஆனால் இவரது அரசியல் கட்சியின் இணைய தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டபடி நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது என்று படம் காட்டினார்கள். ஏற்பாடு செய்திருந்த இடங்களில் எல்லாம் காவல் துறையின் துரத்தல்கள் காரணமாக ஒரு ரெஸ்டாரெண்டில் நடத்தினோம் என்று தானே குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தவிர அந்த ஹாலும் கூட அதிகபட்சமாக 300 பேருக்கு மேல் கொள்ளளவு உள்ளதாகத் தெரியவில்லையே. இதனை 900 பேர் என பில்ட்அப் செய்வது எதற்காக என்று பொதுமக்கள் வினவுகின்றனர்.

'பின்னர் திங்கட் கிழமை ஒரு வீட்டில் 20 – 28 நபர்களுடன் விருந்து உட்கொண்டிருந்த போது காவல்துறை சுற்றி வளைத்து எங்களை கைது செய்தனர்' என குறிப்பிடுகின்றார்.

எஸ்.டி.சி ரெஸ்டாரெண்டுக்கும், திங்கட்கிழமை விருந்துக்கும் இடைப்பட்ட சில செய்திகளை மறைத்துள்ளார். எஸ்.டி.சி. யிலிருந்து போலீஸார் அழைத்துச் சென்றதையும் அங்கு தமிழக வம்வாவளியைச் சேர்ந்த ரஃபி என்கிற துணை ஆணையாளர் தமது சொந்த ஜாமீனில் இவர்களை விடுவித்ததையும், ஜாமீனில் இருக்கும் பொழுதே மீண்டும் கூட்டம் கூட்ட முயற்சித்ததால் தான் திங்கள் இரவு மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பதனை பாதியைச் சொல்லி மீதியை முழுங்கும் களவாணித்தனத்தை ஏன் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கேட்கிறார்கள்.

மாத்திரமில்லாமல் தனது சொந்த செலவில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது போல் ஒரு விளம்பரத்தை கொடுத்து விட்டு, அதனை மக்கள் ஓசை எனும் பத்திரிக்கையில் வெளியான செய்தி என பொய்யாக சுயவிளம்பரம் தேடியதன் சூட்சுமம் என்ன? ஒரு பத்திரிக்கையில் வெளியாகும் செய்தி எப்படி இருக்கும், விளம்பரம் எப்படி இருக்குமென்ற அடிப்படை அறிவு இல்லாத மடையர்களாக பொதுமக்களை இவர் எண்ணிக் கொண்டாரா, என பொதுமக்கள் ஆவேசப்படுகின்றனர்.

'இது சும்மா ஒரு விருந்து நிகழ்ச்சி தான். இவர் பேசுகிறார் என அறிவித்திருந்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருப்பார்கள்' என்று அந்த வீட்டின் பெண்மணி கூறியதாகவும் சொல்கிறார்.

ஏன் இந்த சினிமாத்தனமான பில்ட்அப்? பல நாட்கள் விளம்பரப்படுத்தியே 900 நபர்களை (உண்மையில் 300 தான்) மட்டுமே கூட்டியதாகச் சொன்னவர், இங்கே ஆயிரக்கணக்கில் என ஜம்பம் அடித்துக் கொள்வது என்? ஓ இவர் முழு நேர அரசியல்வாதியோ என்று பொதுமக்கள் ஆச்சரியத்தோடு வினவுகின்றனர்.

'கைது செய்த போலீஸ் இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சுமத்தி விசாரித்தனர். ஷரீஅத் கோர்ட்டில் ஐவர் குழவின் முன் தௌ;ளத்தெளிவாக பதில் அளித்தேன். நான் கைது செய்யப்பட்டதும், விசாரிக்கப்பட்டதும் ஷிர்க், பித்அத்தை நியாயப்படுத்தும் மாநிலங்கள் என்றாலும் நான் குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரங்களை அள்ளிப்போட்டவுடன் என்னை உடனடியாக விடுவித்து விட்டார்கள்' என ஆவேசமாக உரை நிகழ்த்தியுள்ளார்.

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை அள்ளிப் போட்டிருந்தால், 'நீங்கள் பொதுக்கூட்டம் நடத்துவதில் தவறில்லை' எனக்கூறி தடையில்லா சான்றிதழ் அளித்து உடனே பொதுக்கூட்டம் அல்லவா ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் லாக்அப்பிற்கு ஏன் அனுப்பினார்கள்? என்று பொதுமக்கள் வினவுகின்றனர்.

(இந்த ஒரு கேள்வியை மட்டும் பொதுமக்களிடமிருந்து கிரிமினல் பிஜே எதிர்பார்த்தாரோ என்னவோ அதற்கு பதிலளிப்பது போல் அமைந்துள்ள அவரின் தொடர் உரையைப் பாருங்கள்.)

'ஷரீஅத் கோர்ட்டில் என்னை விடுதலை செய்த பின்பு, அந்த காவல் துறை அதிகாரிகளால் என்ன செய்வதென்று புரியாமல் என்னை மத்திய சிறையில் அடைக்கும் திட்டத்தோடு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த சிறை அதிகாரி கோர்ட் ஆர்டர் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடியாது என மறுத்ததனால் சார்ஜ் ஷீட் இல்லாமல் கஞ்சா, வழிப்பறி கேஸ்களை அடைத்து வைப்பார்களே அப்படியான ஒரு லாக்அப்பில் கொண்டு தள்ளி விட்டார்கள். ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள். சார்ஜ் ஷீட் இல்லையானால் என்னை விடுவிப்பது தானே முறை என கேள்வி எழுப்பிய போது அவர்கள் தமீம் அன்சாரி கொடுத்த 1 கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்ட விபரமும், அதற்கு விசுவாசமாக என்னை லாக்அப்பில் தள்ளியதும் வெளிச்சத்துக்கு வந்தது' எனக் குறிப்பிடுகிறார்.

(மற்றவர்களின் கண்ணியத்தை காவு வாங்கியே பழக்கப்பட்ட கிரிமினல் பிஜே இங்கு சம்பந்தமில்லாத தமீம் அன்சாரியை வம்புக்கு இழுப்பதை கவனியுங்கள்.)

ஜகாத் போன்ற விஷயங்களைப் பற்றி இங்கே நான் பேச வரவில்லை என்று அந்தர்பல்டி அடித்ததனால், சரி பிழைத்துப்போ என ஷரீஅத் கமிட்டி வெளியில் விட்டதும், டூரிஸ்ட் விஷாவில் வந்து அனுமதியின்றி கூட்டம் போட்ட குற்றத்திற்காக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. விசாவை தவறுதலாக பயன்படுத்திய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டதை மறைத்து, போலீஸ் இலஞ்சம் பெற்றுக் கொண்டு சிறையிலடைத்ததாக அபாண்டமாக புளுகுவது ஏன்?

தமிழக முஸ்லிம்கள் மலேசிய போலீசாரிடம் போய் கேட்கவா போகிறார்கள் என்கிற தெனாவட்டா? அல்லது இது உண்மையாகவே இருந்திருந்தால் அங்கு இருக்கும் பொழுதே ஏன் எவரிடமும் புகார் அளிக்க வில்லை? அட குறைந்தபட்சம் அவரது சொந்த சைட்டில் கூட வெளியாக்கவில்லையே ஏன்? அப்படி ஒருவேளை செய்திருந்தால், போலீஸ் மீது பொய்யான புகார் அளித்த குற்றத்திற்காக மேலும் அதிகமான சிறை தண்டனை கிடைத்துவிடும் என்கிற அச்சமா?

தவிர தமீம் அன்சாரி இலஞ்சம் கொடுத்ததாக கூறுகிறாரே. தமீம் யாரிடம் எப்பொழுது எவ்வளவு கொடுத்தார் என ஆதாரங்களை வெளியிடத் தயாரா. அல்லது கடலூரில் யா அல்லாஹ் பாக்கர் நந்தினியோடு அப்படி இப்படி இருந்தார் என சோ அன்ட் சோ சொன்னதாகத்தான் சொன்னேனே அல்லாமல் நான் உறுதிபடச் சொல்லவில்லை எனக்கூறி கேட்ட அனைவரையும் முட்டாளாக்கியது போல் இப்பொழுதும் சொல்லப் போகிறாரா?

மேலும் மலேசியா போலீஸ், மற்றவர்களிடம் அதுவும் டூரிஸ்ட்டாக வரும் வெளிநாட்டவரிடம் இலஞ்சம் வாங்கித்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டுள்ளனரா?

தவிர, இவர் மலேசியாவிற்கு பயணம் செல்வார் என தமீமுக்கு எப்படி தெரியும்?

இப்படி ஏகப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர்.

இறுதியாக, தனது கைதை கண்டித்து ததஜ விசிலடிச்சான் குஞ்சுகள் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அதனை கண்டு தமிழக, இந்திய மைய அரசுகள் செய்வதறியாது மலேசியா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும், மலேசியா மத்திய அரசு அம்மாநில அரசை கண்டித்து உடனடியாக விடுவிக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்ததால் 22 ஆம் தேதி காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம் காலை 4:30 மணி) லாக்அப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்.

22 ஆம் தேதி காலை 4:30 மணி (இந்தியநேரம்)க்கு விடுவிக்கப்பட்ட கிரிமினலை 'விடுவிக்கக் கோரி' ததஜ ஆர்ப்பாட்டம் நடத்திய நேரம் 22 ஆம் தேதி மாலை 5:00 மணி. அதாவது மாலையில் விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டமாம். ஆனால் அவர் விடுதலையானதோ காலை 4:30 மணிக்கு. எந்த ஒரு அரசியல் கேனக்கிறுக்கனும் அடிக்காத ஸ்டண்ட் அல்லவா இது..

இதில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு என்ற புகழாரம் வேறு. இது எதற்கு?

தேர்தல் களம் இறங்க ஒத்திகையா? ஏன் இந்த அளவிற்கு கேடு கெட்டு, தரம் தாழ்ந்து செல்ல வேண்டும்? போராட்டம், மத்திய மாநில அரசுகளின் அழுத்தம் என்பது போன்ற கற்பனை கதைகளை சொல்லாமல் விட்டிருந்தால் கூட ஒருவேளை இவர் சொல்லியது அனைத்தும் உண்மையாகவே நடந்திருக்குமோ என எண்ணத் தோன்றி இருக்கும். இப்படி சாத்தியமே இல்லாத அக்மார்க் கற்பனையை கூறியதன் மூலம் இவர் இதுவரை கொண்டிருந்த செல்வாக்கை சுத்தமாக இழந்து விட்டார்.

ஒரு தலைவன் எனும் தகுதியோ, அறிஞன் எனும் கண்ணியமோ கூட இல்லை ஒரு சராசரி நியாயவான் என்ற தகுதிகூட இவருக்கு இனி மிஞ்சாது என்றே பல பொதுமக்கள் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளனர்.

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 03.09.2007

Sunday, September 02, 2007

ஒற்றுமைக்கு எதிரி பிஜே தான், ததஜ நிர்வாகி வாக்கு மூலம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


ஒற்றுமைக்கு எதிரி யார் எனும் தலைப்பில் நாம் இந்த வலைத்தளத்தில் ஒரு கட்டுரை பிரசுரித்திருந்தோம்.

அதில் சமுதாய ஒற்றுமையை குலைப்பது திருவாளர் பிஜே தான் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதனை உறுதி செய்யும் விதமாக ததஜ நிர்வாகி அபுல் காசிம் என்பவர் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மக்கள் தொலைக்காட்சியில் நீதியின் குரல் எனும் நிகழ்ச்சி இஸ்லாமிய கிருத்தவர்களின் இடஒதுக்கீட்டுக்கு தடை கல்லாக இருப்பது எது எனும் தலைப்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிஜே பாஸ்கர் அவர்கள் இடஒதுக்கீடு விஷயத்தில் முதலில் இஸ்லாமிய இயக்கங்கள் (அ) கட்சிகள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஆம் - அனைத்தும் ஒரே நேர்கோட்டில் தான் பயனிக்கின்றன என்று சமுதாயத்திற்கு சாதகமான பதிலைக் கூறினார்.

ஆனால் இதே நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக இடை புகுந்த நேயர் அபுல்காசிம் தானொரு ததஜ நிர்வாகி என்று கூறிக் கொண்ட இவர் தெரிவித்த ஒரு கருத்து மிகவும் அபாயகரமானதாகும்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இவரிடம் எந்த கேள்வியும் கேட்பதற்கு முன்பே தானாகவே வலிந்து, இடஒதுக்கீடு விஷயத்தில் எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வில்லை என கூறி சமுதாயத்தை தலைகுனிய வைத்து விட்டார்.

வேறொரு நேயரும் கூட இதனை கண்டித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக, இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமைக்கு மாத்திரமல்ல, முழு சமுதாயத்திற்கும் முதல் எதிரி ததஜவும் அதன் தலைவர் பிஜேயும் தான் என மக்கள் சபை முன்பாக அவர்களாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

சமுதாயத்தினர் புரிந்து கொண்டு ததஜவை முற்றிலுமாக புறக்கணிக்க இது ஒன்றே போதுமே.

இப்னு ஹஸன் 02.09.2007