Thursday, November 13, 2008

குண்டுவெடிப்பில் நிறைய பேர் சாகவில்லையே?

குண்டுவெடிப்பில் நிறைய பேர் சாகவில்லையே? பெண் சாமியார் துக்கம்!
-சர்ஜுன்


மாலேகான் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏன் மிகக்குறைவாகவே இருந்தது என மிகவும் வெறியுடன் வருத்தத்துடன் பெண் பயங்கர வாதி பிரக்யாசிங் கேட்ட தகவல் வெளிவந்துள்ளது.



மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரக் யாசிங் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்குச் சொந்த மானது தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த சதித்திட்டம் குறித்து மற்றொரு தீவிரவாதியான ராம்நாராயணனுடன் தொலைபேசியில் பேசிய ஆதாரங்களை வைத்து இவர்கள் பிடிபட்டுள்ளனர். இந்த ஆதாரங்களை மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். தொலை பேசியில் கீழ்க்கண்டவாறு உரையாடல் நிகழ்த்தப்பட்டது.



“என்னை இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்’’ என்றும், “மாலேகா னில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கைப்பற்றி விட்டனர்’’ என்றும் பெண் சாமியார் தொலைபேசியில் ராம் நாராயணனிடம் கூறியிருக்கிறார்.



மோட்டார் சைக்கிளை விற்றதாக சொல்லுங்கள் எனத் தூண்டும் விதத்தில் “நீங்கள்தான் விற்று விட்டீர்களே...’’ என தந்திரமாக ராம்நாராயணன் யோசனை சொல்லியிருக்கிறார்.



“எங்கே விற்றதாகச் சொல்வது மகாராஷ்டிராவிலா? மத்தியப் பிரதேசத் திலா?’’ என சாமியார் கேட்டதற்கு, “குஜராத் தில் விற்றதாகச் சொல்லுங்கள்’’ என நாராயணன் `ஐடியா’ கொடுத்திருக்கிறார்.


“எப்போது விற்றீர் கள்? என போலீஸ் காரர்கள் கேட்பார்களே, அப் போது நான் என்ன செய்வது?’’ என பெண் சாமியார் கேட்கிறார்.



“மறந்துவிட்டது என சொல்லுங்கள்’’ என ராம் நாராயணன் பதிலளித்திருக்கிறார்.



“ஏன் இந்த குண்டு வெடிப்பில் குறைவானவர்கள் இறந்திருக் கிறார்கள். மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் நிறுத்தலாமே’’ என பெண் சாமியார் கேட்டதற்கு, “மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் தான் வைக்க முயன்றேன், ஆனால் சரியான இடம் கிடைக்கவில்லை’’ என்று ராம் நாராயணன் பதில் கூறியிருக்கிறார்.



இந்த தகவல் சில ஆங்கில அச்சு ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண் சாமியார் இம்மாதம் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.



பெண் சாமியார் உள்ளிட்ட தீவிரவாதி களை விடுவிக்கக் கோரி பாஜக, சிவசேனா, ஹிந்து மகாசபை, அபிநவ் பாரத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளன. இந்த சமூக விரோதி களை சுளுக்கெடுப்பதில் தாமதம் ஏன்?


நன்றி: தமுமுகவின் இணையதளம்

Wednesday, November 12, 2008

பார்ப்பணர்களின் சதி

பார்ப்பணர்களின் சதி


கண்ணியமான முஸ்லிம்களின் வீடுகளுக்குள்ளேயும் டிவி மூலம் வண்டி வண்டியாக ஆபாசம், இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆபாசத்தை முற்றிலுமாக வெறுக்கும் முஸ்லிம்களுக்கு சிறிது ஆறுதலாக மக்கள் தொலைக்காட்சி கிடைத்திருக்கிறது.

அதிலும் சில நெருடலான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.

'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.

ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை. 'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.

இதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும். ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.

அப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,

'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.

'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.

அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.

ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள். அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)

இன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.

மற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.

அடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.

அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள். பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். 'வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.

தனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

முஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்னு ஃபாத்திமா

Monday, November 10, 2008

டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்!

டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்!

இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்படுத்த முயற்சி!!
பிப்ரவரி 7-ல் அரசியல் விழிப்புணர்ச்சி மாநாடு!

தலைமைக் கழகம் அறிவிப்பு!!
போர்கால அடிப்படையில் பணிகள் தொடக்கம்!!!


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு நவம்பர் 7 அன்று சென்னையில் நடைபெற்றது. பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.



இதில் டிசம்பர் 6-ல் என்ன வகையான போராட்டத்தை அறிவிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளில் இறுதியாக ரயில் மறியல் போராட்டத்தை வீரியத்தோடு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.



மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டங்கள் நடத்துவது என்றும் ரயில்கள் செல்லும் ஊர்களில் மறியல் நடத்துவது என்றும், ரயில்கள் இயங்காத இடங்களில் ரயில் நிலையங்கள் செயல்பட்டால் அங்கு முற்றுகைப் போராட்டமாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.



இரண்டும் இல்லாத மாவட்டங்களில், பக்கத்து மாவட்டங்களோடு இணைந்தோ அல்லது அம்மாவட்டங்களில் உள்ள மற்றொரு பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களிலோ போராட்டத்தை நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.



அதோடு, பாபர் மஸ்ஜித் போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும் முயற்சியாக, கடந்த 2004 - டிசம்பர் 6-ல் தமுமுக டெல்லியில் பேரணி - மாநாடு நடத்தியதைப் போல, இவ்வருடமும் இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்பத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோழமை முஸ்லிம் அமைப்புகளுக்கு கடிதம் எழுதி, அந்தந்த மாநில தலைநகரங்களில் அவர்களின் சக்திகேற்ப போராட்டத்தை நடத்த அறிவுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், தெருமுனைப் பிரச்சாரங்கள், வாகன ஒலிபெருக்கி பிரச்சாரங்கள், களப்பணி ஆகியவற்றை போர்கால அடிப்படையில் தொடங்கிட வேண்டும் என இயக்க தோழர்களை தலைமைக் கழகம் வலியுறுத்தியுள்ளது.



இது தவிர மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக மாநாட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.



எதிர்வரும் பிப்ரவரி 7, 2009 அன்று புதிய அரசியல் கட்சியின் துவக்க விழாவை நடத்துவது என்றும், அதை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி தென்னிந்தியாவை வியப்பில் ஆழ்த்துவது (இன்ஷாஅல்லாஹ்) என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



இரட்டை செலவுகளை குறைக்கும் பொருட்டு தற்போது டிசம்பர் 6-ன் விளம்பரங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், டிசம்பர் 6ம் தேதியிலிருந்து தான் மாநாட்டு விளம்பரங்களையும் பணிகளையும் தொடங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



இவ்விரண்டு அறிவிப்புகளும் தமுமுக சகோதரர்களையும் சமுதாய ஆர்வலர்களையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தி; அவர்களை வீரியமும், உற்சாகமும் கொள்ள வைத்திருக்கிறது என பல முனை தகவல்களும் தெரிவிக்கின்றன.

நன்றி: தமுமுகவின் இணையதளம்