Friday, March 30, 2007

இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

பொது வேலை நிறுத்தத்திற்கு த.மு.மு.க. ஆதரவு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை

இன்றைய தினம் அதிர்ச்சிகரமான தீர்ப்பொன்றை உச்சநீதிமன்றம் வாசித்துள்ளது. மத்திய அரசின் உயர்கல்விக் கூடங்களில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற இடைக்காலத் தீர்ப்பு சமூக நீதியின் மீதும், நாட்டின் பெரும் பான்மையாக இருக்கும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைகளின் மீதும் விழுந்துள்ள பேரிடியாகவே கருத வேண்டியுள்ளது.

சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டிற்கு அறிவியல் காரணங்களைத் தேடும் உச்சநீதி மன்றம், நாட்டின் உண்மையான நிலவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் பிற்போக்குத்தனமான எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இடஒதுக்கீடு விவகாரங்களில், அளவை நிர்ணயிக்கும் முடிவுகளை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

மத்திய அரசு பதவிகளிலும், உயர்கல்விக் கூடங்களிலும் தேசிய அளவிலான பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு வழங்கும் வகையிலும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று த.மு.மு.க. கேட்டுக் கொள்கிறது.

உச்சநீதிமன்றம் உயர்சாதி பற்றாளர்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், இடஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும்.

இந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையிலும், உச்சநீதிமன்றத்தின் இடைக் காலத் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் 31/03/2007 அன்று நடைபெற விருக்கும் பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

சமூக நீதி போராட்டத்தில் எல்லோரின் குரலும் ஒருமித்து ஒலிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் த.மு.மு.க. கேட்டுக் கொள்கிறது.

அன்புடன்
(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்


Wednesday, March 28, 2007

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் தேர்வு

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக செ. ஹைதர் அலி தேர்வு


தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தமுமுக பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி 27/03/2007 அன்று ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை அடையாறில் உள்ள வக்ஃப் வாரிய தலைமையகத்தில் மார்ச் 27 அன்று முறைப்படி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

51 வயதாகும் செ. ஹைதர் அலி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர். 1996 முதல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வரும் செ. ஹைதர் அலி, முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைப் போராட் டங்களுக்காக பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Friday, March 23, 2007

சிறுபான்மையினருக்காக தனித்துறை!

சிறுபான்மையினருக்காக தனித்துறை!

தமிழக அரசின் அறிவிப்பிற்கு தமுமுக வரவேற்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

'தமிழகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக சிறுபான்மையினர் நலன் தொடர்பான பணிகள் தொய்வடைகின்றன, எனவே சிறுபான்மையினர் நலனுக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்' என்று கடந்த பிப்ரவரி 15 அன்று தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேரில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இந்தக் கோரிக்கையை ஏற்று இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்டத்தில் (பட்ஜெட்டில்), சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்ககம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனதார வரவேற்கிறது.

நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் இன்று தாக்கல் செய்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் 'நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ள, பொருளாதார ரீதியிலும், கல்வி அறிவிலும் சிறுபான்மை யினரின் பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்திடத் தேவையான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும்' என்ற அறிவிப்பையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனமார வரவேற்கிறது. ஆனால் இது வெறும் அறிவிப்பாக இல்லாமல், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை விரைவில் நிறைவேற்றிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு வேகமாக நிறைவேற்றி வருகிறது. இதேபோல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றிய ஆட்சி என்ற தனிச்சிறப்பை கலைஞர் தலைமையிலான அரசுக்கு பெற்றுத்தரும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புக்களை பெறுவதற்காக சிறுபான்மையினர் திறன் பயிற்சித் திட்டம் அமுல்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. ஆனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10 கோடியாக உயர்த்தப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இதேபோல் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் மும்மடங்காக உயர்த்தப்பட வேண்டுமெனவும் த.மு.மு.க. கேட்டுக் கொள்கிறது.

பிரதமரின் 15 அம்சத் திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது போல், மேற்குவங்க மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது போல் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு செலவிடும் மொத்த நிதியில் 15 சதவீதத்தை மத ரீதியான சிறுபான்மையினருக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

அரசுக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதில்லை என்ற அரசின் முடிவையும், வரும் கல்வி ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 80 உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு எடுத்துள்ள முடிவையும், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் எழுத அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கையும் த.மு.மு.க. வரவேற்கிறது.

இதே அடிப்படையில் தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் தமிழ்வழி பள்ளிக்கூடங்களில் தரம் உயர்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மானியம் அளிப்பதில்லை என்ற கடந்த அதிமுக அரசின் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. கேட்டுக் கொள்கிறது.

மொத்தத்தில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் பட்ஜெட்டை த.மு.மு.க. வரவேற்கிறது. பலதரப் பட்ட மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரித்த நிதியமைச்சர் க. அன்பழகன் அவர்களையும், அதற்கு வழிகாட்டியாக இருந்த தமிழக முதல்வரையும் பாராட்டுகிறோம்.

அன்புடன்

(எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்)

தலைவர், த.மு.மு.க.

(தமிழக முதல்வருக்கு தமுமுக அளித்த கடிதத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்)

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Thursday, March 22, 2007

சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம்

பணியாளர் தேர்வுக்குழுக்களில் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம்
மத்திய அரசுக்கு தமுமுக நன்றி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

பத்து அல்லது அதற்கு மேற்பட்டோரை அரசு வேலைக்கு தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்படக்கூடிய பணியாளர் தேர்வுக்குழுக்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை மாநிலங்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர். அந்துலே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் இம்முடிவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

கடந்த மார்ச் 7ம் தேதி தமுமுக சார்பில் நடத்தப்பட்ட டெல்லி பேரணியிலும், சமூகநீதி மாநாட்டிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரகடனமாக வெளியிட்டிருந்தோம். இப்பிரகடனத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களிடமும் நேரில் வழங்கினோம். தமுமுக முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்ற இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட உத்தரவை வழங்கியதற்கு மாண்புமிகு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அவர்களுக் கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

டெல்லி பிரகடனத்தில் ஒரு கோரிக்கை அரசு அறிவிப்பாக வெளிவந்திருப்பதில் ஆறுதலாக இருக்கிறது. இதன் மூலம் ரயில்வே, மாநில மற்றும் மத்திய போலீஸ் படைகள், வங்கிகள், அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும்போது சிறுபான்மையினர் இனி கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என நம்புகிறோம்.

இது அறிவிப்பாக அல்லாமல், நடைமுறையில் செயலாக்கம் பெற வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பகம் ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்


Sunday, March 18, 2007

ததஜவில் பாக்கர் மட்டுமா!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

வஅலைக்கு முஸ்ஸலாம். அடேடே வாங்க உமர் பாய் என்ன ஆச்சு உங்களுக்கு ரொம்ப நாளா ஆளக்காணோமே.

நான் நல்லாத்தான் இருக்கேன். கொஞ்சம் வேலையா வெளியூரு போயிருந்தேன். ஊரு திரும்பினதும் முத வேலையா ஒங்கள தேடிட்டு வந்துட்டேன்.

நீங்க சொகமா இருக்கீங்களா?

ஓ நீங்க வெளியூரு போயிட்டீங்களா, அப்ப நம்ம கட்சி வெ வகாரம்லாம் தெரியாதா.

ஏந்தெரியாம. ஆனா அது என்ன இன்னைக்கு நேத்து பிரச்சனையா. பலகாலமா உள்ள பிரச்சனை தானே. என்னமோ இப்பவாச்சும் நடவடிக்கை எடுத்தாங்களேன்னு சந்தேசப்பட வேண்டியது தான்.

என்னத்த சொல்றது, ஆனா தற்காலிகமா யார்ட்ட பொறுப்ப குடுத்தாங்களோ அதப்பத்தியும் தான் நாறுது.

என்ன அஹமது பொறுப்ப மாத்துறதுங்குறது நமக்கு என்ன புதுசா அல்லது நிர்வாகிகள் மேல செக்சு குற்றச்சாட்டு தான் புதுசா. ஆரம்பத்துல இருந்து இருக்குறது தானே.

என்ன ஒமர் பாய் எதச் சொல்றீங்க ஒய்.கே.மேன்ஸனையா?

ஒய் கே மேன்ஸன் விவகாரம் தான் மண்ணடியையும் தாண்டி மனத்துச்சே. அதுக்கும் முன்னாலேயே நாம தான் பல மாத்தங்கள செஞ்சோமே.

எதச் சொல்றீங்க ஒமர் பாய். கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க.

அஹமது! ஒங்கள மாதிரி பல பேரு அப்பப்ப மறக்குறதுனால தான் அண்ணன் தான் நெனக்கிற நேரத்துல விரும்புற மாதிரி மாத்திடுறாரு.

சரி நாந்தான் மறந்துட்டேன். நீங்க கொஞ்சம் ஞாபகப்படுத்துங்களேன்.

தமுமுகவுல இருந்து ஓடி வந்தாரே. அப்ப நம்மள்ட்ட என்ன சொன்னாரு.

என்ன சொன்னாரு. தமுமுக தவ்ஹீதுக்கு மாத்தமா போவுதுன்னாரு.

அவரு சொன்ன பல காரணங்கள்ல ஒண்ணே ஒண்ணுதான் ஒங்க மண்டைல ஏறியிருக்கு அஹமது. கூடவே இன்னொன்னையும் சொன்னாரு. அதாவது, இன்னைக்கு நெலமைல தமுமுகன்னு ஒண்ணு தேவையே இல்ல. தமுமுக ஆரம்பிச்ச நோக்கம் நெறவேறிப்போச்சு. அதுனால நாம எல்லாரும் தவ்ஹீத வளக்க பாடுபடணும்னு சொன்னாரு.

அட ஆமா ஒமர் பாய். நாங்கூட மறந்துட்டேன். சே. அவரு ஒரு ஒரு வாட்டியும் மாத்தி மாத்தி சொல்றத கேட்டு ஏமாந்துல போயிருந்துருக்கோம். தமுமுகவுக்கு அவசியம் இல்லன்னு சொன்னவரு அப்புறமா தமுமுக செய்ற எல்லாத்தையும் ஒண்ணொன்னா செய்யச் சொன்னாரே அப்ப கூட நாம யாருமே அவர்ட்ட இப்ப மட்டும் எதுக்குனு கேக்கவே இல்லியே.

அதுதான் அவரோட டெக்னிக். நாம எல்லாம் ஏமாறணும்கிறதுக்காக மொதல்ல தவ்ஹீதுன்னாரு. அதுக்குப்பெறகு சமூக சேவைன்னாரு. அப்பறமா எதெயெல்லாம் தமுமுக செஞ்சப்போ தப்புன்னாரோ அத எல்லாம் செஞ்சாரு.

அட ஆமா ஒமர் பாய். கொடி தூக்கும் கழகமல்லன்னு ளுஹாவ சொல்ல வச்சாரு. அப்புறமா பாத்தா மூவர்ண கொடிய ஏத்தி வச்சு அதே ளுஹாவ யூஸ்பண்ணிக்கிட்டாரு.

அப்டி, பேர்ல, கொடியில மாத்திரம் தான் சொன்னத மாத்திக்கல. தன்னோட கொள்கைலயும் இந்த மூணு வருஷமா ஏகப்பட்ட பல்டி அடிச்சுட்டாரு.

எத ஜக்காத்த பத்தி சொல்றீங்களா?

ஜகாத்னு மாத்திரம் இல்ல, டிவுசரு, ஸஹாபாக்கள் திட்டுறதுன்னு புது சரித்திரமே படைச்சுட்டாரு போங்க.

அதுசரி நிர்வாகிகள் விஷயத்த ஆரம்புச்சுட்டு நீங்க எங்கேயோ போயிட்டீங்களே.

உண்மைதான் அஹமது. நிர்வாகிகள் மேட்டரையே எடுத்துக்குங்களேன். மொதல்ல எஸ்.எஸ்.யூ வ தலைவரா அறிவிச்சாரு. அப்புறம் அவர கீழ எறக்கிட்டு தானே தானைத் தலைவரா ஆகிட்டாரு. அவர கீழ எறக்குனப்போ சொல்லப்பட்ட குற்றச்சாட்டு என்ன தெரியுமா?

அதுதான் ஊருக்கே தெரியுமே. அந்த மதரஸா பையன் மேட்டரு தானே.

கரெக்ட். அப்புறமா தலைமை நிலைய நிர்வாகியா ஒருத்தர் இருந்தாரு. அவரு பேரு கலீல் ரசூல்.

அட ஆமா. கலீல் ரசூல்னு ஒருத்தரு இருந்தாரு. ஆனா அவரு என்னமோ தன்னோட பிஸினெஸ்ஸ கவனிக்கிறதுக்காக அந்த போஸ்ட்ல இருந்து ராஜினாமா செஞ்சுட்டு அடிமட்ட தொண்டனா இருக்கப் போறதா சொன்னாங்களே.

கரெக்ட். அப்படித்தான் சொன்னாங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவரு, அவர் வீட்ல வேல பாத்த பொண்ணு கையப்புடிச்சு இழுத்து ரவுசு பண்ணினதால, அந்த பொண்ணு கேஸ் குடுத்து, போலீஸ் புடிச்சுட்டுப் போயி நொங்கு எடுத்தாங்க. அதுனால தான அவரு ராஜினாமா செஞ்சுட்டதா சொன்னாங்க. ஆனா அதுக்கப்புறமாவும் அவரு தலவரு கூட எல்லாத்துலயும் கலந்துக்கிட்டாரு.

அட ஆமாங்க. ஜகாத் ஆய்வுக்குழுவுல கூட அவரு பேரு போட்டிருந்துச்சு.

இதுமாதிரி பாலியல் தப்பு பண்றவுங்கள்லாம் ஆய்வு பண்ணுனா அது எப்புடி இருக்கும். அதுனால தான் ஜகாத்ல படுபயங்கர அடி வுளுந்துச்சு.

சரி சரி அத ஏன் மறுபடியும் ஞாபகப்படுத்துறீங்க.

சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம நிர்வாகிகள் எல்லாருமே இந்த விஷயத்துல எவ்வளவு ஒத்துமையா ஒரே அலைவரிசைல இருந்திருக்காங்கன்னு வெளங்குது.

மூணு வருஷத்துல தலைவர் துணைத்தலைவர் ஆராரு, பொருளாளர் பொதுச்செயலாளர் ஆனாரு. இப்ப அதுவும் போச்சு. பொதுச் செயலாளர் துணைப் பொதுச் செயலாளரா ஆனாரு. இப்ப எங்க இருக்காருன்னே தெரியல.

என்னமோ நடக்குது போங்க. இதே லெவல்ல போனா கன்னட பிரசாத்துக்கும் நம்ம ஆளுங்களுக்கும் கூட தொடர்பு இருக்குன்னு வந்தாலும் வரும் போல.

அதுக்கும் சாத்தியமிருக்கு. நம்ம தலவரு அண்ணன் தான் தன்னோட சகாக்கள் என்ன செஞ்சாலும் வீடியோ எடுத்து வச்சுக்குவாரே. ஜாக் விஷயத்துல எடுத்த மாதிரி இப்பவும் எதாவது வீடியோ ஆதாரம் வச்சிருப்பாரு. அதுனால தான் ஒருத்தரும் வாய தொறக்க மாட்டேங்குறாங்க.

சரி எனக்கு ஒரு சந்தேகம். அதாவது நாம தான் கடைஞ்செடுத்த தவ்ஹீத்வாதின்னு சொன்னோமே. இப்ப போற போக்கப்பாத்தா ஒருத்தர்ட்டையும் மார்க்கம்கிறது சராசரி மத்ஹப்வாதிட்ட இருக்குற அளவு கூட இருக்காது போல இருக்கே.

அதுவும் சரிதான். ஆனா ஒரு விஷயத்த கவனிச்சீங்களா. என்ன தான் பிரச்சனை வந்தாலும், நிர்வாகம்கிறது அந்த பத்துப்பேரத் தாண்டி வேற யாருக்கும் பொறுப்பு குடுக்கிறதில்லையே. அவுங்களுக்குள்ளயே மாத்தி அமைச்சுக்கிறாங்களே.

சரியாச் சொன்னீங்க. பெருந்தலைவர் பிஜேயில ஆரம்புச்சு கடைக்குட்டி கடையநல்லூர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி வரைக்கும் பாலியல் புகார்கள் இருந்தாலும், அதுக்கு வலுவான ஆதாரம் இருந்தாலும் அவுங்களுக்குள்ளயே மாத்திக்கிறதுக்கு காரணம் வெளியில இருந்து ஒரே ஒரு உண்மையான தவ்ஹீதுவாதி அவுங்களோட நிர்வாகத்துக்குள்ள இருந்திருந்தா இந்நேரம் அவுங்களோட அத்தன ஊழல்களும் அடிச்ச கொள்ளையும் வெளிய வந்துரும்ல அதுனாலதான் அப்புடி அவுங்களுக்குள்ளயே மாத்திக்கிறாங்க.

சரி சரி ரொம்ப நேரமாயிடுச்சு. இரண்டு மூணு நாள் கழிச்சு வர்ரேன் பேசிக்கிருவோம்.

சரி பார்ப்போம். வஸ்ஸலாம்

முல்லா 18.03.2007


Saturday, March 17, 2007

தஞ்சையிலிருந்து டெல்லிக்கு...

தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஜூலை 4ஆம் தேதியும், மார்ச் 21ஆம் தேதியும் மறக்க முடியாதவை. 1999 ஜூலை 4ல் சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு தமிழக முஸ்லிம்களின் எழுச்சி வரலாற்றை தொடங்கி வைத்தது.

மார்ச் 21, 2004ல் நடைபெற்ற தஞ்சைப் பேரணி தமிழகத்தில் இதுவரை முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய அளவில் அணிவகுத்ததில்லை என்ற செய்தியை வரலாற்றில் பதிவு செய்தது.

அதே மார்ச் மாதம் சரியாக மூன்று வருடத்திற்குப் பிறகு பழைய வரலாறுகளை முறியடித்திருக்கிறது தமுமுக! அகில இந்திய அளவில் சமுதாயத் தலைவர்களை திரட்டி இந்திய முஸ்லிம்களின் குரலாக, மிக பிரம்மாண்டமாக, கட்டுக்கோப்பாக ஒரு பேரணியை நடத்தி புதிய வரலாறு படைத்திருக்கிறது தமுமுக!

தமுமுக தலைமையின் விவேகமான செயல்பாடுகள் தான் இன்று இடஒதுக்கீடு விவாதத்தை தேசிய விவாதமாக மாற்றியமைத்திருக்கிறது.

ஆந்திராவில் அம்மாநில அரசு முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது. அதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

அதன் பிறகு தான் தமுமுக தலைமை புதிய கோணத்தில் சிந்திக்கத் தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்க நாம் தொடர்ந்து போராட வேண்டும். கிடைக்கும் இடஒதுக்கீடு பாதுகாப்புடன் நீடிக்க சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.

இதுதான் தமுமுகவின் புதிய பார்வையாக விரிந்தது. இந்த நேரத்தில் நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு, முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு செய்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட, அறிக்கையில் காணப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் நாட்டையே உலுக்கின.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடும் கேள்விக்குறியாக் கப்பட்டது.

டெல்லி பேரணிக்கான அவசியத்தை இவ்வறிக்கை மேலும் கூர்மைப்படுத்தியது. இதை நாடு தழுவிய விவாதமாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியது.

இதுபோல் தமுமுகவின் ஆரம்பகால லட்சியங்களில் ஒன்றான மத்திய அரசு பதவிகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையும் டெல்லி பேரணியில் முன்வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

1) 2004ல் நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு
2) மண்டல் கமிஷனின் 27 சதவிகித இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு
3) அந்தந்த மாநில அரசுகளே இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை
4) சச்சார் குழு அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களின் சமூக - பொருளாதார முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகள்

- இந்நான்கு கோரிக்கைகளும் வெற்றிபெற ஒரு மாநிலத்தில் வாழும் முஸ்லிம்களால் மட்டுமே போராடி ஜெயித்து விட முடியாது.

இதற்கு பல்வேறு மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

புதிய இயக்கங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டும். அல்லது அங்கெல்லாம் ஏற்கெனவே செயல்படும் இயக்கங்களிடம் இக்கோரிக்கைகளை எடுத்துக்கூறி அவர்களை தயார்படுத்த வேண்டும்.

நாடு தழுவிய பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

- இதையெல்லாம் மனதில் கொண்டே 'டெல்லி பேரணி' திட்டம் வடிவம் கொண்டது.

டெல்லி பேரணியை முன்வைத்து இத்தகைய வேலைகளை தமுமுக தன் தோளில் சுமந்தது.

நமது பேரணி பற்றிய செய்திகளை வடஇந்திய நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதால் தமுமுகலிவின் பிரச்சாரம் மக்களிடம் செல்லும் வழி எளிதாக்கப்பட்டது.

நமது கவனத்திற்குத் தெரியாத அமைப்புகளும், சமுதாய ஆர்வலர்களும் தன்னெழுச்சியாக நமது பணிகளில் பங்கெடுக்கவும், நம்மைத் தொடர்பு கொள்ளவும் இச்செய்திகள் ஒரு கவசமாகி விட்டன.

அதுபோல் நாடெங்கிலும் பரவலாக டெல்லி பேரணி பற்றிய துண்டுப் பிரசுரங்கள் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டன. வறுமையின் காரணமாக பல மாநிலங்களில் இருந்து சமுதாய மக்கள் டெல்லிக்கு வருவது சாத்தியக் குறைவு என்பதால் குறைந்தபட்சம் அந்த செய்திகளையாவது கொண்டு சென்று விழிப்புணர்வூட்டுவது நமது நோக்கமாக இருந்தது. அது ஏறத்தாழ வெற்றி பெற்று விட்டது.

சங்பரிவார் அல்லாத மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டன. காரணம் இப்பிரச்சினையை நாம் முன்னெடுக்கும் போது இதற்காக குரல் கொடுக்கப் போகிறவர்கள் அல்லது ஆதரிக்கப் போகிறவர்கள் அவர்கள் தானே.

இறைவனின் பெரும் கிருபையால் தமுமுக பல்வேறு கோணங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

முத்தான கோரிக்கைகளை நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் கொண்டு சேர்த்துவிட்டது. பிற மாநில சமுதாய மக்களிடம் விழிப்புணர்வு, புதிய நம்பிக்கை, போராடும் குணம் ஆகியவற்றை இதன்மூலம் த.மு.மு.க. விதைத்து விட்டது.

டெல்லி பேரணியை பிரச்சாரப்படுத்தியதன் மூலம் சமுதாய மக்களிடம் மாபெரும் விழிப்புணர்ச்சியை தமுமுக ஏற்படுத்தியிருக்கிறது.

இனி எந்த மாநிலத்தில் இடஒதுக்கீடு முழக்கம் கேட்டாலும், அதில் தமுமுகவின் பங்களிப்பு இருக்கவே செய்யும்.

இந்திய முஸ்லிம்களுக்கு தலைமையேற்று வழிகாட்டும் கூடுதல் பொறுப்பு தமுமுகவிற்கு கிட்டியுள்ளது. தமுமுக அகில இந்திய அமைப்பாக மாறப் போவதில்லை. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்கனவே செயல்பட்டு வரும் இயக்கங்களை வலுப்படுத்துதல், வலுவான அமைப்புகள் இல்லாத மாநிலங்களில் புதிய அமைப்புகளை உருவாக்குவதற்கு ஆலோசனை வழங்குதல், நாடு தழுவிய விஷயங்களில் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுதல் என பணிகள் தொடரும் இன்ஷாஅல்லாஹ்!

இதற்கு நிகரான அல்லது இதைவிட அதிகமான போராட்டங்களை தமிழ் நாட்டிலும் முன்னெடுக்கப் போகிறோம் என்பது மற்றொரு செய்தி!

தஞ்சையில் புறப்பட்ட சமுதாய எழுச்சி டெல்லியை திணறடித்திருக்கிறது. இனி நமது வரலாறை நாமே எழுதப் போகிறோம்.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்.

Friday, March 09, 2007

மார்ச் 7 தமுமுகவின் டெல்லி பேரணி பற்றி அரப்நியூஸ்


Tuesday, March 06, 2007

Email to PM President and Ambassador

Dear Mulsim Brothers,

This is very urgent message for every muslim to send email to Prime minister of India, President of India to implemenent Sachar committee recommendation to muslims in India.

Those who are living in Saudi Arabia send a copy to Ambassador.

Prime minister of India
Copy and paste the following message in message box (500 letters).
http://pmindia.nic.in/write.htm

President of India
presidentofindia@rb.nic.in

Ambassidor to Saudi Arabia
ambassador@indianembassy.org.sa

And Post your pettition here:
http://www.petitiononline.com/sushovan/petition.html

The Letter Content:

Sub: Implementing Sachar Committee's Recommendations - Request

The Prime Minister's High Level Committee, constituted in pursuance of a notification issued by the PMO on March 9 2005, to probe the social, economic and educational status of Indian Muslims had submitted its report on November 17 2006 to the Prime Minister and was in turn tabled in the Parliament on November 30 2006 by the Minister of Minority Affairs. The seven-member committee headed by Justice (Rtd.) Rajindar Sachar consisted of experts with high credentials and impeccable integrity.

The report, the first of its kind to be presented to the Parliament, highlights a dark and
dismal picture of the social, educational and economic conditions of Indian Muslims.
The report positions Indian Muslim as a whole amongst the most backwards of all communities of the Indian society.

We're shocked to see some of its unflattering findings viz.

1. Though Muslims have a share of 13.4 per cent in the country's population, their representation in government jobs is a mere 4.9 per cent.

2. In the elite civil services, comprised of the Indian Administrative Service (IAS), the Indian
Foreign Service (IFS) and the Indian Police Service (IPS), Muslim representation is as low as 3.2 per cent.

3. Only 3.4 per cent of the Muslim population has completed graduation whereas the corresponding figure for non-OBC, non-S.C./S.T. Hindus is 15.3 per cent. Literacy levels are also similarly low. Only 59.1 per cent of the community are literate while the national average is 64.8 per cent. The literacy level for non-S.C./S.T. Hindus is 65.1 per cent.

4. Only 80 per cent of urban Muslim boys are enrolled in schools, compared to 90 per cent in
S.C./S.T. communities and 95 per cent among others. Just 68 per cent of Muslim girls go to school, compared to 72 per cent of Dalit girls and 80 per cent of girls from other groups.

5. Incidence of poverty among Muslims has a Head Count Ratio (HCR) of 31 per cent, which is second only to the S.C./S.T. HCR of 35 per cent. Significantly, in urban areas Muslims have a higher HCR of 38.4 per cent as compared to 36.4 per cent for S.C./S.T.

6. There is a marked reluctance on the part of house-owners to sell or rent out houses to Muslims; Muslim students are unwelcome in schools; they are denied jobs and banks discriminate against them in giving loans.

7. Out of the total 543 Lok Sabha members, only 33 are Muslim.

The reason for this across the board backwardness range from sheer discrimination, to lack of
awareness and education within the community, to criminal callousness and indifference on the part of the successive governments since Independence and the bureaucracy.

The PM's High Level Committee has done yeomen service by bringing out into open and putting on record the dismal state of affairs and the underlying issues and causes.

The Indian people as a whole cannot reach its full potential with a large and soft underbelly,
which remains underdeveloped, poor, malnutritioned and uneducated.

The Committee has also suggested a number of 'general and 'specific' policy initiatives that the State needs to adopt to correct this anomaly specific to the large Muslim community
constituting 13.4 per cent of Indian population.

Under the circumstances, I , as a citizen and well-wisher of our nation, find it necessary to impress upon the Central Govt, the UPA and the Hon'ble Members of the Parliament to ratify the Report of the Committee and begin the process of implementing its recommendations in right earnest.

Though we do recognise that despite the best of intentions the Report has many critical
uncovered gaps, we are of the firm opinion that it is nevertheless a great beginning and a
significant step in the right direction. We do specifically appreciate the summing up observation by the Committee: "The Committee strongly suggests that the [State] policies to deal with the relative deprivation of the Muslims in the country should sharply focus on inclusive development and 'mainstreaming' of the Community while respecting diversity."

We would like to strongly urge the civil society, the youth, the students, the trade unions,
the academicians, the professionals, and personalities with social conscience to join us and
lend their forceful voices so that the appeal is heard and heeded to.

We must reiterate that this is just not in the interests of Indian Muslims alone, it'd serve
the interests of equity across the board and thereby the Indian people as a whole.

Thanking you.

Yours Truly,
Indian Citizen.

Sunday, March 04, 2007

போயஸ் தோட்டத்தில் புதையுண்ட பீஜே

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

ஒவ்வொரு காலகட்டத்திலும், நமது சமுதாயத்தில் சில புல்லுருவிகள் உருவாகி, நம்மை வழிகேட்டின்பால் இட்டுச் செல்ல எத்தனிக்கின்றனர்.

அந்த வரிசையில், நவீன அபூஜஹல், திருவாளர் பீஜேயும் ஒருவராகி இன்னும் குறிப்பாக சொல்வதானால், இதுவரை தோன்றிய வழிகேடர்களுக்கெல்லாம் தலைவராகவே உருவெடுத்து வருகிறார்.

இவரது சமீபத்திய நடவடிக்கைகளை காணும் உண்மை முஸ்லிம்கள் முகம் சுழிக்கின்றனர். அவரது முந்தய கால செயல்பாடுகளினால் கவரப்பட்டவர்கள், இவரின் தற்கால நிலை கண்டு கவலைப்படுகின்றனர்.

மார்க்கத்தை மற்றவர்கள் கூறுபோடுவதாக கூப்பாடு போட்டவரின் தற்போதய நிலை என்னவென்றால், மார்க்கம் தன்னிஷ்டப்படி இருக்க வேண்டும். தன்னுடைய விளக்கத்தின் படிதான் செயல்பட வேண்டும். அத்தகையோர் தான் முஸ்லிம்கள். மற்றவர்கள் முஸ்லிம்களல்லர் என தன்னுடைய அடிவருடிகளுக்கு அருளாசி வழங்கி வருகின்றார்.

புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையைப் போல, தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கும் தமுமுகவை கண்டு, அதேபோல் தானும் ஒரு இயக்கம் காண வேண்டுமென்ற தனியாத தலைமை பித்துபிடித்து, தமுமுகவை கைப்பற்ற தகிடுதத்தங்கள் செய்து பார்த்தார். பலிக்கவில்லை. பதவி மற்றும் பண பித்து பிடித்த காரணத்தால், தீட்டிய மரத்தையே பதம் பார்க்கும் கோடாலி காம்பாய் மாறி இயக்கத்தை உடைக்க முயற்சித்தார். அந்தோ பரிதாபம் அதிலும் தோல்வி தான்.

ஆறே மாதத்தில் தமுமுகவை ஒழித்து விடுவேன் என சூளுரைத்தவர், அதனைச் சொல்லியே போயஸ் தோட்டத்தில் பெட்டி பரிவர்த்தனை செய்தவர், சொன்னபடி செய்ய முடியாததாலும் பெட்டி கொடுத்தவருக்கு விசுவாசமாய் இன்றும் போயஸ் தோட்டத்து கருத்துக்களையே பிரதிபலித்து வருகிறார்.

தமுமுகவை உடைக்க முயற்சித்து முடியாமல், தனது அடிவருடிகள் சிலரோடு வெளியேறியவர், தமுமுக தொண்டர்களால் போஷிக்கப்பட்ட உணர்வு வார இதழை எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என கைப்பற்றிக் கொண்டு சென்றார்.

அன்று முதல் இன்று வரை அப்பத்திரிக்கையை தமுமுகவின் மீது அவதூறு பரப்புவதற்காக உபயோகப்படுத்தி வருகிறார். அதாவது தமுமுகவின் விரலை திருடி அதனைக் கொண்டே தமுமுகவின் கண்ணைக் குத்தும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த திருடப்பட்ட பத்திரிக்கைக்கு சமீபத்தில் விலையேற்றத்தையும் அறிவித்தார்.

ஒரு காலத்தில் முஸ்லிம் பத்திரிக்கைகளில் முதலிடத்தைப் பெற்றிருந்த அவ்விதழ் தற்சமயம் போயஸ் தோட்டத்தில் புதையுண்டு போன தறுதலை ஜமாத் தலைவன் பீஜேவின் சுயபுராண இதழாக மாறிவிட்டதால் சர்க்குலேசன் சறுக்கிக் கொண்டு போய் அதள பாதாளத்தில் விழுந்துள்ளது.

சுனாமியில் சுருட்டிய பணத்தில் சுமார் 2 இலட்சத்தை சுவீகாரம் அளித்தும் சுகப்படாத காரணத்தால் விலையேற்றி உள்ளனர்.

ஆனால், அதைவிட அப்பத்திரிக்கையின் தரத்தை உயர்த்த முயற்சிப்பது நன்று.

முஸ்லிம் சமுதாய பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பது இப்பொழுது அருகிப்போயுள்ளது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பின், போயஸ் தோட்டத்து மகாராணி முஸ்லிம் சமுதாயத்தை தொடர்ந்து சீண்டி வருகிறார்.

அவற்றை கண்டிக்க உணர்வுக்கு சமுதாய உணர்வில்லை. காரணம் போயஸ் தோட்டத்து பெட்டியில் புதையுண்டதால் தானோ?

முதலில், ஐஎஎஸ் அதிகாரி முனீர் ஹுதாவை சாடினார். முனீர்ஹுதா தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து கோவை சிறைவாசியான அப்பாவி அப்துந்நாஸர் மஃதனிக்கு உதவினார் என நா கூசாமல் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

தமுமுக வன்மையாக இதனை மறுத்து அறிக்கையும் ஆர்ப்பாட்டமும் நடத்தியது. ஐஎஎஸ் அதிகாரிகள் சங்கமும் தனது கண்டனத்தை வெளியிட்டது.

ஆனால் போயஸ் தோட்டத்தில் புதையுண்டு போன பீஜே மூச்சு விடவில்லை.

இரண்டாவதாக, செல்வி (?) ஜெயலலிதா ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அஹமது குறித்து விஷம் கக்கினார். அறிக்கை வெளியிட்டார்.

தமுமுகவும் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் தமது கண்டனங்களை பதிவு செய்தன. அப்பொழுதும் மம்மியின் டம்மி பிஜே மவுனம் காத்தார்.

மூன்றாவதாக, தற்சமயம் இஸ்லாமிய எதிரி ஜேஜே. வக்ஃப் சொத்தை அரசாங்க சொத்தாக எண்ணி திண்டிவனம் பஸ் நிலையத்துக்காக தாரை வார்த்த விஷயம் அறிந்து தமுமுக கொதித்தெழுந்தது. கண்டன அறிக்கையும் ஆர்ப்பாட்டமும் நடத்தியது.

இப்பொழுதும் ஜேஜேவின் பினாமி பீஜே பேச மறுக்கிறார்.

அதனால் தான் அறுதியிட்டு கூறுகிறோம், போயஸ் தோட்டத்தில் பீஜே புதையுண்டு போயுள்ளார்.

எனதருமை இஸ்லாமிய சொந்தங்களே!

இஸ்லாத்தின் எதிரிகளோடு இணைந்து முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சிக்கும் இந்த இனத்துரொகி பீஜேவை நம்பலாமா?

சிந்தியுங்கள் செயல்படுங்கள். தறுதலை ஜமாஅத் ததஜ தலைவரின் தகுதியை புரிந்து கொள்ளுங்கள்.

மதுர நாயகம்
04.03.2007