Friday, April 28, 2006

கேவலப்பட்டுப்போன ததஜவினர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது என்பது முஸ்லிம்களுக்கும், மற்றவர்களுக்குமான நல்லிணக்கத்தை குலைப்பது மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கிடையிலும் பிரிவினைகளை உண்டாக்குவதாகும்.

முன்னதை அகில இந்திய அளவில் BJP பார்த்துக் கொள்கிறது. பின்னதை குறைந்த பட்சம் தமிழகத்தில் செயல்படுத்த புதிதாய் புறப்பட்டுள்ளனர் PJB வகையினர்.

இந்தியாவில் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் - இந்து சமூகங்களுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கி, சகோதரத்துவத்தை கெடுத்து முஸ்லிம்களை கொன்று குவிப்பதே BJP என்ற பயங்கரவாத கும்பலின் செயல்.

தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருந்த நம் முஸ்லிம் சமுதாயத்தில் மார்க்கம் என்ற பெயரில் பிரச்சனைகளை உண்டாக்கி சகோதரத்துவத்தை கெடுத்து, ஒவ்வொரு ஊர் ஜமாஅத்துகளிலும், முஹல்லாக்களிலும், குடும்பங்களிலும் குழப்பங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களிடையே பிளவுகளையும், அடிதடிகளையும் உண்டாக்குகின்ற சமூகவிரோத அமைப்புதான் PJB (P.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பாக்கர்).

BJP - PJB (பயங்கர - சமூகவிரோத) இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதில் எந்தளவிற்கு ஒத்து போகின்றன என்பதை சமூதாயமே சற்று வேதனையோடு சிந்தித்து உரிய நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

இனிஷியல் தான் மாறியுள்ளதே தவிர செயல்பாடுகளில் எவ்வித மாற்றமுமில்லை. தங்களின் மேலான பார்வைக்கு கீழ்கண்ட பட்டியலை சமர்ப்பிக்கிறோம்.

P.J.B (P.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பாக்கர்) தமிழக அளவில்
முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் சமூகவிரோத கும்பல்

1. மஸ்ஜிதுகளை கைப்பற்றுவது, மஸ்ஜிதுகளில் உள்ள போர்டு, கல்வெட்டுகளை சேதப்படுத்தி தனக்கு சொந்தம் என்று பொய் சொல்வது. மேலும், தொழுது கொண்டிருபவர்களை அடிப்பது அல்லது பிரச்சனைகளை உண்டாக்கி காலவரையற்று மூடவைப்பது. (உங்கள் பகுதியில் உள்ள மஸ்ஜிதுகளை அல்லாஹ்வின் உதவியைகொண்டு இந்த சமூகவிரோதிகளிடமிருந்து பாதுகாத்து வாருங்கள்)

2. முஸ்லிம் சமுதாயத்தில் பிணக்குகளை ஏற்படுத்துவது, ஜமாஅத்தார்களிடையேயும், முஹல்லதாரர்களிடேயும் பகைக்கச்சொல்வது, குடும்பத்திற்குள் மார்க்கம் என்ற பெயரில் பிளவுகளை ஏற்படுத்துவது.

3. பொய்களை மிகைப்படுத்தி உண்மையை மறைத்தது. உதாரணம் கும்பகோண மாநாட்டிற்;கு பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடினார்கள் என்றும், கும்பகோண மாநாட்டு திடலில் இடம் இல்லாததால் மாநாட்டிற்கு வந்தவர்களை காவல்துறை தஞ்சையிலேயே தடுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கேசட் மூலமாக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார்கள். ஜெயலலிதா முன்னிலையில் கூனிகுறுகி ஒரு இலட்சத்திற்கு குறைவான நபர்களே வந்தார்கள் என்று உண்மையை உறைத்துள்ளார். (வெட்கக்கேடு இவரையும் மார்க்க அறிஞர் என்று பின்பற்றுபவர்களே உஷாராக இருங்கள்)

4. இங்கேயும் டவுசர் கலாச்சாரம்

5. தன் அமைப்பை ஏற்றுகொள்ளாதவன் முஸ்லிம் இல்லை என்றும், தன் அமைப்பில் உள்ளவர்கள் எந்த முஸ்லிம் அமைப்புடனும் பேச்சுவார்த்தையோ, உறவோ வைத்துக்கொள்ளக்கூடாது என்று விஷம கருத்துக்களை பரப்புவது.

6. பிற அமைப்பிற்கு சொந்தமான முஸ்லிம் மீடியா டிரஸ்ட், உணர்வு வார இதழை பகல் கொள்ளை அடித்தது. சேர்மன் என்ற பதவியில் இருந்ததற்கே என்னை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று அல்லாஹ்வை மறந்து திமிரான பேச்சு. இன்று ஒவ்வொரு மஸ்ஜிதுகளை அபகரிக்க முயல்வது.

7. நம்பிக்கை துரோகம் செய்வது. த.மு.மு.கவை விட்டு விலகும்போது, த.மு.மு.கவிற்கு மாற்றமாக எந்த அமைப்பையும் உருவாக்க மாட்டேன் என்று எழுத்துபூர்வமாக கூறி, த.மு.மு.க நிர்வாகிகள் இம்மையில் எந்த கூலியும் எதிர் பார்க்காமல் மறுமையில் அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்ப்பார்த்தவர்களாக செயல்படுபவர்கள். த.மு.மு.க நிர்வாகிகள் மீது பழிபோடுபவர்கள் அபாண்டமாக பொய்கூறுபவர்களே என்று சொன்னவர், இன்று இயக்கத்தையும், நிர்வாகிகளையும் அழிக்க குண்டர்படைகளை ஏவுவது. கொடுத்த வாக்கை பாதுகாக்காமல் நம்பிக்கை துரோகம் செய்வது.

8. தன் அயோக்கியதனத்தை பற்றி யாராவது உண்மை விமசர்னம் செய்தால் அவர்கள் மீது பொய்வாரி தூற்றுவது அல்லது அவர்கள் மீது பழிசுமத்தி காவல்துறையில் காட்டி கொடுப்பது. விமசர்னம் செய்யும் அமைப்புகளை (அந்-நஜாத், ஜாக், விடியல் வெள்ளி, த.மு.மு.க, தப்லிக், சுன்னத்வல் ஜமாஅத். . .) அடியோடு அழிக்க தன் இயக்கத்தை சார்ந்த ஒன்றும் அறியாத அப்பாவிகளிடம் தவறான விஷமகருத்துகளை சொல்லி வெறுப்புணர்வையும், வெறியுணர்வையும் தூண்டி, எதிராக செயல்பட சொல்வது.

9. கடையநல்லூர் மஸ்ஜித் சமூகவிரோதியான உங்களுக்கு சொந்தமில்லை, அதனால் சாவியை உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று தாசில்தார் உள்பட அனைவர்கள் சொல்லியும் சட்டத்தை மதிக்காமல் தலைமறைவாக இருந்தது. எந்த மஸ்ஜிதை கைப்பற்றலாம் அல்லது எந்த மஸ்ஜிதை இழுத்து மூடவைக்கலாம் என்று தொடர்ந்து முஸ்லிம் விரோத செயல்களில் ஈடுபடுவது.

BJP. (பாரதிய ஜனதா பார்ட்டி) இந்திய அளவில்
முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத கும்பல்

1. மஸ்ஜிதுகளை இடிப்பது, மஸ்ஜிதுகளில் சிலைகளை வைத்து, எங்களுக்கு சொந்தம் என்று பொய் சொல்வது, மேலும் தொழவிடாமல் தடுப்பது அல்லது வழக்கு தொடுப்பது.

2. முஸ்லிம் - இந்துகளிடையே சகோதரத்துவத்தை கெடுத்து, பிணக்குகளை ஏற்படுத்தி, நல்லுறவுகளை பாழ்படுத்துவது.

3.பொய்களை திரும்ப திரும்ப சொல்லி உண்மைகளை மறைப்பது. உதாரணம் குஜராத் கோரமான ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று பொய்களையும், பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதர சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். உண்மை உலகிற்கு தெரிந்தும் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவில்லை. இது இந்த நாட்டின் சாபக்கேடு.

4. டவுசர் கலாச்சாரம்

5.இந்து பாஸிச கொள்கைகளை கடைப்பிடிக்காதவர்கள். நாட்டைவிட்டு வெளியேறு என்று பிரச்சாரம் செய்வது.

6. வக்பு சொத்துகளையும், முஸ்லிம்களுக்கு சொந்தமான மையவாடி சொத்துக்களை அபகரித்தது, அபகரிக்க முயல்வது.

7.நம்பிக்கை துரோகம் செய்வது, உதாரணம் பாபர் மஸ்ஜித் இடத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் பூஜை செய்கிறோம் என்று கூறிவிட்டு பாபர் மஸ்ஜித்தை தகர்த்தது. இன்றுவரை அந்த பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவில்லை.

8. இந்த பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனத்தை (தெஹல்கா ஆயதபேர ஊழல்) உலகிற்கு உண்மையை சொன்னதால் அவர்கள் மீது பொய்வழக்குகளை போட்டு, அவர்களை அழிக்க நினைத்தது.

9. சட்டத்தை மதிக்காமல் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது.

நம் சமுதாயத்தில் மார்க்கம் என்ற பெயரில் ஊடுருவிய இந்த நாசகர சமூகவிரோத கும்பல், நம் சமுதாய அப்பாவி சகோதரர்களிடையே, பிரிவினைக் கருத்துக்களைப் பரப்பி, எந்த ஒரு முஸ்லிம் அமைப்பையும் சகோதரத்துவத்தை கொண்டு பார்க்க கூடாது என்றும், முழு மூச்சுடன் அவைகள் எதிராக செயல்பட வேண்டும் என்று தூண்டுவது அல்லது அந்த அமைப்புகள் மீது புழுதிவாரி தூற்றுவது இது தான் அவர் மார்க்கம் என்ற பெயரில் போதனை செய்கிறார். அந்த அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட சகோதரர்களே இந்த செயல்பாடுகள், எண்ணங்கள் உங்களிடம் இருக்கிறதா? இல்லையா? சற்று சுயபரிசோதனை செய்யுங்கள். தமிழ்நாட்டில் செயல்படுகின்ற எந்த ஒரு முஸ்லிம் அமைப்பையாவது தோழமையுடன் அனைத்து செல்கிறதா? இது சமூகவிரோத அமைப்பு என்பதால் யாருடனும் ஒத்துபோகாமல் தனித்தே செயல்படுவதை பாருங்கள்.

பி.ஜே. என்ற மனிதர் சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வும், ரசூலும் சொன்னது போல, அவரை கண்மூடித்தனமாக பின் பற்றும் சகோதரர்களே, பி.ஜே. என்ற மாயைவிட்டு விலகுங்கள்.

P.J.B (P. ஜைனுல் ஆபிதீன். பாக்கர்) என்ற இந்த சமூகவிரோத கும்பல் சிலோனில் அங்குள்ள முஸ்லிம் சகோதரர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சியில் இறங்கியது. ஆனால் அல்லாஹ்வின் உதவியை கொண்டு, அங்குள்ள ஆலிம்களின் கடுமையான எதிர்ப்பினால் நாடு கடத்தப்பட்டுள்ளார், அதேபோல் தான் U.A.E கத்தாரிலும் பேச அனுமதி மறுக்கப்பட்டு நாடு திரும்பினார்.

P.J.B (P. ஜைனுல் ஆபிதீன், பாக்கர்) இந்த சமூகவிரோத கும்பல் சொன்னவுடன் நன்மையை கருதி நன்கொடைகளையும், சந்தாக்களையும் வாரி வழங்கும் சகோதர, சகோதரிகளே, தமிழ்நாட்டில் எத்துனையோ முஸ்லிம் அநாதை இல்லங்கள், பெண்கள் அரபி மத்ரஸா, ஆண்கள் அரபி மத்ரஸா, மாற்றுமத நண்பர்கள் முஸ்லிம் மார்க்கத்தை வாழ்;க்கை நெறியாக போதிக்கின்ற இடங்களுக்கு உங்களுடைய நன்கொடைகளை அனுப்பி ஈறுலகிலும் அல்லாஹ்விடம் நன்மையை பெறுங்கள். மாறாக, பிரிவினைக்கு வித்திடும் P.J.B. யை ஆதரித்து உங்களின் நன்மைகளை பாழாக்கிக் கொள்ளாதீர்கள்.

முஸ்லிம் சமுதாய ஜமாஅத்தார்களே, முஹல்லா தாரர்களே, சகோதர சகோதரிகளே உங்கள் பகுதியில் P.J.B (P. ஜைனுல் ஆபிதீன். பாக்கர்) இந்த சமூகவிரோத கும்பல் கூட்டம், மாநாடு போட அனுமதிக்காதீர்கள், முறையாக காவல்துறையில் தடை உத்தரவு வாங்குங்கள் அல்லது அவர்கள் போடுகின்ற அதே இடத்தில் உங்கள் சார்பாக பயான்போட ஏற்பாடு செய்து எதிர்ப்புகளை தெரிவியுங்கள். சில அப்பாவி சகோதரர்கள் இந்த P.J.B (P. ஜைனுல் ஆபிதீன். பாக்கர்) சமூகவிரோதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நம் சமுதாய மக்களை அழிக்க BJP. என்ற பயங்கரவாதி அமைப்புடனும் சேர்ந்து நம் முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க தயங்கமாட்டார்கள். சமுதாயமே உஷாராக இருந்து சமுதாயமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பையும் தேடுங்கள்.


அன்புடன்,
எல். புருஹான் 28.04.2006

Sunday, April 23, 2006

ததஜவினர் காதுகளில் பூசுற்றும் பிஜே:

இடஒதுக்கீட்டிற்கு ஆணையம் தேவையற்றது.

2004ம் ஆண்டு அக்டோபர் 23, 24 ஆகிய இரு தினங்கள் நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள மேலப்பத்தை கிராமத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடந்த மாநில செயற்குழுவில் ''தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்'' என்ற தலைப்பில், நிறைவேற்றப்பட்ட 5வது தீர்மானம்.

''ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தொடர்பாக ஆந்திர உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது கூடாது என்று குறிப்பிடவில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அவசியம் என்றும், ஆனால் அதற்கு முன்பு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையை பெற வேண்டுமெனவும் தான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழக அரசு முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிந்து இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்ய உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த ஆணையம் குறுகிய காலத்திற்குள் தனது விசாரணைப் பணிகளை நிறைவு செய்து தனது பரிந்துரையை சமர்ப்பிக்க ஆவண செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த அடிப்படையில் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க உடனே ஆவண செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது''

இந்தத் தீர்மானம் குறிப்பாக ஆந்திராவில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு சமயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இந்தத் தீர்மானமே கடைசியான தீர்மானமாக இருக்க வில்லை, அதனால் ததஜவினர் சந்தோசப்பட இதில் ஏதும் இல்லை. இதற்கு மட்டும் பிஜெ தப்ஸீரை மாற்றி எழுதியிருக்கிறார்.

'வேஸ்ட் பேப்பர் ஆணையம்' பெறப்பட்ட தேதி 03.03.2006, அதற்கு முன்பு அதாவது 19.02.2006 அன்று திருச்சியில் தமுமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தீர்மானங்கள் எண் 7,8,9,13 ஆகியவை இடஒதுக்கீடு தொடர்பான தீர்மானங்களாகும். அதிலும் குறிப்பாக 9 வது தீர்மானம் மிகமிக முக்கியமானதும் ததஜ வினர் தலையில் சம்மட்டியால் அடிக்கும் தீர்மானமாகும்.

தீர்மானம் 9, இடஒதுக்கீடு: மாநில அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க சட்டத்திருத்தமோ, புதிதாக ஆணையமோ அமைக்கத் தேவையில்லை. தமிழகத்தில் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 142 சாதிகளில் 1)அன்சாரி 2)லெப்பை (மரைக்காயர், ராவுத்தர் உட்பட) 3)தக்னி முஸ்லிம்கள் 4)ஷேக் 5)சைய்யது ஆகிய முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியில் இடம் பெற்றுள்ள 142 சாதிகளுக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு தற்போது அமுலில் உள்ளது. இந்த 30 சதவிகிதத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியில் இடம் பெற்றுள்ள 5 வகை முஸ்லிம்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மாநில அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. (பார்க்க: மக்கள் உரிமை, 2:40, பிப்24,-மார்ச்02,2006)

இந்தத் தீர்மானம் பீஜே வேஸ்ட் பேப்பரை வாங்கி வருவதற்கு 12 நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். இப்போது பீஜே தனது முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போகிறார்?

ததஜவினர் சரியான மாங்காய் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் காதுகளில் பூச்சுற்ற முயன்று இருக்கிறார் பிஜே.

தமுமுகவினர் பிஜேயை புரிந்து கொண்ட அளவுக்கு ததஜவினர் அவரை புரிந்து கொள்ளும் நாள் எப்போதோ?

முதுவைத்தமிழன் 23.04.2006

Saturday, April 22, 2006

ததஜ சுருட்டிய சுனாமி நிதி:

அருளடியான் தந்த பின்னூட்டத்திற்கு இறையடியான் தக்க பதில் அளிக்கிறார். தேவைப்படுவோர் கீழ்காணும் லிங்கிற்கு சென்று அவரது விமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

http://tmpolitics.blogspot.com/2006/04/blog-post_114536660495707722.html

அன்புள்ள அருளடியானுக்கு,
சுனாமி நிதி விஷயமாக பி.ஜே. அறுவர் குழவை அமைத்துள்ளதாகத்தான் கூறியிருந்தாரேயல்லாமல் இது ஒரு ஆலோசனை என கூறவில்லை. உண்மையில், தான் கூறும் அவதூறை தமுமுக வழக்கம்போல் அலட்சியம் செய்யும். நாம் அதை வைத்து அரசியல் செய்யலாம் என பி.ஜே. தான் எதிர்பார்த்தார்.

தமுமுக கணக்குகள் தயார், மணடபமும் தயார், சுயமாக குழு அமைத்த, அரசியல்வாதி பி.ஜே அந்த மண்டபத்திற்கு தான் அமைத்த குழுவை அழைத்துவர வேண்டிய பொறுப்பு பி.ஜேவிற்கு என பகிரங்க அழைப்பு விட்டதும், தான் அமைத்த குழு ஒரு ஆலோசனை குழுதான் தமுமுக விருமபினால் மாற்றம்; செய்து கொள்ள வேண்டியது தானே என திசை திருப்ப ஆரம்பித்தார்.

அதனையே தாங்களும் பின்பாட்டாக பாடியுள்ளீர்கள்.

தமுமுக அக்குழவை மிலன் மண்டபத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை பி.ஜேவிற்கு தந்ததே, அவர் ஏன் அங்கு அழைத்துவர வில்லை?

மிலன் மண்டபத்தில் சமுதாய பிரமுகர்களும் தமுமுக அபிமானிகளல்லாத பல பொதுமக்களும் கலந்து கொண்டனர், என்பது யாவரும் அறிந்த செய்தி, அதற்கு தங்களின் பின்னூட்டமே சாட்சி, ஆனாலும் அங்கு தமுமுகவினர் மாத்திரம் தான் கலந்து கொண்டார்கள் எனவும் முரண்பட்டு குழம்பியுள்ளீர்கள்.

பாதிக்கப்பட்டோருக்கான நிவராண நிதியிலிருந்து தனது பத்திரிக்கைக்கோ அத்துடன் இயக்க சீருடைகளுக்கோ நிதி ஒதுக்கிக்கொள்ளாமல் முழுக்க முழுக்க அந்நிதியை பாதிக்கப்பட்டோரின் நலனுக்காகவே செலவிட்ட தமுமுக தனது பத்திரிக்கையின் இடநெருக்கடி காரணமாக முழுவிபரங்களையும் வெளியிட முடியாத நிலையில் உள்ளது.

என்றாலும், தேவைப்படுபவர்கள் நகல் எடுக்கும் கட்டணத்தை மட்டும் செலுத்தி நகல் பெற்றுக்கொள்ளலாம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது, தேவைப்படுபவர்கள் தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அதுசரி, நண்பர் அருளடியான், பாதிக்கப்பட்டோரின் நிவாரண நிதியிலருந்து தனது இயக்கத்தவர்களுக்கு சீருடை வாங்கவும், பத்திரிக்கையின் கடனை அடைப்பதற்கும் ததஜ சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் செலவிட்டது, மார்க்க ரீதியாக சரி என்கிறாரா?

மறுமையில் அம்மக்கள் முறையீடு செய்ய மாட்டார்கள் என ததஜ தலைமை நம்புவது போல் நண்பர் அருளடியானும் நம்புகிறீரா?

இறையடியான் 23.04.2006

Wednesday, April 19, 2006

ததஜவும் அதன் நேர்மையும்

சகோதரரர் தவ்பீக் அஹ்மதின் கட்டுரைக்கு இறையடியான் விமர்சனம் எழுதுகிறார். தேவைப்படுவோர் கீழ்காணும் லிங்கிற்கு சென்று சகோதரரர் தவ்பீக் அஹ்மதின் கட்டுரையை பார்த்துக் கொள்ளுங்கள்.

http://tmpolitics.blogspot.com/2006/04/blog-post_114536660495707722.html

விபரங்கெட்டவர்களின் விலாசம் தான் ததஜ என்பதை சகோ. தவ்பீக் மீண்டும் நிரூபித்துள்ளார்.

சுனாமி மட்டுமல்ல ஏகத்துவம் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலுமே தாங்கள் பிஜேயின் நிரந்தர பினாமிகள் தான், அவர் ஸஹாபாக்களை ஏசினாலும் ஏற்றுக்கொள்வோம், சக அமைப்புகளை, முஸ்லீம் சகோதரர்களை எந்த அளவு கீழ்தரமாக விமரிசித்தாலும் அப்படியே எதிரொலிப்போம் என்ற கொள்கையுடையவர் என தெளிவு படுத்தியுள்ளார்.

பொதுவிசாரணை குழு அமைக்கும் பொறுப்பை தமுமுக, ததஜவிற்கு அளிக்கவில்லை. மாறாக, எவ்வித ஆலோசனையுமின்றி தானாக குழு அமைத்துக்கொண்ட திருவாளர் பிஜேவை அவர் அமைத்த அறுவர் குழுவுடன் மிலன் மண்டபத்திற்கு வரச்சொல்லி அழைத்தது தமுமுக தன்னிச்சையாக குழு அமைத்தவர், தமுமுகவின் அழைப்பை உதாசீனப்படுத்தி ஒடி ஒளிந்தது ஏன்?

அறுவர் குழு இரண்டாம் அமர்விலேயே நால்வர் அணியாக சுருங்கியது ஏன்? நடுவர்கள் என தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட நடுநிலையற்றவர்கள் மட்டுமல்ல பொதுமக்கள், அனுதாபிகள் ஏன் எதிரிகளும் கலந்து கொண்டு பார்வையிடவும், விளக்கம் பெறவும் வகை செய்த தமுமுகவின் அறிவிப்பு டிஎம்எம்கே டாட் ஐஎன் http://www.tmmk.in/ என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், ஸ்குரோல் எனப்படும் சிறப்புச்செய்தியாக டிசம்பர் 10 வரை ஓடிக்கொண்டிருந்ததை சகோ. தவ்பீக், ததஜ தலைவரால் பூட்டப்பட்ட விழித்திரையால் (Eye lid) பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.

அல்லது முன்பு ஒரு முறை ஜே.ஏ.க்யூ.ஹெச் என எழுதியிருந்ததை (எம்.ஹெச்.ஜெ) ஜவாஹிருல்லாஹ் என வாசித்தது மட்டுமல்லாமல், அப்படியே பிரச்சாரம் செய்த ததஜவினரைப்போல இப்போழுதும் தவறான செய்தியை பரப்ப முன் வந்திருக்கலாம். ஆனால் உண்மை என்னவோ, தமுமுக தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தனி நபரின் தன்னிச்சையான அறைகூவiலுக்கான பதில் முதல் டிசம்பர் 10 மிலன் மணடபத்தில் நடந்தது வரை ஒவ்வொரு நிகழ்வையும் விரிவாக வெளியிட்டு வந்தது என்பதுதான்.

ஃபித்ரா வசூல் மற்றும் விpனியோக விபரங்கள் வெளியிடப்படும் நடைமுறையில் தமுமுக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை, தேவைப்படும் மாற்றங்களை கோருவதற்கும், ஆலோசனை செய்து முடிவெடுப்பதற்கும் நிர்வாகிகளுக்கு தகுதியுண்டு.

சுனாமி நிதியில் பத்திரிக்கைக்கு லட்சக்கணக்கில் பணம் ஒதுக்கிக்கொண்டவர்கள், பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க வழங்கப்பட்ட பணத்தில் தனக்கு சீருடை வாங்கி படம் காட்ட ஆயிரக்கணக்கில் ஒதுக்கிக்கொண்டு சுனாமி நிதியை சூறையாடியவர்கள், சுனாமியின் சுவடே அறியாத வேலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கி முறைகேடு செய்தவர்கள் - இத்தனையையும் செய்த ததஜ தலைமையை தட்டிக்கேட்க வழியில்லாதவர்கள், விழி பிதுங்கி செய்வது இன்னதென்று அறியாமல் பிஜேயின் பினாமிகளாக மாறிவருகின்றனர்.

ததஜ தலைமை சுனாமிக்கென்று நிதி வசூல் செய்த வங்கி கணக்கு எண் என்ன ?

வந்து வழுந்த நன்கொடைகளை சுனாமி என்றும், இயக்கத்திற்கான நன்கொடை என்றும், ஜகாத் நிதி என்றும் எப்படி இனம் கண்டார்கள்?

தமுமுக வெளியிட்டது போல் வங்கி அறிக்கையை வெளியிடத்தயாரா ?

தமுமுக தனது கணக்குகளை தணிக்கை அதிகாரி மூலம் தணிக்கை செய்தது போல் ததஜ கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்த தயாரா?

ஏக இறைவனுக்கு கீழ்படிவதே ஏகத்துவம் (தவ்ஹீத்) என்பது போக, இப்போது ஏக ஒருவன் (பீ.ஜே)க்கு கீழ்படிவதே மறுமைவெற்றி என நம்பிக்கைகொண்டுள்ள ததஜவினர் தெளிவு பெறவும், சூனியக்காரர்களின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு தூய இஸ்லாத்தை பினபற்றும் நன் மக்களாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

இறையடியான் 20.04.2006

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு!

தமுமுக முன்னெடுத்த கோஷம் இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த பத்தாண்டு கால போரட்டத்தின் பலன். அல்ஹம்துலில்லாஹ்.

பத்தாண்டுகளுக்கு முன் இந்த முழக்கம் முன் வைக்கப்பட்டபோது ஏளனம் செய்த திமுக கடந்த இரு தேர்தல்களில் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பின் இட ஒதுக்கீடு விஷயமாக திமுகவும், காங்கிரஸும் பல காரியங்களில் ஈடுபட்டு வருகிறது.

முஸ்லீம்களின் தனி இட ஒதுக்கீட்டிற்காக மாநாடு நடத்தி கவனத்ததை ஈர்ந்த கட்சி பா.ம.க., ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அறிக்கை விட்டது அதிமுக தலைமை.

இந்த நிலையில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் முஸ்லீம்களுக்கான ஒதுக்கீடு அவரவர் கட்சிகள் சார்பாக எந்த அளவு இருக்கிறது என நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.

எதிர்ரும் சட்டசபை தேர்தலில் இரு அணிகளும் ஒரு தனி நபரும் ஆகிய மூன்று அணிகள் (கட்சிகள்) சார்பாகத்தான் தமிழகம் முழுதும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.

அதன்படி, தேமுதிக சார்பில் நடிகர் விஜயகாந் 234 தொகுதிகளில் மொத்தம் 15 முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். (6.41 சதவிகிதம்)

ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில், திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 130 இடங்களில் 5 தொகுதிகளிலும் (3.85 சதவிகிதம்) காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகளில் ஒரு இடத்திலும் (2.08 சதவிகிதம்) முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதே அணியில் உள்ள பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு இடத்தில்கூட முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தாமல் ஏமாற்றியுள்ளது.

சி.பி.ஐ., சி.பி.எம். ஐப் பொருத்த அளவில் முஸ்லீம்களின் பங்கபளிப்பு குறைவாக அல்லது அறவே இல்லாமலிருப்பதால் அவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது தவறு. ஆனால் பா.ம.க வைப்பொறுத்தவரை ஆரம்ப காலம் தொட்டே குணங்குடி ஹனீபா மற்றும் பழநிபாபா போன்றவர்களின் பங்களிப்பால் வளர்ந்த கட்சி, முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு மாநாடு நடத்திய கட்சி, இன்றளவும் முஸ்லீம் நிர்வாகிகளைக்கொண்ட கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 31 இல் ஒரு இடத்தில்கூட முஸ்லீம்களை நிறுத்தாமல் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

எனவே, திமுக அணியை ஆதரிப்பதென்று முடிவெடுத்த தமுமுக, பாமக விஷயத்தில் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவித்துவிட்டது.

பாமக வின் நிலையை காரசாரமாக விமரிசித்த பி.ஜே. தான் ஆதரிக்கும் அதிமுக அணியின் நிலை குறித்து எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அணியை பொறுத்தவரை, 182 இடங்களில் போட்டியிடும் அதிமுக, முஸ்லீம்களை நிறுத்தியது வெறும் 3 இடங்களில்தான் (1.65 சதவிகிதம்) 35 இடங்களில் போட்டியிடும் மதிமுக நிறுத்தியதோ வெறும் ஒரு முஸ்லீமைத்தான் (2.85 சதவிகிதம்) இவர்களைத்தவிர விடுதலை சிறுத்தைகளும் மற்றவர்களும் ஜாதி அடிப்படையில் உள்ளதால், அவர்களிடம் எதிர்ப்பார்ப்பது தவறு என்பதால் விட்டு விடலாம்.

ஆனால் அதிமுக தனிப்பட்டு 182 இடங்களில் மூன்றே மூன்று இடங்களில் மட்டும் நிறுத்தியுள்ளதே இதனை பி.ஜே ஏன் கண்டிக்கவில்லை.

இவர்களைத்தவிர நடிகர் இயக்குனர் டி. ராஜேந்திரனின் ல.தி.மு.க சார்பாக 11 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இவர் பி.ஜே. யின் நெருங்கிய நண்பர். வெள்ளி மேடையில் பேச அழைக்கப்பட்ட முஸ்லீம் அல்லாத ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு முஸ்லீமைக்கூட நிறுத்தாததைக்குறித்து பி.ஜே. ஏன் ஒன்றுமே கூறவில்லை என்று சிந்திக்க வேண்டும். தனது தர்ஜமா விளம்பரத்திற்காக டி. ராஜேந்திரனை வெள்ளி மேடை ஏற்றிய பி.ஜே ல.தி.மு.கவின் நிலை குறித்து அவசியம் கருத்து தெரிவிக்க வேண்டும் நடக்குமா?

பா.ம.க வை விமர்சித்தது போல் மிக குறைவாக தொகுதி ஒதுக்கிய அதிமுகவையும் தொகுதியை ஒதுக்காத லதிமுகவையும் ததஜ கண்டிக்கப் போகிறதா? அல்லது கண்டு கொள்ளாமல் விடப்போகிறதா?

சாயபு 18.04.2006

Tuesday, April 18, 2006

மதமாற்றத்தடை சட்டமும் தனி இடஒதுக்கீடும்

மதமாற்ற தடைச் சட்டமும் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடும்

தேர்தல் என்றாலே பரபரப்பும் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தான் என்ற இலக்கணத்திற்கு தமிழக சட்டசபைத் தேர்தலும் விதிவிலக்கல்ல.

கூட்டணித்தலைவர்களின் அறிக்கைகளும் விமர்சனங்களும் பொதுமக்களுக்கு சிறந்த பொழுது போக்கு அம்சங்களாக விளங்குகின்றன.

இதற்கு நடுவில் உளவுப்பிரிவினரின் கூத்து வேறு.

மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வில்லை என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், கூட்டணியை ஆதரிக்கும் திராவிடக் கழகம் மற்றும் தமுமுக போன்ற இயக்கங்களும் பிரச்சாரம் செய்து வருகின்றன. இது உண்மைக்கு புறம்பானது என்றும் மதமாற்றத் தடைச் சட்டம் ரத்துசெய்யப்பட்டது உண்மையென்றும் இதனை முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எடுத்துரைக்க வேண்டும் என்றும் உளவுப்பிரிவினர் பரிந்துரை செய்துள்ளதாக பத்திரிக்கைக் குறிப்பு கூறுகிறது.

அப்படியானால் அதிமுகவின் புதிய தோழர் அண்ணன் பிஜே அவர்கள் வாயார வாழ்த்தும் இடஒதுக்கீட்டு ஆணையம் குறித்தும் முதல்வரைப் பேசச் சொல்லலாமே.

ஆனால் பாவம் முதல்வர் எப்படி இடஒதுக்கீட்டு ஆணையம் குறித்து பேசுவார். முன்தேதியிட்டு கையொப்பம் இட்டிருந்தாலும் இன்று வரை கெஸட்டில் வெளியிடவில்லையே, அதனால் தானே இன்று வரை அவரோ அவருடைய அமைச்சர்களோ ஏன் மூன்றாம் நான்காம் மட்ட பேச்சாளர்கள் கூட வாய் திறக்க மறுக்கின்றனர்.

சன்டிவி மற்றும் கருணாநிதி குடும்பத்தவரை எதிர்ப்பதற்காகவே வைகோவை விலை கொடுத்து வாங்கி உள்ளது போல் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் வெளியிடப்படாத போலி ஆணையத்தை பெரிதாய் காட்டி பிரச்சாரம் செய்யத்தான் பிஜேவை விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அதனால் தான் முதல்வர் இதுவரை ஆணையம் பற்றி எதுவும் வாய் திறக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை முதல்வர் வாய் திறந்தால் ரேஷன் அரிசி விஷயத்தில் வைகோ முகத்தில் கரி பூசியதைப் போல அண்ணன் பிஜெ முகத்திலும் பூசுவாரோ?

கனி ராவுத்தர் 18.04.2006

Sunday, April 16, 2006

உணர்வு பத்திரிக்கையும், பா.ம.க தொகுதிகளும்!

தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இருப்பதால் பத்திரிக்கைகளுக்கு செம தீனி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கட்டுரைகளும், கருத்துக்கணிப்புகளும் விறுவிறுப்போடு வெளியாகி வருகின்றன.

கடந்த வார உணர்வு பத்திரிக்கையில், பா.ம.க. குறித்த செய்தி இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது. 31 தொகுதிகளை போராடி பெற்ற பா.ம.க. முஸ்லீம்களை எத்தனை தொகுதியில் நிறுத்தப்போகிறார் என்று ஆவலோடு அனைவரும் காத்திருந்தனர்.

முஸ்லீம்களின் தனி இடஒதுக்கீடுக்காக மாநாடு நடத்திய ராமதாஸ், நிச்சயம் ஓரிரு தொகுதிகளை ஒதுக்குவார் என்றே எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் ஒரு இடமும் முஸ்லிம்களுக்கு ஒதுக்காமல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த முடிவை த.மு.மு.க வன்மையாக கணடித்து களப்பணியிலிருந்து பா.ம.க தொகுதிகளில் ஒதுங்கி இருப்பதாக அறிவித்தது. த.த.ஜ.வும் இதில் தனது பங்குக்கு கருத்துக்கூறியது தான் இன்று கேலிக்குறியதாக ஆகிவிட்டது.

பா.ம.க முஸ்லீம்களுக்கு தொகுதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கதுதான், என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதனை கண்டிக்க த.த.ஜ விற்கு எந்த அருகதையும் இல்லை.

ஏனெனில் அதற்கு முந்தய வார உணர்வில் ஒரு கேள்வி பதில் இடம் பெற்றிருந்தது. எதிரணியிலருந்து முஸ்லீம் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் நாம் யாருக்கு ஓட்டளிப்பது என்ற கேள்விக்கு அ.தி.மு.க அணியில் யார் நிற்கிறாரோ அவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும், எதிரணியில் முஸ்லீம் வேட்பாளர் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

எதிரணியில் முஸ்லீம் வேட்பாளராக இருந்தாலும் தோற்கடிக்க வேண்டும் என கூறியவர், முஸ்லீம் வேட்பாளர்களை ஏன் நிறுத்;தவில்லை என குரல்கொடுப்பது இரட்டைவேடம் தானே.

முஸ்லீம் சமுதாயமே! சமுதாய துரோகிகளை அடையாளம் கண்டுகொள்வீர். . . .

- சாயபு 16.04.2006

Friday, April 14, 2006

அதிகம் வெறுக்கப்படுவது ததஜ.

விவாத களமமைத்தமைக்கு நன்றி

ததஜ துவங்கப்பட்டு - அல்லது ததஜ என்ற அரசியல் கட்சிக்கு அச்சாரமாக, தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கத்திலிருந்து பி.ஜெ விலகிச் சென்று - சரியாக இரண்டு வருடங்கள் முடிந்து இன்று இத்தலைப்பு மிகவும்
தேவையானதே.

நூற்றாண்டு பாரம்பரியமுள்ள கட்சி, சுதந்திரத்திற்கு முன்பே உருவான கட்சி, நாட்டு சுதந்திரத்தில் நியாயமான பங்களித்துள்ள கட்சி என்று பெருமை பாராட்டும் தகுதியுள்ள கட்சிகள் இந்தியாவிலேயே இரண்டே இரண்டு தான். முதலாவது இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாவது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இவை இரண்டுக்கும் எவ்வாறு கடந்த கால வரலாறு எவ்வாறு ஒன்றாயிருக்கிறதோ அதேபோல் நிகழ்கால வரலாறும் ஒரு
விஷயத்தில் ஒத்துப் போயுள்ளதை நாம் காண்கிறோம்.

அதாவது, நூற்றாண்டு பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சி இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி துண்டு துண்டாகிப் போயுள்ளதோ அதேபோல் முஸ்லிம் லீக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிளவுபட்டு நிற்பதை காணுகிறோம். தமிழகத்தைப் பொறுத்த அளவிலும் காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் ஒரே சம் அளவில்தான் நிற்கின்றன.

ஒவ்வொரு தலைவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக சமுதாய ஒற்றமையை குலைப்பதும், பிறகு அவரால் ஆதாயம் பெற்றவர்கள் அதனை அப்படியே இழுத்துச் செல்வதும் பின்னணி விபரங்கள் புரியாத சராசரி ஆட்கள் கூட்டத்தோடு கும்மி அடிப்பதும் விபரம் புரிந்து விலக நேர்ந்தால் மவுனமாக அடக்கி வாசிப்பதும் தான் இத்தகைய நிலை ஏற்பட காரணங்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அளவில் இத்தகைய பிரச்சனைகளை சந்தித்தது. அதற்கும் முன்பு ஒரு காலத்தில் தமிழக சட்ட சபையில் எதிர் கட்சி அந்தஸ்தோடு அமர்ந்திருந்த அக்கட்சி, தலைவர்களின் சுயநலப்போக்கால் சிதறுண்டு ஒரு தலைவர் அவருக்கு ஒரு மில்லத் பட்டம் அவரவருக்கென சில பிரமுகர்கள் இந்த பந்தாக்களோடு தேர்தல் சமயங்களில் ஆளும் எதிர் பிரதான கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி
என பொழுது போக்கியதால், இஸ்லாமிய இளைஞர்களுக்கு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தித் தந்தது.

அதுவும் போதாமல், அவர்களுக்குள்ளே கூட்டணி குழப்பங்கள் ஏற்பட்டு ஆளும், எதிர் அணிகளில் எதிரெதிரே நின்றும் மோதிக் கொண்டனர். இன்று அதிலும் ஒரு பரிணாம வளர்ச்சியாக முஸ்லிம் லீக் ஸ்தாபனர்களில் ஒருவரான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பேரன் - இந்த ஒரு தகுதியை மட்டும் வைத்து ஒரு சீட்டும் வாங்கி இரண்டு லீக்கை மூன்று லீக்குகளாக வளர்த்து விட்டார்.

இப்படியாக இவர்களின் செயல்பாடுகளால், வெறுத்துப் போயிருந்த இஸ்லாமிய இளைஞர் வட்டம், ஒவ்வொரு முறை கூட்டணி அமைத்த கட்சிகளுடனும் ஐக்கியமாகி தனது முகவரி இழந்தது. தவிர, மக்களின் பிரச்சனைகளில் - குறிப்பாக, இஸ்லாமிய சமுதாயம் சந்தித்த பிரச்சனைகளில் கூட - தனது பங்களிப்பை முறையாக பதிவு செய்ய முஸ்லிம் லீக் தவறியது. இதன் காரணமாக பொதுமக்களிடமிருந்து அன்னியப்பட்டுப்போனது.

ரபியுள் அவ்வல் மாதத்தில் மீலாது விழாக்கள் நடத்துவதும், அதுவும் மீலாது மேடைகளில் நபி (ஸல்) அவர்களின் சாதனைகளை போதனைகளை சொல்வதை விடவும், தான் அழைத்திருக்கும் கட்சித் தலைவரின் சாதனைகளைப் பற்றி பேசுவதில் புளகாங்கிதம் அடைந்தனர்.

தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் தலை காட்டும் முஸ்லிம் லீக்கை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இதனால் தான் வெறுக்கத் துவங்கினர்.

ஆனால் முஸ்லிம் மக்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்துள்ள முஸ்லிம் இயக்கம் எதுவெனில், சந்தேகமில்லாமல் அது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தான் என எவரும் கூறிவிடுவர்.

அதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக இருந்த போதிலும் சிலவற்றை மட்டும் வாசகர்களின் பார்வைக்காக இங்கே பட்டியலிடுகிறேன்.

1) வெகு காலங்களுக்குப் பிறகு வாராது வந்த மாமணியாக, மக்களின் தேவைகளுக்கு செவி சாய்ப்பவர்களாக, பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர்களாக, துன்பங்களுக்கு தோள் கொடுப்பவர்களாக செயலாற்றி வரும் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்த எண்ணி சமுதாயத்தைப் பிளந்ததை - முஸ்லிம்கள் வெறுக்கின்றனர்.

2) தமுமுகவிலிருந்து விலகியதிலிருந்து இன்று வரை ததஜ வெளியிட்டு வரும் அறிக்கைகள், இவற்றிலுள்ள முரண்பாடுகளை விவரிக்க தனி இணைப்பு தேவைப்படும். முரண்பட்ட இவர்களின் அறிக்கைகளைக் கண்டு முஸ்லிம்கள் முகம் சுளிக்கின்றனர். வெறுக்கின்றனர்.

3) வேறு எந்த முஸ்லிம் அமைப்பிலும், இயக்கத்திலும், கட்சியிலும் இல்லாத அளவுக்கு ததஜ நிர்வாகிகள் மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்.

3.1) அமைப்பு துவக்கப்பட்ட பொழுது துணைத் தலைவராக இருந்து இன்று தலைவராகியுள்ளவர் தமுமுகவிலிருந்து மீடியாவையும், டிரஸ்ட் சொத்துக்களையும் சுருட்டிச் சென்றார் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டை இன்றுவரை சுமுதாய மக்களிடம் தெளிவுபடுத்தாமல் திமிராக நடந்து கொள்வது.

3.2) அமைப்பு துவங்கப்பட்ட போது தலைவராக இருந்து, இன்று டம்மியாக ஆக்கப்பட்டுள்ளவர் மீது கூறப்படும் பாலியல் (ஓரின) குற்றச்சாட்டுகள்.

3.3) அமைப்பு துவங்கப்பட்ட போது உலகத்திலேயே முதன்முறையாக இரு பொதுச் செயலாளர்களை கண்டது. அதில் ஒருவர் சுயமாகவோ அல்லது தலைவரின் பினாமி என்பதாலோ ஏகபோக பொதுச் செயலாளராக ஆகி மற்றவரை துணைப்பொதுச் செயலாளராக்கியது.

இந்தப் பொதுச் செயலாளர் மண்ணடியில் ஒரு மான்சனில் கையும் மெய்யுமாக பிடிபட்டபோது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு.

3.4) துணைப்பொதுச் செயலாளராக இருந்த பெருந்தனக்காரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டது.

3.5) இவர்கனைத் தவிர இந்த அமைப்பின் உலமாக்களாக அறிப்பட்ட பல மவ்லவிகளின் ஒழுக்கம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள்.

இதுபோன்ற இன்னும் பல பொருளாதார, பாலியல், ஒழுக்கவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிர்வாகிகளைக் கொண்ட ததஜவை முஸ்லிம்கள் எப்படி நேசிக்க முடியும். ஆகவே தான் முஸ்லிம்களால் பெரிதும் வெறுக்கப்படக்கூடிய கட்சியாக ததஜ உள்ளது.

4) சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளின் பெயரால் வசூலித்த பொதுமக்களின் நன்கொடையை, பாதிக்கப்பட்டோரின் செல்வத்தை சுயநலத்திற்காக செவிட்ட கயமைத்தனம்.

4.1) பாதிக்கப்பட்டோரின் பணத்திலிருந்து 2 இலட்சம் ரூபாயை தனது பத்திரிக்கைக்காக ஒதுக்கிக் கொண்டது. (எல்லாப் பத்திரிக்கைகளும் தங்களது சுனாமி வரவு செலவை பிரசுரித்த போதும் எவரும் அதற்காக பாதிக்கப்பட்டோரின் பணத்திலிருந்து பங்கு ஒதுக்கிக் கொள்ள வில்லை.)

4.2) பாதிக்கப்பட்டோரின் பணத்திலிருந்து தனது இயக்கத்தவருக்கு சீருடை வாங்கிக் கொண்டது. (இதுவும் வேறு எவரும் செய்திராத ஒன்றாகும்.)

இவை இரண்டும் ஜஸ்ட் சாம்பிள்கள் தான். இவை போன்ற ஏராளமான தில்லுமுல்லுகளை பகிரங்கமாக செய்துவரும், பாதிக்கப்பட்டோரின் பொருளாதாரத்தை விழுங்கி வரும் ததஜவை தமிழக முஸ்லிம்கள் மிகவும் வெறுப்பதில் வியப்பேதுமில்லை.

5) இஸ்லாமிய அடிப்படை கடமை எனும் தூணாகிய ஜகாத்தை மறுப்பது.

6) தமிழக வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர் ஸஹாபாக்களை கேவலமாக விமர்சித்தது.

6.1) நபி (ஸல்) அவர்களால் சொர்க்கத்தை குறித்து நன்மாராயம் சொல்லப்பட்ட உத்தம ஸஹாபி அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களை கிரிமினல் என்றது.

6.2) முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களை ரவுடி என்றது.

6.3) அன்ஸாரி தோழர்களை (ரலி-அன்ஹும்) பணத்தாசை, பதவி ஆசை பிடித்தவர்கள் என்றது.

6.4) நபியின் பேரன் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களை பதவி ஆசை பிடித்தவர் என்றது.

6.5) இஸ்லாமிய குடியரசின் இரண்டாம் கலீஃபாவாகிய உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்தான் முதன் முதலில் ஃபித்னாவை ஆரம்பித்து வைத்தவர் என்றது.

6.6) நான்காம் கலீஃபாவாகிய அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எடுப்பார் கைப்பிள்ளை என்றது.

இப்படியாக, இதற்கும் மேலாக உத்தம சத்திய ஸஹாபாக்களை - எதிரிகளும் சொல்ல கூசும் வார்த்தைகளால் விமர்சனம் செய்வதை எந்த முஸ்லிம் பொறுத்துக் கொள்ள முடியும்.

எனவே அனைத்து முஸ்லிம்களும் அதிகம் வெறுக்கும் இயக்கம் ததஜ மட்டுமேயாகும்.

7) இதுபோன்ற எண்ணற்ற காரணங்களால் முஸ்லிம்களில் பெரும்பாலோனோர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தை வெறுத்த போதிலும், மிகச் சிலர் தவ்ஹீதுவாதிகள் என தங்களை நம்பிக் கொண்டுள்ள சிலர், ததஜவின் இன்றைய தலைவரை சின்னத்திரையில் மட்டுமே கண்டு வந்த
அச்சிலர் ததஜ மீது வைத்திருந்த நம்பிக்கையை தகர்த்த மற்றொரு காரணம் (லாஸ்ட பட் நாட் லீஸ்ட்)

தற்சமயம் அ.இ.அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராகிப்போன ததஜ தலைவர் மற்றும் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக இருந்து தற்சமயம் அ.இ.அ.தி.மு.க வார இதழாக மாறிப்போன உணர்வு வார இதழின் சமீபத்திய நிலைபாடு.

7.1) ஆதரிக்க ஒன்றுமேயில்லாத ஆணையத்தை தனது வாதத்திறமையினால் தூக்கி நிறுத்த பகீரத முயற்சி செய்வது.

7.2) இதுவரை கெஸட்டில் வெளியிடப்படாத ஒன்றை ஆணையம் அமைந்துவிட்டது எனக்கூறுவது.

7.3) ஜெயா டிவியும், நமது எம்.ஜி.ஆரும் செய்யாத அளவுக்கு ஜெயலலிதா புராணம் பாடுவது.

7.4) கும்பகோணத்தின் இரண்டாவது வெற்றி என குலவையிட்டு விட்டு, இப்பொழுது திருமாவளவன் பேட்டி மூலமாக இந்த ஆணையம் தேர்தலுக்குப் பின் தான் அமுலுக்கு வரும் என்று கூறுவது.

7.5) கெஸட்டில் வெளியிடப்படாத நிலையில் தேர்தலுக்கப்பின்பு கூட எப்படி அமுலாகும் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் உதாசீனப்படுத்துவது.

7.6 ஜெயலலிதாவின் ஆணவம், திமிர் பேச்சு என்று முன்பு குறிப்பிட்ட அதே விஷயங்களை இன்று ஜெயலலிதாவின் மிடுக்கு என பெருமையோடு வர்ணிக்கும் கேடு கெட்ட செயல்.

7.7) நவீன ஷைத்தான் என்று உருவகப்படுத்தப்பட்ட ஜெயலலிதா இன்று அவர்களால் நிம்மதியான சுவாசம் வழங்கியவர் என புகழாரம் சூட்டப்படும் விசுவாசம்.

அத்தோடு, கடையநல்லூர் ஜும்ஆ பள்ளிவாசல் விஷயத்தில் ததஜ நடந்து கொண்ட முறை. போன்றவற்றால் அதிர்ச்சி அடைந்துள்ள முஸ்லிம்கள் அதிகம் வெறுப்பது ததஜவைத் தான்.

மற்றும் இடஒதுக்கீடு பெயரைச் சொல்லி முஸ்லிம்களை வரவழைத்தவர் கோனிகா பஷீருக்கு அதிக சீட்டு ஒதுக்கீடு தான் உண்மை நோக்கம் என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக குமுறும் சமுதாயம் ததஜவை அதிகம் வெறுப்பது இயற்கை தானே.


மேலும் கும்பகோணத்தில் கூடியவர்களின் எண்ணிக்கையை சமுதாய மக்களிடம் ஒருவிதமாகவும், உளவுத்துறையை கையில் வைத்துள்ள முதல்வரிடம் ஒருவிதமாகவும் கூறியதிலிருந்து ததஜ தலைவரின் பேச்சுக்களை எந்த அளவு நம்ப முடியும் என விரக்தியடைந்த முஸ்லிம்கள் இன்றைய தேதியில் அதிகம் வெறுப்பது ததஜவைத்தான் என்பது நிதர்சனமான உண்மை.

திராவிட கட்சிகளின் துரோகத்தை விட, லீக்குகளின் செயலிழந்த தன்மையை விட, ததஜவின் நம்பிக்கை மோசடியே பிரதானமாக முஸ்லிம்களை கொதிப்படைய செய்திருப்பதால், இன்றைய தேதியில் தமிழக முஸ்லிம்கள் மிகவும் வெறுப்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் தான்.

அபூஇஸ்மத் 14.04.2006

Wednesday, April 12, 2006

தமுமுக தனிமனிதரைச் சார்ந்த இயக்கமல்ல,

சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமுமுகவின் மாநில அமைப்பாளர் உட்பட அனைத்து பொருப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டபோது அவர் எழுதிய 'மனம் திறந்த மடல்'

மனம் திறந்த மடல்

என் மீது அன்பு கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பி. ஜைனுல் ஆபிதீன் எழுதும் மனம் திறந்த மடல். அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த இருபது ஆண்டுகளாக என்னால் இயன்ற பொதுப் பணிகளைச் செய்து வந்தேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பாளராகவும் ஐந்த ஆண்டுகளாக நான் இருந்து வருகிறேன்.

எதிர் வரும் ஜனவரி மாதம் பத்தாம் தேதியிலிருந்து தமுமுகவின் மாநில அமைப்பாளர் பொறுப்பு உட்பட நான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புக் களிலிருந்தும் இன்ஷா அல்லாஹ் விலகிக் கொள்கிறேன். இது குறித்து மனம் விட்டு பேசவே இந்த மடலை வரைகிறேன்.

விலகும் நேரத்தில் இதை அறிவிக்காமல் முன் கூட்டியே அறிவிப்பதற்குக் காரணம் இருக்கிறது. தமுமுகவின் மீது எனக்கு அதிருப்தி ஏற்பட்டு, அதனால் நான் விலகுவதாகப் பிரச்சாரம் செய்ய சிலர் காத்துக் கிடக்கின்றனர்.

தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களைவிட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழகம்
சிதறுண்டு விட்டால் மீண்டும் இந்தச் சமுதாயத்தை ஒன்று திரட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகத் தான் இக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுவதாக இல்லை.

தமுமுகவின் இன்றைய தலைமை நிர்வாகிகள் மீது நான் அதிருப்தியடைந்து ஒதுங்குவதாகவும் யாரும் நினைத்து விட வேண்டும். இன்று இருக்கின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உறுப்பினராக நான் இருப்பதே இதற்குச் சான்று.

மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.

ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.

மறுமைக்கான பணியைக் கூட சில பேர் இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கி விட்ட நிலையில் இவ்வுலகிற்காக மட்டுமே உரிய பணிகளை கூட இவர்கள் மறுமைக்காக ஆக்கிக் கொண்டதை நான் பார்க்கிறேன்.

? தமுமுகவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை.

? கூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை.

? எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு பிரச்சனைகளைத் தீர்க்கும் தியாக மனப்பான்மை.

? எந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துத் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராத தன்மை.

? எத்தகைய மிரட்டலுக்கும் அடக்கு முறைகளுக்கும் அஞ்சாத துணிவு.

? கலவரத் தீ மூண்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப் பணியாற்றும் பாங்கு.

? தங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம்.

? எந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல்.

? சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பொறுப்புணர்வு.

? உணர்வுகளைக் தூண்டி விட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளுதல்.

இப்படி சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநிலத் தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கின்றேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை
வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

இதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையிடுவேன்.

நான் விலகிக் கொள்வதாக முடிவு செய்ததற்குரிய காரணங்களைச் சொல்கிறேன்.

இந்த முடிவை நான் இப்போது எடுக்கவில்லை. எனது உடல் நிலை மோசமடைந்து மாரடைப்பு ஏற்பட்டது முதலே இந்த முடிவை எடுத்திருந்தேன்.

ஆனால் அந்த நேரங்களில் எல்லாம் தமுமுகவை அழிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. கோவை குண்டு வெடிப்பு, அதற்கு முந்தைய கலவரம், வெடிக்காத குண்டுகள், டிசம்பர் போராட்டங்களுக்கு எதிரான அடக்கு முறை, தமுமுக என்று தன்னை சொல்லிக் கொண்டாலே சிறைவாசம், என்றெல்லாம்
மிரட்டல்கள் வந்தன. இந்த இக்கட்டான நிலையில் ஒதுங்குவது கோழைத்தனமாகக் கருதப்படும். மற்றவர்களின் மன உறுதியையும் இது பாதிக்கும் என்பதால் முடிவைத் தள்ளிப் போட வேண்டிய நிலை.

இன்று கழுகத்துக்கு எந்த நெருக்கடியும் இல்லை. கிளைக் கழகத்தில் பொறுப்பு வகிப்பது கூட மரியாதைக்குரிய ஒன்றாகவுள்ளது. அனைத்துக் கட்சியினரும் தமுமுகவைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளனர். இக்கட்டான நிலையில் தமுமுகவை விட்டு விட்டு நான் ஓடி விடவில்லை.

தமுமுகவின் மூலம் புகழும், மரியாதையும் கிடைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் தான் ஒதுங்குகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக கொலைச் சதியும் - மிரட்டலும், மொட்டைப் பிரசுரங்களும் உள்ளனவே தவிர கழகத்துக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அந்த மிரட்டல்களை எல்லாம் கால் செருப்பாகத் தான் நான் மதிப்பதால் இதைப் பற்றி எனக்கு அச்சமோ, கவலையோ இல்லை.

எனது உடல் நிலை காரணமாக அமைப்பாளர் என்ற பொறுப்பை என்னால் நிறைவேற்ற இயலவில்லை. நான் சில ஆண்டுகளாகவே பெயருக்குத் தான் அமைப்பாளராக இருக்கிறேனே தவிர பணியைச் செய்ய இயலவில்லை. தமுமுக தலைமை நிர்வாகிகளில் செயல்படாத ஒரே நிர்வாகியாக நான் மட்டுமே இருக்கிறேன். ஏற்றுக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றா விட்டால் மறுமையில் அதற்கும் பதில் சொல்லியாகவேண்டும். இது முக்கியமான காரணம்.

எல்லா முஸ்லிம் இயக்கங்களும் சாகும் வரை பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தலைவர்களால் தான் வீரியம் இழந்தன. இள ரத்தம் பாய்ச்சப்படாத எந்த இயக்கமும் செல்லாக் காசாகி விட்ட வரலாறு நம் கண் முன்னே உள்ளது. இயலாதவர்கள் வழி விடுவது தான் தமுமுகவின் எதிர்காலத்துக்கு நல்லது. வயதைப் பொருத்த வரை இன்னும் சில காலம் நான்
பணியாற்ற இயலும் என்றாலும் உடல்நிலையைப் பொருத்த வரை மற்றவர்களுக்கு வழி விடக்கூடிய நிலையில் தான் நான் இருக்கிறேன். இது இரண்டாவது காரணம்.

திருக்குர்ஆனுக்கு தமிழில் ஒரு விளக்கவுரை (தப்ஸீர்) எழுத வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாக எனக்கு உண்டு. ஆனால் பல்வேறு பொறுப்புக்களால் அப்பணியில் நூறில் ஒரு பங்கைக்கூட நான் நினைவு செய்யவில்லை. எனது இந்த நீண்ட காலக் கனவு நிறைவேற நான் விலகித் தான் ஆகவேண்டும்.

கருணாநிதியை மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரது அழைப்பின் பேரில் நானும் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வும், துணைத் தலைவர் அப்துல் ஜலீல் அவர்களும் ஒருதடவை சந்தித்திருக்கிறோம். அவரைத் தவிர ஜெயலலிதா, மூப்பனார், ராமதாஸ், திண்டிவனம் ராமமூர்த்தி, இளங்கோவன் உள்ளிட்ட வேறு எந்த அரசியல் கட்சியின் பெருந்தலைவர்களை எப்போதும் நான் சந்தித்ததில்லை.

நமது அலுவலகம் தேடி வந்த தங்கபாலு, நல்லகண்ணு மற்றும் தேர்தல் பிரச்சார மேடையில் சந்தித்த மணிசங்கர அய்யர், பி.எம். சயீத், பி.ஹெச். பாண்டியன் ஆகியோர் தவிர வேறு யாரையும் சந்திக்கவில்லை.

ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்கின்ற சில அழைப்பாளர்கள் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை மாதச் சம்பளமாகப்
பெற்று வருகின்றனர்.

பிரச்சாரப் பணிகளுக்காக எந்த வெளிநாட்டிலிருந்தும் நான் பத்து பைசா பெற்றுக் கொண்டதில்லை.

இவற்றையெல்லாம் குறிப்பிடக் காரணம் இதன் பிறகும் யாரேனும் அவதூறு பரப்பினால் மறுமையில் அல்லாஹ்விடம் அவர்களுக்கு எதிராக நான் வழக்குத் தொடர்வேன் என்று எச்சரிப்பதற்குத் தான்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி தவிர வேறு எந்த பொதுக் கூட்டத்திலும் மாநட்டிலும், கருத்தரங்கத்திலும் பேச்சாளனாகக் கலந்து கொள்ள மாட்டேன்.

இன்றைய தேதி வரை நான் எந்தெந்த இயக்கங்களை எதிர்த்து வந்தேனோ அதிலிருந்து நான் மாறவில்லை. நான் ஒதுங்கியதைப் பயன்படுத்தி அத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டால் நம்பவேண்டாம்!

எவர்கள் எல்லாம் சமுதாயத்தை ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள் என்று நான் குற்றம் சாட்டினேனோ அதிலிருந்தும் நான் மாறவில்லை. நான் மாறிவிட்டதாகக் கூறினால் நம்ப வேண்டாம்.

என்னைப் பற்றி யார் எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் அதை என் கவனத்துக்கு யாரும் கொண்டு வரத்தேவையில்லை. இதற்கு முன்னரும், இனியும் அவதூறுப் பிரச்சாரம் செய்யும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன். அவற்றை மறுமை நாளுக்கான தயாரிப்பாக நான் பயன்படுத்துவேன்.

ஏனெனில் அவர்களின் இலக்கு நான் அல்ல. எனக்கும் அவர்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. என்னைப் பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் தமுமுகவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். எனவே எந்த அளவுக்கு அவதூறை விளம்பரம் செய்தார்களோ அந்த அளவுக்கு மன்னிப்பையும் பகிரங்கமாகக் கேட்காத வரை அவர்களை நான் மன்னிக்க
மாட்டேன்.

உங்களிடம் இறுதியாக ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். சமுதாயத்திற்காகவே படுபாடும் தமுமுகவை நீங்கள் எல்லா வகையிலும் நம்பலாம். தமுமுகவை நம்பி எந்தப் பணிக்காகவும் பணம் அனுப்பலாம். எந்த முறைகேடும் இல்லாமல் சரியான முiறியல் அதைச் செலவு செய்யும் ஒரே இயக்கம் தமுமுக. எந்த அளவுக்கு அது பொருளாதாரத் தன்னிறைவை அடைகிறதோ அந்த அளவுக்கு அதன் பணிகள் சிறப்பாக அமையும். தாரளமாக நிதியுதவி செய்யுங்கள்.

ஏகத்துவப் பிரச்சார்த்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அந்த வகைக்காக நிதி உதவி செய்வதாக இருந்தால் ஹாமித் பக்ரீ தலைமையில் அமைந்த அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்புக்கு அனுப்பலாம். அவர்களும் முறையான நிர்வாகம் அமைத்து செயல்படுகிறார்கள். ஒளிவு மறைவில்லாமல் திறந்த புத்தகமாகக் கணக்குகளைப் பாராமரிக்கின்றனர். யாரும் எப்போதும் கணக்குக் கேட்கலாம்.

இவ்விரு அமைப்புகளைத் தவிர வேறு எந்த அமைப்புக்கும் நிதியுதவி செய்யுமாறு நான் பரிந்துரைத்ததாக யார் கூறினாலும் நம்ப வேண்டாம்.

நான் ஒதுங்கிக் கொள்வதால், தமுமுகவுக்கும், மார்க்கப் பிரச்சாரத்திற்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று சில நண்பர்கள் கவலை தெரிவித்தனர். முதலில் அவ்வாறு எண்ணுவதே மார்க்க அடிப்படையில் தவறு.

எந்த இயக்கமும் தனி மனிதனைச் சார்ந்து இருக்கக் கூடாது. தனி மனிதக் கவர்ச்சியில் இயங்கும் இயக்கங்கள் காலப் போக்கில் தடம் புரண்டு விடும் என்பதை நான் ஆரம்ப காலம் முதலே வலியுறுத்தி வந்துள்ளேன். தமுமுக தனிமனிதரைச் சார்ந்த இயக்கமல்ல. அது ஒரு மகத்தான மக்கள் இயக்கம்.

நான் ஓய்வு பெறுவதால் தமுமுகவுக்குப் பின்னடைவு ஏற்படும் என நான் நம்பவில்லை.

ஒரு சிறந்த தலைமை விடை பெற்றுச் சென்ற பிறகு அந்த இயக்கம் அழிந்து விடுமானால் மனிதகுலத்தின் மிகச் சிறந்த தலைமையான ரசூல்(ஸல்) அவர்களுக்குப் பின் இஸ்லாம் தடைப்பட்டுத் தேங்கிப் போயிருக்கும். இறைவன் இஸ்லாமிய மார்க்கத்தை அப்படியாக்கி விடவில்லை. இஸ்லாம் ஒவ்வொரு நாளும் ஏற்றமிகு தோற்றத்தோடு எழுச்சி பெற்று வருகிறது.

இறைவனின் கிருபையும் கருணையுமே நம்முடைய ஒரே பலம் அதன் என்றென்றும் நம்மைத் தொடர உளத்தூய்மையுடன் பிரார்த்திப்போம்.

என்றும் அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
நன்றி : உணர்வு 5:06

Monday, April 10, 2006

மலர்களை வெறுக்கும் ஸ்ரீநிதிக்கு,

இரத்த யாத்திரைகள்!

http://copymannan.blogspot.com/2006/04/blog-post_06.html

இந்த வலைப்பதிவில் ரத்த யாத்திரைகள்! என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு கீழ்கண்டவாறு நண்பர் ஸ்ரீநிதி விமர்சனம் எழுதியுள்ளார். அவரது
விமர்சனம் எந்த அளவுக்கு தவறானது என்பதை சகோதரரர் இந்தியன் விளக்குகிறார்.

பன்முகத்தன்மைப் பற்றி உங்களைப் போன்ற ஒரு முஸ்லீம் அடிப்படைவாதிக்கு பேச எந்தத் தகுதியும் இல்லை. முதலில் சவுதியில் இந்துக்களுக்கும் பிறருக்கும் வழிபாட்டு உரிமைகள் இல்லாததை விமர்சித்துவிட்டு பன்முகத்தன்மை குறித்து ழுதுங்கள். பா.ஜ.க ஒரு இந்த்துவ அடிப்படைவாதக் கட்சி என்றால் முஸ்லீம் லீக்களும், தமுமுக போன்றவை இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள். மதக்கலவரங்களுக்கு இரு தரப்பாரும் காரணம்.

(இது ஸ்ரீநிதியின் விமர்சனம்)

மலர்களை வெறுக்கும் ஸ்ரீநிதிக்கு,

நண்பர் ஸ்ரீநிதி தனது அறியாமையை இப்பதிவில் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தியாவின் குடிமகனான இந்திய முஸ்லீமுக்கு இந்திய பன்முகத் தன்மையை விமர்சிக்க தகுதி கோரி எவரிடமும் சான்றிதழ் பெறத் தேவையில்லை. சக இந்தியனுக்கு தகுதியில்லை என மறுக்கும் உரிமையை ஸ்ரீநிதி எங்கிருந்து பெற்றார். இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணாகப் பேசும் இவர் போன்றவர்கள் தான் உண்மையான தேச துரோகிகள் என்பதை எவரும் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் இந்திய அரசியல் சாசன சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க முடியாது.

இந்திய குடிமகனுக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை விமர்சிக்கும் தகுதியில்லை என தீர்ப்பளிக்கும் இவர், எந்த உரிமையில் வேற்று நாட்டின் வழிபாட்டு உரிமையை பற்றி வாதிடுகிறார். ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த குடிமக்களின் நலனுக்கேற்ப உரிமைகள் வழங்கப்படுவது இயற்கை. இதனடிப்படையில் சவுதிஅரேபிய குடிமக்களின் வழிபாட்டு உரிமையை அவ்வரசு வழங்கி உள்ளது. சவுதி குடிமக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுமானால் அந்நாட்டு குடிமக்கள் அதனைக் குறித்து பேசுவார்கள், விவாதிப்பார்கள்.

ஆக உண்மையைச் சொல்லப்போனால், சவுதி அரேபியாவின் வழிபாட்டு உரிமைகளைப் பற்றி பேசத்தான் இந்தியனுக்கு தகுதியில்லையே அல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் இந்தியனான எவருக்கும் முழு உரிமையும், தகுதியும் தாராளமாக உள்ளது என்பதனை நண்பர் ஸ்ரீநிதி புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப்போலவே பாஜக மற்றும் முஸ்லிம் லீக் மற்றும் தமுமுக குறித்த அவரது ஒப்பீடும் தவறான புரிதலின் வெளிப்பாடே. பாஜக ஒரு பாசிச, பயங்கரவாத, இந்துத்துவ அடிப்படைவாத கட்சி என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், முஸ்லிம் லீக், தமுமுக போன்றவை இஸ்லாமிய அப்படைவாத கட்சிகள் என்று எந்தவித அடிப்படையும் இல்லாமலேயே எழுதியுள்ளார். இதுவரை முஸ்லிம் லீக், தமுமுக போன்றவை நடத்திய ரத யாத்திரைகள் எத்தனை? அதன் மூலம் ஏற்பட்ட கலவரங்கள், அதில் உயிரிழந்தவர்கள், உடைமை இழந்தவர்கள், உறுப்பு இழந்தவர்கள் எத்தனை என்று அவரால் வெளிட முடியுமா?

அதே சமயம் பாஜகவின் ரத்த யாத்திரைகளால் இந்திய தேசம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இழந்தவைகளை இவர் போன்றவர்கள் மீட்டுத்தர முடியமா?

அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் ஆதரவளிப்பதை கைவிட்டு, உண்மைக்கும், நீதிக்கும் துணை நிற்க அனைவரும் முன் வந்தால், அப்போது தான் மனிதம் தலை நிமிரும். மதக்கலவரங்கள் மறையும். இந்தியாவின் பன்முகத்தன்மை பாராட்டுப் பெறும்.

இந்தியன் 10.04.2006

Saturday, April 08, 2006

அரசு ஆணை உபயோகமற்றது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அரசு ஆணை உபயோகமற்றது:

உண்மையை ஒப்புக் கொண்ட உணர்வு வாரஇதழ்

கடந்த 03.03.2006 அன்று தமிழக அரசு வெளியிட்டதாக
சொல்லப்பட்ட அரசு ஆணை குறித்து அனேக கருத்துக்கள் எதிராகவும் சில கருத்துக்கள் ஆதரவாகவும் இதுவரை வெளியாகி உள்ள நிலையில், கடந்த வார உணர்வு இதழில் வெளியாகி உள்ள திருமாவளவனின் பேட்டி மூலம் ஓர் உண்மை வெளிப்பட்டுள்ளது.


அந்த அரசு ஆணையின் எதார்த்த பலவீனங்களை தமுமுக பட்டியலிட்டபோது, உண்மை வெளியாகிவிட்ட அதிர்ச்சியில் தமுமுகவை தாறுமாறாக ததஜ தலைவர் விமர்சனம் செய்தார். ஆனால், இன்றோ அவரையும் அறியாமல் திருமாவளவன் பேட்டியின் மூலமாக அரசு ஆணை - வேஸ்ட் என்பதனை ஒப்புக் கொண்டுள்ளார்.


ததஜ தலைமை தவறு செய்யும் போது சுட்டிக் காட்டுவது போல், உண்மையை ஒத்துக் கொள்ளும் போது தட்டிக் கொடுக்கவும் நாம் தயங்கக் கூடாது. அவ்வகையில் அரசு ஆணை - வேஸ்ட் என ஒப்புக் கொண்ட ததஜவிற்கு நன்றி.


இதனைப் படிக்கும் ததஜ அபிமானிகள், அவர்களையும், அவர்களது தலைவரையும் நாம் அவதூறாக எழுதியிருப்பதாக கருதக்கூடும் அத்தகையோர் திருமாவின் பேட்டியை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்கவும்.


அப்பேட்டியில் சட்டம் பயின்ற திருமா திருவாய்
மலர்ந்துள்ள விஷயம்:


இந்த அரசு ஆணை, தேர்தல் அறிவிக்கைக்குப் பின் வெளியிடப்பட்டதால் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தேர்தல் முடிந்த அடுத்த கணமே ஆணையம் அமுலுக்கு வந்து விடும்.


இதன்படி இந்த ஆணையம் இன்றைய தேதியில் ஒன்றுமேயில்லை என்பது தெளிவு. திருமா சட்டம் பயின்ற வக்கீல் தனது கட்சிக்காரருக்காக (அவரிடம்
ஆதாயம் பெற்றதற்காக) எப்படி ஒரு சாதாரண வக்கீல் வாதாடுவாரோ அப்படி வரிந்து கட்டி வாதாடியுள்ளார். அப்படியிருந்தும் கவனக்குறைவாக மேற்குறிப்பிட்ட உண்மையையும் ஒப்புக் கொண்டு விட்டார். அதனை ததஜ தலைவரும் உணர்வு ஆசிரியரும் கவனக்குறைவாக பிரசுரித்து விட்டார்.


இதை விட கொடுமை, இத்தகைய ஓர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக இதுவரை அரசாங்க கெஸட்டில் வெளியிடப்படாததாகும்.


அரசாங்க கெஸட்டில் வெளியிடப்படாததால், திருமா கூறியுள்ளது போல் தேர்தல் முடிந்தாலும் இப்படி ஒரு ஆணையம் செயல்பட முடியாது என்பதே
மிகப்பெரும் உண்மையாகும்.


தமிழக முஸ்லிம்களே சிந்திப்பீர்! எந்த ஒரு தலைவர் மீதும் தாங்கள் கொண்டுள்ள கண்மூடித்தனமான பக்தி சொந்த சமுதாய மக்களை சீரழித்து விடக் கூடாது. கவனமுடன் பரிசீலனை செய்யுங்கள்.


முஸ்லிம் விரோத அதிமுக ஆட்சியை தூக்கி எறிய ஆதரவளியுங்கள்


அபூஇஸ்மத் 09.04.2006

'சமதூரத்தில்' ஒரு சர்ச்சையா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

'சமதூரத்தில்' ஒரு சர்ச்சையா?

என்னவானது இந்த ததஜ தலைமைக்கு? என்பது தான் இன்றைய சூழலில் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் சூடான விவாதப் பொருளாகி உள்ளது.
காரணம் இல்லாமலில்லை, எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியை ஆதரிக்க வேண்டுமென ததஜ அறிவித்ததிலிருந்தே தமிழக முஸ்லிம்கள் ததஜ தலைமை மேல் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்களை சமாதானப்படுத்த ததஜ தலைமை எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த ஒரு பலனுமில்லை.
அவசரமாக முன்தேதியிடப்பட்ட (ஆனால், வெளியிடப்படாத) ஆணையை உயர்த்திப் பிடித்து அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றனர். அந்த ஆணையத்தின் லட்சணத்தையும், அதனை உயர்த்திப் பிடிப்பவர்களின் அவலட்சணத்தையும் தமுமுக வெட்டவெளிச்சமாக்கியதன் பின், தனது வழக்கப்படி தமுமுகவை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்பொழுது ததஜ தலைவர் எடுத்து வைக்கும் வாதம்:
ஜெயலலிதா மீது அடுக்கடுக்கான புகார்களை கூறும் நமது முன்னாள் சகாக்கள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை, அவரை (ஜெ ஜெவை)யும் திமுகவையும் சமதூரத்தில் வைத்தது எப்படி?
வாதங்களிலும், விவாதங்களிலும், விதண்டாவாதங்களிலும் மட்டுமே தற்சமயம் நம்பிக்கை வைத்துள்ளதால், பாவம் பிஜே அவர்கள் நிகழ்கால நடப்புகள் பற்றி கவலை கொள்வதில்லை.
கடந்த 26.02.2006 அன்று சென்னையில் கூடிய ததஜ செயற்குழு தேர்தல் - 2006 குறித்து என்ன முடிவெடுத்தது?அதற்கு முன் ஜனவரியில் குலுங்கிய கும்பகோணத்தில் தேர்தல் நிலைபாடு குறித்து ததஜ என்ன அறிவித்தது?
அப்பொழுதெல்லாம் யார் இடஒதுக்கீடு அளிக்கிறார்களோ அவர்களுக்கே ஆதரவு என்றும், இருவருமே அறிவிக்காவிட்டால் மாற்றுவழி அல்லது மூன்றாவது அணி என்று முழக்கமிட்டாரே.
இப்பொழுது ததஜ தலைவர் திமுக குறித்து பட்டியலிட்ட விஷயங்கள் அதற்கு பின் உருவானவையா? அல்லது காங்கிரஸ் குறித்து ஆவேசமாக உரையாற்றினாரே அவை அனைத்தும் பிப்ரவரி 26 க்கு பின்னால் உள்ளவையா? இல்லையே. இத்தனைக்கும் பிறகு தான் இடஒதுக்கீட்டிற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டால், இவற்றை பெரிதுபடுத்தாமல் தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்ற தீர்மானம் எடுத்தீர்கள்.
இதற்கும், தமுமுக, இரு திராவிட கட்சிகளை சமதூரத்தில் வைத்திருக்கிறோம் என ஒரு மாதம் முன்பு வரை சொன்னதற்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்?
இரு திராவிட கட்சிகளில், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்கு எவர் உத்திரவாதம் அளிக்கிறாரோ, எவர் தனி இட ஒதுக்கீட்டிற்கான ஆணை வெளியிடுகிறாரோ அவருக்கே ஆதரவு. இவ்விஷயத்தில் இருவரும் சமதூரத்தில் தான் இருக்கின்றனர். எவர் நெருங்கி வருகிறாரோ அவருக்கே ஆதரவு. எவர் இவ்விஷயங்களில் நமது கருத்துக்கு நெருக்கமாகின்றனரோ அவரது முந்தய தவறுகளை மன்னித்து தேர்தலில் ஆதரவளிக்க தமுமுக தயார் எனும் பிரகடனம் இல்லையா அது. இது தவறா?
எப்படி ஒரு மாதம் முன்பு, ததஜ - திமுகவின் தவறுகளை மன்னிக்க தயாராக இருந்ததோ, அப்படித்தான் அதிமுகவின் தவறுகளை மறக்க தமுமுக தயாராக இருந்தது.
ஆனால் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் காட்டிய தொடர் அலட்சியத்தாலும், இடஒதுக்கீட்டிற்காக இம்மியளவு முயற்சியும் செய்யாமல் இறுமாப்போடு இருந்த காரணத்தாலும் - அவருடைய முந்தைய தவறுகளை அதுவும் கடந்த ஆட்சியில் (2001 - 2006) மட்டும் நடந்த இஸ்லாமிய விரோத போக்கினை தமுமுக பட்டியலிடுகிறது. இதனை கண்டு கொள்ளப்படாமல் விட்டு விடுவதற்கு தமுமுக யாரிடத்திலும் விலை போகவில்லை.
இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருந்தால் அது இக்கொடுமைகளுக்கு மருந்தாக அமைந்திருக்கும். ஆனால் காலாவதியான ஒரு ஆணையத்தை தனது அரசு காலாவதியான பின், முன் தேதியிட்டு நீட்டித்து தந்து அதற்காக, ஜெ ஜெவின் தவறுகளை மன்னிக்க வேண்டுமென்றால் - அதற்கு தமுமுக தயாரில்லை. அதைவிட மறுமுனையில் முஸ்லிம்களின் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து முன் முயற்சி எடுத்து வரும் காங்-திமுக அணி, தங்களை நோக்கி நெருங்கி வந்ததை உணர்ந்த தமுமுக திமுக தலைமையிலான அணியை ஆதரிக்க முடிவு செய்தது.
எனவே, சமதூரத்தில் இருந்ததும், சமுதாய சீரமைப்பால் முன்னுரிமை அளித்து ஒரு அணி நெருங்கி வந்ததும், மற்றொன்று அலட்சியத்தாலும், பணத்திமிரினாலும் நமது கோரிக்கைகளை கவனிப்பாரற்று கைவிட்டதும் சமூக அக்கறையுள்ள அரசியல் பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும், சமதூரத்தில் வைத்திருக்கிறோம் என்று சமமான வாய்ப்பு வழங்கியதையே இன்று ஒருவர் சர்ச்சைக்குள்ளாக்குகிறார் எனில் அவர் பெற்ற கையூட்டுக்கு விசுவாசமாக, அவரால் விவாதிக்க முடிந்தது இது மட்டும் தானேயல்லாமல் தமுமுக கூறும் அதிமுக (ஜெ ஜெவின்) முஸ்லிம் விரோத காரியங்களில் வேறெதையும் சர்ச்சையாக்க முடியாது என்று தான் அர்த்தம்.
ஆனால் பாவம், அவர் ஆதரிக்கும் ஆணையம் போலவே அக்கருத்தும் வலுவில்லாமல் உள்ளதே. என்ன செய்வது? அதற்காக அவர் வாங்கியதை திருப்பிக் கொடுக்க முடியாதே.
தேர்தல் முடியும் வரை இப்படி தமாஷ் அறிக்கைகளை அவர் வெளியிடத்தான் செய்வார்.
அவருக்கு நேர்வழி கிடைக்க துஆச் செய்வோம்.
அபூஇஸ்மத் 08.04.2006

Thursday, April 06, 2006

நபிவழி என்று கூறி ஏமாற்றுவோர்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

நபிவழி என்று கூறி ஏமாற்றுவோர்.

உண்மையான நபிவழி நடப்பவர்கள் நாங்கள் தான் எனச் சிலர் தங்களுக்குத் தாங்களே 'தவ்ஹீதுவாதிகள்' என்று பட்டம் சூட்டிக் கொண்டு தற்சமயம் அலைந்து வருவதால், அவர்களது நடவடிக்கைகள் நபிவழியின் பரிணாம வளர்ச்சியாக ஆகிவிடாது.

மாறாக, அத்தகையோரது நடவடிக்கைகள் சொல்லாலும் செயலாலும் தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு நிற்கும் ததஜவின் தக்லீது போக்கினை தமிழக முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு உதவி புரிந்துள்ளது. இதுவரை நபிவழி என்று கூறி மக்களை ஒன்று திரட்டியபின் தங்களது சுய தேவைகளுக்கு சமுதாயத்தை அடகு வைக்க முயற்சிக்கும் அவலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

பிறர் சொல்லாததை சொன்னதாகச் சொல்லி பொதுமக்களிடம் அடுத்தவர் மேல் புழுதி வாரி இறைப்பதும், தாங்கள் செய்கின்ற தவறை மூடி மறைத்து, பூசி மெழுகி நியாயப்படுத்த முயற்சிப்பதும் - அரசியல்வாதிகளின் குணம் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால் அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களல்ல என்று தற்சமயம் களத்தில் உள்ளவர்கள் ததஜவினர் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளம், ஏராளமாக உள்ளன.

பழைய விஷயங்களுக்குள் புகுந்தால், அது மெகா தொடராகி விடும் என்பதால், புதிதாக முகவை தமிழன் தனது வலைதளத்தில் பதிந்தவற்றுக்காக மாத்திரம் இதனை குறிபிடுகிறேன்.

சம்பந்தமில்லாத ஒன்றை மேற்கோள்காட்டி தமது எதிரிகளை கீழ்தரமாக விமர்சிப்பது தான் ததஜ தலைவரின் பாணி. அதனை அப்படியே பின்பற்றி இவர் எழுதியுள்ளார்.

இவ்வாறு எடுத்துக்கட்டி அவதூறாக பேசுவது (அ) எழுதுவது எப்படி நபிவழியாகும்? இதனை செயல்படுத்துபவர் எப்படி நபிவழி நடப்பவராக இருக்க முடியும்?

ஆக, இதன் மூலம் ததஜவினர் உண்மையான தவ்ஹீதுவாதிகளல்லர் என சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய புரிதலின் வெளிப்பாடாக விடியலின் வெளிச்சக்கீற்று எட்டிப் பார்க்கிறது.

பழைய அறிக்கைகளை எடுத்துப் போட்டு, நிகழ்கால நடப்புகளை மூடி மறைத்து மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ததஜவின் எண்ணம் இன்ஷா அல்லாஹ் ஈடேறப் போவதில்லை. தமிழக முஸ்லிம்கள் அந்த அளவு முட்டாள்களில்லை. அதுவும் குறிப்பாக தமுமுகவின் அயராத உழைப்பால் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் ததஜவின் தகிடுதத்தங்கள், தவிடுபொடியாவது நிச்சயம்.

சென்னைத் தமிழன் 06.04.2006

Monday, April 03, 2006

அருளடியானின் 6 வது கேள்விக்கு பதில்:

அன்புள்ள அருளடியானுக்கு,

தங்களது 6 வது கேள்வி சாய்ஸில் விடப்படவில்லை. சிறுபான்மையினர் கூட்டமைப்பு நாம் அறிந்த வரையில் இன்று வரை பிளவுபடவும் இல்லை. அதனால் தான் இந்த கேள்வி பதிலளிக்காமல் விடப்பட்டது. மேலும் சிறுபான்மையினர் கூட்டமைப்புக்கு என்னென்ன பணிகள் மற்றும் விதிகள் என்றும் எமக்குத் தெரியாததால் இதைப்பற்றி நாம் கருத்துச் சொல்ல விரும்ப வில்லை.

இறையடியான் 04.04.2006

தமுமுக தவறு செய்ததா? விளக்கம்:

தமுமுக தவறு செய்ததா?

தமிழ் முஸ்லிம் மன்றம் என்ற வலைப்பதிவில் தவறுக்கு மேல் தவறு செய்யும் தமுமுக என்ற தலைப்பில் வெளியான ஒரு சகோதரரரின் சந்தேகங்களுக்கான மறுமொழி.

1) தமுமுக மட்டும் லீக் கட்சிகளை லட்டர் பேடு இயக்கங்களாக சொல்லியதில்லை. இன்று தோழோடு தோழ் இணைந்து முதலமைச்சரைச் சந்திக்கச் சென்ற ததஜவின் தலைவரும் தான் சொல்லி இருக்கிறார்.
அடுத்ததாக, முஸ்லிம் லீக்கை விமர்சித்த தாவூது மியான் கான் பேட்டியை மக்கள் உரிமையில் வெளியிட்டபோதும் தமுமுக சுனாமி கணக்கு காட்டிய நிகழ்ச்சியில் அவர் முன்னிவை வகித்தது சமுதாய பிரமுகர் என்ற அடிப்படையில் தானே அல்லாமல் வேறல்ல.

2) இதற்கு முன் தமுமுக பொதுவான காரியங்களில் முன்னிலை வகித்தது என்பது கோவை கலவரம், சுனாமி போன்ற இன்னபிற பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும். தற்பொழுது சர்ச்சைக்குரிய மௌலவி பிஜே பிற அமைப்புகளோடு இணைந்து சென்று முதலமைச்சரை சந்தித்ததாக தாங்கள் எழுதி இருப்பது தவறான விஷயம். இதே மௌலவி முதலமைச்சரை சந்தித்ததன் பின் வெளியிட்ட சிடியைப் பார்த்தால் நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். அதில் இந்த மௌலவி தான் மற்ற அமைப்புகளை (பிரமுகர்களை?) இழுத்துக் கொண்டு சென்று முதலமைச்சரை சந்தித்ததாக குறிப்பிடுகிறார். தன்மானமிக்க தமுமுக இப்படி மற்ற எந்த ஒரு தனி நபரின் இழுத்த இழுப்பிற்கெல்லாம் செல்லாது.

3) தனி இட ஒதுக்கீடு கொள்கை தமுமுக துவங்குவதற்கு முன்பே லீக் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். நாம் அறிந்த வரை அப்படி ஒரு கோரிக்கையே நமது சமுதாயத் தலைவர்களால் முன்னிறுத்தப்பட்ட தில்லை. துவங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை சமுதாய மக்களிடமும் தனிஇட ஒதுக்கீட்டின் தேவையை பிற அரசியல் தலைவர்கள் மத்தியிலும் உருவாக்க அரும்பாடு பட்ட அதில் ஒரு சிறிய முன்னேற்றத்தை இப்பொழுது கண்டுள்ள நிலையில் தனிப்பெருமை தேடுவதில் என்ன தவறு?

4) பாளையங்கோட்டை தொகுதியை தமுமுக தனக்காக கேட்கவில்லை, இன்றளவும் பலுலுல் இலாஹி முஸ்லிம் லீக் உறுப்பினராகத்தான் இருக்கிறார். இப்பொழுதும் பாளையங்கோட்டை தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (திமுக) சார்பில் அங்கு போட்டியிடப் போவது ஒரு முஸ்லிம் வேட்பாளர் தான். வாணியம் பாடி தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெறச் செய்த வடிவேலு போல ஒரு முஸ்லிம் அல்லாதவர் அல்ல.
இதில் தமுமுக எந்தவகையில் சமுதாயத்திற்கு துரோகம் செய்தது.

5) இந்த கேள்வியே உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் பால் பட்டது. தமுமுக பலுலுல் இலாஹியை வெற்றிபெறும் சாத்தியக்கூறு அதிகமுள்ள வேட்பாளராகத்தான் கருதியதே அல்லாமல் வேறல்ல.

7) சமாதானக்குழுவின் அமைப்புகள் இது விஷயத்தில் தமுமுகவோடு நடந்து கொண்ட விதத்தை தெளிவு படுத்துவதற்காகவே அல்லாமல் அந்த விமர்சனங்கள் வெளியிடப்படவில்லை, தவிர அதே கருத்துக்ளோடு நாம் அவர்களுடன் பகைமை பாராட்டவும் இல்லை.

அன்புடன்

இறையடியான் 03.04.2006

Sunday, April 02, 2006

சுனாமி எழுப்பும் சிந்தனை அலைகள்:

டிசம்பர் 26-2004.

உலக மக்களுக்கு வல்ல இறைவனின் சக்தியை உணர வைத்த நாள்.

மதங்களை கடந்து மனிதாபிமானத்துடன் மக்கள் அனைவரும் ஒன்றாக கலந்த நாள்.

ஆனால், துரதிஷ்டவசமாக ஒவ்வொன்றிலும் சுயஇலாபம் தேடும் அரசியல் வாதிகள் நம்மிடம் இருக்கிறார்களே, என்ன செய்வது, அடுத்தவர்களின் நலப்பணிகளை தான் செய்வதாக கூறும் சிலர், இயற்கை சீரழிவுகளை காட்டி, மக்களின் இரக்க உணர்வை தூண்டி அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டும் பலர், மற்றவர்களை குறை கூறி தங்களது தவறுகளை மறைத்துக் கொள்ளும் சிலர், இவர்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முறையான வங்கி கணக்கு மூலம் வசூல் செய்து, அதனை தேவை யுடையவர்களுக்கு பிரித்தளித்து, தனது வரவு செலவுகளை அரசுக்கும், வசூலித்து அளித்த ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவாக ஒப்படைத்த ஒரு இயக்கம் என பலதரப்பட்டவர்களையும் அடையாளம் காண சுனாமி துணையாகிப் போனது.

மேற்குறிப்பிட்ட வகையினரில் இஸ்லாமிய இயக்கங்களும் அடங்குவர்.

இஸ்லாமிய இயக்க ஒற்றுமையை சீர்குலைத்து தனி இயக்கம் கண்ட மார்க்க அறிஞர் ஒருவர், தனது தனிநபர் பகையை தீர்த்துக் கொள்ள, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிறர் மீது பழி சுமத்தினார். இவரால் பழி சுமத்தப்பட்ட தமுமுகவோ, முறையான வங்கிக் கணக்கு வைத்திருந்ததனால், அரசு தணிக்கை அதிகாரி மூலம் சான்றிதழ் பெற்று பொதுமக்கள், இயக்க ஆதரவாளர்கள் மற்றும் சமுதாய பிரமுகர்கள் மத்தியில் வைத்து கணக்குகளை வெட்ட வெளிச்சமாக்கி தங்களது தூய்மையை நிரூபித்து, நம்பகதன்மையை தக்க வைத்துக் கொண்டனர்.

ஆனால் இதனை எதிர் பார்க்காததனாலோ என்னவோ, தமுமுக சமர்ப்பித்த கணக்கில் குறைகாண முடியாமல், கணக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையை குறை கண்டார். தான் நியமித்த குழுவின் முன், தான் அறிவித்த இடத்தில் சமர்ப்பிக்காமல் தமுமுகவே இடம் தெரிவு செய்து கணக்குகளை வெளியிட்டதை பகல் வேஷம் என்றார். கணக்குகளை தணிக்கை அதிகாரி தணிக்கை செய்திருந்தும் அவை முறையற்றது. தான் கூறிய தலைவர்கள்
தணிக்கை செய்வது தான் சிறந்தது என்றார். அன்று (டிசம்பர்10, 2005) மிலன்
மண்டபத்தில் கூடியது தமுமுககாரர்கள் மட்டுமே, பொதுமக்கள் முன்னி லையில் கணக்கு காட்டியிருக்க வேண்டும் என்றார்.

நாம் இங்கு குறிப்பிட்டுள்ளவை மிகச் சிலவே. எண்ணற்ற குற்றச்சாட்டுகளை தமுமுக மேல் தொடர்ந்து சுமத்தினார். இந்திய இயக்கங்களின் வரலாற்றில் பொதுமக்கள் முன்னிலையில் கணக்கு வழக்குகளை சமர்ப்பித்த ஒரே இயக்கம் தமுமுக மட்டுமே என எதிரிகளின் ஊடகங்கள் கூட மனம் திறந்து பாராட்டிய வேளையிலும் பிஜே மட்டும் தான் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக, தமுமுகவின் செயல்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் மோசமாக அவதூறாக உண்மைக்கு மாற்றமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்படிப்பட்டவர், கடந்த 26.02.2006 இல் சென்னையில் ஒரு ஹோட்டலில் தனது சிறப்பு செயற்குழுவைக் கூட்டி தனது இயக்கம் சார்பாக வசூலிக்கப்பட்ட சுனாமி நிதியின் வரவு செயவு கணக்கை சமர்ப்பித்ததாக பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

அடுத்தவர்களின் முதுகையே ஆராய்ச்சி செய்வதால் அவரது முகத்தில் படிந்துள்ள அவலட்சணங்கள் அவருக்குத் தெரிவதில்லை. தமிழகத்தில் அதிமுகவிற்கு அடுத்தபடியாக இவரது இயக்கத்தவரும், தங்களது தலைவரின் குறைகளை சுட்டிக்காட்ட துணிவதில்லை. துணிந்தால் என்ன நடக்கும், துணிந்தவர் தூக்கியெறியப்படுவதுடன், உலக மீடியாவில் பாரதூரமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீச தலைவர் தயங்கமாட்டார் என்பதால் எவருக் கும் துணிவு வருவதேயில்லை. இந்த விஷயத்தில் பிஜேவும் ஜெஜெவும் ஒன்றே என்பதால் ததஜ சகோதரரர்கள் சார்பாக நாமே பிஜேக்கு, அவருடைய தப்புத் தாளங்களை சுட்டிக் காட்டுவோம். திருத்திக் கொண்டால் இம்மை மறுமை ஈருலகிற்கும் நல்லது. இல்லையெனில் இம்மையை மட்டும் அனுபவித்துக் கொள்ளலாம். மறுமையில்...

சுனாமி சுருட்டலில் சுருண்டு போன சில கேள்விகள்:

1) சுனாமி கணக்கை ஒப்படைக்க அறுவர் குழுவை தன்னிச்சையாக அறிவித்து டிசம்பர் 10 க்கு முன்பே கணக்குகள் தயார் எனக் கூறியவர், தமுமுக வரவில்லையானாலும் பரவாயில்லை எனது இயக்க கணக்குகள் இதோ, சரி பார்த்துக் கொள்ளுங்கள் என தான் நியமித்த அறுவர் குழுவிடம் சமர்ப்பிக்காதது ஏன்?

2) பொது மக்கள் முன்பு தான் கணக்குகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்தவர், பொதுவான நபர்கள் எவருமில்லாமல் தனது இயக்க நிர்வாகிகளை மட்டும் வைத்துக் கொண்டு கணக்கு காட்டியது ஏன்?

3) பொது மக்கள் அல்ல சமுதாய தலைவர்கள் முன் தான் கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனக் கூறினோம் என்று சொல்வாரேயானால் அவர் கணக்கு காட்டியபோது உடனிருந்து சரிபார்த்த சமுதாய தலைவர்கள் யார்? யார்?

4) தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகளும், சன் டிவி, ஆசியா நெட் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும், சுனாமி நிதி வசூலித்து பிரதமர்
மற்றும் முதல்வர் நிதிக்கு அனுப்பி வைத்தன. அதைப் போலவே தமுமுக ஜமாத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்கள் வசூலித்து வினியோகம் செய்தன. ஆனால் இவர்களில் யாருமே தான் வசூலித்த தொகையிலிருந்து தங்களது பத்திரிக்கைக்கோ அல்லது டிவிக்கோ செலவு செய்ய வில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிறர் அளித்த நன்கொடையிலிருந்து தனது பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாய் ஒதுக்கிக் கொண்டது எப்படி நீதமாகும்?

5) களவாடிய அந்தப் பத்திரிக்கையில், பத்தி பத்தியாக பிறரை குறை கூறியதோடு, சுய தம்பட்டமும் அடித்த காரணத்தால் சர்க்குலேசன் சறுகிக் கொண்டுபோய் தரைதட்டி விட்டது. அதனை கொஞ்சமாவது தூக்கி விடத்தான் இந்த 2 இலட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது என் பொதுமக்கள் பேசிக் கொள்வது உண்மையா?

6) பாதிக்கப்பட்ட அனாதைகளுக்குரிய 2 இலட்சத்தை அபகரித்துக் கொண்டது, மார்க்கம் கூறும் மனித உரிமை மீறல் ஆகாதா?

7) இதைப் போலவே ஒளிப்பதிவு (கேமரா வாடகை) செய்து விளம்பரம் செய்ய
பாதிக்கப்பட்டோரின் பெயர் சொல்லி வசூலித்த பணத்தை பங்கு வைக்கலாமா? மார்க்கம் இதனை அனுமதிக்கிறதா?

8) பாதிக்கப்பட்டோர் உடை மற்றும் உறைவிட தேவைக்காக பொதுமக்கள் அளித்த நன்கொடையில் இயக்கத்தவருக்கு சீருடை வாங்க இஸ்லாம் அனுமதிக்கிறதா?

9) சுனாமி நிதிக்கென்று தனிக்கணக்கு துவக்கப்படாத நிலையில் வந்து விழுந்த நன்கொடைகளை சுனாமி எது? பினாமி எது? என இனம் கண்டது எப்படி?, வெறும் வங்கி கணக்கு எண்ணை மட்டும் கண்டு பணம் அனுப்பியவர்களின் பணம் எப்படி செலவிடப்பட்டது.

10) இக்கணக்கு ததஜவைத் தவிர வேறு யாரால் தணிக்கை செய்யப்பட்டது.

என்பது போன்ற கேள்விகள் பல எழுந்துள்ள நிலையில்,தனது நம்பகத்தன்மை
பளிச்சிட்டது என தங்களுக்கு தாங்களே புகழாரம் சூட்டிக் கொள்ளும் ததஜ தலைமை பதிலளிக்குமா? அல்லது

வழக்கம் போல் பிறர் மீது புழுதி வாரி இறைக்குமா?

அபூஇஸ்மத் 02.04.2006