Sunday, July 15, 2007

சுயநலமே பிஜேக்கு பிரதானம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அரபியில் 'முனாபிக்' என்று ஒரு வார்த்தை உண்டு. அதற்கு, நயவஞ்சகன், இரட்டை நாக்கு உடையவன், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன் என்று தமிழில் பொருள் சொல்வார்கள்.



இந்த முனாபிக் என்ற பெயர் பிஜேக்கு ரொம்பப் பிரமாதமாக பொருந்திப் போகிறது.

'அந் நஜாத்' என்ற பத்திரிக்கை தவ்ஹீதை சொல்லும் பத்திரிக்கையாக வலம் வந்த போது, தன்னை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்வதற்காக அதில் எழுத ஆரம்பித்தார் பிஜே. அதற்கு முன் அவர் யாரென்றே எவருக்கும் தெரியாது.

அந்த பத்திரிக்கையின் நிர்வாகத்திற்குள் ஊடுறுவ முடியாத நிலை ஏற்பட்ட பொழுது, பிஜே அதன் நிறுவனர் அபூஅப்துல்லாஹ் மீது மோசடி குற்றச்சாட்டை சுமத்தி அதிலிருந்து விலகிக் கொண்டார்.

தான் விலகியதற்குரிய உண்மையான காரணத்தை மறைத்து அதன் நிறுவனர் மீது மோசடி பழி சுமத்தி, அவர் மோசடி செய்து விட்டதால் தான் விலகுகிறேன் என்று கூறியதால் பிஜேயை முனாபிக் என்கிறோம்.

அவர் செய்த முனாபிக்தனம் இது மட்டுமா, இன்னும் ஏராளம் இருக்கின்றன.

முதன் முதலாக தவ்ஹீதை சொல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான் ஜம்இய்யத்து அஹ்லே குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக்), ஏகத்துவ எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்ட பொழுது, சிறுசிறு குழுக்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்பட்ட கொள்கைவாதிகளை ஒருங்கிணைத்து துவக்கப்பட்டதே இந்த ஜாக் ஜமாத். இந்த பிஜே அதில் இணைந்து பிரபல பிரச்சாரகராக தன்னை பிரபல்யப்படுத்திக் கொண்டதோடு, அந்த அமைப்பின் பத்திரிக்கையான 'அல்ஜன்னத்' ஏட்டிற்கும் ஆசிரியராகவும் பொறுப்பேற்றார்.

ஜாக்கின் தலைவரைக் கூட பலருக்கு தெரியாது, ஆனால் பிஜே பலருக்கும் நன்கு தெரிந்தவராக ஆனார். தான் ஜாக்கிற்குள் வந்த வேலை முடிந்து விட்டதால் அந்த அமைப்பின் தலைவர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை சராமாரியாக சுமத்தி விட்டு அதை விட்டும் விலகிக் கொண்டார்.

சொக்கத் தங்கமான அதன் தலைவர் எஸ்.கமாலுத்தீன் மதனி, மோசடி செய்து விட்டார் என்று கூறிக்கொண்டும், தான் எந்த மோசடியும் செய்யாதவன் போல் நாடகமாடிக் கொண்டும், மோசடி எனும் சந்தேக வித்தை மக்கள் மனதில் விதைத்தும் ஷைத்தானுக்கு நிகராக வேலை செய்தார். தான் ஜாக்கை விட்டு விலகுவதற்கு தலைவரின் மோசடிகள் தான் காரணம் என்றும் பொய் கூறினார்.

உண்மையாக காரணங்களை மக்களிடமிருந்து மறைத்து ஜாக்கிலிருந்து விலகுவதற்கு பொய்யான காரணங்களை கற்பித்து விலகியதால் நாம் அவரை முனாபிக் என்கிறோம்.

பிறகு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அப்போது புகழின் உச்சகட்டத்தை அடைந்து விட்டதாக உணர்ந்தவர், 'மனம் திறந்த மடல்' மூலம் தனது நயவஞ்சகத்தை ஆரம்பத்தில் வெளிக்காட்டி விட்டு, பின்னர், 'முக்கிய அறிவிப்பு' ஒன்றை வெளியிட்டு விட்டு தமுமுகவிலிருந்தும் கழன்று கொண்டார்.

இங்கேயும் உண்மையை மறைத்து, எந்த வகையிலும் சம்பந்தப்படுத்தவே முடியாத ஒன்றை சம்பந்தப்படுத்தி, தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது என்ற பொய்யை பரப்பி விட்டு, அதையே தான் விலகுவதற்கு காரணமாகவும் சொல்லிக் கொண்டார்.

அதனால் தான் அவரை முனாபிக் என்கிறோம்.

தமுமுகவிற்கு நிரந்தர வருமானத்திற்காக சொத்துக்கள் வாங்க வேண்டும் என்று கடிதம் எழுதி தனது கையெழுத்தையும் போட்டு விட்டு, அந்த சொத்துக்கள் தனி டிரஸ்ட்டில் தான் இருக்க வேண்டும், அதுதான் பாதுகாப்பானது என்று சொன்ன பிஜே, அந்த சொத்துக்களையும் பத்திரிக்கையையும் தமுமுகவிலிருந்து விலகும் போது ஒப்படைக்காமல் இன்று வரை தன் கைவசத்தில் வைத்திருக்கும் பிஜே நயவஞ்சகத்தினத்திலிருந்து முன்னேறி மோசடிக்காரனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே ஜாக் என்ற அமைப்பு தவ்ஹீதுக்காக இருக்கும் நிலையிலேயே அனைத்து தவ்ஹீது கூட்டமைப்பு என்ற ஜமாஅத்தை ஏற்படுத்தி, அதையே ததஜ என்று பெயர் மாற்றி தமிழக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினார் பிஜே. இதற்காக தமிழக முஸ்லிம்கள் இவரை மன்னிக்கவே மாட்டார்கள்.

ததஜ ஆரம்பித்தவுடனேயே வந்த தேர்தலின் போது பெட்டியை வாங்கிக் கொண்டு ஜெயலலிதா எனும் சங்பரிவார கும்பலுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்தார். அதற்கு ஜெ அமைத்த வேஸ்ட் பேப்பர் ஆணைய அறிவிப்பு தான் காரணம் என்று வாய் கூசாமல் அல்லாஹ்வை மறந்து பொய் கூறினார்.

10 லட்சம் மக்களை கும்பமேளாவில் ஒன்று கூட்டியதாக பொது மக்களிடமும், ஒரு லட்சம் பேரை கூட்டியதாக ஜெயலலிதாவிடம் நேரடியாகவும் கூறி தனது நயவஞ்சகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டார்.

இப்படியே தொடரும் நயவஞ்சகத்தனத்தில் லேட்டஸ்ட் நயவஞ்சகத்தனம் தான், இடஒதுக்கீட்டிற்காக பிஜே நடத்திய ஜுலை 4, சிறை நிறப்பும் நாடகம். 15 லட்சம் மக்களை திரட்டப் போவதாக பினாத்திக் கொண்ட பிஜே, சில ஆயிரம் பேர்களாக மக்கள் செல்வாக்கை இழந்து முடங்கிப் போயுள்ளார்.

இந்த லட்சணத்தில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை பார் என்ற பழமொழிக்கு ஒப்ப விண் டிவியில் வெற்றி வெற்றி என்று வெற்றி முழக்கம் வேறு. தெண்டம்.

இவற்றுக்கெல்லாம் காரணம், மார்க்க விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணாக தந்த ஃபத்வாக்கள்.
பாக்கர் விஷயத்தில் அவர் அடித்த அந்தர் பல்டிகள்.
மற்றும் கடலூர் மாவட்ட ததஜவும் அதன் அத்தனை கிளைகளும் கலைக்கப்பட்ட விவகாரம்.
ஒன்றும் அறியா தனது மனைவி மக்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை இறக்கி வைக்குமாறு நெல்லிக்குப்பத்தில் வேண்டிக் கொண்டது.

இடஒதுக்கீடு சம்பந்தமாக அரசாங்கத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்க தமுமுகவால் முடியுமா? ததஜவால் முடியுமா?

நட்சத்திர நடன தாரகையும், உடலெல்லாம் இந்துவெறி எனும் விஷக்குருதி ஓடிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவிடம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் விலை பேசி விற்றுவிட்டு, இந்த தமிழக அரசுக்கு எதிராக வாக்குச் சீட்டுக்களை திருப்பி விட்டு, இடஒதுக்கீட்டிற்காக போராடுகிறோம் என்று சொல்வதற்கு பிஜேக்கும் ததஜவினருக்கும் என்ன அருகதை இருக்கிறது.

இடஒதுக்கீடு கிடைத்து விட்டால் அது தான் நடத்திய போராட்டங்களினால் தான் கிடைத்தது என்று பீற்றிக் கொள்வதற்காகவே தவிர, வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது.

பிஜேயின் முனாபிக்தனம் இத்தோடு முடிந்து விடப்போவதில்லை. தொடரும், தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா

Monday, July 09, 2007

உமா பாரதி மீது வழக்கு

தீவிரவாத செயல்களிலும், இந்திய நாட்டுக்கு மாபெரும் அச்சுறுத்தலாகவும் சங்பரிவார் அமைப்பினர் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றனர்.

பாபர் மசூதியை இடித்து சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய சங்பரிவார் அமைப்பினர் தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இராம கோபாலனின் விஷம பேச்சுக்களை பதிவு செய்து அவர் மீது வழக்கு போட போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால் அங்குள்ள போலீஸ் எப்ஐஆர் கூட பதிவு செய்ய மறுக்கும் நிலை தான் தமிழகத்தில் நீடிக்கிறது.

முதலில் கோர்ட்டுக்கு சென்று அனுமதி பெற்ற பின்பு எப்ஐ ஆர் பதிவு செய்ய வேண்டிய கொடுமை இந்திய திருநாட்டில் இருக்கிறது.

இருந்தாலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் விடாது முயன்று இராம கோபானின் 'முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள்' என்ற அடாவடித்தனமான பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

அந்த வரிசையில் உமா பாரதி கிளம்பியிருக்கிறார்.

திருச்சியில் அவர் பேசும் போது, 'ராமர் பாலத்தை பாதுகாக்க உயிரை கொடுக்கவும் தெரியும், உயிரை எடுக்கவும் தெரியும்' என்று உமா பாரதி கூறினார்.

திருச்சி கோட்டை எஸ்.ஐ மணிமாறன் அளித்த புகாரின் அடிப்படையில் உமா பாரதியின் மீது 153(ஏ) பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது, 506(2) கொலை மிரட்டல் விடுவது ஆகிய பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதே போன்று ராமேஸ்வரத்தில் பேசும் போது,

'ராமர் பாலம் இடிப்பதை பாரதிய ஜனசக்தி வன்மையாக கண்டிக்கிறது. ஏழு தினங்களுக்குள் ராமர் பாலத்தை இடிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ராமர் பாலத்தை உடைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், அதிகாரிகள், தனியார் கம்பெனிகள் பற்றி எங்கள் இயக்கம் மூலம் பட்டியல் தயார் செய்வோம். அவர்கள் உயிருக்கு உத்திரவாதம் சொல்ல முடியாது. இதனால் எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். பாலத்தை உடைக்காமல் இருக்க உயிரைக் கொடுக்கவும் உயிரை எடுக்கவும் தயாராக உள்ளோம்' என்று உமா பாரதி பேசினார்.

ராமேஸ்வரம் காவல் நிலையத்திலும் 153(ஏ), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் உமாபாரதியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராம கோபாலனின் மீது எப்ஐ ஆர் பதிவு செய்வதற்கு கூட மறுத்த தமிழக காவல் துறை, என்ன பேசினாலும் உமா பாரதியின் மீது எப்ஐ ஆர் கூட பதிய மாட்டார்கள் என்ற தினாவட்டில் தான் உமா பாரதி பேசியிருக்கிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்த தமிழக காவல் துறையினருக்கு ஒரு சப்ப்ப்பாஷ்.

இப்னு ஃபாத்திமா
9.7.2007

Thursday, July 05, 2007

ஆந்திர முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு - அரசு ஒப்புதல்

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு சட்டம் ஆந்திர மாநில அரசு ஒப்புதல்


முஸ்லிம்கள் இடஒதுக்கீடு சட்டம் ஆந்திர மாநில அரசு ஒப்புதல்

ஐதராபாத், ஜூலை5- ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தில், ஒரு சதவீதத்தை குறைக்கும் வகையிலான அவசரச் சட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு பணியிலும், கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்க 2004ம் ஆண்டு மே மாதம் ஆந்திர அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது.

அரசுத் துறைகளில் 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த ஐந்து சதவீத இடஒதுக்கீட்டை நான்கு சதவீதமாக குறைக்க முடிவு செய்தது.

இதற்கு முதல்வர் ராஜசேகர ரெட்டி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இது குறித்து தகவல் துறை அமைச்சர் ஏ.ராமநாராயண ரெட்டி கூறுகையில், 'சமூக அளவில் மற்றும் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள முஸ்லிம் பிரிவினருக்கு நான்கு சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையிலான அவசரச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே, இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீதமும், ஆதிதிராவிடர் பிரிவினர்களுக்கு 14 சதவீதமும், பழங்குடியினர் பிரிவினர்களுக்கு 7 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.

நன்றி : தினமலர்

Wednesday, July 04, 2007

பி.இ. ரேங்க் பட்டியலில் ஒரு பெண் - முஸ்லிம் பெண்

முதல் 6 ரேங்க்: ஒருவர் மட்டுமே பெண்

பி.இ. ரேங்க் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் வந்துள்ளவர்களில் ஒருவர் மட்டுமே மாணவி. மற்றவர்கள் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

அனைத்து மாணவர்களும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள். ரேங்க் வரிசைப் பட்டியலைத் தயார் செய்வதற்கான நடவடிக்கையை அடுத்து அவர்களது வரிசையை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அவர்களது பெயர் விவரம்:

பி.அரவிந்த், சோலார், ஈரோடு மாவட்டம்.

பி.பிரவீண் குமார், குனியமுத்தூர் அஞ்சல், கோவை மாவட்டம்.

ஆர்.நித்யானந்தன், பரமத்தி ரோடு, நாமக்கல் மாவட்டம்.

எம்.கார்த்திகேயன், பஸ்தி, ஹோசூர், கிருஷ்ணகிரி.

ஜெரின் சி. சேகர், பாகோடு, கன்னியாகுமரி மாவட்டம்.

எஸ்.தஹ்ஸீன் நிலோஃபர், வெள்ளிபட்டினம் (அஞ்சல்), ராமநாதபுரம் மாவட்டம்.

விண்ணப்பித்தவர்களில் ஊனமுற்ற பிரிவினர் 287 பேர் ஆவர். விளையாட்டுப் பிரிவினர் 2,653, முன்னாள் படைவீரர் வாரிசுகள் 1,466 பேர் ஆவர். விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் யாரும் விண்ணப்பிக்கவில்லை.

நன்றி: தினமணி

Tuesday, July 03, 2007

தம்மாமில் இஸ்லாமிய கருத்தரங்கம்

தம்மாமில் இஸ்லாமிய கருத்தரங்கம்!!

شــــعبة توعية الجـــــاليات بالدمـــام
برنامج باللغة التاميلية في شــــعبة توعية الجـــــاليات بالدمـــام - الجمعة 21/06/1428 هــ

தம்மாம் மாநகரில்
அரை நாள் இஸ்லாமிய கருத்தரங்கம்

06.07.2007 வெள்ளிக்கிழமை
பிற்பகல் 1.15 மணி மதல் மஃரிப் வரை

இடம் : இஸ்லாமிய தஃவா சென்டர் (I.D.G.C) -தம்மாம் (Abdullah Fouad Area)இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்களான
அஷ்ஷெய்க் : எஸ். கமாலுத்தீன் மதனி
அஷ்ஷெய்க : கே. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

ஆகியோரின் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்
இச்சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று ஈருலக நற்பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்

பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது

மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

ஏற்பாடு : இஸ்லாமிய தஃவா சென்டர் (I.D.G.C) -தம்மாம்Tel. 03 8272772 / 8054445

Monday, July 02, 2007

தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம்

சென்னை, ஜூன் 30: தமிழ்நாடு தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி வெளியிட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 62 வயது வரை இப்பதவியில் இருக்கலாம்.

டி. சங்கரலிங்கம், (சிவில் நீதிபதி, சென்னை), பேராசிரியர் கே. லட்சுமணன் (பெரியார் கல்லூரி, திருச்சி), எம். ஷோபினி (முன்னாள் துணைப்பொது மேலாளர், ரிசர்வ் வங்கி), பி.எஸ். முகம்மது அலி ஜின்னா (தலைமைப் பொறியாளர் (ஓய்வு) சென்னை), பேராசிரியர் சேவியர் ஜேசு ராஜா (லயோலா கல்லூரி, சென்னை).

நன்றி : தினமணி

(குறிப்பு: தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பி.எஸ்.முகம்மது அலி ஜின்னா (தலைமைப் பொறியாளர் (ஓய்வு) சென்னை) அவர்கள் இடம் பெற்றிருப்பது சந்தோசமான செய்தி.)