குண்டுவெடிப்பில் நிறைய பேர் சாகவில்லையே?
குண்டுவெடிப்பில் நிறைய பேர் சாகவில்லையே? பெண் சாமியார் துக்கம்!
-சர்ஜுன்
மாலேகான் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏன் மிகக்குறைவாகவே இருந்தது என மிகவும் வெறியுடன் வருத்தத்துடன் பெண் பயங்கர வாதி பிரக்யாசிங் கேட்ட தகவல் வெளிவந்துள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரக் யாசிங் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்குச் சொந்த மானது தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த சதித்திட்டம் குறித்து மற்றொரு தீவிரவாதியான ராம்நாராயணனுடன் தொலைபேசியில் பேசிய ஆதாரங்களை வைத்து இவர்கள் பிடிபட்டுள்ளனர். இந்த ஆதாரங்களை மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். தொலை பேசியில் கீழ்க்கண்டவாறு உரையாடல் நிகழ்த்தப்பட்டது.
“என்னை இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்’’ என்றும், “மாலேகா னில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கைப்பற்றி விட்டனர்’’ என்றும் பெண் சாமியார் தொலைபேசியில் ராம் நாராயணனிடம் கூறியிருக்கிறார்.
மோட்டார் சைக்கிளை விற்றதாக சொல்லுங்கள் எனத் தூண்டும் விதத்தில் “நீங்கள்தான் விற்று விட்டீர்களே...’’ என தந்திரமாக ராம்நாராயணன் யோசனை சொல்லியிருக்கிறார்.
“எங்கே விற்றதாகச் சொல்வது மகாராஷ்டிராவிலா? மத்தியப் பிரதேசத் திலா?’’ என சாமியார் கேட்டதற்கு, “குஜராத் தில் விற்றதாகச் சொல்லுங்கள்’’ என நாராயணன் `ஐடியா’ கொடுத்திருக்கிறார்.
“எப்போது விற்றீர் கள்? என போலீஸ் காரர்கள் கேட்பார்களே, அப் போது நான் என்ன செய்வது?’’ என பெண் சாமியார் கேட்கிறார்.
“மறந்துவிட்டது என சொல்லுங்கள்’’ என ராம் நாராயணன் பதிலளித்திருக்கிறார்.
“ஏன் இந்த குண்டு வெடிப்பில் குறைவானவர்கள் இறந்திருக் கிறார்கள். மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் நிறுத்தலாமே’’ என பெண் சாமியார் கேட்டதற்கு, “மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் தான் வைக்க முயன்றேன், ஆனால் சரியான இடம் கிடைக்கவில்லை’’ என்று ராம் நாராயணன் பதில் கூறியிருக்கிறார்.
இந்த தகவல் சில ஆங்கில அச்சு ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண் சாமியார் இம்மாதம் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் சாமியார் உள்ளிட்ட தீவிரவாதி களை விடுவிக்கக் கோரி பாஜக, சிவசேனா, ஹிந்து மகாசபை, அபிநவ் பாரத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளன. இந்த சமூக விரோதி களை சுளுக்கெடுப்பதில் தாமதம் ஏன்?
நன்றி: தமுமுகவின் இணையதளம்